KAILASA Library/மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்/ஆசையின் அறிவியல்Sign in
மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்

ஆசையின் அறிவியல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Photograph of Swami Nithyananda speaking at a podium

ஆசையை வைத்தே ஆசையை அடக்கலாம்

◈ “கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?”

“என்னங்க இது!” கேள்வியே மடத்தனமாயிருக்கிறது. முட்டையிலிருந்து கோழி எப்படி வரமுடியும்?

முட்டையிலிருந்து குஞ்சுதான் வரமுடியும். கோழி எப்படி வரும்?

இதுபோன்ற கேள்விகளைக் கண்டுகொள்ளாதிருப்பது எல்லோர்க்கும் நல்லது.

◈ “இடதுகையில் பொருட்களை வாங்குவது தவறு என்கிறார்களே. இது பற்றிய உங்களின் கருத்து என்ன?”

“தவறு என்பதே தவறு!”

◈ “இடது கையில் வாங்குவது மரியாதைக் குறைவில்லையா?”

வலதுகையில் வாங்கும்போது மரியாதை
அதிகரிக்கிறதா என்ன!?. இதெல்லாம்
மூடப்பழக்க வழக்கம்கூட அல்ல. மடப்பழக்க
வழக்கம்.

தவறு என்பதே தவறு! இடதுகையை வலதுகை அளவிற்கு இயக்காதிருப்பது மருத்துவரீதியாகவே தவறானது. காரணம், இடதுகை இயக்கம் குறையக் குறைய, வலதுமூளையின் இயக்கம் குறைகிறது.

◈ மாடு தரும் பால் சைவம் எனும்போது, கோழி தரும் முட்டை மட்டும் எப்படி அசைவமாகும்?

முட்டை மீது கோழியை சில நாட்கள் உட்கார வைத்தால், அது குஞ்சு பொறிக்கும்.

பால்மீது மாட்டை உட்கார வைத்தால், கscratchகுக்குட்டி பிறக்குமா?

விதண்டாவாதமாகக் கேள்வி கேட்டதால்தான், இப்படிப் பதில் சொல்ல வேண்டிய அவசியமிருக்கிறது.

நிஜத்திலிருந்து சொன்னால், முட்டைக்குள் உயிர்த்தன்மை உண்டு. பாலுக்குள் அது இல்லை.

பாலைச் சாப்பிடுவதால், ஓர் உயிர்க்கொலை செய்யப்படுவதில்லை. ஆனால், முட்டையைச் சாப்பிடுவது அப்படியாகாது. எனவே, அது அசைவம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

◈ தெய்வ விக்கிரங்களுக்கு ஏகப்பட்ட நகைகளை அணிவிப்பது ஏன்? தெய்வமும் சாதாரண மனிதனைப்போல் ஆசைப்படுகிறாரா என்ன?

கடவுள் ஆசைப்படுவதால் அல்ல, மனிதர்கள் ஆசைப்படுவதால் நகைகளைத் தெய்வங்களுக்கு அணிவிக்கும் பழக்கத்தை உருவாக்கினார்கள் ஞானிகள். நகைகள் மனிதரின் மனதை ஈர்க்கும்.

Sadhguru portrait

கடவுள் ஆசைப்படுவதால் அல்ல, மனிதர்கள்
ஆசைப்படுவதால் நகைகளைத் தெய்வங்களுக்கு
அணிவிக்கும் பழக்கத்தை உருவாக்கினார்கள்
ஞானிகள்.

அவை கடவுளின் மேல் இருந்தால், அவர் மனம் கடவுளை நோக்கி ஈர்க்கப்படும். மனிதர்களின் ஆசையைக் கொண்டே, அவரின் ஆசைகளைக் கடக்க வைக்கும் நுட்பம் அது. கடவுளிடம் மனதைக் கட்டிப்போடும் ஒரு நல்ல வழிமுறைதான் நகைகளும், அலங்காரமும்.

◈ வைரத்திற்கு மட்டும் அவ்வளவு பெரிய மதிப்பு வந்தது ஏன்?

சில முட்டாள்கள் அந்தக் கற்கள்மீது பற்றுக்கொண்டு, அதற்காகப் போட்டி போடுவதால், அதன் மதிப்பு உயர்ந்துவிட்டது. அவ்வளவுதான்.

◈ கணவர் இறந்த பிறகும், குங்குமமும், பூவும் வைத்துக் கொள்ளலாமா?

பூவும், பொட்டும் கணவரா கொடுத்தார்?! அவையெல்லாம் அம்மா கொடுத்தது.

அம்மா ஆசையாய் கொடுத்ததை எந்த ஒரு காரணத்திற்காகவும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

◈ இந்தியக் கலாச்சாரம் பற்றி உங்களின் கருத்து என்ன?

கலாச்சாரங்களின் சாரம் இந்தியக் கலாச்சாரம்.

◈ மேற்கத்திய கலாச்சாரத்திற்கும், கிழக்கத்திய கலாச்சாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

கிழக்கில் வாழ்விற்காக கலாச்சாரம் உருவாக்கப்பட்டது.

மேற்கில் கலாசாரத்திற்காக வாழ்க்கை உருவாக்கப்பட்டது.

பூவும், பொட்டும் கணவரா
கொடுத்தார்?! அவையெல்லாம்
அம்மா கொடுத்தது.
அம்மா ஆசையாய் கொடுத்ததை
எந்த ஒரு காரணத்திற்காகவும்
எடுக்க வேண்டிய
அவசியமில்லை.

◈ இங்கு ஒரே குடும்பத்திற்குள்ளும்,
உறவினர்களுக்குள்ளும் சண்டைகள்
வருகின்றன. அப்படிப்பட்ட உறவுகள்
இருந்துதான் என்ன பிரயோஜனம்?

இந்தக் கலாச்சாரத்தில்
சண்டையிடவாவது உறவினர்கள் இங்கு
இருக்கிறார்கள்.

அங்கு அதுவும் இல்லாமல் சாகிறார்கள்.

◈ சிறு சண்டைகள் சகஜமானது என்கிறீர்களா?

இல்லை, அவசியமானது.

◈ சண்டைகள் அவசியமானவையா?

எல்லோரும் பிறக்கும்போதே ஞானியாகப் பிறக்கிறார்களா என்ன.... சாதாரண மனிதர்கள் அவ்வப்போது மனமுடைவதும், மனம் தளர்வதும் இயல்புதான்.

ஒருவர் மனம் தளரும்போது, இன்னொருவர் தாங்கிப் பிடிப்பதும், இன்னொருவர் மனமுடைந்து பொங்கும்போது, அந்த சிறுசிறு கோபங்கள், தடுமாற்றங்கள் வடியும் வடிகாலாக இவர் இருப்பதும், உளவியல் ரீதியாக மருத்துவ குணம் வாய்ந்தவை.

மனிதனின் வளர்ச்சியில் அவன் குணமுதிர்ச்சி பெறும்வரை குடும்பம், உறவுகள் என்ற உளவியல் (Shock absorber) மிக மிக அவசியமானவை.

◈ இந்தியாவின் சிறப்பம்சம் என்ன?

தியானம்.

“எல்லோரையும் நேசியுங்கள் என்கிறீர்களே, எதிராளியை நேசிப்பது எப்படி?’’ சொல்லுங்கள் ...

-இந்திரன், சென்னை.

எதிராளியைக நேசிக்கத்தான் அன்பு வேண்டும்.

நண்பனை நேசிக்க அன்பு தேவையில்லை.

தடவிக் கொடுத்தால் நாய்கூட அன்பாய் வாலாட்டும்.

ஏற்கெனவே, நம்மோடு சுமுகமாய் இருப்பவரை நேசிப்பது மட்டும் நேசமல்ல.

எதிராளியைக்கூட நேசிப்பதுதான் நேசம்.

ஆகாமிய ஆசைகள்

* நான் ஏன் பிறந்தேன்? ஆசைகளை அடைய.

* நான் ஏன் இரண்டுங்கெட்டானாய் வாழ்கிறேன்? சில நேரம் வாழ விரும்புகிறேன். சில நேரம் வாழ்வையே வெறுக்கிறேன் ஏன்? இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்.

* எது? ஆசைகள்.

* ஆசைகளா? ஆம்.

ஆசைகள் நிறைவேறும்போது வாழ்க்கையில் விருப்பம் கொள்வீர்கள்.அவை நிறைவேறாதபோது வெறுப்புக் கொள்வீர்கள். வாழ்வின் மூச்சு ஆசைகள்.

> ஆசைகள் நிறைவேறும் போது
> வாழ்க்கையில் விருப்பம்
> கொள்வீர்கள்.
>
> அவை நிறைவேறாத போது
> வெறுப்புக் கொள்வீர்கள்.

* பல நேரம் ஆசைகள் நிறைவேறிய
பின்கூட திருப்தி வருவதில்லை. மாறாக,
ஆசைகளின் வீரியம் தான் அதிகமாகிறது.
அதன் மீதான வெறிதான் கிளம்புகிறது. இது
ஏன்?

அப்படியென்றால்... அவை ஆகாமிய ஆசைகள்.

* ஆகாமிய ஆசைகளென்றால்? இரண்டு பெரிய ஆசைகளுண்டு.

  1. ஆகாமிய ஆசைகள்.
  1. பிராரப்த ஆசைகள்.

* பிராரப்த ஆசைகளென்றால்?

பிராரப்த ஆசைகள் என்றால், இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்து நீங்கள் எடுத்து வந்த ஆசைகள்.

ஆகாமிய ஆசைகள் என்றால், இப்பிறவிக்கான ஆசைகளை அனுபவிக்கும் போது, இந்தப் பிறவியில் புதிது புதிதாய் நமக்குள் நுழைந்து கொள்ளும் ஆசைகள்.

* இரண்டில் எது நல்லது? எது கெட்டது?

பிராரப்த ஆசைகள் நல்லது. ஆகாமிய ஆசைகள் கெட்டது.

* ஆகாமிய ஆசைகள் கெட்டவையா?

ஆகாமிய ஆசைகள் மனம் சம்பந்தப்பட்டவை. மனதில் சொருகப்பட்டவை. பிராரப்த ஆசைகள் உயிர் சம்பந்தப்பட்டவை. உயிரிலிருந்து வருபவை.

மனம்தான் மனிதனின் நோய்.

portrait

மனம்தான் மனிதனின் நோய்.

எனவேதான் ஆகாமிய ஆசைகள் திருப்தியைத் தருவதில்லை.

இப்படி எந்தெந்த ஆசைகள் உங்களுக்குள் வெறியைக் கிளப்புகின்றனவோ, அதிருப்தியை தருகின்றனவோ, அவை ஆகாமிய ஆசைகள். புது ஆசைகள், புதிர் ஆசைகள்.

★ பிராரப்த ஆசைகளை மட்டும் நல்ல ஆசைகள் என்று சொல்வதேன்?

உடலெடுக்கும் முன்பு, உயிராய்த் திரிந்தபோது, உங்களோடு இருந்த ஆசைகளிலிருந்து வந்தவையே பிராரப்த ஆசைகள்.

அந்த பிராரப்த ஆசைகள் நிறைவேறினால், உயிர் குளிரும். மனதின் சூடு தணியும்.

பிராரப்த ஆசைகள் தீர்ந்து போனால், முழு சுதந்திரமடைந்து விடுவீர்கள்.

பிறவிக் கடலிலிருந்து தப்பித்து விடுவீர்கள்.

★ பிராரப்த ஆசைகளை அனுபவித்துத் தீர்த்து விட்டால், முக்தியடைந்து விடுவேனா?

பிராரப்த ஆசைகளை அனுபவிக்கவே விடாத அளவுக்கு, ஆகாமிய ஆசைகள் மனதில் அதிகமாகி விடுகின்றன.

அவற்றின் கொட்டத்தை நீங்கள் அகற்றாத வரை, பிராரப்த ஆசைகளைத் தொடக்கூட முடியாது.

portrait

எந்தத் தனி மனிதரும் தனி அல்ல. இறைசக்தியின் அலைகளே.

★ ஆகாமிய ஆசைகளை அகற்றுவது எப்படி?

அந்த ஆசைகளை அகற்றும் முறைதான் 'நித்ய தியானம்.'

அகற்றும் கருவி, 'ஞான கருத்துக்கள்.'

★ மனித பிறவி பற்றிய ஆழமான ரகசியம் ஒன்றைச் சொல்லுங்கள்...

உபநிடத ரகசியம் ஒன்று...

'நீங்கள் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை'

★ அப்படியென்றால் முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி என்பதெல்லாம்...

கடலில் எழும் அலைகள். அடுத்தடுத்து பல தனித்தனி அலைகள் எழுந்தாலும் எந்த அலையும் தனி அலை அல்ல. அதேபோல் எந்தத் தனி மனிதரும் தனி அல்ல. இறைசக்தியின் அலைகளே. அலை எழும்பும். பிறக்காது. பிறக்காது என்பதால் இறப்பும் இல்லை.

★ நரகம் பற்றிய ஒரு உண்மையைச் சொல்லுங்கள்? அது ஒரு பொய்.

★ உண்மையான நண்பன் யார்? உங்களின் உடல் .

★ குடும்பம்? பழுது பார்க்கப்பட வேண்டிய உணர்வு இயந்திரம்.

★ குடும்பம் இயந்திரமா? சில மனிதர்களை, சிலகாலம் ஒன்றாய், உணர்வுப்பூர்வமாய் அழைத்துச் செல்லும் இயந்திரம்தானே அது.

★ ஞானம்? குடும்பம், உடல் எனும் தடைகளைத் தாண்டி... நரகம், சொர்க்கம் எனும்

மாயைகளைத் தாண்டி... ஆசைகளை அனுபவித்து, பிறவிக்கடலைத் தாண்டி... அலைகளில்லா ஆனந்தக் கடலாவது ஞானம்.

தியானம்

மரணம் என்ற முற்றுப்புள்ளி வைப்பதாகவே ஒவ்வொரு முறை இறக்கும் போதும் நம்புகிறீர்கள்.

ஆனால் அங்கே உங்களோடு வரும் ஆசைகள்...

"தோழா! கிளம்பு வேலை நிறைய இருக்கிறது.” என்று உங்களை மீண்டும் அழைத்து வந்துவிடுகிறது.

மரணம் முற்றுப்புள்ளியல்ல, அதுவொரு துவக்கப்புள்ளி.

“வா! அடுத்த வாழ்க்கை ஆரம்பித்துவிட்டது” என உங்களை இளைப்பாற விடாமலே இழுத்து வந்து விடுகிறது.

முற்றுப்புள்ளியைத் துவக்கப் புள்ளியாக விடாமல் காப்பது, உங்களிடம்தான் உள்ளது.

இப்போதே உட்கார்ந்து, உங்களின் ஆகாமிய, பிராரப்த ஆசைகளைப் பட்டியலிடுங்கள்.

ஆகாமியத்தை அகற்றிடும் பணியை ஆரம்பியுங்கள்.

தியானம் துவங்கிவிட்டது.

ஆசைகளை நிஜமாக்கும் தியான ரகசியம்

90 % கனவுகள் நிஜமாவதில்லை. ஏனென்றால், அவை 'கனவுகள்.'

தாவோ மாணவர் ஒருவர் தன் குருவிடம், "ஏன், கனவுகள் பல நிஜமாவதில்லை?" எனக் கேட்கிறார்.

அப்போது குரு சொன்னார், "ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு ஆசையை பூர்த்தி செய்ய உருவெடுத்த மனமோகினிகள்".

மாணவர், "கனவுகள் மோகினிகளா?"...

குரு, "உங்களைப் பொறுத்தளவிற்கு ஆசைகாட்டி மோசம் செய்பவைதானே மோகினிகள்"

ஆசைகள்
அனுபவிக்கப்பட,
ஆசைகள்
சக்தியூட்டப்பட
வேண்டும்.

மாணவர், "ஆமாம், ஆமாம் குருவே. மோகினிகளிடமிருந்து தப்பிக்கவும் வேண்டும். அதே நேரத்தில் எங்களின் ஆசைகளையும் அனுபவிக்க வேண்டும். இதற்கு வழி சொல்லுங்கள்".

குரு, "நல்லது. உன் வேண்டுகோளை
நிறைவேற்ற சில வருடங்களாவது நீ என்னோடு
தங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் அவை
நிறைவேறும்" எனச் சொல்லி முடித்தார்.

தந்திர சாஸ்திரங்களில், "ஆசைகள் அனுபவிக்கப்பட, ஆசைகள் சக்தியூட்டப்பட வேண்டும்." எனக் குறிப்படப்பட்டிருக்கிறது. திரையரங்கில் மூன்று மணிநேரங்களுக்கு நம்மை ஆட்டிப் படைக்கும் திரைப்படமானது, திரையில் தெரிவதற்கு முன்பு, ஒரு பாம்பைப்போல் ஃபிலிம்ரோல் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த சின்னப் பெட்டிக்குள் இருக்கும்வரை, சும்மாயிருக்கும் ஃபிலிம்ரோல் பதிவுகள், ஒரு ப்ரொஜக்ட்டரின் முன்னால் ஓட விடப்பட்டதும், திரையில் படமாகத் தெரிகிறது.

அதில், மனிதர்கள் ஓடுகிறார்கள், ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், சண்டை, கூத்து, கும்மாளம், அழகு, ஆச்சரியம், பயம் என்ற எல்லாமே திரையில் நிஜமாகிறது.

படச்சுருளுக்கு ப்ரொஜக்ட்டரின் ஒளி கிடைக்காவிட்டால், திரையில் படமாகத் தெரியாது. ஃபிலிம்ரோலில் ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், அதனால் எந்த பலனும் இல்லை.

அதேபோல்தான் நம்முடைய பல ஆசைகள், ஃபிலிம்ரோல்போல் நம் மனப்பெட்டிக்குள் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கின்றன. படப்பெட்டிக்குள் இருக்கும் படச்சுருளை நிஜமாக்கும் ப்ரொஜக்ட்டரின் ஒளிக்கு இணையானது நம் ஆன்ம ஒளி.

சும்மாயிருக்கும் படச்சுருளைப்போல, சும்மாயிருக்கும் நம் மனதின் ஆசைச்சுருள்களின் மேல் ஆன்ம ஒளிபட்டால் ஆசைகள் சக்தியூட்டப்படும். அவை உயிர் பெறும்.

எப்படி படச்சுருளின் ஒவ்வொரு படமும் திரையில் ஜனரஞ்சகமான

Nithyananda

> சும்மாயிருக்கும் படச்சுருளைப் > போல சும்மாயிருக்கும் நம் மனதின் > ஆசைச்சுருள்களின் மேல் ஆன்ம ஒளிபட்டால் > ஆசைகள் சக்தியூட்டப்படும். > அவை உயிர் பெறும். படமாகிறதோ, அதேபோல் ஆசைச்சுருளின் ஒவ்வொரு ஆசையும் நம் வாழ்க்கைத் திரையில் ஜனரஞ்சகமான படமாக மாறிவிடும்.

கால்கள் சூம்பி போயிருந்த ஜெல்லி ஓவன்ஸ்-ஐ மிகப்பெரிய ஓட்டப்பந்தயக்காரராக்கியதும், 14 முறை விதவிதமான தோல்விகளைச் சந்தித்த ஆப்ரகாம் லிங்கனை அதிபராக்கியதும், இந்த ஆசைகளே.

பக்கத்து வீட்டு இளைஞரைக் காதல் தோல்வியில் முங்கவிட்டு, நம் எதிர் வீட்டுக்காரரைப் பெரியாளாக்கலாம் என அகலக்கால் வைத்து, பெரும் நஷ்டத்தில் ஆழ்த்தி, அவரை முக்காடு இட வைத்ததும் இந்த ஆசைகள்தான்.

“அப்படியென்றால்.....மனிதர்களின் வாழ்வும் - சாவும் , வெற்றியும்

  • தோல்வியும், உயர்வும் - தாழ்வும், முழுக்க முழுக்க ஆசையால்தான் நிர்ணயமாகிறதா?” என ஆனந்த யோகம் வகுப்புப் பயிலும் மாணவர் கேட்டார்.

“இதிலென்ன சந்தேகம். ப்ரொஜக்ட்டரின் முன்பு ஜோக் படச்சுருளை வைத்தால் ஜோக் படம்தான் நிஜமாகும்.

அதிரடிச் சண்டைப் படத்தை வைத்தால், படம் முழுவதும் அதிரடி சண்டைகளாகத்தான் இருக்கும்.

எந்த ஆசைகளை நீங்கள் ஆழமாய் நினைக்கிறீர்களோ,அது ஆன்ம ஒளியைச் சென்று தொடுகிறது.

ஆன்ம ஒளியால் சக்தியூட்டப்பட்ட ஆசைகள் ஒருவருக்குச் சாதனையையும், இன்னொருவருக்கு வேதனையையும் தருகின்றன” என்று பதிலளித்தோம்.

மாணவர், “இன்னும் கொஞ்சம்
விளக்கமாய் சொல்லுங்களேன்” எனக் கேட்டுக்
கொண்டார்.

“இந்த உதாரணத்தை வைத்துக் கொள்ளப்பா. எளிதாய் புரிந்துவிடும்.

ஆசைகள் தீப்பந்தத்திற்கு சமம்.

எந்த ஆசைகளை
நீங்கள் ஆழமாய்
நினைக்கிறீர்களோ
அது ஆன்ம ஒளியைச்
சென்று தொடுகிறது.

ஆன்ம சக்தி உன் உயிரின் ஆழத்தில் ததும் பிக் கொண்டிருக்கும் நெய்க்குச் சமம்.

தீப்பந்தத்தை உள்ளிருக்கும் நெய்யில் முக்கி எடுத்துப்பற்ற வைத்தால், திகுதிகுவெனப் பற்றிக் கொள்ளும்" எனச் சொன்னதும் புரிந்து கொண்டார்.

ஆம், உங்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டுமானால் அவை மேம்போக்கான ஆசைகளாய் இராமல், ஆழமான ஆசைகளாக இருந்தால் போதுமானது.

ஆழமான ஆசைகள் ஆன்ம ஒளியைத் தானாய் உறிஞ்சிக் கொண்டு தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் சக்தி பெற்றவை.

தியானம்

பெங்களூரு ஆஸ்ரமத்தின் நிர்வாக அதிகாரி (Administrative Officer) "ஆசைகளை ஆழப்படுத்துவதற்குக்கூட நம் சாஸ்திரங்களில் நுட்பங்கள் இருக்கிறதா?" என்று ஒருமுறை கேட்டார். அவரோடு பகிர்ந்துகொண்ட பதிலை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

ஆம், இருக்கிறதே.

இந்த ஒரு தியானத்தைச் செய்யுங்கள்.

100 ஆசைகளோடு, இது 101 ஆவது என ஆசைப்படாமல், முதலில் முக்கியமான ஆசையைத் தேர்வு செய்யுங்கள். அது சாதகத்தைத் தருவதா? பாதகத்தைத் தருவதா? எனக் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

தேர்வு செய்த ஆசையை உணர்வுப்பூர்வமாக அணுகுங்கள்.

ஆசைகள் ஆழமாகும். அவை நிஜமாகவும் மாறும்.

காரணம், உங்களின் உணர்வுக்கு உங்களின் ஆசையை ஆன்ம சக்திக்குள் முங்கி எழச் செய்யும் ஆற்றல் உண்டு. உணர்வுப்பூர்வமாகுங்கள்.

Portrait of Swami Nithyananda standing on a wooden bridge