KAILASA Library/மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்/காதல்Sign in
மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்

காதல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

காதல்

காதல் புதிரா? புனிதமா?

❖ காதலர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

காதலில் விழக்கூடாது. காதலில் எழவேண்டும்!.

❖ எழுவதா?

அலைபாயும் மனதிற்கு வடிகால் அல்ல, காதல். காதல், உங்களிலிருந்து எழும் தெய்வீக ஊற்றாக இருக்க வேண்டும்.

❖ தெய்வீகம் என்றால் ...?

ஆம். அது தெய்வீகத் தன்மையை உங்களுக்குள் பாய்ச்சும் தொப்புள்கொடி. உண்மைக் காதல் நிகழும் நேரங்கள், நீங்கள் தெய்வத்தின் குழந்தை என உணரச் செய்யும் கணங்கள்!.

❖ உண்மைக் காதலை உறுதிசெய்வது எப்படி?

காதல் உங்களைக் கனிய வைக்கின்றதா?
உங்களின் மனதைச் சாந்தமாக்குகின்றதா?
உடலை லேசாக்குகின்றதா? உயிரை, உற்சாகம்
குறையாமல் துள்ள வைக்கின்றதா? சுருக்கமாக,
நிம்மதி உங்களுக்குள் பெருகிகொண்டே
இருக்கின்றதா?

காதலில் விழக்கூடாது.

காதலில் எழவேண்டும்! ஆம் என்றால், அதை உறுதி செய்துகொள்ளுங்கள், அது உண்மைக் காதலே!

❖ யார் காதல் புனிதமானது?

தேவதாசனின் காதல்.

❖ யார் அது?

"காதலில் விழுந்தவர் தேவதாஸ்! காதலால் எழுந்தவர் தேவதாசன்."

❖ தேவதாசன் என்றால் .... ?

அன்பென்னும் தெய்வத்தின் இன்னொரு செல்லப் பெயர் காதல். அதில் எழுவதே அதற்கு செய்யும் வழிபாடு. எனவே, அவர் தேவதாசன்.

காமம், காதல், அன்பு பற்றி ....
காமம் : இனக்கவர்ச்சி.
காதல் : குணக்கவர்ச்சி.
அன்பு : கவர்ச்சியற்ற கருணை.
உண்மைக்காதல் கருணை தாண்டிய பிணைப்பு.

❖ சரியான காதலியைத் தேர்வு செய்வது எப்படி?

உங்களின் உள்ளிருக்கும் பெண்ணைப் போன்றே இருக்கும் ஒரு பெண்ணைக் கண்டுபிடியுங்கள்.

Portrait

காமம் : இனக்கவர்ச்சி.

காதல் : குணக்கவர்ச்சி.

அன்பு : கவர்ச்சியற்ற கருணை.

உண்மைக்காதல் கருணை தாண்டிய பிணைப்பு.

❖ அதென்ன உள்ளிருக்கும் பெண்?

இன்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை அது. ஓர் ஆணுக்குள் 49 சதவீதம் பெண் தன்மையும்; ஒரு பெண்ணுக்குள் 49 சதவீதம் ஆண் தன்மையும் இருக்கிறது.

❖ உள்ளிருக்கும் பெண்ணை எப்படி இனங்காணுவது?

அதற்கு நுண்ணுணர்வு மிக வேண்டும்.

❖ நுண்ணுணர்வு என்றால் ....?

உங்களினுள்ளே நிகழும் மாற்றங்களைத் துல்லியமாகக் கவனித்தறியும் அதி உணர்வு நிலை.

❖ நுண்ணுணர்வை அதிகரிக்க என்ன வழி?

நிச்சயம் தியானம்தான். அதற்கு அதைவிட எளிய வழி இல்லை.

❖ தியானத்திற்கும், காதலுக்கும் என்ன சம்மந்தம்?

காதல் காலம்கூட ஒரு தியான காலமே.

❖ எது காதல் காலம்?

நீங்கள் எதை அன்போடு தொட்டாலும், யாரை நீங்கள் நேசித்தாலும் ... அப்போது அங்கே விழிப்புணர்வோடு இருந்தால், அது காதல் காலம். நல்ல தியான காலம்.

நீங்கள் எதை அன்போடு
தொட்டாலும், யாரை நீங்கள்
நேசித்தாலும் ... அப்போது
அங்கே விழிப்புணர்வோடு
இருந்தால், அது காதல் காலம்.
நல்ல தியான காலம்.

❖ எந்தக் காதல் காலம் சிறந்தது?

எல்லாமே சிறந்ததுதான். குறிப்பிட்டுச்
சொல்ல வேண்டுமானால் ... உங்களை நீங்கள்
நேசிக்கும் காலமே மிக மிகச் சிறந்தது.

❖ ஏன்?

காதலில் எழ அது நேர்வழி.

❖ அப்படியென்றால் மற்ற காதல்கள்?

அவை காதலில் எழ உதவும் கோல்கள் .... நீங்கள் விழிப்புணர்வோடிருந்தால் !

❖ இன்றைய காதல் புதிரா? புனிதமா?

புதிருமல்ல. புனிதமுமல்ல. அது புதியது. புரியாதது.

எனவே, அது பூத்தவருக்குள் நிகழும் மாற்றங்கள், அவரை, “காதல் அது... புதிர் அல்லது புனிதம்” எனச் சொல்ல வைக்கிறது.

உங்களின் மற்ற உணர்வுகளைப் போன்றே அதுவும் ஒரு உணர்வு, அவ்வளவே.

பருவக் காதல் திருப்தியளிப்பதில்லை. ஏன்?

  • சுகவனம், அய்யம்பேட்டை.

உங்கள் பாதங்களைத் தேடி நீங்கள் ஓடினால் அது கிடைக்குமா?

நின்று பார்த்தால்தான் தெரியும். ஓட வேண்டிய அவசியமே இல்லை. காரணம் - நிற்க, அது அங்கே இருக்கிறது.

பருவக்காதலில் வெளியே எதையோ தேடி ஓட ஆரம்பிக்கிறீர்கள்... ஆனால், நிஜத்தில் உங்களைத் தேட வைப்பதும், அதைத் திருப்திப்படுத்துவதும் உங்களின் உள்ளேயேதான் உள்ளது.

அதனால்தான் பருவக் காதலில் திருப்தி கிடைப்பதில்லை.

தியான அக விதை

காதலில் Ph.D., செய்யுங்கள்
கடவுளே வந்து பட்டமளிப்பார்
நீங்கள் ஞானி என்று !

உலகமே உங்களைக் காதலிக்க வேண்டுமா?

ரோஹித் ஒரு பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனமொன்றில் பொறியாளராகப் பணியாற்றுபவர். NSP தியான முகாமில் அவர் கலந்து கொண்டார். NSP தியான முகாமின் துவக்க நாளன்று, அறிமுக உரையில், எப்போதும்போல், “நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் ” என்று சொன்னோம்.

கிட்டத்தட்ட எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். சில வயதானவர்கள் அமர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த இளைஞர் மட்டும் தனியே நின்று கொண்டிருந்தார். மற்றவர் வந்து அவருடன் அறிமுகப்படுத்திக் கொண்டாலும், அவர்களோடு இவர் தன்னைத் தொடர்பு படுத்திக்கவே இல்லை.

தியான முகாமின் இரண்டாம் நாள் “உங்களுக்கு என்னென்ன சந்தேகங்கள் இருக்கிறதோ, அதை எழுதி இப்பெட்டியில் போடுங்கள். உங்கள் கேள்விகளுக்குத் தெரிந்தவரை பதிலளிக்கிறோம்” என்று சொன்னோம்.

அடுத்த வகுப்பு இடைவேளையில் பல கடிதங்கள் இருந்தன. அதில் ஒரு கேள்வி, “என்னால் யாருடனும் உறவாட முடியவில்லை. அதற்கேற்றார்போல் என்னுடைய வேலையும் எப்போதும் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.

உங்களுக்கு என்னென்ன
சந்தேகங்கள் இருக்கிறதோ,
அதை எழுதி இப்பெட்டியில்
போடுங்கள். உங்கள்
கேள்விகளுக்குத் தெரிந்தவரை
பதிலளிக்கிறோம்.

கம்ப்யூட்டர் ஜீனியஸாக இருக்கிறேன். ஆனால், வெளியுலகத்தைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒரு உருளைக்கிழங்கு போன்று இருக்கிறேன். எனக்குத் தயவு செய்து உதவுங்கள்.

  • இப்படிக்கு ரோஹித்” என்று எழுதியிருந்தார்.

அந்த நபர் யார் என்று தெரிந்து கொள்ள, ‘ரோஹித்’ எனும் பெயரை வாசித்தோம்.

அறிமுக உரையன்று யாருடனும் பேசாமல் தனியாகவே இருந்த இளைஞர், தயங்கித் தயங்கி எழுந்து நின்றார்.

அப்போது அவரிடம் சொன்னோம், “அப்பா, இது உன்னுடைய பிரச்சினை மட்டுமல்ல. இது இங்குள்ள பலருக்கு இருக்கும் பிரச்சினை இது,” என்று சொன்னோம்.

அந்த இளைஞரின் முகம் மலர்ந்தது. “நீங்கள் மற்றவர்களுடன் பழக முயற்சி செய்வது போல், முதலில் உங்கள் வேலையோடு அழகாகத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் வேலை என்ன? மென்பொருள் உருவாக்கம் செய்வது இல்லையா...

வேலைக்காக எப்போதும் கம்ப்யூட்டர் முன்பே அமர்ந்திருப்பீர்கள்தானே!

கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருக்கும்பொழுது, மிக அழகாக அந்த கம்ப்யூட்டருடனேயே பழகலாமே. நீங்கள் கம்ப்யூட்டரை பார்ப்பதைப் போல் உங்களையும் கம்ப்யூட்டர் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது.

உண்மையில், இது மிகப் பெரிய தியானம்.

portrait

நீங்கள் மற்றவர்களுடன் பழக முயற்சி
செய்வது போல், உங்கள் வேலையோடு,
அழகாகத் தொடர்பு கொள்ள முயற்சி
செய்யுங்கள். உண்மையில், இது மிகப்
பெரிய தியானம்.

உங்களுக்குப் பிடித்தவருடன் அமர்ந்திருக்கும்போது எப்படி உணர்வீர்கள்?

உங்கள் உடலுக்குள் ஓர் உற்சாகமான அதிர்வாற்றலை உணர்வீர்கள் இல்லையா?. உங்களின் உற்சாகம் மற்றவரையும் குதூகலமாக்குகிறது.

அதேபோல்தான் ஒவ்வொரு நிகழ்வும் ...

நீங்கள் செலுத்தும் அன்பு, மற்றவர்களுக்குச் சேர்வது போல், மற்றவர்களின் அன்பும் உங்களை வந்தடைகிறது. இது ஒரு சக்தி சுழற்சி.

குழந்தைகளைப் பார்த்தீர்களென்றால், அவர்கள் எப்போதும் குதூகலமாவே இருப்பார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளுடனும் தொடர்பு கொள்வார்கள். மிகவும் இயல்பாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் கையில் எப்போதும் ஒரு பொம்மையை வைத்துக் கொள்வார்கள். அதை மட்டும் யாராவது வாங்க முயற்சித்தால் என்ன செய்கிறார்கள்?

கதறி அழுது, அடம்பிடிப்பார்கள்.

அதற்கு காரணம், அவ்வளவு முழுமையாக அந்த பொம்மையுடன் ஒன்றி இருப்பதுதான். குழந்தைகள் அவர்களுடைய பொம்மைக்குச் சோறு ஊட்டுவார்கள், புதுப்புது உடைகள் போட்டுவிடுவார்கள். பேசுவார்கள். அந்த பொம்மையுடன் பேசும்பொழுது, அந்த பொம்மையும் பதில் சொல்வதாகச் சொல்லுவார்கள்.

காதலிக்கும்போது, மணிக்
கணக்கில் ஒருவருக்கொருவர்
கண்களை உற்றுப் பார்த்துக்
கொள்ளும் காதலர்கள்,
திருமணத்திற்குப் பிறகு,
ஒருவருக்கொருவர்
முகத்தைக்கூடப் பார்த்துக்
கொள்வதில்லை.

ஆனால், நாம் என்ன செய்வோம்,
"குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்கள்?"
என்று அவர்களின் குதூகலத்திற்கான
காரணத்தைக் கண்டுகொள்ள மாட்டோம்.
நம்முடைய சொந்த துக்கத்திலேயே மூழ்கி
இருப்போம்.

அது ஒரு குழந்தை செய்யும் ஒரு சாதாரண செயல் என்ற அளவில்தான் பார்ப்போம்.

குழந்தையாயிருக்கும்பொழுது, நாமும்தானே குதூகலமாய் இருந்தோம். ஏன் இப்பொழுது மட்டும் இப்படி இருக்கவேண்டும் என்று யோசனை செய்வதே இல்லை.

நம்முடைய உறவுகளைப் பார்த்தோமென்றால், எப்படியேனும் விரிசல் இருந்துகொண்டே இருக்கிறது.

காதலிக்கும்போது, மணிக்கணக்கில் ஒருவருக்கொருவர் கண்களை உற்றுப் பார்த்துக் கொள்ளும் காதலர்கள், திருமணத்திற்குப்பிறகு, ஒருவருக்கொருவர் முகத்தைக் கூடப் பார்த்துக் கொள்வதில்லை.

ஆனால் ஒரு குழந்தை, ஒரு சாதாரண பொம்மை கிடைத்தாலும், அதனுடன் முழுமையாக பேசுகிறது. "என் பொம்மை, எனக்கு பதில் சொல்லவில்லை. என்னைக் கண்டுக்கொள்வதில்லை" என்று புகார் செய்வதில்லை.

தன் அன்பை முழுமையாக பொம்மைக்குச் செலுத்தும் குழந்தை, அதேபோன்று, அந்த பொம்மையிடமிருந்து, அதே அன்பைப் பெற்றுக் கொள்வதை உணர்கிறது.

இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?

உங்கள் அன்புக்குரியவர் கண்களை நீங்கள் பாசத்தோடு நோக்கும்போது, அந்த அன்பை அவர்கள் ஏற்றுக்கொள்வதனால்தானே மீண்டும் மீண்டும் அவருடைய கண்களைப் பார்க்கின்றீர்கள். அதனால்தான் அவர்கள் அன்பை வெளிப்படுத்தும்பொழுது, அவர்கள் அன்பை நீங்களும் ஏற்றுக்கொள்கின்றீர்கள்.

உங்களுக்குக் அன்புக்குரியவர் என்றால், குழந்தைக்கு ஒரு பொம்மை. மற்றவர்களுக்கு அது மலராக இருக்கலாம், தந்தையாக இருக்கலாம், தாயாக

portrait of the speaker

நீங்கள் செலுத்தும் அன்பு
மற்றவர்களுக்குச் சேர்வது போல்,
மற்றவர்களின் அன்பும் உங்களை
வந்தடைகிறது. இது ஒரு சக்தி சுழற்சி.

இருக்கலாம் .இப்படி யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

நீங்கள் மற்றவரோடு அன்போடு தொடர்பு கொள்ளும்போதுதான், உங்களுடைய சக்தி, ஒரு முழுமையான வட்டமாக மீண்டும் உங்களுக்கே திரும்ப வருகிறது.

நீங்களும் அன்பைப் பொழிந்து, மற்றவர் செலுத்தும் அன்பையும் பெறுகிறீர்கள்.

இது முழுமையாக நடப்பதால்தான், குழந்தைகள் சோர்வடைவதில்லை. ஆனால், நாம் சோர்வடைகிறோம். காரணம், நாம் இந்தக் கலையை மறந்து விட்டோம்.

இந்தக் கலையை மீண்டும் வளர்த்துக் கொண்டால், குழந்தைகள் போல் சகஜமாக விளையாடுவீர்கள்.

மனிதர்களிடம் மட்டும்தான் தொடர்பு கொள்ள முடியும் என்றில்லை.உங்களைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு பொருளிலும் சக்தியிருக்கிறது. அது கல்லாக இருக்கட்டும், மரமாக இருக்கட்டும். உங்களைப் போல் அதுவும் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் அதைப் புரிந்து கொள்வதில்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை. நம்மால் உணர முடிவதில்லை.

இந்தத் தியானத்தை செய்து வாருங்கள். “நீங்கள் எப்போதும் குதூகலத்துடன் இருப்பீர்கள் Whirlpool of love அன்பின் சுழலாக மாறுவீர்கள்” என்று அவருக்கு பதிலளித்தோம்.

நீங்கள் மற்றவரோடு அன்போடு
தொடர்பு கொள்ளும்போது
தான், உங்களுடைய சக்தி ஒரு
முழுமையான வட்டமாக மீண்டும்
உங்களுக்கே திரும்ப வருகிறது.
நீங்களும் அன்பைப் பொழிந்து,
மற்றவர் செலுத்தும் அன்பையும்
பெறுகிறீர்கள்.

தியானம்

meditation icon

கண்ணாடி முன் நின்று முகம் பார்க்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா?

கண்ணாடி முன் நின்று உங்கள் முகம் கண்ணாடியில் பிரதிபலிப்பதை பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.

இப்போது, அதை அப்படியே மாற்றிச் செய்யுங்கள்.

மிக மிக சுலபமானது. இரசித்து இரசித்து உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து உங்களுக்கு நீங்களே அன்பைப் பொழியும் நீங்கள், கண்ணாடியில் இருக்கும் முகமும், உங்களை அதே அன்போடு காண்பதைச் சாட்சியாகப் பாருங்கள்.

எப்படிக் கண்களை விரித்து உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். உங்களுக்குள் அதே அன்பு பொழியப்படுவதை உணர்வீர்கள்.

சில நாட்களுக்கு இந்தத் தியானத்தை செய்து வாருங்கள். கண்ணாடி முன் மட்டும் அல்ல, எந்தப் பொருள் முன் நின்றாலும், நீங்கள் அன்பால் நிறைக்கப்படுவதை உணர்வீர்கள்.

நீங்கள் அன்பை வீசும் தென்றல் காற்றாக மாறுவீர்கள்.

ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பீர்கள்.

நீங்கள் ஆனந்தமாய் இருப்பதோடு, மற்றவர்களையும் ஆனந்தமாய் வைத்திருப்பீர்கள்.

வாங்க

சதிக்கலாம்

Photograph of Swami Nithyananda smiling

யார் முடிவு செய்வது?

கல்லூரி வாலிபர் ஒருவரோடு நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. நிறைய சந்தேகங்களோடு வந்த அந்த வாலிபர் கேட்டார்.

"இவ்வளவு மடத்தனமாய் இந்த உலகத்தைப் படைத்தது யார்?"

"நிச்சயமாய் கடவுள்தான்"

"யார் என்னை இவ்வளவு கஷ்டங்கள் நிறைந்த பூமிக்கு அனுப்பி வைத்தது?"

"அதுவும் கடவுள்தான்."

"கடவுள்!
கடவுள்!
கடவுள்

யாரந்தக் கடவுள்?"

"இதிலிருந்து விடுதலை தந்து, என்னைக் காப்பாற்றப் போவது யார்?"

"அதுவும் கடவுளைத் தவிர, வேறுயாராக இருக்க முடியும்?"

"கடவுள்! கடவுள்! கடவுள்...

யாரந்தக் கடவுள்?"

“நீங்கள்தான் அந்தக் கடவுள்"

இதுவரைக்கும் தலையாட்டித் தலையாட்டி கேட்டவரால், இதற்கு மேல் ஒப்புக்கொள்ள முடியவில்லை. காரணம், கடவுள் என்ற வார்த்தையே மாயையாம்.

கடவுள் என்ற நான்கு எழுத்தால், ஞானிகள் குறிப்பிடும் கடவுளுக்கும் மனிதர்கள் குறிப்பிடும் கடவுளுக்கும் சம்பந்தமேயில்லை.

அதனால்தான், “நீங்கள்தான் அந்தக் கடவுள்” என்று சொன்ன உண்மையை, அவரால் ஜீரணிக்கக்கூட முடியவில்லை.

பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவர், விதண்டாவாதமாக இப்படிக் கேட்டார், "கடவுள் விரும்பிப் படைத்தது பிச்சைக்காரர்களையா? பணக்காரர்களையா?"

"அவர் விரும்பிப் படைத்தது என்றால் பிச்சைக்காரர்களைத்தான்."

"அதெப்படி நிஜமாகும்?"

பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களருகே நடுத்தர வயதுப் பிச்சைக்காரர் ஒருவர் வந்தார். அவரிடம் கேட்டேன் "உழைத்துச் சாப்பிடலாமில்லையா? உடல் உறுதியாய்த்தானே இருக்கிறது. ஏன் இப்படி பிச்சை எடுக்கிறீர்கள்?"

Nithyananda

“நீங்கள்தான் அந்தக் கடவுள்”

“அது என் விருப்பம். கை நீட்டினா சோறு,கால் நீட்டினா தூக்கம்...

என்னவொரு இனிமையான வாழ்க்கை இது. அரைஜாண் வயிற்றுக்காக அல்லல்பட நான் விரும்பவில்லை. அதனால்தான், இந்த மாதிரி வாழ முடிவெடுத்தேன். எந்தப் பொறுப்புமில்லாமல் என்ன நிம்மதியான வாழ்க்கை இது?” எனப் பிச்சைக்காரர் பேசியதைக் கேட்டு, பேச்சாளர் அதிர்ந்து நின்றார்.

சமுதாயத்தின் இன்னொரு பக்கத்தைப் பார்த்ததில் ஆடிப்போய் விட்டார்.

டாக்டராவதும், இன்ஜினியராவதும் பெரிய இலக்கு எனப் பலர் மனதில் பதிந்திருக்கிறது. அதிக மதிப்பெண் பெற்று, ஐந்தாறு வருடங்கள் இந்தப் படிப்பைக் கஷ்டப்பட்டுப் படித்து முடித்தபின்தான் ,பலருக்கு நிஜ நிலவரமே தெரிய வருகிறது.

நிறைய பணம் சம்பாதிக்கலாம், நிறைய பேர் புகழ் கிடைக்கும் என எதிர்பார்த்துப் பெரிய படிப்புப் படித்து முடித்திருப்பார்கள். ஆனால், அவர்களோடு, படித்தவர்களில் சிலர், ஏதோவொரு வியாபாரம் செய்து இலட்சக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பார்கள்.இவர்களைச் சந்தித்தால், அந்த மருத்துவரின் மனம் என்ன ஆகும்.

மருத்துவராக ஆக முடிவெடுத்தவர் வியாபாரியானாலும், வியாபாரியாக மாற முடிவெடுத்தவர் மருத்துவராக மாறினாலும் பிரச்சினைதான்.

என்னதான் சாதித்தாலும், தீரா ஏக்கம் மனதின் ஒரு மூலையில் இருந்து கொண்டேயிருக்கும்.

கடவுள் என்ற நான்கு
எழுத்தால், ஞானிகள்
குறிப்பிடும் கடவுளுக்கும்
மனிதர்கள் குறிப்பிடும்
கடவுளுக்கும் சம்பந்தமேயில்லை.

நீங்கள் செய்யும் முடிவுகளுக்கும்,
வாழ்வின் நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள
வித்தியாசம்தான், உங்களின் வாழ்வை
நீங்கள் வாழ்ந்தீர்களா? இல்லையா? என்பதை
நிர்ணயிக்கின்றது.

நீங்கள் செய்யும் சாதனையல்ல.

அந்தக் கல்லூரி வாலிபரைப்போல, நம் கஷ்டங்களுக்குக், கடவுளையும் சுற்றியிருப்பவர்களையும் கைகாட்டுபவர்களால், வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தரமான முடிவுகளை எடுக்க முடியாது.

தரமான, ஸ்திரமான முடிவுகளை எடுப்பவர்களால், பட்டிமன்றப் பேச்சாளர்போல் விதண்டாவாதம் பேசவும் முடியாது.பிச்சைக்காரர்களைப்போல் தவறான வாழ்வைத் தேர்வு செய்யவும் முடியாது.

இப்போது நீங்கள் வாழும் வாழ்வு,உங்களின் விருப்பம். இது உங்களின் சுய முடிவுக்குக் கிடைத்த பரிசு.

வாழ்வு இனிதாக இல்லை என்றால், உங்களின் முடிவெடுக்கும் திறனிலும், தரத்திலும் தகராறு இருக்கிறது என்று அர்த்தம்.

வாழ்வு இனிதாக இருப்பதற்கு, உங்களின் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்க வேண்டும். அதற்கான தியானம்...

portrait of spiritual teacher

நீங்கள் வாழும் வாழ்வு உங்களின் விருப்பம். இது உங்களின் சுய முடிவுக்குக் கிடைத்த பரிசு. வாழ்வு இனிதாக இல்லை என்றால், உங்களின் முடிவெடுக்கும் திறனிலும், தரத்திலும் தகராறு இருக்கிறது என்று அர்த்தம். வாழ்வு இனிதாக இருப்பதற்கு உங்களின் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்க வேண்டும்.

தியானம்

Decision making capacity எனும் உளவியல் தகுதியே ‘யார் தலைவர்? யார் தொண்டர்?' என்பதை நிர்ணயம் செய்கின்றது.

சூழ்நிலைக்கேற்ப, மனதிலிருந்து தாவிக் குதிக்கும் முடிவுகளை, சாதாரண மனிதரால் கட்டுப்படுத்த முடியாது.

சாதாரண மனிதரை, முடிவுகள்தான் கட்டுப்படுத்துகின்றன.

அவரின் வாழ்வையே, முடிவுகள்தான் முடிவு செய்கின்றன.

புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க, மனம் சகஜ நிலையில் இருக்க வேண்டும்.

மனம் சகஜமாகப் புரிந்து கொள்ளுதல் அதிகரிக்க வேண்டும்.

மனித வாழ்வு பற்றிய ஞானக் கருத்துக்களை நிறையப் படித்தும், கேட்டும் தெரிந்துகொள்ள ஆரம்பியுங்கள். புரிந்து கொள்ளுதல் அதிகரிக்கும்.

புரிந்து கொள்ளுதல் அதிகரிக்க, அதிகரிக்க, மனம் சகஜமாவதும், புத்திசாலித்தனம் பெருகுவதும் இயல்பாய் நிகழும். முடிவெடுக்கும் தரமும், திறனும் தானாய் அதிகரிக்கும்.

முடிவெடுப்பதைப் பற்றி முடிவெடுங்கள். வாழ்வின் முடிவு வரை ஆனந்தம் வர வழி பிறக்கும்.

தியானம் செய்தாலே நம்முடைய கர்மங்கள் எல்லாமே அழிந்துவிடுமா? - புஷ்பராஜ், லால்குடி.

தியானம் செய்வதால் கர்மங்கள் அழிவதோடல்லாமல், கர்மங்களை அழிக்கும் கடவுளாகி விடுவீர்கள்.

உங்களை நிர்ணயிப்பது எது? யார் ?

‘மஞ்சள் நிறத்திற்குப்’ பேர் போனவர்கள் இந்தியர்கள். அமெரிக்க வெள்ளையர் நடுவில் சென்றால், இதே இந்தியர் ‘கருப்பர்’. ஆப்ரிக்கக் கருப்பர் நடுவில், இதே இந்தியர், ‘சிவந்தவர்,’ ‘வெள்ளையர்’.

எதை வைத்து இங்கு உங்களின் நிறம் நிர்ணயிக்கப்படுகிறது ? நிறத்தை நிர்ணயித்தது தனி மனிதரையா? அல்லது சூழ்நிலையையா? . . .

நீங்கள் அழகற்றவர், ஒல்லியானவர், குட்டையானவர். . . அது... இது... என நிர்ணயமாவதின் இரகசியம் புரிகிறதா?

ஒல்லியான நீங்கள் சோமாலியா சென்றால், அங்கிருப்பவர்கள், “பார்! எவ்வளவு திடகாத்திரமாக இந்த மனிதரிருக்கிறார்,” என்று உங்களைப் பற்றி பெருமைப்படப் பேசுவார்கள்.

ஏதாவதொரு வகையில், ‘நீ
குறைந்தவன், தாழ்ந்தவன்’ என்ற
எண்ணத்தை எல்லோருக்கும்,
எப்படியாவது விதைத்து
விடுகின்றன இந்தச் சமூகச்
சூழ்நிலைகள்.

உயரம் கொஞ்சம் கம்மியான
நீங்கள், குள்ள மனிதர்கள் வாழுமிடத்திற்கு
சென்றால், உங்களைத் தலைநிமிர்ந்து
பார்ப்பார்கள். உங்கள் அளவுக்கு
வளரவில்லையே எனத் தவிப்பார்கள்.

இப்போது நீங்களே சொல்லுங்கள் ...

இந்தத் தவிப்பு நியாமானதா?

தேவைதானா?

நீங்கள் எவ்வளவு அழகானவர், எந்த அளவுக்கு திடகாத்திரமானவர், எவ்வளவு புத்திசாலி, எவ்வளவு பணம் படைத்தவர் என்ற எல்லாமே உங்களால் நிர்ணயிக்கப்பட வேண்டியது. ஆனால், தொடர்ந்து, அதை சமுதாயமும், சுற்றியிருக்கும் சூழ்நிலைகளும்தான் நிர்ணயிக்கின்றன.

ஏதாவதொரு வகையில், “நீ குறைந்தவன், தாழ்ந்தவன்” என்ற எண்ணத்தை எல்லோருக்கும், எப்படியாவது விதைத்து விடுகின்றன இந்தச் சமூகச் சூழ்நிலைகள்.

புத்திசாலி, அடுத்தவரை முன்மாதிரியாய் வைத்து, தன்னுள், தன்னைப்பற்றி விதவிதமாய் விதைக்கப்பட அனுமதிக்கமாட்டார்.

நோய்களின் காரணகாரியங்களைப்பற்றி விளக்கும்போது, ஆழமான வேதப் பகுதி ஒன்றில் இப்படி வருகிறது...

“ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு மன அமைப்பு, ஒவ்வொரு விதத்தில் காரணமாயிருப்பதால்தான், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய்கள் இருக்கின்றன” மேலும், அதே வேதப்பகுதி தொடர்ந்து சொல்கிறது,

‘அடக்குதல்’ (Supression) எனும் மனஅமைப்பு, தோல் நோய்களையும், ஒவ்வாமையையும் (Alergy), நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களையும்;

‘பயப்படுதல்’, நரம்புத் தளர்ச்சியையும்; ‘கவலைப்படுதல்’, வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளையும்; ‘அதீத எதிர்பார்ப்புகள்’, இதய நோய்களையும் உருவாக்குகின்றன.

portrait

ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு மன அமைப்பு, ஒவ்வொரு விதத்தில் காரணமாயிருப்பதால்தான், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய்கள் இருக்கின்றன. எனப் படிப்படியாக எல்லா நோய்களையும் விளக்கும் வேத கருத்துக்கள், சில வருடங்களுக்கு முன்பு வரை நம்புபவர்களின் நம்பிக்கையாக மட்டுமே இருந்தது.

ஆனால், இன்றைய மனம், உடல், மருந்து பற்றிய மனோதத்துவ ஆராய்ச்சிகள், வேதங்கள் சொல்லும் அதே கருத்துக்களை, பல ஆய்வுகளுக்குப் பின், தாங்கள் கண்டுபிடித்தக் கருத்துக்களாக வெளியிட்டிருப்பது, வேதங்கள் உண்மையானவை என்பதற்கான ஆதாரங்கள். வேதக்கருத்துகள், எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைக் கருத்துக்களாக இன்று மாறியிருக்கிறது.

அதே வேதத்தில் வரும் ஓர் ஆச்சரியம் தரும் பாராயணம் ஒன்று, ‘உங்களுக்கும், உங்கள் உடலுக்கும் இடையில் சொருகப்பட்ட ஆப்பிற்குச் சமம்

  • மற்றொரு உடல் மீதான கவர்ச்சியும் அந்த உடல் போல் நான் மாறக்கூடாதா? என்ற எண்ணமும்! ’

இப்படிப்பட்ட மன அமைப்புதான் பிற்காலத்தில் புற்றுநோயாகப் புறப்படும்” எனச் சொல்கிறது. மேற்கண்ட ஒவ்வொரு விதமான மன அமைப்பும்தான், ஒவ்வொரு விதமான நோயை உங்களுக்குள் உருவாக்குகின்றன.

இத்தனை விதவிதமான மன அமைப்புகளை உருவாக்குவது விதவிதமான சமூகச் சூழ்நிலைகள்தான்.அதுவும் மனிதர்களுக்குள், அவர்கள் பற்றிய விவரம் தெரியும் பக்குவம் பெறுவதற்கு முன்பே, பல வகையான மன அமைப்புகள் உருவாக தேவையான விதைகளைச் சமுதாயம் விதைத்துவிடுகிறது.

இந்த விதைத்தல் செயல் தடுக்கப்பட்டுவிட்டால், நம்முள் ஆனந்தம் பெருகுவதோடு, எதிர்கால நோய்களும் தடுக்கப்பட்டுவிடும்.

எல்லாப் புது நாகரிகத்திற்கும்
அடிப்படையானது தன்னம்பிக்கை If you
radiate confidence, whatever you do and
wear will become fashion.

உங்களின் தன்னம்பிக்கைக்கு இந்த விதைத்தல் செயலைத் தடுத்து நிறுத்தும் சக்தி உண்டு.

> ‘உங்களுக்கும், உங்கள்
> உடலுக்கும் இடையில்
> சொருகப்பட்ட ஆப்பிற்குச்
> சமம் - மற்றொரு உடல் மீதான
> கவர்ச்சியும், அந்த உடல்
> போல் நான் மாறக்கூடாதா
> என்ற எண்ணமும்! ’

உங்களளவில் நீங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தால், உங்களை யாராலும் அசைக்க முடியாது. உங்களுள் தவறான கருத்துக்களை விதைக்க முடியாது.

தியானம்

தியான சத்சங்கத்திற்காக முதல் முறை அமெரிக்கா செல்வதற்கு முன் விசா எடுக்கச் சென்றிருந்தேன். அப்போது நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம்.

விசா கொடுக்க விசாரணை செய்யும் அந்த கிறிஸ்தவ மனிதர் கேட்டார்... "அமெரிக்காவில் 30 வயது தாண்டிய பிறகே மதப்போதகராக முடியும். உங்களுக்கு வெறும் 27 வயது. நீங்கள் அங்குபோய் என்ன போதனை செய்யப் போகிறீர்கள்?"

பெங்களூர் தியான சத்சங்கங்களில் பேசிய சில ஆங்கிலச் சொற்பொழிவு ஒலிநாடாக்களைக் கொடுத்து, "இவற்றை ஒருமுறை கேட்டுப் பாருங்கள். கேட்டுப் பார்த்தபின் முடிவு செய்யுங்கள்", எனச் சொன்னேன்.

அடுத்து அவர், "அமெரிக்காவில் கோட் சூட் போட்டிருந்தால்தான் மதிப்பார்கள். உங்களின் உடை அங்கே நாகரிகமற்ற உடையாகக் கருதப்படும்.இந்த உடையிலிருந்தால் பல ரெஸ்டாரண்ட்டுகளில் உள்ளே நுழையக்கூட அனுமதிக்க மாட்டார்கள். எனவே, உங்கள் உடையை மாற்றிக்கொள்வதைப்பற்றி யோசியுங்கள்" என்றார்.

உடனே பதிலளித்தேன், "ஒரு வாரம் மட்டும் அமெரிக்காவிலிருக்க விசா கொடுங்கள்.

Nithyananda

மற்றவர் உடலைப் பார்த்து, தன் உடல்
மெலிந்திருப்பதாக நினைப்பது, ஆசைகளை
அடக்குவது, பயப்படுவது, கவலைப்படுவது
போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தால்,
தன்னம்பிக்கை வளர ஆரம்பிக்கும்.

இந்தியர்களின்பெருமைமிக்க இந்த உடையை விரும்பி அணியும் அமெரிக்கர்களை உருவாக்குகிறேன். அவர்களின் உடை மாறும்,” என்ற பதில் வார்த்தைகளை கேட்ட அவர் சந்தோஷமாய்ச் சிரித்துச் சொன்னார், “உங்களுக்கு உங்களைப்பற்றி எவ்வளவு கான்ஃபிடன்ஸ். இந்த தன்னம்பிக்கைமட்டும் இன்றைய வளரும் சமுதாயத்திற்குக் கிடை த்தால் உலகமே மாறிவிடும்”, என்றார்.

தன்னம்பிக்கையை உங்களுக்குள் வளர்ப்பது பெரிய அசுர சாதனை அல்ல. அது எளிதானது.

மற்றவர் உடலைப் பார்த்து, தன் உடல் மெலிந்திருப்பதாக நினைப்பது, ஆசைகளை அடக்குவது, பயப்படுவது, கவலைப்படுவது போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தால், தன்னம்பிக்கை வளர ஆரம்பிக்கும்.

உங்கள் உடலை, உங்கள் மனதை முழுமையாய் நம்புங்கள். உள்ளதைக் கொண்டு உயரப்பறக்க ஆரம்பியுங்கள் .

உங்களிடம் இல்லாத அழகுக்காவும், இல்லாத அறிவுக்காகவும் ஏங்குவதை நிறுத்துங்கள்.உங்களிடம் இருக்கும் அழகையும், அறிவையும் மூலதனமாக்கி வாழ்வை அணுகுங்கள். தன்னம்பிக்கை பெருகும்.

தன்னம்பிக்கை பெருகப் பெருக... மன அமைப்பு பக்குவப்படும். தவறான விஷயங்கள் உங்களைத் தாக்காத, திடகாத்திரமான நிலையை அடைவீர்கள்.

மகா வாக்கியம்

“நீங்கள்தான் உங்களை உருவாக்க வேண்டும்.”

உங்கள் பெயர் மற்றும் உங்களைப்பற்றிய வர்ணனைகள் நீங்களல்ல. இவற்றைத் தாண்ட்டிய உங்களை வர்ணிக்க, வார்த்தைகள் வளரவேண்டும்

கள்ளிச் செடிபோல் அள்ளித் தெளித்தக் கருத்துக்களின் கொத்தாக வளர்ந்திருக்கிறது, ‘நீங்கள் யார்? நீங்கள் எப்படிப்பட்டவர், எனும் அபிப்ராயம். போதும். இனியும் கருத்துக்களை உங்களுள் தெளிக்க விடாதீர்கள்.

உங்களைப்பற்றிய உண்மைகளைக் கண்டுபிடியுங்கள். உண்மையான நீங்கள் உருவெடுப்பீர்கள்.

வயது 40 ஆகியும் மோசமான எண்ணங்கள் குறையவில்லை. இது எதனால் ?

திரு.ஜெலானி.

வயதுக்கும், மனதின் சலனத்திற்கும் சம்பந்தமேயில்லை. இது போன்ற எண்ணங்கள், எண்ணங்களின் (Thought per second) எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போகும்போதுதான், சலனம் ஒருவருக்குள் ஆட்டம் போடுகின்றன.

இதற்காகக் குற்றஉணர்ச்சி கொள்ள வேண்டாம். அதுபோன்ற எண்ணங்கள் வரும்போது, அவற்றைக் கவனிக்க ஆரம்பியுங்கள்.

ஆசிரியரைப் பார்த்ததும் அடங்கும் மாணவர்களின் சலசலப்புப் போல, உங்களின் மனச்சலனமும், உங்களின் கவனமும் அதிகமாகும்போது அடங்கிப் போகும். இதன் வலிமை புரிய, செய்து பாருங்கள்.

எண்ணங்களின் எண்ணிக்கைக் குறைந்தால், மனம் எளிதாக உங்களின் கட்டுக்குள் வந்துவிடும்.

தியான சூத்திரத்தைப் பயன்படுத்தினால், எண்ணங்களைக் கவனிக்கும் கலை எல்லோருக்கும் எளிதில் சாத்தியமாகும்.

தியான சூத்திரம்,

“எண்ணங்களை உருவாக்காதீர்கள்! .

நிறுத்தாதீர்கள்! .

வளர்க்காதீர்கள்.!”

எந்த எண்ணங்கள் வேண்டுமானாலும் வரட்டும், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எப்போது வேண்டுமானாலும் அவை கலைந்து போகட்டும். உள்ளிருக்கும் குப்பைகள்தான் வெளிவருகின்றன.

வரட்டும். தடுக்காதீர்கள்!.

விழிப்புணர்வோடு தொடர்ந்து எண்ணங்களை அமைதியாய் அமர்ந்து கவனியுங்கள்.

எண்ணங்கள் உங்கள் வசப்படும் அற்புதம் நிகழும்.

வெற்றி... அது உங்கள் கையில்

1. சன்யாஸ வாழ்க்கை?

அது ஒரு தியான நுட்பம்.

2. சம்சார வாழ்க்கை?

அது ஒரு வாழ்க்கை நுட்பம்.

3. தியானத்திற்கும், உணவு முறைக்கும் சம்பந்தம் உண்டா?

உண்ணுதலே தியானம்தான். அதில் விழிப்புணர்வைச் சேர்த்தால் போதும்.

4. தூக்கத்தை தியானமாக்க முடியுமா?

முடியாது.

தியானத்திற்கும், உணவு
முறைக்கும் சம்பந்தம்
உண்டா?...
உண்ணுதலே
தியானம்தான் அதில்
விழிப்புணர்வைச்
சேர்த்தால் போதும்.

5. ஏன்?

"ஏனென்றால், நீங்கள் பிறந்ததிலிருந்து இன்றுவரை தூங்கிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். புதிதாய் தூங்கவெல்லாம் முடியாது."

  • ஜென் வாக்கியம்.

6. அப்படியென்றால் என்ன செய்ய? விழித்துக்கொள்ளுங்கள்.

7. அதற்கு என்ன செய்ய? தியானம் செய்யுங்கள்.

8. இரவு கண்விழித்து, காலையில் லேட்டாகவே எழுந்திருப்பது சரியான வாழ்க்கை முறையா?

லேட்டாகப் படுத்து சீக்கிரமாக எழுந்து கொள்வது மட்டுமே சரியான வாழ்க்கை முறை. அதை மீறிய எதுவாக இருந்தாலும், சக்தி ரீதியான ஓட்டையே.

9. இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்தியாவின் தூண்களாக மாறவேண்டியவர்கள். உளுத்துப்போன மூங்கிலாக மாறிக் கொண்டிருக்கக் கூடாது.

10. அப்படியென்றால்? இளஞ்சிங்கங்களே! அறிவை மட்டும் வளர்ப்பது ஆபத்து. ஆற்றலையும் வளர்க்க வேண்டும்.

‘உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என்ற வரி உங்கள் ஒவ்வொருவரின் தினசரி வாழ்விலும் நடைமுறையாக வேண்டும்.

11. ஆற்றல் என்றால்? சக்தி (Energy).

Swami Vivekananda photo and quote

இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்தியாவின் தூண்களாக மாறவேண்டியவர்கள். உளுத்துப்போன மூங்கிலாக மாறிக் கொண்டிருக்கக் கூடாது.

12. அறிவு - ஆபத்து! ஏன்?

ஆற்றல் அதிகரிக்காத அறிவு, ஆளில்லாத ஹைவேயில் முடுக்கி விடப்பட்ட ரேஸ் காருக்குச் சமம். இது ஆபத்து. யாரையும் மோதலாம். எதிலும் மோதலாம்.

13. அப்படின்னா வாழ்வில் ஒரு த்ரில், ஒரு விறுவிறுப்பு வேண்டாமா?

இப்படித் துடுக்காகக் கேட்பதற்கு வெடுக்கென பதில் சொல்வது வெகு எளிது. அந்த பதில் வாயை மூட வைக்கும். ஆனால், மனதைத் திறக்க வைக்காது. மகிழ்ச்சியைப் பொங்க வைக்காது.

14. மன்னிக்கவும் உதவுங்கள்!

அறிவு என்பது மனோபலம்.
ஆற்றல் என்பது உடல்பலம்.
ஆனந்தம் என்பது ஆன்மபலம்

மனோபலத்தை மட்டுமே அதிகரித்தால், வாழ்வில் ஒரு கட்டுப்பாடு (Control Mechanism) இல்லாமல் சென்று விடும். உடல் பலம் நிச்சயமாக அதிகரிக்கப் படவேண்டும்.

விவேகானந்தர்கூட உடல் பலத்தை இளைஞர்கள் அதிகரித்தாக வேண்டியது மிக முக்கியம் எனக் குறிப்பிடுகிறார்.

15. உடல்பலம், மனோபலம், ஆன்மபலம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் அதிகரிக்க வழியிருக்கிறதா?

இருக்கிறது.

ஆற்றல் அதிகரிக்காத அறிவு,
ஆளில்லாத ஹைவேயில் முடுக்கி
விடப்பட்ட ரேஸ் காருக்குச் சமம்.
இது ஆபத்து.
யாரையும் மோதலாம்.
எதிலும் மோதலாம்.

16. என்ன?

தியானம்.

icon

# தியானம்

நின்று பேசக்கூட நேரம் போதவில்லை.

24 மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கிறேன். உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

எதை செய்வது? எப்படி செய்வது? எப்போது செய்வது? என்று தெரியாமல் குழப்பத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது இன்றைய வாழ்க்கை முறை.

அவசர கதியில் இயங்குவது, செயல்படுவது என்பது இன்றைய வாழ்க்கை முறையாக (Life style) ஆகிவிட்டது.

சுறுசுறுப்பாக (Active) ஆக இயங்குவதற்கும், அவசரமாக (Hurry) செயல்படுவதற்கும், மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது

சுறுசுறுப்பாக இயங்கிய பின், நீங்கள் ஓய்வாக, தளர்வாக (Relaxed) ஆக இருப்பீர்கள். அவசர அவசரமாக ஒரு செயலைச் செய்தபின், அமைதியற்றவராக (Restless) இருப்பீர்கள்.

In hurry, be very clear, you will be delayed.

Hurry itself creates confusion, that will delay the result.

அவசர அவசரமாக தெளிவில்லாமல் செயல்படும் ஒருவரால், மேலோட்டமாக மட்டுமே செயல்பட முடியும்.

உயிரின் ஆழத்திலிருந்து செயல்பட, நிதானம் அவசியம்.

உங்களை வெற்றி பெறச் செய்யும் இந்த ஞானக் கருத்துக்களைத் தியானியுங்கள்.

நிதானம், தியானத்தால் கிடைக்கும் உபவிளைவுகளில் கிடைக்கும் நற்பலன்களில் ஒன்று.

தியானம் செய்பவர் எத்தகைய சூழ்நிலையையும் எளிதாகப் புரிந்து கொண்டு உயிரின் ஆழத்திலிருந்து நிதானமாய் செய்வார்.

உங்கள் வாழ்க்கையில் தியானத்தைச் சேருங்கள்.

வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

நீங்களும் இளவரசர், இளவரசிதான்

மனித உடலுக்கு எலும்புகள்போல், மனதிற்கு எண்ணங்கள்!. எண்ணங்களே இல்லையென்றால், மனமே இல்லை. எண்ணங்களின் தொகுப்பு மனம்.

Mind is nothing but collection of thoughts.

இதில் வேடிக்கை என்னவென்றால், எலும்புகள், வளைந்தோ, நெளிந்தோ போய்விட்டால், மனிதன் குட்டையாகவோ, கூனாகவோ மாறவேண்டியதுதான்.

எண்ணும் விதம் களங்கப்பட்டதாகவோ, ஆனந்தத்திற்கு எதிரானதாகவோ இருந்தால், மனமும் கூனாகவோ, குருடாகவோ மாறிவிடும்.

Mind is nothing
but
collection of
thoughts.

விதவிதமான எண்ணங்களைத் தனக்கு விவரம் தெரிந்த நாள்முதல் மனிதர்கள் சேகரிக்க ஆரம்பிக்கிறார்கள். மனம் என்னும் குழந்தை வளர ஆரம்பிக்கிறது.

ஒரு சின்னக் கதை...

ஐந்துவயதில் காணாமல் போன, தன் நொண்டிக் குழந்தையை நினைக்கும் போதெல்லாம் பித்துப்பிடித்தவர் போல மாறி விடுவார் நவாப்.

நவாப்பிற்கு துக்கம் தாளா நிலைக்குச் செல்லும் போதெல்லாம், தளபதியை அழைத்து, "போய் என் மகனைக் கண்டுபிடியுங்கள். என் மகனில்லாமல் நாட்டுக்குள்ளே வரக்கூடாது. வந்தால், மரணதண்டனை நிச்சயம்" என்று அனுப்பிவிடுவார்.

பத்து வருடத்திற்குள் பதின்மூன்று தளபதிகளைச் தேடச்சொல்லி அனுப்பிவிட்டார். எனவே, தளபதி பதவி என்றாலே, அரசவையில் பீதிகொள்ள ஆரம்பித்தார்கள். பதினாலாவது தளபதி நியமிக்கப்பட்டார்.

ஒருநாள் துக்கம் உச்சத்திற்குச் செல்ல, அந்தத் தளபதியையும், எப்போதும் சொல்வதைச் சொல்லி, நாட்டைவிட்டு அனுப்பிவிட்டார். இந்தத் தளபதி புத்திசாலி. வித்தியாசமாக யோசித்துப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தன் காவலாளிகளிடம் அவர்கள் கண்ணில் படும் பதினைந்து வயது மதிக்கத்தக்க எல்லா நொண்டிப் பிச்சைக்கார சிறுவர்களையும் அழைத்து வரச் சொன்னார்.

25 பிச்சைக்கார சிறுவர்களை அழைத்து வந்தார்கள். நவாப்பின் முகச்சாயலுக்குப் பொருந்தும் ஒருவரை தளபதி தேர்ந்தெடுத்தார்.

portrait

மனதில், எண்ணத்தில்
சிறு மாற்றம் நிகழ்ந்தால் போதும்,
ஆளையே மாற்றிவிடலாம்.

அந்தப் பிச்சைக்காரச் சிறுவனை வணங்கிய தளபதி, "இளவரசே, உங்களுக்காக, உங்கள் தந்தை காத்துக்கொண்டிருக்கிறார்", என்றார்.

பிச்சைக்காரன், "ஐயா... என்ன சொல்கிறீர்கள்?... நானொரு அனாதை பிச்சைக்காரன்." தளபதி, "இளவரசே! அப்படிச் சொல்லாதீர்கள், உங்களுக்கு விவரம் தெரியும் வயதடையும் முன்பே, நம் நாட்டிலிருந்து நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள். தயவு கூர்ந்து தாங்கள் நாட்டிற்குத் திரும்ப வரவேண்டும்", என்று காலில் விழுந்து சொல்ல, நொடியில் தலைகீழாய் மாறிப்போன பிச்சைக்காரன், "அப்படியா சொல்கிறாய் நீ! சரி, சரி, சீக்கிரம் பல்லக்கைக் கொண்டுவரச்சொல்" என ஒருமையில் பேச ஆரம்பித்தான்.

இளவரசன் உடையைக்கூட இன்னும் பிச்சைக்காரன் உடுத்திக்கொள்ளவில்லை. அதற்குள் மனதளவில் இளவரசனாகி, "அதைச் செய், இதைச் செய்" எனக் கட்டளையிட்டபடியிருந்தான்.

"இவன் எப்படி நடந்துகொண்டாலென்ன? நான் நாடு திரும்ப வேண்டும்" என்றெண்ணிய தளபதி, "நீ இளவரசன்", என்றதும், ஆட்டமாய் ஆடும் பிச்சைக்காரனைப் பார்த்து, "இதற்குப் பெயர்தான் அகங்காரமா!" என்றெண்ணித் தன்னுள் சிரித்துக்கொண்டார்.

மனதில், எண்ணத்தில் சிறு மாற்றம் நிகழ்ந்தால் போதும், ஆளையே மாற்றிவிடலாம்.

தவறான மாற்றம் அகங்காரம், சரியான மாற்றம் மன ஆரோக்கியம்.

"எண்ணங்களை உறிஞ்சி
உயிர்வாழும் மனம், தொடர்ந்து நிறம்
மாறிக்கொண்டேயிருக்கும்" - வேத இரகசியம்.

"எண்ணங்களை
உறிஞ்சி உயிர்வாழும்
மனம், தொடர்ந்து நிறம்
மாறிக்கொண்டேயிருக்கும்

  • வேத இரகசியம்."

ஒரு பெண்ணையோ, ஆணையோ தொடர்ந்து நான்கைந்து பேர், “நீ அழகு” எனச்சொல்லிவிட்டால் போதும், தான் அழகென்ற எண்ணம் அவருக்குள் கர்வமாக மாறிவிடும்.

அதே பெண்ணையோ அல்லது ஆணையோ, “நீ அசிங்கம்” எனத்தொடர்ந்து நான்கைந்து பேர் சொல்லிவிட்டால் போதும், தான் அசிங்கமென்ற எண்ணம் வருத்தமாக மாறிவிடும். எண்ணங்களில் புகுத்தப்படும் மாற்றங்கள், மனிதரையே மாற்றிவிடுகின்றன.

நவாப் கதையில், இதுவரை பிச்சைக்காரனாயிருந்தவனை இளவரசனாக நொடியில் மாற்றியது “நீ இளவரசன்” எனப் புகுத்தப்பட்ட புது எண்ணம்தான்.

கதாபாத்திரத்தை இன்னும் ஆழமாய்ப் பார்த்தால் புரியும்... இளவரசன், பிச்சைக்காரன் என இரண்டுமே உள்ளுலகின் எண்ணத்தைப் பொருத்தது. வெளியுலகைப் பொருத்ததல்ல. உங்களின் இன்றைய நிலைக்கு முழுக்க முழுக்க காரணமானது உங்களின் எண்ணங்கள்.

“நான் யார் தெரியுமா?” எனப் பெருமையாய் ஆரம்பித்த அரசரிடம், ஜென் ஞானி, “தெரியும்” என்றார்.

“அப்படியா!” என ஆச்சரியப்பட்டு, “என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? சொல்லுங்கள்” என்றார்.

“நீ ஒரு குரங்கு” என்றார்.

portrait of a man with a turban

இளவரசன், பிச்சைக்காரன் என இரண்டுமே உள்ளுலகின் எண்ணத்தைப் பொருத்தது. வெளியுலகைப் பொருத்ததல்ல. உங்களின் இன்றைய நிலைக்கு முழுக்க முழுக்க காரணமானது உங்களின் எண்ணங்கள்.

குருவின் வார்த்தைகளால் கோபம் கொப்பளிக்க வெகுண்டெழுந்தவரைச் சாந்தமாய்ப் பார்த்து உறுதியான வார்த்தைகளால் சொன்னார்...

"உட்கார். கோபப்பட்டு குரங்கென நிரூபிக்காதே.. இந்தக் கோபம் கலைந்தால் நீ குரங்கல்ல, கடவுள் என்பது புரியும்," என்றார்.

மனித மனது உறுதியற்றது. அதனால்தான், சதா மற்றவர்கள் புகுத்தும் எண்ணங்களுக்கு ஏற்றார்போல் நம்மை குரங்காட்டம் ஆட வைக்கிறது. ஓய்வே இல்லாதவர்களாக நம்மை மாற்றிவிட்டது.

தெளிவான எண்ணங்கள், மனதின் 'முதுகெலும்புகள்'.

லோகோ

# தியானம்

பிச்சைக்காரனை இளவரசனாகத் தன்னை தலைநிமிரச் செய்ய - "நீ இளவரசன்" என்ற எண்ணத்தை தளபதி புகுத்த வேண்டியிருந்தது.

ஒருமுறை யோசியுங்கள்!...

ஏன்! வெளியே இருப்பவர்கள்தான் நம் மனதின் எலும்புகளான எண்ணங்களை நிர்ணயிக்க வேண்டுமா? நாம் நிர்ணயிக்கக் கூடாதா?

உங்களின் களங்கப்பட்ட எண்ணங்களைக் கண்டுபிடியுங்கள். தவறான எண்ணங்களைத் தூக்கியெறிந்து, நல்ல எண்ணங்களை நீங்களே உங்கள் மனதில் நுழையச்செய்யுங்கள்.

புது மனதை, புது எண்ணங்களால் வடிவமைருங்கள், இது சாத்தியமானதே. நீங்களும் இளவரசன், இளவரசிதான் என்பதை உணர்வீர்கள்.

மகாவாக்கியம்

“மனதைச் செதுக்கலாம், புதுமனம் படைக்கலாம்”

செதுக்கப்படாத வரை, பாறைக்குள் அழகுச் சிலை ஒளிந்தேயிருக்கும்.

பாறை அழகுச்சிலையாவது சிற்பியின் கை வண்ணத்தால், உணர்வென்னும் உளியை உள்ளெடுத்து வராத வரை, மனம் கல்லாயிருக்கும் உணர்வால் செதுக்கச் செதுக்க மனம் அழகாகும். ஆரோக்கியமாகும்.

விரும்பினால், முயன்றால், நீங்களும் சிற்பியாகலாம், புது மனம் படைக்கலாம்.

பட்ட காலிலேயே படும் என்பது போலத் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான பிரச்சினைகளையே சந்திக்கிறேனே... ஏன்? என்ன தீர்வு?

  • சசீந்தரன், லால்குடி

கதைப்புத்தகம் ஒன்றை ஊன்றிப்படித்துக் கொண்டிருந்த நிட்டியிடம், அவரின் மனைவி முகத்தைத் திருப்பிச் சொன்னார்...

“நிட்டி, இனிமேல் நீங்கள்... ‘ம்ம்... அதுசரி... ஆமாம்’, என்று இனி சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் என் பேச்சை நிறுத்திக் கால்மணி நேரமாகிறது.”

இப்படி ஒரே நேரத்தில் இரட்டைச் செயல் செய்யும் மன வியாதி எல்லோரிடமும் இருக்கிறது. இது ஒரு தவறான மனப்பழக்கம். வண்டி ஓட்டிக்கொண்டே எதையாவது யோசிப்பது, சாப்பிட்டுக்கொண்டே டி.வி பார்ப்பது, படித்துக்கொண்டே எதையாவது கற்பனை செய்வது...... என இரட்டைச் செயல் செய்யும் போதுதான், மனிதர்களை இயந்திரத்தனம் தொற்றிக் கொள்கிறது.

எதையும் முழுமையாய்ச் செய்யாமல் இரட்டைச் செயல் செய்தால்... நிட்டி போல் எக்குத்தப்பாக மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஒரே மாதிரியான பிரச்சினைகளையே திரும்பத் திரும்ப ஒருவர் சந்திக்கக் காரணம், அவர் ஒரே ஒரு முறைகூட அந்தப் பிரச்சினையை முழுமையாய் அணுகவில்லை என்பதுதான்.

உடல் ஓரிடத்தில் இருக்க, எங்கோ மனம் சுற்றித்திரிவது, ஒரு மனப்பழக்கமாகவே மாறிவிட்டது. இது தொடர்கதையாகவும் மாறிவிட்டது.

பிரச்சினைகளை ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதும், சிந்திக்கும் மனம் சிறப்பாய்ச் செயல்படுவதில்லை. இரட்டைச் செயலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். பிரச்சினைகளை முழுமையாய் எதிர்கொள்ளுங்கள். எதைச்செய்தாலும் முழுமையாய்ச் செய்யுங்கள். வழக்கமான மனப்பழக்கம் வலுவிழக்கும். வழி பிறக்கும்.

எல்லாம் வல்லவர் நீங்கள்

புதிதாய் சொற்பொழிவாற்ற வந்திருந்த புதுப்பேச்சாளர் பார்வையாளர்களைப் பார்த்து நாகரீகமாய் கேட்டார்.

"நான் எவ்வளவு நேரம் பேசலாம்?"

உடனே எழுந்த ஒரு பார்வையாளர் சொன்னார்...

"நீங்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கோங்க. ஆனால், நாங்க பத்து நிமிடத்தில் எழுந்து போய்விடுவோம்," என்றார்.

புதுப்பேச்சாளர் ஆடிப்போனார்.

இந்தப் பேச்சாளர் ஆடிப்போனது போல, விதவிதமாய் தினம் தினம் மனிதர்கள் ஆடிப்போகிறார்கள்.

எல்லாம் வல்லவர் நீங்கள் எனும் உண்மையை உங்களுக்குத் தெரியவிடாமல் மறைப்பதே இந்த மமகாரம்தான்.

பேராசிரியர் ஒருவர், "எவ்வளவு நல்லவிதமாய் பழகினாலும், வாழ்ந்தாலும், உள்ளுலக சஞ்சலங்களைத் தவிர்க்க முடிவதேயில்லை. பலர், வெளியே சிரித்து உள்ளே அழுகிறவர்களாகவே இருக்கிறார்கள். நானும் அப்படித்தான். ஏன் இப்படி நிகழ்கிறது," எனக் கேட்டார்.

"அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையே நிகழும் இழுபறியால்தான் அப்படி நிகழ்கிறது."

"அகங்காரம் பற்றித் தெரியும், இதென்ன புதிதாய் மமகாரம்?"

"அகங்காரம் - நீங்கள் யார்? என வெளியுலகிற்குக் காட்டுவது.

மமகாரம் - நீங்கள் யார்? என உள்ளுலகில் நீங்கள் நம்புவது."

இரண்டுமே பொய்.

அகங்கார மிகுதியால், நிஜத்தில் ஒருவரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே தன்னைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்வார்.

நிஜமான அவரின் தகுதியைவிட, அதிகமான ஒரு பர்சனாலிட்டியாகத் தன்னை மற்றவர்களுக்குக் காட்டிக் கொண்டேயிருப்பார். இது தவிர்க்க முடியாதது. இந்த மிகைப்படுத்தலே அகங்காரம்.

மமகாரத்தின் இயல்புப்படியே, ஒருவர் தன்னைக் குறைத்து மதிப்பிடுவதைத் தவிர்க்க முடியாது.

இறுதியான உண்மைப்படி நீங்களும் கடவுளென்பது உண்மையென்றாலும், "நீங்கள் யார்?", என்பது பற்றிய அனுபவ அறிவு உங்களுக்கு இருக்கும்.

அகங்காரத்தால் உலகத்தை ஏமாற்றினாலும், ஒருவரின் இயலாமைகள் அவருக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்கம். அதை அவரால் ஏமாற்ற முடியாது. ஆனால் இறுதி உண்மையின்படி, இந்த இயலாமைகள்கூடப் பொய்தான். உண்மையில் நீங்கள் எல்லாம் வல்லவர்.

portrait

அகங்காரத்தால் உலகத்தை ஏமாற்றினாலும், ஒருவரின் இயலாமைகள் அவருக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்கம். அதை அவரால் ஏமாற்ற முடியாது. ஆனால், இறுதி உண்மையின்படி, இந்த இயலாமைகள்கூடப் பொய்தான். உண்மையில் நீங்கள் எல்லாம் வல்லவர்.

எல்லாம் வல்லவர் நீங்கள் எனும் உண்மையை உங்களுக்குத் தெரியவிடாமல் மறைப்பதே இந்த மமகாரம்தான்.

மமகாரம் தொடர்ந்து உங்களைக் குறைத்து மதிப்பிட்டு தாழ்த்திக் கொண்டேயிருக்கும். அகங்காரம் தொடர்ந்து உங்களை உயர்வாக மதிப்பிட்டு உயர்த்திக் கொண்டேயிருக்கும்.

அகங்காரம் மேலிழுக்க, மமகாரம் கீழிழுக்கிறது. நடுவிலிருக்கும் அப்பாவி மனம் சஞ்சலப்படுகிறது.

ஏன்? உங்களின் சஞ்சலத்தையே எடுத்துக் கொள்வோம்... நல்லவிதமாய்ப் பழகினாலும், அப்படிப் பழகுமளவுக்கு நீங்கள் நல்லவரல்ல எனும் எண்ணமெழுகிறதா?.

“பல இடத்தில், நான் நடிக்க வேண்டியிருக்கிறது. மற்றவர் நம்புமளவுக்கு நான் நல்லவனுமல்ல, கெட்டவனுமல்ல எனும் எண்ணம் உங்களிடம் இருக்கிறதா?” எனக் கேட்டதும், பேராசிரியர் சிரித்தபடி, “அதெப்படி என் மனதுக்குள்ளே வந்து படித்தாற்போல அப்படியே சொல்கிறீர்கள்?” என ஆச்சரியமாய்க் கேட்டார்.

“ஆச்சரியப்படுமளவுக்கு இது பெரிய விஷயமில்லைங்கையா.

களிமண்ணைப் பற்றி ஒருவர் முழுமையாகத் தெரிந்து கொண்டால், எந்த மூலையிலுள்ள களிமண்ணையும் அவரால் புரிந்து கொள்ள முடியும்.

அதேபோல் என்னுடைய மனதை முழுமையாய் ஆராய்ந்து கடந்து வந்ததால், உலகின் எந்த மூலையிலுள்ளவரின் மன இயல்பைப் பற்றியும் சொல்வது எளிது. அவ்வளவு தாங்கையா,” என சொன்னோம்.

ஒருவர் தன்னை நல்லவராக
மிகைப்படுத்திக் காட்டிக் கொள்வது மட்டுமே
அகங்காரமல்ல. கெட்டவராக, முரடராக,
முன்கோபியாக, விதண்டாவாதியாகக்
காட்டிக்கொள்ளும் எல்லா செயல்களும்
அகங்காரமே.

> நிகழ்காலத்தில்
> வாழ்பவரைச் சுற்றி
> நிகழ்வதெல்லாம்
> நல்லதாகவே இருக்கும்.
> நல்லதிலேயே எல்லாம்
> முடியும்.

★ உள்ளுக்குள் பயமிருக்கும், வெளியே தைரியசாலிபோல வாய் ஜம்பம் பேசுவார்கள் சிலர்...

★ இது சின்ன தவறுதானே என்று தெரிந்தும், அதை சாக்காகப் பயன்படுத்தி, முன்கோபத்தைக் கொட்டித் தீர்ப்பார்கள் சிலர்...

★ தன் தரப்புதான் பலவீனமானது. தன் மீதுதான் தவறு இருக்கிறது என புரிந்திருந்தாலும், எதிராளியின் வாயடைக்கும் விதத்தில் விதண்டாவாதம் பேசுவார்கள் சிலர்...

இவையனைத்துமே அகங்காரமே.

பேசி அடங்கிய பின், உள்ளுக்குள் புழுங்க ஆரம்பிப்பார்கள், நடுங்க ஆரம்பிப்பார்கள், கவலைப்பட ஆரம்பிப்பார்கள். இது மமகாரத்தால் ஏற்படும் பாதிப்பு.

மமகாரம் இல்லாத ஒருவர், தான் செய்து முடித்த செயலை நினைத்து சஞ்சலப்படவே மாட்டார். ஏன்? அதைப்பற்றி நினைக்கக்கூட மாட்டார். இறந்தகாலம் அவரை உறுத்தாது. நிகழ்காலத்தில் வாழவே அவருக்கு நேரம் சரியாயிருக்கும்.

நிகழ்காலத்தில் வாழ்பவரைச் சுற்றி நிகழ்வதெல்லாம் நல்லதாகவே இருக்கும். நல்லதிலேயே எல்லாம் முடியும்.

அவரை அகங்காரமும் ஒன்றும் செய்யாது. மமகாரமும் ஒன்றும் செய்யாது.

Nithyananda

ஒருவர் தன்னை நல்லவராக மிகைப்படுத்திக் காட்டிக் கொள்வது மட்டுமே அகங்காரமல்ல. கெட்டவராக, முரடராக, முன்கோபியாக, விதண்டாவாதியாகக் காட்டிக்கொள்ளும் எல்லா செயல்களும் அகங்காரமே.

அகங்காரத்தாலும் மமகாரத்தாலும், நிகழ்காலத்தில் வாழும் தூயவரின் நிழலைக்கூடத் தொட முடியாது.

தியானம்

அகங்காரமும், மமகாரமும் விடாக்கண்டன், கொடாக்கண்டன் போலத்தான்.

இது அதைவிடாது, அது இதைவிடாது. இவற்றிடமிருந்து தப்பிப்பது லேசுபட்டக் காரியமல்ல.

நெருப்பு, பகை, கடன் ஆகிய மூன்றையும், எப்போதுமே விட்டு வைக்கக்கூடாது. விட்டு வைத்தால், ஏகமாய் வளர்ந்துவிடும் என்பார்கள் பெரியவர்கள்.

அதேபோலத்தான், அகங்காரத்தையும், மமகாரத்தையும் விட்டு வைக்காதீர்கள். விட விட அவை ராட்சத வடிவம் பெற ஆரம்பித்துவிடும்.

இவை இரண்டிடமிருந்து தப்பிக்கும் ஒரு அருமையான வழி... அதற்கான சில டிப்ஸ்

1. முதலில் அகங்காரம், மமகாரம் என்ற இரண்டு பிரச்சினைகளும் எவ்வளவு ஆழம் உங்களுக்குள் வளர்ந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

2. நீங்கள் எல்லாம் வல்லவர் என்பதை உணர்ந்து, அதுவாக மாற ஆரம்பியுங்கள்.

3. சீக்கிரமாக இந்த இரண்டையும் செய்து முடித்து நிம்மதியாய் வாழ ஆரம்பியுங்கள்.

நிச்சயம், நீங்கள் எல்லாம் வல்லவர்தான்.

Portrait of Swami Nithyananda