KAILASA Library/மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்/உள்ளுக்குள் சொர்க்கம்Sign in
மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்

உள்ளுக்குள் சொர்க்கம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Nithyananda

கண்ணைத் திற...

சொர்க்கம்

இந்த நிமிடம், இந்தப் புத்தகத்தை நீங்கள் படிப்பது ஏன் கனவில் நிகழ்வதாய் இருக்க கூடாது.

சில மணி நேரங்களுக்குமுன் தூங்கிய நீங்கள், தூக்கத்தில் கண்டு கொண்டிருக்கும் கனவுதான், 'நீங்கள் இப்போது படிப்பது!' என்பதை முழுமையாய் இல்லையென மறுக்க, நம்மிடம் என்ன ஆதாரமிருக்கிறது?

“கிள்ளிப்பார்ப்பேன்!” என்பீர்கள். கனவில் கூடத்தான் கிள்ளலாம், ஓடலாம், கத்தலாம்... எல்லாமே செய்யலாம்.

எத்தனை முறை நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்து, “ஓ! வெறும் கனவுதானா?” என்று கலைந்திருப்பீர்கள். விழிக்கும் வரை, கனவை நிஜமென்று தானே நம்பினீர்கள்.

ஞானமடையும் வரை,

உள்ளபடியே உள்ள

உலகம், எப்படியிருக்கும்

என, ஒருவருக்கும்

தெரியாது.

ஆகவே கேட்கிறேன்... இந்தப் புத்தகத்தை
நீங்கள் படிப்பது, ஏன் கனவில் நிகழ்வதாக
இருக்கக்கூடாது?.

தூங்கும் உங்களை யாராவது
எழுப்பினால்தான் தெரியும். இல்லையேல்
நீங்கள் தானே எழவேண்டும்.

“கனவுலகுக்கும், நிஜவுலகுக்குமான வித்தியாசம் சிறிது கால அளவிலானது மட்டுமே” என தாவோ கீதமொன்று சொல்கிறது.

ஆம். அது உண்மைதான்.
மனிதக் கனவு வெறும் 6 மணிநேரம்.
மனித வாழ்வு கொஞ்சம் அதிகம். 60 வருடம்!

6 மணி நேர கனவுக்கும், 60 வருட வாழ்வு எனும் மாயைக்கும் இடையில் சிக்கித்தவிப்பது, இன்னும் எவ்வளவு காலம்? அதற்கு விடிவு எப்போது?

மொத்த ஆன்மீகமும் சொல்வது, என் சொந்த அனுபவம் - ஆகிய இரண்டால் உறுதியாய்ச் சொல்வேன்...

“மனித வாழ்வே கனவுதான். உள்ளே தூங்கும் மனிதன் விழித்தால், வாழ்வு மொத்தமுமே கனவெனப் புரியும்! (All are just illusion of Mind)”

கனவுலகைத் தாண்டியது நிஜ உலகம். நிஜ உலகையும் தாண்டியது உள்ள படியே உள்ள உலகம் (Existing reality)

ஞானமடையும் வரை, உள்ளபடியே உள்ள உலகம், எப்படியிருக்கும் என ஒருவருக்கும் தெரியாது.

சாதாரணமாக, உயிர் உடலைப் பிரிகையில்...

“அச்சச்சோ! மனித வாழ்வுகூட ஒரு பெரிய கனவுதானா என்று புரிய வரும்...”

portrait

மனித வாழ்வே கனவுதான். உள்ளே
தூங்கும் மனிதன் விழித்தால், வாழ்வு
மொத்தமுமே கனவெனப் புரியும்!
(All are just illusion of Mind)

நிஜ உலகம் என்று நாம் இப்போது நம்புவது, அப்போது ஒடுங்கிப்போகும். அப்போதுதான் உள்ளபடியே உள்ள உலகம் இதுதான் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் புரியவரும். ஆனால், அந்த உலகை அனுபவிக்க உடல் இருக்காது.

அதனால், உள்ளபடியே, உள்ள உலகை அனுபவிக்க, அடுத்தகணமே உடலெடுத்திட, உயிர் துடியாய்த் துடிக்கும். உயிர் மறுபிறவியெடுக்கும்.

உயிரானது உடலை எடுத்ததும், மனமும் மாயையும் சூழ, ஏன் பிறந்தோமென்று மறந்து - மீண்டும் மனித வாழ்வு தொடரும்.

கனவுகளும் பிறவிகளும் தொடரும்.

மனிதப் பிறவி பற்றி ஞானி ‘ரூசேக்’ ஒருமுறை சொன்னார், “இந்தவுலகில் உடலெடுத்து, உடலெடுத்து மனம் விளையாடும் விளையாட்டுக்குப் பெயர் மனிதப் பிறவி”.

காலையில் கண்விழிக்கும்போது, ஆறு மணி நேரமாக நிஜம் எனக் கழிந்த கனவு, விளையாட்டுப்போல் கலைந்து போகிறது.

உடலை விட்டு உயிர் வெளியேறும் போதும், இதுவரை அறுபது வருடமாக நிஜமெனக் கழித்த வாழ்வு, விளையாட்டுப் போல் கலைந்து போகும்.

சுருங்கச் சொன்னால்... மனிதவாழ்வு ஒரு நீளமான கனவு.

காலம், மனம், கனவு, பொருட்கள் ஆகியவற்றை முடிச்சுப்போட்டுச் சுவையாய் விளக்கும் Quantum Physics, காலம் பற்றி ஆச்சரியப்பட வைக்கும் உண்மை ஒன்றைச் சொல்கிறது “காலம் (Time) என்பது பருப்பொருளின் நான்காவது பரிமாணம்”

“இந்தவுலகில்
உடலெடுத்து,
உடலெடுத்து மனம்
விளையாடும்
விளையாட்டுக்குப்
பெயர் மனிதப் பிறவி”,

நான்காவது பரிமாணத்தின் கோணத்திலிருந்து பார்த்தால், ஒரு திடப்பொருள் நாம் நினைப்பது போல், தனியொரு பொருளல்ல என்பது புரியவரும். இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம்...

நீளம், அகலம், உயரம் என்ற மூன்று பரிமாணங்களைக் கொண்ட, வெயிலில் வைக்கப்பட்ட ஐஸ்கட்டி, சில நிமிடங்களில் காணாமல் போகிறதே.

ஐஸ்கட்டியின் நான்காம் பரிமாணமானத்தின் கோணத்தில் பார்த்தால், சில நிமிடங்களில் அந்த ஐஸ்கட்டி வேறு ரூபம் எடுத்து விடுகிறது. சக்தியின் இன்னொரு வெளிப்பாடாக அது மாறிவிடுகிறது.

மக்கும் மரமும், துருவைக்கும் இரும்பும், கதிரியக்கமாகும் பொருள்களும், உருக்குலையும் உடலும் - காலத்தின் கோணத்தில் வேறு வேறு சக்தியாகப் பிரிந்து சென்றுவிடுகின்றன.

திடமான பொருட்கள் கலைந்து போவதுபோல், காலத்தின் கோணத்தில் வாழ்க்கையும் கலைந்து போகிறது. கரைந்து போகிறது.

எனவே சொல்கிறேன், நிஜவாழ்க்கை என்று நிஜமாய் நீங்கள் நம்பும் வாழ்க்கையைத் தாண்டி, உலகைத் தாண்டி, உள்ளபடியே உள்ள ஆனந்தமயமான உலகம் இருக்கிறது. இது உண்மை.

லோகோ

தியானம்

சிவானந்தர், பரதரிஷியிடம், "சொர்க்கம் எங்கேயிருக்கிறது" எனக் கேட்டபோது,

" கண்ணைத் திற... சொர்க்கம்!" என்றார்.

"திறந்து பார்த்தேன். உலகம் அப்படியேதான் இருக்கிறது, "சொர்க்கம் தெரியவில்லையே!" எனச் சொன்னவரிடம் பரதரிஷி சொன்னார்...

" கண்ணைத் திற என்பது, கண் இமையை திறப்பதல்ல. கண்களைத் திற..." என்றார்.

இமையை அசைப்பதும், கண்விழியை அசைப்பதும் எப்படி கண்களைத் திறப்பதாகும்?

இமை திறவாமல், விழி அசையாமல் கண்களைத் திறக்க முயற்சிக்க முயற்சிக்க...

ஒருநாள்... அகக்கண் திறந்து கொள்ளும். நீண்ட கனவு கலையும். உள்ளபடியே உள்ள உலகம் புலப்படும்!.

சொர்க்கமாகத் தெரியும், உலகமே!

எனவே சொல்கிறேன் 'கண்களைத் திற... சொர்க்கம்' என்பது வெறும் வாக்கியமல்ல.

அது தியான சூத்திரம்.

மகாவாக்கியம்

"அன்பு ஒரு மருந்து, வித்தியாசமான மருந்து. இந்த மருந்தைப் பெறுபவரைவிட, கொடுப்பவரே அதிக குணம் பெறுவார். இது மருத்துவ ரீதியான உண்மையும் கூட".

ஒரு காலகட்டத்தில் நான் பலவற்றிற்காக ஏங்கியிருக்கிறேன். ஆனால், இன்று அவற்றை நானே வெறுக்கிறேன் ஏன்? -சையத் ஹாரீஃப், விக்ரவாண்டி.

குடும்பஸ்தர் ஒருவர் அத்வைத ஞானியிடம், " நான் எல்லா லௌகீக சுகத்தையும் வெறுத்து ஒதுக்கிவிட்டேன். எனக்கு எந்த ஆசையுமில்லை. எனக்கு ஆன்மீகம் சொல்லிக் கொடுங்கள் ",எனக் கேட்டார்.

ஞானி, “யாரைக் கேட்டு எல்லாவற்றையும் வெறுத்தாய்? இந்த பைத்தியக்காரச் செயலுக்குப் பதில், நீ ஆசையோடே அல்லல்பட்டிருக்கலாம். அது எவ்வளவோ மேல்",என்றார்.

குடும்பஸ்தர், “என்ன சாமி சொல்றீங்க?". ஞானி சொன்னார், “ஆசை தன்னை அழியாமல் பார்த்துக் கொள்ளச் செய்யும் தந்திரவேலைதான் வெறுப்பு."

"ஆசை துவங்கையில், வெறுப்பு மறைகிறது. ஆசை மறையுமிடத்தில், வெறுப்பு துவங்குகிறது"

  • ஹஸிட் தத்துவம்.

ஒருக்கால் நிறைவேறலாம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை, ஆசையானது ஏக்கங்களாகக் குடியிருக்கும்.

வாழ்வின் வரம்புகளும், தனிமனித இயலாமைகளும் ஒருசேர ஒரு காலகட்டத்தில் இந்த ஆசைகள் நிறைவேற வாய்ப்பில்லை என்ற உண்மையை உணர்த்தும். அப்போதுதான், அதே ஆசையின் மீது வெறுப்பு உருவாகும்.

இவற்றை நான் வெறுக்கிறேன் எனச் சொல்வது, இன்னும் ஆழ்மனதில் அவற்றின் மீது ஒருவர் வெறி கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறி.

வெறுப்பதால் தப்பித்ததாய் நினைத்துவிட வேண்டாம். அடக்கப்பட்ட ஆசைகள் புரையோடியிருக்கிறது. அவ்வளவே.

ஆழ்மனம் தூர்வாரப்பட வேண்டும்.

ஒளிந்திருக்கும் பொக்கிஷம்

* கண்ணிருந்தும் குருடு? மோகம்.

* காதிருந்தும் செவிடு? வேகம்.

* நாவிருந்தும் ஊமை? மந்தம்

* உடலெடுத்திருந்தும் துக்கம்? மனிதன்.

* எதுவுமில்லாமல் ஆனந்தம்? ஞானம்

*சுகம்? நிச்சயம் வெளியேயில்லை
சுகம்? நிச்சயம் வெளியேயில்லை
*துக்கம்? நிச்சயம் உள்ளுக்குள்தானிருக்கிறது.
*துக்கமில்லா ஆனந்த சுகம் பெறுவது எப்படி?

துக்கத்தையும், சுகத்தையும் விழிப்புணர்வால் தோண்டினால், அங்கேயே காத்துக்கொண்டிருக்கும் ஆனந்தம் பீறிட்டடிக்கும்.

★

நீதி? அது ஒரு பெரிய அநீதி.

★

அப்படியா!

நீதி, ஒழுக்கம் என்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி மற்றவர்களை ஒடுக்குவது, கட்டுப்படுத்துவது எனும் அநீதியை உருவாக்கிவிட்டது இந்தச் சமுதாயம்.

★

அப்படியென்றால் ஒழுக்கம் தவறா?

ஒழுக்கம் பொதுப்படையானது அல்ல. அது தனிமனிதருக்கானது. ஒழுக்கம் ஒருவரின் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது. அது அவரின் சுதந்திரத்தை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒழுக்கம் சரி.

★

மனிதர்?

இந்தப் பிறவியில் மனித உடலை எடுத்திருக்கும் ஓர் உயிர்.

★

மிருகங்கள்?

சென்ற பிறவியில் மனித உடலெடுத்தபோது, ஒழுங்காய் வாழத்தவறியதால், தற்போது ஊர்ந்து செல்லும் உயிர்களாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

Sadhguru smiling

மன்னிப்பு? வெறுமனே வாயிலிருந்து வந்தால், அது மற்றவர்களின் இறுமாப்பிற்கு நீங்கள் போடும் மருந்து. இதயத்திலிருந்து வந்தால், அதுவே உங்களின் இறுமாப்பினை அழிக்கும் மருந்து.

★ மன்னிப்பு?

வெறுமனே வாயிலிருந்து வந்தால், அது மற்றவர்களின் இறுமாப்பிற்கு நீங்கள் போடும் மருந்து.

இதயத்திலிருந்து வந்தால், அதுவே உங்களின் இறுமாப்பினை அழிக்கும் மருந்து.

★ கனிவு?

பணிவு கலந்தது.

★ பணிவு?

கனிவு கலந்தது.

  • தைரியம்?

பயப்படவேண்டியதற்கு பயப்படவேண்டிய ஞானத்தை உள்ளடக்கியது. தேவையில்லாத தயக்கத்தையும் தாண்டும் துணிவை உள்ளடக்கியது.

  • பயபக்தி?

தெய்வ குணம்.
தெய்வ ஞானம்.
தெய்வப் பரிசு.

  • பற்று?

நிம்மதியை உறிஞ்சும் அட்டை.

வாழ்க்கை?

இளைப்பாறுவதற்கு இறைவன் தந்த பரிசு.

  • சிரிப்பு? யார் வேண்டுமானாலும் செய்யும் தியானம்.

★ பெண்கள் மரியாதைக்குரியவர்களா? தொழுகைக்குரியவர்கள்.

  • அப்படியென்றால் அவர்கள் தெய்வங்களா? நீங்கள் கூட தெய்வம்தான். அவர்களுக்குள் இருக்கும் பெண்மைத்துவம் உங்களுக்குள்ளும் மலர்ந்தால்.
  • வெற்றி? இளைப்பாற விரும்பாதவர்கள் செய்யும் வேலை.
  • வாழ்க்கை? இளைப்பாறுவதற்கு இறைவன் தந்த பரிசு.

தியானம்

நாம் ஒவ்வொருவரும், எப்போதும், ஏதேனும் ஒரு செயலை செய்து கொண்டுதானிருக்கிறோம்.

எந்தச் செயலைச் செய்தாலும், அதைத் தியானமாகச் செய்வது ஒரு கலை. அந்தக் கலை எல்லோரிடமும் ஒளிந்து கொண்டிருக்கிறது. ஒளிந்திருக்கும் கலை வெளிவர இந்தப் புரிந்து கொள்ளுதல் போதும்.

ஒரு வேலையைச் செய்யத் துவங்கும்முன், இந்த ஞானக்கருத்துக்களைத் தியானியுங்கள்.

"இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது என் அன்பை, என் நன்றியை வெளிப்படுத்த உதவும் ஒரு வாய்ப்பு", என்று தியானியுங்கள்.

இக்கருத்துக்கள் உங்களுக்குள் எதையும் எளிதாக அணுகும் புத்திசாலித்தனத்தையும் மனபலத்தையும் தரும். அது நான் எனும் அகந்தையை மறந்து தெய்வத்தன்மையில் வாழச்செய்யும் தியானமாகும்.

இக்கருத்துக்களை தியானியுங்கள். ஆனந்தமாக இருங்கள்.

சிரிக்கும்போது

ஞானியாகிறீர்கள்

★ உடலுக்கு உள்ளேயே செய்யப்படும் மஸாஜுக்குப் பெயர் ‘சிரிப்பு’, என சுருக்கமாய் சிரிப்பை வர்ணிப்பவர் டாக்டர் வில்லியம் ஃப்ரை.

சிரிப்பு பற்றி மிக அதிக அளவில், அதாவது தொடர்ந்து 30 ஆண்டுகாலமாக சிரிப்பை மருத்துவக் கோணத்தில் ஆராய்ந்து முடித்த பின் அவர் சொல்கிறார்....

“சிரிப்பு ஒரு முழுமையான உடல் அனுபவம்”

“ஒரேநேரத்தில், எல்லா நாடி நரம்புகளையும் தூண்டி, தசைநார்களை உற்சாகப்படுத்தி, எலும்பின் மஜ்ஜை வரை சக்தியைப் பாய்ச்சும் சக்தி பெற்றது இந்தச் சிரிப்பு,” என்று சிரிப்பாராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

“சோர்வுக்குப் பதில் உற்சாகத்தைத் தரும் ஒரே ஒரு தொழில் சிரித்தல்” என ஜென் புத்திசத்தில் சொல்லப்படுவது ஒரு ஞான வெளிப்பாடு, தியான ரகசியம்.

தொடர்ந்து செய்தாலும்,

சலிப்பு எட்டிப் பார்க்காத

களிப்புக்காலம்,

சிரிப்புக்காலம்.

தொடர்ந்து செய்தாலும், சலிப்பு எட்டிப் பார்க்காத களிப்புக்காலம், சிரிப்புக்காலம்.

ஒரு ஜென் சீடர், தன் குருவிடம் கேட்டார்.
“சுவாமி, உங்களின் செயல், சொல் எனக்கு
புதிராயிருக்கிறது”

குரு, “என்ன?”

சீடர், “நான் கோபப்பட்டால், ‘அது அகநடுக்கத்தின் உள் எரிச்சலின் வெளிப்பாடு’ எனச் சொல்கிறீர்கள்.

நீங்கள் கோபப்பட்டால், ‘அது கருணையின் வெளிப்பாடு’ என்றும், ‘அது நீங்கள் எனக்கு செய்யும் உதவி’ என்றும் சொல்கிறீர்கள்.

நான் செய்யும் போது, அதுதவறு. நீங்கள் செய்யும்போது மட்டும் அது சரியா?”.

சீடரைப் பார்த்துச் சிரித்த குரு சொன்னார், “கூட்டுப்புழுவைத் தாய் வண்டு கொட்டிக் கொட்டிப் பட்டுப்பூச்சியாக்குவது கருணையா, அகநடுக்கமா சொல்...”

“கருணை” என்றார் சீடர்.

“தாய் வண்டையோ, தன் பக்கத்திலிருக்கும் சக புழுவையோ வளரும் புழு கொட்ட முயற்சித்தால், அது கருணையின் வெளிப்பாடா? இல்லை அகநடுக்கத்தின் வெளிப்பாடா சொல்?” என்ற குருவின் வார்த்தைகள் செய்த வருடல்கள், ஜென் சீடரின் முகத்தில் புன்னகையை வளர்த்தது.

தன் சிறுபிள்ளைத்தனமான கேள்வியை நினைக்க நினைக்க, சீடருக்குச் சிரிப்பு வந்தது.

மேலும் சீடர் கேட்டார், “எந்த ஒரு உணர்ச்சியை எடுத்துக் கொண்டாலும், அதில் நம்மிருவருக்கும் இமாலய வேறுபாடு இருக்கும்.

ஒரு ஞானியும், ஒரு சாதாரண மனிதரும், ஒரே மாதிரியாக, ஒரே விதத்தில் வெளிப்படுத்தும் ஓர் உணர்ச்சி அல்லது செயல் ஒன்றாவது இருக்கிறதா?

portrait of Nithyananda

புத்தனும் பித்தனும்
கிருஷ்ணனும் கிறுக்கனும்
சிவமும் சவமும்
ஒன்றாய்த் திகழும் நேரம், சிரிப்புக்காலம்.
இந்தக் கணத்தில் யார், யார்?
எனப் பிரித்துணர முடியாது.

குரு, “ஒரே ஒரு செயல் இருக்கிறது”

சீடர், “அது எது?”

குரு, “ஞானியும் மனிதரும் சந்திக்கும் அந்தத் தளம் சிரிப்பு.

சிரிக்கும் போது ஞானி மனிதராகிறார். மனிதர் ஞானியாகிறார் ” எனச் சொல்லி முடித்தார்.

புத்தனும் பித்தனும்
கிருஷ்ணனும் கிறுக்கனும்
சிவமும் சவமும்
ஒன்றாய்த் திகழும் நேரம், சிரிப்புக்காலம்
இந்தக் கணத்தில் யார், யார்? எனப் பிரித்துணர முடியாது.

★ HAPPY CHEMICALS என அழகாய் குறிப்படப்படும் எண்டார்ஃபின்கள், உடலின் மகிழ்ச்சி தரும் இரசாயனங்கள்.

புன்னகைக்கும்போது பொட்டளவு உடலுக்குள் தூவப்படும் இந்த இரசாயனங்கள், உடல் குலுங்கச் சிரிக்கும்போது, உடலுக்குள் விடாது பெய்யும் அடைமழை போல் பொழியப்படுகிறது.

ஒஹோயோ நகரத்தில் நடைபெற்ற Laughter Meditation என்ற சொற்பொழிவின் முடிவில்... “மோனாலிஸாவின் புன்னகையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என ஒருவர் கேட்டார்.

“மோனாலிஸா ஒரு பெண் மட்டுமே. ஞானியல்ல. அதனால் அவரைப் பற்றிய செய்திகளை விவாதிப்பதில் விருப்பமில்லை.

ஆனால், புன்னகையைப் பற்றிச் சொல்ல முடியும்.

பெரும்பாலான நேரங்களில் புன்னகை ஒரு நாசூக்கான மறுப்பு, ஒரு நாகரீக வேஷம்.

உங்களுக்குப் பிடிக்காதவர் சொல்லும் நல்ல

சிரிக்கும் போது ஞானி

மனிதராகிறார். மனிதர்

ஞானியாகிறார்

ஜோக்கிற்குக்கூடச் சிரிக்கமாட்டீர்கள். வெறுமனே புன்னகைத்து வைப்பீர்கள். மன ஆழத்திலிருக்கும் வெறுப்பு சொல்லும் நாசூக்கான மறுப்பு புன்னகை!

உங்களைவிட அந்தஸ்த்தில், வயதில் அதிகமானவர் எக்கச்சக்கமாக ஏதாவது பேசிவைக்கும்போது, உங்களால் பதிலுக்குப் பதிலளிக்க முடியாது. புன்னகைக்க மட்டுமே முடியும். நல்ல நாகரீக வேஷம் இது.

எனவே, மோனாலிஸாவின் புன்னகையில் எதுவும் பெரிதாய் சொல்வதற்கில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து" எனச் சொல்லி முடித்தேன்.

★ சமீபத்தில் சிரிப்பு பற்றி ஒரு ஆராய்ச்சி அறிக்கையில் படித்தேன். அதில் குறிப்பட்டிருந்த மிக பயனுள்ள சில குறிப்புகளை மட்டும் உங்களுக்காக இங்கு குறிப்பட விரும்புகிறேன்.

1. முழு சிரிப்பு, நுரையீரலை காலியாக்கி, உள்வரும் மூச்சுக்காற்றை அதிகப்படுத்துகிறது.

2. உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, எந்தப் பக்கவிளைவுமில்லாமல்!

3. உற்சாக சக்தியை உடலில் திடீரென உருவாக்குகிறது, எந்த பக்கவிளைவுமில்லாமல்.

4. நன்றாகச் சிரிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

5. துக்கத்தைக் கரைக்கும் மகிழ்ச்சி ஹார்மோன்களை, சிரித்தலால் சுரக்கச்செய்கிறது.

portrait

சிரிப்பு ஆத்ம சக்தியின் வெளிப்பாடு.
அதனால்தான் அந்தக் கணங்களில் மனிதர்
ஞானியாகிறார் எனச் சொல்லப்படுகிறது.

சிரிக்கும்போது என்ன நிகழ்கிறது?

அப்போது உங்களின் மனம் நிற்கிறது.

உடலும் உயிரும் சந்திக்கிறது. உங்களின் ஆத்ம சக்தி, ஒரு மின்னல் போல் உங்களுக்குள் பளிச்சிடப்படுகிறது.

சிரிப்பு ஆத்ம சக்தியின் வெளிப்பாடு. அதனால்தான் அந்தக் கணங்களில் மனிதர் ஞானியாகிறார் எனச் சொல்லப்படுகிறது.

எனவே சொல்கிறேன்... ஒரு ஜோக்கைப் புரிந்து கொள்ளத் தவறினாலும், சிரிக்கத் தவறாதீர்கள்.

'Even if you miss the joke, don't miss the laughter.'

# தியானம்

பத்து நிமிடச் சிரிப்பு ஒரு மணி நேர உடற்பயிற்சிக்கும், இரண்டு மணி நேர நடை பயிற்சிக்கும், மூன்று மணி நேரத் தூக்கத்திற்கும் சமமானது.

"அகங்காரம் மிகுந்தவரால் முழுதாய் சிரிக்க முடியாது. முழுதாய் சிரிப்பவரிடம் அகங்காரம் இருக்க முடியாது" என்ற ஞானமொழியைச் சொல்லும் தாவோ ஞானியிடம் ஒருவர் கேட்டார்.

"சிரித்துக் கும்மாளமடிப்பவரெல்லாம் எப்படி ஆன்மீகவாதியாக முடியும்?".

அதற்கு, "சிரித்து மகிழ்வது ஆன்மீகம் அல்ல என்று உனக்குச் சொன்னது யார்?" என ஞானி திரும்பக் கேட்டார்.

கேட்டவரால் பதில் சொல்ல முடியவில்லை.

ஜடாமுடி வளர்த்து, தாடி வளர்த்து பெரிய விழிகளை சோகமாக்கி, இறுகிய முகத்தோடு, மிக சீரியஸாக, வார்த்தைகளை அளந்து பேசுவது ஆன்மீகமல்ல. அவர் ஆன்மீகவாதியுமல்ல.

மலர்போல் மலர்ந்த முகத்தோடு.... எல்லோர்க்கும் இதமளிக்கும் வகையில் தானும் மகிழ்ந்து, மற்றவரும் மகிழும் வகையில் குழந்தைபோல் குதூகலமாக இருப்பவரே ஆன்மீகவாதி.

சிரிப்பு, உங்களை ஞானியாக்குகிறது.

எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ஒருவர் செய்யக் கூடிய தியானம் சிரிப்பு.

சிரியுங்கள், சிரிக்கவையுங்கள்.

சிரிக்க சிரிக்க. சிரிப்பாய் சிரித்துக் கிடக்கும் வாழ்வைச் சீர்படுத்தித் தூக்கி நிறுத்தும் ஞானசக்தி உங்களுக்குள் அதிகமாகும்.

உடல், மனம், உயிர் எல்லாம் சக்தியூட்டப்படும் ஆரோக்கியம் பெறுவீர்கள்.

மகா வாக்கியம்

“புன்னகையல்ல... முழுசிரிப்பே மனிதனைப் புதுப்பிக்கும்”

“முழு சிரிப்பு மனிதரை முழு மனிதராக்கும்”

* தெரியுமா...
இயற்கை, சிரிக்க
அனுமதித்திருக்கும்
ஒரே ஒரு மிருகம்
மனிதன்.

சிரிக்கும்போது
வயிறு அசையாத
மனிதரிடம், மிக
எச்சரிக்கையாக
இருங்கள்.

  • காண்டோன் பழமொழி

சிரிப்பு தசை
மனிதரில் மட்டும்
மாசில்லா முழுமை நிலை
பெற்றிருக்கிறது.

சிரிக்க நீ மறுக்க,
உதடுகள் மெல்ல விரிக்க
வருவது புன்னகை

அகங்காரம் வெடிக்க;
நரம்புகள் குதிக்க;
உடல் ஒரு கல்யாண வீடாக....
மாற்றம் பெரும்.

ஏற்றம் தருவது
குற்றம் இல்லா
கொண்டாட்டச் சிரிப்பு.

சிரிப்பு அது ஆனந்த தெளிப்பு!

நீங்கள் சிரிக்கச் சிரிக்க,
உங்களை மறக்க மறக்க
இறுக்கம் கரையும்,
அகங்காரம் மறையும்.

-மதன். குமிளி.

Logic எனப்படும் மனதின் தர்க்கப் பகுதி ஸ்தம்பிக்கும் போது ... ‘க்ளுக்!’ என ஒரு சக்திப் பெருக்கு நொடி நேரத்தில் நிகழ, நீங்கள் சிரிக்கிறீர்கள்.

“மனிதர்கள் இரண்டுகாலில் நடப்பவர்கள். நடக்கும்போது கீழே விழாமல் நடக்க வேண்டும்”, என்பது மனதில் பதிந்துவிட்ட திடமான ஒரு உண்மை.

இதுபோன்ற ஓர் உண்மையைச் சுற்றி உருவாகும் எண்ணங்களை, தர்க்கம் என்று சொல்லலாம்.

இந்தத் தர்க்கம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு வெளியே ஏதோ நிகழும்போது... மனம் கணநேரம் ஒதுங்கிக் கொள்கிறது. சிரிப்பு வருகிறது.

அதனால்தான் வாழைப்பழத்தோலில் கால்வைத்து ஒருவர் வழுக்கி விழுவதைப் பார்த்த உடனேயே, சிரிப்புத் தானாய் வந்துவிடுகிறது.

குடிபோதையில் தள்ளாடி, தட்டுத்தடுமாறி நடக்கும் ஒருவரைத் தூரத்தில் பார்க்கும்போது சிரிப்பு வருவதற்கும் இதுதான் காரணம்.

மனிதன் இப்படித்தான் நடப்பான், நடக்க வேண்டும் என்ற உங்களுடைய திடமான தர்க்கப் பதிவு, அப்போது உலுக்கப்படுகிறது. சிரிப்புத் தானாய் வருகிறது.

ஒரு ‘ஜோக்’ சிரிப்புத் தரக் காரணம், அதன் கடைசி ‘ப வெப்சீரி லைன்’ தான்.

‘பன்ச் லைன்’ வரும் வரை உங்களின் மனதின் தர்க்கப்பகுதி வேறொரு திசையில் இயங்கிக் கொண்டிருக்கும்.

எதிர்பாராத கோணத்திலிருந்து சொல்லப்படும் ‘பன்ச் லைன்’ மனதின் தர்க்கப் பகுதியையே சடன் பிரேக் அடிக்க வைக்கிறது. ஒரு கணம் மனம் மறைய கிடைத்த வாய்ப்பில், உள்ளிருக்கும் சக்தி பெருக்கின் வெளிப்பாடே சிரிப்பாய் வெடிக்கிறது. சிரிக்கிறீர்கள்.

இறுக்கம், அகங்காரம் அதிகமாக அதிகமாக, மனம் ஒரு கணம் மறைவது கடினமாகும். சிரிப்பதும் கடினமாகும்.

இரண்டு உலகிலும் அரசராகுங்கள்

“நீங்கள் வடிவமற்றவர் ”

நீருக்கும் வடிவமில்லை.

ஒரு முக்கோண வடிவக் கண்ணாடிக் குடுவையில் ஊற்றி வைக்கப்பட்ட நீர், முக்கோண வடிவம் பெருகிறது. தன் முக்கோண வடிவத்தை, அந்த நீரால் மாற்றிக்கொள்ளவே முடியாது. காரணம், குடுவையின் வடிவம் முக்கோணம்.

வடிவமற்ற நீருக்கு உருவம் தரும் குடுவையைப்போல், உங்களுக்கு உருவத்தைத் தந்தது மனம்.

பிறக்கும்போது எந்த மனதிற்குள் உயிர் நுழைந்ததோ, அந்த வடிவத்தை நீங்கள் பெற்றீர்கள்.

மூர்க்க மனதிற்குள் நுழைந்த உயிர், மூர்க்கன் வடிவம் பெறும். சோம்பேறி

இந்த வடிவத்தை

மாற்றலாம், சாதிக்கலாம்

என்ற இரகசியம் பலருக்கும்

தெரிவது கூட இல்லை.

மனதிற்குள் நுழைந்த உயிர், சோம்பேறி வடிவம் பெறும். புத்திசாலி மனதிற்குள் நுழைந்த உயிர், புத்திசாலி வடிவம் பெறும்.

இந்த வடிவம் பெரும்பாலும்
மாறுவதில்லை. இந்த வடிவத்தை மாற்றலாம்,
சாதிக்கலாம் என்ற இரகசியம் பலருக்கும்
தெரிவதுகூட இல்லை.

தெரிந்தவர்கள் சாதிக்கிறார்கள். தெரியாதவர்கள் சாகிறார்கள்.

'Personality development Program' மிற்கு வந்திருந்திருந்த இளைஞர் ஒருவர் கேட்டார்,

"நான் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன். MBA படித்து முடித்திருக்கிறேன். அப்பா பெரிய தொழிலதிபர்.

அறிவு பலம்,

பண பலம்,

ஆள் பலம்,

என்ற எல்லாமே என்னைச் சுற்றி இருக்கிறது.

ஆனாலும் தனிமையையும், வெறுமையையும் உணர்கின்றேன். மனிதர்களோடு என்னால் சகஜமாய் இருக்க முடிவதில்லை.

வெளியே சிரித்து,

உள்ளே அழுகிறேன்.

என் பிரச்சினைக்கு வழி

சொல்லுங்கள்".

"மலர் இருக்கும் இடத்தைத் தேனீ தேடிச் செல்லும். அசுத்தம் இருக்கும் இடத்தைக் கொசு மொய்க்கும் கவனித்திருக்கிறீர்களா?" என்று அவரிடம் கேட்டோம்.

"ம்ம், கவனித்திருக்கிறேன்"

"ஏன், இது மாறி நிகழ்வதில்லை?

portrait of a smiling man with long hair

"கடவுள் உங்களைக் கைவிடவில்லை. நீங்கள் கடவுளைக் கை விட்டுவிட்டீர்கள். அதுதான் வெறுமைக்குக் காரணம். அதுதான் உங்கள் பிரச்சினை" என்றேன். அசுத்தத்திடம் தேனீக்கள் நெருங்குவதில்லை. மலரைக் கொசு மொய்ப்பதில்லை. ஏன்?"

“அட... ஆமாம்.

இதை யோசித்ததேயில்லையே...!" என்று ஆச்சரியத்தோடு சொன்னார்.

"நீங்கள் மலர்வதுதான் உங்களின் பிரச்சினைக்குத் தீர்வு. அப்போதுதான் மனிதர்கள், உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்”.

“இதனால் என்னுடைய வெறுமை உணர்வு அதிகமாகிவிடாதா?" என்று குழப்பத்தோடு கேட்டார்.

அப்போது அவரிடம் சொன்னோம்... "கடவுள் உங்களைக் கைவிடவில்லை. நீங்கள் கடவுளைக் கை விட்டுவிட்டீர்கள்.

அதுதான் வெறுமைக்கு காரணம்... அதுதான் உங்கள் பிரச்சனை" என்றேன்.

அந்த தியான முகாமின் முடிவில், இன்னொரு இளைஞர் ஒருவர், “வாழ்க்கையை வாழ வேண்டிய எங்களுக்கு ஆன்மீகமெல்லாம் உடனடி தேவையா?.அதெல்லாம் ஐம்பது வயது தாண்டிய பின் பார்த்துக் கொண்டால் போதாதா?” எனக் குதர்க்கமாய்க் கேட்டார்.

“உங்களின் டூவீலரை ரிசர்வில் வைத்துக்கொண்டு வெகுதூரப் பயணம் செல்வீர்களா?"

"ம் ஹூம்... மாட்டேன்”

“இதற்கே மாட்டேன் என்றால்...

சக்தி, புத்தி பற்றாக்குறையை வைத்துக் கொண்டு வாழ்க்கை எனும் நெடுந்தூரப் பயணம் மட்டும் செல்லலாமா?"

“கூடாதுதான்"

நீங்கள் மலர்வதுதான்

உங்களின் பிரச்சினைக்குத்

தீர்வு.

“மனிதரின் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளோ, புத்தியை அதிகரிக்கும் மருந்துகளோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சக்தியையும், புத்தியையும் ஒரு சேர அதிகரிக்கும் ஆனந்த ஆன்மீகமானது வாழ்க்கையை வாழ்ந்து முடித்த வயோதிகரைவிட...

வாழ்க்கையை, அணு அணுவாய் அனுபவித்து வாழத்துடிக்கும் வாலிபருக்குத்தானே அவசியம் ” என கேட்டு நிறுத்தியபோது, இளைஞரின் கண்களில் தெளிவும், முகத்தில் புதிதாய் ஒரு இரகசியத்தைக் கற்றுக்கொண்டோம் என்ற பூரிப்பும் தெரிந்தது.

லோகோ

# தியானம்

வாழும்முன்தான் தியானமும் ஞானமும் அவசியம். வாழ்ந்த பின் அல்ல. உங்களின் சாதனை வெளியுலகில் இருந்தாலும், உள்ளுலகில் இருந்தாலும், அதற்குத் தேவையான எரிபொருள் பொதுவானதுதான்.

அது சக்தியும், புத்தியும் மட்டுமே.

அதை மட்டும் அதிகரியுங்கள்.

இரண்டு உலகிலும் அரசராவீர்கள்.

நம்பிக்கை எனும் தேவதை

* கல்யாணம்?

ஓர் அதிவேக ரங்க ராட்டினம்.

* எப்படி, அது அப்படியாகும்?

வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே வரும் ஆர்வத்தையும், உள்ளே இருப்பவர்களுக்கு வெளியே குதிக்க வைக்கும் பயத்தையும் தரவல்லது.

* ஏன் கல்யாணம் இப்படி மாறிப்போனது?

இரண்டு தாள்கள், இரண்டு தரகர்கள், இரண்டு பெரியவர்கள், இரண்டு மணமக்களைத் தேர்ந்தெடுத்து " வாழ்வாங்கு வாழுங்கள் " என்று சொன்னால், எப்படி அது முடியும்?

மனப்பக்குவத்தை
அதிகரிக்கும் தியான,
ஞான வழிமுறைகளை
வாரிசுகளுக்கு
வழங்குங்கள்...

ஒன்று மணமக்களுக்கு மனப்பொருத்தம் பார்க்க வேண்டும்.

இல்லாவிட்டால், அவர்களின்
மனப்பக்குவத்தையாவது அதிகரிக்க
வழிவகைகள் செய்ய வேண்டும்.

மனப்பக்குவத்தை அதிகரிக்கும் தியான, ஞான வழிமுறைகளை வாரிசுகளுக்கு வழங்குங்கள்... மணமக்களைத் துக்க மயக்கத்தில் ஆழ்த்தும் கல்யாணமெனும் ராட்சஷ ராட்டினம் ஓய்வடையும், நிம்மதி பெருகும்.

* ஞானிகள் அதிசயங்களை நிகழ்த்துவார்களா? எனக்குச் செல்வந்தனாக வேண்டும்.

ஞானிகள் அதிசயங்களை நிகழ்த்துவது இல்லை.

ஞானிகளின் சாந்நித்யத்தில் அதிசயங்கள் தானாகவே நிகழ்கின்றன.

* செல்வம்?

ஒரு வகையில் சாபம்.

* ஏன்?

சம்பாதிக்கும் வரையில் ஏக்கம், இது சக்தி விரயம். சம்பாதித்ததும் சேமித்து வைக்கப் பயம், இதுவும் சக்தி விரயமே.

* அப்போது சொகுசுகள்?

சோம்பேறிக்கு அவை தண்டனைகள். உற்சாகமானவருக்கு அவை கொண்டாட்டங்கள். ஆனால், சோம்பேறிகள்தான் அவற்றை அதிகம் நேசிக்கிறார்கள்.

மாயாவின் லீலையில் இதுவும் ஒன்று. இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் உயிர் என்ற அடிப்படையில், இங்கே வாழ்வதற்கு உங்களுக்கு எவ்வளவு உரிமையிருக்கிறதோ, அதே அளவிற்கு உரிமை, ஒரு HIV-கிருமிக்கும் உண்டு.

Portrait and quote

ஞானிகள் அதிசயங்களை நிகழ்த்துவது இல்லை. ஞானிகளின் சாந்நித்யத்தில் அதிசயங்கள் தானாகவே நிகழ்கின்றன.

எனவே, சோம்பேறி, உடல் வளையாமல் படுத்து, குளிர்சாதன அறையிலேயே வாழ்ந்து ஆரோக்கியத்தைக் கெடுத்தாலும், அதை இயற்கை மறுப்பதில்லை.

★ சொகுசு என்பது தண்டனையா? கொண்டாட்டமா?

இது நீங்கள் சோம்பேறியா, இல்லை உற்சாகமானவரா என்பதைப் பொறுத்தது.

★ ஞானிகள் தவறே செய்ய மாட்டார்களா? அவர்களின் செயல்கள் எதைக் குறிக்கிறது?

சரி, தவறு என்ற விதிகளெல்லாம் சாதாரண மனிதர்களுக்குத்தான்.

நான் எனும் அகங்காரத்திலிருந்து பிறக்கும் செயல்கள், நல்லதாகவே தோன்றினாலும், அதனால் சிறிதளவாவது தீமை உண்டாகும்.

எண்ணங்களற்றவர்கள் ஞானிகள்.

ஞானியின் செயலால் ஒருவர் இறக்க நேரிட்டாலும், அதனால் நன்மையே நிகழும்.

ஒரு ஜென் ஞானி இவ்வாறு சொல்லியிருக்கிறார், "ஒரு ஞானி கொலை செய்தாலும், அச்செயல் அந்த ஞானியின் ஆழ்ந்த கருணையின் வெளிப்பாடே"

எண்ணமற்ற நிலையில் இருந்து செய்யும் செயல்கள் அனைத்தும் நிச்சயமாக நன்மையைத்தான் தரும்.

தியானம்

தியானம்

ஒருமுறை அன்னை சாரதா தேவியிடம் "அம்மா என்னை நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டார்கள். நம்பிக்கைத் துரோகிகள்...". எனக் குடும்பஸ்தர் ஒருவர் புலம்பினார். அதற்கு சாரதா தேவி, "கவலையேபடாதீர்கள், உங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவரைப்பற்றி நோகாதீர்கள்.

நம்பிக்கையை மட்டும் உறுதியாய்ப் பற்றிக் கொள்ளுங்கள்.அந்த நம்பிக்கையே உங்களைத் தேவதைப்போல வாழவைக்கும்", என்று பதிலளித்தார்.

அதனால்தான் அடிக்கடி சொல்வதுண்டு, "நம்பிக்கைக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் நம்பிக்கையை இழக்கக்கூடாது".

காரணம், "நம்பிக்கை என்பது ஒரு தெய்வசக்தி. அது மனிதர்களின் உடல், மனம், உயிர் ஆகிய அனைத்திற்குள்ளும் உற்சாகத்தைப் பாய்ச்ச வல்லது". எனவே, துரோகிகளுக்காகக்கூட நம்பிக்கையை இழக்காதீர்கள்.

நம்பிக்கையோடு வாழ்வின் ஒவ்வொரு அடியையும் உற்சாகமாக எடுத்து வையுங்கள், தெய்வம் உங்களின் கைப்பிடித்து நடந்து வருவதைக் காண்பீர்கள்.

நம்பிக்கையிலிருக்கும் நிமிடங்களிலெல்லாம் தியானத்தை ருசித்துக் கொண்டிருப்பீர்கள். இது ஒரு தியான சக்தி.

குலதெய்வத்தை வழிபடாததால் பாதிப்பு ஏற்படுமா?

  • லோகேஷ்வரன், காஞ்சி

நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால், சக்தி ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படும்.

12-ம் வகுப்பு முடிக்கும்வரை, டிகிரி படிப்பு முடித்த ஆசிரியருக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்.

அடுத்த சில வருடங்களுக்குள் பட்டப்படிப்பை முடித்துவிட்டால் ஆசிரியருக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை. மரியாதை மட்டும் தந்தாலே போதுமானது.

உங்களை நீங்களே வழிபட ஆரம்பிக்காத வரை, குலதெய்வ வழிபாடுகள் மிக மிக முக்கியமானவை.

உங்களையே வழிபடச் செய்யும் தியான முறைகளைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிட்டால், குலதெய்வங்களுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்காது. அவர்களுக்கு மனதிலிருந்து முழு மரியாதையையும், பக்தியையும் வெளிப்படுத்துவதே போதுமானதாயிருக்கும்.

திருப்தி ஆனந்தத்திற்கான அழைப்பு

“பெருமாளே! நீ மட்டும் இவ்வளவு நகைகளைப் போட்டுக்கொண்டிருக்கிறாய். எனக்கு ஒரே ஒரு வைர மோதிரத்திற்கு வழிகாட்டு, என்று உன்னிடம் எத்தனை முறைவேண்டிக் கொண்டிருக்கிறேன்.

அதற்காக எத்தனை மொட்டை போட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீயோ கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறாயே?” என்றார் ஒருவர்.

மிகத் தீவிரமாக, மொட்டை போட்ட கையோடு, திருப்பதி ஏழுமலையானிடம் அவர் அவ்வாறு வேண்டிக் கொண்டிருந்தார்.

அருகிலிருந்தவர், “ஏனய்யா? மோதிரம் தரவில்லை என்று இத்துனை குறைப்பட்டுக் கொள்கிறாயே...

மோதிரம் போட்டுக்கொள்ள விரல் தந்திருக்கிறானே!... அதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் இல்லையா?”, என்று கேட்டார்.

மனித மனதின் இயல்பே ஒரு
பொருளின் மீது தீவிரமாக
ஆசைப்படுவதும்,
அதற்காக உங்களைத்
தொடர்ந்து போராட
வைப்பதும்தான்.

மனித மனதின் இயல்பே ஒரு பொருளின்
மீது தீவிரமாக ஆசைப்படுவதும், அதற்காக
உங்களைத் தொடர்ந்து போராட வைப்பதும், பின்
அது கிடைத்தவுடன் முழுமையாக அனுபவிக்க
விடாமல் அதற்கு அடுத்தது என்ன?
என்பதைப்பற்றி ஏங்க வைப்பதும் ஆகும்.

இதைப்பற்றி ரமணமகரிஷி மிக அழகாய்ச் சொல்கிறார்...

"ஒரு பொருள் கிடைப்பதற்கு முன், அது கடுகாகவே இருந்தாலும், மலையாகக் காட்டும். கிடைத்தபின், மலையாகவே இருந்தாலும், கடுகாய்க் காட்டும் மடமனம்", என்கிறார்.

எத்தனை உண்மையான கூற்று இது .

ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். ஒருநாள் வாங்கியும் விடுகிறீர்கள். வாங்கியவுடன் அதை முழுமையாக அனுபவிப்பதில் ஆர்வம் காட்டாமல், அடுத்தது எப்படி கார் வாங்கலாம் என்பதைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருப்பீர்கள்.

அதேபோன்று காரை வாங்கிவிட்டால், அதைவிடச் சிறந்த காரைப்பற்றிய கனவு காணத் தொடங்கிவிடுகிறீர்கள்.

இவ்வாறு அடுத்ததைப் பற்றிய கனவிலேயே மனம் இருப்பதால், ஒரு பொருளை அடைவதற்கு முன், அதன் மீது ஆசைப்படுவதில் காட்டுகின்ற ஆர்வம், அடைந்தபின் அதை அனுபவிப்பதில் காட்டுவதில்லை.

எனவேதான், மீண்டும் மீண்டும் 'திருப்தியின்மை' எனும் சூழலுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

உலகத்தையே வென்ற மாவீரன் நெப்போலியன், தான் இறக்கும் தருவாயில்

portrait

ஒரு பொருள் கிடைப்பதற்கு முன், அது கடுகாகவே இருந்தாலும், மலையாகக் காட்டும். கிடைத்தபின், மலையாகவே இருந்தாலும், கடுகாய்க் காட்டும் மடமனம். -ரமணமகரிஷி சொன்னாராம், "நான் இறந்தபின் என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வையுங்கள்" என்று.

ஏனெனில், மக்கள் எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும், "உலகையே வென்ற வீரன் நெப்போலியன், கடைசியாக வெறுங்கையோடுதான் சென்றான் என்பதை", என்று சொன்னாராம்.

உண்மையில், உலகம் இறைசக்திக்குச் சொந்தமானது.

நாம் அனைவரும் தற்காலிகமாக அதை அனுபவிப்பவர்கள் அல்லது பாதுகாப்பவர்கள்தான்.

இதை உணராமல், உலகத்தில் எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அல்லது உலகையே கொடுத்தாலும், உங்கள் மனதை உங்களால் திருப்திபடுத்த முடியாது என்பது நிதர்சனம்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்துகொண்டிருக்கும் பக்தர் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

"நான் இந்தியாவில் இருந்து கிளம்பும்போது, அமெரிக்கா சென்றவுடன் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும்? அதை எத்தனை வருடத்திற்குள் சாதிக்க வேண்டும்? என்ற ஒரு பெரிய லட்சியக் கணக்கு வைத்திருந்தேன். அதன்படி கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன்.

உழைத்ததின் பலனாக நான் சாதிக்க நினைத்த விஷயங்களான கார், வீடு, பங்களா, குடும்பம் என எல்லாமே எனக்குக் கிடைத்தது. அதுவும் 8 வருடங்களுக்குள்ளாகவே கிடைத்தது.

ஆழமாக யோசித்தபின்தான் தெரிந்தது,
நான் என்னவெல்லாம் சாதிக்க நினைத்தேனோ
அனைத்தையும் ஒன்று விடாமல் சாதித்து
முடித்துவிட்டேன்.

உண்மையில் உலகம்
இறைசக்திக்குச் சொந்தமானது.
நாம் அனைவரும் தற்காலிகமாக
அதை அனுபவிப்பவர்கள் அல்லது
பாதுகாப்பவர்கள்தான்.

ஆனால், எதற்காக இதைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேனோ, அது எனக்கு இன்றுவரை கிடைக்கவில்லை” என்று மிகவும் வருத்தத்துடன் சொன்னார்.

இவையெல்லாம் இருந்தால், சந்தோஷமாக வாழலாம்? என நினைத்திருந்த விஷயங்கள் எதுவும் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை.

இதைத்தான் ஆங்கிலத்தில் Depression of Success என்று சொல்கிறார்கள்.

பெரும்பாலான மேலை நாட்டினர் சந்திக்கிற பிரச்சினை, வெற்றிக்கு பின்னரும் தொடர்கின்ற 'மன அழுத்தம்' எனும் பிரச்சினைதான்.

இதிலிருந்து நாம் தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், வெளி உலகப் பொருட்களை அடைந்து அனுபவிப்பதற்காக இப்பிறவியை வீணடித்தோமானால், கடைசியில் வெறுமை மட்டும்தான் மிஞ்சும்.

அதனால், இன்று முதல் நமக்குக் கிடைத்திருக்கும் சிறுசிறு விஷயங்களிலும் அனுபவிக்கும்தன்மையை உயர்த்தி, திருப்தி அடைந்தோமானால், ஆனந்தம் நிரந்தரமாக மனதிற்குள் மெல்லமெல்ல அடி எடுத்து வைக்கும்.

இதை அனுபவமாக உணர்ந்து ஆனந்தமாக இருப்பீர்கள்.

Nithyananda

> இன்று முதல் நமக்குக் கிடைத்திருக்கும் > சிறு சிறு விஷயங்களிலும் அனுபவிக்கும் > தன்மையை உயர்த்தி, திருப்தி > அடைந்தோமானால், ஆனந்தம் நிரந்தரமாக > மனதிற்குள் மெல்லமெல்ல அடி எடுத்து > வைக்கும்.

# தியானம்

உலகத்தில் இருக்கும் அத்தனை விதமான உறவுகளும் உடன் இருந்தாலும்...

ஒரு நண்பன் உடனிருப்பதற்கு ஈடாகாது. உயிர் நண்பனின் அருகாமையே உங்களுக்கு நூறு யானை பலத்தை கொடுக்கும். 24 மணிநேரமும் 'Black Cat' பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதாக உணர்வீர்கள்.

நாம் என்னதான் பெற்றோருடன், குழந்தைகளுடன், மனைவியுடன் நெருக்கமாக இருந்தாலும். நண்பருடன்தான் நமது அந்தரங்கத்தை, நம் உண்மையான தோற்றத்தைப் பகிர்ந்து கொள்வோம்.

எந்தப் பிரச்சினை எந்த ரூபத்தில் வந்தாலும், முதலில் அதை நண்பருக்குத் தெரிவித்து, அவரிடமிருந்து தீர்வைக் கேட்கிறோம் இல்லையா?...

இங்குதான் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில், நண்பர்களுக்குள் பிரச்சினையே இங்குதான் துவங்குகிறது.

இதற்கான தீர்வுதான் இந்த தியான சூத்திரம்.

இந்த சூத்திரத்தை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பாருங்கள்.

“மற்றவருடைய வாழ்க்கையில் நாம் தலையிடக்கூடாது.

இந்தப் பிரச்சினைக்கு இது காரணம், இப்படிச் செய்தால் சரியாகும். இதை இப்படி யோசித்துப் பார் " என்னும் வகையில் அவருக்கு அவர் பிரச்சினையை தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.

பின் மெதுவாக அவரிடம்... “பிரச்சினை மிகவும் எளிது. இதற்கு உன்னால்தான் அருமையான தீர்வு கொடுக்க முடியும்” என்ற தீர்வையும் அவரிடமே விடுங்கள்.

அப்படி விடுவதால்...

அவரை அறியாமல் அவருக்குள் அதிகரிக்கும் சுதந்திரமே மன பாரமெல்லாம் குறைந்து விட்டது எனும் உணர்வை அவருக்குக் கொடுக்கும். உங்களின் அணுகுமுறையில் என்றென்றும் நண்பர்களாய் வாழும் பாக்கியம் பெறுவீர்கள்.

கடைப்பிடித்து முழுப்பலனையும் அனுபவியுங்கள்.

நான் தைரியமான பெண்தான். பாம்பைப் பார்த்துக்கூடப் பயப்படுவதில்லை. ஆனால், சின்ன கரப்பான் பூச்சியைப் பார்த்தால் உடம்பே நடுங்கிவிடுகிறது. அதை மட்டும் என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லையே ஏன்?.

  • கனகா, கோயம்புத்தூர்.

குழம்பாதீர்கள். இது சமஸ்காரங்கள் சம்பந்தப்பட்டது . ஏதோ ஒரு முன் ஜென்மத்தில் உங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் இப்படி வெளிவருகிறது.

உங்களின் நிதானத்தால் எட்டிப்பிடித்து, கட்டுப்படுத்த முடியாத ஆழத்தில் அது இருக்கிறது.

N.S.P போன்ற ஆழ்நிலை தியான முகாம்களில்தான், இந்த

பிரச்சனைகளுக்கான தீர்வை பற்றிப் பேச முடியும்.

ராஜவாழ்க்கை ஆரம்பமாகட்டும்

மொத்த உடலில் ஒரு சிறுபகுதியான முகத்துக்கே மிக முக்கியத்துவம் தருகிறார்கள் மனிதர்கள்.

உடல் மெலிந்திருந்தாலும் சரி, முகம் மட்டும் அழகாயிருந்தால் போதும், பலரின் விருப்பத்திற்குரியவராக எளிதில் ஆகிவிடலாம்.

ஏன்? ஏன் மனிதர்கள் முகத்துக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவமளிக்க வேண்டும்?

பதில் காண கட்டுரையை கவனமாய்ப் படியுங்கள்.

மனிதர்கள் மூன்று இடங்களிலிருந்து செயல்பட முடியும். அவைகள்:

  1. நாபி மையம் (தொப்புள் பகுதி)
  1. இதய மையம்
  1. மூளை மையம்

ஏன் மனிதர்கள்
முகத்துக்கு மட்டும்
இவ்வளவு
முக்கியத்துவமளிக்க
வேண்டும்?

நாபி, இதயம், மூளை ஆகிய மூன்று
இடங்களில் ஏதாவது ஒரு இடத்திலிருந்து
மனிதர்கள் செயல்படலாம். அங்கு அவர்
இருப்பை உணரலாம்.

நீங்கள் இந்த மூன்று மையங்களில் எந்த மையத்திலிருந்து செயல்படுகிறீர்கள் எனக் கண்டுபிடியுங்கள்.

கண்டுபிடிக்க ஒரு சிறிய பயிற்சி.

அப்படியே, இருக்குமிடத்திலேயே கண்களை மூடிக் கொள்ளுங்கள். முதுகெலும்பு, கழுத்து, தலை ஆகியன ஒரே நேர்க்கோட்டில் வரும்படி நேராய் அமர்ந்து கொள்ளுங்கள். உள்ளே உணருங்கள்.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

உங்களின் எண்ணங்கள், உணர்வுகள், உயிர் இருப்பிடம், உடலின் எந்தப் பகுதியில் இருப்பதாக உணர்கிறீர்கள்?

ஒன்றுக்கு இரண்டுமுறையாவது இத்தியானத்தைச் செய்து, உங்களின் மையத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நித்யானந்த ஸ்புரண தியான முகாமில் பக்தர் ஒருவர் இப்படிக் கேட்டார், "கண்களை மூடி, நான் உள்ளே பார்க்கையில், நான் தலைக்குள் மட்டுமே இருப்பதாக உணர்கிறேன்.

என் எண்ணங்கள், உணர்வுகள் அனைத்தும் தலையை மட்டுமே மையம் கொண்டிருக்கிறது. தலையிலிருந்து இதய மையத்துக்கு என்னால் கற்பனையில் பிரயாணிப்பதுகூடக் கடினமாக இருக்கிறது. ஏன் இப்படி?", என்று கேட்டார்.

"அதற்கு காரணம், உங்களின் உயிர்சக்தி மொத்தமும் மூளையால் உறிஞ்சப்பட்டிருக்கிறது.

Nithyananda

உங்களை இதயரீதியாக வாழும் மனிதராக
மாற்றவே தியானங்களைக் கற்றுத்
தருகிறேன். தொடர்ந்து செய்யுங்கள்.
ஆனந்தம் பொங்கும் உணர்வுமிகு வாழ்வு
உங்களுக்கும் வித்தாகும்.

சிறுவயதிலிருந்து மூளை ரீதியாக இந்தச் சமுதாயம் உங்களை வளர்த்துவிட்டது. எனவேதான், மற்ற இரு மையங்களில் உங்களின் உயிர்ச்சக்தி மையங்கொள்ளவில்லை.

நீங்கள் மூளைரீதியாக வாழும் மனிதர்.

உங்களை இதயரீதியாக வாழும் மனிதராக மாற்றவே தியானங்களைக் கற்றுத் தருகிறேன். தொடர்ந்து செய்யுங்கள். ஆனந்தம் பொங்கும் உணர்வுமிகு வாழ்வு உங்களுக்கும் வித்தாகும்” எனச் சொன்னேன்.

அவரின் கண்களில் ஒரு நம்பிக்கை ஒளி !

வீட்டில் வாழும் மனிதரை, இன்னொரு அழகான வீடு ஈர்க்கும். காட்டில் வாழும் மனிதரை, இன்னொரு அழகான காடு ஈர்க்கும். முகத்தில் வாழும் மனிதரை, இன்னொரு அழகான முகம் ஈர்க்கும்.

மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதில்லை. முகங்கள் முகங்களோடு பழகிக் கொள்கின்றன.

இந்தக் காலத்தில் தலையில் வாழாத மனிதர், தேடினாலும் கிடைப்பது அரிது.

ஒரு மதபோதகரின் மகள், தன் தந்தைக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள் ...

“கடவுளே, எங்கப்பாவுக்கு ஒரு ஜான் உள்ளே இறக்கும் ... எங்கப்பாவுக்கு ஒரு ஜான் உள்ளே இறக்கும் ...”

அச்சிறு பெண்ணின் தாய், மகளின்
வேண்டுதல் முடிந்து கண் திறந்த பிறகு,
அவளிடம் ஆச்சரியத்தோடு,“அதென்ன குட்டி,
ஒரு ஜான் உள்ளே இறக்கும்”, எனக் கேட்டார்.

மகள்கண்சிமிட்டிதாயிடம்சொன்னாள், “அப்பா நல்லா உபதேசம் செய்கிறார். ஊர்மக்கள் பலர் புகழ்கிறார்கள். அவரின் அறிவுரையால் பலர் திருந்தியிருக்கிறார்கள்.

உங்களின் எண்ணங்கள்,
உணர்வுகள், உயிர்
இருப்பிடம், உடலின் எந்தப்
பகுதியில் இருப்பதாக
உணர்கிறீர்கள்?

அவர் தலையில் இருக்கும் அவ்வளவு நல்ல விஷயங்களில் ஒன்றிரண்டு அவரோட நெஞ்சுக்கு இறங்கினால், அவர் திருந்திடுவாரே! அதனால்தான் ... அப்படி வேண்டினேன்”.

நம் ஊரில் டீக்கடைகளில் வெட்டிப் பேச்சுப் பேசி நேரம் கழிப்பவருக்குக்கூட ஆன்மீகம் நிறையவே தெரிந்திருக்கிறது. இந்தியரின் இரத்த ஓட்டத்திலேயே ஆன்மீகம் கலந்துதான் ஓடுகிறது.

வாழ்க்கைக்குத் தேவையான பல உண்மைகள் தலையில் ஏறிக் கொண்டுள்ளது. அதனால்தான், வெட்டி நியாயம் பேசினால்கூட, அது மிக சுவாரஸ்யமான விவாதம் போலவே தென்படும்.

அறிந்த உண்மைகள் அனுபவமாக மாறுவதே இல்லை. விளைவு, மனிதரால் எதையும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தெரிகிறது.

காதலிப்பவர்கள்கூட, மூளையில்தான் சிக்கிக் கொள்கிறார்கள். அதனால்தான் காதல் காலம் இனித்தது போல, கல்யாணக் காலம் இனிப்பாய் தொடர்வதில்லை.

ஒரு ரோஜாவைப் பார்த்தால் கூட, மனிதர்கள், அதை ரசிப்பதில்லை. அதனோடு உணர்வுரீதியாய் தொடர்பு கொள்வதில்லை. “அழகு ரோஜா”, “சிவப்பு ரோஜா”, “ஈரமான ரோஜா” என அதை வர்ணனை செய்யத் துவங்கிவிடுகிறார்கள்.

வர்ணித்தல், ரசித்தல் அல்ல. வர்ணித்தல் வார்த்தை ரீதியானது. மூளையை மையமாய் கொண்டு இயங்கும்போது வெளிப்படுவது. வெறுமைக்குள் மனிதனைத் தள்ளக்கூடாது.

portrait of a man with a headwrap and tilak

> ரசித்தல், உணர்வுரீதியானது. இதயமையம் > சம்பந்தப்பட்டது. மிக ஆழமானது. மனிதரை > ஆனந்தம் நோக்கி அழைத்துச் செல்லவல்லது. > உலகின் மன வேதனைகள் முடிவுக்கு வர ... மனிதன் > தலையிலிருந்து இதயம் நோக்கி நகர வேண்டும். ரசித்தல், உணர்வுரீதியானது. இதயமையம் சம்பந்தப்பட்டது. மிக ஆழமானது. மனிதரை ஆனந்தம் நோக்கி அழைத்துச் செல்லவல்லது. உலகின் மன வேதனைகள் முடிவுக்கு வர .... மனிதன் தலையிலிருந்து இதயம் நோக்கி நகர வேண்டும்.

தியானம்

தியானம்

ஜொராஸ்ட்ரிய ஞானியிடம் சீடர் கேட்டார்... "என் அன்பிற்கும் , உங்களின் அன்பிற்கும் என்ன வித்தியாசம்? ".

ஞானி, “என்னில் அன்பு நிகழ்கிறது. நீ அன்பு செய்கிறாய் என நினைக்கிறாய். என்னில் அன்பின் அதிர்வுகளை உணர்கிறேன்.

நீ அன்பு செய்வதாய் நினைப்பதால், மனதளவில் அதிர்கிறாய். அதை அன்பென வர்ணிக்கிறாய்.அன்பை ஒரே ஒரு முறை சுவைத்திருந்தாலும் ... உன்னை ஆனந்தமும், அமைதியும் ஆட்கொண்டிருக்கும்.

உன்னை அன்பு ஆட்கொள்ள... நீ உள்நோக்கி நிறைய பிரயாணிக்க வேண்டும்", எனச் சொன்னார்.

தலையிலிருந்து இயங்குபவர்கள், இதயத்திலிருந்து இயங்க ஆரம்பியுங்கள். இதயத்திலிருந்து சிந்திப்பதாய் உணருங்கள். கேட்பதுகூட, காது வழியாய் இதயத்தை சென்றடைவதாகவே பாவியுங்கள்.

உடலின் இயக்கங்களை, இதயத்திலிருந்தே செய்வதாகவும், இதயத்தால் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதாகவும் பாவனை செய்யுங்கள். இதயத்திற்கு உங்களை இழுத்துவரும் ஒரு நல்ல டெக்னிக் இது. நேரம் கிடைக்கும்போதெல்லாம்... ஞாபகம் வரும்போதெல்லாம், உங்களின் செயல்களிலெல்லாம் இந்த தியானத்தைத் தொடருங்கள்.

திடீரென ஒருநாள் தலையிலிருந்து இதயத்திற்குள் நழுவி விடுவீர்கள். குதூகலத்தோடு வாழ ஆரம்பிப்பீர்கள். ராஜ வாழ்க்கை ஆரம்பமாகும்.

மகா வாக்கியம்

“இதய மையம் திறக்க வாழ்வே அர்த்தம் நிறைந்ததாகிறது.”

மனிதர்கள்
தலைக்குள் சிக்கிக் கொண்டவர்கள்.
கலைஞர்கள்
இதயத்துக்குள் சிக்கிக் கொண்டவர்கள்.

புத்தன்,
மூன்று மையத்துக்குள்ளும்
சிக்கிக் கொள்ளாமல்,
புகுந்து வெளிவந்து
ஜிகுஜிகுவென பொங்கும்
ஆனந்த உணர்விலேயேயிருப்பவர்.

தலை தாண்டி,
இதயம் தாண்டி,
ஆனந்தம் தாண்டி,
பார்க்கையில்
வாழ்வு பரவசமாகிறது.

அப்புறம்
எதைச் செய்தாலும்
ஆனந்தமாயிருக்கும்.
எதையும் செய்யாவிட்டாலும்,
ஆனந்தமாயிருக்கும்.

அர்த்தமற்றது எல்லாம்,
அர்த்தமுள்ளதாக
இதய மையம்
திறக்கக் கடவது.

நானோர் ஆசிரியை. சிறுவர்கள் நம்மைவிட பலமடங்கு ஆனந்தமாய் இருக்கிறார்களே எப்படி?

-திலோத்தமா, கேரளா

சிறுவர்கள் இன்னும் எந்த மையத்துள்ளும் சிக்கிக் கொள்ளவில்லை. அவர்களின் உயிர்சக்தி உடல் முழுக்க ஓடி விளையாடுகிறது.

அவர்கள் நாபி மையத்திலிருந்து, அதாவது ஆனந்த மையத்திலிருந்து செயல்படுபவர்கள். அதனால்தான் அவ்வளவு ஆனந்தமாயிருக்கிறார்கள்.

குழந்தையைப் பாருங்கள், அவர்கள் சிறுவர்களைவிட இன்னும் மிக ஆனந்தமாயிருப்பார்கள். அவர்களுக்கு எதைப் பார்த்தாலும் மகிழ்ச்சிதான். கையில் எது கிடைத்தாலும் அந்த நிமிடம் அக்குழந்தைக்கு கொண்டாட்டம்தான். கெட்டிமேள சத்தமில்லாமலே ஆடுவார்கள், பாடுவார்கள், கொண்டாடுவார்கள்.

காரணம், குழந்தைகளும், சிறுவர்களும் வெளிப்பொருளால் உள்ளே இன்பமாகிறவர்கள் அல்ல. உள்ளுக்குள்ளே மிக இன்பமயமான உணர்விலேயே இருப்பதால், வெளியேயும் அவர்களால் இன்பமாக, ஆனந்தமாக இருக்க முடிகிறது.

மனிதர்களின் மூளை பெருத்ததும்... உயிர் சக்தியானது, உணர்வுரீதியாக செயல்படுவது தடுக்கப்பட்டு விடுகிறது. உணர்வு குறைய, உற்சாகம் குறைகிறது. மூளைரீதியான அணுகுமுறைகளை வர்ணிப்பதிலும், உள்ளே கோபப்பட்டு பேசுவதிலும், உள் அரட்டையிலும் மனித சக்தியும் நேரமும் விரயமாகிவிடுகிறது.

ஆனந்தமாயிருக்கத்தேவையானஎல்லாஅடிப்படைகளும் துடைக்கப்பட்ட பிறகு, ஆனந்தம் எங்ஙனம் சாத்தியமாகும்?

சிறுவயது தாண்டும்போது, நீங்கள் இழந்தவைகளை மீண்டும் திரும்பப் பெறவாவது நீங்கள் உழைக்க வேண்டும்.

சிந்தனைத் துளிகள் : காலால் தலையைத் தொட முடியும் ... தோல் வழியாய் ! தலையால் காலல்ல, கையைக்கூட தொட முடியாது ...

உணர்வு வழியாய் !
இதயரீதியாக வாழ ஆரம்பிக்க,
முதல்முறையாக வாழ ஆரம்பிக்கிறீர்கள்.

தேனை சுவைக்கிறீர்கள் ...
சுவைக்கிறீர்கள் எனத் தெரிகிறது.
சுவைக்கச் சுவைக்க ,
இன்னும் கொஞ்சம் சாப்பிடத் தோன்றுகிறது
எனில், நீங்கள் வாழ்வது தலையில்.

நாவிலும், வாயிலும் சுவையை உணர்வதைத் தாண்டி, சுவைக்கச் சுவைக்க அதில் கரைந்து போகிறீர்கள். அது சில துளிகளானாலும் திருப்தியைத் தருகிறது எனில், நீங்கள் வாழ்வது இதயத்தில்.

தேனின் இனிமையையும், தித்திப்பையும் உணர என்ன சுக மாற்றங்கள் நிகழ்கிறதோ ... அது உடலெங்கும் நிகழக் காண்கிறீர்கள். ஒரு சொட்டு உங்களைப் பரவசமாக்குகிறது எனில், நீங்கள் வாழ்வது ஆனந்த மையத்தில்.

இதயம் உங்களின் இலக்கு.
ஆனந்தம் உங்களின் இருப்பு
இதயம் தாண்ட, ஆனந்தத்தில் நிற்பீர்கள் !

Portrait of Nithyananda

மனதைத் திற...

portrait of a smiling spiritual figure wearing a turban

நீங்கள் வளர்ந்த குழந்தைகள்

“எப்படியோ ! இனி என் பிரச்சனைக்கு முடிவு பிறந்தது”, என்று குதூகலத்துடன் வீட்டின் கேட்டைத் திறந்து நுழைந்தார்.

கதவைத் திறக்கக்கூட இல்லை. “அடக் கடவுளே! இது என்ன சோதனை” என்று அழாத குறையாக வீட்டையே உற்றுப் பார்த்தார்.

“மியாவ்” என்று அந்த அழகான பூனை கவலையில்லாமல் குரல் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து விட்டது.

“மனைவியைத்தான் விட முடியாது. அவள் வளர்க்கும் பூனையையாவது விட்டு வரலாமென்று தான் நான்கு தெரு தாண்டி விட்டு வந்தேன். பார்த்தால், நமக்கு முன்பே வீட்டில் வந்து நிற்கிறதே, என்ன செய்வது?. என்ன ஆனாலும் எப்படியும் இதை விடக்கூடாது?” என்று முடிவெடுத்தார்.

அதிகாலையிலேயே எழுந்து பூனையுடன் கிளம்பினார். 20 கி.மீ தாண்டிச் சென்று பூனையை விட்டார். வழியில் டீ குடித்துவிட்டு வருவதற்குள், பூனை வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டது.

மன அழுத்தத்தின் உச்சத்திற்குச் சென்ற அவர், இனி பூனையை தொலைத்தால், அதனால் திரும்பி வர முடியாத இடத்தைப் பற்றி யோசிக்கத் துவங்கினார்.

சட்டென்று மிகச் சரியான
தீர்வு ஒன்று கிடைத்தது.
அடுத்தது ஒரு நொடி கூடத்
தாமதிக்காமல், அருகில்
இருக்கும் காட்டிற்கு உடனே தன்
காரில் பூனையுடன் சென்றார்.

சட்டென்று மிகச் சரியான தீர்வு ஒன்று கிடைத்தது. அடுத்தது ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், அருகில் இருக்கும் காட்டிற்கு உடனே தன் காரில் பூனையுடன் சென்றார்.

வலது பக்கம், இடது பக்கம் எனத் தொடர்ந்து குறுக்கு நெடுக்குமாக பயணித்து நட்டநடுக்காட்டைச் சென்றடைந்தார். மெதுவாக காரை நிறுத்தி, “அப்பாடா!” என்று பெருமூச்சு விட்டார்.

“இனி எப்படி வீட்டிற்கு வருவாய் என பார்க்கிறேன்”, என்று பூனையைப் பார்த்து ஓர் ஏளனச் சிரிப்புச் சிரித்துவிட்டு, பூனையை நடுக்காட்டில் திறந்து விட்டார். விட்டதுதான் தாமதம், உடனே வேக வேகமாக வீட்டிற்குக் கிளம்பினார்.

அப்போதுதான் அவருக்கு சட்டென்று ஒரு உண்மை புரிந்தது. உடனே வீட்டிற்கு போன் செய்து, “டார்லிங் நம்ம டாம் (பூனையின் பெயர்) வந்துவிட்டதா?” என்று கேட்டார். மனைவி, “ஏன்?. இங்குதான், என் மடியில் தான் உட்கார்ந்திருக்கிறது. என்ன விஷயம்?” என்று கேட்டார்.

மறுமுனையில், அவர்பூனையால் தான் தோற்றுவிட்டதை வெளிப்படுத்திக் கொள்ளாமல், “அதில்லை டார்லிங்... நான் நடுக்காட்டிற்குள் இருந்து பேசறேன். வீட்டிற்குத் திரும்பி வரும் வழியை மறந்து விட்டேன். கொஞ்சம் டாமிடம் கேட்டுச் சொல்லேன்” என்று கெஞ்சினார்.

ஆழ்ந்து, இந்த உண்மையை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

மனிதர்கள் இயற்கையாகவே, தங்கள் சுபாவத்தினாலேயே ஆனந்தமயமானவர்கள். ஆனால் தங்களுக்குள் தாங்களே ஏற்படுத்திக்கொண்ட ‘Aggresiveness’ எனும் குணத்தால், தங்கள் சுபாவத்தை வெளிப்படுத்தாமல், அதை உணராமல் இருக்கிறார்கள். கடினமாகவும், சோர்வாகவும் காணப்படுகின்றார்கள்.

ஆழ்ந்து, இந்த உண்மையை
உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
மனிதர்கள் இயற்கையாகவே,
தங்கள் சுபாவத்தினாலேயே
ஆனந்தமயமானவர்கள்.

இயற்கையுடன் தங்களுக்கு இருந்த
தொடர்பு முறிந்துபோனது பற்றிக்கூடத்
தெரியாமல், அதைப்பற்றிய தெளிவில்லாமல்
இருக்கிறார்கள்.

நீங்கள் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் நடப்பதே நடனமாக இருக்கும்.

நடக்கும் போதுதான் என்றில்லாமல் நின்று கொண்டிருக்கும்போதே 'பொத் பொத்' என்று விழுவார்கள்.

தெரிந்து கொள்ளுங்கள், தன்னால் கீழே விழும் எந்த குழந்தைக்கும் அடிபடுவதில்லை. பாதிப்புகள் வருவதில்லை.

தான் கீழே விழுந்து விட்டோம், தரையில் உடம்பு மோதிவிட்டது. அதனால் வலி வரும். வலி வந்தால் அழ வேண்டும் என்ற கட்டுறு மனப்பாங்கினால் Conditioning பாதிப்படையாதவர்கள் குழந்தைகள். அதனால்தான் அவர்கள் 'பொத்' என்று கீழே விழுந்தாலும் அடுத்த க்ஷணம் சிரித்துக் கொண்டே எழுந்து நடக்கிறார்கள்.

குழந்தைகளைவிடப் பல மடங்கு பலம் வாய்ந்த மனிதர் கீழே விழுந்தால் என்னாகிறது? அதுவும் நின்று கொண்டிருக்கும்போது கீழே விழுந்தாலும், தன் கனத்தையே தாங்கமுடியாமல் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுகின்றது.

ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் இந்த உண்மையைப் புரிந்துகொள்வீர்கள்.

உருவத்தினாலோ அல்லது எடையினாலோ அல்லது வயதினாலோ இவ்வாறு பாதிப்புகள் வருவதில்லை. குழந்தைகளைவிட எடையில் மனிதர்கள் கனமானவர்கள். குழந்தை விழுந்தால் அவர்களை ஏற்றுக் கொள்ளும் இயற்கை, வளர்ந்த மனிதர்கள் விழுந்தால் ஏற்றுக் கொள்வதில்லையே ஏன்?

காரணம், குழந்தைகளிடம் கட்டுறு மனப்பாங்கு Conditioning இல்லை. அதனால், இயற்கையைப் பாதிக்கும் சக்தி அவர்களிடமிருந்து வெளிப்படுவதில்லை. ஒரு மலர் போன்று கீழே விழுகிறார்கள். அவர்களின் உடலின் இயக்கம் இயற்கையுடன் எப்போதும் தொடர்பு வைத்திருக்கிறது.

portrait

மனிதர்கள் தங்களுக்குள் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட 'Aggresiveness' எனும் குணத்தால், தங்கள் சுபாவத்தை வெளிப்படுத்தாமல், அதை உணராமல் இருக்கிறார்கள். கடினமாகவும், சோர்வாகவும் காணப்படுகின்றார்கள்.

ஆனால், மனிதர்கள் விழும் போது கடுமையான கல் போன்று விழுகிறார்கள். கனமாகவும், ஸ்திரமான உருவமாகவும் இருப்பதனால் புவியீர்ப்பு (Gravity Force) சக்தியால் கீழ்நோக்கி இழுக்கப்படுகிறார்கள்.

இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சத்தியம் இது...

சுபாவத்தினாலேயே மனிதர்கள் கனமானவர்கள் அல்ல.

குழந்தைகள் கனமாக இருப்பதில்லையே.

குழந்தை மனிதராக வளர வளரத்தான் தங்கள் சுபாவத்தை இழக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் வரும் எண்ணங்களால், எண்ணங்களின் தொகுப்பால்தான் மனிதர்கள் கனமாக இருக்கிறார்கள்.

மிகவும் பிடித்தவருடன் இருக்கும் கணங்களில் பார்த்தீர்கள் என்றால் மனம் லேசாகிறது.

மனம் லேசாகும் போது நீங்கள் லேசாகிறீர்கள்.

உங்களைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் எண்ணங்களின் பிடிப்பு உங்களை விட்டு விலகிவிடுகின்றது.

பிடித்தவருடன் இருக்கும்பொழுது, நீங்கள் அந்த இடத்தில், அந்த நேரத்தில் அப்பொழுது முழுமையாக இருக்கிறீர்கள். தியானம் உங்களுக்குள் நிகழ்கிறது. நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தியானம் செய்வதில்லை. தியானம் உங்களுக்குள் தன்னால் நிகழ்கிறது.

“இந்த தியானம் எனக்குச் சாத்தியமில்லை. புத்தன் காலத்தில், இயேசு காலத்தில் அந்தச் சூழ்நிலைக்கு வேண்டுமானால் ஆனந்தம் சாத்தியமாக இருக்கும். இப்போது இதற்கு சாத்தியமில்லை?” என்று சொல்கிறீர்களா...

Nithyananda

சுபாவத்தினாலேயே மனிதர்கள் கனமானவர்கள் அல்ல. மீண்டும் மீண்டும் வரும் எண்ணங்களால், எண்ணங்களின் தொகுப்பால்தான் அவர்கள் கனமாக இருக்கிறார்கள்.

தியானம்

meditation icon

தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் இந்த தியானம் சாத்தியம். எந்நேரமும் புத்துணர்வுடன், ஆனந்தமாக, ஆரோக்கியமாக உங்களால் வாழ முடியும்.

எண்ணங்களால், பாதிக்கப்படாத வாழ்க்கை அனைவருக்கும் சாத்தியமே. "வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வேன்" எனும் உத்வேகம் (Inspiration) மலர்ந்தால் போதும்.

"Spirit to live ! Spirit to enjoy"

என்பதை உங்களின் உணர்வாக மாற்றுங்கள். அந்த உத்வேகம் (Inspiration) உங்களை இயற்கையுடன் ஒருங்கிணைக்கும்.

உத்வேகம் உங்களை உயர்த்தும், ஆனந்தம் உணர்வாக மாறும். என்றென்றும் நித்யானந்தமாகி விடுவீர்கள்.

ஆழ்மனக் காயங்கள்

குணப்படுத்தப்பட வேண்டும்

ஒரு முன்னணி நாளிதழ் ஒன்றில் இந்த ஆய்வறிக்கையை படித்தேன். அது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக இருந்தது.

அதாவது “50 சதவீதத்திற்கும் மேலான வாலிப பருவத்தினர், உணர்ச்சி கொந்தளிப்புக்கு (Emotional adjustment problem) ஆளாகி இருக்கிறார்கள்” என்பதே அது.

பேச்சின் உள்ளார்த்தங்களும், எரிச்சலான முகபாவங்களும் உங்கள் இரத்தத்தையே கொதிக்கச் செய்கிறது.

நரம்பு மண்டலத்தை உலுக்கி, உடலை நடுங்கச் செய்கிறது என்பன உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகுபவர்கள், நம் உறவுகள் தவறாய் பேசிய ஒரு சொல்லுக்காக துடிதுடித்துப் போகும் மனிதர்கள், “ஏனோ! எப்போதும் யோசிப்பதே இல்லை... இப்படித்தானே நாம் விளையாட்டென்று பலசமயம் பேசியவை பலரைக் குத்தியிருக்கும்”, என்று கவுன்சிலிங்கில் பொதுவாக சொல்வதுண்டு.

நம்மைக் கொந்தளிக்க
செய்பவர்களுக்கு, எப்படி
நாம் பாதிக்கப்படுகிறோம்
என்ற உண்மை
தெரிவதில்லையோ,
இப்படித்தானே நம்மையும்
அறியாமல் நாம் பலரை
பாதித்திருக்கலாம்.

துவைத்துப் போடப்படுகிறார்கள்
மனிதர்கள், உறவுகளின் சொற்களில் இருக்கும்
ஒவ்வொரு உள்ளத்தாலும்.

சொல்லின் அதிர்வுகள், மனம் வழியாய் உடலையே அதிரச் செய்யும் ஏவுகணைகள்!

நம்மைக் கொந்தளிக்க செய்பவர்களுக்கு, எப்படி நாம் பாதிக்கப்படுகிறோம் என்ற உண்மை தெரிவதில்லையோ, இப்படித்தானே நம்மையும் அறியாமல் நாம் பலரை பாதித்திருக்கலாம்.

முகுந்தனின் மனைவி மரணப் படுக்கையில் இருந்தார்கள். 24 மணி நேரம் என்று மருத்துவர்கள் கெடு குறித்துவிட்டதால், நொந்து கொண்டிருந்த முகுந்தனுக்கு, அவரின் நண்பர் ஆறுதல் வார்த்தைகள் கூறினார்...

"முகுந்தா! கவலைப்படாதே, இது தாளமுடியாத கஷ்டம்தான், கொஞ்சம் மனதைத் திடப்படுத்திக் கொள். இதைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவத்தை இறைவன் உனக்குத் தருவான்", என்றார்.

நண்பனின் ஆறுதலுக்கு, கொஞ்சமும் தாமதிக்காமல் பதிலளித்தார் முகுந்தன்.

அவர் சொன்னார், "என்னப்பா! இதுக்குப்போய் இறைவனையெல்லாம் கூப்பிடாதே. 42 வருஷம் இவளை பொறுத்துக்கிட்டிருக்கேன். இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்துக்க மாட்டேனா?" என்றார்.

ஒருவேளை முகுந்தன் பேசியது, அவர் மனைவியின் காதில் விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும்?

ஒருவருக்கு விளையாட்டாக இருக்கும் ஒரு விஷயம், மற்றவருக்கு வினையாகிறது. இதயத்தைத் தைக்கிறது.

காரணம், பலதரப்பட்ட மனங்கள்.

யாரும் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.

அவை சொல்லப்பட்ட இடம்; சொல்லப்பட்ட விதம்; சொல்லப்பட்ட

Nithyananda smiling

யாரும் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. அவை சொல்லப்பட்ட இடம்; சொல்லப்பட்ட விதம்; சொல்லப்பட்ட நேரம் என்று, சாயம் பூசிய கலர் கண்ணாடிகளைப் போட்டு, வார்த்தைகளின் வீரியத்தை மனத்தில் மதிப்பிடுகிறார்கள். நேரம் என்று சாயம் பூசிய கலர் கண்ணாடிகளை போட்டு, வார்த்தைகளின் வீரியத்தை மனத்தில் மதிப்பிடுகிறார்கள்.

அதன் விளைவே, வினையாய் முடியும் விளையாட்டுக்களும், சண்டையில் முடியும் சாதாரணக் கிண்டல்களும்.

அந்த ஆய்வறிக்கை தெளிவாகச் சொல்கிறது...

"நம்முடைய சமுதாயத்தில், வளரும் சமுதாயம் (பாதிக்கும் மேற்பட்ட சமுதாயம்) ஆழ்மனதில் காயப்பட்டு ஊனமாகியிருக்கிறது."

பாதிக்கும் மேற்பட்டோருக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது.

இந்தப் பிரச்சினை நம் குழந்தைக்கு இருக்காது எனப் போலியாக நம்புவதைவிட, அப்படியேதும் இருந்துவிட்டால் என்ன செய்வது? என்று யோசித்து, அவர்களை இப்பொழுதே காப்பாற்றுங்கள்.

அதைவிட, "எனக்கே அது ஏன் இருக்கக் கூடாது?", என ஆராயுங்கள்.

இது கோரிக்கையோ, அறிவுரையோ அல்ல. காலத்தின் தேவை.

நீங்களும் காப்பாற்றப்பட்டாக வேண்டும். எதிர்கால சமுதாயமும் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு மன அழுத்தத்திற்கு மூலகாரணமான மனக்காயங்கள் குணப்படுத்தப் பட வேண்டும்.

நம் மனக்காயங்களில் பெரும்பாலானவை மற்றவரின் விளையாட்டால் விளைந்ததே...

நீங்களும் யோசிக்கலாம்... விளையாட்டு எப்படி வினையாகும் என்று?

நீங்களும் காப்பாற்றப்பட்டாக
வேண்டும். எதிர்கால
சமுதாயமும் காப்பாற்றப்பட
வேண்டும். அதற்கு மன
அழுத்தத்திற்கு மூலகாரணமான
மனக்காயங்கள் குணப்படுத்தப்
பட வேண்டும்.

விளையாட்டைக் கூட விளையாட்டாய் பார்க்கத் தெரியாதது யார் தவறு? அது வினையாக ஏன் மாறுகிறது.

அடுத்து வரும் கருத்தை ஆழமாய் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

காரணம்...

விளையாட்டையே வினையாய் பார்த்துத் துடித்திடும் காரணியான காயம், ஏற்கனவே பலரின் மனதிலிருக்கிறது.

அந்தக் காயம்தான், விளையாட்டான வார்த்தைகளைகூட, அது சொல்லப்பட்ட விதம், காலம், இடம் ஆகியவற்றால் வெந்த புண்ணில் ஆட்டப்பட்ட மயிலிறகாய் மாற்றிவிடுகிறது.

தவறு புண்ணிலா?

மயிலிறகிலா?

எது எப்படியோ, சரி செய்யப்பட வேண்டியது புண்தானே தவிர, மயிலிறகல்ல.

புண் சரியானால், அதே மயிலிறகின் ஆட்டல், சுகமான வருடலாகும்.

அது நெருடலல்ல என்பது புரியும்.

இப்பொழுது சொல்லுங்கள்... சரி செய்யப்பட வேண்டியது ஏவுகணை போல் தோன்றும் உறவின் வார்த்தைகளா? அல்லது உங்களின் ஆழ்மனப் புண்ணா?

லோகோ

# தியானம்

மனோதத்துவ மாத இதழில் வெளிவந்த இந்த ஆராய்ச்சியில், உணர்ச்சிக் கொந்தளிப்பு உருவாகக் காரணமான மன அழுத்தம் (stress) செய்யும் பாதிப்புகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

எலி ஒன்றுக்கு, தொடர்ந்து பல மன அழுத்தங்களை செயற்கையாக அந்த ஆராய்ச்சிக்கூடத்தில் உருவாக்கினர். ஆராய்ச்சியில், எலியின் உடைக்கப்பட்ட தொடை எலும்பில், திடீர் திடீரென வலி தூண்டப்பட்டு பளிச்சிடும். அதிக சக்தி உள்ள வெளிச்சம், இடத்தையே அதிரச் செய்யும் வலிமையான சப்தங்கள், தனிமைப்படுத்தல் என பல மன அழுத்தம் உருவாக்கும் காரணிகளை அந்த ஆராய்ச்சியில் எலியின் மேல் பிரயோகித்தார்கள்.

சில நாட்களின் முடிவில் இறந்துபோன எலியின் உடற்கூறில் நடந்திருந்த மாற்றங்கள், கற்பனைக்கு அப்பாற்பட்டது.

சில நாள் ஆராய்ச்சிக்கு முன் இளமையாக, ஆரோக்கியமாக இருந்த எலியின் உடற்கூறுகள், பிரேத பரிசோதனையில் அது ஆரோக்கியம் கெட்ட கிழ எலியின் உடற்கூறு அடையாளங்களைப் பெற்றிருந்தது.

எலியின் இரத்தக்குழாய், திசு, தசைநார்க்குள்ளேயே முதுமைக்கான மாற்றங்களைப் பெற்றுவிட்டது.

மன அழுத்தம், மூப்பை இவ்வளவு முந்தச் செய்யுமா என ஆராய்ச்சி செய்த மருத்துவர்களே வாயடைத்துப் போனார்கள்.

மன அழுத்தத்தால் வரும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள்தான், நம் ஆரோக்கிய குறைபாடுகளுக்கும், சோர்வுகளுக்கும், முந்திக்கொள்ளும் மூப்புக்கும் காரணம்.

ஏகப்பட்ட காயங்கள் ஒவ்வொருவர் மனதிலும்.
யாருடைய பேச்சு...எங்கு குத்துகிறது?
ஏன் வலிக்கிறது? என ஆராயுங்கள்.

காயங்கள் புலப்படும்.

காயங்களுக்கு வெளியாளோ, மற்றவர் வார்த்தைகளோ காரணமல்ல என புரியும்.

இதுவே பாதி வேதனையைப் பறக்கச் செய்திடும்.

அதே ஆராய்ச்சியை ஆழப்படுத்திட, தவிடு பொடியாகிடும் மீதமுள்ள வேதனைகளெல்லாம். உணர்ச்சிகளும் பக்குவப்படும்.

மன அழுத்தமும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் ஒருவருக்குள் உருவாகக் காரணமான மனக்காயங்கள் குணமாக ஆரம்பிக்கும், அற்புதம் நிகழும். அற்புதம் நிகழ, தொடர்ந்து உணர்ச்சி பக்குவத் தியானம் செய்யுங்கள்.

மகா வாக்கியம் :

சொல்லின் அதிர்வுகள் ‘சுகமான ராகங்கள்’

உறவுகளின்
உள்ளர்த்தம் மிகு வார்த்தைகள்கூட,
‘வேடிக்கை வாக்கியமே!’
அது சிரிக்கக் கிடைத்த
இன்னொரு வாய்ப்பு
எனும் புதுப்பார்வை கிடைக்கும்.
மனக் காயங்கள் மறையும்போது,
காயம் மறைய, நேசம் மலர
இனி நீங்கள் துடித்துடித்துப் போகும்
நிமிடங்களையெல்லாம் ஆராயுங்கள்.
ஆராய்ச்சியின் பக்க விளைவு
உங்களின் சொற்களே.
சுகமான ராகங்களாகும்!

நான் நல்லவன் என்பதை ஏன் யாருமே புரிந்துகொள்ள மாட்டேங்கறாங்க? என்ன செய்வது? எல்லாம் கலி முத்திப்போச்சு... மட மனிதர்கள் மாறுவார்களா?

  • ஜேம்ஸ், திருச்சி.

இது கலிகாலங்கய்யா. நீங்கள் நல்லவராக வாழ்வது மட்டுமே போதாது. நீங்கள் நல்லவர் என்பதை மற்றவர்களும் புரிந்துகொள்ளும்படி, நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும்.

நீங்கள் நல்லவர் என்ற உண்மை உங்களுக்குத் தெரிந்திருப்பதே மாபெரும் முன்னேற்றம்தான்.

"நான் நல்லவன்" எனச் சொல்வதும்,
நல்லவர் போல் நடிப்பதும் - உங்களை
கெட்டவராக்கிக் காண்பிக்கும்.

நல்லவன் நான் என
சொல்லாதீர்! காண்பிக்காதீர்!
நல்லவராகவே மாறிவிடுங்கள்.

அதை உங்கள் சொல், செயல், முகபாவங்களில் முழுமையாய் வெளிப்படுத்துங்கள். மற்றவரைக் குறை சொல்வதால் உங்கள் குறை நீங்காது.

மற்றவர் யாராயிருந்தாலும் அவரை மகான் போல் மதிக்கும் சத்ய யுகம் அல்ல இது. இது கலியுகம்.

நல்லவராயிருப்பதோடு,
புரியும் வகையில்
நல்லவராய் வாழ்ந்து காட்டவேண்டும்

  • இது கலியுக நெறி

கடவுள் தானென்று
மறந்துபோனதால்,
வாழ்ந்து கொண்டிருக்கிறீர்
மனிதராய்.

உச்சத்தை உணருங்கள்! உணர்த்துவியுங்கள்!

"உலகையே நேசிக்கிறேன்"- இது எளிது.
ஏனெனில்
இது வெற்று வார்த்தை.

நிஜத்தில்,
பக்கத்து வீட்டுக்காரர்
பெயர்கூடத் தெரியாது!

மனித உறவுகள்
மலிந்து போயின.

உண்மையில்
மனித உறவுகள்
மகத்தானவை - அவை
உணர்வுகளின் முகங்காட்டும்
கண்ணாடிகள்.
ஆனந்த வானின்
ஜன்னல்கள்!

உறவுகளிடம்
உச்சத்தை
உணருங்கள்
உணர்த்துவியுங்கள்
இரண்டுமே தியானம்தான்!.

மனிதன் நிறம் மாற வழி

"சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே!"

சிரிக்கும் ஆணை நம்பலாமா?...

"புகையிலை விரிச்சா போச்சு பொம்பள சிரிச்சா போச்சு"

ஆண்கள் சிரித்தால்!?...

"எழுத்தாணியும், ஓலையும் கிடைத்தது என்பதற்காக, எதையாவது எழுதிவைத்தால், அதை நாம் பழமொழி என ஏற்றுப் போற்ற வேண்டுமா...?"

காரணமேயில்லாமல் பெண்களை வெறுக்கத் துடிப்பது, ஒரு வகையான மனப்புண். இப்படிப் பட்டவர்களைத்தான் இதுபோன்ற வரிகள் காந்தம்போல் ஈர்க்கும். மனப்புண்களினால்தான் வெறுப்பு திட உருவம் பெறும்.

"எழுத்தாணியும், ஓலையும்
கிடைத்தது என்பதற்காக,
எதையாவது
எழுதிவைத்தால், அதை நாம்
பழமொழி என ஏற்றுப் போற்ற
வேண்டுமா...?"

"புத்தகங்களால் களங்கப்படாத ஒரு
மனிதரைக் கொடுங்கள்; ஒரு நூறு புத்தர்களை
அவர் ஒருவர் மூலமாக உருவாக்கித்
தருகிறேன்," என்ற வாசகத்தை அழகாய்
சொல்லும் சமீபகாலத்து சூஃபி ஞானியைச்
சந்தித்த நிருபர் கேட்டார்.

"உங்களின் குருகுல மாணவர்கள் மிக புத்திசாலித்தனத்தோடும், மகிழ்ச்சியோடும் இருப்பதைக் காண்கிறேன். இதன் இரகசியம் என்ன?

என்ன வகையான பாடத்திட்டத்தை இவர்களுக்கு வகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ளலாமா?"

ஞானி -

"மாணவர்களுடைய புத்திசாலிதனத்தின் முதல் இரகசியம் : அவர்கள் இங்கு மாணவர்களாக நடத்தப்படுவதில்லை. அவர்கள் இளவரசர்கள் போல் சுதந்திரமாக இருக்கிறார்கள்.

இரண்டாவது இரகசியம் : அவர்கள் படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு" என்றார்.

உலக அறிவு என்ற பெயரில் மனித மூளைக்குள் கருத்துக்கள் திணிக்கப்படுவதைத்தான் Information exploitation என்றழைப்பார்கள். தவறான வார்த்தைகளும், வரிகளும் மனதின் கனத்தை அதிகமாக்குகின்றன.

"ஜாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை" என்று சொல்லுவார்கள். "ஜாண் பிள்ளையானாலும் பெண் பிள்ளை" எனச் சொல்லியிருந்தால், மறைமுகமாக ஆண்கள் தாழ்த்தப்பட்டிருப்பார்கள். காரணம், வார்த்தைகள் வலிமையானவை.

ஏதோ ஒரு சில வார்த்தைகளை மட்டும் மனம் விரும்பிப் பிடித்துக் கொள்கிறது என்றால், அந்த வார்த்தையால் மனம் சுகமாய் உணர்கிறது என்று அர்த்தம்!

தோலை வருடினாலும் சுகம்.

Portrait

ஏதோ ஒரு சில வார்த்தைகளை மட்டும் மனம் விரும்பிப் பிடித்துக் கொள்கிறது என்றால், அந்த வார்த்தையால் மனம் சுகமாய் உணர்கிறது என்று அர்த்தம்!

புண்ணை வருடினாலும் சுகம்.

ஆனால் இரண்டு சுகமும் நேர்மாறானவை. இரண்டாவது சுகம் வேதனையில் முடியக்கூடியது.

கெட்ட வார்த்தைகள், மற்றவரை மட்டம் தட்டும் வரிகள், மனிதர்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கும் செய்திகள் மற்றும் பேச்சுக்களில், சிலவற்றை மட்டும் ஒருவர் விரும்பி உபயோகிக்கும்போது, ஒருவகையான திருப்தி நிச்சயம் அவருக்குள் ஏற்படும்.

எச்சரிக்கை! நீங்கள் விரும்பிக்கொடுப்பது மனப்புண்ணை! இது ஆரோக்கியமற்றது. உங்களின் மனம் விரும்பிச் சேகரிக்கும் வார்த்தைகளைப் பற்றி மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

அந்த சூஃபி ஞானி சொன்னது போல், புத்தகங்களின் எண்ணிக்கைகள் குறையும்போது மனிதனின் புத்திசாலித்தனம் அதிகமாவது உண்மைதான்.

விரிவாகச் சொன்னால்...

தேவையற்ற புத்தகங்கள் தரும் தாறுமாறான கருத்துக்கள் மனதிற்குள் நுழைவது தடுக்கப்பட்டால், புத்திசாலித்தனம் குறைவதும், மங்குவதும் தடுக்கப்படும். புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும்.

எனக்குப் பிடித்த ஒரு தாவோ வாசகம் “நீ விரும்பிப் படிக்கும் புத்தகத்தைச் சொல். நீ யார் என்று நான் சொல்கிறேன்”.

கல்லூரி மாணவன் வேதம் படித்தால் அதிசயம். குடும்பஸ்தர், காமிக்ஸ் படித்தால் அதிசயம். குழந்தை அரசியல் புத்தகம் படித்தால் அதிசயம்.

“எனக்குப் பிடித்த ஒரு
தாவோ வாசகம்...
நீ விரும்பிப் படிக்கும்
புத்தகத்தைச் சொல். நீ யார்
என்று நான் சொல்கிறேன்”.

உங்களின் மன அமைப்பை இதப்படுத்தும்
புத்தகங்களைத்தான் நீங்கள் விரும்பிப்
படிப்பீர்கள். அப்படிப்பட்ட
வார்த்தைகளைத்தான் திரும்பத் திரும்பப்
பயன்படுத்துவீர்கள்.

நீங்கள் விரும்பும் வார்த்தைகள் ஆரோக்கியமான வார்த்தைகள்தானா?... என்பதைக் கண்டுபிடிக்க, உங்களின் எண்ணம், பேச்சு, படிப்பு ஆகியவற்றின் மீது விரிவான ஆய்வொன்று உங்களால் நிகழ்த்தப்பட வேண்டும்.

ஒரு பண்டிதரும், பாமரரும் ஜொராஸ்ட்ரிய குருவிடம் சீடர்களானார்கள். பாமரரிடம், "நீ இன்னும் களங்கப்படவில்லை. இங்கு சொல்லித்தரப்படும் தியானங்களை முழுமையாய்ச் செய். இயல்பாய் இரு. சீக்கிரத்திலேயே ஞானமடைந்து விடுவாய்" எனச் சொல்லி ஆசீர்வதித்தார் குரு.

அடுத்து வந்த பண்டிதர், "நான் ஞானமடைய என்ன செய்ய வேண்டும்?" எனக் கேட்டதற்கு, "குறைந்தது ஒரு ஜென்மம் முழுக்க தவம் செய்தால்... நீ ஞானமடைவதற்கு வாய்ப்புகள் அதிகம்" என்றார் குரு.

குருவின் பதிலால் உலுக்கப்பட்டவர், "சாஸ்திரம் படித்தவனுக்கு ஒரு ஜென்மம் முழுக்கத் தவம் செய்தாலும் ஞானம் கிடைப்பது சந்தேகம்... ஆனால், படிக்காதவனுக்கு உடனடி ஞானம் உறுதி என்றால் என்ன அர்த்தம்?" எனக் கேட்டார்.

குரு சொன்னார், "உன்னுள் நுழைந்துவிட்ட தவறான செய்திகளும், உன்னால் தவறாய் புரிந்துகொள்ளப்பட்ட சரியான சத்தியங்களும், உன் மனதிலிருந்து தோண்டியெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஒரு ஜென்மம் மிகக் குறைவு.

மனம் சுத்தமாகிவிட்டால்... அடுத்த நொடியிலேயே ஆனந்த விருக்ஷத்தை அங்கு நட்டு விடலாம். பாமரன் மனம் இன்னும் மாசுபடுத்தப்படாத புல்வெளி. அதிலிருக்கும் சில முட்களையும், சொற்களையும் அப்புறப்படுத்த அதிக நேரம் பிடிக்காது," என்றார்.

Sadhguru portrait

நிறையப் படிப்பது தவறல்ல.
ஆனால், தவறான வார்த்தைகளை
மனதில் பிடிப்பதுதான் பெரும் தவறு.
சுயபாதகம்.

நிறையப் படிப்பது தவறல்ல. ஆனால், தவறான வார்த்தைகளை மனதில் பிடிப்பதுதான் பெரும் தவறு. சுயபாதகம்.

காரணம், வார்த்தைகளின் தொகுப்புதான் மனம்.

துன்பம்தரும் வார்ததைகள் மனதில் அதிகமானால், நீங்கள் துன்பம் தரும் மனிதராக உருவெடுத்து விடுவீர்கள்.

நீங்களும் துன்பப்படுவீர்கள்.

வார்த்தைகள் வாழ்வின் வேர்!

வார்த்தைகள் சரிசெய்யப்பட்டால், நீங்கள் சரியானவராவீர்கள்.

தியானம்

தியானம்

சிறுவன் நிட்டியிடம் அவரது தந்தை கேட்டார், "டாம் உன்னை விட வயதில் சிறியவன். ஆனால், உன்னைவிட அதிக மதிப்பெண்களையே அவன் எப்போதும் பெறுகிறான். இது எப்படி? காரணம் என்ன?".

அதற்குக் கொஞ்சமும் தாமதிக்காமல் சிறுவன் நிட்டி சொன்னான், “காரணம் அவனுடைய தந்தை ஒரு புத்திசாலி!”

தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்ற பழமொழி மனதுக்கும், வார்த்தைகளுக்கும் மிகவும் பொருந்தும்.

நீங்கள் விரும்பிப் படிக்கும் வார்த்தைகளும், பேசும் வார்த்தைகளும் உங்கள் மனதைப் பொருத்தது. மனதைப்பொருத்தே வார்த்தைகள் வெளிவரும்.

உங்களின் உள்ளே நுழையும் வார்த்தைகளையும் மற்றும் உங்களிடமிருந்து வெளி வரும் வார்த்தைகளையும் எச்சரிக்கையோடு ஆய்வு செய்யுங்கள். வார்த்தைகளின் தரம் பாருங்கள். மனதின் நிறம் தெரியும்.

மனதின் நிறம் மாற, மனம் தூய்மையடைய உங்களோடு சம்பந்தப்படும் வார்த்தைகளைத் தூய்மைப்படுத்துங்கள். நீங்கள் தூய்மையானவராவீர்கள்.

தனக்கும், மற்றவர்களுக்கும் சந்தோஷம் அளிக்கும் வகையில் செயல்படுபவர்கள், பேசுபவர்கள் தூய்மையான மனிதர்கள்.

மகாவாக்கியம்

மனம் இறைவனளித்த ஆச்சரியம்

நவீன பொருத்தம்...

தலை - கம்ப்யூட்டர்
மூளை - ஹார்டுவேர்
மனம் - சாஃப்ட்வேர்
அகங்காரம் - வைரஸ்

இரண்டுமே மனிதரால்
இயக்கப்படுபவை.
மனிதன் நினைத்தால்
மாற்றப்படக் கூடியவை.

கம்ப்யூட்டரைக் காக்க...
வைரஸை அழிக்கும்
வைரஸ் ஸ்கேனர்!

உங்களைக் காக்க...
அகங்காரத்தை அழிக்கும்
தியான முறைகள்!

கம்ப்யூட்டரை
சூப்பர் கம்ப்யூட்டராக்க
பலவகை சாஃப்ட்வேர்கள்.

உங்களை
உற்சாக மனிதராக்க
இறைவனளித்த சாஃப்ட்வேர்
எனும் மனம்
மீண்டும் ஒருமுறை
வடிவமைக்கப்பட்டால் போதும்.

வடிவமைக்க உதவும்
Divine software engineer தான்
ஞானகுரு.
ஞானக் கருத்துக்கள்.

நான் ஏன் ஆண்களைக், கண்டாலே வெறுக்கிறேன்?

-ஜெஸிந்தா, உதகமண்டலம்

ஜெஸிந்தா, ஒரு தியானப் பயிற்சியாளரிடம் வாழ்வியல் ஆலோசனை பெறுவது உங்களுக்கு மிகுந்த பயனளித்தரும்.

கவலைப்படாதீர்கள். உங்களுடைய பிரச்சினை பலருக்கும் இருக்கக் கூடியப் பிரச்சினைதான். "நான் இதை வெறுக்கிறேன்" எனச் சொல்லும் ஒரு மனிதரைத் தேடிக்கண்டு பிடிப்பது அரிதாகிவிட்டது.

"நான் ஏன் அதை வெறுக்கிறேன் என்றால்..." என நொண்டிச்சாக்குச் சொல்லி, நியாயம்போல் சமூகம் ஏற்றுக்கொள்ளும் காரணங்களைச் சொல்லும் மனிதர்கள், உங்களைப் போல வருத்தப்படுவதில்லை. அவர்களின் செயல் முழுக்க முழுக்க நியாணமானதாகவே அவர்களுக்குத் தெரிகிறது.

உங்களுடைய பிரச்சினையில், உங்கள் வெறுப்பிற்கான காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வெறுப்பு, காரணமில்லாமல் வருகிறது என்ற உண்மையை உணர்ந்திருப்பதே வளர்ச்சிதான்.

இன்னும் ஓர் உண்மை. “எல்லா வெறுப்புகளுக்கும் காரணம் என்ன?.”

அவற்றுக்குக் காரணமியான ஒரு தாறுமாறான எண்ணம் எல்லோரின் ஆழ்மனதில் புதைந்திருப்பதுதான். எப்படி இந்தத் தவறான எண்ணங்கள் நுழைந்தது? என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். அதனால்தான் வெறுப்புகளைக் “காரணமேயில்லாத வெறுப்புகள்” என்று சொல்கிறோம்.

வெறுப்புக்கு இதுதான் காரணம் என மனிதன் சுட்டிக்காட்டுவது எல்லாமே, மனம் செய்யும் திடீர் ஜோடனைகள் மட்டுமே!

ஏதோ ஒரு காலத்தில், மனதைத் துளைத்து மனப்புண்ணை உண்டாக்கிய அந்தத் தவறான வார்த்தை அல்லது எண்ணம் அல்லது சம்பவம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

அது களையெடுக்கப்பட வேண்டும்.உங்களின் ஆழ்மனதிலிருக்கும் ஆண்கள் சம்பந்தப்பட்ட அந்தத் தாறுமாறான எண்ணப்பதிவு அழிக்கப்பட்டால், வெறுப்பு மறையும்... நீங்கள் இயல்பானவராக மாறுவீர்கள்!

உடலிலேயே தவழலாம்

ஒரு மருத்துவக் கல்லூரியில் பயின்ற வடநாட்டு மாணவருக்குத் தமிழ் தெரியாது.

அடுத்த மாதம் இறுதித் தேர்வு.

ஒரு குறிப்பிட்ட பிரிவில் தங்கியிருக்கும் புறநோயாளிகளின் விவரங்களை ஒரு தனிக் குறிப்பேட்டில், நோயாளியிடமிருந்தே, அவரின் பெயர், ஊர், குடும்பம் பற்றி விசாரித்து எழுத வேண்டும்.

தமிழ் தெரியாததால், நோயாளிகளிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை மட்டும், அதற்கான சரியான கேள்வி வாக்கியத்தை கேட்டு மனப்பாடம் செய்து கொண்டார்.

குறிப்பேட்டில் எழுத வேண்டிய
பதிலுக்குத் தகுந்தவாறு கேள்விகளைக் கேட்க
ஆரம்பித்தார்... அன்று வந்திருந்த 18 வயது
திருமணமாகாத பெண்ணிடம் !

1. உங்கள் பெயர் ? ராஜாத்தி.

2. உங்கள் ஊர் ? திருவொற்றியூர்.

நாம் நம்முடைய
தர்க்கரீதியான
அனுமானங்களைப்
பொறுத்து தொடர்ந்து
முடிவுகளை
எடுக்கிறோம்.

3. திருமணமாகிவிட்டதா ? இல்லை.

4. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?

“................!?"

மாணவர் கேட்ட கேள்விகளுக்கு அதுவரை சிரித்து பதில் சொன்ன பெண், விருட்டென்று எழுந்து சென்றுவிட்டார்.

“ஏன், அந்த பெண் இப்படி கோபித்துக் கொள்கிறார்! நான் வரிசைப்படி சரியான உச்சரிப்பில்தானே கேள்விகள் கேட்டேன்!?” என சக மாணவரிடம் அப்பாவியாக கேட்டார் அவர்.

சக மாணவர், “உனக்குத் தமிழ் தெரியாததால், “திருமணமாகவில்லை” என அப்பெண் சொன்ன பின்னரும்கூட, குழந்தைகள் எத்தனை? என்ற கேள்வியைக் கேட்டுவிட்டாய். அதுதான் குழப்பம்” என்றார்.

இந்தப் பிரச்சினைக்குத் தர்க்க ரீதியாக (logical) தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்தார்...

“ஆங்... சரியான ஐடியா, நாலாவது கேள்வியை மூன்றாவது கேள்வியாக மாற்றிவிட்டால், பிரச்சினையே வராது” என முடிவு செய்து, கேள்வியின் வரிசையை மாற்றிவிட்டார்.

அடுத்த நோயாளியிடம் வந்தார். இந்த நோயாளி ஒரு முப்பத்தைந்து வயதான திருமணமான பெண்மணி. ‘யாராயிருந்தால் எனக்கென்ன, நான்தான் கேள்வியையே மாற்றிவிட்டேனே...’ என்ற எண்ணச் செருக்கில் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

Swami photograph

உங்கள் உலகம் மனத்திரையில் வரையப்படுகிறது.

1. உங்கள் பெயர்? மீனாட்சி சுகுமார்.

2. உங்கள் ஊர்? அச்சரப்பாக்கம்.

3. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? நாலு பசங்க சார்!.

4. திருமணமாகிவிட்டதா? "................!?"

அவ்வளவுதான்.... அப்புறம் என்னென்ன நிகழ்ந்திருக்கும் என்பதுதான் உங்களுக்கே தெரியுமே.

கண்டபடி திட்டு வாங்கி, முகத்தைத் தொங்கப்போட்டிருந்த மாணவர், 'நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு, இந்தம்மா இவ்வளவு சத்தம் போட்டுட்டு போறாங்க?' என்று தானே யோசித்திருப்பார்.

இதைப்போல நீங்கள் யோசித்த நிமிடங்களில் எல்லாம் இதைப் போன்ற தவறைத்தான் நிகழ விட்டிருப்பீர்கள். இவரைப் போன்றே, தர்க்க ரீதியாக... ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்க மனிதர்கள் முயற்சி செய்யும் போதெல்லாம், இதேபோல்தான் முட்டிக்கொள்கிறார்கள்.

பெங்களூர் ஆஸ்ரமத்தில் சிவசூத்திர விளக்கவுரை பேசிக் கொண்டிருக்கையில்.... ஆனந்தபுரிவாசி ஒருவர், ‘தர்க்கரீதியான அணுகுமுறை ஆனந்தத்திற்கு எதிரானது' என நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தர்க்கமில்லாமல் எப்படி யோசிக்க முடியும், முடிவெடுக்க முடியும்?" எனக் கேட்டார்.

| தர்க்கரீதியான அணுகுமுறை ஆனந்தத்திற்கு எதிரானது. | அதற்கு பதிலளிக்கும் பொழுது சொன்னோம், "உங்களின் தர்க்கம் என்பதே வெறும் அனுமானம்தான். "வீட்டின் முன் கதவு திறந்திருக்கிறது" என்ற செய்தியைக் கேட்டதுமே, வீட்டின் பின் கதவு பூட்டித்தான் இருக்கும் என்ற அனுமானத்திற்கு வருகிறோம். |

இந்த அனுமானம்தான் தவறானது எனச் சொல்கிறேன். பின் கதவு திறந்து இருக்கவும் அதே அளவிற்கு வாய்ப்புள்ளது. அதை அனுமானிக்க முடியாது.

வீட்டின் கதவு பற்றி அனுமானிக்கும்போது பாதகம் எதுவும் நிகழ்வதில்லை.

இதே, எதிரே இருக்கும் இருவரில் ஒருவரைக் காட்டி, “இவர் நல்லவர்” எனச் சொன்னால், நம்மையும் அறியாமல், அந்த இன்னொருவர் கெட்டவர் என்ற முடிவுக்கு நம் மனம் வந்துவிடும்.

ஒருவேளை அவர் மிக நல்லவராகவோ, அல்லது மகானாகவோ இருக்கலாம்.

ஆனால், நாம் நம்முடைய தர்க்கரீதியான அனுமானங்களைப் பொறுத்து தொடர்ந்து முடிவுகளை எடுக்கிறோம்.

இம்முடிவுகள்தான் “இதுதான் உலகம்” என்ற வரையறையைத் தருகின்றன.

உங்கள் உலகம் மனத்திரையில் வரையப்படுகிறது.

தவறான அனுமானங்களையே அதிகமாகத் தூண்டும் மனம் இருக்கும்வரை, உலகம் அது உள்ளபடியே தெரியாது. அதுதான் தர்க்கம்.

அதைத்தான் தவறு எனச் சொன்னேன்.

நான்கு வார்த்தை நன்றாய் பேசிவிட்டால் நல்லவர்.

Nithyananda

நான்கு வார்த்தை நன்றாய் பேசிவிட்டால்
நல்லவர். நான்கு வேண்டாம், ஒரு வார்த்தை
'நறுக்கென்று!’ பேசிவிட்டால் - கெட்டவர்.
இரண்டு முடிவுமே பொய்.

நான்கு வேண்டாம், ஒரு வார்த்தை 'நறுக்கென்று!' பேசிவிட்டால் - கெட்டவர்.

இரண்டு முடிவுமே பொய்.

இரண்டுமே தர்க்கரீதியானது. தவறானது.

அழகு முகத்தைப் பார்த்தால் - அவர் அருமையானவர்.

அழகற்ற முகத்தை பார்த்தால் - அவர் அருவருப்பானவர்.

இந்த அருமையும். அருவருப்பும்தான் அனுமானங்கள்.

இந்த அனுமானங்கள் ஆனந்தத்தின் அடைப்பான்கள்.

இவற்றையெல்லாம் விடுங்கள். உங்களைப்பற்றி நீங்கள் அறிந்ததாய் நினைப்பதெல்லாம் இந்த அனுமானங்களின் தொகுப்புதானே!.

தர்க்கம் என்பது ஒரு மனத்தடை. அது இல்லாமல் செயல்பட ஆரம்பிக்கும்போதுதான், நிஜ உலகின் கதவுகள் திறந்து கொள்ள ஆரம்பிக்கிறது.

லோகோ

தியானம்

"தர்க்கமில்லாமல் செயல்படுவது எப்படி? சுருக்கமாய் விளக்குங்க" என ஆனந்த வாழ்வு கல்வி பயிலும் மாணவர் கேட்டபோது,

'இவர் இப்படிப்பட்டவர்

இது இப்படித்தான்' - என்ற

இந்த இரண்டு முடிவை மட்டும் எடுக்காதே.

உள்ளதை உள்ளபடியே அணுகுங்கள். அணுகியபின் நிஜ நிலவரம் பற்றித் தெரிந்துகொள்வீர்கள்” எனச் சொன்னேன்.

இதைச் சிரத்தையோடு கடைப்பிடித்த மாணவர், தர்க்கத்தின் பிடியில் இருந்து விடுபட்டார்.

“தர்க்கத்தை தாண்டியதும், உடலில் தவழ்வதை போல் உணர்கிறேன்.

என்னவொரு சுதந்திரம் இது!

நன்றி!. நன்றி!” எனப்பொங்கும் மகிழ்ச்சியோடு சொன்னார்.

மேலுள்ள தியானத்தை நீங்கள் கூட முயற்சிக்கலாமே. செய்து பாருங்கள்.

Portrait of Nithyananda wearing a turban