ஆணுக்கும் பெண்ணுக்கும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உணர்வு ரீதியான
கவனிப்புத் தேவை
“பெண்களைப் போலவே, ஆண்களுக்கும் அந்த மூன்று நாட்கள் உண்டு” என நம்முடைய குடும்ப நலவாழ்வு முகாமில் (Family Counselling Program) - சொன்னபோது, எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
ஒரு குடும்பத்தலைவர் எழுந்து, “நமக்குமா?!” எனக் கேட்டார்.
“ஆமாம். ஆண்களுக்கும் உண்டு. தந்திர சாஸ்திரத்தில் வரும் ஆழமான இந்த ஒரு உடற்குறியியல் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். அது குடும்ப நிம்மதிக்கு பெரும் உதவியாயிருக்கும்”.
“குடும்ப நிம்மதிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”
“பெண்களின் மூன்றுநாட்கள் அந்தப் பெண்ணை மட்டும் பாதிக்கிறது. ஆனால், ஆணின் மூன்று நாட்கள், அவரையும் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கிறது.”
பெண்களின் மூன்றுநாட்கள்
அந்தப் பெண்ணை மட்டும்
பாதிக்கிறது. ஆனால்,
ஆணின் மூன்று நாட்கள்,
அவரையும் குடும்பத்தையும்
சேர்த்து பாதிக்கிறது.
“அப்படியா!” என ஆச்சரியப்பட்டார்.
“தந்திர சாஸ்திரத்தில் தீக்ஷை
பெறும்முன், ஆண்களின் அந்த மூன்று
நாட்களைக் கண்டுபிடிப்பதை ஒரு தியான
முறையாகத் தந்திருக்கிறார்கள்.”
“எங்களுக்கும் அந்த தியானத்தைக் கற்றுத் தருவீர்களா?”
“இந்த சொற்பொழிவின் முடிவில் அந்த தியானத்தைக் கற்றுக் கொள்ளலாம்.
பெண்களுக்கு நிகழ்வது, இன்றைய சமுதாயம் சொல்வது போல் தீண்டத் தகாத ஒன்றல்ல.
கண்களில் நீர் வருவது இயற்கை. காதுகளிலும், மூக்கிலும் அழுக்கு உருவாவதும் இயற்கை. இதைப்போல்தான் அந்த நிகழ்வும்.
அந்தக்காலத்தில் இருந்த ஆணாதிக்க சமுதாயம்தான், இந்த இயற்கையான நிகழ்வை தீட்டு எனச் சொல்லி, பெண் சமுதாயத்திற்குக் கொட்டு வைத்துவிட்டது.
அதோடு நிற்காமல், அவர்களுக்கும் அதே நிகழ்வு நிகழும் என்பதையும் மறைத்து விட்டார்கள்.”
“மறைத்து விட்டார்களா...?!”
“எந்த ஒரு பலசாலியையும், ஒரு சிறு குற்ற உணர்ச்சியை உருவாக்குவதின் மூலமாக ஒரு மூலையில் முடங்கி உட்கார வைத்துவிட முடியும்.
அதிகாரம் பெற்ற அதிபதிகள் தங்களின் வேலையாட்களை தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு டெக்னிக் இந்த குற்ற உணர்ச்சி.
அதேபோல், அப்போதிருந்த ஆணாதிக்கம், பெண்களை ஒட்டுமொத்தமாகத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக உருவாக்கியதுதான் அந்த நாட்களில் பெண்களை வீட்டைவிட்டு வெளியே இருக்கச் சொல்வது, யாரையும் தொடக்கூடாது எனச் சொல்வதெல்லாம்”.

பெண்களுக்கு நிகழ்வது இன்றைய சமுதாயம்
சொல்வது போல் தீண்டத் தகாத ஒன்றல்ல.
கண்களில் நீர் வருவது இயற்கை.
காதுகளிலும், மூக்கிலும் அழுக்கு
உருவாவதும் இயற்கை.
இதைப்போல்தான் அந்த நிகழ்வும்.
“இப்படிச் செய்வதால், பெண்களுக்கு இன்னும் கொஞ்சம் ஓய்வுதானே அதிகரிக்கும். அவர்களுக்கு அது ரெஸ்ட் டைம்தானே. ஆணாதிக்கம் அவர்களை அழித்தது ; அடக்கியது ; குற்ற உணர்ச்சியில் தள்ளியது எனச் சொல்ல வழியே இல்லையே”.
“ஆழ்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
உடல்ரீதியாக ஓய்வைத் தருவதாய் சொல்லி, மனரீதியாகக் குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிடுகிறார்கள்.
இதைத்தான் Socially accepted crimes எனக் குறிப்பிடுவார்கள்.
வீட்டைவிட்டு ஒதுக்கி வைப்பதாக மட்டுமல்லாமல், இறைவனிடம் இருந்து ஒதுக்கி வைப்பதுதான் மகா மோசம்.
பூஜை அறைக்குள் அப்போது நுழையக்கூடாது என அன்று சொன்னதில் இருந்து, அன்று நிகழ்ந்த தவறைக் கண்டுபிடிக்கலாம். எவ்வளவு சூட்சுமமாக அவர்களின் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவர அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் ”எனக் கண்டுகொள்ளலாம்.
ஒரு சனாதன ஞானியிடம், குடும்பப் பெண்ணொருவர், “பூஜை, குழந்தை, வேலை, பொருட்கள் என்று எல்லாவற்றிடமிருந்தும், அந்த நேரங்களில் ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்.
கடவுளை மனதளவில் அப்போது பூஜிப்பதில் தவறு ஏதுமில்லையா?” எனக் கேட்டபோது,
ஞானி, “அந்த நேரங்களில் பூஜையறைக்குள் வராதே எனச் சொன்னால் அது கடவுளல்ல.
கடவுளால் அப்படிச் சொல்ல முடியாது.
மீறிச் சொன்னால், அந்தக் கடவுளை
பூஜையறையை விட்டு வெளியே எடுத்து
வைத்து விடுங்கள்.
நிம்மதியாய் கடவுளை மனதளவில் பூஜியுங்கள். தப்பில்லை” எனச் சொன்னார்.
கடவுள் என்பதே உணர்வுதான்.
> அந்த நேரங்களில்
> பூஜையறைக்குள் வராதே எனச்
> சொன்னால் அது கடவுளல்ல.
> கடவுளால் அப்படிச் சொல்ல
> முடியாது. மீறிச் சொன்னால்,
> அந்தக் கடவுளை பூஜையறையை
> விட்டு வெளியே எடுத்து வைத்து
> விடுங்கள்.
ஆண்களைவிடப் பெண்கள் இந்த உணர்வில் ஆழ்ந்திருப்பவர்கள்.
அறிவில் ஆழ்ந்திருக்கும் ஆண்குலம், உணர்வில் ஆழ்ந்திருக்கும் பெண்குலம் ஆகிய இரண்டும், ஒன்றையொன்று புரிந்துகொண்டுவிட்டால், அங்கே சொர்க்கம் பிறந்துவிடும்.
புரிந்து கொள்ளாதபோது, அந்த இடமே நரகமாக இருக்கும். அப்படியிருந்த காலத்தில்தான், பெண்களின் இயற்கையான நிகழ்வைக் கண்டனப்படுத்தி, அந்த மூன்று நாட்களில் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துவது எனும் முறை வழக்கில் வந்துவிட்டது.
ஆண்களுக்கும் இதைப்போல் மூன்று நாட்கள் வரும் என்பதையும் மறைத்து விட்டார்கள்.
“ஏன் மறைத்தார்கள்?”
“அப்போதுதான் உன்னைவிட நான் உயர்ந்தவன் எனக் காட்டிக் கொள்ள முடியும்.
ஆண்களுக்கும் நிகழும் என்றால், எப்படி?
பெண்களுக்கு அது உடல்ரீதியானது.
ஆண்களுக்கு அது மனரீதியானது.
இந்தத் தியானத்தைச் செய்து பாருங்கள். உங்களாலும் இதைப் புரிந்துகொள்ள முடியும்” எனச் சொன்னேன்.

அறிவில் ஆழ்ந்திருக்கும் ஆண்குலம்,
உணர்வில் ஆழ்ந்திருக்கும் பெண்குலம்
ஆகிய இரண்டும் ஒன்றையொன்று
புரிந்துகொண்டு விட்டால், அங்கே
சொர்க்கம் பிறந்துவிடும்.
தியானம்

ஆண்களுக்குள்ளும் இயற்கையான சக்திச் சுற்றுகள் நிகழ்கின்றன.
தாந்த்ரீகத்தில், தீக்க்ஷை பெறும்முன் ஆண்களைச் சுய ஆராய்ச்சி செய்யச் சொல்வார்கள்.
அதாவது, ....
தொடர்ந்து 6 மாதங்களுக்கு உங்களின் சந்தியாநேர (இளம்மாலை நேர) உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் குறித்து கொண்டே வாருங்கள்.
பலநாள் உற்சாகமாயிருக்கும். சிலநாள் நடுத்தரமாய் இருக்கும். இன்னும் சிலநாள் மனம் உற்சாகமிழந்திருக்கும். அதில், மிகச் சரியாக, ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட அதே இடைவெளியில் தொடர்ந்து மூன்றுநாட்களும் மனம் உற்சாகம் இழந்திருக்கும். இது ஒரு சுற்றுப் போல தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இந்தப் பயிற்சியைச் செய்து, உங்களுக்கும் அதேமாதிரியான உடல்-மனச் சோர்வு மூன்று நாட்கள் வருகிறது என்பதைக் கண்டுகொண்டால்தான், பெண்களின் நிலை புரியவரும். அவர்களையும் நம்போல் மதிக்க ஆரம்பிப்போம்.
ஒருவர், இன்னொருவரின் உணர்வுகளை முழுமையாய் மதிக்கும் சொர்க்கம் உருவாக இதுபோன்ற அடிப்படைப் புரிந்து கொள்ளுதல்கள் நிகழ வேண்டும். இன்னொரு முக்கியமான டிப்ஸ். ஆண்கள் அந்த மூன்று நாட்களில் எந்தவொரு பெரிய முடிவுகளையோ, செயல்களையோ செய்யாதீர்கள். அது தோல்வியைத் தழுவச் செய்துவிடும்.
அந்த மூன்று நாட்களில்தான் ஆண், பெண் ஆகிய இருவரின் வாழ்வில் அதிக அன்பு, அதிக தியானம், அதிக கடவுள்தன்மை சேர்க்கப்பட வேண்டும். அப்போது உடல்-மனச் சோர்வு தாண்டி உணர்வுரீதியான ஆதரவும், கவனிப்பும் தேவை.
அன்பிற்குரியவர்கள் ஆண்கள்
வித்தியாசமான ஆசீர்வாதமொன்று உபநிஷத்தில் வருகிறது.
"பத்துக்குழந்தைகளுக்குநீதாயானபின்-உனக்குப்பதினோறாவது குழந்தையாவான் உன் கணவன்!" எனச் சொன்னார் முனிவர், ஆசீர்வாதம் பெறவந்த புதுத் தம்பதியரிடம்.
குறிப்பாய் புதுப்பெண்ணிடம் சொன்னார், "உன் கணவன், உனக்குக் குழந்தையாகாவிட்டால், நீ உண்மையான மனைவியாய், முழுமையாய் வாழவில்லை என்று பொருள். கணவனே குழந்தையாகுமளவு அன்பில் உயர்ந்து கொண்டேயிரு" என ஆசீர்வதித்தார்.
ஆணின் இயல்பே ஆளுமை! ஆளத் துடிப்பவன், தன்னுள் அன்பில்லாமல் துடிப்பவன்.
"பத்துக் குழந்தைகளுக்கு
நீ தாயான பின்-
உனக்குப் பதினோறாவது
குழந்தையாவான் உன்
கணவன்!". எனச் சொன்னார்
முனிவர், ஆசீர்வாதம் பெறவந்த
புதுத் தம்பதியரிடம்.
நரம்பியல் வல்லுனர்களின் (Neurologists) கூற்றுப்படி, "ஆண்களுக்கு இடது மூளை நன்றாக வேலை செய்யும். பெண்களுக்கு, வலது மூளை நன்றாக வேலை செய்யும். இடது மூளை அறிவு சார்ந்தது. தர்க்கம் சார்ந்தது. வலது மூளை உணர்வு சார்ந்தது. படைப்பாற்றல் மிக்கது". அதனால்தான், இயற்கையாகவே ஆண்களுக்கு அறிவு அதிகம், திறன் அதிகம். பெண்களுக்கு உணரும்திறன், அனுபவிக்கும் திறன் அதிகம்.
பெண்ணின் தாய்மை அவளுக்குள் அன்பு சக்தியாய் உறைந்திருக்கிறது.
பெண்ணின் அன்பு சக்தியின் வெளிப்பாடான, மென்மை, இரசனை, சிறு சிறு விஷயங்களிலேயே குழந்தை போல் சந்தோஷப்படுதல், மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல், கலையுணர்வு ஆகியன, தன்னுள் இருக்கும் பெண்மையை அடக்கிய ஆண்களிடம் குறைவாக இருக்கும். விளைவு கடினம், இறுக்கம், அதிகாரம், தவிப்பு.
தன்னுள் இருக்கும் பெண்தன்மையைச் சிறிதளவு பயன்படுத்திய ஆண், கலைஞனாகிறான்.
ஆணின் மனம் மிக உறுதியாயிருப்பதாய்க் காட்டும் கண்ணாடிகள் போன்றது. ஓர் எதிர்பாராத அடியில் சுக்கு நூறாகிடும் கண்ணாடிகள் அவை.
பெண், மனத்தளவில் ஆணைவிட மிக உறுதியானவள் என்பது மனோ ஆராய்ச்சியின் (Psycho Analysis) முடிவான கருத்து.
பலகாலமாய் பெண்களை அடக்கியதால், தன் சரிபாதிப் பகுதியான பெண்மையைக் காலங்காலமாய் அடக்கிவிட்டார்கள் ஆண்கள். அதனால், மென்மை அழிந்து கரடு முரடாகிவிட்ட ஆண், முதலில் குணப்படுத்தப்பட வேண்டும்.
ஆண் முழுமை பெறவேண்டும்.
"என்னிடம் முழுமையாய் அன்பு காண்பிக்காத என் கணவனிடம் நான் ஏன் முழு அன்பு செலுத்த வேண்டும்? நான் மாட்டேன்!" என ஜூ-மல்கியிடம் வெடித்தாள் அந்தப் பெண்.

> பலகாலமாய் பெண்களை அடக்கியதால் > தன் சரிபாதிப் பகுதியான பெண்மையைக் > காலங்காலமாய் அடக்கிவிட்டார்கள் ஆண்கள். > அதனால், மென்மை அழிந்து கரடு முரடாகிவிட்ட > ஆண், முதலில் குணப்படுத்தப்பட வேண்டும். > ஆண் முழுமை பெறவேண்டும்.
“உன் பேச்சிலிருந்து இரண்டு விஷயங்கள் சொல்ல முடியும். ஒன்று: உன் கணவன் முழுமையாய் அன்பு செய்வதில்லை. இரண்டாவது: உன்னால் முழுமையாய் அன்பு செலுத்த முடியும். ஆனால், உனக்கு அதில் விருப்பமில்லை” என்றார், ஜூ-மல்கி.
“ஆமாம்” என்றாள்.
“மூடப்பெண்ணே! உன் கணவன் முழுமையாய் அன்பு செலுத்துவதில்லை என்பது தவறு. அவனால் உன்னைப் போல் முழுமையாய் அன்பு செலுத்த முடியாது என்பதே சரி. அவன் கரடுமுரடானவன்.
முடியாதவன் செய்யாதது தவறா? முடிந்தவள் செய்ய மறுப்பது தவறா? எது பெரிய தவறு, சொல்...!” என்றார். ஜூ-மல்கி.
ஏதோ கோபத்தில் பேசினாலும், அந்த புத்திசாலிப் பெண், ஜூ-மல்கியின் வரிகளைப் புரிந்துகொண்டதால் தலை கவிழ்ந்தாள்.
“தெரிந்துகொள்! நீ அவனுக்கு மனைவியல்ல, குரு.”
முழு அன்பை உன் கணவன் மீது பொழிவதன் மூலமாக, “அன்பு என்றால் என்ன? முழுமையாய் அன்பு செய்வது எப்படி? எதையும் எதிர்பாராமல் அன்பு செய்வது எப்படி? என்ற வாழும் கலைகளை, நீ விரும்பினால், அவனுக்குக் கற்றுக்கொடு. முடிந்தவர்கள் தானே, முடியாதவர்களுக்கு உதவ வேண்டும்,” என்றார்.
ஆணின் வன்மையைத் தணிக்கத்தான்
பெண்ணிடம் மென்மையை வைத்தான்
இறைவன். ஆனால், பல இடங்களில் இன்று
நிலைமை தலைகீழாகிக் கொண்டிருக்கிறது.
“பெண் விடுதலை இயக்கம்
கருத்தரித்ததே ஆண் மனதில்தான். அதனால்தான்
ஆண்மன வாசனை வீசுகிறது. விடுதலை
பேசும் பல பெண்களின் வார்த்தைகளில், பெண்
விடுதலை என்ற பெயரில், பெண்கள் மேலும்
மன்னிக்கத்தெரிந்தவர்
அன்பு செய்யத் தெரிந்தவர்.
அன்பானவரால்
மன்னிக்காமல்
இருக்கமுடியாது.
மேலும் மென்மையாகித் தாயாகாமல், வன்மையானாலோ, கரடுமுரடானாலோ தெரிந்துகொள்ளுங்கள், அது ஆழ்மனதின் தந்திரம்”.
ஜூ-மல்கியிடம் பொறுமையிழந்து பேசிய பெண் போல் இருப்பவர்கள் செய்யும் செயல். அனைவருமே, தங்களையுமறியாமல் ஆழ்மன தந்திரத்தில் சிக்கிக்கொண்டவர்கள் தாம்.
“பாவம்! இப்படிச் சிறுபிள்ளை போல நடந்து கொள்கிறார்களே,” எனப் பரிதாபப்படும் மென்மையில்லாமல், “அவன் அப்படிச் செய்தால், நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன்” என வம்புக்கு நிற்கும் வன்மைமிகு சண்டைக்கோழிகள் அதிகமானால் உலகம் தாங்காது.
இயேசுநாதரிடம் ஒருவர் கேட்டார், “ஒருவன் தவறுசெய்தால், மன்னிக்கச் சொல்கிறார்கள். அதுசரி, ஆனால் மீண்டும் அவன் அதேமாதிரி தவறு செய்தால், அவனை என்ன செய்வாராம்?” எனக் கேட்டார்.
கேள்வி கேட்பவரின் உள்ளார்த்தத்தை உடைத்துத் தூள் தூளாக்கியது இயேசுவின் பதில்... “ஒருமுறையல்ல, ஏழு, எழுபது முறைகள் (7 x 70) மன்னி” என்றார்.
மன்னிக்கத்தெரிந்தவர் அன்பு செய்யத் தெரிந்தவர். அன்பானவரால் மன்னிக்காமல் இருக்கமுடியாது.
கரடுமுரடான ஆண் அன்பிற்குரியவன். மென்மை குறைந்து வன்மை மிகுந்த எல்லாருமே அன்பிற்குரியவர்கள்.
இவர்களுக்கு அன்பு ஓர் மருந்து! இது போன்ற ஆண்கள், அன்பை மழைபோல் பொழியும் ஒரே ஒரு பெண்மையை, தங்கள் வாழ்வில் சந்தித்தாலே போதும் - அவர்களின் பெரும்பாலான மனக்காயங்கள் குணம் பெறும்.

கரடுமுரடான ஆண் அன்பிற்குரியவன்.
மென்மை குறைந்து வன்மை மிகுந்த
எல்லாருமே அன்பிற்குரியவர்கள்.
அவர் புதுப்பிறவியெடுப்பார். இது ஒரு முழுப்பெண்ணால்தான் முடியும்.
முழுப்பெண், எல்லோருக்கும் தாய்.
ஆண்கள் எல்லாரும் முழுமையாய் அன்பு செய்யப்பட்டு, பெண்கள் எல்லாரும் முழுமையாய் மதிக்கப்பட்டால்....
Book of jew prayer என்ற புத்தகத்தில் வரும், யூதப்பிரார்த்தனை “ஓ பிதாவே: தம்பதியரின் மகிழ்ச்சி கீதங்களால், கொண்டாட்டக் கூச்சலால் நகரம் நிரம்பி வழியட்டும்.” என்று உள்ளது. அப்பொழுது இல்லத்தில் நிஜமாக மகிழ்ச்சிக் காற்று வீசும்.
“எப்போதோ வாங்கும் தங்கப்பதக்கத்திற்கு,
சில வீராங்கனைகள் நாட்டுக்குப் போதும்.
வீட்டுக்குத் தேவை, பெண்கூட அல்ல, பூரணமான தாய்!”
மகா வாக்கியம்
அன்பு செய்தல் உங்களின் இயல்பு.
பெண்களே! அன்பின் வள்ளலாகுங்கள்.
உங்களினுள் இருக்கும் ஆண்தன்மை சந்தோஷமடையும். காலங்காலமாக உங்களினுள் அடக்கப்பட்ட ஆண் குணாதிசயங்கள் சுதந்திரம் பெறும். பெண் விடுதலை நிகழும்.
அன்பு செய்தல் உங்களின் இயல்பு.
இப்போது செய்யும் அன்பு போதாது. அதே அன்பைப் பலமடங்காக்குங்கள். இல்லம் கோயிலாகும். அன்பைப் பெறுபவரைவிட, செய்பவரே, அதிக மகிழ்ச்சியையும், அருமையான வளர்ச்சியும் பெறுவார்கள்.
அன்பைத் தன்னுள் சேர்க்கச் சேர்க்க பெண்மட்டுமல்ல, ஆணும் முழு ஆணாவான்.
அன்பு அதிகம் கொடுத்தால், என் கணவர் அதைத் துஷ்பிரயோகம் செய்கிறார். அத்துமீறி அடிமையாக்க முயற்சிக்கிறாரே, என்ன செய்ய? பார்வதி, புதூர்
கலில் ஜிப்ரானின் அருமையான பாடல் வரி ஒன்று...
“அன்பில், உங்கள் இதயத்தையே கொடுங்கள். ஆனால்,அவர்கள் அதைப்பிடித்து வைத்துக் கொள்ளும் வகையில் அல்ல!.”
வெளியிலிருந்து பார்க்க, உறைந்த பனிபோல் கடினாமயிருப்பவர்கள் தான் ஆண்கள். அவர்களுக்குள் அன்பென்னும் இளஞ்சூடு குறைந்ததால், உறைந்து விட்டார்கள். கடினமாகத் தெரிகிறார்கள்.
எந்தப் பனியும், இளஞ்சூடால் உருகவே செய்யும். சில நேரங்களில், கொஞ்சம் காலம் பிடிக்கலாம். அவ்வளவே.
உங்கள் கேள்வியே, நீங்கள் பொறுமை இழந்துவிட்டீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
பொறுமை அன்பின் மிக முக்கியமான அங்கம்.
புத்திசாலித்தனம் அன்பின் அடுத்த முக்கியமான அங்கம்.
உங்கள் கணவர் உங்களை அடிமைப்படுத்தும்போதும், அதிகாரம் செய்யும்போதும், 'நழுவும் மீனில் நழுவும் மீனாக' தப்பிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
அமைதியாயிருங்கள்.
அது ஏமாற்றுதலல்ல.
காப்பாற்றுதல்.
இது அன்பு விளையாட்டு.
மகிழ்ச்சி தரும் விளையாட்டு. மூர்க்கம் தணிந்து அவர் சும்மா இருக்கும் எல்லா நிமிடங்களையும் அன்பு பொழியும் சிகிச்சை நேரமாக்குங்கள்.
மூர்க்கமாகும்போது, அவர் மேல் பரிதாபப்பட்டு அமைதியாக இருப்பது, "என்ன நடந்தாலும் நான் அன்பு செய்வேன்" என்ற தாய்மைக் குணம் மலரும் போது சாத்தியமாகும்.
மூர்க்கக் குழந்தைக்கு அன்பு உணவளியுங்கள். குழந்தை மனிதனாகும். நீங்கள் தாயாவீர்கள். வீட்டில் மகிழ்ச்சிக் காற்று வீசும்.
இனி காலம் பெண்மையின் கையில்
தியானச் சொற்பொழிவொன்றில் பெண்மணியொருவர் கேள்வி பதில் நேரத்தில் “உங்களைப் பொறுத்தளவிற்கு யார் புனிதர்?” எனக் கேட்டார்.
“நீங்கள்!” என்ற ஒற்றை பதிலில், அவர் ஆடிப்போனதைப் பார்க்க முடிந்தது.
சொற்பொழிவு முடிந்தபின் வந்து, “தான் ஏன் புனிதர் அல்ல” என விலாவாரியாகப் பேசி முடித்தபின்தான் அமைதியானார்.
‘தான் புனிதர்’ என்ற உண்மையை உடனடியாக ஏற்றுக்கொள்ள, எவருமே தயாராக இல்லை. ஏன்?
பெண்மை மரியாதைக்குரியது.
அதன் மென்மை போற்றுதலுக்குரியது.
அதன் எளிமை பூஜைக்குரிய பூ!
வாழ்க்கை சாஸ்திரம் வகுத்தவர்கள் சொல்லும் அழகான ஒரு கருத்து இதோ...
“பெண்மையும், பெண்மையும் சேர்ந்து வாழுமிடம் சொர்க்கம்! நந்தவனம்!
பெண்மையும், ஆண்மையும் சேர்ந்து வாழுமிடம் வீடு.
‘தான் புனிதர்’
என்ற உண்மையை
உடனடியாக
ஏற்றுக்கொள்ள,
எவருமே தயாராக
இல்லை.
ஆண்மையும், ஆண்மையும் சேர்ந்து வாழுமிடம் நரகம். போர்க்களம்!”
உலகில் உடலெடுத்து வாழும் எல்லா மனிதர்களும் புனிதர்களே!
ஒவ்வொரு புனிதருமே ஆண், பெண் கலவை.
மனிதருக்குள் பாதி தாய், பாதி தந்தையாய் கலந்து செய்யப்பட்ட செல்களே வலம் வருகின்றன.
எவரும், தனி ஆண், தனி பெண் என அழைக்கப்பட முடியாத அளவுக்கு முழுமையான புனிதர்கள்.
மருத்துவம்கூட ஆண், பெண்ணைப் பிரிக்கச் சிரமப்படுகிறது. மனிதர்களின் அடிப்படையான 46 குரோமோசோம்களில், எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன, ஆணுக்கும், பெண்ணுக்கும்!
46 ஆவது குரோமோசோம் ‘X’ என்றால் ‘சிசு’ பெண் உடலெடுக்கிறது. அது ‘Y’ என்றால் ஆண் உடலெடுக்கிறது. வெளியே பார்க்க ஆணாக இருப்பதால், அவரை பெண்ணிலிருந்து முற்றிலும் மாறானவர் என அறிவிக்க முடியாது. 1% ஆண்தன்மை அதிகம் பெற்ற புனிதர் அல்லது மனிதர் எனச் சொல்லலாம்.
அதேபோல் பெண்ணும் 1% பெண்தன்மை அதிகம் பெற்ற மனிதர் என அழைக்கப்படலாம்.

பெண்மை அவ்வளவு பெரியசக்தி. படைப்பாற்றல் மிக்கது. அதனால்தான் எல்லாப் படைப்புக்கும் காரணமாய் பரத்தில் இருக்கும் சக்தியைப் ‘பராசக்தி!’ என அழைக்கின்றனர். பராசக்திக்குத் தாய் அந்தஸ்து தந்திருக்கின்றனர்.
எளிமை, மென்மை, பெண்மை ஆண்களுக்குள்ளும் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களால் தான் காவியங்கள் படைக்க முடியும்.
காரணம், பெண்மை அவ்வளவு பெரியசக்தி. படைப்பாற்றல் மிக்கது. அதனால் தான் எல்லாப் படைப்புக்கும் காரணமாய், பரத்தில் இருக்கும் சக்தியைப் 'பராசக்தி!' என அழைக்கின்றனர். பராசக்திக்குத் தாய் அந்தஸ்து தந்திருக்கின்றனர்.
சராசரி ஆண்தன்மை என்பது நேர்மாறானது. அது முரட்டுத்தனம், ஆளுமை, ஆண்மையின் தொகுப்பு.
வெறும் ஆண்மை பாலைவனம். அதில் பெண்மைக் குணம் வளர்ந்தால் அது நீர்த்தடாகமாக மாறிப்போகும்.
அதேபோல் பெண்மைக் குணம் பெண்ணில் குன்றினால் நீர்த்தடாகம் வற்ற ஆரம்பித்து விடும்.
திருமணத் தம்பதியரில்... பெண்மை மிகுந்த பெண்ணுக்கும், பெண்மை சிறிது மலர்ந்த ஆணுக்கும் திருமணம் நிகழ்ந்தால், அந்த வீடு சொர்க்கமாக இருக்கும். அவர்களைப்போல் வாழ்க்கையை அனுபவித்தவர்கள், அவர்கள் மட்டுமே இருப்பர்.
வெறும் பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணமானால் அந்த வீடு வீடாக இருக்கும்.
வாழ்க்கையைக் கொண்டாடி மகிழத் தேவையான எளிமையும், மென்மையும் வற்றியவர்களால் என்ன கூத்தாட முடியும்?. அவர்களுக்குத்தான் வாழ்வு சலிப்புத் தட்டிவிடும்.
மகாவாக்கியம்
மனவேதனைகளை மாற்றியமைத்து அரவணைக்கும் சக்திபெற்றது பெண்மை.
அரவணைப்பு
எட்டுத் திசைகளிலிருந்தும்
எதிர்பார்க்கப்படும் பூ.
யாரோ வருவார், எப்படியோ
கிடைக்கும் என்றே
காலம் தள்ளுகின்றனர் பலர்.
பெண்மை
மாக்களையும்
மக்களாக்கும்
கள்ளிகளையும்
மல்லிகளாக்கும்
மனப்புண் வரை
தம் மருத்துவ குணத்தைப்
பாய்ச்சும் பண்புடையது.
அரவணைப்பீர்.
அரவணைக்கத் தெரிந்தவர்,
ஆணாக இருந்தாலும்,
அவர் பெண்ணே!
அவர் ஒரு தாயே! ஐயமில்லை.
அரவணைக்கத் தெரியாதவர்,
பெண்ணாகவே இருந்தாலும்,
அவர் பெண்ணல்ல!
பூமா தேவி உடலில்,
இரத்தத் துளிகளைத் தெளித்து
வரலாற்றுக் கோலம் போட்டிருக்கிறது,
போர்கள், யுத்தங்கள்.
அடவாடித்தனங்கள், வன்மைகள்.
பூமா தேவி மீது...
அன்பெனும் மலர்கள் தூவி, அரவணைப்பெனும் வேலி பாவித்து, ஆனந்தத் தோட்டம் வரும் காலம் கனிந்து விட்டது.
எதிர்கால ஆனந்தத் தோட்டத்தின் அரியணையை அரசாளப்போகிறவர்கள் நிச்சயம் மென்மை மிகுந்தவர்களே.
மென்மை மிக... பெண்மை குறையாதிருக்குமளவுக்காவது முயற்சி செய்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நிறைய தவறுகளைச் செய்கிறவளாக என்னை நான் உணர்கிறேன். திருந்தவழி? -பூஜா, குரங்குச்சாவடி.
திருமதி. பூஜா உங்களின் கடிதம் படித்தேன். சராசரி குடும்பப் பெண்ணுக்குரிய எல்லா கடமைகளைச் செய்தும், ஒழுக்கமான பெண்ணாக இருந்தும், தவறுகள் செய்வதாகவே நீங்கள் உணர்வது - விசித்திரமானதல்ல! சாதாரணமானதுதான்.
ஒரு குட்டி ஜோக்குக்கு சில வினாடிகள் மட்டுமே சிரிப்பீர்கள். நல்ல ஜோக்காக இருந்தால் வினாடிகள் நிமிடங்களாகும். உங்களோடு சம்பந்தப்பட்ட ஜோக்காக அந்த நிகழ்வு இருந்துவிட்டால், அதை நினைத்து, நினைத்துச் சிரிப்பீர்கள்.
பஸ்ஸில், ரோட்டில், வகுப்பில் என எந்த இடத்தில் ஞாபகம் வந்தாலும் அந்த ஜோக்கை நினைத்துச் சிரித்து விடுவீர்கள். இப்படிச் சிரித்து ஆசிரியரிடம் வகுப்பில் மாட்டிக்கொண்டவரைப் பார்த்திருப்பீர்கள்.
நடந்து முடிந்ததை மீண்டும் மீண்டும் எடுத்து அசை போட்டுச் சுகம் காண்பது மனதின் இயல்பு. அசைபோடுவது மனதுக்குச் சுகம். அசைபோடும் போது வரும் சிரிப்பு உங்களுக்குச் சுகம்.
நடந்து முடிந்தது, மிகப்பெரிய சந்தோஷகரமான விஷயமா, இல்லை துக்ககரமான விஷயமா என மனம் வேறுபடுத்திப் பார்க்காது. அதற்கு அசைபோட ஏதாவது வேண்டும். அவ்வளவுதான் அது எதுவாக இருந்தால் என்ன?
உங்கள் கதையில், நீங்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்வதாக நினைக்கக் காரணம், குற்ற உணர்ச்சி. சிறுவயதில் ஏதோ ஒரு சூழ்நிலையில் குற்ற உணர்ச்சிக்குள் ஆழமாக அமிழ்த்தப்பட்டிருக்கிறீர்கள்.
நல்ல, கெட்ட உணர்ச்சிகளின் செறிவு பொறுத்து, அது மனதில் திரும்பத் திரும்ப அசை போடப்படும் காலம் அதிகரிக்கும். உங்களின் மனதை அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட வைக்கவேண்டும். விடுபட்ட அடுத்த கணமே உங்களின் பிரச்சினை பறந்துவிடும்.
ஆண் சுதந்திரம்
* பெண்கள் ஞானமடைய முடியுமா?
பெண்கள் ஞானமடைய முழு தகுதி வாய்ந்தவர்கள். சொல்லப் போனால், ஓர் ஆணைவிட பெண் ஞானமடைவது எளிது.
* அப்படியென்றால், ஆண் ஞானிகள்தான் அதிகமிருக்கிறார்கள். பெண் ஞானிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியல்லவா இருக்கிறது. மனித வரலாற்றில் ... ஏன் இப்படி?
இரண்டு காரணங்கள்.
ஒன்று : பெண்களுக்கு முழு சுதந்திரமளித்த காலக்கட்டங்கள் வரலாற்றில் மிக மிகக் குறைவு.
பெண்கள் ஞானமடையத்
முழு தகுதி வாய்ந்தவர்கள்.
சொல்லப் போனால்
ஓர் ஆணைவிட பெண்
ஞானமடைவது எளிது.
அடுத்து : பெண்கள் ஞானம் நோக்கி
வாழ்வைத் திருப்ப வாய்ப்பில்லாததால்,
ஞானம் அடைவதற்கான நுட்பங்கள்
எல்லாமே ஆண்களுக்கு மாத்திரமே
வடிவமைக்கப்பட்டுவிட்டது.
* பெண்கள் ஞானமடைவது இனி சாத்தியமா?
சாத்தியம்தான்.
- உண்மையில் பெண் மனம் ஆழமானதுதானா?
ஆண் மனமும் ஆழமானதுதான்.
- ஆண், பெண் என்பதெல்லாம் வெறும் உடல்ரீதியான வேறுபாடு மட்டும்தானா? இல்லை மனரீதியான வேறுபாடும் உண்டா?
உணர்வுரீதியான வேறுபாடும் உண்டு.
- என்ன இது, புது குண்டாக இருக்கிறதே........?
ரொம்ப பழைய உண்மைதான். நாம்தான் மறந்துவிட்டோம்.
- உணர்வு, மனம், உடல் என்ற மூன்று தளத்திலும் ஆண்-பெண் வேறுபட்டு இருக்கும்போது, எல்லோருக்கும் ஒரே தியானங்களைச் செய்யச் சொல்வது சரியா?
கர்ப்பிணிப் பெண்களுக்காக, பிரத்யேகமான தியானமுறைகள் இருக்கின்றன.
அதேபோல் சிறுகுழந்தைகள், படிப்பவர்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தனித்தனி தியான முறைகள் உண்டு.
நாங்கள் பொது தியான முகாம்களில், பொது மக்களுக்கான தியான முறைகளையே கற்றுத் தருகிறோம்.
- பெண்ணின் சிறப்பு என்ன?
அவளின் இனிமை.

> ஆண், பெண் என்பதெல்லாம் வெறும்
> உடல்ரீதியான வேறுபாடு மட்டும்தானா?
> இல்லை மனரீதியான வேறுபாடும் உண்டா?
>
> உணர்வுரீதியான வேறுபாடும் உண்டு.
- இனிமை என்றால்....?
பெண்ணின் மென்மை,
பெண்ணின் கலைநயம்,பெண்ணின் குதூகலம் ஆகியவற்றை எந்தச் செயலில் சேர்த்தாலும், அச்செயலில் கொண்டாட்டம் ஒட்டிக் கொள்ளும். ஆனால், பெண்ணின் இனிமைத்துவம் மலரத் தேவையான முழு சுதந்திரத்தை சமூகம் தராததால் ... மொத்த சமூகமுமே கொண்டாட்டம் எனும் இனிய பரிமாணத்தை இழந்துவிட்டிருக்கிறது.
- ஓர் இனிய சமுதாயம் அமைய, பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்தால் போதுமா?
இல்லை. ஆணுக்கும் கிடைக்க வேண்டும்.
- ஆணுக்குச் சுதந்திரமா?
ஆம். ஆண் சுதந்திரம் பெற வேண்டும்.
- விளக்கமாகச் சொல்லுங்கள்
ஆணுக்குத் தேவையான இனிமையும், ஆறுதலும் பெண்ணிடமிருக்கிறது.
பெண்ணுக்குத் தேவையான பாதுகாப்பும், ஆதரவும் ஆணிடம் இருக்கிறது.
ஆணின் பிரச்சினை ஆசை; பெண்ணின் பிரச்சினை பயம்.
பயம் என்ற ஒன்றே அறியாத
அளவுக்கு பாதுகாப்பையும்
சுதந்திரத்தையும்
தரும்போதுதான், ஒரு
பெண்ணின் இனிமைத்துவம்
மலர்கிறது.
பெண்ணின் மீதான ஆதிக்கத்தை
மட்டுமே விலக்கிக் கொள்வதால்
சுதந்திரம் நிகழாது. பெண் மலர மாட்டாள்.
பயம் என்ற ஒன்றே அறியாத
அளவுக்கு பாதுகாப்பையும்,
சுதந்திரத்தையும் தரும்போதுதான், ஒரு
பெண்ணின் இனிமைத்துவம் மலர்கிறது.
இனிமைத்துவம் மலராதவரை ஆணின் பிரச்சினையான ஆசைகள் பூர்த்தியாவது சாத்தியமில்லை. ஆணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்காது.
ஆண் சுதந்திரம் பெற, பெண் சுதந்திரம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகிறது.
- ஆணைவிட, பெண் திடமானவள் என்கிறார்களே... அது உண்மையா?
உடலளவில் ஆண் திடமானவன் ; உணர்வளவில் பெண் திடமானவள்.
உடல்பலத்தைவிட, உணர்வு பலமே முக்கியம் என்பதால்தான், ஆணைவிட, பெண் திடமானவள்.
- பெண் ஞானமடைய, ஆணின் உதவி தேவை என்கிறார்களே... அதுபற்றிச் சொல்லுங்கள்?
ஞானி குருட்ஜிஃஃப் சொன்னக் கருத்தைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்.
- ஆமாம்.
பெண் கொடி ; ஆண் கொடிமரம்.
பெண், உணர்வுப் பிரவாகம். பக்திப் பிரவாகம். பக்தி உணர்வில் பழுத்தவர்கள்.அவர்கள் ஞானமடைய, தியானம்கூட தேவையில்லை. அவர்களின் பொங்கும் அன்பே போதுமானது.
ஒரு மீரா, ஓர் ஆண்டாள், கிருஷ்ணனை மையமாய் வைத்து ஞானமடைவது வெகு எளிது.

உடலளவில் ஆண் திடமானவன் ; உணர்வளவில் பெண் திடமானவள்.
உடல்பலத்தைவிட, உணர்வு பலமே
முக்கியம் என்பதால்தான், ஆணைவிட,
பெண் திடமானவள்.
ஆணைப்போன்று பெண்ணால் கடுந்தவங்களிலும், தியானங்களிலும் ஈடுபடுவது சாத்தியமில்லை; தேவையும் இல்லை.
பக்தி மார்க்கமே பெண்களுக்குச் சிறந்தது.
பக்தி மார்க்கத்தில், தியான மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவரைப் போன்று, தனி கொடிமரமாய் நிற்க வேண்டிய அவசியமில்லை. அப்படி நிற்கவும் முடியாது.
பக்தி உணர்வு படர, அன்பு படர, ஞானகுரு எனும் கொடிமரம் தவிர்க்க முடியாதது. மீராவுக்கும், ஆண்டாளுக்கும் கிருஷ்ணர் இல்லாமல் ஞானம் சாத்தியமில்லை. இந்த ஆழமான உண்மையைத்தான் ஜியார்ஜ் குருட்ஜீஃப் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.
* ஆண, பெண் என்ற இருவரில் யார் உயர்ந்தவர்?
கேள்வியே தவறு.
ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவ்வளவே.
* ஆண் சுதந்திரத்திற்கும் பெண் சுதந்திரத்திற்கும் ஒரேயொரு தீர்வு சொல்லுங்கள்?
தியானம் செய்யுங்கள்.
* பெண்களுக்குத் தியானத்தைவிட, பக்தியே சிறந்தது, போதுமானது என சொன்னீர்களே?.
உண்மைதான். ஆனால், பெண் இன்னும்
பெண்ணாக மாற பல காரியங்கள் செய்ய
வேண்டி இருக்கிறது.
பெண் சேர்த்து வைத்திருக்கும் பல
ஆழ்மனப் பிரச்சினைகளிலிருந்து விடுபட
வேண்டும். சுதந்திரம் பெற வேண்டும்.
ஆணும், பெண்ணும்
இருவருமே
தனித்துவம்
வாய்ந்தவர்கள்.
ஆழ்மன ஆதிக்கத்திலிருந்து ஒரு பெண் விடுபடாதவரை... கிருஷ்ணரைப் போல் பூரண சுதந்திரமளிக்கும் ஆண்களின் சமுதாயம் உருவானால்கூட, அந்த பெண்ணால் தன் சுதந்திரத்தை உணர முடியாது. எனவே. அந்தப் பெண்ணே அந்தப் பெண்ணுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்.
அதற்கு தியானம் மாபெரும் உதவியாக இருக்கும்.

# தியானம்
* ஆண்-பெண் கடந்த நிலை என்றால் என்ன?
அது அர்த்தநாரி நிலை.
கடவுள் நிலை.
ஞானநிலை.
* இன்னும் விளக்கமாய் சொல்லுங்கள்? ஆண், பெண், அலி என்ற உணர்வுகள் இருக்கும்வரைதான், நான் ஒரு மனிதப் பிறவி என்ற உணர்வு இருக்கும்.
இந்த உணர்வுகளைக் கடப்பதுதான் ஞானம்.
அதற்கு முதற்படியாய் உதவுவது தியானம்.
இந்தச் சுதந்திரம்,
ஆண் சுதந்திரத்தையும்
பெண் சுதந்திரத்தையும்விடப் புனிதமானது.
அதன் பெயர் மனித சுதந்திரம்.
நீங்கள் ஆணாயிருந்தாலும், பெண்ணாய் இருந்தாலும் உங்களின் இறுதி இலக்கு மனித சுதந்திரம்தான்.
இந்த சுதந்திரம் பெறுவதைப் பற்றி ஆழமாய் தியானியுங்கள்... பெண் சுதந்திரம், ஆண் சுதந்திரம் என்பதெல்லாம் கடுகாய்விடும்.
எளிதாய் அவற்றை அடைந்து, அடுத்த நிலைக்குள் ஒய்யாரமாய் நடக்க ஆரம்பிப்பீர்கள்.
