KAILASA Library/மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்/பிரம்மச்சரியம்Sign in
மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்

பிரம்மச்சரியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பிரம்மச்சரியம்

எது கற்பு ?

❖ போதனை ?

அது, எல்லோரும், எல்லோர்க்கும், தரத் துடிப்பது.

அதேநேரத்தில், யாரும், யாரிடமிருந்தும் பெற தயாராயில்லாது இருப்பதும் அதுவே.

❖ வேதனை ?

தன் காரியம் ஆக வேண்டியிருக்கையில் வரும் தடங்கல்களுக்கு, "சோதனை - அது சாதனையின் படிக்கட்டு," என்பர். மற்ற நேரங்களில் அது வந்தால் வேதனை என்பர்.

❖ தியானம் செய்ய சிறந்த ஆசனம் எது?

| தியானம் செய்ய சிறந்த ஆசனம் எது? முதுகெலும்பு, கழுத்து, தலையை நேர்க்கோட்டில் இருக்க அனுமதிக்கும் எல்லா உட்காரும் முறைகளும் சிறந்தவையே. | முதுகெலும்பு, கழுத்து, தலையை நேர்க்கோட்டில் இருக்க அனுமதிக்கும் எல்லா உட்காரும் முறைகளும் சிறந்தவையே. ❖ படிப்பு? அது ஒரு கலை. |

❖ நன்றாகப் படிப்பவர்கள்?

நிச்சயம் வானத்திலிருந்து குதித்தவர்களல்ல.

❖ படிப்பில் கெட்டிக்காரனாக ஒரு டிப்ஸ் ...

படிக்கும்போது படியுங்கள். அது 30 நிமிடமானாலும் சரி.... அடுத்த நாளே படித்ததை ஞாபகப்படுத்துங்கள். அடுத்த ஏழாவது நாளில், மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திவிட்டு, தைரியமாய்ப் பரீட்சைக்கு முன் நினையுங்கள். ஞாபகக் கிடங்கிலிருந்து அருவிபோல் செய்திகள் கொட்டும்.

❖ விதியின் பிடியிலிருந்து விடுபட என்ன வழி?

விதியின் கூட்டாளிகளைக் கூண்டோடு ஒழிக்க வேண்டும்.

❖ யார் அந்தக் கூட்டாளிகள்?

வெறி, தயக்கம், சோம்பேறித்தனம்.

❖ கூண்டோடு ஒழிப்பதென்றால் ?...

விதி வலியதென நம்பும்வரை, அதன் கூட்டாளிகளும் கும்மாளமிடும். அவை செய்யும் சதிகளே வாழ்வைச் சுருக்கும். அவை தலைகாட்டும்போதே, அவற்றைத் தைரியமாய் கிள்ளி எறியத் துணிந்துவிட்டால் ... விதியையே திருத்தி எழுதிவிடலாம்.

❖ எது பாவம்?

இச்சொல்லை பிரயோகிப்பது.

portrait

படிப்பில் கெட்டிக்காரனாக ஒரு டிப்ஸ் ...

படிக்கும்போது படியுங்கள். அது 30 நிமிடமானாலும் சரி.... அடுத்த நாளே படித்ததை ஞாபகப்படுத்துங்கள். அடுத்த ஏழாவது நாளில், மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திவிட்டு, தைரியமாய்ப் பரீட்சைக்கு முன் நினையுங்கள். ஞாபகக் கிடங்கிலிருந்து அருவி போல் செய்திகள் கொட்டும்.

❖ ஏன்?

'பாவம்!' என்ற சொல் ஒருவருக்குள் எறியப்படும்போது, மனதுக்குள் பெரியக் காயம் ஏற்படுகிறது. இந்த மனக்காயமே குற்ற உணர்ச்சி. குற்ற உணர்ச்சி, மனித வளர்ச்சிக்கு எதிரானது.

❖ யார் பாவி?

“அடுத்தவரைப் பாவிகள் எனச் சொல்பவர்களே, பாவிகள்!” என ஜென் தத்துவம் சொல்கிறது.

❖ பின், மனிதர்களைத் திருத்துவது எப்படியாம்?

மற்றவர்களைத் திருத்த நீங்கள் யார்? நீங்கள் முழுமையாகத் திருந்திவிட்டீர்களா?

  • இந்த இரண்டுக்கும் பதில் சொல்ல முடிந்தால் ... நீங்கள் கேட்ட கேள்வி அவசியமானதா? இல்லையா? எனப் புரிந்துவிடும்.

❖ யார் முதலில் திருந்த வேண்டும்?

திருத்த நினைப்பவர்கள்.

❖ எது கற்பு?

உடல்ரீதியான கற்பு - வெறும் ஒழுக்கம்
மட்டுமே.
உண்மையான கற்பு இன்னும்
ஆழமானது.

❖ அதென்ன உண்மையான கற்பு?

உடலளவில் மட்டும் ஒருவரோடு
வாழ்வதல்ல, மனதளவிலும்
ஒருவரோடிருப்பதே உண்மையான கற்பு.

> யார் முதலில் திருந்த
> வேண்டும்?
>
> திருத்த நினைப்பவர்கள்.

இது காதலர்களுக்கானது மட்டுமல்ல. நண்பர்களுக்குமானதும்கூட. நண்பரோடு உடல் அமர்ந்திருக்கையில், மனமானது மெரீனா பீச்சில் சுற்றிக் கொண்டிருந்தால் ... அது மனக் களங்கம்.

❖ உண்மையான கற்போடு இருப்பது எப்படி?

அவர் யாராயிருந்தாலும், அவரோடு அங்கேயே, அந்தக் கணத்திலேயே வாழுங்கள். எண்ணங்களில் ஏறி, ஊர் சுற்றக் கிளம்பாதிருங்கள்.

உடல் கற்பையும் தாண்டிய, புனிதமான கற்பு இது.

❖ நீங்கள் ஆன்மீகத்தைச் சேவையாக செய்கிறீர்களா?

ஆம்.

❖ அப்புறம் ஏன் தியான முகாம்களில் வரும் நன்கொடைகளைப் பெற்றுக் கொள்கிறீர்கள். ஒரு சேவையாளர் மக்களிடமே ஏன் பணம் பெற வேண்டும்?

அன்று அரசர்கள், அமைதியின் மூல வேரான ஆன்மீகவாதிகளின் எல்லாத் தேவைகளையும் கவனித்துக் கொண்டார்கள். காரணம், அன்று மன்னராட்சி. இன்று மக்களாட்சி. எனவே, நீங்கள்தான் முன்வர வேண்டும்.

உங்களுக்குக் கிடைக்கும் சேவைக்கு, நீங்கள் சேவை செய்வது நியாயம் தானே.

❖ யார் வேண்டுமானாலும் ஞானம் அடைய முடியுமா?

நிச்சயமாக முடியும்!.

Nithyananda

உண்மையான கற்போடு இருப்பது எப்படி?

அவர் யாராயிருந்தாலும், அவரோடு அங்கேயே, அந்தக் கணத்திலேயே வாழுங்கள். எண்ணங்களில் ஏறி, ஊர் சுற்றக் கிளம்பாதிருங்கள்.

❖ ஞானம் பெற எது அடிப்படைத் தேவை?

உடலில் உயிர் ஒட்டிக் கொண்டுள்ளதா? இதற்கு பதில் சொல்ல முடிந்தால் போதும்!. அவர் ஞானமடையத் தகுதி பெற்றவரே.

❖ பாமரானால்கூட முடியுமா?

மாடு மேய்த்த சிறுவன் கண்ணன், கிருஷ்ணனாகவில்லையா?

ஆடுகளோடு வாழ்ந்த சிறுவன் இயேசு, கிறிஸ்துவாகவில்லையா?

விக்கிரகங்களோடு விளையாடிய சிறுவன் கதாதரன், இராமகிருஷ்ணராக வில்லையா?

சன்யாசி நடனமாடலாமா?

★ துன்பங்கள் என்பவை?.

பயிற்சிக் களங்கள்.

★ பயிற்சிக் களங்கள் என்றால்?.

புத்திசாலித்தனத்தை உங்களுக்குள் வலுக்கட்டாயமாகவாவது வளரச் செய்யும் வாழ்வின் பகுதிகளே இவை.

★ சிரித்தால் கவலையெல்லாம் போய்விடுமா? எப்படி நம்புவது?.

சிரித்தால் கவலையெல்லாம் போய்விடுமா? யார் உங்களை நம்பச் சொன்னது!

நம்ப வேண்டாம். சோதித்துப் பாருங்கள். நிஜமா, இல்லையா என்பது உறுதியாகும்.

★ சிரித்தால் நோய் விட்டுப்போகுமா?

சிரித்தால் நோய் விட்டுப்போகுமா?

நீங்கள் நோயை விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள்.

நீங்கள் நோயை விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள்.

★ நோயை விட்டுவிடுவோமென்றால்?

நிஜத்தில் நீங்கள்தான் நோயைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

★ சிரிப்பு?

உங்களின் மனப்பிடிப்பை விடுவிக்கவல்ல சரவெடி!

★ தோல்வி என்பது?

வெற்றிக்கு முயற்சித்ததற்கான நிரூபணம்.

வெற்றியைத் தொட, இன்னும் எவ்வளவு தூரம் நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும் எனச் சொல்லும் அளவீடு, 'தோல்விகள்.'

★ வாழ்வு, சாவு பற்றி ஒரு சின்ன கதை சொல்லுங்கள்..

பொது மேடையில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த சனாதன ஞானியிடம், ஒருவர் பல வில்லங்கமான கேள்விகளைத் தொடர்ந்து கேட்டார்.

கேட்டு முடித்ததும்...

"உட்கார். உன் மடத்தனம் மாறவேயில்லை.

இதே இடத்தில், இதே கேள்வியை, இதே மாதிரி, பலமுறைக் கேட்டிருக்கிறாய்.

portrait of Nithyananda

தோல்வி என்பது?

வெற்றிக்கு முயற்சித்ததற்கான நிரூபணம். அத்தனை முறையும் சலிக்காமல் சொன்ன அதே பதிலை, இந்த முறை சொல்லப்போவதில்லை.

உட்கார். உருப்படும் வழியைப்பார்" என்றார்.

கேள்வி கேட்டவரும், பதிலைக் கேட்டவர்களும் உறைந்து போனார்கள்.

* சாதாரண மனிதர்களின் பாசமெல்லாம், வேஷம் என்பது சரிதானா?

நிச்சயம் தவறல்ல.

ஜாங்கிரியை விரும்பிச் சாப்பிடப்படுவது, அது ஜாங்கிரி என்பதால் அல்ல. அதன் இனிய சுவையால்!

சாதாரண மனிதரின் பாசம் என்பது, இன்னொரு மனிதர் என்பதால் அல்ல. "அவரின் பொருள், சொல், உடல், குணம், ஆகியவற்றின் இனிய சுவைக்குத் தரும் கூலி மட்டுமே".

* ஒரு சன்யாசி நடனமாடலாமா?

சன்யாசி நடனமாடாவிட்டால் யார் நடனமாட முடியுமாம்!

பிக்கல் பிடுங்கல்கள் இல்லை. ஆடுகிறார். முடிந்தால், நீங்களும் ஆடுங்கள்.

* ஞானி? அவரால்தான் ஆனந்த நடனமாட முடியும்.

> ஒரு சந்நியாசி நடனமாடலாமா?
>
> சந்நியாசி நடனமாடாவிட்டால்
> யார் நடனமாட முடியுமாம்!
>
> பிக்கல் பிடுங்கல்கள் இல்லை.
> ஆடுகிறார். முடிந்தால், நீங்களும்
> ஆடுங்கள்.

ஒரு சாதாரண மனிதருக்கு என்னென்ன
பிரச்சினைகள் இருக்கின்றன என ஒரு லிஸ்ட்
போடுங்கள்.

அந்தப் பிரச்சினைகள் எதுவுமே
இல்லாததால், ஞானி ஆனந்தமாயிருக்கிறார்.
ஆனந்தக் கூத்தாடுகிறார்.

சிவ தாண்டவம்,

நடராஜரின் நடனம்,

கிருஷ்ணரின் ஆனந்தக் கூத்து ஆகிய அனைத்துமே ஞானத்தின் வெளிப்பாடுகளே.

⋆ தியானம் என்பது?

அகங்காரத்திலிருந்து கழல்வது.

⋆ கடவுள் எங்கேயிருக்கிறார்?

உங்களினுள்ளே உட்கார்ந்திருக்கிறார் கடவுள்.

⋆ காதலர்கள்?

அதிர்ஷ்டசாலிகள் என்று நம்பிக்கொண்டிருக்கும் துரதிர்ஷ்டசாலிகள்.

⋆ இன்றைய தம்பதியர்?

துரதிர்ஷ்டசாலிகள் என நம்பிக்கொண்டிருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.

⋆ யார் நிஜமான அதிர்ஷ்டசாலிகள்?

எங்கிருந்தாலும், ஏங்காமல், இனிமையாய் இருக்கத் தெரிந்தவர்களே, அந்த அதிர்ஷ்டசாலிகள்.

யார் நிஜமான அதிர்ஷ்டசாலிகள்?

யார் நிஜமான அதிர்ஷ்டசாலிகள்?

எங்கிருந்தாலும், ஏங்காமல், இனிமையாய்
இருக்கத் தெரிந்தவர்களே, அந்த
அதிர்ஷ்டசாலிகள்.

★ ஜோதிடம் உண்மையா?

நிச்சயம், ஜோதிடம் உண்மை.

ஆனால், ஜோதிடம் பார்ப்பவர்களெல்லாம் உண்மையானவர்கள் எனச் சொல்லமுடியாது.

★ மரணம்?

முடிவல்ல. அடுத்த வாழ்க்கையின் துவக்கம்.

★ உடல்?

உயிர் மீது போடப்பட்ட சட்டை.

★ நாம் யார்?

இறைவனின் சொக்கட்டான் காய்கள்.

★ கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?

வாருங்கள் என்னோடு.. காட்டுகிறேன்!

★ எங்கேயிருக்கிறார் அவர்?

எங்கே இல்லை கடவுள் .

அணுக்கள் தோறும் துள்ளித்துள்ளி அவர் விளையாடுகிறார்.

கடவுள், தாவரங்களில் அசைகிறார். மிருகங்களில் நடமாடுகிறார். ஏன், உங்களிலிருந்து இந்தக் கேள்வியைக் கேட்பதே அவர்தான்.

நாம் அன்பு செலுத்தும் ஒருவர் இன்னொருவர் மீது அன்பு செலுத்தினால் கோபம் வருவது ஏன்?

  • வனஜா, நாமகிரிப்பட்டை.

அப்படிக் கோபம் வந்தால், தெரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் செலுத்துவது அன்பு அல்ல.

உங்களுக்கு முழுச் சுதந்திரம் இருப்பதுபோல், அவர்களுக்கும் முழு சுதந்திரம் உண்டு என்பதை மறந்துவிட்டீர்கள்.

உங்களின் பீரோ, கார், செல்போன்தான் உங்களின் பொருட்கள்!

மனிதர்கள் என்னுடையது என உரிமை கொண்டாடும்போது, அவர்களை அஃறிணைப் பொருட்களாகக் குறைக்கின்றோம்.

அப்படிச் செய்யாமல், அவர்களை முழு மனிதர்களாக மதித்தால், கோபம் எழ வாய்ப்பேயில்லை.

இன்னும் ஆழமாய்ச் சொல்ல வேண்டுமானாலும்... மனிதர்களுக்கு முழுச் சுதந்திரம் தந்து வாழ ஆரம்பித்தீர்களென்றால், அவர்கள் மற்றவர்களோடு சிரித்துப் பேசி மகிழ்வதைப் பார்த்து, நீங்களும் மகிழ்ந்து ஆசீர்வதிப்பீர்கள்.

துறவியாயிருப்பது

என் சொந்த விருப்பம்

* காதல் தோல்வியால் துறவியானீர்களா?

காதலில் ஜெயித்ததால்.

* அப்படியா... யாரைக் காதலித்தீர்கள்?

என்னுள்ளிருக்கும் என்னை.

* எப்போது ஜெயித்தீர்கள்?

ஜனவரி 1, 2000.

* அது நீங்கள் ஞானமடைந்த நாளல்லவா?

அன்றுதான்... என்னோடு நான் கலந்ததும், கரைந்ததும் நிகழ்ந்தது!

ஞானமடையும் போதே...
நான் கரைந்துவிட்டேன்.
‘நான்’ என்ற தனி அன்று
இறந்துவிட்டது.

அன்றுதான்... உண்மைக்காதல் ஜெயித்தது.

அதை ஜெயித்தல் எனவும் சொல்ல முடியாது. அது ஒரு நிகழ்வு.

ஞானமடையும்போதே... நான் கரைந்துவிட்டேன். 'நான்' என்ற தனி அன்று இறந்துவிட்டது.

இதை... நான் கரைய, நானே அனுமதித்ததால், என்மீது கடவுள் கொண்ட காதல் ஜெயித்தது என்று சொல்லலாம்.

⋆ உண்மைக்காதல்... என்றால்!?

உண்மைக்காதலின் மடியில் தவழும் குழந்தைகள்...

ஈர்ப்பு,
பாசம்,
காமம்,
காதல்,
நட்பு,
அன்பு

இந்த எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் தன்மை கொண்டதும், இவை எல்லாவற்றையும் கடந்ததுமான விழிப்புணர்வு நிலையே உண்மைக் காதல்.

⋆ ஞானமடையும்போது நிகழ்வதென்ன?

மனிதன் இறக்கிறான். கடவுள் பிறக்கிறார்.

⋆ யார் ஞானி? யார் மனிதன்?

செத்தும் பிழைத்தவர் - ஞானி பிழைத்தும் சாகுபவர் - மனிதர்

ஞானமடையும் போது நிகழ்வதென்ன?

★ கடவுளை நிரூபிக்க என்ன ஆதாரம்?

"நான் கடவுளை நிரூபிக்க முடியாது", என்பதே கடவுள் இருப்பதற்கான ஆதாரம். சிறு உபகரணங்களால் நிரூபிக்கப்படும் அளவுக்குச் சிறியவர் அல்ல கடவுள்.

★ கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து?

கடவுளைக் கற்பனை செய்ய முடியாது. அப்படி உங்களால் கற்பனைசெய்ய முடிந்தால், அது கடவுளாக இருக்க முடியாது.

★ ஆத்திகம், நாத்திகம் பற்றி....

கடவுள் உண்டு என நம்புவது எளிது. கடவுள் இல்லை என நம்புவதற்கு இன்னும் கொஞ்சம் போராட வேண்டும்.

இருவரும் தம் தம் கொள்கையில் தீவிரமாகத் தேடி ஓடினால்... ஆத்திகத்தின் உச்சமும், நாத்திகத்தின் உச்சமும் மோதிக்கொள்ளும் நாற்சந்தியே ஆன்மீகம்.

கடவுள் உண்டு, இல்லை என்ற இரண்டுக்கும் அப்பாற்பட்டதே ஆன்மீகம்.

★ கோயில்கள்... சக்தி நிலையங்கள்.

★ பக்தி பற்றி விளக்குங்கள்?

நாத்திகருக்கு, தன் நாத்திகத்தின்
மேலிருக்கும் நம்பிக்கை, மரியாதையின்
கூட்டுத்தொகை

★ பக்தி.

பக்தி சக்தி. பக்தி தியானம்.

கடவுள் உண்டு, இல்லை

என்ற இரண்டுக்கும்

அப்பாற்பட்டதே ஆன்மீகம். பக்தி செய்யப்படுவது, யார் மீது, எதன் மீது என்பது முக்கியமல்ல. பக்தி தான் முக்கியமானது. எதைப்பார்த்து நம்பிக்கை வந்தாலும், யார் மீது மரியாதை வந்தாலும், அது பக்தியுணர்வே.

* தியானம், ஆரோக்கியமான தூக்கத்தைத் தருமா?

தரும். நீருக்குள் விரலை விட்டு எவ்வளவு சுலபமாய் வெளியே எடுக்க முடிகிறதோ, அவ்வளவு சுலபமாகத் தியானம் செய்பவரால், தன்னுள் நுழைந்து தூங்கி, எளிதாய் வெளிவரமுடியும். தியானம் ஞானத்தின் திறவுகோல்.

* தூக்கம் எதைப்பொாடுத்தது?

தூக்கத்தின் நீளமல்ல, ஆழமே அதை நிர்ணயிக்கும்.

* ஞானம்?

தெய்வமாளிகை.

* தெய்வம் ?

நீங்கள்!

* தூக்கம், மரணம் ஒன்றா?

குட்டி மரணம், 'தூக்கம்.' நீண்ட தூக்கம், 'மரணம்.'

portrait

தெய்வம் ?

நீங்கள்!

★ நான் கடவுளா?

ஆம்!
மனிதராக வாழும் கடவுள் - மனிதர்
கடவுளாக வாழும் மனிதர் - ஞானி

★ யார் தியானம் செய்யக் கூடாது?

சிரிக்கும் குழந்தை, ஆனந்தமாயிருக்கும் ஞானி.

★ யார் தியானம் செய்ய வேண்டும்?

மற்ற எல்லோரும்.

★ எப்போது தியானம் செய்யக் கூடாது?

ஆனந்தம், ஆரோக்கியம் அருளும் அருமருந்து தியானம். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே முழு ஆரோக்கியமானவராகவும், ஆனந்தம் நிறைந்தவராகவும் இருந்தால்... மருந்து தேவையில்லை.

★ சரியான தியானம் எது? வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் ‘வேதம்’ வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் ‘குரு’ வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் ‘தியானம்.’

★ அந்த 3 நாட்களில் பெண்கள் தியானம் போன்ற புனிதச் செயல்களை செய்யக் கூடாதா?

| | உடலும், மனமும் சோர்ந்திருக்கும்
அந்தக் காலங்களில்தான் சக்தியூட்டும்
தியானமும், தெம்பூட்டும் தெய்வமும்
வேண்டும்.

வாசல்வரை நின்றவர்கள், பூஜை
அறைவரை செல்லவேண்டும். கட்டாயம்
செல்ல வேண்டும். |

|---|---| | யார் தியானம் செய்யக் கூடாது? சிரிக்கும் குழந்தை, ஆனந்தமாயிருக்கும் ஞானி. | |

  • சிரிப்பு தியானம் மருந்தாமே ?

சிரிப்பு என்பது...
அது ஒரு ஞான வெளிப்பாடு.
அகங்காரத்தை அழிக்கும் அருமருந்து.
தியானியின் அடிப்படை குணம் .
நோயற்ற வாழ்வின் சொர்க்கவாசல்.
எளிய, ஆனால் வலிமை மிக்க தியானம் அது.
ஆனந்தமாக இருப்பவரின் ID card
கவலை, கஷ்டம் கரைக்கும் ஓர் இயற்கை வழி.
நித்ய ஆனந்தத்தின் திறவுகோல்.

⋆ எது சிறந்த தானம் ?

நிதானம்- இதைத் தானமளியுங்கள். இதைப் பெறுவோரும், கொடுப்போரும் புண்ணியவான்கள்.

⋆ யார் முட்டாள்?

புத்திசாலியென நம்புபவர்.

⋆ யார் புத்திசாலி?

தன் முட்டாள் தனங்களை உணரும் புத்தியோடு இருப்பவர்.அதைத் தொடர்ந்து திருந்துபவர்.

⋆ இன்றைய ஆன்மீகத்தை நம்பலாமா ?

நம்பாதீர்கள், நவநாகரீக மனிதருக்கு அது கடினம்.

portrait of a spiritual figure

நிதானம்
- இதைத் தானமளியுங்கள். இதைப்
பெறுவோரும்,
கொடுப்போரும் புண்ணியவான்கள்.

வெறுமனே எதையும் நம்பாதீர்கள்,

முதலில் யோசித்துப்பாருங்கள். பலன்களை ருசித்துப்பாருங்கள். பின் தியானத்தை ஒத்துக்கொள்ளுங்கள்.

ஏற்றுக்கொள்ளுங்கள்.

நம்பவேண்டிய அவசியமே இல்லை எனுமளவிற்கு அது அனுபவமாகிவிடும்.

★ எந்த குருவிடம் போகக் கூடாது?

'மற்ற குருமார்களிடம் போகாதீர்கள்', எனச் சொல்லும் குருமார்களிடம் நிச்சயமாகப் போகாதீர்கள்.

★ மற்ற ஆன்மீக இடங்களுக்குச் செல்லலாமா?

நிச்சயமாக! எல்லா நல்ல இடங்களுக்கும் செல்லுங்கள். எல்லாத் தோட்டங்களிலிருந்தும் பெற்ற மலர்களால், ஓர் அழகுப் பூச்செண்டை உங்களுக்காகச் செய்து கொள்ளுங்கள்.

★ எது ஆத்மா?

இந்தக் கேள்வியைக் கேட்கக் காரணமாயிருப்பது.

★ எது தர்மம்?

உங்களுக்கும் மற்றவருக்கும்
ஆனந்தமளிக்கும் எல்லாச் செயல்களும்
தர்மங்கள்.

★ எது அதர்மம்?

உங்களுக்கும், மற்றவருக்கும்
துன்பமளிக்கும் எல்லாச் செயல்களும்
அதர்மங்களே!

எந்த குருவிடம் போகக் கூடாது?

'மற்ற குருமார்களிடம்
போகாதீர்கள்' எனச் சொல்லும்
குருமார்களிடம் நிச்சயமாகப்
போகாதீர்கள்.

★ பதவியின் நோக்கம்? உதவி செய்வது.

★ நீங்கள் நிறைய கதை சொல்வதின் இரகசியம் என்ன? ஞானக்கதைகள், சத்திய விதைகள்!

நலம் தரும் மருந்தின் கசப்பை மறைக்கும் இனிப்புப்பூச்சு, ஆனந்தம் தரும் சத்தியத்தின் கடினத்தைக் குறைக்கும் கதைப்பூச்சு.

★ நான் ஏன் இன்னும் ஞானமடையவில்லை?

அது இன்னும் கேள்வியாக மட்டுமே இருக்கிறது. முதலில், கேள்வி வேள்வியாகட்டும்...

பின் குழந்தையைக் காணத்துடிக்கும் தாயின் தவிப்பாக அது மாறட்டும்... அது நடந்தால், ஞானக்குழந்தை கருத்தரிக்கும். நீங்கள் ஞானியாவீர்கள்.

★ சொர்க்கம் எங்கேயிருக்கிறது?

சொர்க்கமும், நரகமும் புவியியல்ரீதியானதல்ல. அவை மனோரீதியானவை. சொர்க்கம் உங்களுக்குள்ளே...

★ படிப்பு பற்றி...

படிப்பு ஒரு கலை.

விருப்பம், ஞாபக சக்தியின் பிறப்பிடம். விருப்பம் மலர்ந்தால், படிப்பு ஒரு சுவை. அது வேறீடத்தில் மலர்ந்தால், படிப்பு ஒரு சுமை.

Nithyananda

எது தர்மம்?

உங்களுக்கும் மற்றவருக்கும் ஆனந்தமளிக்கும் எல்லாச் செயல்களும் தர்மங்கள்.

சுகப்பிரம்மம்

இமைகளை மூடினால்,
முன்னால் தெரிந்த உலகம்
சட்டென மறைந்து போகிறது!
ஓர் இமை மூடலில் காணாமல் போகும்
உலகத்தை, உங்களுக்குக் கண்டுபிடித்துத்
தருவது எது!?
நிச்சயம் அது இமையல்ல!
பின் எது?

பதிலைச் சொல்லும் முன் ஒரு சிறிய கதை...

ஆற்றங்கரையில், உடலில் ஆடையில்லா திகம்பரராய் கடந்து கொண்டிருந்தார் சுகப்பிரம்மம்.

அங்கு குளித்துக் கொண்டிருந்த
இளம்பெண்கள், இவரை ஒருபொருட்டாய்க்
கூடக் கருதவில்லை.

ஆனால், அடுத்த நொடியே நிலைமை தலைகீழானது.

வாலிபன் சுகப்பிரம்மத்தின் தந்தை வியாசர், அதே இடத்திற்கு வந்தார்.

இமைகளை மூடினால்,
முன்னால் தெரிந்த உலகம்
சட்டென மறைந்து போகிறது!
ஓர் இமை மூடலில் காணாமல்
போகும் உலகத்தை, உங்களுக்குக்
கண்டுபிடித்துத் தருவது எது!?

குளித்துக் கொண்டிருந்த பெண்கள் பதறியடித்துக் கொண்டு ஆடைகளைத் தேடி ஓடினர்.

நிகழ்ந்த அனைத்தையும் பார்த்த வியாசருக்கு வியர்த்துப் போனது!.

"என்ன இது! என் மகன் இளைஞன். அதுவும் ஆடையில்லாமல் உங்களைத் தாண்டிச் செல்லும்போது கூச்சமில்லாமல் கும்மாளம் அடித்தீர்கள்.

நான் முதிர்ந்தவன். பண்பானவன். என்னைப் பார்த்ததும், இப்படி பதறியடித்துக் கொண்டு ஓடுகிறீர்களே! என்ன காரணம்?" என வெகு குழப்பத்தோடு கேட்டார்.

அதற்கு அப்பெண்கள்...,

"உங்கள் மகனின் கண்கள் வேறு . உங்களின் கண்கள் வேறு".

வியாசர், "அப்படியென்றால் ..?"

பெண்கள், "உங்கள் பார்வையில் ஆண், பெண் என்ற வித்தியாசம் தெளிவாய்த் தெரிகிறது. அது எங்களை உறுத்துகிறது," என அவர்கள் சொன்ன பதிலில் வியாசர் ஆடிப் போனார்!

வியாசரையே ஆடிப்போக வைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது கண் பார்வை.

அதனால்தான் நம் தமிழ் முன்னோர் அன்றே சொல்லி வைத்தார்கள்.

portrait

அலட்சியம் தலைதூக்கும்போதே, அதை அலட்சியம் செய்துவிடுங்கள்.

உறவுகளிடமிருக்கும் விரிசல்கள் தானாய்
ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும்
அதிசயங்களைக் காண்பீர்கள்.

“கல்லடி பட்டாலும் படலாம் ; கண்ணடி படக்கூடாது” என்று. இது உண்மையே. உங்களின் கண்பார்வைக்குக் கல்லைக்கூடக் கரைக்கும் சக்தி உண்டு.

நம்மில் பெரும்பாலோர் எதிரில் இருப்பவரின் முகத்தைக்கூட பார்த்துப் பேசுவதேயில்லை.

பேசிக் கொண்டிருப்பவரைக் கவனிக்காமல், அவருடைய உடை, கை, கால் அசைவுகளைக் கவனிப்போம். இன்னும் சிலர் பேசிக்கொண்டே எழுதுவது, படிப்பது, போனில் உரையாடுவது என்று வேறு வேலையில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள்.

இவ்வாறு செய்வதால் அதிகபட்சம் கருத்துப் பரிமாற்றம் (Informa-tion sharing) மட்டுமே நடக்கும். ஆனால், அடிப்படையான உணர்வுகளின் ஆத்மார்த்தமான பரிமாற்றம் (Emotional sharing) அங்கு நடைபெறாது.

கணவன் - மனைவிக்குள் ; பெற்றோர் - குழந்தைகளுக்குள் ; நண்பர் - உறவினர்களுக்குள் ; ஆசிரியர் - மாணவர்களுக்குள் வரும் எல்லா சச்சரவுகளுக்குமான விரிசல் இங்குதான் விழ ஆரம்பிக்கிறது.

அந்த விரிசல்தான் பிறகு, நாளாக நாளாக பெரிதாகி, விழுந்தால் எழமுடியாத அளவுக்கு ஆழமான மனப்பள்ளத்தாக்காகிறது.

நன்றாக ஆராய்ந்தால் தெரியவரும் உண்மை, “ இது நம் அலட்சிய மனோபாவத்தால் வரும் பிரச்சினை. தும்பை விட்டு, வாலைப் பிடிக்கக் கூடாது.

அலட்சியம் தலைதூக்கும்போதே அதை அலட்சியம் செய்துவிடுங்கள்.

உறவுகளிடமிருக்கும் விரிசல்கள் தானாய்
ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும் அதிசயங்களைக்
காண்பீர்கள்.”

உங்களின்
கண்பார்வைக்குக்
கல்லைக்கூடக் கரைக்கும்
சக்தி உண்டு.

தியானம்

இந்தத் தியானத்தைச் செய்வதால், நீங்கள் அடையப் போகும் பலன்கள்.

1. நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு சக்தி கிடைக்கும். ஏனென்றால், நீங்கள் சொல்லும் கருத்தை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்வார்கள்.

2. இதனால் உங்களால் நல்ல பேச்சாளராக முடியும் (Conversational skill) மற்றும் உங்களைச் சுற்றி மக்கள் வசீகரிக்கப்படுவார்கள் (Convincing skill).

3. உறவுகளிடம் சுமுகமான உறவு நீடிக்கும்.

4. இது உங்கள் தனித்துவத்தைச் செம்மைப்படுத்தும்.

இந்தத் தியானம் உங்களை சூட்சுமமாகப் பல பரிமாணங்களில் வளரச் செய்யும்.

கண்களோடு கண்கள் கலப்பதேயில்லை. நெருங்கிய உறவினர்களைக்கூட நாம் ஆழமாகப் பார்ப்பதில்லை.

ஆழமாகப் பார்ப்பது வேறு ; அடுத்தவரை ஊடுருவுவது வேறு.

சுகப்பிரம்மம் ஆழமாய் பார்த்தார் ; அன்பாய் பார்த்தார்.

ஆனால், வியாசரின் பார்வையோ ஊடுருவியது. மற்றவர்களிடமும், உற்றவர்களிடமும் பழகும்போது கண்ணோடு கண்பார்த்து கரிசனமாய்ப் பேசுங்கள். அவர்களை ஊடுருவும் செயல் அன்றோடு நின்றுவிடும்.

ஆழமாய்ப் பாருங்கள்.
அழகாய்த் தெரிவார்கள். பின்
நீங்கள்கூட அழகாய்த் தெரிவீர்கள்.

பார்வை ஊடுருவுவதிலிருந்து ஓய்வெடுத்துக்கொண்டால், கோடி ஆனந்தங்கள் உங்களுக்கே சொந்தம்.

மிகவும் சரியாய் புரிந்து கொள்ளப்பட்ட பிரம்மச்சரியம்

கிருஷ்ணர் மிகவும் ஆச்சரியமான சன்யாசி. அதே வேளையில், மிக ஆச்சரியமான இல்லறவாசி. -சுவாமி விவேகானந்தர்.

துறவறம் என்பது பெண்களைக் கண்டாலே ஓடி ஒளியும் பலவீனமான நிலையல்ல.

சன்யாசி ஆவதற்கான குறைந்தபட்சத் தகுதி, இல்லறவாசி ஆவதற்கான அதிகபட்சத் தகுதி.

அதாவது, ஒரு குடும்பத்தையே சர்வசாதாரணமாகக் கையாளத் தெரிந்தவரால்தான், ஒரு தனி ஆஸ்ரமத்தைக் கையாள்வதைப் பற்றி யோசிக்கக் கூட முடியும்.

கிருஷ்ணர் மிகவும்
ஆச்சரியமான சன்யாசி.
அதே வேளையில், மிக
ஆச்சரியமான இல்லறவாசி.

-சுவாமி விவேகானந்தர்.

சன்யாசியாக மாறுவதென்பது இலேசுபட்டக்
காரியமல்ல. அதற்கு நிறையத் தவம் செய்ய
வேண்டும்.

இவ்வளவு தவம் செய்து சன்னியாசியாய்
மாறுவதால் எனக்கென்ன பயன்? எனக்
கேட்டால்...

நீங்கள் ஒரு கிருஷ்ணரைப் போல் ஆனந்தமாக வாழலாம் என்பதே என் பதில்.

கிருஷ்ணர், பிரம்மச்சரியத்திற்கான அருமையான உதாரணம்.

ஆனந்தவாழ்வு கல்வி பயிலும் மாணவர் ஒருவர் இப்படி கேட்டார். “பிரம்மச்சரியம் என்றால் என்ன?”

பிரம்ம+சரியம்.

அதாவது பிரம்மம் என்றால் கடவுள், சரியம் என்றால் கடவுளை போல் வாழ்தல்.அதாவது கடவுளைப்போல் வாழ்தல் பிரம்மச்சரியம்.

“யார் சன்யாசி?”

“தனக்குள் ஆனந்தமாய், தனக்குள் சுதந்திரமாய், யாருடைய தொந்தரவுமில்லாமல் இருக்கும் நிம்மதியான நிலையே சன்யாசம்.”

“இன்னும் விளக்கமாய்ச் சொல்லுங்கள்”

“பெண்களின் நினைவுகளாலும், பெண்களின் அருகாமையாலும் தொந்தரவு செய்யப்படாத நிலையில் இருப்பவர், சம்சாரியாக (இல்லறவாசி) இருந்தாலும், சன்யாசிதான். அதுவே கிருஷ்ண நிலை.

பெண்களே இல்லாத காட்டுக்குள், மரத்தினடியில் அமர்ந்திருக்கும் தனிமனிதரின் மனதுக்குள், இரம்பையாகவும், மேனகையாகவும் மாறி மாறிப் பல பெண்களின் நினைவுகள் வந்து வாட்டினால்...

portrait of a smiling monk

> “யார் சன்யாசி?” > > “தனக்குள் ஆனந்தமாய், தனக்குள் சுதந்திரமாய், > யாருடைய தொந்தரவுமில்லாமல் இருக்கும் > நிம்மதியான நிலையே சன்யாசம்.” அவர் தன்னை சன்யாசி என்று அழைத்துக்கொண்டாலும், சம்சாரியே. சன்யாசம் உடையில் இல்லை,

சன்யாசம் உணர்விலிருக்கிறது.

இதுவரை சொன்னது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும். ஆண்களின் நினைவுகளினால் அலைக்கழிக்கப்படாத இராதை நிலையை அடைந்துவிட்டால் அவர்களும் கிருஷ்ண நிலையைத் தொட்டவர்கள் தான்.''

சின்ன கதை

கிருஷ்ணர், கோபிகைகளோடு ஆனந்தக் கூத்தாடி வந்துகொண்டிருந்தார்.

யமுனை நதியைக் கடக்க வேண்டியிருந்தது. நதியிலோ தண்ணீர் கரைபுரண்டோடியது. அப்போது கிருஷ்ணர், "யமுனையே நான் பிரம்மச்சாரி என்பது உண்மையானால் எனக்கு வழிவிடு'' என்று சொன்னார்.

அவர் சொன்ன உடனே யமுனை பிரிந்து, கிருஷ்ணர் நடந்து செல்ல பாதையை உருவாக்கிக் கொடுத்தது.

கிருஷ்ணர் பிரம்மச்சாரி என்பதை இயற்கையே உறுதிசெய்திருக்கிறது.

இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததா? இல்லையா? இது நிஜமா? பொய்யா? என்றெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்வதால் பலன் ஏதும் இல்லை. இச்சம்பவத்தில் பதிந்திருக்கும் சத்தியம் மிக ஆழமானது.

அது...

சன்யாசம் உடையில் இல்லை,

சன்யாசம் உணர்விலிருக்கிறது.

கிருஷ்ணர் ஒரு பிரம்மச்சாரி.

அவ்வளவு கோபியரோடு இருந்தும், கிருஷ்ணர் ஒரு பிரம்மசாரியாக, எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்திருக்கிறார்.

நீரிலேயே இருந்தாலும், அதனோடு கொஞ்சமும் ஒட்டிக்கொள்ளாத தாமரையைப் போல, உணர்வளவில் யாரோடும் ஒட்டி க்கொள்ளாத, சிக்கிக்கொள்ளாத, சுதந்திரத்தைப் பெற்றிருந்தால் மட்டுமே கிருஷ்ணரைப்போல் வாழ்வைக் கொண்டாடலாம்.

நிருபர் ஒருவர், "ஆன்மீகம் என்ற பெயரில் மக்களுக்கு எந்த நல்லதைத் தர விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டபோது, "கொண்டாட்டம் மிகுந்த ஆனந்தமயமான வாழ்வு," எனச் சொன்னோம்.

கிருஷ்ணர் சிறந்த அரசனாயிருந்தார், கைதேர்ந்த அதிபதியாயிருந்தார், ஞானகுருவாயிருந்தார், நல்ல கணவராயிருந்தார், உயிர் நண்பராயிருந்தார், சுட்டிக் குழந்தையாயிருந்தார்.

இவையனைத்தையும், ஆனந்தமயமான பிரம்மச்சரிய நிலையிலிருந்து கொண்டாடும் பிரம்மச்சாரியாயிருந்தார்.

"தவறாய்ப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் பிரம்மச்சரியத்தைச், சரியாய் புரியவைப்பதும், உலகில் ஆனந்தமயமான சூழலை உருவாக்குவதும்தான் நிஜமான ஆன்மீகம், அதைத்தான் உங்களுக்கு தர விரும்புகிறோம்."

தியானம்

தியானம் சின்னம்

விரதம் என்ற பெயரில் பட்டினிகிடப்பது; பக்தி என்ற பெயரில் மற்ற மதங்களின் மேல் அவதூறு பேசித் திரிவது; சாஸ்திரங்கள், வேதங்கள், நீதி நெறிகள் எனும் பெயரில் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்வது ,நிச்சயம் ஆன்மீகம் அல்ல.

ஆன்மீகம், ஆத்திகம் எனும் பெயரில் நம்மை எவை எவையெல்லாம் சுருக்கிக்கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டுபிடியுங்கள்.

இந்தக் கண்டுபிடிப்பு, உங்களுடைய வாழ்க்கைச் சாலையை விசாலமாக்கிவிடும். ஆனந்தத் தேர் உலாவரும் இராஜவீதியாக வாழ்வு மாறிவிடும்.

கொண்டாடி, மகிழ்ந்து வாழ்ந்திட, நிஜ ஆன்மீகம் நோக்கித் திரும்புங்கள். நிஜ ஆன்மீகம் நோக்கி மனம் திரும்ப உதவும் மேலுள்ள கண்டுபிடிப்பைச் சிரத்தையோடு செய்யுங்கள்.

கண்டுபிடிப்புக்காலம் தியானகாலமாக மாறுவதைக் கண்டு மகிழுங்கள்.

மிகவும் தவறாய் புரிந்து கொள்ளப்பட்ட பிரம்மச்சரியம்

கிருஷ்ணர் கோபிகைகளோடு யமுனையைப் பார்த்து, "நான் பிரம்மச்சாரி என்பது உண்மையானால் யமுனையே எனக்கு வழி விடு" என்று சொல்லியதும் யமுனை வழிவிட்டது... எனும் சம்பவத்தை குருகுலத்தில் தன்னுடைய சீடர்களிடம் குரு பகிர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது துடிப்பான ஓர் இளம் சீடர் எழுந்து, "கரைபுரண்டு ஓடிய யமுனை இரண்டாய்க் கிழிந்து கிருஷ்ணர் நடந்து செல்ல ஒரு பாதை உருவாக்கியது என்பதைக் கூட நம்ப முடிகிறது. புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், அவ்வளவு கோபிகைகளோடு ஆடிப்பாடி, விளையாடிய கிருஷ்ணர், ஒரு பிரம்மச்சாரி என்பதை நம்பவும் முடியவில்லை. புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

கோபிகைகளின் நடுவிலிருந்த கிருஷ்ணர் எப்படி ஒரு பிரம்மச்சாரியாக இருக்க முடியும்?" எனக் கேட்டார்.

ஞானம், ஆனந்தம் பற்றி
ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும்
அவற்றைப் அனுபவமாக
உணராமல் புரிந்து கொள்ள
முடியாது.

குரு, சீடரின் நிலையை உணர்ந்தவராய்
மிகவும் கருணை பொங்கும் குரலில் பேச
ஆரம்பித்தார். "அப்பனே! உனக்கு வந்த அதே
சந்தேகம் எனக்கும் வந்தது.

துவக்கத்தில் எனக்குள்ளும் உணர்ச்சித் தடுமாற்றங்கள் இருந்தன.

அப்புறமாய் படிப்படியாய் தியானம் செய்து என்னுள் விழிப்புணர்வு நிலை உயர்ந்த பின்புதான் பல உண்மைகள் தெரிய வந்தது.

விழிப்புணர்வு பெருக்கும்முன் உணர்ச்சிகள் பொங்கி கொண்டிருந்தன.

தனியாய்க் கண்ணை மூடி அமர்ந்திருந்தபோதுகூட, விதவிதமான உணர்ச்சிகள் வாட்டி வதைத்த காலமும் உண்டு.

தியானத்தில் மூழ்க மூழ்க, விழிப்புணர்வு பொங்க ஆரம்பித்தது. ஆனந்தமயமான சமநிலை என்னுள் உருவாக ஆரம்பித்தது. அதற்கப்புறம் என்னை வாட்டி வதைத்த உணர்ச்சிகள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தே போனது.

உணர்ச்சிகளிடமிருந்து விடுபட்டு மேல் எழும்பிய பின்புதான், கிருஷ்ணரின் ஆனந்தமயமான சம உணர்வுநிலை நிஜம் என்பதும், அவரால் பிரம்மச்சரிய நிலையில் வாழ்ந்திருக்க முடியும் என்பதும் எனக்குப் புரிந்தது" என்று தன் சீடரின் சந்தேகத்திற்கு அனுபவ விளக்கம் அளித்தார் குரு.

ஞானம், ஆனந்தம் பற்றி ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும், அவற்றைப் பற்றி யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

அதிகபட்சமாக அந்தச் சீடருக்கு ஏற்பட்டதுபோல சந்தேகங்கள் ஏற்படலாம்.

அதைத் தாண்டி எதுவும் நிகழ முடியாது.

தியானத்தில் ஆழ்ந்து சென்றால்தான் ஞானம், ஆனந்தம் போன்ற உயர்ந்த நிலைகளைப் புரிந்து கொள்ளவே முடியும்.

portrait of a spiritual master

> பிரம்மச்சரியம் என்பது வெறுமையாய்
> வாழ்வதல்ல. வாழ்வின் வெறுமையைப்
> போக்கும் வாழ்வியல் பயிற்சி.

தியானத்தில் ஆழ்ந்து செல்லாதவர்கள் தவறாய்ப் புரிந்துகொள்ளவே நிறைய வாய்ப்பிருக்கிறது.

ஆனந்த சன்யாசத்திற்கான நேர்முகத் தேர்வில், புதிதாய் வந்திருந்த இளைஞர், "பிரம்மச்சரியம் என்றால், வாழ்வின் சுகங்களை விட்டு, வெறுமையாய் வாழ்வதா?" எனக் கேட்டார்.

"பிரம்மச்சரியம் என்பது வெறுமையாய் வாழ்வதல்ல. வாழ்வின் வெறுமையைப் போக்கும் வாழ்வியல் பயிற்சி.

வாழ்வில் எல்லாமிருந்தும், ஏதோ ஒரு வெறுமை இருக்கும் வாழ்க்கையிலிருந்து, வாழ்வில் எதுவுமில்லாவிட்டால்கூட, ஆனந்தமாய் இருக்கும் வாழ்வு முறையைக் கற்றுகொண்டு வாழ்வதே பிரம்மச்சரியம்" எனச் சொன்னேன்.

வெளிநாட்டவர் படையெடுப்பதற்குமுன், இந்தியாவில் மிக அருமையான வாழ்வியல் கல்வித்திட்டம் வழக்கிலிருந்தது.

ஏழு வயதிற்கப்புறம் குருகுலத்தில் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.

கலை, காவியம், ஓவியம், மருத்துவம், விஞ்ஞானம், ஜோதிடம் போன்ற வாழ்வின் அடிப்படை சித்தாந்தங்கள் துவக்கத்திலிருந்தே கற்றுத்தரப்படும்.

அத்தோடு வாழ்வின் ஆனந்தத்திற்குத் தேவையான ஞானம், தியானம் பற்றிய வேதாந்த ரகசியங்களும், நுட்பங்களும் கற்றுத்தரப்படும். படிப்படியாய் கற்று தேர்ந்தபின் தனிமனிதராய் வாழும் தகுதி பெற்றவருக்கு, பிரம்மசூத்திரமும், திருமணவாழ்க்கை அவசியம் எனும் நிலையிலிருப்பவர்களுக்கு காமசூத்திரமும் கற்றுத்தரப்படும்.

குருகுலத்தில்...

தனிமனிதராய் வாழும் தகுதி

பெற்றவருக்கு பிரம்மசூத்திரமும்,

திருமணவாழ்க்கை அவசியம்

எனும் நிலையிலிருப்பவர்களுக்கு

காமசூத்திரமும் கற்றுத்தரப்படும்.

காமசூத்திரம் பயின்று முடித்து சம்சார
வாழ்க்கைக்குத் தேவையான மற்ற
கல்வியறிவுகளை வளர்த்துக் கொண்டு வாழ்க்கை
க்ககுள் நுழைவார்கள்.

பிரம்மசூத்திரம் பயின்று முடித்து,
சன்யாச வாழ்க்கைக்குத் தேவையான மற்ற
ஆன்மீக ஞானத்தைப் பெற்று, மக்களுக்கு

ஆனந்தத்தையும் ஆரோக்கியத்தையும் தர ஆரம்பிப்பார்கள்.

சன்யாசியானவர்களும், சம்சாரியானவர்களும் வாழ்வை முழுமையாய், இனிமையாய் வாழ்வார்கள்.

இரண்டு தரப்பினருக்கும், வாழ்வில் ஏதோ ஒன்றைத் தாங்கள் இழந்து விட்டோம் என்ற ஏக்கம் வாழ்வின் எந்தவொரு சூழலிலும் வரவே வராது.

காரணம், சிறுவயதிலிருந்து அவர்களுடைய பிரம்மச்சரிய சக்தி வீணாக்கப்படாமலே வளர்க்கப்பட்டிருப்பார்கள்.

நம்முடைய ஞானப் பரம்பரையினால் வடிவமைக்கப்பட்ட குருகுலம், மனித குலத்தின் ஆனந்தத்தை இலக்காகக் கொண்டது.

எல்லா பொருளும், எல்லா அறிவும் பெற்றிருந்தும், ஆனந்தத்தின் அடிச்சுவடுகூடத் தெரியாத மேலை நாட்டு கலாச்சார முறையிலிருந்து, இந்தியமக்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

இப்போதிருக்கும் வாழ்வையே, இன்னும் ஆயிரம் மடங்கு ஆனந்தமாய் வாழ உதவும் குருகுலம், மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். அப்போதுதான் பிரம்மச்சரியம் என்றால் என்ன என்றே புரிய வரும்.

'How to become a billionaire' என்ற பிரபலமான தலைப்பில் சொற்பொழிவாற்றும் மேலைநாட்டு சொற்பொழிவாளர்..

“நீங்கள் கோடீஸ்வரர் ஆகாமலிருப்பதற்கான மூலகாரணங்களில் ஒன்று நான் கோடீஸ்வரனாகவேண்டும் என ஒருமுறை கூட எண்ணாமல் இருப்பதே,” எனச் சொன்னார்.

portrait

இப்போதிருக்கும் வாழ்வையே, இன்னும் ஆயிரம் மடங்கு ஆனந்தமாய் வாழ உதவும் குருகுலம், மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். அப்போதுதான் பிரம்மச்சரியம் என்றால் என்ன என்றே புரிய வரும்.

வாழ்வின் எல்லாச்சூழலிலும் ஆனந்தமாயிருக்கும் ஞானியாக நீங்கள் இன்னும் ஆகாதிருப்பதற்கான மூலகாரணங்களில் ஒன்று...

உங்களாலும் அது முடியும் என்ற எண்ணம் பிறக்காததே!

கிருஷ்ணரை வழிபடுவதோடு நில்லாமல், கிருஷ்ணரின் 'வழி' பட்டு, அவரின் தியான, ஞான வழி முறைகளைப் பின்பற்றி கிருஷ்ணராகவே மாறுவது எப்படி எனத் தியானியுங்கள்.

அப்படி தியானித்து செயல்பட்டபின், தியானசக்தி ஒருவருக்குள் பொங்க ஆரம்பித்தபின்தான் பிரம்மச்சரியத்தைப் பற்றி புரிந்து கொள்ளவே முடியும்.

Portrait of Nithyananda wearing a white turban