இளைஞர்களுக்காக
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சக்திக் களஞ்சியம் நீங்கள்
உங்களுடைய இலட்சியங்களை முழுமையாக அடைவதற்கான சக்தியும், புத்திசாலித்தனமும் உங்களிடம் முழுமையாக இருக்கின்றதா?
உங்களுடைய பதில் - 'ஆம்' என்றாலும், 'இல்லை' என்றாலும் உண்மை ஒன்றே...
எல்லோரிடமும், எல்லாவற்றையும் சாதித்துக்காட்டும் புத்திசாலித்தனமும், சக்தியும் 100% இருக்கின்றது.
இதில் சிலர் 27%, சிலர் 5%, சிலர் 10% என்ற அளவில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்த அளவுகளே உங்களின் சாதனையின் அளவை நிர்ணயிக்கின்றன. இந்த அளவை அதிகரிக்க உதவும் கல்வியே வாழ்வியல் கல்வி.
★ "வேலையில்லாதவன் மூளையில்லாதவன்
நிம்மதியில்லாதவன் இதயமில்லாதவன்"
- பாரசீகப் பழமொழி
சாதித்தவர்கள் சாக்குப் போக்குச்
சொல்வதில்லை. சாக்குப்போக்குச்சொல்லித்
திரிபவர்கள் சாதித்ததில்லை... எப்போதும்!
எல்லோரிடமும்,
எல்லாவற்றையும் சாதித்துக்
காட்டும் புத்திசாலித்தனமும்,
சக்தியும் 100%
இருக்கின்றது.
இவ்வுண்மை உள்ளுலகிற்கும் பொருந்தும், வெளியுலகிற்கும் பொருந்தும்.
உங்களின் இலட்சியம் எதுவானாலும், அதை அடைய இயற்கை உங்களுக்கு முழு அனுமதியளித்திருக்கின்றது.
மூளையை முடுக்கிவிடத் தெரிந்தவர்களுக்கு, சாதனை என்பது கால் தூசுக்குச் சமம்.
இவர்கள் வேலை வாய்ப்புகளைத் தேடி அலையமாட்டார்கள். வரும் வாய்ப்புகளை எல்லாம், வேலை வாய்ப்புகளாய் மாற்றிக் கொள்வார்கள்.
உங்களின் இன்றைய முயற்சியைத் தள்ளிப்போட மனம் சொல்லும் சாக்குப் போக்குகளை மதிக்காதீர்கள். சாக்குப் போக்குகளைத் தாண்டி, மூளையை முடுக்கிவிட ஆரம்பியுங்கள்... சாதனை உங்களைத் தேடி வந்து சாமரம் வீசும்.
★ தியான சொற்பொழிவொன்றில் ஒருவர், "நிம்மதி இகத்தில் காலியாகி விட்டதே, ஏன்?" எனக் கேட்டபோது, "உங்கள் மதி அகத்தில் போலியாகிவிட்டதே காரணம்" என்றோம்.
"இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்," எனக் கேட்டுக் கொண்டதும் சொன்னோம்...
"இரண்டு உண்மைகளைக் குறிப்பிட விரும்புகிறேன்...
1. யாரும், யாருடைய நிம்மதியையும் கெடுக்க முடியாது.
2. யாரும், யாருக்கும் நிம்மதியைத் தரவும் முடியாது.
நிம்மதி, என்பது இதயப்பூர்வமாக வாழ்பவருக்கு இறைவனளிக்கும் பரிசு.

உங்களின் இன்றைய முயற்சியைத் தள்ளிப்போட மனம் சொல்லும் சாக்குப் போக்கு களை மதிக்காதீர்கள். சாக்குப் போக்குங்களைத் தாண்டி, மூளையை முடுக்கிவிட ஆரம்பியுங்கள்... சாதனை உங்களைத் தேடி வந்து சாமரம் வீசும்.
இதயப்பூர்வமாக வாழ்த்தெரியாதவரே, நிம்மதியை வெளியே தேட ஆரம்பிப்பார். பின், அது கிடைக்கவில்லை என நொந்து கொள்வார். மதி போலியானதால் வரும் ஒரு பக்கவிளைவே நிம்மதியின்மை," எனச் சொன்னேன்.
"இதனால்தான் நான் நிம்மதியற்றிருக்கிறேன், இவர் என் நிம்மதியைக் குலைக்கிறார்,"
"அது கிடைத்தால், இது நடந்தால் நான் நிம்மதியாயிருப்பேன்," என மனிதர்கள் சொல்லும் எல்லா புலம்பல் வார்த்தைகளும் மனதின் சாக்குப்போக்குகளே.
புலம்பல்களைத் தாண்டி புதுத்தெம்போடு "என் நிம்மதிக்கு நானே பொறுப்பு" என உணர்வு பொங்க செயல்படத் துணிந்து விட்டால்... நிம்மதி கைக்கெட்டும் தூரத்துக்குக் குனிந்து விடும்.
⋆ ஹஸிப் ஞானியிடம், "சாதனை மிகச் சாதாரணமானது எனச் சொன்னீர்களே. அது எனக்குக் கூடவாப் பொருந்தும்" என பக்தர் ஒருவர் கேட்டபோது,
"ஆம்! அறிவுத் தெளிவையும், ஆனந்தமென்னும் ஆரோக்கிய உணர்வையும் அடைந்தவருக்கு, சாதனையும் சாதாரணமே. அடைய வேண்டியதை அடைய ஆரம்பி," எனச் சொன்னார்.
நீங்கள் அடைய வேண்டியதை அடைந்து விட்டீர்களா?
எல்லோரும் அடைய விரும்புவது அருமையான வாழ்க்கையைத்தான். அதற்காகத்தான்...
நிம்மதி, என்பது
இதயப்பூர்வமாக
வாழ்பவருக்கு
இறைவனளிக்கும்
பரிசு.
வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை,
அதாவது இருபத்தைந்து வருடங்களைப்
படிப்பதற்கே செலவிடுகிறோம். ஏன் என்று
கேட்டால் "நல்ல வேலை கிடைக்க," எனப்
பதில் சொல்வோம்.
"எதற்கு நல்ல வேலை?" எனக் கேட்டால், "நல்லா சம்பாதித்து, நல்ல அறிவோடு அருமையாய் வாழ வேண்டும்” எனச் சொல்வோம்.
“அருமையான வாழ்வு பெற இவ்வளவு படித்தீர்களே! வாழ்வுக்காக என்ன படித்தீர்கள்?
வாழ்க்கையை வாழ்வது எப்படி? எனக் கற்றுக்கொள்ள என்ன செய்திருக்கிறீர்கள் இதுவரை...” எனக் கேட்டால், என்ன பதில் சொல்வோம்?.
‘சமைக்கத் தேவையான எல்லா உணவுப் பொருட்களை வெகு பிரயத்தனப்பட்டுச் சேர்த்தவர்... சேர்த்து முடித்த பின்தான், சமைப்பது எப்படி? ‘என யோசித்தாராம்!’ எனும் கதையாய்க் கழிகிறது மனித வாழ்வு.’
★ ‘வாழும் கலையை யார் கற்றுக்கொள்வது மிக மிக அவசியம்?’ என ஒருவர் என்னிடம் கேட்டார்.
அதற்கு...
“பூமியில் மனிதராய் வாழ அவதாரமெடுத்த ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமானது,” எனச் சொன்னோம்.
வாழும் கலையைப் பற்றிக் கற்க விரும்பும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டியமுதல் பாடம்... “ அவரவரின் மனவரைபடத்தின் நெளிவு சுழிவுகளைப் பற்றிய விவரங்கள்” என்று மேலும் அவரிடம் சொன்னோம்..

ஒரு செயலைத் தட்டிக் கழிக்க,
ஒரு நூறு காரணங்கள் கதைக்கும்,
ஓயாமல் வாழும் மாய மனம்.
- மன இயல்பு விதி.

# தியானம்
ஒரு செயலைத் தட்டிக் கழிக்க,
ஒரு நூறு காரணங்கள் கதைக்கும்,
ஓயாமல் வாழும் மாய மனம்.
- மன இயல்பு விதி.
விரும்பியதை அடையும் துணிவு கனிவதைத் தொடர்ந்து தடுப்பது எது? நினைத்ததைச் சாதிக்கும் தெளிவு துளிர்வதைத் தடுப்பது எது?
பதில் காணுங்கள்.
எந்தவொரு இலட்சியத்தை எடுத்து நீங்கள் சாதிக்க விரும்பினாலும் சரி, துவக்கத்தில் உங்களைத் தூண்டும் உற்சாகம், முடிவுவரை நிழல்போல உங்களைத் தொடர்ந்து வர வேண்டும். அப்போதுதான் இலட்சியத்தை அடைய முடியும்.
உற்சாகம் உங்களை விட்டு விலகும் நிமிடங்களை ஆராய்ந்து பார்த்தால்... அந்த நிமிடங்களைத் தட்டிக்கழிக்க, மனம் ஏதாவதொரு காரணம் தந்திருப்பது புரிய வரும். மனம் கதைக்கும் சாக்குப்போக்குகளைப் பற்றிய மன ஆராய்ச்சி... உங்களைத் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் ஓர் ஆசான்.
மேலும், அது உங்களின் மூளையையும், இதயத்தையும் உற்சாகமாக இயங்க உதவும் ஓர் ஊக்குவிப்பான். அது ஓர் உண்மையான தியானம்.
இனி உங்களுக்கு சாக்குப் போக்குக் காட்டும் காலங்களைக் கவனத்திற்குள் எடுத்து வாருங்கள்.
சாக்குப் போக்குகளைத் தூக்கியெறியுங்கள்... சாதனை என்னும் சிம்மாசனத்துக்கு அழகாய்த் தூக்கியெறியப்படுவீர்கள்.
உள்ளுலகிலும், வெளியுலகிலும் ஆனந்தமாய் இருப்பீர்கள்.
மகா வாக்கியம்
“உங்களின் முடிவுகள் உங்களை முடிவு செய்கிறது”
சாதிக்கும் சக்தி, சாதிப்பவரை, ஆதிக்க மனத்தைவிட, பண்பும் புகழைவிட, ஆள் பலத்தைவிட...
புத்திசாலித்தனமும், அறிவு பலமும் அவரை ஆட்கொள்ள வேண்டும்.
பணமா? பண்பா?
புகழா? தெளிவா?
பதவியா? பரவசமா?
இந்தக் கேள்விகளுக்கு 'ஆம்' எனச் சொல்பவரா நீங்கள்? 'ஆம்' என்றால் பணம், புகழ், பதவியும் உங்களுக்குச் சேர்ந்தளிக்கப்படும்.
'இல்லை' என்றால் சோகம், ரோகம், சோர்வு உங்களுக்குச் சேர்ந்தளிக்கப்படும். அது பணம், புகழ் பதவி கிடைத்திருந்தாலும்!
வாழும் கலையைப் பற்றி அழகாய் எழுதுகிறீர்கள். அது எப்படி? என நீங்கள் கற்றுக் கொடுத்தால் நலமாயிருக்குமே.
- கிறிஸ்டி, ஷெனாய் நகர்.
18-30 வயதுக்குட்பட்ட வாலிபர்களுக்கு, ஒரு வருட இலவச உணவு, உடை, இருப்பிடத்தோடு தியானபீடத்தில், 'வாழும் கலை' பற்றிய கல்வி கற்றுத் தரப்படுகிறது.
'Life Bliss Technology' என்றழைக்கப்படும் இக்கல்வித் திட்டத்தில் ஆனந்தம், ஆரோக்கியம், திருப்தி ஆகியவற்றை ஒருவர் பெறுவதற்கான அடிப்படை சூத்திரங்களும், அதற்கான தியான முறைகளும் கற்றுத் தரப்படும், தானும், மற்றவர்களும் வெற்றிகரமாக வாழ உதவும் சேவை மனம் கொண்டவர்கள் உளமாற வரவேற்கப்படுகிறார்கள்.
வாழ்விற்குள் நுழைய இருப்பவர்களுக்கு, வாழ்க்கையின் ரகசியங்களைக் கற்றுத் தருவதே இக்கல்வித்திட்டத்தின் நோக்கம்.
இளஞ்சிங்கமே...
வாழ்க்கைச் சூழலிலிருந்து தப்பிக்க...
உலக வாழ்க்கையில் குடும்பஸ்தனாக வாழ முடிவெடுப்பவர்களுக்கு இராமகிருஷ்ணர் சொல்லும் அழகான கருத்து...
“குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ, ஆன்மீகத்தைக் கொஞ்சம் கையில் எடுத்துச் செல். நிச்சயமாய் சிக்கித் தவிக்க மாட்டாய்.
பலாப்பழத்தை வெறுங்கையால் அறுக்கக்கூடாது. அப்படிச் செய்தால், கத்தியும் கையும் பிசுபிசுப்பில் சிக்கிக்கொள்ளும்.
அதுவே, ஒரே ஒருமுறை, எண்ணெயில், கத்தியையும் கையையும் நனைத்துவிட்டுச் செய்தால், விரல்கள் பிசுபிசுப்பில் சிக்கித் தவிக்காது. சங்கடமே இருக்காது.
கொஞ்சம் ஆன்மீகம் சேர்த்து
வாழ்க்கையை எதிர்கொண்டால்...
வாழ்க்கையையும் நன்றாக
அனுபவிக்க முடியும்.
அதேநேரத்தில், வாழ்க்கைச்
சுழலில் சிக்காமல் எளிதில்
தப்பி விடலாம்.
ஆன்மீகமும் இதுபோன்றதுதான். கொஞ்சம் ஆன்மீகம் சேர்த்து வாழ்க்கையை எதிர்கொண்டால்... வாழ்க்கையையும் நன்றாக அனுபவிக்க முடியும். அதேநேரத்தில், வாழ்க்கைச் சூழலில் சிக்காமல் எளிதில் தப்பி விடலாம்"
'நான் வாழ்ந்து காட்ட வேண்டும்' என
எண்ணும் இளைஞர்கள், ஒன்றுக்கு இரண்டு
முறையாவது இந்த ஞானக்கருத்தைப் படித்து
மனதில் நிறுத்திக்கொண்டு கட்டுரையைத்
தொடருங்கள்.
பதினெட்டில் காதல்...
இருபதில் எதிர்காலக் கனவு...
இருபத்தைந்தில் திருமணம்....
முப்பதில் குடும்பச்சுமை...
நாற்பதில் வயிற்றுக்கோளாறு, உடல் மனச் சோர்வு...
நாற்பத்தைந்தில் டையாப்டீஸ்...
ஐம்பதில் மூட்டுவலி...
என்பதெல்லாம் இன்று கிட்டத்தட்ட எல்லோர் வாழ்க்கைக்கும் பொருந்தும் என்ற நிலை வந்துவிட்டது.
திருமணத்திற்கு பின் ஒருநாள் தானும் எல்லா பிரச்சினைகளையும் நிச்சயம் சந்திக்க வேண்டியிருக்கும் என இளைஞர்கள் முன் ஜாக்கிரதையாக யோசிப்பது அரிதாகிவிட்டது. நானும் இவர்களைப் போல சிக்கித்தவிக்க 100% வாய்ப்பு இருக்கிறது என்பதை முழுமையாய் உணராத இளைஞர்கள்தான், எதிர்காலத்தில் சிக்கித் தவிக்கும் குடும்பஸ்தர்களாக மாற வாய்ப்புகள் அதிகம்.
சூஃபி ஞானியிடம் சீடரொருவர் கேட்டார், “விட்டில் பூச்சி போல், எல்லா மனிதர்களும், அதே வாழ்க்கை முறை (Life style), அதே நோய், அதே துன்பம், துக்கம் என ஒரே மாதிரியே அல்லல்படுகிறார்களே!
அவர்களுக்கு ஒருவரைப் பார்த்து ஒருவருக்குப் புத்தி வராதா?”
“யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம். யாருடைய உயிர்க்கும் உலகில் உத்திரவாதமில்லை. இது தெரியுமா உனக்கு?”, ஞானி .

உலக வாழ்க்கையில் குடும்பஸ்தனாக வாழ முடிவெடுப்பவர்களுக்கு இராமகிருஷ்ணர் சொல்லும் அழகான கருத்து... “குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ, ஆன்மீகத்தைக் கொஞ்சம் கையில் எடுத்துச் செல். நிச்சயமாய் சிக்கித் தவிக்க மாட்டாய்.”
“ம்...ம் தெரியும் சுவாமி ” ,சீடன்.
“தெரிந்தும், தெரியாதவனாய்த்தானே இருக்கிறாய்! சாவு உனக்கு மட்டும் வெகு தூரத்தில் இருப்பது போல பேசுகிறாய், நடந்து கொள்கிறாய்.
முதலில் உனக்கு புத்திவரும் வழியைப் பார். மற்றவர்கள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள்” என்றார், ஞானி.
யாருக்கு வேண்டுமானாலும், எதுவும், எப்போது வேண்டுமானாலும் நடக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றது.
முன் ஜாக்கிரதை உணர்வு, பின்னாளை ஜாக்கிரதைப்படுத்தும் புத்திசாலித்தனம் கொண்டது. யோசியுங்கள்.
மனோதத்துவ சர்வே ஒன்றில் படித்த, உற்சாகம் தூண்டும் செய்தியொன்று, “10 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட சக்தியை இளைஞர்கள் பயன்படுத்துவதில்லை. இளைஞர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக சக்தியைப் பயன்படுத்தினாலே போதும், உலகின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம்”, என்பதே அது.
உலகின் தலையெழுத்து மாறுவது ஒருபுறமிருக்கட்டும்.
தெளிவில்லாமல், தன் சக்தியை மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தி, வாழ்க்கைக் கடலுக்குள் குதிப்பவர்கள் - வேறொரு சூழலுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்தச் சூழலுக்குப் பெயர்- சாதனை!
“எங்கே இவ்வளவு வேகமாய் ஓடுகிறீர்?”,என அசந்து தூங்கிக் கொண்டிருந்த எலியொன்று, திடீரென விழித்ததும், கூட்டம் கூட்டமாய் ஓடும் எலிக் கூட்டத்தில், தானும் எம்பி எம்பிக் குதித்ததாம்.
அடுத்த நிமிடம், தன்னைத் தாண்டி பல எலிகள் ஓடுவதைப் பார்த்து, இன்னும் வேகவேகமாக ஓட ஆரம்பித்ததாம்.
> ‘10 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட
> சக்தியை இளைஞர்கள்
> பயன்படுத்துவதில்லை.
> இளைஞர்கள் இன்னும்
> கொஞ்சம் அதிகமாக சக்தியைப்
> பயன்படுத்தினாலே போதும்,
> உலகின் தலையெழுத்தையே
> மாற்றிவிடலாம்’
அந்த எலியைத் தடுத்து, “எங்கே
இவ்வளவு வேகமாய் ஓடுகிறாய்,” என்று
கேட்டதற்கு, “விடு என்னை, நான் ஜெயிக்க
வேண்டும், இல்லாவிட்டால் பெருத்த
அவமானம்!”, என்றதாம்.
இதேதான் மனித வாழ்விலும் நிகழ்கிறது. இருபத்தைந்து வயதுவரை விளையாட்டாக வாழ்க்கையைக் கழித்த இளைஞர், திடீரென்று கண்முன் வந்து நிற்கும் எதிர்காலத்தைப் பார்த்து எம்பிக் குதித்து விடுகிறார்.
குதித்தபின்தான் உண்மை நிலவரம் புரிகிறது... "எல்லோருமே ஏதோ ஒன்றைச் சாதிக்க வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கிறார்கள்" - என்று!
ஏன்? எதற்கு? என்ற அடிப்படைப் பகுப்பாய்வு செய்யாமல், தானும் சாதித்தே ஆக வேண்டும் என்ற இலக்கில்லாப் பயணத்தை விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறார்.
ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஓட்டம், கொஞ்ச நாளிலேயே வெறியாக மாறி விடுகிறது. இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. வாழ்க்கை திசைமாறிப் போகிறது.
சாதனை தவறென்று சொல்லவில்லை. சாதனை தேவை. ஒவ்வொரு இளைஞனும் சாதிக்க வேண்டும். சோம்பேறியாக வாழ்க்கையை வீணடித்து விடக்கூடாது.
ஆனால், ஏன் சாதிக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும். அந்தத் தெளிவிலிருந்து, எதைச் சாதிக்க வேண்டுமென்ற சரியான இலக்கு உதயமாக வேண்டும்.
இவை நிகழும் முன், "எப்படியாவது! எதையாவது சாதிக்க வேண்டும்!" என்று செயல்பட ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சினை உருவாகிறது. விளைவு சாதனைப்பயணம் வெறியாக வெடிக்கிறது. கண்ணெதிரே இருக்கும் அறிவு, புகழ், பணம், பதவி என்ற ஏதாவதொன்றை மனம் பற்றிக் கொள்கிறது. மொத்த வாழ்வும் திசை திரும்பிவிடுகிறது. எனவே சாதனைப்பயணம் துவங்கும் முன், 'ஏன்? எதற்கு?' என்ற தெளிவு ஒவ்வொரு இளைஞருக்கும் வேண்டும்.
சிந்தனையில் தெளிவையும் செயலில் உற்சாகத்தையும் உடனே தரும் எளிய வழி, தியானம். ஆன்மீகத்தை வாழ்வில் ஒவ்வொரு இளைஞரும் சேர்க்க வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்.

> ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஓட்டம், > கொஞ்ச நாளிலேயே வெறியாக மாறி > விடுகிறது. இங்குதான் பிரச்சினை > ஆரம்பிக்கிறது. வாழ்க்கை திசைமாறிப் > போகிறது.
“இதைத்தான், இதனால்தான் நான் சாதிக்க விரும்புகிறேன்” என்ற தெளிவென்னும் சிப்பிக்குள், திருப்தியென்னும் முத்து ஒளிந்திருக்கிறது.
‘ஏன்? எதற்கு?’ என்ற அடிப்படைத் தெளிவில்லாமல், ‘எப்படி சாதிக்கலாம்?’ என சிந்திக்கும் மனமா உங்களது...
ஆராயுங்கள்.
எதிர்காலச் சோதனைகளும், வேதனைகளும் விலகிப்போகும். உங்களின் சாதனை ஆசையை ஆராயுங்கள். சிப்பியைக் கண்டுபிடியுங்கள். முத்துமுத்தான இனிய வாழ்வு உங்களுக்குச் சொந்தமாகும்.
மகா வாக்கியம்
“தியானம் வாலிபனுக்கு அவசியமானது”
தியானமும் ஞானமும்
வாழ்க்கையை அனுபவித்து
வாழத்தவறிய வயோதிகரை விட,
வாழ்க்கையை அனுபவித்து
வாழத்துடிக்கும்
வாலிபருக்குத்தான்
மிக மிக அவசியம்.
காரணம்.....
தியானம்-அனுபவிக்கும் சக்தியையும், ஞானம் - வாழும் பழகும் திறனையும் அதிகரிக்கிறது.
தெளிவில்லாமல் குதித்தாலும், சாதனைகள் சாத்தியமே. ஆனால், சாதித்த திருப்தி இருக்காது. சாதனை முக்கியமா? திருப்தி முக்கியமா? இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
-விஜய், தேனி
சாதனையின் உச்சியில் இருக்கும் அமெரிக்காவில், மூன்றில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது இரண்டு வருடங்களுக்குமுன் படித்தது.
இன்று இன்னும் அதிகமாக இருப்பதாக டாக்டர். முரளிகிருஷ்ணா சமீபத்தில் சொன்னார். வெறும் சாதனை மாத்திரமே, சந்தோஷத்தையும், திருப்தியையும் தருமென்றால், அமெரிக்காவில் மன நோயாளியே இருக்கக்கூடாது.
ஏனென்றால், வளரும் நாடுகளின் கவலைகளுக்குக் காரணமான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு, அதைத் தாண்டி வாழும் மக்கள் நிறைந்த நாடு அமெரிக்கா!
எதையாவது சாதிக்க ஆரம்பித்து, சாதித்தபின், அந்தச் சாதனைக்கும் உங்களின் ஆழ்மன விருப்பத்திற்கும் சம்பந்தமே இல்லையென்றால், அந்த சாதனையே வேதனையாகி விடும். அதை ஆங்கிலத்தில் (Depression of success) என்று சொல்வார்கள்.
ஆழ்மன விருப்பம் தெரிய, 'ஏன் சாதிக்கணும்?', 'எதைச் சாதிக்கணும்' என்னும் கேள்வி ஆராய்ச்சிகள் பெரிதும் உதவும். இந்த ஆராய்ச்சிக்கு உங்களைப்பற்றிய உங்களின் புரிந்து கொள்ளுதல்கள் மிக மிக அவசியமானது.
உங்களை நீங்களே புரிந்துகொண்டு, உலகில் உங்களின் சாதனையை வடிவமைக்கப் பல வழிகளில் உதவும் ஆன்மீகத்தைப் பிடியளவாவது எடுத்துச் செல்லுங்கள். சாதனையின் வேதனையில் சிக்க மாட்டீர்கள். சாதனை சந்தோஷமாகும்.
தலைவராகுங்கள்
இளைஞர்களே...
பில்கேட்ஸ்-ஐ உலகின் முதல் பணக்காரராக்கியது சாஃப்ட்வேர் நிறுவனம் அல்ல. அதை உருவாக்கக் காரணமாக இருந்த அவரின் 'புத்திசாலித்தனமும்' (Intelligence), 'தலைமைப் பண்பும்' தான் (Leadership) அவர் வெற்றியின் இரகசியம்.
அமெரிக்காவில் பிறக்காமல் ஆப்பிரிக்காவில் பிறந்திருந்தாலும், பில்கேட்ஸ் சாதித்திருந்திருப்பார். அவரிடமுள்ள அளப்பரிய தலைமைப் பண்பும் அவரை வேறு ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வைத்திருக்கும்.
தலைமைப் பண்பு சும்மா காரியமல்ல. அது ஒரு மாபெரும் குணம்!.
மிகவும் பிரபலமான சீனப் பழமொழி ஒன்று.
"சாதிப்பவர்கள் தலைவர்கள். சாதிக்காதவர்கள் வேலைக்காரர்கள்."
ஒரு மனிதரின் தலையெழுத்தையே
திருத்தி எழுதும் சக்தி படைத்தது இந்தத்
தலைமைப் பண்பு (Leadership Quality).
Dr.A, Dr.B ஆகிய இருவரும் ஒரே மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள். ஒரே
ஒரு மனிதரின்
தலையெழுத்தையே திருத்தி
எழுதும் சக்தி படைத்தது
இந்தத் தலைமைப் பண்பு
(Leadership Quality).
நகரில் கிளினிக் வைத்து மருத்துவம் செய்ய ஆரம்பித்தவர்கள். இருவரும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்கள்.
Dr.A பதினைந்து வருடமாகக் கிளினிக் நடத்தி வருகிறவர். அவருடைய சிறிய கிளினிக்கில் எப்போதும் கும்பல் அலை மோதிக்கொண்டேயிருக்கும். அதே பதினைந்து வருடத்திற்குள், மூன்று மாடிக் கட்டிடத்தோடு கூடிய மருத்துவமனை ஒன்றையே கட்டிவிட்டு விட்டார்.
"Dr.A, Dr.B இருவரும் ஒரு கல்லூரியில், ஒரே படிப்பை படித்தவர்கள் தான். Dr.A வைப்போல அந்த மற்றோர் இளைஞரும் முன்னேற வேண்டுமானால், என்ன விதமான வாழ்க்கை விதிகளைத் (rules for good life) தர விரும்புகிறீர்கள்?... என்று ஒருவர் கேட்டார்.
"No rule in the rule".
வாழ மதிதான் வேண்டுமேயன்றி, விதி அல்ல. மதி குறைந்த மனிதர்கள், மனிதக் கூட்டத்தைப் பாங்காய்க் கட்டுப்படுத்தத் தெரியாததால், கண்டுபிடித்ததே விதிகள், நீதி நெறிகள், ஒழுக்கங்கள்.
ஓர் இளைஞருக்கு மதியைத் தந்து, அவரை அசகாய சூரராக மாற்ற வேண்டுமேயன்றி, அவருக்கு விதிகளைப்போட்டு, அவரைச் சுருக்கி, அவர் சுதந்திரத்தைப் பறித்து, அவரை அசூராகவோ, சாபமாகவோ மாற்றக் கூடாது.
அந்த இரண்டு டாக்டர்களுமே இருவருமே படுபிசியாக இருக்கிறார்கள், கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும் மருத்துவமனை ஒன்றைக் கட்டிவிட்டார். அவரால் மட்டும் சாதிக்க முடிந்தது எப்படி?. அவருக்கும் அதே மருத்துவப்படிப்பு, அதே நோயாளிகள், அதே மருந்துகள்தான் மூலதனம்.

வாழ மதிதான் வேண்டுமேயன்றி, விதி அல்ல. மதி குறைந்த மனிதர்கள், மனிதக் கூட்டத்தைப் பாங்காய்க் கட்டுப்படுத்தத் தெரியாததால், கண்டுபிடித்ததே விதிகள், நீதி நெறிகள், ஒழுக்கங்கள். சிறு கிளினிக்கை உருவாக்கக் கூடிய அதே மூலதனத்தைக் கொண்டு, இன்னொருவர் பெரிய மருத்துவமனையை உருவாக்கியது எப்படி?
'Dr A' யிடம் எது அதிகமாக இருந்தது? இந்த எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில்...
கடவுளை விடப் பெரிய தலைவனில்லை."
தலைமைப் பண்பு மலர மலரக் கடவுளைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறீர்கள். அப்பண்பு முழுமையாகும்போது, கிருஷ்ணரைப்போன்று, சிவனைப்போன்று, புத்தரைப்போன்று, கடவுளாகவே மாறிவிடுவார்கள்.
விவேகானந்தர் ஓரிடத்தில் மிக அழகாகச் சொல்கிறார்... "ஞானிகள் சொன்ன ஏதாவது ஐந்து ஞானக் கருத்துக்களை வாழ்வில் முழுமையாய்க் கடைப்பிடியுங்கள். அது, மிகப்பெரிய நூலகத்தின் நூல்களையெல்லாம் படித்து முடித்த ஒரு அறிவாளியின் அனுபவத்தைத் தாண்டிய அனுபவத்திற்கு உங்களை எடுத்துச்செல்லும்.
உங்களை மிகப்பெரிய சாதனையாளராக மாற்றவல்ல தலைமைப் பண்பை, நூல்களில் படித்துக் கற்றுக்கொள்ள முடியாது. நூலகத்தையே கரைத்துக்குடித்தாலும் அறிவு மட்டும்தான் வளருமேயன்றி, தலைமைப் பண்பு வளராது.
தலைமைப் பண்பு வளர... ஞானக் கருத்துக்களின் வழிநடத்தலும், தியான சக்தியும் மிக மிக அவசியமானது.
விவேகானந்தரை உலகமெல்லாம் போற்றும் மனிதராக்கியது, அவரின் தலைமைப் பண்புதான். இராமகிருஷ்ணரிடமிருந்து அவர் கற்றுக்கொண்ட தியானங்களும், அவை அவருக்குள் செய்த இரசவாதங்களும்தான், சிகாகோ வரை அவரை உயர்த்தியது.
நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலையேபடாதீர்கள்.
என்னாலெல்லாம் சாதிக்க முடியுமா?
தலைமைப் பண்பு
மலர மலரக்
கடவுளைத்
தொட்டுத் தொட்டுப்
பார்க்கிறீர்கள்.
நான் பெரிய ஆளாவேனா? எனக்குத் தகுதியிருக்கிறதா?
என்றெல்லாம் தயங்குவதற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.
எல்லா ஆல விதைக்குள்ளும் ஆலமரம் ஒளிந்திருக்கிறது.
எல்லா இளைஞருக்குள்ளும் ஒரு மாபெரும் சாதனையாளர் ஒளிந்திருக்கிறார்.
விதை மரமாக, இளஞ்சூடும் ஊட்டச்சத்தும் தேவை. மனிதர் சாதனையாளராக, சக்தியும் புத்தியும் தேவை.
சக்தியை தியானமும் புத்தியை ஞானிகளின் வாழ்வியல் கருத்துக்களும் தரவல்லவை.
சக்தியும் புத்தியும் பெருகப் பெருக, தலைமைப் பண்பு ஒருவருக்குள் எளிதில் மலர்ந்துவிடும். ஒரு தலைவர், கோடீஸ்வரர்களுக்குச் சமம்.
தலைமைப் பண்பு மிகுந்த ஒருவரால்தான் கோடீஸ்வரராக முடியும்.
ஒவ்வொரு ரூபாயாகப் பிச்சை எடுத்துக் கோடீஸ்வரரான யாராவது ஒருவரை இதுவரை பார்த்திருக்கிறீர்களா... இப்படி கோடீஸ்வரராவது சாத்தியமேயில்லாத ஒன்று. சாதனையின் உச்சம் தொட, அறிவின் உச்சம் தொடவேண்டியதில்லை.
சாதிக்கச் சக்தியும் புத்தியும்தான் பெருக வேண்டும். தலைமைப் பண்பின் உச்சத்தைத்தான் தொடவேண்டும்.

விதை மரமாக, இளஞ்சூடும் ஊட்டச்சத்தும் தேவை. மனிதர் சாதனையாளராக, சக்தியும் புத்தியும் தேவை. சக்தியை தியானமும் புத்தியை ஞானிகளின் வாழ்வியல் கருத்துக்களும் தரவல்லவை.
புத்தர் உள்ளுலக சாதனையாளர்!.
பில்கேட்ஸ் வெளியுலக சாதனையாளர்!.
இருவருமே சாதனையின் உச்சம்!.
நீங்கள் சாதிக்க விரும்புவது உள்ளுலகிலா, இல்லை வெளியுலகிலா?
உங்களின் பதில் எதுவாயிருந்தாலும்... சாதனை நிகழ்வதற்கான மூலதனம் தலைமைப் பண்பு மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதைப் பெருக்குங்கள். நீங்கள் சாதனையாளராவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. தலைவராகுங்கள்... உலகம் உங்கள் கையில்.
சுறுசுறுப்பாக்கும் சக்தி
தெரியுமா உங்களுக்கு?
'அந்நியனை விரட்டிய புண்ணியன்' என குறிப்பிடப்படும் ஒரு மாமன்னர்...
1,00,000 காலாட்படைகள் ; 30,000 குதிரைப்படைகள், 9,000 யானைப் படைகளோடு வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை ஓட ஓட விரட்டி, மௌரியப் பேரரசு எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தையே இந்தியாவில் சில ஆண்டுகளுக்குள் நிறுவியவர். அவர் பெயர் சந்திர குப்தர்.
இவ்வளவு சாதனைகளைப் படைத்த சந்திரகுப்தர், சிறுவயதில் ஒரு சாதாரண மாடு மேய்க்கும் சிறுவன்தான்.மாடு மேய்ப்பவர்களால் வளர்க்கப்பட்ட சந்திரகுப்தரால் சாதனையின் உச்சி நுகர முடியும்போது, ... உங்களால் முடியாதா?
> ஒரு புத்தகத்தால்
> இவ்வளவு
> பாதிப்புகளை ஏற்படுத்த
> முடியுமா?
இப்படி ஒரு பெட்டிச் செய்தியை நம்மூர் மாட்டுக்கார வேலன் படிக்க நேர்ந்தால், அவரின் நரம்புகள் அந்த நேரத்திற்கு முறுக்கேறத்தான் செய்யும்.
அவரை ஒரு புது உற்சாக சக்தி தொற்றிக்
கொள்ளும். கொஞ்ச நேரத்திற்கு வீறுகொண்ட
சிங்கம் போலத்தான் அவரிருப்பார்.
சும்மாயிருந்தவரைப் பரபரப்பாக்கிய அந்த சங்கதி எது?
அதன் பெயர் ரஜஸ்! , ரஜசிக சக்தி !
'ஏழு நாளுக்குள், சாதனைக்குள் எகிறிக் குதியுங்கள்' என்ற ஐரோப்பிய எழுத்தாளரின் புத்தகம் ஒன்றைப் படித்தபின், தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு கல்லூரி மாணவர் ASP தியான முகாமில் பகிர்ந்து கொண்டார்.
"அந்தப் புத்தகம் பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பைத் தூண்டியது. என்னால் அந்தப் புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை. அதனால், ஒரே நாளுக்குள் படித்து முடித்துவிட்டேன். ஆனால், படித்து முடித்தபின் மிகவும் பரபரப்பானவனாகி விட்டேன்.
என்னால் இப்போதெல்லாம் சும்மா இருக்க முடிவதேயில்லை. உடல் சோர்வாயிருக்கும் போதுகூட, ஓய்வு எடுக்க என் மனம் என்னை அனுமதிப்பதில்லை.
அந்தப் புத்தகம் படித்த நாளிலிருந்து கொஞ்சம்நஞ்சம் இருந்த நிம்மதியும் பறிபோய்விட்டது .
ஒரு புத்தகத்தால் இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்த முடியுமா? என் குழப்பத்திற்குத் தீர்வளியுங்கள்," எனச் சொன்னார்.
அந்த இளைஞரிடம் சொன்னோம், “அது புத்தகத்தால் முடியும். உங்களுடைய ரஜசிக சக்தியைத் தூண்டும் வகையில் எழுதப்பட்ட புத்தகங்களால், உங்களை பரபரப்புக்குள்ளாக்கும் ஹார்மோன்களை உங்களுக்குள் சுரக்கச் செய்ய முடியும்.

உங்களுடைய ரஜசிக சக்தியைத் தூண்டும்
வகையில் எழுதப்பட்ட புத்தகங்களால், உங்களை
பரபரப்புக்குள்ளாக்கும் ஹார்மோன்களை
உங்களுக்குள் சுரக்கச் செய்ய முடியும்.
விளைவு, ஓய்வெடுக்கும் போதுகூட மனம் பேய்
மாதிரி இயங்கும்.
விளைவு, ஓய்வெடுக்கும் போதுகூட மனம் பேய் மாதிரி இயங்கும்.
அப்போது... ஓய்வு, நிம்மதி என்பவை சாதனையைவிட கடினமான இலக்காக மாறிவிடும்,” எனச் சொன்னேன்.
இளைஞர், “ரஜசிக சக்தி என்றால்...” என்று கேட்டார்.
“அது ஒருவருக்குள் விறுவிறுப்பைத் தூண்டும் சக்தி எனச் சொல்லலாம்” என்றேன்.
இளைஞர், “ஒரு புத்தகத்தால் இவ்வளவு செய்ய முடியுமா?”
“நிச்சயம் முடியும். இன்றைய மனிதர்களின் மனம் சூம்பிப் போயிருக்கிறது. அது உற்சாகமற்ற ஒரு நோஞ்சானாக இருக்கிறது.
ஒரு நோஞ்சானுக்கு, ஒரு பயில்வான் படத்தைக் காண்பித்து, ‘இவரும், ஒரு காலத்தில், உன்னைப்போல நோஞ்சானாய் இருந்தவர்தான். இவர் பயில்வானானால்... உன்னால் முடியாதா?’ என ரஜசிக சக்தியைத் தூண்டும் ஒரு கேள்வியை அழகாய் கேட்டுவிட்டால் போதும் ...
பாவம் அந்த அப்பாவி, தானும் பயில்வானாக மாற என்ன செய்வார்? அருகே இருக்கும் ஏதோ ஒரு ஜிம்முக்குச் சென்று, பல கிலோ எடையுள்ள உபகரணங்களைத் தூக்கி, இறக்கி, பயில்வானாக முயற்சிப்பார். சில நாட்களுக்குள் பயில்வானாகிடத் துடிப்பார். என்ன ஆகும் அவரது நிலை?
அவர் மனதில் பயில்வானாக வேண்டும் என்ற எண்ணம் முளைத்து விட்டது.
நோஞ்சான் மனதுக்குத்
தியானம்தான் எளிய,
அரிய தீர்வு.
ஆனால், அந்த எண்ணத்தை அவருள்
புகுத்தியவர், பயில்வானாகுவதற்கான
வழிமுறைகளைத் தெளிவாய் சொல்லாமல்
தந்திருப்பார்.
பிறகு என்ன ஆகும், அந்த நோஞ்சானின்
நிலை? கொஞ்ச நஞ்சமிருந்த நிம்மதியும்,
அவருக்குப் பறிபோகும். அவ்வளவுதான் !
“அதைச் செய் ! இதைச் செய் !
மலையைப் பிடி ! புலி போல் ஓடு !
சிறுத்தை போல் சீறு ! எறும்புபோல் உழை !”
என ஏதேதோ வாசகங்களால் நிரப்பப்பட்ட புத்தகங்கள்தான்... நோஞ்சான் மனதை பயில்வானாக மாறச் சொல்லி உசுப்புகின்றன.
முதலில் நோஞ்சான் மனதிற்கு மருத்துவம் செய்ய வேண்டும். நோஞ்சான் இயல்பாக வேண்டும். இயல்பான பின்தான், புஷ்டியைப் பற்றி யோசிக்க வேண்டும்.
நோஞ்சான் மனதுக்குத் தியானம்தான் எளிய, அரிய தீர்வு,” எனச் சொல்லி முடித்தேன்.
சாணக்கிய தந்திரம் எனப் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பெரும்பாலும் சூழ்ச்சியைக் குறிப்பிட மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நிஜத்தில் வேறு. சாணக்கியர் மிகப்பெரிய சிந்தனைவாதி. அவர் பல யுக்திகளைக் கண்டுபிடித்தவர்.
நாடாளும் அரசருக்கும் மக்களுக்கும் அந்தக் காலத்திலேயே அர்த்தசாஸ்திரம் எனும் நூல் எழுதி, பல புதுச் சிந்தனைகளையும் தீர்வுகளையும் தந்தவர்.
இவ்வளவு திறமைவாய்ந்த சாணக்கியர், ஒருமுறை மாடு மேய்க்கும் ஒரு முரட்டு இளைஞரைச் சந்தித்தார்.
சாணக்கியருக்கு அந்த இளைஞரை மிகவும் பிடித்துப் போகவே, அவருக்குப் பல கலைகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

முதலில் நோஞ்சான் மனதிற்கு மருத்துவம்
செய்ய வேண்டும். நோஞ்சான் இயல்பாக
வேண்டும். இயல்பான பின்தான்,
புஷ்டியைப் பற்றி யோசிக்க வேண்டும்.
கலைகள் பல அவர் கற்றுத் தேர்ந்த நிலையில், சாணக்கியர், தான் பணியாற்றிய பாடலிபுத்திர மன்னன் தனநந்தனால் அவமானப்படுத்தப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
பின், தான் பயிற்றுவித்த முரட்டு இளைஞர் மூலமாகவே, தனநந்தனை நாட்டைவிட்டுத் துரத்தி, இளைஞரை அரசனாக்கினார்.
அந்த அரசரின் கூடவே இருந்து, அவ்வப்போது பல மதியூகங்களைச் சொல்லி, சொல்லி, அவரை ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கி ஆளுபவராக மாற்றினார்.
அந்த அரசன் வேறு யாருமல்ல - சந்திரகுப்தர்தான்!
மாட்டுக்கார வேலன் மாமன்னரானது என்னவோ உண்மைதான். ஆனால், மாமன்னராக அவரை ஆக்கியது எது? அவர் எப்படி அப்படி ஆனார்?
இந்த உண்மைகளை யாரும் குறிப்பிடுவதில்லை. அப்படிக் குறிப்பிட முயற்சித்தால் கூட, அதற்குப் பல புத்தகங்கள் தேவைப்படும்.
வெறும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் உருவாகும் கருத்துக்கள் பல, மனிதரின் மனதுக்குள் நுழைந்து விடுகின்றன.
அவை வெறும் புத்தியை மட்டுமே தருகின்றன. ஆனால், அவை அவற்றை அடைவதற்கான சக்தியைத் தருவதில்லை. அச்சக்தி கட்டாயம் வேண்டும் என்றுகூடக் குறிப்பிடுவதில்லை.
விளைவு, பரபரப்பு; நிம்மதியின்மை.
ரஜசிக கருத்துக்கள் உங்களுக்குள் நுழையும்போது, இனி மிக எச்சரிக்கையாக இருங்கள்.
ரஜசிக கருத்துக்கள்
உங்களுக்குள்
நுழையும்போது, இனி
மிக எச்சரிக்கையாக
இருங்கள்.
# தியானம்
சக்தியில்லாத புத்தி ; புத்தியில்லாத சக்தி இரண்டுமே வீண். உண்மையிலேயே வாழ, வளர விரும்புவர்கள், இரண்டையுமே அதிகப்படுத்துவார்கள்.
நடைமுறை வாழ்வில், இதுவரை உங்களின் மனதில் நுழைந்துவிட்ட ரஜசிக கருத்துக்களைக் களைந்தெடுங்கள்.
“இப்போதைக்கு என் வாழ்வில் நிஜமாக முடியாத கருத்துக்கள் இவை,” எனத் தோன்றும் கருத்துக்களை கீழேபோடத் தயங்காதீர்கள்.
நிஜமாக வாய்ப்புள்ளவற்றை நிஜமாகச் சக்தியையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
மகா வாக்கியம்
“சக்தியும் ; புத்தியும் கலக்கும்போது , சுறுசுறுப்புப் பொங்கும்!
புத்தி மிகாமல்,
சக்தி மட்டும் மிக,
நீங்கள் உணர்வதே விறுவிறுப்பு!
சக்தி மிகாமல்
புத்தி மட்டும் மிக ,
நீங்கள் உணர்வதே
பரபரப்பு!
சக்தியும் புத்தியும்
ஒருசேர மிக
நீங்கள் உணர்வதே
சுறுசுறுப்பு!
விறுவிறுப்பு புத்தியை மழுங்கச் செய்யும்!
பரபரப்பு உடலை மழுங்கச் செய்யும்!
சுறுசுறுப்பு
உடலையும், புத்தியையும்
விழித்துக் கொள்ளச் செய்யும்!
நிம்மதி விலையுயர்ந்த கனவாக மட்டுமே இருக்கிறது. ஏன்? யார் காரணம்?
- ஜோதிமுருகன், பிச்சாவரம்.
உங்களைத் தவிர வேறு யாரும் இந்த நிலைக்குக் காரணமல்ல. பரபரப்பையும் விறுவிறுப்பையும் விரும்பும் அளவுக்கு, மனிதர்கள் அமைதியையும் ஆனந்தத்தையும் வரவேற்காததே மூல காரணம்.
இன்றைய மனிதர்களின் எதிர்பார்ப்பிற்குத் தகுந்தாற்போல் உருவாக்கப்படும் புத்தகங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும், உண்மையான இளைப்பாறுதலுக்கு இடமளிப்பதில்லை.
மேலும், இளைப்பாறுதலை சோம்பேறித்தனமென்றும், சோம்பேறித்தனத்தை இளைப்பாறுதல் என்றும் அவை மாற்றிச் சுட்டிக் காட்டுகின்றன. நீங்கள் மாறாதவரை அவை மாறாது.
ஒரு தாவோ ஞானியிடம், “யார் நிம்மதியை இழப்பார்கள்?” எனக் கேட்கப்பட்டபோது...
“பெரியவர்களாகப் போகும் சிறுவர்கள். பெரியவர்களாகிவிட்ட சிறுவர்கள்” என்றார்.
கேள்வி கேட்டவர் குழம்பிப் போனவராய், "யார் நிம்மதியாய் இருப்பார்கள்?" என கேட்டவுடன், "சிறுவர்கள், சிறுவர்களாயிருக்கும் பெரியவர்கள்" என்றார்.
மனிதர்கள், வயது அதிகமாகிவிட்டது என்பதற்காக முகம் இறுகிப்போக வேண்டிய அவசியமில்லை. விகல்பமில்லாமல் சிரித்து கும்மாளமடித்து, கவலையில்லாமல் வாழும் சிறுவயது குணத்தைப் பெரியவரானதும் பலி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இவை வாழ்க்கைக்கு எதிரானவை. நிம்மதிக்குப் புறம்பானவை.
சிறுவயது குதூகல குணங்களை இழந்தவர்களே, பெரியவர் என்ற போர்வையில், பல சூழ்நிலைகளில் சிறுபிள்ளைத்தனமாக, அடம்பிடிக்கும் குழந்தையாக, கத்தும் கோபக்காரக் குழந்தையாக இருப்பார்கள். சிறுவயது குதூகலத்தைத் தக்க வைத்துக் கொண்டவர்களே ... பண்புமிக்க பெரியவர்களாக, நிம்மதியான மனிதர்களாக, உண்மையான மதிப்பு, மரியாதையோடு வாழ்வார்கள். நீங்களும் இப்படி மாற விரும்புகிறீர்களா?
