புதுக்கோணம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கோடீஸ்வரர் ஒருவருக்கு எதிர்பாராத விதமாய், ஜென் ஞானியை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது, சுகபோகியாய் வாழும் கோடீஸ்வரர், ஜென் ஞானியிடம் கேட்டார், "மது, மாது, மாட மாளிகை என சுகத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும் ஆனந்தம் எனக்குத் தேவையா? அதற்காகக் கஷ்டப்பட்டு தியானம் செய்ய வேண்டுமா? தேவையேயில்லையே!" என அலட்சியமாய்க் கேட்டார்.
உறுதியான குரலில் கோடீஸ்வரரிடம், "நான் சொல்லும் ஆனந்தம் உனக்குத்தான் நிச்சயம் தேவை" என்றார் ஜென் ஞானி.
"ஏன்!" என ஆச்சரியமாய், கேட்ட கோடீஸ்வரரிடம்,
"நீ ஒரு பிச்சைக்காரன்" என்றார் ஜென் ஞானி.
பதிலின் அதிர்ச்சியிலிருந்து மீள
முடியாமல், "என்ன? நான் பிச்சைக்காரனா!?"
எனக் கேட்டார் கோடீஸ்வரர். ஜென்
ஞானி, "ஆம்!. சுகத்தை நீ அனுபவிக்க
மதுவிடமும், மாதுவிடமும் பிச்சையெடுக்க
வேண்டியிருக்கும்.
இவையில்லாமல் உன்னால்
ஆனந்தமாயிருக்க முடியுமா? சொல்லப்பா..."
என ஜென் ஞானி கேட்டதற்கு, முடியாது எனத்
தலையசைத்தார் கோடீஸ்வரர்.
நான் சொல்லும் ஆனந்தம்
உங்களுக்கு
நிச்சயம் தேவை.
ஜென் ஞானி, "சுகத்திற்காக வெளியே பிச்சை எடுக்கும் உனக்கே இவ்வளவு திமிர் இருந்தால், எதுவுமேயில்லாமல் சுகத்திலேயே ஊறிக்கொண்டிருக்கும் ஞானிக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்?" என்று கேட்டார்.
அந்தக் கோடீஸ்வரரைப்போன்று திமிராய் இல்லாததால்தான், ஞானிகள் தெய்வத்திற்கு இணையாய் மதிக்கப்படுகிறார்கள்.
துளி சுகத்தை பார்த்ததும், "தியானமெல்லாம் தேவையா?" எனக் கேட்கும் அளவுக்கு மந்தமாகவும், திமிராகவும் இருப்பதால்தான் சுக போகிகள் அற்பர்கள் எனக் குறிப்பிடப்படுகிறார்கள். புரிந்ததா?" எனக் கேட்டார் ஞானி.
கேள்வியின் முடிவில் கோடீஸ்வரர் மலர்ந்தார்.
பிச்சைக்காரராய் வாழும் கோடீஸ்வரர், நிஜக் கோடீஸ்வரராய் மாற முடிவெடுத்தார்.
வேலூர் தியான சத்சங்கத்தில் பேசும் போது சுகம் பற்றிப் பேசுகையில்,
"மனிதன் தன் சுகத்தை உடலின் ஐந்து புள்ளிகளில் மட்டுமே அனுபவிக்கிறான்.
‘சுவையால்' வரும் சுகத்தை 'நாக்கிலும்,' 'வாசனையால்' வரும் சுகத்தை 'மூக்கிலும்,' ‘இசையால்’ வரும் சுகத்தைக் ‘காதிலும் ,' ‘காட்சிகளால்' வரும் சுகத்தைக் 'கண்களிலும்,' 'ஸ்பரிசத்தால்' வரும் சுகத்தை 'இந்திரியங்களிலும்' மனிதன் அனுபவித்து மகிழ்கின்றான்.

துளி சுகத்தை பார்த்ததும், "தியானமெல்லாம் தேவையா?" எனக் கேட்கும் அளவுக்கு மந்தமாகவும், திமிராகவும் இருப்பதால்தான் சுக போகிகள் அற்பர்கள் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.
இந்த ஐந்துமே மனிதனின் உடல் எனும் மிகப்பெரிய பரப்பளவில் உள்ள ஐந்து சிறு புள்ளிகள் மட்டுமே.
இதில் உடலளவு சுகம்கூட முழுமையாய் கிடைக்காது. இதை முழுமையாய் அனுபவிக்க வேண்டுமென்றால், 'தியானம் அவசியம்' எனக் குறிப்பிட்டேன்.
இதுபற்றிச் சொல்லும்போது பக்தர் ஒருவர் கேட்டார், “சுகபோகம் என்ற வார்த்தையையே பல ஆன்மீகவாதிகள் கண்டனம் செய்கின்றார்கள். ஆனால், ஒரு தியான சொற்பொழிவில் சுகத்தை முழுமையாய் அனுபவிக்கக்கூட தியானம்தான் அவசியம் எனச் சொல்லியிருக்கிறீர்கள். குழப்பமாய் இருக்கிறது.... விளக்கம் அளியுங்கள்."
"உதாரணத்திற்குச் சுவையால் வரும் சுகத்தை எடுத்துக் கொள்வோம்.
இனிப்பும், காரமும் நாவை உரசுவதால் ஏற்படும் சுவை உணர்வைத்தான் அனுபவிக்கின்றோம். இது மிகவும் மேம்போக்கானது.
தியானத்தில் ஆழ்ந்து சென்றால், இந்த ரகசியத்தைக் கண்டுபிடிப்பீர்கள்... அது, ‘உங்களின் நாவானது எந்தப் பொருளுமே இல்லாமல் இனித்துக்கொண்டேயிருக்கும் தன்மை பெற்றது' என்பதே.
நாவின் இந்த உயர்ந்த நுண்ணுணர்வு எழுப்பப்படாத வரையில், வெளிப்பொருள் மட்டுமே நாவின் சுவைக்கும் சக்தியை பொங்கச் செய்ய முடியும்.
தியான விழிப்புணர்வால் நாவின் நுண்ணுணர்வை எழுப்ப முடியும். அப்படி எழுப்பிய ஒரு ஞானியின் நாவில் 24 மணி நேரமும் சுவைக்கும் சக்தி பொங்கிக்கொண்டே இருக்கும்.
இவருக்கு நீர்கூட இனிமையாய் இருக்கும், திருப்தியைத் தரும். ஆனால், சாதாரண மனிதருக்குப் பல இனிப்புகள்கூடத் திருப்தியைத் தராது. இனிப்பைச் சாப்பிட்டு முடிக்க முடிக்க நாவிலிருந்து சுவைக்கும் சக்தி மறைந்துவிடும். அங்கு ஏமாற்றமே தொக்கி நிற்கும்.
தியான
விழிப்புணர்வால்
நாவின்
நுண்ணுணர்வை
எழுப்ப முடியும்.
நீங்கள் இனிப்பையும், மசாலாவையும் விரும்பிச் சாப்பிடுவதுகூட அந்த உணவின் சுவைக்காக அல்ல. அந்த உணவு நாவில் உரசும்போது, நாவில் பாயும் சிறிதளவு சுவைக்கும் சக்தியை அனுபவிக்கத்தான் மனம் மீண்டும் மீண்டும் சுவைமிகு உணவுகளை நோக்கி மனதைத் தூண்டுகிறது. இந்த சுகம் தவறு. ஞானியின் சுக நிலையே சரி!”
“ஏன் இந்த சுகத்தை மட்டும் தவறு என்று சொல்கிறீர்கள்?”
“சுகபோகம் தவறு எனப் பலர் கண்டனம் செய்வது இந்தச் சுகத்தைத் தான். இது விளக்கேற்றுவதற்காக வீட்டைக் கொளுத்துவதற்குச் சமம்.
ஒரு யூனிட் சுவைக்கும் சக்தியை நாவில் பொங்க வைப்பதற்காக, உடல் எனும் வீட்டுக்குள் ஏகப்பட்ட குப்பைகளைக் கொட்டிவிடுகின்றார்கள் மனிதர்கள்.
எவ்வளவு சுவைமிகு உணவுகளை எடுத்துக் கொண்டாலும், மனிதரால் சில யூனிட் சுவைக்கும் சக்திக்கு மேல் அனுபவிக்க முடியாது.
இது புரியாத மனிதர் நாக்கை உரசுவதால் வரும் சுவைக்கு அடிமையாகிவிடுகின்றார். உடலைப் பாழாக்க ஆரம்பித்துவிடுகின்றார். உடல் அழிய ஆரம்பிக்கிறது.
ஆனால் ஞானிக்குள் சில யூனிட்கள் என்ற வரையரையை மீறி, ஊற்றுபோல் சுவைக்கும் சக்தி பொங்கிக் கொண்டேயிருக்கும்.
அப்படிப் பொங்கினால் மட்டுமே சுவைக்கு அடிமையாவதிலிருந்து விடுபட முடியும். அப்போது மட்டுமே உடலுக்குத் தேவையான அளவு
உடலுக்குத்
தேவையான அளவு
உணவை
மட்டும்
எடுத்துக்கொள்ளுங்கள்.
உணவை மட்டும் எடுத்துக்கொள்ள முடியும். அந்த உணவின் ஒவ்வொரு துளியையும் ஆழமாய் ருசிக்க முடியும். உடலின் ஆரோக்கியம், சுகத்தினால் பாதிக்கப்படாதிருப்பது. அது இந்த நிலையில் தான் சாத்தியம்.
சாதாரண மனிதர்கள் ஒவ்வொரு
புலன்களின் மூலமாகவும், ஒவ்வொரு
சுகத்தை அனுபவிப்பதற்காக உடலை
அழிக்கும் கொடுஞ்செயல் முடிவுக்கு
வரவேண்டும்.
ஞானிகளைப்போல 24 மணி நேரமும் சுகத்தின் உச்சத்திலேயே வாழ்ந்து, ஐந்து புலன்களையும் கடந்த ஆனந்த நிலையிலேயே வாழும் இன்செயல் துவங்க வேண்டும்.
அப்போதுதான் உடலளவு சுகம்கூட அதன் முழுப்பரப்பளவிலும் நிகழும். உடலின் ஏதோ ஐந்து புள்ளிகள் மட்டும் சுகத்திற்காக ஏங்காமல், உடலின் ஒவ்வொரு புள்ளியும் சுகத்தை அனுபவித்துக் கொண்டேயிருக்கும்.
ஒவ்வொருவரும் 24 மணிநேர சுகத்தை அடைவதே இலக்கு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்” என பதில் சொல்லி முடித்தோம்.
தியானம்

ஐம்புலன்களை சுகத்துக்காக அழிக்கும் மனிதர், "இறைவா! என்னைக் காப்பாற்று. ஐம்புலன்களும் என்னை அழிக்கின்றன..." எனப் புலம்புகின்றார்.
நாவின் சுவைக்கும் சக்தியைப்போல், ஒவ்வொரு புலனிற்கும் உள்ள சக்திகள் விழித்துக்கொள்ள வேண்டும். அவை அவற்றின் நுண்ணுணர்வின் உச்சத்தில் இயங்க வேண்டும்.
இது நிகழ...
இப்போது 'சுகம்!' என மனிதன் நம்பும் அனைத்துமே சுகமல்ல என்ற ஆழ்ந்த புரிந்துகொள்ளுதல் நிகழ வேண்டும்.
இந்தப் புரிந்துகொள்ளுதல் மட்டும் நிகழ்ந்துவிட்டால், சுகத்திற்கு நீங்கள் அடிமையாக இருக்கமாட்டீர்கள். சுகம் உங்களுக்கு அடிமையாக இருக்கும். தியானித்துப் பாருங்கள்.
மகாவாக்கியம்
“அன்பு - மருந்துக்கெல்லாம் மருந்து”
ஞானியின் பூரண அன்பு நிலையை அடைந்தபின்தான் முழு அன்பு செய்ய வேண்டும் - என்ற கட்டாயம் இல்லை.
உங்களின் சாதாரண பாசத்திற்கே அளப்பரிய மருத்துவ சக்தியுண்டு.
பாசத்தை வழங்குவதில் பூரணமாகுங்கள். “முழுப்பாசம் - முழுமருந்து” உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும்!
பாசத்தின் உச்சிக்குச் செல்லுங்கள், அன்பின் பாதம் தரிசிப்பீர்கள்.
ஆனந்தமடைவீர்கள்.
பலகாலமாய் அன்பு கஜானா பூட்டப்பட்டேயிருக்கிறது.
பெட்டிக்குள் கட்டித்தங்கமாய்... அதனால்
யாருக்கென்ன பயன்?
அன்பைப் பகிருங்கள்.
பரவசமாவீர்கள்.
திருந்தாதவர்கள் இருந்தென்ன பயன். மகான்களால் இவ்வளவு காலம் மாறாதவர்கள், இனியா மாறப்போகிறார்கள்? எனக்கு நம்பிக்கையில்லை.
-இராபின்சன், நீலகிரி.
“என்ன சொன்னாலும் திருந்தாத இந்தச் சமுதாயத்திற்கு, என்னதான் நல்ல கருத்துக்களை நீங்கள் சொன்னாலும் அது கடலில் கரைத்த பெருங்காயம் தானே” என ஒருவர் என்னிடம் கேட்டார். அதற்கு, “பெருங்காயத்தால் கடல் வாசம் பெறுகிறதோ இல்லையோ, கடலில் கரைக்கும் ஒவ்வொரு முறையும் என் கை வாசமாகும்” என்றேன்.
சமூகத்தில் சில ஓட்டைகள் இருக்கத்தான் செய்கிறது. நல்ல முயற்சிகள் சில வேளைகளில் பொய்த்துத்தான் போகின்றன.
அதற்காக உங்கள் நம்பிக்கையை நீங்கள் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும். நம்பிக்கைக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால், எதற்காகவும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. அது உங்கள் வாழ்க்கையை வாசமாக்கும்.
உண்மைகளை உணர்வதற்கு முன்புவரை நீங்களும் திருந்தாதவர்கள் பட்டியலில்தானே இருந்திருப்பீர்கள்.
முன்னாள் திருந்தாதவர், இந்நாளில் திருந்தாதவரை சலித்துக்கொள்வது எந்தவகையில் நியாயம். ஜூனியர்களுக்கு வாய்ப்பளியுங்கள். ஏதாவதொரு நொண்டிச்சாக்கைக் காட்டி உங்களை பொறுமையிழக்கச் செய்யும் வெறுமை குணங்களுக்கு வாய்ப்பளிக்காதீர்கள்.
உங்களால் முடிந்த நல்லதையும் தொடர்ந்து செய்துகொண்டேயிருங்கள். வாழ்வில் நறுமணம் வீசிக்கொண்டேயிருக்கும்.
மூன்றாவது கண்
* திபெத்தில், நெற்றி மத்தியில், ஆணி அடிப்பதைப் போல ஒருவகைக் கட்டையை அடிப்பதை ஒரு தவமாக கடைபிடிக்கிறார்களாமே.... அது உண்மையா?
மூன்றாவது கண்ணிற்கான சூட்சுமமான தியான முறைகளில் அதுவும் ஒன்று.
* மூன்றாவது கண் இருப்பது நிஜமா?
நிஜம் என்பதால்தான் உடலின் மிக முக்கியமான ரகசிய பகுதிகளில் ஒன்றான இதற்கு மட்டும் நூற்றுக் கணக்கான தியான முறைகள் இருக்கின்றன.
* அதென்ன உடலின் ரகசியமான பகுதிகள்?, சக்கரங்கள் என்றால் என்ன?
> மனிதனுடைய உடல், மனம்,
> உயிர், ஆகிய மூன்றும்
> உடலுக்குள் ரகசியமாய்
> சந்தித்துக் கொள்ளும்
> இடங்களைத்தான் சக்கரங்கள்
> அல்லது சக்தி மையங்கள்
> என்றழைக்கிறோம்.
தியான முகாம் ஒன்றில் பக்தர் ஒருவர் கேட்டார், “மனிதனுடைய உடல், மனம், உயிர், ஆகிய மூன்றும் உடலுக்குள் ரகசியமாய் சந்தித்துக் கொள்ளும் இடங்களைத்தான் சக்கரங்கள் அல்லது சக்தி மையங்கள் என்றழைக்கிறோம்” இதுவே உடலின் ரகசிய பகுதிகள் ஆகும், எனச் சொன்னேன்.
★ இப்படி எத்தனை ரகசியமான பகுதிகள் இருக்கின்றன?
நிறைய இருக்கின்றன.
அதில் பிரதானமானவை ஏழு
மூன்றாவது கண் எனக் குறிப்பிடப்படுவது, ஆறாவது ரகசியப்பகுதி. அதன் பெயர் ஆக்ஞா சக்கரம்.
★ மூன்றாவது கண் திறந்தால்....அவர்கள் சொல்வது எல்லாம் நிகழுமாமே? அது எப்படி சாத்தியம்?
இரண்டு விஷயம்
1. மூன்றாவது கண் திறந்தவர் சொல்வதெல்லாம் நிகழும்.
2. மூன்றாவது கண் திறந்தவர் நிகழப்போவதை மட்டுமே சொல்வார்.
★ புரியலையே!
முக்காலமும் உணர்ந்தவர் எனப் பெரியோர் சொல்லக் கேள்விபட்டிருக்கிறீர்களா?
ம்ம்.. கேள்விப்பட்டிருக்கிறேன்.
சாதாரண மனிதர்களுக்கு நிகழ்காலம், இறந்தகாலம் மட்டுமே தெரியும்.
ESP போன்ற சிறப்பு சக்திகளைப் பெற்றவர்களால் எதிர்காலத்தின் சில சிதறல்களைக் கண்டு சொல்ல முடியும்

மூன்றாவது கண் திறந்தவர் நிகழப்போவதை மட்டுமே சொல்வார்.
Hypnotism மூலம் சென்ற பிறவி பற்றிகூடச் சொல்ல முடியும்.
ESP, Hypnotism, Mesmerism போன்ற எல்லாமே நிகழ்வது இந்த மூன்றாவது கண் எனப்படும் ஆக்ஞா சக்கரத்தின் அபூர்வ சக்திகளால்தான் சாத்தியமாகிறது.
மூன்றாவது கண் திறந்து கொள்ளும்போது ஆக்ஞா சக்கரம் முழுமையாக விழிப்படைந்து விடும். முழு சக்தியும் கிடைத்துவிடும்.
அப்போது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், என்ற மூன்றையுமே உங்களால் தெளிவாய் காண முடியும்.
★ முக்காலத்தையும், தனித்தனியாய் காண முடியுமா?
தனித்தனியாய் அல்ல, ஒன்றாகவே காண முடியும்.
★ வாரநாசி என்பது மூன்றாவது கண்ணைக் குறிக்கும் ஞானச் சொல்தான் என ஓரிடத்தில் சொல்லியிருக்கிறீர்களே?... அதுபற்றி
வாரநாசியில் இறந்தால் முக்தி என சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அது புவியியல் ரீதியான இடத்தை மட்டும் குறிப்பதல்ல. வாரநாசி பல ஞானிகளை உள்ளடக்கிய புனித ஸ்தலம் என்பதும், அங்கு உயிர் வாழ்வதும், விடுவதும் விழிப்புணர்வை அதிகரிக்கும் என்பதும் நிஜம்தான்.
ஆனால் வாரநாசி என்றால், வார + நாசி. வார என்றால் புருவ மத்தி, நாசி என்றால் மூக்கு.
> வாரநாசி என்றால் புருவ
> மத்தியும், மூக்கும் சந்திக்கும்
> இடம் என்று அர்த்தம். இந்த
> இடம்தான் ஆக்ஞா
> சக்கரத்தின் இருப்பிடம். இதன்
> வழியாய் உயிரை விடுவது
> தான் முக்தியைத் தரும்.
அதாவது புருவ மத்தியும், மூக்கும்
சந்திக்கும் இடம் என்று அர்த்தம். இந்த
இடம்தான் ஆக்ஞா சக்கரத்தின் இருப்பிடம்.
இதன் வழியாய் உயிரை விடுவதுதான்
முக்தியைத் தரும்.
★ எல்லோரைப்போலவே வாழும்
எனக்குக் கூட இந்த மூன்றாவது கண் திறக்க
வாய்ப்பு உண்டா?
உங்களைப் போலவே எல்லோருக்கும் அந்தத் தகுதி உண்டு.
★ அன்றாட வாழ்க்கையில் அல்லல்படும் மனிதக் கூட்டத்திற்கும், ஞானக் கூட்டத்தின் மூன்றாம் கண்ணிற்கும் சம்பந்தம் இருக்கிறதா?
ஞானிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அந்த மூன்றாவது கண் இருக்கிறது.
ஆழ்ந்த தியான நிலையால் அவர்கள் அதைத் திறந்திருக்கிறார்கள். நீங்கள் இன்னும் உங்களின் மூன்றாம் கண்ணை இறுக மூடி இருக்கிறீர்கள். வித்தியாசம் அவ்வளவுதான்.
மூடியிருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் உங்களுடைய விழிப்புணர்வு பாயும் போதெல்லாம் புத்திசாலித்தனமானது விழித்துக் கொள்ளும்.
சாதாரணமாக, நினைவை அங்கு நிலை நிறுத்தினால் கூட, மனிதனின் புத்திசாலித்தனமானது அருமையாய் வேலை செய்யும்.
அதனால் தான் ஆக்ஞா சக்கரம் இருக்குமிடத்தில் குங்குமம் வைப்பது, சந்தனம் வைப்பது, தீபத்தை தரிசனம் செய்வது, தெய்வ விக்ரகங்களை உற்று நோக்குவது போன்ற சடங்குகளை ரிஷிகள் உருவாக்கினார்கள்.
மனிதரின் மூன்றாவது கண்ணில், அவரையுமறியாமல் நிலை நிறுத்தும் தியான முறைகள்தான் மேலே நீங்கள் படித்த சடங்குகள்.
அன்றாட வாழ்க்கையை நடத்தத் தேவையான புத்திசாலித்தனத்தை இயக்கிக்கொள்வதற்காகத்தான் இந்த தியான முறைகளை தொழில் துவங்கும் முன் செய்யும் சடங்குகளாக வடிவமைத்து வைத்தனர்.

மூடியிருக்கும் ஆக்ஞா சக்கரத்தில்
உங்களுடைய விழிப்புணர்வு பாயும்
போதெல்லாம் புத்திசாலித்தனமானது
விழித்துக் கொள்ளும்.
★ அப்படியென்றால் சடங்குகள் என்பவை மூடப்பழக்கவழக்கங்கள் இல்லையா?
சடங்குகள் வெறும் மூடப்பழக்கவழக்கங்கள் அல்ல. அவை மூடி பழக்கவழக்கங்கள்.
★ மூடி பழக்கவழக்கங்கள் என்றால்...
முகத்தை மூடியிருக்கும் சிப்பியைப்போல், சிறுசிறு தியானங்களை தன்னுள்ளே மூடி வைத்து கொண்டிருக்கும் தியான முறைகள்தான் சடங்காச்சாரியங்கள்.
தியானங்களை மூடி மூடி பாமரர் வரை அந்தத் தியானங்களை காலங்காலமாக எடுத்துச் சென்று சேர்க்கும் சடங்காச்சாரியங்கள், தியான மூடி பழக்கவழக்கங்கள். மூடப்பழக்க வழக்கங்கள் அல்ல.
ஒவ்வொரு சடங்கும் உடல் மன உயிரின் ஏதோ ஒரு பகுதியில் ஆரோக்கியத்தையோ அல்லது ஆனந்தத்தையோ ஏற்படுத்தும் ஞான நோக்கில் உருவாக்கப் பட்டவையே. அவை ஒவ்வொன்றும் நல்ல தியானங்களே.
★ மூன்றாவது கண் இருப்பதை மருத்துவ ரீதியாக நிரூபிக்க முடியுமா? அது மிகவும் சூட்சுமமானது. கருவிகளால் கண்டுபிடிக்க முடியாது. விழிப்புணர்வால் மட்டுமே கண்டுபிடிக்க, கண்டு கொள்ள முடியும்.

ஒவ்வொரு சடங்கும் உடல் மன உயிரின்
ஏதோ ஒரு பகுதியில் ஆரோக்கியத்தையோ
அல்லது ஆனந்தத்தையோ ஏற்படுத்தும் ஞான
நோக்கில் உருவாக்கப் பட்டவையே.
உடலின் சக்தி செறிவு மிகுந்த பகுதி இந்த ஆக்ஞா சக்கரம். அதன் சக்தி வெளிப்பாடாகத்தான் உடலையே ஆட்டிப்படைக்கும் சுரப்பிகளின் அரசனாக Pitutary gland (King of glands) அங்கே இருக்கிறது
மருத்துவத்துறைக் குறிப்பிடும் மூளையின் புத்திசாலித்தனத்திற்குக் காரணமான மீஸியல்ஃப்ரான்டல் லோப் (Mesial frontal lobe) எனும் பகுதியும் ஆக்ஞா சக்கரப்பகுதியில்தான் இருக்கிறது.
புத்திசாலித்தனம், விழிப்புணர்வு ஆகியவற்றின் உடல் ரீதியான தடயம் வரை மருத்துவ அறிவியல் நிரூபித்திருக்கிறது. ஆக்ஞா சக்கரத்தின் வெளிப்பாடுகளுக்கான நிரூபணங்கள் பல கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன.
கடைசியாக சில வார்த்தைகளை சுய அனுபவத்திலிருந்து சொல்லவேண்டுமானால்.. எந்தக் காலத்திலும் ஆக்ஞா சக்கரத்தை கருவிகளால் நிரூபிக்க முடியாது.
அதை உணர முடியும். பொது நிரூபணம் சாத்தியமில்லை. தனி நிரூபணமே சாத்தியம். அதிலும் அதை உணர்வது முழு விழிப்புணர்வால் மட்டுமே சாத்தியம்.
இறைவன் அளித்த பரிசு
அமெரிக்க தியான சொற்பொழிவு ஒன்றில், மனஅழுத்தம் பற்றிய உங்களின் அபிப்ராயம் என்ன? என பிராங் எனும் பக்தர் கேட்டபோது...
"45 வயதைத் தாண்டிய பின்னும் மனஅழுத்தம் (Depression) வரவில்லை என்றால், வாழ்ந்து முடித்த வாழ்வில் ஏதோ தவறு இருக்கிறது. என்று அர்த்தம்" எனச் சொன்னேன்.
கேள்வி கேட்டவர் திடுகிட்டவராய் "என்ன சொல்கிறீர்கள்?!" எனக் கேட்டார்.
"இன்னொரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள், சாதித்த பின் வரும் மனஅழுத்தம் என்பது இறைவன் தரும் பரிசு"
"மனஅழுத்தம் இறைவன் தரும் பரிசா?"
"ஆம்"
சாதித்த பின் வரும்
மனஅழுத்தம் என்பது
இறைவன் தரும் பரிசு.
"எப்படி?"
"அர்ஜூனனுக்கு வந்த
மனஅழுத்தம் தான் 'பகவத் கீதை,' எனும் மகா
உபதேசத்தைப் பெறும் பாக்கியத்தை
அர்ஜூனனுக்கு தந்தது".
‘அர்ஜுன விஷாத யோகம்’ எனும் தலைப்பின் அர்த்தம் “அர்ஜுனன் முழு மனஅழுத்தில் இருந்தார்” என்பதே.
வாழ்வில் பார்க்க வேண்டிய எல்லாவற்றையும் பார்த்தபின்தான், அர்ஜுனனுக்கு மனஅழுத்தம் வந்தது.
இதை விடுங்கள், நம் புத்தர் வீட்டை விட்டு வெளியேறியது ஏன்?
இதற்கு மேல் வெளியுலக வாழ்க்கையிலிருந்து அனுபவித்துப் பார்க்க எதுவும் இல்லை. அதனால் ஆனந்தத்தை, பூரணத்துவத்துவத்தை அடைய முடியாது என அவருக்குள் நிகழ்ந்த தெளிவால்தான் கௌதம சித்தார்த்தருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டது. அதனால் வீட்டை விட்டு வெளியேறினார். ஞானமடைந்தார்.
மாயையிலிருந்து விடுபட ஆரம்பிக்கும் சாதனையாளருக்கு வரும் முதல் அறிகுறி மனஅழுத்தம்.
இதிலிருந்து விடுபட ஆரம்பித்தவரால்தான் ஆனந்தத்தின் மகிமையையும் ஞானத்தின் முக்கியவத்துவத்தையும் புரிந்து கொள்ள முடியும், தியானத்தில் ஆழ்ந்து மூழ்க முடியும்” எனச் சொன்னோம்.
உடனே அந்த மருத்துவர், “அப்படியென்றால் சாதாரண மனிதனால் தியானம் செய்ய முடியாதா?”
“தாகமிருப்பவர் நீரை அருந்தும் விதத்திற்கும், சாதாரண மனிதர் நீரை அருந்தும் விதத்திற்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்”.
“புரியவில்லையே...”

மாயையிலிருந்து விடுபட ஆரம்பிக்கும்
சாதனையாளருக்கு வரும் முதல் அறிகுறி
மனஅழுத்தம்.
“உலகின் எல்லா சௌகரியங்களுக்கும் ஓர் எல்லை உண்டு. அதற்கு மேல் அவை அதிருப்தியை உண்டு பண்ணும். சலிப்புத் தட்டிவிடும். அப்போது ஏற்படும் தாகம் புதிதானது. நிரந்தரமான நிம்மதிக்காகவும், ஆனந்தத்திற்காகவும் ஏங்கும். அப்போது மனதிற்குள் உருவாகும் தாகம் புனிதமானது. இந்த தாகம் தான் ‘மன அழுத்தம்' இதுதான் இறைவனளிக்கும் வரம்” எனச் சொல்லி முடித்தோம்.
சாதாரண மனிதருக்கு தியானம் ஒரு மருந்து. ஆனால், ஆண்டு அனுபவித்து எல்லாம் பார்த்தவருக்குதான் தியானம் ஒரு விருந்து.
தொடர்ந்து ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்வது எளிது. அப்படி வாழும் மனிதருக்கு மன அழுத்தம் என்ற ஒன்றே வராது. இப்படி வாழ்வது ஒரு மாபெரும் போலித்தனம். அப்படியென்றால், எருமை மாட்டைக் கூடத்தான் கும்பிடலாம். அது கூடத்தான் யாருக்கும் தொந்தரவு தராமல் நிம்மதியாய், அமைதியாய் இருக்கிறது.
எப்படி இந்த நிம்மதியும், அமைதியும் போலியோ, அதேபோல்தான் அடிக் கடி கூடிச் சிரிக்கும் சாதாரண மனிதரின் சிரிப்பலைகளும் கொண்டாட்டங்களும்.
நிஜ சிரிப்பும், நிஜ கொண்டாட்டமும் முழுக்க முழுக்க வேறானது. அது புத்த நிலை.
சாதாரண மனிதனின் சிரிப்பும், கொண்டாட்டமும் கௌதம சித்தார்த்தன் நிலை.

உலகின் எல்லா சௌகரியங்களுக்கும்
ஓர் எல்லை உண்டு. அதற்கு மேல் அவை
அதிருப்தியை உண்டு பண்ணும். சலிப்புத்
தட்டிவிடும்.
இந்த நிலையிலிருந்து உச்சியைத் தொட்டால்தான், புத்த நிலை அடைய முடியும். இன்னொரு வழியும் இருக்கிறது. இந்த நிலையை முழுதாய் விட்டால்கூட புத்த நிலையை அடைய முடியும்.
ஆனால், இரண்டையும் செய்யாமல் வாழ்க்கையையும், இப்பிறவியையும் வீணடிப்பது உயிருக்கு செய்யும் துரோகம்.
Depression of success (சாதனையின் வேதனை) எனும் தலைப்பில் நடந்த தியான சத்சங்கத்தின் முடிவில் அங்கு வந்திருந்த அன்பரொருவர்,...
"இன்னும் சாதிக்கவே ஆரம்பிக்காதவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டார்.
"இந்த நொடியிலிருந்து முழுமூச்சாய் சாதிக்க ஆரம்பியுங்கள்"
"எதற்கு, பிறகு தெரிந்தே மனஅழுத்ததில் விழவா?"
"இல்லை."
"மனஅழுத்தத்தைத் தாண்டிக் குதிக்க"
" புரியவில்லை..!"
"சாதனை, அதிக உலக சௌகரியங்கள் ஆகிய எல்லாம் உங்களுடைய விழிப்புணர்வை மீறி உங்களை ஆக்கிரமிக்கும் போதுதான் அவை ஒரு வெறியாக உருவெடுக்கின்றன.
வெறி ஒருவருக்குள் கிளப்பிவிட்ட எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாதபோதுதான் சலிப்புத் தட்டுகிறது. மன அழுத்தம் உருவாகிறது.
விழிப்புணர்வோடு சாதனையை
அணுகினால், அது ஒரு விளையாட்டாக
மாறிவிடும். சாதனை வேதனையாக மாறாது.
> வெறி ஒருவருக்குள்
> கிளப்பிவிட்ட
> எதிர்பார்ப்புகள்
> பூர்த்தியாகாதபோதுதான்
> சலிப்புத்
> தட்டுகிறது. மன அழுத்தம்
> உருவாகிறது.
தியானம்

விழிப்புணர்வு இல்லாத மனிதருக்குத் தான் சாதனை ஒரு சோதனை.
விழிப்புணர்வுள்ள மனிதருக்கு சாதனை ஒரு பரிசோதனை. அவ்வளவே.
மன அழுத்தம் வந்தவர்கள் கவலைப்படாதீர்கள். அது உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சி. மன அழுத்தம் வராதவர்கள் உஷாராகுங்கள். அதற்குள் நுழையாமலே தாண்டிவிடலாம்.
எது எப்படியானாலும், நீங்கள் இருக்கும் நிலை மாறக்கூடியதே. மாற்றப்படக் கூடியதே.
எந்த நிலையில் இருந்தாலும், உங்களால் ஆனந்தத்திற்குள் நுழைய முடியும்.
இந்த வரிகளை ஆழமாக தியானியுங்கள்.
வாழ்வும், வாழும் விதமும் ஆகிய இரண்டும் புது பரிமாணம் எடுக்கும் நிஜசாதனை உதயமாகும்.
எதிரிகள் எதிரிகளேயல்ல
கடந்த 3000 வருடங்களில், 5000 யுத்தங்களைச் செய்து முடித்த ஜாம்பவான்கள் மனிதர்கள்.
இந்த உலகை எழுநூறு முறை அழிப்பதற்குத் தேவையான அணுகுண்டு களை உலக நாடுகள் உருவாக்கி வைத்திருக்கின்றன.
பல மாதங்களுக்கு முன் படித்த கணக்கெடுப்பில் எழுநூறு என்றிருந்தது. ஒருவேளை இன்று அது எண்ணூறு என உயர்ந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
‘பாதுகாப்புக்காக! பாதுகாப்புக்காக!’ என்று சொல்லிச் சொல்லியே கோடிக்கணக்கான பணத்தை எல்லா நாடுகளும் வருடா வருடம் செலவு செய்கின்றன.
“இவ்வளவும் எதற்காக? யாருக்காக?
நமக்காக என்ற பெயரில் எதிரிகளுக்காக!”
எத்தனை புரட்சிகள், வெடித்திருக்கின்றன.
“மொத்த உலகையும் இந்த ஒற்றைப்புரட்சி
திருத்திவிடும். இனி பொற்காலம்தான் என்ற
நம்பிக்கையை எல்லாப் புரட்சிகளும் முதல்
சில வருடங்களுக்குத் தான் தருகின்றன.
‘பாதுகாப்புக்காக!
பாதுகாப்புக்காக!’ என்று
சொல்லிச் சொல்லியே
கோடிக்கணக்கான பணத்தை
எல்லா நாடுகளும் வருடா
வருடம் செலவு செய்கின்றன.
இந்த எதிரிகள் அழிந்தால், இந்த எதிரான செயல்கள் முடிவுக்கு வந்தால், வாழ்வு சுபிட்சமாகும் என்ற கனவு கனவாகவே முடிந்து போகிறது... எதிரிகளும், எதிரான செயல்களும் அழிந்த பின்னும், புரட்சி ஜெயித்த பின்னும்.
புரட்சிகள் புரட்சிகரமானது. அது புரட்சிக்காலம் முடியும் வரையில் மட்டுமே. எதிரிகளையும், எதிரானதையும் அழித்துத்தான் எல்லாப் புரட்சிகளும் ஜெயித்திருக்கின்றன. எதிரானவைகளை அழித்து, புரட்சிகரமாக ஜெயித்தும் அமைதிமட்டும் ஒரு விலையுயர்ந்த கனவாக மட்டுமே இருக்கிறதே...
அப்படியென்றால்...
அமைதியின்மைக்குக் காரணம் எதிரிகளா, புரட்சியா இல்லை வேறேதுமா...
பதில் காணுங்கள்...
திருத்துபவர்கள்தான் முதலில் திருந்த வேண்டும். மாற்றம் செய்ய நினைப்பவர்கள்தான் முதலில் மாறவேண்டும். என்ற ஞான மொழியை சொல்லும் தாவோ ஞானி விரும்பிக் கூறும் கதை ஒன்று...
பயந்த சுபாவமுள்ள மாணவனொருவன் நடுங்கியபடியே ஆசிரியரிடம் தன் திருத்தப்பட்ட விடைத்தாளைக் காட்டிக் கேட்டார், “என் மதிப்பெண் குறித்த இடத்திற்கு அருகே ஏதோ எழுதியிருக்கிறீர்கள். என்னால் அதைப் படிக்க முடியவில்லை. தயவு செய்து அது என்ன என்று சொல்லுங்கள்.”
“அதுவா உன்னுடைய எழுத்து மற்றவர் படிக்கும்போது புரியும் வகையில் தெளிவாக இருக்க வேண்டும்” என்று எழுதியிருக்கிறேன். மடையா இதைக்

திருத்துபவர்கள்தான் முதலில்
திருந்த வேண்டும். மாற்றம் செய்ய
நினைப்பவர்கள்தான் முதலில்
மாறவேண்டும்.
கூடவா உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!” என்று மாணவனைத் திருத்த முயற்சித்தாராம்.
அமைதியின்மைக்கு மூலகாரணம் எங்கோ இருக்க, அதை மாற்றினால் சரியாகும், இதைத் திருத்தினால் சரியாகும் என ஆரம்பித்ததின் விளைவே இவ்வளவு போர்கள், புரட்சிகள், பண விரயங்கள்.
மூலகாரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். சரிசெய்யப்பட வேண்டும். அதுவரை எதிரிகள் உருவாகிக் கொண்டேயிருப்பார்கள். அமைதி எழுத்தளவில் மட்டுமே உயிர்வாழும்.
எதிரிகளும், எதிரானவைகளும் பிரச்சினைகளுக்குக் காரணமல்ல.
“இவன் எதிரி! இவள் எதிரி. இது எதிரானது” என சுட்டிக்காட்டும் மனக்கோளாறு தான் மூலகாரணம். மூலகாரணம் அரசனின் மனதில் இருந்தால், நாடுகளுக்கிடையே போர். மனித மனதிலிருந்தால், உறவுகளுக்கிடையே சண்டை சச்சரவு.
குறைகளையே தேடித்தேடிக் குற்றம் காணும் மன அமைப்பு (Mental setup) மாறாத வரை சச்சரவுகளும் போர்களும் தொடர்ந்தபடிதான் இருக்கும்.
அமைதி புரட்சிவேகத்தில் தனி மனிதனுள் நிகழ வேண்டும். தனி மனிதப் புரட்சியே உலகைக் காக்கும். இல்லையேல் சர்backup நிச்சயம்.
(Individual revolution (or) global suicide, So meditate intensively)
“உதிரமே கொடுத்தேன் எதிரிகளுக்காக. என்ன கொடுத்தேன் என் உறவுகளுக்குப் பிரிவுத் துயர் தவிர?” என்ற சாமுராய் வீரரின் சோக வரிகள் மனிதரின் சிந்தனைப் போக்கைத் திருகிப் பார்க்கும் ஆற்றல் பெற்றது.
“எதிரிகளுக்காக இரத்தம் தந்தேன்” என்ற
வரி சாதாரண மனிதரைத் தாண்டிக் கொஞ்சம்
ஆழமாக யோசித்திருக்கிறார் அந்த சாமுராய்
வீரர் என்பதை உணர்த்துகிறது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாமும் அதே செயல்களைத் செய்கிறோம் என்று புரியும்.
> எதிரிகளும், எதிரானவைகளும்
> பிரச்சினைகளுக்குக்
> காரணமல்ல.
>
> “இவன் எதிரி! இவள் எதிரி.
> இது எதிரானது” என
> சுட்டிக்காட்டும் மனக்கோளாறு
> தான் மூலகாரணம்.
எதிரிகளை நினைத்துக் கோபப்பட்டு நம் நேரத்தை வீணாக்குகிறோம். மனதின் கோபம் எனும் ஓட்டை வழியாக சக்தியை வீணடிக்கிறோம். மன நிம்மதியைத் துடைத்தெறிகிறோம்.
எதிரானவைகளையும், எதிரிகளையும் நினைத்துப் பொங்கியெழும் போதெல்லாம் சக்தி விரயமாகிறது.
அதிக சக்தி விரயம், ஆரோக்கிய குறைவு. மனதுக்கும் கேடு. இதன் பக்க விளைவு - அந்த நேரத்தில் உங்களோடு இருப்பவரின் சந்தோஷம் தடுக்கப்படுகிறது. அவரோடு சந்தோஷமாக சிரித்து இன்னும்கொஞ்சம் நெருங்கக் கிடைத்த காலம் கோபத்தில் கரைந்துபோயிருக்கும்!
கோபத்தால் பொங்கி, எதிரிகளுக்காக சக்தியை வீணடிக்கும்போது, உறவுகளின் நினைவில், உறவுகளின் எரிச்சலான முகத்தையும் உங்களோடு கழித்த கலவர நிமிடங்களையும்தான் பதிய வைக்கிறீர்கள். இனி உங்களைப் பற்றிய எதிர்மறை நினைவுகள் அதிகமாகும்.
இது தேவைதானா, நியாயம்தானா. தீவிரமாக யோசித்துத் தீர்வுகாணப்பட வேண்டிய ஒன்று இது என்பது புரிந்தால், புது வாழ்வு காத்திருக்கிறது உங்களுக்காக.

எதிரானவைகளையும், எதிரிகளையும் நினைத்துப் பொங்கியெழும் போதெல்லாம் சக்தி விரயமாகிறது. எதிரிகளை நினைத்துக் கோபப்பட்டு நம் நேரத்தை வீணாக்குகிறோம்.
தியானம்
அந்த பிரச்சனைக்கு முடிவு கட்டி விட்டேன் என பெருமிதத்தோடு முகுந்த் சொன்னார்.
"என்ன அது?" எனக் கேட்ட நண்பனிடம், கண் சிமிட்டி முகுந்த் சொன்னார் "அந்தக் குப்பன் அடிக்கடி என் முதுகில் தட்டிக் கொண்டேயிருக்கிறான். இன்று மட்டும் தட்டினால் இன்றோடு, மகன் ஒழிந்தான்!"
"அதுதெப்படி ஒழிவான்", எனக் கேட்ட நண்பரிடம், "என் முதுகில் பத்து வெங்காய வெடிகளைக் கட்டி வைத்திருக்கிறேன்" என்றார்.
சிலவற்றை எதிரானதாகவும், சிலரை எதிரிகளாகவும் காட்டும் குறை காணும் மனம் சரியாகும் வரை முகுந்தனின் செயல் போலத்தான் நம் செயல் இருக்கும். எதிரிகளை நோகடிக்க முயற்சித்து, நாம் நொந்து போயிருப்போம்.
மாறவேண்டியது எதிரி அல்ல. குறைதேடும் குணம். குறையையே நிறைய தேடுபவரா நீங்கள்? உங்களோடு நீங்களே ஒரு கலந்தாலோசனை செய்யுங்கள், குண அமைப்பை சீர்த்திருத்துங்கள், சீர்மிகு திருத்தங்கள் உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்வதைக் காண்பீர்கள்.
மகா வாக்கியம்
எதிரிகள் எதிரிகளேயல்ல
குறைகாணும் மனம் - தனக்கு ஏற்றார் போல நீதி நெறிகளை வளைத்துக் கொள்ளும்.
தான் வாழ, அது மற்றவரின் குறையைத் தர்க்கரீதியாய்க் குற்றம் எனக் காட்டும். எதிரிகளை உருவாக்கும்.
ஒருவரின் குறைகளை மட்டும் கூட்டினால் அதன் கூட்டுத்தொகை “உங்களின் எதிரி”. நிறைகளின் கூட்டுத்தொகை, “உங்களின் நண்பன்” கூட்டுத்தொகையை மாற்றுங்கள். நண்பர்களின் கூட்டுத் தொகை அதிகரிக்கும். எதிரிகள் எதிரிகளேயல்ல என்பது புரியும். “உங்களின் சக்தியை வீணடிக்குமளவிற்கு முக்கியமானவர்களா உங்கள் எதிரிகள்,"
மற்றவரின் துர்ச்செயல்களால் மிகவும் துன்பப்படுகிறேன். மனித நேயம் குறைந்துவிட்டதா?
-பானு, மேட்டுப்பாளையம்
ஜென் ஞானி ஒரு முறை தன் வெள்ளை உடையில் ஒரு சொட்டுச் சிவப்பு மைவிட்டு “இது என்ன” என்று சீடர்களிடம் கேட்டார்.
“அச்சச்சோ! நல்ல, உடை இப்படிப் பாழாப் போச்சே” என்றார்கள்.
“வெள்ளை உடையில் ஒரு பொட்டுச் சிவப்பு. இதைச் சொல்ல இவ்வளவு உணர்ச்சின் கொந்தளிப்புத் தேவையா. அச்சச்சோ அதிகமில்லையா?” என்றார்.
துர்ச்செயல்கள், எதிரானவைகள் என நாம் முத்திரை குத்தித் துன்பப்படுவதற்குக் காரணம் - இதுபோன்ற மிகைப்படுத்துதல்தான்.
குறைகாணும் குணம் நாளடைவில் கொந்தளித்து எழும். மனப்பழக்கமாக எல்லோருக்குள்ளும் மாறிவிடுகிறது. சிறு தவறுகள்கூட சீற வைக்கின்றன நம்மை.
கொந்தளித்தெழும் மனப்பழக்கத்தைச் சரிசெய்து விட்டால், நம்மாலும் இயல்பாய் ஆனந்தமாய் இருக்கமுடியும்.
‘மோசமானவன்’ ‘அயோக்கியன்’, ‘என்எதிரி’ எனக்கொந்தளித்தெழாமல், அந்த மனிதரிடம் இந்தச் சிறு தவறு இருக்கிறது என இயல்பாகக் கூறி, அந்த நண்பனை இழக்காதிருப்போம். குறைகளையே காணும் குணம் மாற, நிறைகளையே முதலில் கண்டுபிடிப்போம், அதையே அதிகம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் குணமாக மாற்றுவோம். ‘இதெல்லாம் என்னால் முடியுமா?’ என்று தயங்காதீர்கள். நிறைகளால் மனதை நிரப்பும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்.
நிறைகளைச் சேகரியுங்கள், கொந்தளிக்கும் குணம் குணமாகும். மனித நேயம் குறைந்ததாய்க் காட்டும் ‘குறைகுணம்’ குறையட்டும்.
தானமா? சேவையா?
★ தானங்கள் செய்வது நல்லதா? நல்லது. அடுத்தவர்களுக்கு!
★ அடுத்தவர்களுக்கென்றால்? ஆம், தானம் செய்பவருக்கு அந்த தானங்கள் ஆபத்தானவை.
★ ஆபத்தா! தானமளிக்கும்போது மனதளவில் நீங்கள் சிம்மாசனமிட்டிருப்பீர்கள். தானம் பெறுபவர் உங்களிடம் கையேந்துவார்.
இது அகங்காரத்தை வளர்க்கும் வாய்ப்புகள்தான் அதிகம். எச்சரிக்கை!
★ அப்படியென்றால் உண்மையாய் உதவ நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?.
'சேவை' - மற்றவர்கள்
ஏற்றுக்கொள்வார்களா?
எனும் பண்பை
அச்சாணியாகக்
கொண்டு செயல்படுவது.
தானம் செய்யக்கூடாது. சேவை செய்ய வேண்டும்.
★ தானம், சேவை. என்ன வேறுபாடு?
'தானம்' - நான் கொடுக்கிறேன்
என்ற மறைமுக கர்வத்தை அச்சாணியாகக்
கொண்டது.
‘சேவை’- மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளார்களா? எனும் பண்பை அச்சாணியாகக் கொண்டு செயல்படுவது.
★ சேவையின் மகத்துவம்?
சேவை செய்யும்போது மனதளவில் நீங்கள் ஒரு சேவகராக மாறியிருப்பீர்கள். உங்களையுமறியாமல் எளிமைத்துவத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பிப்பீர்கள்.
இது அகங்காரத்தைக் கரைக்கும்.
★ சேவையை யார் செய்யலாம்?
திமிர் பிடித்தவர்கூட ஒரு பத்து பைசாவை பிச்சைக்காரருக்குத் தூக்கியெறிந்துவிட்டு... "நான் தானம் செய்தேன்" என காலர் தூக்கிவிட்டுப் பேசலாம்.
ஆனால் சேவை, சேவகனால் மட்டுமே சாத்தியம்.
பக்தர் - கடவுளுக்கு,
சீடர் - குருவுக்கு,
மனதளவில் கரமேந்தி, "என் சேவை ஏற்றுக் கொள்ளப்படுமா?" எனக் கரம்கூப்பி நிற்பது சேவை.
சேவை செய்பவரால், தன் முன்னிருக்கும் பிச்சைக்காரருக்குள்கூட தெய்வத்தைப் பார்க்க முடியும்.
சேவையால் மேலும் மேலும் உருகிப்போவார்.

சேவை செய்யும்போது மனதளவில் நீங்கள் ஒரு சேவகராக மாறியிருப்பீர்கள். உங்களையுமறியாமல் எளிமைத்துவத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பிப்பீர்கள்.
இது அகங்காரத்தை கரைக்கும்.
★ பாசத்தை ஏன் வேஷம் என்கிறீர்கள்?
கடுகளவுகூட வெறுப்பு இல்லாத ஓர் உறவை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?
முடியாது......
வெறுப்புகள் மனதின் ஒரு மூலையில் குடியிருக்க, மனிதன் இன்னொரு மூலையில் பாசம் குடியிருப்பதாகச் சொன்னால்... அது எப்படி நிஜமாகும்?
துர்வாசனையும், நறுமணமும் ஒன்றாய் கலந்து கிடைக்கும் வாசனையானது எப்படி நல்ல வாசனையாக இருக்க முடியும்?
★ அன்பு என்பது?
வெறுப்புக் கலக்காத நேசம். எதிர்பார்ப்பு இல்லாத ஊக்கம்.
★ காமம், காதல், அன்பு ஒப்பிடுங்கள்.
காமம் - ஹார்மோன்களின் குட்டிகலாட்டா
காதல் - உணச்சிகளின் குட்டிகலாட்டா
அன்பு - உணர்வுகளின் சங்கமம்.
★ சந்தர்ப்பவசத்திற்காகப் பொய் பேசினாலும் அது அநீதிதானே?
பொய் என்பதே பொய். இதில் அநீதி எனும் பேச்சுக்கு இடமேயில்லை.
★ என்னது பொய்யே பொய்யா?
இன்பத்தின்
உச்சத்தை ஒருமுறைகூடத்
தொடாததாலும், தொடர்ந்து
தவறாகவே அதைத்
தொட முயற்சிப்பதாலும்
துன்பங்களில் விழுகிறார்கள்.
குடித்ததால் அடித்து சித்ரவதை
செய்யும் குடிகாரன், "என் மகன் உள்ளே
ஒளிந்திருக்கிறானா?" எனக் கேட்கும் போது,
"அவன் இங்கில்லை. முதலில், நீ
இங்கிருந்து இடத்தைக் காலிசெய்" என்று
சொல்வதை அநீதி என்பதுதான் அநீதி.
இங்கு பொய்யே பொய்யாகிறது.
★ இன்னும் கொஞ்சம் விளக்குங்களேன்...
மேற்படி சம்பவத்தையொத்த சம்பவங்களில் பேசப்படுவது அநீதியல்ல.
நல்லதிற்காக, எதிராளிக்குப் புரியும் பார்வையில் நீங்கள் பேசிய பேச்சு, அவ்வளவுதான்.
★ உண்மை பற்றி.....
மற்றவரை நோகடித்து நாசம் செய்யவல்ல ஒரு கிராம் பொய்கூடக் கலக்காத உண்மைப் பேச்சு
பொய்யைவிட மோசமானது... அது அநீதி.
இது பொய் பேச போடப்படும் தூபம் அல்ல.
நீதிநெறிகளால் நெறிக்கக்கூடாது - என உணர்த்தும் ஒரு முயற்சி.
★ ஏன் மனிதர்கள் மீண்டும் மீண்டும் துன்பப்படுகிறார்கள்?
இன்பத்தின் உச்சத்தை ஒருமுறைகூடத் தொடாததாலும், தொடர்ந்து தவறாகவே அதைத் தொட முயற்சிப்பதாலும் துன்பங்களில் விழுகிறார்கள்.
★ அதிலிருந்து வெளிவர வழிதான் என்ன?
ஞானிகள் சொல்லும் ஆனந்தத்தை ஒரே ஒருமுறையாவது சுவைத்தும் பாருங்கள். எல்லாம் சரியாகி விடும்.

காமம் - ஹார்மோன்களின் குட்டிகலாட்டா
காதல் - உணச்சிகளின் குட்டிகலாட்டா
அன்பு - உணர்வுகளின் சங்கமம்.
தியானம்

‘எனக்கு யோகமும் ஒத்துவராது. தியானமும் சுத்தப்படாது’ என்பவர்களுக்கான தியானம் இது.
தெரிந்து கொண்டபின், என்ன? என்று ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.
வேறொன்றுமில்லை.
நடக்கும்போது தியானம் செய்யுங்கள் என்பதுதான் அது.
ரோட்டில் நடக்கும் போதும், கடற்கரையில் நடக்கும் போதும் விழிப்புணர்வோடு இருங்கள்.
நடக்கும்போது, “நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்திருக்கின்றன. வலது பக்கத்தில் பூனை வந்து கொண்டிருக்கிறது. இடது பக்கத்தில் ஆலமரம் இருக்கிறது.” என்பதையெல்லாம் தாண்டி முழு விழிப்புணர்வோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.
ஒவ்வொரு முறை பூமி மீது அடியெடுத்து வைக்கும்போதும், பாதங்கள் பூமியோடு உறவாடட்டும்.
அந்த நொடியிலிருந்து....
பூமியை மிதித்து மிதித்து நடக்காமல் மதித்து மதித்து நடக்கத் துவங்குவீர்கள்.
இது உங்கள் விழிப்புணர்வை அதிகப்படுத்தி உங்களை அருமையானவராக மாற்றும் தியானமாக அமையும்.
என் வயது 32, இளம் வயதில் செய்த ஒரு தவறு என்னை இன்றளவும் நிம்மதியற்றதாக்குகின்றது பாவியான என்னைக் கடவுள் மன்னிப்பாரா? -ரோகினி, சென்னை.
கடவுள் மன்னிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.
உங்களை நீங்கள் மன்னித்து விட்டீர்களா? நீங்கள் உங்களை மன்னிக்காத வரை கடவுளே உங்களை மன்னித்தாலும், அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. செய்வதைவிட அந்தத் தவறையே மீண்டும் மீண்டும் மனதில் நினைத்துக்கொண்டிருப்பதுதான் பெரிய தவறு.
ஒவ்வொரு முறையும் நீங்கள் அந்தத் தவறை மனதில் ரீப்ளே Replay செய்யும்போது, அந்தத் தவறை மீண்டும் ஒருமுறை செய்வீர்கள்.
“கடவுள் மன்னிப்பாரா? கடவுள் மன்னிப்பாரா?” என சாக்குபோக்குச் சொல்லி, பழைய தவறை அசைபோட்டு சுகம் காணும் மனச்செயலுக்கு இன்றே முற்றுப்புள்ளி வையுங்கள். முதலில் உங்களை மன்னியுங்கள்.
கடவுள் உங்களை ஏற்கனவே மன்னித்து விட்டார்.
புகைப் பிடிக்காதவர்களுக்கு எச்சரிக்கை!
ஒரு மருத்துவ சர்வே : "புகை பிடிக்காதவர்களின் வாழ்க்கைத் துணையை விட, புகைபிடிப்பவர்களின் வாழ்க்கைத் துணைக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகம்" என்கிறது.
பத்துபேர் இருக்கும் இடத்தில் ஒருவர் புகைபிடித்தால் பத்துபேரின் நுரையீரல்களும் புகையிலை சுருள் புகையின் 'நிக்கோட்டன்' வேதிப்பொருளால் தாக்கப்படும்.
இப்படி, சுற்றியிருப்பவர்கள் புகைபிடிக்காமலேயே, புகையிலைப் புகையை சுவாசிப்பதைத்தான் 'Passive smoking' என்று குறிப்பிடுகிறார்கள்.
பொது இடத்தில் ஒருவர் புகைபிடிப்பது, 'பாஸிவ் ஸ்மோக்கிங்' மூலமாக பலருக்கும் புற்றுநோயை ஏற்படுத்தும். "இந்த பாஸிவ் ஸ்மோக்கிங் தொடர்ந்தால்... இதனாலேயே 500 மில்லியன் மக்கள் புற்றுநோயுற்று இறக்க நேரிடும்" என்று கணித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) 1994 ஆம் ஆண்டிலேயே ஓர் அறிக்கைவெளியிட்டிருக்கிறது.
“இந்த பாஸிவ் ஸ்மோக்கிங்
தொடர்ந்தால்... இதனாலேயே 500
மில்லியன் மக்கள்
புற்றுநோயுற்று இறக்க
நேரிடும்” என்று கணித்து உலக
சுகாதார நிறுவனம் (WHO)
1994 ஆம் ஆண்டிலேயே ஓர்
அறிக்கைவெளியிட்டிருக்கிறது.
பத்துபேர் இருக்குமிடத்தில் ஒருவர்
புகைத்து முடிக்கும்போது, பத்துபேரும்
புகைபிடிக்காமலே ஒருமுறை புகை பிடித்து
முடித்திருப்பார்கள்.
அந்தோ பரிதாபம்!.
ஒருமுறை மிஸ்டர். குப்பன், நிட்டியிடம், “நான் எப்போதாவது தான் புகைபிடிப்பேன்” என்றார். நிட்டி, “அப்படியா” என ஆச்சர்யமாய்க் கேட்டார் அடிக்கடி புகைபிடிக்கும் மிஸ்டர் குப்பனைப் பார்த்து.
மிஸ்டர். குப்பன், “ஆமாம்!, ஆமாம்!”
நிட்டி, “எப்போதெல்லாம் புகைடிப்பீர்கள்” மிஸ்டர்.குப்பன், “மூன்று சூழலில் மட்டுமே நான் புகைபிடிப்பேன்...
- சந்தோஷமாயிருக்கும்போது.
- துக்கமாயிருக்கும்போது.
- அப்புறம் இது இரண்டுமில்லாமல் சும்மா இருக்கும்போது மட்டும், அவ்வளவுதான்” என்றார்.
இப்படிப் புகைபிடிக்க ஏதாவதொரு காரணம் சொல்லிக்கொண்டு, தன் நுரையீரலில் இருக்கும் 3,000,000,000 சுவாச நுண் அறைகளிலும் (Alveoli) காற்றுக்குப் பதில், ‘அக்னியை’ நிரப்புவது அவரவர் விருப்பம். ஆனால், மற்றவர்களை பாதிப்பது எந்தவகையில் நியாயம்?
இந்த நுண்ணறைகள் தாம் பிராணவாயுவான ஆக்ஸிஜனை (Oxygen) ‘இரத்தக்கடல்’ வழியாக உடல் திசுக்களுக்கு எடுத்துச் செல்ல உதவும் துறைமுகங்கள்.
புகையின் சூடும், நிக்கோட்டீனும் நுண்ணறைகளின் உட்தோலைப் புண்ணாக்கிவிடுகின்றன. புண்ணில் தொடர்ந்து ‘புகைத் தாக்குதல்கள்’ நடைபெற நடைபெற நுண்ணறைச் சுவர்கள் பொத்தலாகின்றன. கிழிந்து போகின்றன. மருத்துவர்கள் இந்தக் கொடூர நிலையின் வெளிப்பாட்டைத்தான் ‘Emphysema’ என்றழைக்கிறார்கள்.

புகைபிடிக்க ஏதாவதொரு காரணம் சொல்லிக் கொண்டு, தன் நுரையீரலில் இருக்கும் 3,000,000,000 சுவாச நுண் அறைகளிலும் (Alveoli) காற்றுக்குப் பதில், ‘அக்னியை’ நிரப்புவது அவரவர் விருப்பம். ஆனால், மற்றவர்களை பாதிப்பது எந்தவகையில் நியாயம்?
“தொடர்புகைத் தாக்குதல்தள்தான் ஒருவருக்குள் நுரையீரல் புற்றுநோயை உருவாக்குகின்றன” என்கிறது மருத்துவ ஆராய்ச்சிகள். (உணவுக்குழாய் மற்றும் வாய்ப்புற்று நோயையும் கூட இது உருவாக்குகிறதாம்!).
இதுபோன்ற மருத்துவ இரகசியங்களை ஒருமுறை நிட்டி, மிஸ்டர் குப்பனிடம் எடுத்துச் சொன்னவுடனேயே... “இவ்வளவு பாதகங்களா! இனி என் வாழ்நாளில் ஒருமுறைகூட புகைபிடிக்க மாட்டேன். இது சத்தியம்” என்றார்.
அங்கிருந்த நிட்டியின் மகன் ஆச்சரியமாய் கேட்டார், “எப்படி அங்கிள்! உடனே இந்த பழக்கத்தை உங்களால் விடமுடிகிறது?”
மிஸ்டர் குப்பன், “அது ரொம்ப சுலபமடா!”
நிட்டி மகன், “அப்படியா!”
மிஸ்டர் குப்பன், “ஆமாம்! ஆமாம்!” இதற்கு முன் “குறைந்தது முப்பது முறையாவது புகைபிடிப்பதை நான் நிறுத்தியிருப்பேன்.” என்றார்
நீங்கள் புகைபிடித்தாலும், புகை பிடிக்குமிடத்தில் நீங்கள் இருந்தாலும், கார்பன்-டை-ஆக்ஸைடைக் கொடுத்து, ஆக்ஸிஜனை பண்டமாற்று செய்யும் துறைமுகங்களான நுண்ணறைகள், புகைத்தாக்குதலால் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
சுவாச நுண் அறைகளின் எண்ணிக்கை குறையும் போது ஆக்ஸிஜன் குறையும். (0_2) பண்டமாற்றும் அளவு குறையும்போது உடலில் கார்பன்-டை -ஆக்சைடு (0_2) அளவு அதிகமாகும். விளைவு, உடற் திசுக்களில் நச்சு அதிகமாகும்.
புகைத்தலின் பக்கவிளைவாக
உருவாகும் கார்பன் மோனாக்சைடு
(CO) என்னும் நச்சு வாயு,
ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும்
பேருந்துகளான ‘சிவப்பணுக்களை’
பிரேக் டவுன்
ஆக்கிவிடுகின்றன.
புகைத்தலின் பக்கவிளைவாக
உருவாகும் கார்பன் மோனாக்சைடு (CO)
என்னும் நச்சு வாயு, ஆக்ஸிஜனை எடுத்துச்
செல்லும் பேருந்துகளான ‘சிவப்பணுக்களை’
பிரேக் டவுன் ஆக்கிவிடுகின்றன.
(சிவப்பணுவில் ஆக்ஸிஜன் அமரும்
“ஹீமோகுளோபின் எனும் இருக்கையை
கார்பன் மோனாக்சைடு ஆக்கிரமிப்பதன்
மூலமாக இந்த பிரேக்டவுன் நிகழ்கிறது).
இதன் விளைவு உடல் திசுக்கள் சோர்வடைய ஆரம்பிக்கின்றன. உடலில் மந்தத்தன்மையும், இறுக்கமும் குடியிருக்க ஆரம்பிக்கின்றன. புகையிலையின் பகுதிப்பொருட்கள் முதலில் ரத்தக் குழாய்களை சுருங்கச் செய்கின்றன. இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகும்.
இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்களையும், புகையிலையின் பகுதிப்பொருட்கள் சுரக்கச் செய்கின்றன. விளைவு, இரத்த அழுத்தம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிறது.
“அதிகரிக்கும் இரத்த அழுத்தமும், சுருக்கத்தால் அதிகரிக்கும் இதய தசையின் இரத்தகுழாய் அடைப்புகளும் சேர்ந்து, மாரடைப்புக்கான வாய்ப்புகளை ஏகத்துக்கும் அதிகரித்து விடுகின்றன” என்கிறது மருத்துவ ஆராய்ச்சிகள்.
புகைப் பகுதிப்பொருட்கள் உடலுக்குள் பிராண சக்தி ஓட்டத்தைக் கூட வெகுவாக குறைத்து விடுகின்றன.
ஏதோ விளையாட்டாய் ஆரம்பித்த ‘புகைப்பழக்கம்’ புகை பிடிக்காத அப்பாவிகளையும் அதே அளவு பாதிக்கிறது என்பது பரிதாபத்திற்குரியது. மனிதாபிமான அடிப்படையில் உடனே யோசித்து உடனடி தீர்வு காணப்பட வேண்டியது.
புகைப்பிடித்தலின் பக்கவிளைவுகளிலிருந்து, புகைப்பிடிக்காதவர்கள்தான் முதலில் காப்பாற்றப்படவேண்டும்.
வீட்டிலேயே புகைப் பிடிப்பவர்கள் பாஸிவ் ஸ்மோகிங் மூலம் புற்றுநோயையும், மாரடைப்பையும் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் தருவது முடிவுக்கு வரவேண்டும்.

ஏதோ விளையாட்டாய் ஆரம்பித்த ‘புகைப்பழக்கம்’ புகைப்பிடிக்காத அப்பாவிகளையும் அதே அளவு பாதிக்கிறது என்பது பரிதாபத்திற்குரியது. மனிதாபிமான அடிப்படையில் உடனே யோசித்து உடனடி தீர்வு காணப்பட வேண்டியது. பொதுக்கூட்டத்தில் புகைப்பிடித்துத் தன்னையும் கெடுத்து, மற்ற அப்பாவிகளையும் கெடுக்கும் கொடுஞ்செயல் முடிவுக்கு வரவேண்டும்.
முடிவுக்கு வருமா??? வீட்டின், நாட்டின் விடிவு உங்கள் கையில்.
குறைந்தபட்சம், புகைப்பிடிக்காதவர்கள், இனி எச்சரிக்கையாக இருப்பார்கள். நீங்கள் இருக்குமிடத்தில் மற்றவர்கள் புகைப்பிடிக்க அனுமதிக்காதீர்கள்.
மகாவாக்கியம்
“பரவசத்தோடு பார்! எல்லாம் பரவசமாகும்.”
கட்டுக்கடங்காமல் பெருகிவிடக்கூடாது என்பதற்காய் ‘அழிப்பது;’ எல்லாம் அழிந்திடக்கூடாதே என்று ‘படைப்பது;’ நல்லாயிருக்க வேண்டும் எல்லாம் எனக் ‘காப்பது;’
காப்பதால், அழிப்பது;
அழிப்பதால், படைப்பது;
படைப்பதால், காப்பது
- இறைவன் தொழில்.
இது விளையாட்டென்றால், எல்லாம் விளையாட்டே..! இது பைத்தியக்காரத்தனமென்றால், எல்லாம் பைத்தியகாரத்தனமே...! இது புனிதமென்றால், எல்லாம் புனிதமே...!
இது தான் எல்லாமே. பார்க்கும் விதத்தில்தான் எல்லாம் ஒளிந்திருக்கிறது.
பரவசத்தோடு எல்லோரையும், எல்லாவற்றையும் பார்க்கும் கலையைக் கற்றுக்கொண்டால், எல்லாம் பரவசமாகும்.
மது, குடிப்பவரை மட்டுமே பாதிக்கும் புகை, குடியிருப்பவரையெல்லாம் பாதிக்கும் ‘புகை அது பகை’ உங்களுக்கும், உங்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும்.
திபெத்தில் புகைத்தலைக் கூட தியானமாகச் செய்வார்களாமே? உண்மையா?
-கிஷன், மலேசியா
“செய்யாதே!?” என்றால், “செய்யேன்...” எனத் தூண்டும் மனம்
- மன இயல்பு விதி
“புகைப்பிடிக்காதே” எனச் சமுதாயமும், பெற்றோரும் திரும்பத் திரும்பச் சொல்ல, மனத்தின் இயல்பு, “ஒரு முறை புகைப்பிடித்துப் பார்த்தால் தான் என்ன”? என செய்துபார்க்கத் தூண்டும்.
விளையாட்டாய் ஆரம்பிக்கும் புகைப்பிடித்தல், மன முதிர்ச்சிக் குறைவாய் உள்ளவர்களுக்கு அது விடாது பிடிக்கும் ஆழ்மனப் பழக்கமாகவும், உடற்கூறில் வளர்ச்சி குன்றியவர்களுக்கு அடிமைத்தனமாகவும் மாறிப்போகிறது.
உடல் எரியும் வரை, நுரையீரலையும் ஆரோக்கியத்தையும் எரிக்கும் வில்லனாகிப்போகிறது புகைச்சுருள்.
திபெத்தில் வழக்கில் இருக்கும் ‘புகைத்தல் தியானம்’, மன இயல்பில் ஆழ்ந்து வேலை செய்கிறது.

மது, குடிப்பவரை மட்டுமே பாதிக்கும் புகை, குடியிருப்பவரையெல்லாம் பாதிக்கும் ‘புகை அது பகை’ உங்களுக்கும், உங்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும். உதாரணத்திற்கு புகைப்பிடிப்பதை, 'செய்யேன்!' எனப் பக்குவமாய்ச் சொல்லும்போது மனம் அதன் இயல்புப்படி எதிர்திசையில் “செய்யாதே..." என்றே செயல்பட ஆரம்பிக்கும். மனம் விடுபட ஆரம்பிக்கும்.
உடலையும், மனதையும் அடிமைத்தனத்திலிருந்து எளிதாய் விடுவிக்கும் திறன் கொண்டது இந்தத் தியானம். ஒரு குருவின் உதவியோடு முறையாய்ச் செய்தால், சில நாட்களிலேயே 'புகைப் பிடிக்க அவசியமேயில்லை' என்ற அற்புதமான நிலை உங்களுள் எந்தக் கஷ்டமும் இல்லாமல் உருவாகி இருக்கும்.
தியானப்பீடத்தின் உயர்நிலை தியான முகாம்களிலும், சிகிச்சை முகாம்களிலும் இந்தத் தியானம் கற்றுத் தரப்படுகிறது.
கற்றுப் பலன் பெறுங்கள்.
நாத்திகன் முன்னாள் ஆன்மிகன்!
நாத்திகவாதமல்ல,
கடவுள் இல்லை என்பது.
காரணம்
கடவுள் இருக்கிறாரா - எனத்
தேடிய ஆன்மிகனின் தேடல்
நசுக்கப்பட்ட வாழ்வின் வளைவுப்பகுதியில்
மனம் சறுக்கியபோது - யாராலோ
கொடுக்கப்பட்ட கருத்தே
கடவுள் இல்லையென்பது.
வாழ்வில் வரும் அதிருப்திகளும்
அதிர்ச்சிகளும், தொடர்ந்தொருவரை
நசுக்க... நசுக்க...
நாத்திகனாகிறார் ஆன்மிகன்,
தான் ஆன்மிகன் என அறியும் முன்னே நாத்திகம் பிறந்து விடுகிறது.
மலர்ந்தால் போதும்
1. தியானம் செய்தால் உலகத்தையே மாற்றிவிடலாமா?
பிரபஞ்சத்தையே மாற்றிவிடலாம்.
2. ஆனால் நான் இன்னும் மாறவில்லையே?
நீங்கள் மாறவேண்டியதில்லை. மலர்ந்தால் போதும்.
3. மலர்வதென்றால்?
பிரபஞ்சத்தையே இயக்கும் சக்தி, புத்தி உங்களிடமும் இருக்கிறது. அதை மலர்த்துவதுதான் மலர்வதென்பது.
4. சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு சுதந்திரம் இல்லையே?
பிரபஞ்சத்தையே
இயக்கும் சக்தி, புத்தி
உங்களிடமும் இருக்கிறது.
அதை மலர்த்துவதுதான்
மலர்வதென்பது.
சும்மா விரும்பினால் சுதந்திரம்
வராது. விருப்பத்தைச் செயலாக மாற்றினால்
சுதந்திரம் பெருகும்.
பில்கேட்ஸ்ஸுக்கும், பில்கேட்ஸைப் போன்று மாற விரும்புபவர்களுக்கும் இருப்பது 24 மணி நேரம்தான்.
செயல்படுத்துபவர் சாதிக்கிறார். சுதந்திரத்தைப் பெருக்கிக்கொள்கிறார்.
விரும்புபவர் கனவு காண்கிறார். சுதந்திரம் தரவில்லையெனக் குறை சொல்கிறார்.
5. சுதந்திரம்?
அதை யாரும் தர மாட்டார்கள். நீங்கள்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. திருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் என்பது கட்டாயமான ஒன்றா?
திருமணத்திற்குப் பின்னும் அவசியம்தான்.
7. பிரம்மச்சரியம் என்றால்?
ஆண் பெண்ணைப் பார்த்து விலகி ஓடுவதும், பெண் ஆணைப் பார்த்து விலகி ஓடுவதும் அல்ல. இதையெல்லாம் கடந்தது.
8. கடந்தது என்றால்?
உடலளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பது பிரம்மச்சரியம் அல்ல.
மனதளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பதே பிரம்மச்சரியம்.
9. சலனம்?
யாராலும் எந்த உணர்ச்சியாலும் அசைக்கப்பட முடியாமல் இருக்கும் நிலையே, கிருஷ்ணரின் பிரம்மச்சரிய நிலை.

உடலளவில் சலனப்படுவதைக் கடந்து
இருப்பது பிரம்மச்சரியம் அல்ல. மனதளவில்
சலனப்படுவதைக் கடந்து இருப்பதே
பிரம்மச்சரியம்.
இதைத் தொட்டவர், திருமணம் ஆன பின்கூட சலனப்படாமல் இனிமையாக ஆழ்ந்து வாழ்ந்து கடந்து வருவார்.
இந்த நிலையைத் தொடாதவர், கட்டைப் பிரம்மச்சாரியாக வாழ்ந்தாலும்கூட சலனப்படுவார்.
இதுதான் கடக்கப்பட வேண்டும். இது எல்லோருக்கும் பொருந்தும்.
10. வம்பிழுப்பவர்களை என்ன செய்வது?
அவரோடு விளையாடுங்கள்.
11. கோபப்பட்டால்?
சிரியுங்கள்.
12. இன்னும் கொஞ்சம் கோபமாகி அடிக்க வந்தால்?
அங்கிருந்து ஓடிவிடுங்கள்.
13. இது என்ன வம்பில்போய் முடியும் போலிருக்கிறதே?
இதுவரை சொன்னது... வம்பல்ல. கிருஷ்ணரை மற்றவர்கள் வம்பிழுக்கும் போது அவர் செய்த லீலை.
14. கேட்க அருமையாயிருக்கிறது. செய்ய முடியுமா?
செய்ய முடியுமா? என்று பெரிய மனித
தோரணையில் கேட்காமல், செய்து பார்த்தால்
என்ன? என்று குழந்தையின் குதூகலத்தோடு
செய்து பாருங்கள்.
வெற்றி காண்பீர்கள்.
வம்பு கூட விளையாட்டாகும்.
திருமணத்திற்கு முன்
பிரம்மச்சரியம் என்பது
கட்டாயமான ஒன்றா?
திருமணத்திற்குப் பின்னும்
அவசியம்தான்.
தியானம்

நாம் ஒன்றுபோல் மற்றவரைப் பற்றிச் சொல்லும் வாக்கியம். “என்னை அவர் புரிந்து கொள்ளவில்லை” என்பதுதான்.
“He is not understanding me என்னால் இயன்றவரை எடுத்துச் சொன்னேன். ஆனாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்” என்று சொல்லும்போது, புரிந்து கொள்ளுங்கள், “அடுத்தவர் மாற வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதைப் போன்று, மற்றவரும் நாம் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்” என்று.
மற்றவர்களை மாற்ற வேண்டும் என்பதற்காக உபயோகிக்கும் சக்தியையும் புத்தியையும், நேரத்தையும், ‘தான் மாற வேண்டும் என்பதற்காக உபயோகிக்கும் மனிதன் மகானாக மாறுகிறார்.’
ஏனெனில், அடுத்தவருடன் செய்யும் வாதத்தை (Argument) விடவும், தனிமனித மாற்றமே (Transformation) மற்றவரை எளிதில் மாற்றும் சக்தி பெற்றது.
It is a chain reaction. A single man's transformation, transforms the whole world.
-Zen statement உங்கள் மாற்றம் உங்களுடன் நிற்காது.
அது ஒரு சங்கிலித் தொடரான செயல்முறை. தனி மனிதனின் உருமாற்றம், இந்த மொத்த உலகத்தையே மாற்றிவிடும். ஜென் வாக்கியம்.
இந்தக் கருத்தைத் தியானியுங்கள். அது உங்களுக்குள் முதலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
உங்களிடமிருந்து அன்புசக்தி, ஆனந்தசக்தி வெளிப்படத் துவங்கும்.
ஞானமடைவதுதான் மிச்சம்
காட்டுக்குள் வசிய சக்திகளைப் பெறுவதற்காக கடுந்தவம் செய்து கொண்டிருந்தார் அந்த முனிவர்.
சில சித்துக்களை கற்றுக் கொண்ட முனிவர் அதை வைத்து விளையாட ஆரம்பித்துவிட்டார்.
ஒருநாள், சாப்பிடுவதற்காக அவர் வைத்திருந்த உணவைக் காகம் ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
கண்விழித்துப் பார்த்த முனிவருக்குக் கோபம் தாளவில்லை.
"எவ்வளவு திமிர் இருந்தால் என் உணவில் வாய் வைப்பாய்" எனக் கோபங்கொண்டு, "எரிந்து சாம்பலாக" எனச் சொல்லி அந்தக் காகத்தை முறைத்துச் சபித்தார்.
அந்தக் கணமே காகம் எரிந்து சாம்பலாகியது!.
காகத்தின் மேல் வந்த கோபம்
தலைக்கேறியதால், அந்த உணவைச்
சாப்பிடாமலே எழுந்து ஊருக்குள் சென்றார்.
அம்மா!
உணவு
இருக்கிறதா?
கோபத்தில் சாப்பிடாததால் கொஞ்ச நேரத்திலேயே முனிவருக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. அருகேயிருந்த வீட்டு வாசலை அடைந்து, "பகவதி பிக்ஷாம் தேஹி" (அம்மா உணவு பிக்ஷை அளியுங்கள்) என சன்யாஸ மரபுப்படி பிக்ஷை கேட்டார்.
உள்ளேயிருந்த வீட்டுத் தலைவியின் குரல், "கொஞ்சம் பொறுத்திருப்பீர்" என வந்தது. முனிவர் பொறுமையிழந்து விட்டார்.
உடனே முனிவர் "அம்மா உணவு இருக்கிறதா? இல்லையா?" என்று கேட்டார்.
வீட்டுத்தலைவி, "இருக்கிறது. என் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறேன். முடிந்ததும் வந்துவிடுகிறேன்" என்றாள்.
'அவ்வளவு நேரமா!' என யோசித்த முனிவர், 'நான் முனிவர் வந்திருக்கிறேன். என்னைக் கொஞ்சங்கூட மதிக்காமல் இருக்குமளவுக்கு திமிர் பிடித்த இந்தப் பெண்ணை சாம்பலாக்கிவிட்டால் என்ன?' என யோசித்து முடிக்கவும், வீட்டுத் தலைவி வெளியே வரவும் சரியாயிருந்து.
வீட்டுத்தலைவி முனிவரைப் பார்த்து "என்னை என்ன காகம் என்றா நினைத்தாய்?" எனக் கேட்டதும், முனிவர் நடுநடுங்கிப் போனார்.
"சித்துவேலைகள் பல தெரிந்த என்னால்கூட அடுத்தவர்களின் மனத்தைப் படிக்க முடியாது.
ஆனால், இந்த வீட்டுப் பெண்ணால் என் மன ஓட்டத்தைப் படிக்க முடிந்தது என்றால்... இவர் சாதாரண பெண்ணல்ல என அவரின் காலில் விழுந்து வணங்கினார்.

ஆனந்தமயமான சக்திகளையும், மக்கள்
நன்றாக இருக்கட்டும் என்ற இனிமையான
உணர்வுகளையும் தொடர்ந்து வெளியிடும்
ஞானிகள்தான் பூமியைப் பாதுகாக்கும்
சக்திக் கேடயங்கள்.
முனிவர், “தாயே நீ யார்?” எனக் கேட்டார்.
வீட்டுத் தலைவி, “நீ உன் மனதை வைத்து மற்ற பொருட்களை எரிக்கும் வித்தை கற்றிருக்கிறாய். நான் என் மனதையே எரிக்கும் வித்தையைக் கற்றுத் தேர்ந்தவள்” எனச் சொன்னதும், முனிவருக்கு எல்லாம் புரிந்தது. மீண்டும் காலில் விழுந்து வணங்கினார்.
மனதையே எரித்தவர்தான் ஞானி.
அக்காலங்களில் ஞானிகள் சகஜமாக வாழ்ந்திருக்கிறார்கள். தான் ஞானி என்பதை உலகிற்குச் சொல்லாமலே வாழுமளவுக்கு ஞானிகள் பெருகியிருந்திருக்கிறார்கள்.
ஆனால் இன்று ஞானிகள் எப்போதோ பூக்கும் பூவாய் மாறிவிட்டார்கள். இது பூமிக்கு நல்லதல்ல.
ஆனந்தமயமான சக்திகளையும், மக்கள் நன்றாக இருக்கட்டும் என்ற இனிமையான உணர்வுகளையும் தொடர்ந்து வெளியிடும் ஞானிகள்தான் பூமியைப் பாதுகாக்கும் சக்திக் கேடயங்கள்.
ஞானிகளாகாமல், அறிவு பெருத்து, மனச்செருக்கு மிகுந்து வாழும் அந்த முனிவரைப் போன்ற மனிதர்கள் பூமிக்கே ஆபத்தானவர்கள்.
இது போன்ற அகங்காரம் மிகுந்தவர்கள், மக்களைக் கூட்டம் கூட்டமாக எரிக்கக்கூட தயங்கமாட்டார்கள்.
இவர்களிடமிருந்து தொடர்ந்து
வெளிப்படும் துர் சக்திகளும், கெட்ட
எண்ணங்களும் இயற்கை சீற்றங்களைக் கூட
உண்டாக்கும்.
இயற்கைத் தாயின் வயிற்றில் எட்டி
உதைப்பவர்கள், இது போன்ற சித்து வேலை
செய்பவர்கள்.
ஞானிகளாகாமல்,
அறிவு பெருத்து,
மனச்செருக்கு
மிகுந்து வாழும்
மனிதர்கள் பூமிக்கே
ஆபத்தானவர்கள்.
சித்து வேலை மட்டுமல்லாமல், அறிவை மட்டுமே பெருக்கிக் கொண்டே செல்லும் மனிதர்கள் கூட பூமித்தாய்க்குப் பங்கம் விளைவிப்பவர்களே!
"எங்கும் பொங்கும் இயற்கை சீற்றங்களைக் குறைக்கவும், பூமி சமநிலைக்கு வரவும், ஞானிகள் நிறைய உருவாக வேண்டும்" என்று கருத்தரங்கம் ஒன்றில் சொன்ன போது...
பார்வையாளரொருவர், "ஆம், சரியாகச் சொன்னீர்கள். நிறைய ஞானிகள் வரவேண்டும்" என்றார்.
"நிறைய வரவேண்டுமா?! எங்கிருந்து வருவார்கள்?
வானத்திலிருந்தா அந்த ஞானிகள் குதிப்பார்கள்!
உங்களுக்குள்ளிருந்துதான் அவர்கள் வரவேண்டும்."
தியானம்
"நீங்கள்தான் அந்த ஞானக் கூட்டம் எழுந்திருங்கள். எல்லாம் தயாராகி விட்டது. நீங்கள் ஞானமடைய வேண்டியது மட்டுமே மீதமிருக்கிறது" எனச் சொன்னேன்.

வானத்திலிருந்தா அந்த ஞானிகள்
குதிப்பார்கள்! உங்களுக்குள்ளிருந்துதான்
அவர்கள் வரவேண்டும். நீங்கள்தான் அந்த
ஞானக் கூட்டம் எழுந்திருங்கள். எல்லாம்
தயாராகி விட்டது.
சித்து வேலைகள் மனதைப் பாழாக்கும்.
பித்து வேலைகள் வாழ்வைப் பாழாக்கும்.
ஞானிகளாய் எழுந்து நிற்பதை விட்டு விட்டு, மனிதர்கள் செய்யும் எல்லா வேலைகளும் சித்து வேலைகளுக்குச் சமம்.
மனதுக்கே பித்துப் பிடிக்க வைக்கும் சித்து வேலையான தியானம், இன்றைய உலகின் அத்தியாவசியத் தேவை.
இந்த விழிப்புணர்வை நீங்கள் பெறுவதும், மற்றவர்களைப் பெற வைப்பதும், மாபெரும் தியானங்கள்.
இதைச் செய்யுங்கள். இது எல்லோருக்கும் நல்லது.
