ஆரோக்கியமான வாழ்விற்கு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

திடமான உடலுக்கு
கபீர் மகா ஞானி. எளிமையின் உச்சம். இயல்பின் வெளிப்பாடு.
அவருக்கு சேவை செய்ய ஆயிரம் செல்வந்தர்கள் போட்டியிட்டுக் கொள்வார்கள்.
ஆனால், அவரோ! அவரே உற்பத்தி செய்த கம்பளங்களை கடைவீதிக்கு எடுத்துச் சென்று, அதை விற்று, அதில் வரும் பணத்தில் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்.
கபீரின் செயல்கள் மிகப் புதிராகத் தோன்றியதால்... புதிதாய் வந்த பக்தர் ஒருவர் கேட்டார், "உங்களுக்குச் சேவை செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கையில், ஒரு சிறு கம்பளத்தை விற்க காலையிலிருந்து காத்திருப்பது ஏன்? ஏன் இந்த வீண்வேலை. இதை விற்கவா இவ்வளவு தூரம் காத்திருக்கிறீர்கள்?".
"இது சாதா கம்பளியல்ல. என் அன்பினால் இணைக்கப்பட்ட தியான உருவம்.
இது என் தொழிலல்ல.
இது என் தியானம்.
இது என் ஆனந்தம்.
இதை வாங்க ஏற்கனவே ஒருவர்
பிறந்துவிட்டார். அவர் வரும் வரையில் அதே
ஆனந்தத்தோடு காத்திருப்பேன்.
இது என் தொழிலல்ல. இது என் தியானம்.
இது என் ஆனந்தம்" என்றார்.
கபீர் கதை பேசவில்லை. அவர் சொன்னது அனைத்தும் உணர்வு வெளிப்பாடு என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் புரியும்.
கலையில், மன அலைகள் கலைகின்றன. ஒரே மாதிரியாக ஓடிக்கொண்டிருக்கும் மனமானது, நடனம் ஆட ஆரம்பிப்பதே கலை.
"மண்ணோடு விளையாடு, உன்னோடு கடவுள் விளையாடுவார் " எனும் வாசகத்தை அழகாய் சொல்லும் சூஃபி ஞானி இப்படிச் சொல்வார்...
கலையில் மனம் வளையும்.
விளையாட்டில் உடல் வளையும்.
கலையும், விளையாட்டும் கலந்து செய்யும் அன்றாட வேலையில், இரண்டும் வளையும்.
சைனாவிற்கு ஜென் சென்ற பிறகு, அந்த நாட்டில் தியானமானது, வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது.
அதில் ஒன்றுதான், 'கிச்சாலியோ தியானம்.'
'கிச்சாலியோ' என்றால் 'மதித்தல்' என மலைவாசிகள் மொழியில் பொருள்படும்.

கலையில் மனம் வளையும்.
விளையாட்டில் உடல் வளையும்
கலையும், விளையாட்டும் கலந்து செய்யும் அன்றாட வேலையில் இரண்டும் வளையும்.
தியானம்
மரம் வெட்டும் முன்பு கண்களை மூடி, ஒரு நிமிடம் மரத்தின் முன்பு முழங்காலிட்டு, “ஒரு நல்ல காரியத்திற்காக உன்னை அழைத்துச் செல்கிறேன்.
நீ ஒரு அருமையான மேஜையாக, நாற்காலியாக, கட்டிலாக மாறப்போகிறாய்”, என்று ஒரு மாணவனை உற்சாகப்படுத்துவதுபோல் உற்சாகப்படுத்திவிட்டுத்தான் மரத்தை வெட்ட ஆரம்பிப்பார்கள்.
மரப்பொருட்கள் செய்தபின், ‘உன்னை இவ்வளவு அழகாக வடிக்க, நீ உதவியதற்காக நன்றி” என்று கண்களை மூடி உணர்வு பொங்க நன்றி சொல்வார்கள்.
வேலையை தியானமாக மாற்றுவது எப்படி என நமக்கெல்லாம் அடிக்கோடிட்டுக் காட்டும் தியானம் தான் கிச்சாலியோ தியானம்.
நம்மில் பலர் மிருதுவான மலரைக்கூட வெடுக்கெனப் பறிப்பதைப் பார்த்திருப்போம்.
இவையனைத்தும், வேலைகள். கடமைக்காக மட்டுமே செய்யப்படுகின்றன என்பதற்கான அடையாளங்கள்.
அன்றாடச் செயல்களில் ஆனந்தம் பொங்க... வேலைகள் தியானங்களாக மாற வேண்டும். இந்த ஓர் உண்மை புரிந்தால் அது எளிதில் சாத்தியமாகும்.
ரிஷி கூற்று ஒன்று...
“உடல் வேலைகள் சூட்சும சரீரத்தைத் திடமாக்கும்”.
சூட்சும சரீரம் (Etheric Body) என்பது உங்களின் மனம் வாழும் இடம். இந்த ஈதரிக் பாடி திடமாக திடமாக, மனம் உங்களின் கட்டுக்குள் வரும்.
இன்றைய நவீன மயமாக்கலால், மனிதரின் மூளைக்கு வேலை அதிகமாகி விட்டது.
உடலுக்கு வேலை என்பதே அரிதாகிவிட்டது.
இது மிகவும் ஆபத்தானது.
உடலுக்குத் தேவையில்லாத ஓய்வு கொடுக்கப்பட்டால், சூக்சும சரீரம் வலு இழக்கும், மனம் பழுதடையும்.
இந்த உண்மைகளை உள்வாங்கிக் கொண்டால், ஜன்னலைத் துடைத்தாலும், ஜாதி மல்லியைக் கோத்தாலும், ஜாங்கிரி செய்தாலும் அது அத்தனையையும் தியானமாக மாற்றிக்கொள்ளும் சூட்சுமம் தெரிந்துவிடும்.
நிம்மதியான தூக்கம் வேண்டுமா ?
காலை எழுந்ததும் துள்ளிக் குதிக்கும் காளைக்குட்டியைப் பார்த்திருப்பீர்கள்... உடலை உற்சாகமாக முறிக்கும் பூனை ... விதவிதமாய் இசையெழுப்பும் குருவிக் கூட்டம்... என எல்லா மிருகங்களும், கண்விழித்ததும் மிக உற்சாகமாகவே எப்போதும் உணர்கின்றன. ஆனால், ஒரு விசித்திரம். . .
காலையில் எழுந்ததும் திரும்பிப் படுக்கும் ஒரே மிருகம் 'மனிதன்.'
ஏன், மனிதர்கள் மட்டும் காலையில் எழும்போது உற்சாகத்தை உணர்வதில்லை. தூங்கிய தூக்கம் போதாதென்றே சொல்கின்றனர். “விழிக்கக் கஷ்டப்படும் இமைகளும், கனமாகக் கனக்கும் உடலும், இது ஏன்?!...”
காரணம், ஆழ்ந்த தூக்கத்திற்குள் ஒருவரை இளைப்பாறவிடாமல் அவரைத் தடுக்கும் கனவுகளே!
தூக்கத்தில் கனவுகள்
அதிகமாகும்போது, உண்மையான
ஆழ்தூக்கத்தின் (Deep sleep)
நேரம் குறைக்கப்படுகிறது.
தூக்கத்தில் கனவுகள் அதிகமாகும்போது,
உண்மையான ஆழ்தூக்கத்தின் (Deep
sleep) நேரம் குறைக்கப்படுகிறது. நன்றாகத்
தூங்கினேன் என்ற உணர்வு உங்களிடமிருந்து
பறிபோகிறது.
மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு,
பரதரிஷியைக் கண்டதும் ஓடிவந்த அந்த
குடும்பஸ்தர் சொன்னார், “நன்றி சுவாமி!,
நீங்கள் கற்றுக் கொடுத்த தியானம் ஒரே மாதத்திற்குள் என்னை புத்தம் புது மனிதனாக மாற்றிவிட்டது".
ரிஷி கேட்டார், "இப்போ நன்றாகத் தூங்குகிறீர்களா?".
பக்தர், "எவ்வளவு நேரம் தூங்கினாலும், தூங்கிய திருப்தி கிடைக்காமல், பலநாள் தூக்கமின்மையாலும் கஷ்டப்பட்டவன்...
படுத்ததும் தூங்கிப்போகிறேன்.
விழித்ததும் துள்ளலோடு எழுகிறேன்.
வெறும் நான்கு மணி நேரத் தூக்கம், பன்னிரண்டு மணி நேரம் தூங்கினாலும் கிடைக்காத புத்துணர்வைத் தருகிறது. நன்றி சுவாமி" என்றார்.
ரிஷி, "நன்றியை எனக்குச் சொல்லாதீர்கள். தியானத்திற்கும், தியான சக்திக்கும் சொல்லுங்கள்"என்றார்.
இன்சோமினியா (Insomnia) என்றழைக்கப்படும் தூங்கக் கஷ்டப்படும் வியாதிக்கு, தியானம் ஒரு சிறந்த தீர்வு.
துக்கமின்மையைச் சரி செய்வதோடு, தூக்கத்தின் தரத்தையும் தியானம் அதிகப்படுத்துகிறது.
டொனால்டு இ மிஸிகிமேன் என்னும் ஆராய்ச்சியாளர் 1972-ல் 'தியானம் எவ்வாறு தூக்கத்தின் தரத்தை உயர்த்துகிறது' என்பது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்...

துக்கமின்மையைச் சரி செய்வதோடு,
தூக்கத்தின் தரத்தையும் தியானம்
அதிகப்படுத்துகிறது.
அதில், "சராசரி மனிதர்கள் தூக்கத்தில் ஆழ்வதற்கு 10 நிமிடத்திலிருந்து 75 நிமிடம் வரை எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், ஒரு மாதம் தொடர்ந்து தியானம் செய்பவர்கள், தூங்குவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பரத ரிஷியிடம் அந்தக் குடும்பஸ்தர் பேசிக் கொண்டிருக்கும்போதே, பண்டிதர் ஒருவர் "தூக்கமின்மையை தியானம் சரி செய்வது எப்படி?" என்று கேட்டார்.
ரிஷி, "உடல் ஓய்வுக்காக தூக்கத்தையும், மன ஓய்வுக்காக ஆழ்தூக்கத்தையும் இயற்கை வகுத்தளித்திருக்கிறது.
உடல் ஓய்வு பெறக் கனவு கலந்த தூக்கம் நிச்சயம் அவசியமானது.
ஆனால், மனம் ஓய்வு பெறக் கனவுகளற்ற, சலனமற்ற ஆழ்தூக்கம் நிச்சயம் அவசியமானது.
மனதின் அலைபாயும் தன்மை அதிகமாகும் போது, மனதின் ஓய்வெடுக்கும் தன்மை மங்கிப்போகிறது.
தூக்கத்தில் ஓரிரு மணி நேரங்களாவது இளைப்பாறவேண்டிய மனம்
- இடைவெளியே இல்லாமல் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. கனவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மனம் ஓய்வெடுக்க முடிவதேயில்லை.
விளைவு - சோர்வடைந்த மனம், சோர்வடைந்த கண்கள், உற்சாக உணர்வற்ற உடல்!" என்றார்.
பண்டிதர், "அப்படியென்றால், கனவுகள் மிகுந்த இரவு, கிட்டத்தட்ட தூங்காத இரவுக்குச் சமம் என்கிறீர்களா?" என்றார்.
ரிஷி, "ஆமாம். சரியாய்ச் சொன்னீர்கள்.
பலர் தினம் தினம் தூங்கினாலும், நிஜத்தில் தூங்குவதில்லை என்பதே உண்மை.
மனதின் அலைபாயும்தன்மை
அதிகமாகும் போது, மனதின்
ஓய்வெடுக்கும் தன்மை
மங்கிப்போகிறது.
தியானம் மிக அழகாக இந்தப் பிரச்சினையை சரி செய்கிறது. அது அலைபாயும் மனதை அமைதி நோக்கி எளிதாய்த் திருப்புகிறது.
நம் சக்திக் குறைவே மனம் மீதான ஒருங்கிணைப்பைக் குறைக்கிறது. மனம் அலைபாய ஆரம்பிக்கிறது.
முறையான தியானத்தைத் தொடர்ந்து செய்யச்செய்ய, உள்ளே உருவாகும் தியான சக்தி, நம் சக்திக் குறைவைச் சரி செய்கிறது. மனம் எளிதாய் ஒழுங்குக்குள் வருகிறது.
அலைபாயாத மனம், கனவுகள் நிறைந்த தூக்கத்திலிருந்து கனவுகளற்ற ஆழ்தூக்கத்திற்குள் எளிதாய் நுழையும். இது இயற்கை நியதி.
மனக்கட்டுப்பாட்டை இழந்தவருக்குள், மனக்கட்டுப்பாட்டை தியானம் உருவாக்கித் தருகிறது.
உடலும், மனமும் நிம்மதியான தூக்கத்தில் இளைப்பாறும்போது, அந்த மனிதரை உற்சாகம் தொற்றிக் கொள்வதும் இயற்கையே ”எனச் சொல்லி முடித்தார்.
60 வருடம் வாழும் மனிதர், குறைந்தது 20 வருடம், தூக்கத்திற்காக மட்டும் செலவிடுகிறார். ஆனாலும், தூக்கத்திலும் அவருக்கு நிம்மதியில்லை.
தியானம் நிம்மதியான தூக்கத்தைத் தருவதோடு, பல வருடங்களையும் மிச்சப்படுத்தும். உற்சாகமான புத்தம்புது மனிதராக உங்களை மாற்றும்.

தியானம் நிம்மதியான தூக்கத்தைத் தருவதோடு, பல வருடங்களையும் மிச்சப்படுத்தும். உற்சாகமான புத்தம்புது மனிதராக உங்களை மாற்றும்.

# தியானம்
"தூங்கச் செல்கிறோம். ஏன்?", எனக் கேட்டால் மனிதர்கள் சொல்லும் மூன்று காரணங்கள்.
1. கண் சொக்குகிறது. கண் எரிகிறது
2 கண் விழிக்கமுடியவில்லை.
3 தூங்கவேண்டும் போலத் தோன்றுகிறது.
"காலை தூக்கத்திலிருந்து எழுவதற்குக் கஷ்டப்படுகிறோம். ஏன்?" எனக் கேட்டால், மனிதர்கள் சொல்லும் மூன்று காரணங்கள்.
- இன்னும் கொஞ்சம் தூங்கவேண்டும் போலத் தோன்றுகிறது.
- கண் விழிக்க முடியவில்லை.
- கண் எரிகிறது, கண் சொக்குகிறது.
அலைபாயும் மனம் தூக்கத்திலும் செய்யும் மாயங்கள் புரிகிறதா? தூக்கத்திற்கு முன்னும் பின்னும் ஒரே மாதிரியிருந்தால், தூங்கியதால் என்ன பலன்?
எல்லாச் சாதனையாளர்களும் குறைந்த நேரம் மட்டுமே தூங்கியவர்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
தொடர்ந்து உழைக்கும் மனிதரின் மனம் ஸ்திரமானதாக இருக்கும். உழைப்பவருக்கு மனதில் அலைபாய ஏது நேரம்.? இளைப்பாறுவதற்கு மட்டுமே அவரால் நேரம் ஒதுக்க முடியும்.
சாதனையாளர்கள் அளவுக்கு, நாள் முழுக்க நீங்கள் உழைக்காவிட்டாலும், தோட்டக்கலை, வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைப் பராமரித்தல், துவைத்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற அன்றாடச் செயல்களில் உங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கத்திற்கு உடலும், மனமும் ஆயத்தமாகும்.
உடல் வேலை செய்தால், அலைபாயும் மனம் வேலை செய்யாது. சோம்பேறியின் உடலில்தான் மனம் ஆட்டம் போடும். உடல் உழைப்பு, மனக் களைப்பைப் போக்கிவிடும். மேலும், அன்றாட எளிய வேலைகளில், உங்களை ஈடுபடுத்திக் கொள்வது, அகங்காரம் வளராதிருக்கச் செய்யும்.ஈடுபாட்டோடு செய்தால், இது ஒரு குதூகலமளிக்கும் தியானம் என்பது புரியும்.
மகாவாக்கியம்
“தூங்காமல் தூங்கும் துரிய நிலையே உச்சகட்ட இளைப்பாறுதல்.”
எண்ணங்களும் இருந்து
சுயநினைவும் இருந்தால்,
அது ‘விழிப்புநிலை’
எண்ணங்கள் இருந்து
சுயநினைவு இல்லாது போனால்,
அது ‘கனவு நிலை’
எண்ணங்களும் இல்லாதிருந்து
சுயநினைவும் இல்லாதுபோனால்,
அது ‘ஆழ்தூக்க நிலை’
எண்ணங்கள் இல்லாதிருந்து
சுயநினைவு (விழிப்புணர்வு) இருந்தால்,
அதுதான் தூங்காமல் தூங்கும் நிலை
ஞானியரின் ஆனந்த நிலையான ‘துரிய நிலை.’
உச்சகட்ட ஆனந்தம்
உச்சகட்ட இளைப்பாறுதல், நிம்மதியைத்
துரிதமாய் அடைய உதவும்.
துரிதப் பேருந்து தியானம்.
எனக்கு தியானம் செய்யும் போது தூக்கம் தூக்கமாக வருகிறது. இது நல்லதா? கெட்டதா ? -சுபத்ரா, கொடைக்கானல்
அமெரிக்காவில், முதல் தியான வகுப்பை இந்திய சாது நிகழ்த்தியபோது, தியானத்தின் முடிவில் நன்றி நவில்தல் நேரத்தில் . .
குதர்க்கவாதி ஒருவர் எழுந்து, " ஏதோ கண்ணை மூடி அரைமணி நேரம் உட்கார்ந்திருந்தோம். இந்தத் தியானத்தால் அதிகபட்சமாக ஒரு நல்லது நிகழ்ந்தது. நல்லா தூங்கினேன்", என்றார்
அறையில் கணிசமான அளவு சிரிப்பொலி.
சாது, "ஒரு மணி நேரச் சொற்பொழிவில், ஐந்து நிமிடத்துக்கு மேல் ஆடாமல் அசையாமல் உங்களால் இருக்க முடியவில்லை, என்பதைக் கவனித்தேன்.
முதுகெலும்பில் அவ்வளவு பரபரப்பு. அமைதியற்றதன்மை.
நீங்கள் அரைமணிநேரம் அமைதியாய் அமர்ந்திருந்ததே பெரிய விஷயமில்லையா?
தூக்கமாத்திரைகள் அமோக விற்பனையில் இருக்கும் இந்த நாட்டில், வெகு எளிதாக மாத்திரையில்லாமல் தூங்கியது பெரிய விஷயமில்லையா!" என்றார். கரவொலி அறைமுழுவதும் அதிர்ந்தது.
தியானத்தின் துவக்கக் காலத்தில் சிலருக்குத் தியானம் செய்வதால் தூக்கம் வருவது போலத் தோன்றும்.
தூக்கத்தைத் தியானம் தரவில்லை. உங்களின் உள்ளே இருக்கும் மந்தத்தன்மை தியானத்தின்போது, தியானசக்தியால் வெளித்தள்ளப்படும். வெளித்தள்ளப்படும் மந்தத் தன்மையால் உடலும், மனமும் ஈர்க்கப்படும். தூக்கம் வரும். தொடர்ந்து தியானம் செய்யச் செய்ய, மந்தசக்திகள் முழுவதும் எரிக்கப்பட்டு விடும். அதன்பின் உடலுக்குள் உற்சாக சக்தி பொங்க ஆரம்பிக்கும்.
உற்சாக சக்தி பொங்க ஆரம்பித்த பின்தான், இரவுத் தூக்கத்தின் தரம் உயர ஆரம்பிக்கும்.
(Meditation is a medicine for peaceful sleep and mind)
குர்ஆன்-னில் வரும் அருமையான வாசகம் ஒன்று...
"நீங்கள் ஆறுதல் பெறுதற்குரிய உங்கள் வாழ்க்கைத் துணையை உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்;
உங்களுக்கிடையே அன்பையும் கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்று..."
அன்பால் கிடைக்கும் ஆறுதலின் மருத்துவக் குணத்திற்கு இணையான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அன்பை ஓர் உணர்வு எனச் சொல்வது சரியாகாது.
அது குறைமதிப்பீடு.
அன்பு இறைவனின் முகம்.
"அளவற்ற அருளாளனும், நிகரற்ற
அன்புடையோனுமாகிய 'அல்லாஹ்'வின்
திருப்பெயரால்", எனத் துவங்கும்
குர்ஆன்னும்...
"அன்பே சிவம்! சிவமே அன்பு!" எனும் சிவவாக்கியமும்...
"எளியவர்களுக்கு அன்பு
செய்கிறவர்கள், எனக்கே
அதைச்செய்கிறார்கள்"
- பைபள்ளின் வாசகம்.
“எளியவர்களுக்கு அன்பு செய்கிறவர்கள், எனக்கே அதைச்செய்கிறார்கள்” என்ற பைபளின் வாசகமும்...
இறைவனின் முகம், ‘அன்பு’ என்பதற்கான ஆதாரங்கள்.
அன்பைவிடச் சிறந்த தொழுதலோ, வேண்டுதலோ, பிரார்த்தனையோ இல்லை என்பதற்கான நிரூபணங்கள் அவை.
ஒஹாயோ பல்கலைக்கழகத்தில், மனிதர்களின் நோய்க்கான காரணங்களை ஆராயும் மருத்துவக் குழுவுக்கு எதிர்பாராத ஆச்சரியம். அந்தப் பரிசோதனைக்கு உள்ளான பல கூட்டமாகப் பிரிக்கப்பட்ட முயல்களில், ஒரு கூட்டத்து முயல்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்துமட்டும் வேலை செய்யவில்லை.
இரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் அதிகக் கொழுப்புகளை அந்த முயல்களுக்குக் கொடுத்து, ‘இரத்தக் குழாய் அடைப்பு எப்படி ஏற்படுகிறது’ என்பதைச் சோதித்தார்களாம்.
எதிர்பார்த்தப்படியே பல முயல்களுக்கு இரத்தக்குழாய்களில் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால், சில முயல்கள் அவ்வளவு கொழுப்புக் கொடுக்கப்பட்டும் பெரிய பாதிப்புக்குள்ளாகாமல் ஆரோக்கியமாகவே இருந்தன.
இந்த முயல்கள் எப்படித் தப்பித்தன என்பதே மருத்துவக்குழுவின் ஆச்சரியம். அதுவே அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு வழி வகுத்தது.
பல காரணங்களை, பல கோணங்களில் ஆராய்ந்து பார்த்தார்கள். கடைசியாகக் காரணத்தையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

அன்பைவிடச் சிறந்த தொழுதலோ,
வேண்டுதலோ, பிரார்த்தனையோ
இல்லை .
கொடுக்கப்பட்ட கொழுப்பும், மருந்தின் அளவும், மற்றவசதிகளும் எல்லா முயல்களுக்கும் நூல் பிடித்தாற்போல் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால், தப்பித்துக் கொண்ட எல்லா முயல்களும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவை. ஒரே ஒரு செவிலித்தாயால் (Nurse) கவனிக்கப்பட்டவை.
மற்றகூட்டத்து முயல்களைக் கவனித்துக் கொண்டவர்கள் வேளா வேளைக்குக் கொழுப்புகளைக் கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்.
தப்பித்தக் கூட்டத்தைக் கவனித்த செவிலித்தாய் (Nurse) மட்டும், ஒவ்வொரு வேளையும் உணவளிக்கும் முன், ஒவ்வொரு முயலையும் தனித்தனியாக ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல் கொஞ்சி முத்தமிட்டு முழு அன்பைப் பொழிந்திருக்கிறார்.
அன்பு பொழிந்ததைத் தவிர, வேறு, எந்தச் சலுகையோ, மருந்தோ தரப்படாத முயல்கள் தப்பித்தது எப்படி? அந்த முயல்களுக்கு மட்டும் எங்கிருந்து அவ்வளவு நோய் எதிர்ப்பாற்றலும், ஆரோக்கியமும் கிடைத்தது? என 1970 களில் அந்தக் குழு கேட்ட கேள்வியை, இன்றைய உடல் மன மருத்துவத் துறை (Mind Body Medicine) பல ஆராய்ச்சிகளுக்குப் பின், ‘அன்புக்கு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு' என ஆதாரப்பூர்வமாக அறிவிக்கிறது.
தாயின் வருடல், தோழியின் கை கோர்ப்பு, கணவரின் அன்பு வார்த்தைகள், குழந்தையின் பாசக்குரல் - நம்முள் நவரச மாற்றங்களையும், நல்ல உணர்வையும் ஏற்படுத்துவதை உணர்ந்திருக்கிறீர்களா? அந்த மாற்றம்தான் அன்பின் மருத்துவ குணம்.
ஆனால், அன்பு என்பது இன்றையச் சமூகத்தில் அரிதாய்க் கிடைக்கும் ஒன்றாகிவிட்டது.
அன்பு தொடர்ந்து கிடைக்கக் கிடைக்க,
அந்த அன்பு சக்தியே அத்தனை நோய்களையும்
களைத்தெறிந்துவிடும். அவ்வளவு சக்தி
பெற்றது அன்பு.
“அன்பைப் பெறுபவருக்குள்
நிகழும் நல்ல மாற்றங்களை, விட அன்பைக்
கொடுப்பவருக்குள் இன்னும் பல நல்ல
மாற்றங்கள் நிகழும்” என்கிறார்கள் நவீன
ஆராய்ச்சியாளர்கள்.
> அன்பு தொடர்ந்து கிடைக்கக்
>
> கிடைக்க, அந்த அன்பு
>
> சக்தியே அத்தனை
>
> நோய்களையும்
>
> களைத்தெறிந்துவிடும்.
>
> அவ்வளவு சக்தி பெற்றது
>
> அன்பு.
அன்பு உங்களை மருத்துவராக்கும்!.
அப்பெல்லோ மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் ஒருவரிடம் பேசி கொண்டிருக்கும்போது, அவர் சொன்ன செய்தி மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது அது.........
“நான் அறுவைச்சிகிச்சை நடக்கும் அறையிலிருக்கும்போது, சில நேரங்களில் நோயாளிகளின் மூச்சும், இரத்த ஓட்டமும் தாறுமாறாகும். அந்த அவச ரச் சூழலில், உடனே சில மருந்துகளைச் செலுத்த, எல்லாம் சராசரி நிலையை அடைந்து விடும்.
இதயத் துடிப்பும் மூச்சும் அதன்பின்னும் குறையாத நேரங்களில், இறைவனின் மீதான பக்தியுணர்வோடு, என் குழந்தையின் கையைப் பிடிப்பதுபோல், நான் நோயாளியின் கைகளைப் பிடிப்பேன், வருடிவிடுவேன்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், அதன்பின் வெகு சீக்கிரத்தில் சராசரி நிலைக்கு இதயத் துடிப்பும், மூச்சுவாங்குதலும் திரும்பிவிடும். அவர்களுக்குள்ளும் ஒருவித சுகமான உணர்வு பிறக்கும்.
ஒருமுறை, இரு முறையல்ல, பலமுறை இது நிகழ்ந்திருக்கிறது.
நீங்கள் நேற்று சொற்பொழிவில் சொன்ன 'அன்பு மருந்துக்கெல்லாம் மருந்து' என்ற கருத்து வெறும் கருத்தல்ல, நடைமுறை உண்மை”, என்றார்.
அன்பும் ஒரு நல்ல உணர்வு என்று உணர்வுப்பட்டியலில் சேர்த்துவிடாதீர்கள். அதன் வலிமை புரியாமலே போய்விடும். ஆளையே அடியோடு மாற்றும் சக்தி பெற்றது அன்பு.

உங்களின் உண்மையான முழு அன்பால் மற்றவர்கள் ஆறுதல் பெறுவார்கள். ஆரோக்கியம் பெறுவார்கள். நீங்கள் அதைத்தாண்டிய ஆனந்தத்தைப் பெறுவீர்கள். (Love is a medicine, love is bliss, love is divine)
அன்பின் இயல்பு, அது ஒருவருள் பொங்கி, வழிவதின் வாயிலாகவே அடுத்தவரைச் சேரும்.
உங்களின் உண்மையான முழு அன்பால், மற்றவர்கள் ஆறுதல் பெறுவார்கள். ஆரோக்கியம் பெறுவார்கள். நீங்கள் அதைத் தாண்டிய ஆனந்தத்தைப் பெறுவீர்கள். (Love is a medicine, love is bliss, love is divine) .
சாதாரண பாசத்திலிருந்து உயருங்கள். அன்பின் உரு ஆகுங்கள். கடவுளின் முகம் உங்களிலும் தெரியும்.
மகா வாக்கியம்
“அன்பு மருந்துக்கெல்லாம் மருந்து”
ஞானியின் பூரண அன்பு நிலையை அடைந்த பின்தான் முழு அன்பு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
உங்களின் சாதாரண பாசத்திற்கே, அளப்பரிய மருத்துவச் சக்தியுண்டு. பாசத்தை வழங்குவதில் பூரணமாகுங்கள்.
“முழு பாசம் - முழு மருந்து!” உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும்!
பாசத்தின் உச்சிச் செல்லுங்கள், அன்பின் பாதம் தரிசிப்பீர்கள். ஆனந்தமடைவீர்கள்.
பலகாலமாய் அன்பு கஜானா
பூட்டப்பட்டேயிருக்கிறது.
பெட்டிக்குள் கட்டித் தங்கம் - அதனால்
யாருக்கென்ன பயன்.
அன்பைப் பகிருங்கள். பரவசமாவீர்கள்.
திருந்தாதவர்கள் இருந்தென்ன பயன். மகான்களால் இவ்வளவு காலம் மாறாதவர்கள் இனியா மாறப்போகிறார்கள்? நம்பிக்கையில்லை. -ராபின்சன், நீலகிரி.
அவரிடம் சொன்னோம் "என்ன சொன்னாலும் திருந்தாத இந்த சமுதாயத்திற்கு, என்னதான் நல்ல கருத்துக்களை நீங்கள் சொன்னாலும், அது கடலில் கரைத்த பெருங்காயம்தானே என இதே கேள்வியை ஒருவர் என்னிடம் கேட்டார்.
அதற்கு, "பெருங்காயத்தால் கடல் வாசம் பெறுகிறதோ இல்லையோ, கடலில் கரைக்கும் ஒவ்வொரு முறையும் என் கை வாசமாகும்", என்றேன்.
சமூகத்தில் சில ஒட்டைகள் இருக்கத்தான் செய்கிறது. நல்ல முயற்சிகள் சில வேளைகளில் பொய்த்துப் போகிறதுதான்.
இதற்காக உங்கள் நம்பிக்கையை நீங்கள் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்.
நம்பிக்கைக்காக, எதை வேண்டுமானாலும் இழக்கலாம்.
ஆனால், எதற்காகவும் நம்பிக்கையை இழக்கக் கூடாது.
அது உங்கள் கையை (வாழ்க்கையை) வாசமாக்கும்.
உண்மைகளை உணரும் முன்புவரை, நீங்களும் திருந்தாதவர்கள் பட்டியலில் இருந்திருப்பீர்கள்தானே.
முன்னாள் திருந்தாதவர், இந்நாள் திருந்தாதவரைச் சலித்துக்கொள்வது எந்தவகையில் நியாயம்.
ஜூனியர்களுக்கு வாய்ப்பளியுங்கள். ஏதாவதொரு நொண்டிச்சாக்கைக் காட்டி உங்களை பொறுமையிழக்கச் செய்யும் வெறுமை குணங்களுக்கு வாய்ப்பளிக்காதீர்கள்.
உங்களால் முடிந்த நல்லதையும் தொடர்ந்து செய்துகொண்டேயிருங்கள். வாழ்வில் நறுமணம் வீசிக்கொண்டேயிருக்கும்.
சுற்றுப்புறச் சூழலின் பிரதிபலிப்பே நமது ஆரோக்கியம்
தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் செருகப்பட்ட எலக்ட்ரோடுகளோடு, ஒரு கும்பல் பென்சல்வேனியா பல்கலைக்கழகத்தின் வேளாண்மைத் தோட்டத்தில் உட்கார்ந்திருந்தது.
அந்தக் கும்பலை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மருத்துவக்குழு, அடுத்து அந்த கும்பலை, அவசர அவசரமாக பஸ்ஸில் ஏற்றி, அருகேயிருந்த செயற்கைப் பூங்காவிற்கு இட்டுச் சென்றது.
மருத்துவக்குழு அந்தக் கும்பலிடம், "நீங்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தால் போதும். இயற்கைச் சூழலும், செயற்கைச் சூழலும் மனிதருக்குள் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகிறது? என்பதை ஆராய்வதற்கே உங்களை அழைத்திருந்தோம்" என்று கூறி வேறுபல இடங்களுக்கு அழைத்துச் சென்றது.
நம் கண்ணில்படும்
காட்சிகள் நம்மையும் மீறி,
நம்முள் செயல்படுகின்றன.
மூளையின் அலைகளையே
மாற்றுகின்றன. நம் இரத்த
ஓட்ட மண்டலத்தில்,
இரசாயனங்களைப் பொழியச்
செய்கின்றன.
இயற்கைக்காட்சிகள்நிறைந்தபலசூழல்களிலும், மிக அழகான பல செயற்கைப் பூங்கா மற்றும் கேளிக்கை இடங்களிலும், அவர்களைப் பார்க்க வைத்து மருத்துவக்குழு பரிசோதித்துப் பார்த்தது. வெளிக்காட்சிகள், மூளையின் அலைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பட்டியலிட்டது.
ஆராய்ச்சியின் முடிவு ஆச்சரியம் நிறைந்தது. இயற்கைச் சூழல்களைப் பார்க்கும்போது மூளை அலைகள் படிப்படியாக அமைதி நிலைநோக்கி நகர்ந்தது.
எவ்வளவு நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தாலும் சரி, செயற்கைச் சூழல்கள், இயற்கைச் சூழல்கள் அளவுக்கு அமைதியைத் தரவில்லை என்று மூளையின் அலைகள் படம் பிடித்துக் காட்டின.
நம்முடைய சூழ்நிலைகள்,நம்மை எந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது.
நம்கண்ணில்படும் காட்சிகள், நம்மையும் மீறி நம்முள் செயல்படுகின்றன. மூளையின் அலைகளையே மாற்றுகின்றன. நம் இரத்த ஓட்ட மண்டலத்தில், இரசாயனங்களைப் பொழியச் செய்கின்றன.
நாமிருக்கும் இடம் சுத்தபத்தமாக இருப்பதும், சுத்தமில்லாது அழுக்குப் படிந்திருப்பதும் இதேபோன்ற மாற்றங்கள் இரத்த ஓட்ட மண்டலத்தில் ஏற்படுத்தும், உடலை பாதிப்பிற்குள்ளாகும்.
சுத்தபத்தமாக இல்லாதிருப்பது, நாம் சுய ஆரோக்கியத்தோடு இல்லை என்பதற்கான அடையாளங்கள்.
நாமிருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திராவிட்டால், தெரிந்து கொள்ளுங்கள், நம்மைப் பார்க்க வருபவர்களின் உடலுக்குள், தேவையில்லாத இரசாயனங்களை நாம் சுரக்கச் செய்கிறோம்.
நாம் முகத்தைச் சுத்தமாக வைத்திராமல், உடல் துர்நாற்றம், உடையில் அழுக்குகள் ஆகியன நீங்கி, நாம் சுத்தபத்தமாக இல்லாவிட்டால் - தெரிந்து கொள்ளுங்கள், நம்மைப் பார்க்கும் அனைவரின் உடலுக்குள்ளும், அந்த

நாமிருக்கும் இடம் சுத்தபத்தமாக இருப்பதும், சுத்தமில்லாது அழுக்குப் படிந்திருப்பதும் அதே போன்ற மாற்றங்களை இரத்த ஓட்ட மண்டலத்தில் ஏற்படுத்தும், உடலை பாதிப்பிற்குள்ளாகும். நிமிடத்தில் தேவையில்லாத இரசாயனங்கள் சுரக்க நாம் காரணமாக இருக்கிறோம்.
சுய ஆரோக்கியக் குறைவின் வெளிப்பாடே சுத்தமின்மை.
நமது சுத்தமின்மையால், நம்மை அசிங்கமாக்கிக் காண்பிப்பது கிட்டத்தட்ட ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்பட வேண்டியது. காரண காரணமேயில்லாமல், நம்மைப் பார்த்துவிட்ட ஒரே ஒரு காரணத்திற்காக, மற்றவர்களின் உடலுக்குள் ஆரோக்கியமற்ற இரசாயனங்கள் சுரக்க நாம் காரணமாயிருக்கிறோம்.
மற்றவர்களுக்குள் இதுபோன்ற அத்துமீறி மாற்றங்களை உண்டு பண்ணுவது மகாதவறு.
அமெரிக்காவில், உங்களின் பார்க்கும் விதம் மாறினால்கூட, சட்டப்படி தண்டனை உண்டு. என்ன! ஆச்சரியமாக இருக்கிறதா?
ஆம்... ஒரு பெண், ஓர் ஆணைச் சுட்டிக்காட்டி, "இவர் என்னுள் தகாத உணர்வு மாற்றங்கள் ஏற்படும் விதத்தில் என்னைப் பார்த்தார்" என்று சொன்னால், அது சட்டப்படி ஆராயப்படும்.
பார்வையின் போக்கால் மாற்றம் ஏற்படுத்தியதற்காக, சட்டப்படி தண்டனை பல நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும். மற்றவர்களுக்குள் தேவையில்லாத இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவது ஒரு சமூகக் குற்றம்.
நாமிருக்கும் இடத்தையும், நம்மையும் சுத்தபத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், நம்மை நெருங்குபவர்களையெல்லாம் நாம் பாதிப்புக்குள்ளாக்குவோம்.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது
சாதாரண பழமொழியல்ல. நம் மூதாதையரின்
அன்றைய மனோதத்துவ முதிர்ச்சியை இன்று
நமக்கு விளக்கும் மகா மொழிகள்.
வெளிச் சுத்தமின்மை, உள் சுகமின்மையின் வெளிப்பாடு.
வெளிச் சுத்தமின்மை,
உள் சுகமின்மையின்
வெளிப்பாடு.
நம்மைப் பார்க்க வருபவர்களுக்கும், நம்மோடு பழகுபவர்களுக்கும் நல்ல உணர்வுகளை பரிசாக வழங்க வேண்டும். நம்மோடு நமக்கு நெருங்கியவர்கள் இருக்கும்போது, அவர்களுக்குள் இரம்யமான இரசாயன மாற்றங்கள் மட்டுமே உருவாக வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி சுத்தபத்தமாக இருக்க முயற்சிப்பது, ஆரோக்கியமடைவதற்கான ஒரு டெக்னிக்.
உள் சுகமின்மையால்தான், வெளிச்சுத்தமின்மை நம்மைத் தொற்றிக்கொள்கிறது. வெளியே சுத்தத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், உள்ளுக்குள், சுகத்தன்மை உருவாக ஆரம்பிக்கும். நல்ல ரசாயன மாற்றங்கள் நம்முள் ஏற்பட ஆரம்பிக்கும்.
ஆயிரம் ரூபாய்க்கு உடையணிய வேண்டியதில்லை. இருக்கும் உடைகளை சுத்தபத்தமாக பயன்படுத்தினாலே போதும்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஒரு நாளின் பல மணிநேரங்களில் பரவச நிலையிலேயேதான் மூழ்கியிருப்பார். அந்த நேரங்களில், 'உடல் எங்கேயிருக்கிறது?' என்பது கூட, அவரை போன்ற மகான்களுக்குத் தெரியாது.
இராமகிருஷ்ணரே, "நான் உடல் உணர்வுக்குத் திரும்புவதே எப்போதாவது தான். ஆனால், அந்த நேரங்களில்கூட என் உடைகளை சுத்தப்படுத்தி ஒழுங்காக உடுத்த நான் தவறுவதேயில்லை" என்று தன் சீடர்களுக்குக் சொல்வார்.
உடையிலும், உடலிலும், முதலில் கவனம் தேவை.
அழகாக இருந்தாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆனால், கட்டாயமாக அசுத்தம், ஒழுங்கின்மை நம்மிடமோ, நாமிருக்கும்

உள் சுகமின்மையால்தான், வெளிச்சுத்தமின்மை நம்மைத் தொற்றிக்கொள்கிறது. வெளியே சுத்தத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், உள்ளுக்குள், சுகத்தன்மை உருவாக ஆரம்பிக்கும். இடத்திலோ இருக்கக் கூடாது - சிறிதளவு கூட!
மற்றவர்களுக்கும், நம் உடலுக்கும் நல்ல இரசாயன மாற்றங்களையே பரிசாக அளியுங்கள். சுத்தபத்தத்தைக் கடைபிடியுங்கள் (சிறிதளவுகூட அசுத்தமோ, ஒழுங்கின்மையோ வெளிப்படுத்துவதுகூட சமூகக் குற்றமாகக் கருதப்பட வேண்டிய ஒன்று தான்!)
"எனக்குத் தெரியாததா இது" என்று விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சுத்தபத்தத்தை ஒரு டெக்னிக்காகக் கடைப்பிடியுங்கள் சுகத்தன்மையைப் பெறுங்கள். மற்றவரும் நாமும் நலம் பெற வழிசெய்வோம்.
மிக உயர்ந்த
நுட்பம்


நலந்தரும் இரசாயன மாற்றங்களுக்கு வழி
ஜோனத்தான் கோல்டுமேனின், 'ஹீலிங் சவுண்டஸ் (Healing sounds)' எனப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைப் புத்தகம் படித்தேன்.
'தண்ணீரிலிருந்து செய்திகள்' என்ற தலைப்பில் அப்புத்தகங்கள் சொல்லும் செய்திகள் - புதியது, புதிரானது, புனிதமானது.
பல புதிய ஆராய்ச்சிகள் செய்யும் திரு. மாசுரூ எமோட்டோ எனும் ஆராய்ச்சியாளரின் கருத்துப்படி, “உயிரற்றபொருட்கள், இனி உயிருள்ள பொருட்கள் என்றழைக்கப்பட வேண்டும்.”
ஆராய்ச்சியாளர் நீரோடு பேசி உறவாடி, அதற்கு அந்த நீர் சொல்லும் பதில்களை படம் பிடித்திருக்கிறார்.
அன்பு, வெறுப்பு, வேதம், தியானம் என பல தலைப்புகள் எழுதி ஒட்டப்பட்ட கண்ணாடிப் பாத்திரங்களில், ஒரே அளவு நீர் ஊற்றப்பட்டது.
நீர், மனிதர்களின் வார்த்தைகளுக்குப் பதிலளிக்கிறது என்பது இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அன்பு என்றெழுதப்பட்ட பாத்திரத்தின்முன் அமர்ந்து, அன்பான வார்த்தைகளை மனதார காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் பேசினார்.
வெறுப்பு என்றெழுதப்பட்ட பாத்திரத்தை, சதாதிட்டித்தீர்ப்பதும், வேதம் என்றெழுதப்பட்ட பாத்திரத்தின் முன் வேத வாசகங்களைப் பக்தியோடு வாசிப்பதும், தியானம் என்றெழுதப்பட்ட பாத்திரத்தை தினம் தியானம் செய்யும் புத்தபிட்சுவால் தொட்டு சக்தியூட்டப்படுவதும்... என ஒவ்வொரு பாத்திரங்களையும் ஒரு தனி உயிர்போல பாவித்து இவற்றைச்செய்தார்.
சில நாட்கள் முடிவில், நீரைக் குளிர்சாதன முறையில் கெட்டிப்படுத்தினார். (Crystalized) கெட்டியான நீர்க் கட்டிகளின் மூலக்கூறுகளை, அதிநவீன மைக்ராஸ்கோப் மூலமாக ஆராய்ந்தார். அதைப் படம் பிடித்தார்.
அந்த நீர்க் கட்டிகளின் மூலக்கூறுகளின் புகைப்படத்தைப் பார்க்கப் பார்க்க, பார்ப்பவர் கண்களை ஆச்சரியம் பற்றிக் கொள்ளும்.
அன்பு என்று எழுதப்பட்ட நீர் மூலக்கூறுகளின் புகைப்படம், பார்ப்பதற்குச் சீராக இருந்தது. அழகாக அடுக்கப்பட்ட சின்னஞ்சிறு கற்களின் தொகுப்புப்போல இருந்தது.
வெறுப்புப் பொழியப்பட்ட நீர்க்கட்டியின் மூலக்கூறுகளைக் காட்டும் புகைப்படம், அலங்கோலப்பட்டிருந்தது. அது பார்ப்பதற்கு ஒரு பேயைப் போன்ற உருவத்தை ஏற்படுத்தியிருந்தது.
வேதம் படிக்கப்பட்ட நீர் கட்டியின் மூலக்கூறுகளைக் காட்டும் புகைப்படம், அழகாய் அடுக்கப்பட்ட கலர் கற்கள் போன்ற காட்சியைக் கொடுத்தது.
தியான சக்தி நிறைந்தவரால் தொடப்பட்ட நீர்க்கட்டியின் மூலக்கூறுகளைக் காட்டும் புகைப்படம், ஜொலிக்கும் நகை போன்று காட்சியைத் தந்தது.

தியான சக்தி நிறைந்தவரால் தொடப்பட்ட நீர்க் கட்டியின் மூலக்கூறுகளைக் காட்டும் புகைப்படம், ஜொலிக்கும் நகை போன்று காட்சியைத் தந்தது.
ஒரே இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நீரின் மூலக்கூறுகள், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தகுந்தார்போல் மாறியிருக்கிறது அல்லது பாதிக்கப்பட்டிருக்கிறது. நீர், மனிதரின் வார்த்தைகளுக்குப் பதிலளிக்கிறது என்பது இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மனிதரின் வார்த்தைகள், நீரை நடுங்கச் செய்கிறது. மகிழச் செய்கிறது. நீர் உயிரற்றபொருளல்ல, அது உயிருள்ள பொருள்.
மனித உடல் நாம் நினைப்பது போல் திடமானதல்ல. உடல் 70 சதவீதத்திற்கு மேல் வெறும் நீரால் மட்டுமே ஆனது.
உங்களைச் சுற்றி இருப்பவரின் வார்த்தைகள், உங்கள் உடலின் பெரும் பகுதியான நீரைப் பாதிக்கின்றன.
அதனால்தான், உற்சாக வார்த்தைகள் நம்முள் உற்சாகத்தைப் பாய்ச்சுகின்றன. துக்க வார்த்தைகள் நம்மை துக்கத்தில் ஆழ்த்துகின்றன.
உடலின் 70 சதவீத நீர், மற்றவரின் வார்த்தைகளுக்கேற்றப்படி ஆட்டிப்படைக்கப்படுகிறது. நீங்கள் ஆடிப்போகிறீர்கள்.
வார்த்தைகள் மந்திர சக்தி பொதிந்தவை. அதனால்தான், நிம்மதி தரும் பக்தி வார்த்தைகளின் தொகுப்பையும், ஆனந்தம் தரும் ஞான வார்த்தைகளின் தொகுப்பையும் "மந்திரங்கள்" என அழைத்தனர் ரிஷிகள்.
மந்திரங்கள், மனிதரின் மனமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை.
மந்திரங்களின் மகத்துவம் பற்றி விளக்கிக்
கொண்டிருந்த நிட்டியிடம், "மந்திரத்தால்
மாங்காய் பறிக்க முடியுமா!?" என வம்பாய்
கேட்டார் ஒருவர்.
அதற்கு நிட்டி, "உங்கள் கை என்ன பூப்பறித்துக் கொண்டிருந்ததா . . . கையை வைத்து மாங்காயைப் பறிக்கலாமே.
> உங்களைச் சுற்றி இருப்பவரின்
> வார்த்தைகள், உங்கள் உடலின்
> பெரும் பகுதியான நீரைப்
> பாதிக்கின்றன.
>
> அதனால்தான், உற்சாக
> வார்த்தைகள் நம்முள் உற்சாகத்தைப்
> பாய்ச்சுகின்றன. துக்க வார்த்தைகள்
> நம்மை துக்கத்தில் ஆழ்த்துகின்றன.
மாங்காய்ப் பறிக்க மந்திரம் எதற்கு?" எனக் கேட்டதும், தலைகவிழ்ந்தார் அந்த நபர்.
மந்திரங்களைச் சுற்றி மட்டுமல்ல, ஒவ்வொரு மதத்தின் சிறந்த ஆன்மீக தத்துவங்களைச் சுற்றியும், மேற்கண்டது போன்ற கண்டன வார்த்தைகள் பின்னப்பட்டிருக்கின்றன.
அதனால்தான், எந்த மதத்தின் மீதும் எவருக்கும் மதிப்பு இருப்பதில்லை.
தன் மதம், நல்லமதம் என நினைப்பது தவறில்லை. ஏதோ சில மூடத்தனமான கண்டன வரிகளை மனதின் மூலையில் பிடித்துக்கொண்டு, அடுத்த மதங்களைக் குறைத்து மதிப்பிடுவதும், அவற்றை அவமதிப்பதும்தான் தவறு.
இவ்வளவும் வார்த்தை ஜாலங்கள், நம்முடலில் அத்துமீறிச் செய்யும் ரசாயன மாற்றங்களின் வெளிப்பாடுகள்.
"என் வாழ்வு நலம் பெற, ஏதாவதொரு நல்ல மந்திரத்தைக் கற்றுத் தாருங்கள்," என ஒரு குடும்பஸ்தர் அத்வைத ஞானியிடம் கேட்டார்.
சிரித்த ஞானி, "உன்னுடைய ஒவ்வொரு வார்த்தையுமே மந்திரம்தான்.
இன்னொரு மந்திரத்தைக் கற்றுக் கொள்வதை விட, உன் வார்த்தைகளை நல்ல வார்த்தைகளாக்கு, வாழ்வு நலமாகும்," என்றார்.
உங்களின் வாழ்வை வளமாக்கத்தான், வளமான வார்த்தைகளை மந்திரங்களாகவும், மத நூல்களில் தெய்வம் பேசிய வார்த்தைகளாகவும் எழுதிவைத்தனர் முன்னோர்கள்.

உங்களுடைய ஒவ்வொரு
வார்த்தையுமே மந்திரம்தான்.
இன்னொரு மந்திரத்தைக்
கற்றுக் கொள்வதை விட,
உங்களுடைய வார்த்தைகளை நல்ல
வார்த்தைகளாக்குங்கள், வாழ்வு
நலமாகும்.
வார்த்தைகளை நேரடியாக வளப்படுத்தத் தடுமாறுபவர்கள், நலந்தரும் மந்திரங்களையும், தெய்வ வாசகங்களையும் திரும்பத் திரும்பப் படியுங்கள், திரும்பத் திரும்ப உச்சரியுங்கள். வார்த்தைகளின் அர்த்தம் உங்களுக்கு முழுமையாகப் புரியாவிட்டால்கூடப் பரவாயில்லை. உங்களின் உடலின் நீருக்கு அது புரியும். அது, நலந்தரும் இரசாயன மாற்றங்களை உங்களுக்குள் உண்டாக்கும். வாழ்வு வளமாகும்!.
காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் சொல்லலாமா ? கேட்கலாமா ? -சரஸ்வதி நடராஜன், அரும்பாக்கம்,
காயத்ரியே பெண்..
ஏன், காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் உபயோகிக்கக் கூடாது? காயத்ரி ஆண்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல. அது மக்களுக்காக உருவாக்கப்பட்டது.
இன்னும் சொல்லப் போனால், காயத்ரி இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. காயத்ரி உலகத்துக்கே சொந்தமானது.
தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு கிறிஸ்தவர் என்பதால், அவர் கண்டுபிடித்த டியூப்லைட் அவருடைய மதத்தினருக்கு மட்டும்தான் சொந்தம் என உரிமை கொண்டாட முடியுமா ?
அதேபோல், மனிதர்களின் புத்திசாலித்தனத்தை அதிகப்படுத்த உதவும் வார்த்தைகளைத் தேடிப்படித்து, விஸ்வாமித்ர ரிஷியால் உருவாக்கப்பட்ட ‘காயத்ரி மந்திரம்’ இந்துக்களுக்கோ, ஆண்களுக்கோ மட்டுமே சொந்தமானதல்ல!
தன் புத்திசாலித்தனம், ஞானம் பெருகிட விரும்பும் ஒவ்வொருவரும் ஊட்டச்சத்து போல காயத்ரி மந்திரத்தைப் பயன்படுத்தலாம்.
காயத்ரி மந்திரம் மட்டுமல்ல, எல்லா மந்திரங்களும், எல்லா மக்களுக்கும் சொந்தமானவை.
உன்னை எனக்குக்
கொடுத்துவிடு
இறைவனிடம் பிரார்த்திப்பவரா நீங்கள்?...
கீழுள்ள கருத்துக்களைப் புரிந்துகொண்டு பிரார்த்தனையைத் தொடருங்கள்.
"கேளுங்கள் கொடுக்கப்படும்"
- பைபிள்
"கேட்டதெல்லாம் கிடைக்காது"
- ஞானமொழி
"கேட்டாலும் கேட்காவிட்டாலும், வேண்டியது வேண்டியபோது கொடுக்கப்படும்" - வேத ரகசியம்.
"கேட்டாலும்
கேட்காவிட்டாலும்,
வேண்டியது வேண்டியபோது
கொடுக்கப்படும்"
-வேத ரகசியம்.
இம்மூன்றையும் படித்து குழம்பிப்போன ஜென்
மாணவர் குருவிடம் கேட்டார், "இம்மூன்றுமே
ஞானக்கூற்றுகள். இதில் எது உண்மை?
எதுபொய்?"
குருசொன்னார், "மூன்றுமே உண்மை?"
குழம்பிப்போன மாணவர், "அதெப்படி
மூன்றுமே உண்மையாகும்" எனக்
கேட்டார்.
குரு, "நீ கேட்டா, உனது இதயம் இயங்குகிறது. இல்லை, நீ கேட்கவில்லை என்பதால், மூளை இயங்காமல் நின்றுவிடுகிறதா?
ஆனால், நீ கேட்டால்தான் ருசியான உணவு கிடைக்கும். நீ கேட்டாய் என்பதற்காக, கூரையைப் பிய்த்துக்கொண்டு பணத்தைக் கொட்டுவாரா என்ன இறைவன் ", எனக் கேட்டதற்கு, “இல்லை” என்றார் சீடர்.
தொடர்ந்த குரு, "தெரிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா அடிப்படை விஷயங்களும் நீ கேட்காமலேயே கிடைக்கும். சுகபோகங்கள் நீ கேட்டால்தான் கிடைக்கும். அடங்காத ஆசைகள் மற்றும் தேவையற்ற காரியங்களை நீ எவ்வளவுதான் கேட்டுக் கொண்டாலும் அது கிடைக்காது. பார். நான் எதுவும் கேட்பதில்லை. இருந்தும், உன்னை விட ஆனந்தமாக இருக்கிறேன். சூட்சுமம் புரிகிறதா?" என்றார்.
உங்கள் இறைவன், உங்களுக்கு வியாபாரியா? செல்லங் கொடுக்கும் தந்தையா? ஆனந்தமளிக்கும் ஆத்மார்த்தமான உறவா? .
"எனக்கிதைச் செய்தால் உனக்கு அதைச் செய்கிறேன்,” என நேர்ந்து கொள்பவர்கள், இறைவனை வியாபாரியாக மட்டுமே பார்ப்பவர்கள்.
"அதைக் கொடு! இதைக் கொடு!” என உரிமையாய் இறைவனிடம் பேசுபவர்கள், இறைவனை ஒரு செல்லங்கொடுக்கும் தந்தையாக மட்டுமே பார்ப்பவர்கள்.
"இவ்வளவு நாள் காத்தது, இனியும் காக்கும்,” என்ற நம்பிக்கையோடு நிம்மதியாயிருப்பவர்கள், இறைவனை ஆத்மார்த்தமான உறவாகப் பார்ப்பவர்கள்.

“இறைவனை நெருங்க முதல்படி, இறைசக்தி மீதான ஆழமான நம்பிக்கை. (Trust is a bridge for divinity)".
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜலாலுதீன் ரூமி என்ற சூஃபி ஞானியிடம், “மனிதன் எதையோ அடைய ஏங்கித்தவிக்கிறானே அது எது?" எனக் கேட்டதற்கு,“இறைவனின் சில முத்தத்திற்காகத்தான், வாழ்வு முழுவதும் காத்துக் கொண்டிருக்கிறான் மனிதன்" என்றார்.
உண்மையான நண்பர்கள் சேர்ந்தால், பேசிச் சிரித்து மகிழ்வார்கள். உண்மையான காதலர்கள் சேர்ந்தால், பேசமாட்டார்கள். ஒருவருக்கருகில் ஒருவர் அமர்ந்திருப்பதிலேயே மகிழ்ந்திருப்பார்கள். உண்மையான மனிதர், தன்னருகே யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாகவே இருப்பார்.
காரணம், உறவுகளுக்கெல்லாம் உறவான இறைவனில் கலந்திருக்கும் கலையை அவன் கற்றிருப்பான் .“இறைவன் என்னோடு இருக்கிறான்” என்ற உணர்வே மிக இனிதாயிருக்கும்.
பார்வையற்றவன் கண்ணுக்குச் சூரிய வெளிச்சம் தெரியாததால், சூரியன் இல்லை என்றாகிவிடுமா? ஒருவரால் இறைவனை உணர முடியாததால், அவர் இல்லை எனச் சொல்லிவிட முடியுமா? .யோசியுங்கள்!
இறைவனைத் தொடர்பு கொள்ளும் சூட்சுமம் கற்றுவிட்டால், இருக்குமிடத்திலேயே, இலேசான தென்றல் காற்றுப்போல் வாழ முடியும்.
இறைவனை நெருங்க இரண்டாவதுபடி, ஏக்கம். ஏதேதோ காரணங்களுக்காக ஏங்கும் ஏக்கம், இறைவனைச் சுற்றிய ஏக்கமாக, இறை
ஆனந்தத்தில், நல்லதில் போய்
முடியக்கூடிய ஒரேயொரு
ஏக்கம், இறைவனைச் பற்றிய
ஏக்கம்.
குணங்களான நிம்மதி, நிதானம், ஆனந்தம்
நோக்கிய ஏக்கமாக மாறவேண்டும்.
(Spritual urge should become
urgency)
ஆனந்தத்தில், நல்லதில் போய்
முடியக்கூடிய ஒரேயொரு ஏக்கம், இறைவனைச்
சுற்றிய ஏக்கம்.
சமீபத்தில் படித்த தாவோ கீதவரிகள் "இந்த உலகில் எனக்கு நீ தர விரும்புவதையெல்லாம், உன் எதிரிகளுக்குக் கொடுத்து விடு!
மேலோகத்தில் எனக்கு நீ தர விரும்புவதையெல்லாம், உன் நண்பர்களுக்குக் கொடுத்து விடு!
ஆனால், உன்னை எனக்குக் கொடுத்து விடு! அதுபோதும், அதுபோதும்"
இறைவனுக்கும் உங்களுக்குமான நெருக்கம் அதிகமாக அதிகமாக, இறைவனிடம் கேட்பது குறையும். இறைவனைப்பற்றிக் கேட்பது அதிகரிக்கும்.
இறைவனிடம் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க, மற்றவர்களிடம் உங்களுக்கிருக்கும் இடைவெளி குறைய ஆரம்பிக்கும்.
நீங்கள் இறைவனை நெருங்க உதவும் மூன்றாவது படி, இறைவனைப் பற்றிய, தியான சக்தியைப் பற்றிய, ஞானக்கருத்துக்களைத் தெரிந்து கொள்வது தான்.
இறைசக்தி மீதான ஆழமான நம்பிக்கையோடு, அந்த ஆனந்த சக்தியை அடைந்தே ஆகவேண்டும் என்ற ஏக்கத் தீயோடு ஞானக்கருத்துக்களை புரிந்துகொள்ள ஆரம்பித்தால்...
உங்களுக்கும் இறைவனுக்குமான இடைவெளி கொஞ்சம்கொஞ்சமாய் குறைந்து, நீங்கள் வேறு, இறைவன் வேறு என பிரிக்க முடியாத நிலையை அடைவீர்கள்.ஆனந்தத்தில் திளைத்திருப்பீர்கள்.

இறைசக்தி மீதான ஆழமான நம்பிக்கையோடு, அந்த ஆனந்த சக்தியை அடைந்தே ஆகவேண்டும் என்ற ஏக்கத் தீயோடு ஞானக்கருத்துக்களை புரிந்துகொள்ள ஆரம்பித்தால்... உங்களுக்கும் இறைவனுக்குமான இடைவெளி கொஞ்சம்கொஞ்சமாய் குறைந்து, நீங்கள் வேறு, இறைவன் வேறு என பிரிக்க முடியாத நிலையை அடைவீர்கள்.

# தியானம்
"இறைவனிருப்பதையே நம்பாத நான், இறைவனை நம்புவது எப்படி?" எனக் கேட்ட சீடருக்கு, ஜென்குரு சொன்னார். "இறைவனில்லை என நம்புவதையாவது முழுமையாக நம்பு. நம்பிக்கை, இறைவனைவிட முக்கியமானது" என குரு சொன்னதும் "அப்படியா!" என ஆச்சரியமானார் சீடர்.
குரு, "இறைவனிருக்கிறாரென்ற நம்பிக்கையும், இறைவனில்லை என்ற நம்பிக்கையும் ஆழமாக ஆழமாக, இறைவனை அடைவாய். கேள்வியை நிறுத்து. வேள்வியில் இறங்கு," என்றார்.
கடவுள், இறைவன் பற்றி நீங்கள் இன்று வைத்திருக்கும் நம்பிக்கையை, "மூடநம்பிக்கை" என மற்றவர் சொன்னாலும், கவலைப்பட வேண்டியதில்லை. ஏற்கெனவே இருக்கும் ஏக்கங்களை ஆராயுங்கள். ஆராய ஆராய, தேவையற்ற ஏக்கங்கள் இருக்குமிடம் தெரியாமல் மறைய ஆரம்பிக்கும்.
நம்பிக்கை பிறந்து, ஏக்கம் மாறினால், ஒரேஒரு ஞானமொழிகூட ஒருவருக்குள் ஆனந்தத்தை மலர்த்திடமுடியும். இறைவனில் கலந்திடமுடியும்.
மகா வாக்கியம்
இறைவன் விவாதத்திற்கு அப்பாற்பட்டவர்
"இறைவனை நம்புபவனல்ல நான்" எனச் சொன்னவரிடம், "இறைவன் என்றாலென்ன?" எனக் கேட்டார் குரு.
"................" பதிலில்லை சீடரிடமிருந்து.
"இறைவனைப்பற்றி என்ன தெரியும்" என குரு கேட்டதற்கும், "..........." பதிலேயில்லை. எதுவுமே தெரியாமல் அதை நம்புபவனல்ல என்றால் என்ன அர்த்தம்!" எனக் கேட்டபோதும் ".........." பதிலில்லை.
"யார் உன்னை நம்பச் சொன்னது? நம்புபவன், நம்புபவனல்ல என்று சொல்லும் இருவருக்கும் இறைவனைப்பற்றித் தெரியாது.
நம்புபவனல்ல எனச்சொல்லி வம்பு செய்யத் தூண்டும் மனம்தான் மூலகாரணம். விவாதிக்கப்பட வேண்டியது இறைவனல்ல" என்றார்.
நீங்கள் தொட்டதும் நோய்கள் குணமாகின்றன எனப் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது எப்படி?
- சாந்தா, பாண்டிச்சேரி
நோய்கள் குணமாவது என்னால் மட்டுமே நிகழும் ஒன்றல்ல. அது முழுக்க முழுக்க தியான சக்தியால் நிகழ்கிறது.
தியானசக்தி தன்னுள் அதிகரிக்க, நோயாளி செய்யும் தியான முறைகளே நோய் குணமாகுதலில் பெரும் பங்கு வகிக்கின்றன.
எங்கள் தியான மையங்களில், நோயாளிகளின் சக்திகுறைவைச் சரிசெய்வதற்கேற்ற தியான முறைகளைக் கற்றுத் தருகிறோம். குறைந்தது ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் தியானங்களை நோயாளி கடைப்பிடிப்பார்.
தியானத்தால் நோயாளிக்குள் உருவாகும் பெருமளவு தியானசக்தியோடு, தியான சிகிச்சையாளர்கள் செய்யும் தியான சிகிச்சை, தியானசக்தியைச் சேர்க்கிறது, அற்புதங்களை நிகழ்த்துகிறது என்பனவெல்லாம் அனுபவரீதியாக நாங்கள் கண்டுக்கொண்டிருக்கும் உண்மைகள்.
தியான சிகிச்சையின்போது, ஆழமான குணமளிக்கும் சக்தி ஒவ்வொருவருக்குள்ளும் விழிக்க வைக்கப்படுகிறது.
தியான சக்தி ஒவ்வொருவருக்குள்ளும் பாய்கிறது. ஆனால், நோயாளி சிரத்தையோடு செய்யும் தியானம், அவருக்குள் பெருமளவு தியான சக்தியைச் சேமித்து வைப்பதற்கும்,ஆழமான குணமளிக்கும் மாற்றங்கள உருவாவதற்கும் உதவுகிறது.
இந்த வகையில்தான், தியானத்தை ஒவ்வொருவரும் சிரத்தையோடு தங்களின் வரங்களை உருவாக்கிக் கொள்வதற்கும் முக்கியமானதாக இருக்கிறது.
தியான சிகிச்சையாளர், தொடுவதால் தியானசக்தி அதிகரிப்பதுபோல், நோயாளியின் சிரத்தைமிகு தியானமும், நோயாளிக்குக் குணமளிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. தியான சிகிச்சையாளர் தொடுவதைத் தாண்டி, நோயாளி குணம்பெற சிரத்தையோடு தியானம் செய்தல் மிகமிக அவசியமாகிறது.
நீங்கள் உங்களுடைய நோய்களிலிருந்து விடுபட விரும்பினால், உங்கள் ஊருக்கு அருகேயிருக்கும் தியான சிகிச்சை மையங்களுக்குச் சென்று, தியானம் செய்ய முறையாகக் கற்றுக்கொள்ளுங்கள்... சக்தி குறைபாட்டிலிருந்து விடுபடலாம். ஐஸ்வரியத்தைப் பெறலாம். ஆனந்தம் பொங்க வாழலாம்.
கேட்டதையெல்லாம் கடவுள் கொடுப்பாரா?
அருமையான வாசகம் ஒன்று .... "உலகத்தில் உள்ள எல்லோரின் தேவைகளையும் பூர்த்தி செய்யுமளவுக்குத் தேவையான எல்லாமே இவ்வுலகில் இருக்கிறது.
ஆனால், ஒரே ஒருவரின் ஆசைகள் எல்லாவற்றையுமாவது பூர்த்தி செய்வது, சாத்தியமே இல்லாத ஒன்று."
பலவற்றிற்கும் ஆசைப்படுகிறீர்கள்.கடவுளிடம் வரம் கேட்கிறீர்கள். ஆனால், நீங்கள் ஆசைப்படுவதெல்லாமே ஒருவேளை கிடைத்துவிட்டால்... அவற்றின் பக்கவிளைவுகளாய் என்னென்ன நேருமென உங்களுக்கு இப்போது தெரியாது.
உங்கள் ஆசைகளைக் கடவுள் பூர்த்தி செய்திருந்தால், அவர் நல்லவர், பெரியவர்.
உங்கள் ஆசைகளைக் கடவுள்
பூர்த்தி செய்திருந்தால், அவர்
நல்லவர், பெரியவர்.
உங்களின் பல ஆசைகளை
இறைவன் பூர்த்தி
செய்யவேயில்லை என்றால்,
தெரிந்து கொள்ளுங்கள். கடவுள்
இன்னும் நல்லவர்.
உங்களின் பல ஆசைகளை இறைவன்
பூர்த்தி செய்யவேயில்லை என்றால், தெரிந்து
கொள்ளுங்கள். கடவுள் இன்னும் நல்லவர்.
இன்னும் பெரியவர் என நிரூபித்திருக்கிறார்
என்று அர்த்தம்.
அமெரிக்கவாழ் இந்தியர் (NRI) ஒருவர்
சில மாதங்களுக்கு முன் ஆலோசனைக்காக
வந்திருந்தார். அவர் சொன்னது ஆச்சரியம்
தருவது ...
“அமெரிக்கா செல்லும் முன், என் டைரியில் இருபது விஷயங்களை எழுதினேன். அவற்றை என்னுடைய நாற்பதாவது வயதிற்குள் சாதிக்க வேண்டுமென கணக்கிட்டிருந்தேன்.
விடாமுயற்சி, கடும் உழைப்பால் என்னுடைய முப்பத்தைந்தாவது வயதிலேயே எல்லாவற்றையும் சாதித்து முடித்தேன்!
என்னென்னவெல்லாம் சாதிக்க வேண்டுமென நினைத்தேனோ, அதே போல் நினைத்ததை எல்லாம் சாதித்ததும், எதற்காகச் சாதிக்க ஆரம்பித்தேன் என யோசித்தேன்... யோசித்தேன்... பதிலே இல்லை. அதிர்ந்து போனேன்.
அந்த அதிர்ச்சியில், மனஅழுத்தத்தில் (Depression) விழுந்தேன்! பத்து வருடமாகிவிட்டது. இன்னும் சரியாகவில்லை” என்றார்.
வெளியே சாதனையாளராக வாழ்பவர்கள், உள்ளே வேதனையாளராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சமூகநிலையைப் பார்த்துதான், உங்களின் ஆசைகளை வடிவமைக்கிறீர்கள், வளர்க்கிறீர்கள். ஆனால், அவர்களின் மனநிலையைப் பார்த்தால், அடுத்த நிமிடமே அந்த ஆசைகளை எல்லாம் தூக்கியெறிந்து விடுவீர்கள்.
மனவுலகில் சாதிக்காமல், வெளியுலகில் சாதிப்பது நரகத்தில் வாழ்வதற்குச் சமம்.
கேட்பதெல்லாம் ஒருவருக்குப் பூர்த்தியாவது நரகத்திற்கான துரித விசா.
குழந்தையொன்று கேட்டதாம், அம்மாவிடம் : “அதை எனக்குப் பறித்துக் கொடு”, என்று, உயரே இருந்த சூரியனைப் பார்த்து!

மனவுலகில் சாதிக்காமல்,
வெளியுலகில் சாதிப்பது நரகத்தில்
வாழ்வதற்குச் சமம்.
"முடியாது" என்ற உண்மையைச் சொன்னால், குழந்தை அழும். அடம் பிடிக்கும். அங்கலாய்க்கும்.
அதனால் அமைதியாகவே இருந்தாள், அம்மா. சிலமுறை கேட்டுச் சலித்த குழந்தை, அடுத்து வேறொன்றைக் காட்டிக் கேட்க ஆரம்பித்ததாம்.
நம் செயல்களுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.
நாம் கேட்கும், கற்பனை செய்யும் பல நடைமுறை வாழ்வில் சாத்தியமே இல்லை. அதனால்தான் மனிதர்கள் வேண்டிக்கொள்ளும் பலவற்றை, கடவுள் தருவதில்லை. இல்லையென்றும் மறுப்பதில்லை.
அந்த குளுகுளு ரெஸ்டாரண்டில் மது கேட்டார். கிடைத்தது. மாணிக்கம் கேட்டான். அதுவும் கிடைத்தது. "என்ன, இங்கு கேட்பதெல்லாம் தருகிறார்களே!" என வியந்தபடி, ஒருகோடி பணம் வேண்டுமென கேட்டார், விளையாட்டாய்.
உடனே ரெஸ்டாரண்ட் மேனேஜரே ஓடோடி வந்து, ஒருகோடி ரூபாயைத் தந்தார். "என்ன இது, இவர்கள் எனக்குப் பணம் தருகிறார்கள்..." என வியந்தவர், கேட்கக் கூடாததையெல்லாம் கேட்டு வைத்தார்.
கேட்டதும், கேட்டதற்கு அதிகமானதும் கிடைக்கவே, "அச்சச்சோ இவ்வளவு பாவம் செய்தால் நான் நரகத்திற்கு அல்லவா போவேன்," என அலறினார்.
அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த சிப்பந்தி, "வேறெங்கு இருக்கிறதாக நினைப்பாம்" எனக் கேட்டபடி, ரெஸ்டாரண்ட் கதவைத் திறந்தான். பார்த்தவன் அதிர்ந்தான். அது பற்றி எரியும் நரகம்.
நாம் ஆசைப்படுவதெல்லாம்
கிடைப்பது பெரிதல்ல. கிடைத்ததைக் காக்க,
அளப்பரிய சக்தியும், புத்திசாலித்தனமும்
வேண்டும்.
அது இல்லாதவர், கையில் கோடி
ரூபாய் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும்,
அது வெட்டிச் செலவில்தான் போய்முடியும்.
> நாம் ஆசைப்படுவதெல்லாம்
> கிடைப்பது பெரிதல்ல.
> கிடைத்ததைக் காக்க,
> அளப்பரிய சக்தியும்
> புத்திசாலித்தனமும் வேண்டும்.
அது அவருக்கு அழிவையே தேடித்தரும்.
என்ன கேட்கிறோம், எதைக் கேட்கிறோம் என்ற பக்குவம் இல்லாமல், ஒருவேளை கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால்,அவற்றை அனுபவிக்கும் பக்குவம் இல்லாமல் நாம் கேட்டு வைப்போம்.அதற்கு செவி சாய்த்து, கேட்டதையெல்லாம் கடவுள் கொடுத்திட வேண்டுமா என்ன?
"அவருக்கு ஆண்டவன் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்.எனக்கு அதிர்ஷ்டமே வாய்ப்பதில்லை. ஏன் இப்படி?", எனப் பொறாமை பொங்கத் தன் பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி சாக்கிய முனிவரிடம் குடியானவர் ஒருவர் கேட்டார்.
சாக்கிய முனி சிரித்துக் கொண்டே சொன்னார், "அவ்வளவு கொடுத்தாலும், அதை அனுபவிக்கும் பக்குவம் அவரிடம் இருக்கிறது. இதுவரை தந்ததைக் கூட அனுபவிக்கும் பக்குவம் உன்னிடம் இல்லை. அதனால்தான் இப்படி,"
கேட்பது பெரிதல்ல. ஆசைப்படுவது பெரிதல்ல.
கேட்டதையெல்லாம் இறைவன் கொடுத்தால், அதையெல்லாம் அனுபவிக்க சக்தியும் ; பக்குவமும் வேண்டும்.

கேட்பதை அனுபவிக்கும் பக்குவம் பெற்றுவிட்டால், நீங்கள் கேட்டு முடிக்கும் முன்பே, கேட்டதைக் கொடுக்க ஆரம்பித்து விடுவார் கடவுள். பக்குவம் பெறுங்கள்.
தியானம்
உங்கள்ன் எல்லா சிறுபிள்ளைத்தனமான ஆசைகளையும், ஒரு தாயைப் போல் கடவுள் கேட்கிறார். ஆனால், அவர் கேட்பவரின் பக்குவத்தைப் பார்த்தே வாரி வழங்குகிறார்.
அதனால்தான், மனிதன் கேட்டதை எல்லாம் கடவுளால் கொடுக்க முடியாது. காரணம், கடவுள் கருணைக்கடல்.
எதை வேண்டுமானாலும் கேட்க, உங்களுக்கு உரிமை இருக்கிறது.
கேட்டதெல்லாம் கிடைத்தால், அதை அனுபவிக்கும் பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா?
ஆராயுங்கள். பக்குவமற்ற பகுதிகளைக் கண்டுபிடியுங்கள். பக்குவம் பெற ஆரம்பிப்பீர்கள்.
கேட்பதை அனுபவிக்கும் பக்குவம் பெற்றுவிட்டால், நீங்கள் கேட்டு முடிக்கும் முன்பே, கேட்டதைக் கொடுக்க ஆரம்பித்துவிடுவார் கடவுள். பக்குவம் பெறுங்கள்.
மகா வாக்கியம்
"கேட்டதெல்லாம் கிடைக்கும் - அதையெல்லாம் அனுபவிக்கும் பக்குவம் பெற்றிருந்தால்!"
கேட்பது எளிது.
ஆசைப்படுவதும் எளிது,
அனுபவிப்பது எளிதல்ல.
அனுபவிக்கும் பக்குவமில்லாவிட்டால்,
கேட்டாலும் கொடுக்கமாட்டார் கடவுள்.
கேட்காவிட்டாலும் கொடுப்பார் கடவுள்,
அனுபவிக்கும் பக்குவம் பெற்ற
அடுத்த வினாடியே!
தீயவர்கள்
நல்லாய்த்தானே வாழ்கிறார்கள்,
ஆசைப்பட்டதெல்லாம்
அவர்கள் வாழ்கிறார்களே! என அழாதீர்.
பக்குவம் இல்லாதவருக்குக்
கேட்டதெல்லாம் கிடைப்பது
ஆசீர்வாதமல்ல - சாபம்.
ஆனந்தமாய் இருப்பது எப்படி?
- விஜிபாரதி, கொங்கணாபுரம்.
கன்ஃபூசியஸிடம் "ஆனந்தமாய் இருக்க ஒரு எளிய வழி சொல்லுங்களேன்" என சீடர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.
அதற்கு கன்ஃபூசியஸ், "உன் கேள்வியே மிகவும் விசித்திரமாய் இருக்கிறது. எந்த ரோஜாவும், நான் ரோஜாவாக மாற வழி சொல்லுங்களேன் எனக் கேட்பதில்லை" என்றார்.
உங்களுக்குள், ஆனந்தம் என்றும், எப்போதும் பொங்கிக் கொண்டே இருக்கிறது. பொங்கும் ஆனந்தமே ஆனந்த ஸ்புரணம்.
மனிதன் தன் அறியாமையால், விழிப்புணர்வின்மையால் தன்னுள் பொங்கும் ஆனந்தத்தைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்.
பொங்கும் ஆனந்தத்தைத் தடுப்பதைத் தடுக்கக் கற்றுக்கொண்டுவிட்டால், மனிதர்கள் ஆனந்தமாக இருப்பார்கள். அவர்களுக்குள் ஆனந்தம் பொங்கிக் கொண்டேயிருக்கும்.
“எதிர்காலத்தில், என்றோ ஒருநாள் ஆனந்தமாய் இருக்கலாம். அது எப்படி?" என்ற உங்களின் கருத்தில் மாற்றம் நிகழ வேண்டும்.
“நீங்கள் பொங்கும் ஆனந்தத்திலேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள்.”
பொங்குவதை, மங்கும்தன்மை கொண்ட விழிப்புணர்வின்மை தடுக்கிறது. மனிதர் துக்கத்திலேயே தொடர்கின்றார்.
“தடுப்பதைத் தடுத்துவிடுங்கள்.
தடுப்பதைத் தடுத்துவிட்டால் ... பொங்கும் ஆனந்தத்தை எங்கும் உணர்வீர்கள்”.
ஆனந்தமாய் இருப்பீர்கள்.
வெறுமை உணர்வை விட்டு மீள...
❖ தெய்வ விக்ரகங்கள்? இறைவனின் செல்போன்கள்
❖ செல்போன்களா?
ஒரு செல்போன் மூலமாக உங்களின் நண்பரோடு பேசலாம். ஒரு தெய்வ விக்ரகத்தின் மூலமாக உங்களின் தெய்வத்தோடு பேசலாம்.
❖ உருவ வழிபாட்டை ஆதரிக்கிறீர்களா?
உண்மை ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் உருவ வழிபாடே கிடையாது.
உருவத்தின் மூலமாக வழிபடுவது மட்டுமே இருக்கிறது. ரிஷி பரம்பரையினரால் கண்டுபிடிக்கப்பட்ட தியான முறைகளில் இதுவும் ஒன்று.
❖ அதெப்படி தியானமாகும்?
'ஏ கல்லே! வரம்கொடு' என
வெங்கடாசலபதியிடம் யாரும்
வேண்டுவதில்லை. அங்கிருக்கும் உருவத்தின்
மூலமாக வெங்கடாசலபதி எனும் நம்
கடவுளோடுதான் பேசுகிறோம். கேட்கிறோம்.
ஒரு செல்போன் மூலமாக
உங்களின் நண்பரோடு
பேசலாம். ஒரு தெய்வ
விக்ரகத்தின் மூலமாக உங்களின்
தெய்வத்தோடு பேசலாம்.
நம் தந்தையிடம் கேட்பது போல, நாம் கடவுளிடம் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட உணர்வு ரீதியான தியான முறைதான் உருவ வழிபாடு.
❖ சடங்குகள்?
பாமரர்களுக்குமான தியானங்கள்.
❖ தெய்வங்கள் மனித உருவில் இருப்பது ஏன்?
மனித உருவங்கள், தெய்வ உருவங்கள் என்பதை உணர்த்துவதற்காகத்தான்.
❖ உருவ வழிபாடு பற்றிய உங்களின் கருத்து?
அருமையான துவக்கம். ஆனால் முடிவல்ல.
விவேகானந்தர் சொல்கிறார், “தேவாலயத்தில் பிறப்பது தவறில்லை. ஆனால் தேவாலயத்திலேயே இறக்கக் கூடாது.”
❖ அப்படியென்றால், எது முடிவு?
கடவுளாக மாறுவதே இறுதி இலக்கு.
❖ அதுதான் இலக்கு என்றால், “ நீங்கள் ஒரு கடவுளா?”
நான் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக வரவில்லை. நீங்கள் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காகவே வந்திருக்கிறேன்.

தெய்வங்கள் மனித உருவில் இருப்பது ஏன்?
மனித உருவங்கள், தெய்வ உருவங்கள் என்பதை உணர்த்துவதற்காகத்தான்.
❖ உங்களைப் பொருத்தளவிற்கு எது ஆன்மீகம்?
ஆனந்தமாயிருப்பதும்,
ஆனந்தமாயிருக்க விடுவதும்.
❖ பக்தி?
அது முக்தி வழிச்சாலை.
❖ இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்...
“தீவிரவாதத்தின் பிடியில் இந்தியா” எனும் கலவரச் செய்தியை ஒரு தினசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் கார்ட்டூன் வரைபடமாகப் பார்த்திருப்பீர்கள்.
அதில் ஒரு பெரிய கரிய உருவம் கையில் உருட்டுக் கட்டையோடு இந்தியாவை தன் கையில் பிடித்திருப்பது போல வரைந்திருப்பார்கள்.
உறுதியாய் ஒன்றைச் சொல்லலாம்,அந்த கரிய உருவம் கலவரம் கிடையாது.
கலவரத்தை நமக்கு உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட குணச்சித்திரமே அந்த உருவம்.
அதேபோல்தான், புராணங்கள் என்ற எல்லாமே ,நமக்கு உண்மைகளை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஞான சித்திரங்களின் தொகுப்பு. நாம் பார்க்கும் தெய்வப் படங்கள், உருவங்கள் ஆகிய அனைத்துமே இறைசக்தியையும், அதன் மகிமைகளையும் உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஞானச் சித்திரங்கள்.
உங்களைப் பொருத்தளவிற்கு எது ஆன்மீகம்?
ஆனந்தமாயிருப்பதும், ஆனந்தமாயிருக்க விடுவதும்.
மனிதரின் சிறிய மனதிற்கு, ‘இறைவன்’
எனும் பெரிய நிலையை உணர்த்தும் சக்தியை
இந்த ஞானச் சித்திரங்கள் பெற்றிருப்பதால்,
இச்சித்திரங்களை, இறைவன் என்றும், தெய்வம்
என்றும் வழிபடுவது சரியானது, நியாயமானது,
புனிதமானது.
தெய்வ வடிவங்கள் 'பக்தியுணர்வு' எனும் ஆனந்த ரசத்தை நமக்குள் சுரக்கச் செய்யும் சக்தி படைத்தவை.
இருளில் கிடக்கும் கயிற்றைப் பாம்பு என சந்தேகிக்காத வரை, உங்களுக்குள் பய உணர்வு எழாது.
அதேபோல் அஞ்ஞான இருளில் கிடக்கும் நம் மனம்தான், நம் எதிரியோ என சந்தேகிக்காத வரை ஒருவருக்குள் 'பக்தியுணர்வு', எழாது.
பக்தியுணர்வு எழாதவரை, தெய்வ வடிவங்களின் மகிமையைப் புரிந்துகொள்ளவே முடியாது.
பக்தியுணர்வு பெறாத ஒருவர், தன்னுடைய வாழ்வின் மிகப்பெரிய பகுதியை இழக்கிறார். “நான் ஏதோ ஒன்றை இழந்து கொண்டிருக்கின்றேன்..." என்பது போன்ற வெறுமை உணர்வை விட்டு மீளவே முடியாது.
தெய்வ வடிவங்களில், தெய்வத்தன்மையைக் காண முடியாதவரால், மனித வடிவங்களில், மனிதத் தன்மையைக் காணவே முடியாது.
பக்தி என்பது கடவுளைப் புரிந்து கொள்ள வைப்பதைவிட, மனிதர்களைப் புரிந்துகொள்ள உதவும்.

பேய்கள் மனிதர்களைத் தொந்தரவு செய்யுமா?
-மாலிக், பெரம்பூர்
9 வருடங்கள் பரிவராஜகமாக இந்தியா முழுவதும் ஆன்மீகயாத்திரை செய்திருக்கிறேன்.
பல நேரங்களில் சுடுகாடுகளிலும், இடுகாடுகளிலும்தான் இரவு உறங்குவேன். காரணம் அங்குதான் முன்பதிவு, வாடகை போன்ற பிரச்சினைகளே இல்லை!
இறந்த மனிதர்கள் வாழ்ந்த இடத்தில் தங்கிய அனுபவத்திலிருந்து சொல்கிறேன்... வாழும் மனிதர்கள்தான் நம்மைத் தொந்தரவு செய்கின்றார்களேயன்றி, இறந்த மனிதர்கள் அல்ல.
இறந்த மனிதர்களைப் பார்த்து நாம் பயப்படுவதைவிட, நம்மைப் பார்த்துதான் அவை அதிகம் பயப்படுகின்றன.
