KAILASA Library/மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்/மயக்கும் மன மயக்கம்Sign in
மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்

மயக்கும் மன மயக்கம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சுவாமி பரமஹம்ச நித்யானந்தா

விழிப்புணர்வின்மை என்னும் மது

அன்று முகுந்தன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருந்தார்.

மது வாசம் தெரியாதிருக்க, பீடா போட்டுக் கொண்டு வந்திருந்த முகுந்தனால், தடுமாற்றத்தை மறைக்க முடியவில்லை. முறைக்கும் மனைவியைப் பார்த்ததும், பூனையைப் போல மெதுவாகத் தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக, முகுந்தன், புத்தகம் படிப்பவர் போல பாவனை செய்துகொண்டிருந்தார்.

முறைத்தபடியே அறையை எட்டிப்பார்த்த முகுந்தனின் மனைவி "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டார்.

குனிந்த தலை நிமிராமல், "பார்த்தால் தெரியவில்லையா?... நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று! " விறைப்பாகப் பதிலளித்தார் முகுந்தன்.

முகுந்தனின் மனைவி,. "நீங்கள் நிறைய குடித்துவிட்டு வந்திருப்பது எனக்குத் தெரியும். அப்பாவிபோல கவிழ்த்து வைத்திருக்கும் தலையை நிமிர்த்தலாம் தப்பில்லை” என்றவள் தொடர்ந்து...

அறிவுப்பூர்வமான
விஷயங்களைக் கவனிக்கும்
மேல் மனம் மட்டுமே விழித்துக்
கொண்டிருக்கிறது. ஆழ்மனம்
விழிப்புணர்வின்மையால்
மிகவும் மந்தமடைந்திருக்கிறது

“நடித்தது போதும், தலைகீழாகத் திறந்து வைத்திருக்கும் உங்க அப்பாவின் பழைய வெற்றிலை பாக்கு பெட்டியை மூடிவைத்து விட்டு சாப்பிட வரலாம்!” என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

‘வெற்றிலைபாக்குப் பெட்டியையா இவ்வளவு நேரமாகப் புத்தகம் என்று நம்பி வீராப்பாய் அமர்ந்திருந்தேன்’ என்று நினைக்க நினைக்க முகுந்தனுக்கு அவமானமாக இருந்தது!

மதுவால் மயக்கப்பட்ட, மந்தமான மூளையால், வெற்றிலைபாக்குப் பெட்டியைப் புத்தகம் என்று நம்ப முடிந்தது.

நம் மனமும், விழிப்புணர்வின்மை என்னும் மது குடித்திருக்கிறது. மந்தமான மனம் தனக்குச் சரியென்று பட்டதெல்லாம், சரியென்று நம்பித் தொலைக்கும். அத்தோடு நில்லாமல் உடலையும் இதன் இஷ்டப்படித் தூண்டிவிடும்.

இந்த ரகசியம் புரியாத மனிதர்கள், விளக்கு நெருப்பைத் தேடிச் சென்று, தன்னை மாய்த்துக் கொள்ளும் விட்டில் பூச்சியாய் மாறிவிடுவர். தானே வலிய தேடிச் சென்று துன்பத்திலும், துக்கத்திலும் சிக்கிக்கொள்வர்.

முகுந்தனின் மனைவி, குத்திக்காட்டாதிருந்தால், கடைசி வரை முகுந்தனுக்குத் தன் தவறு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.

மேற்கூறிய சிறிய கதையின் கருத்தாழம், மிக ஆழமானது. நம் மனம் மட்டும் மயங்கியிருந்தால், பிரச்சினைகள் குறைவுதான். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அனைவருமே மயங்கியிருப்பதுதான் பிரச்சினை.

portrait

நம் மனமும், விழிப்புணர்வின்மை என்னும் மது குடித்திருக்கிறது. மந்தமான மனம் தனக்கு சரியென்று பட்டதெல்லாம், சரியென்று நம்பித் தொலைக்கும். அத்தோடு நில்லாமல் உடலையும் இதன் இஷ்டப்படி தூண்டிவிடும்.

அறிவுப்பூர்வமான விஷயங்களைக் கவனிக்கும் மேல்மனம் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிறது. ஆழ்மனம் விழிப்புணர்வின்மையால் மிகவும் மந்தமடைந்திருக்கிறது. அதனால்தான் அறிவுப்பூர்வமாக, நாம் எதிர்பார்த்தமாதிரி, கனவு கண்ட மாதிரியான வாழ்வோ, வாழ்க்கை அனுபவங்களோ நமக்கு அமைவதில்லை.

குருடன்,குருடனுக்கு வழிகாட்டும் கதையாகிவிட்டது, இன்றைய வாழ்வு முறை.

ஒரு சின்ன சம்பவம்...

பல் மருத்துவரிடம், அந்தப் பெண் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். "இன்னும் சரியாகப் பொருந்தவில்லை இந்த செயற்கைப்பல்... நானும் எத்தனை முறைதான் வருவது" என நொந்துகொண்டு தன் பல்லை சரிசெய்யும்் படி கூறினார்.

பல் மருத்துவர் மிதமான குரலில், "இத்தோடு மூன்று முறை நீங்கள் சொன்னதற்காக ராவி விட்டேன். இனி ஒரு முறை ராவினால்கூட ,அது உங்களின் வாய்க்கு நிச்சயமாகப் பொருந்தாது" என்றார்.

அந்த பெண், "வாய்க்குப் பொருந்துவதை பற்றி யார் கவலைப்பட்டது, நீ ங்க செய்த செயற்கைப் பல் என் முகத்துக்குப் பொருத்தமாக இல்லை," என்று எரிச்சலோடு சொன்னார்.

கடைசிவரை பல்மருத்துவர், "தொழில்படி நான் செய்தது சரிதான்," என்று வாதாட, அந்தப் பெண்மணி, "யாருக்கு வேண்டும் உமது உபதேசம், என் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாததற்கு நீர் கூறும் சப்பைக்கட்டு இது" என்று வெறுப்போடு சொல்லிவிட்டு வெளியேறினார்.

மனிதர்கள் தங்கள் வாழ்வில்
பொறுமையைக் கடைப்பிடிக்கும்
கலை கலைந்து போனதே, இதுபோன்ற
சச்சரவுகளுக்குக் காரணம்.

சாதாரணம் போன்று தெரியும் இந்த சச்ச
ரவுகள்தான் மனித நேயத்தை மறையச் செய்து
கொண்டிருக்கிறது.

தவறுகள் தன்னிடமிருப்பது
தெரியாமல், பொறுமையிழந்து,
அது சச்சரவுகளாக வெடித்து
உறவுகள் சிதறக் காரணம்,
ஆழ் மனதின் மந்தத்
தன்மைதான்.

தவறுகள் தன்னிடமிருப்பது தெரியாமல், பொறுமையிழந்து, அது சச்சரவுகளாக வெடித்து, உறவுகள் சிதறக் காரணம், ஆழ்மனதின் மந்தத்தன்மைதான்.

மேல்மனம் மட்டும் கொஞ்சம் விழித்துக்கொண்டிருப்பதால், அதிகபட்சம் திறமையாக வாக்குவாதம் செய்ய முடியும் - வாதத்திறமையால் ஜெயித்துவிட்டதாக நம்ப முடியும்.

ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஜெயித்தாலும் அது பெருந்தோல்வியே.

வாக்குவாதம் என்ற ஒன்று ஆரம்பிக்கும்போதே, உங்களைச் சுற்றி ஒரு சுமுகமற்ற சூழலை உருவாக்கிவிடுகிறீர்கள். இன்றைய நண்பர்களை, நாளைய எதிரிகளாக மாற்றும் நாசவேலையில், உங்களை அறியாமல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

வாக்குவாதத்தில் காலடி எடுத்து வைத்தால், முதல் அடியே தோல்விதான். இவை அனைத்திற்கும் காரணம், அடிமனமயக்கம்தான். அது உடலில் சேர்ந்து விட்ட மதுவுக்குச் சமம். அது, அடி மனதைப் பற்றிக் கொண்ட விழிப்புணர்வின்மை.

மது குடித்தவரின் மயக்கம் தெளிவிக்கப்படாத வரை, அவரின் அரைகுறை புரிந்து கொள்ளுதல்கள்தான் சரியென வாதிடுவார். மன மயக்கம் தெளிவிக்கப்படாத வரை, உறவுகளையும், உலகையும் எப்போதுமே தவறாகப் புரிந்து கொள்வதைத் தவிர்க்க முடியாது.

சுற்றியிருப்பவர்களும் இதே மனமயக்கத்தில் சிக்கித் தவிப்பார்கள்தான். எனவே...

Nithyananda speaking at a microphone

கொஞ்சம் விழித்துக் கொண்டு, நீங்களே, மேல் மனதிலிருந்து, அடிமனதைத் தெளியச் செய்யுங்கள். உள்ளுக்குள்ளேயே வெகுகாலமாக உறங்கிக் கொண்டிருக்கும் அடிமனதைத் தட்டியெழுப்புங்கள். மனதின் மயக்கம் மறைந்துவிடும்.

யாரும் யாருக்கும் உதவ முடியாது குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது .

நீங்கள்தான் உங்களுக்கு உதவவேண்டும்.கொஞ்சம் விழித்துக் கொண்டு, நீங்களே, மேல் மனதிலிருந்து, அடிமனதைத் தெளியச் செய்யுங்கள். உள்ளுக்குள்ளேயே வெகுகாலமாக உறங்கிக் கொண்டிருக்கும் அடி மனதைத் தட்டியெழுப்புங்கள். மனதின் மயக்கம் மறைந்துவிடும்.

உள்ளேயும், வெளியேயும் சுமுகமான சூழல் உருவெடுக்கும்.

  • தவறே செய்திருந்தாலும், அதைத், தான் செய்திருந்தால், தவறை, சரியென வாதிட்டு நிரூபிக்க, வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட வைக்கும் ‘மனமயக்கம்.’
  • "எதையோ அடைய நினைத்து எதையோ அடைந்து விட்டோம். எப்படியோ வாழ நினைத்து எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்." இப்படி நினைத்து நிஜமாகாததின் மூலகாரணம் ‘மனமயக்கம்.’ தான்.
  • “ஏன் இப்படித் தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்? நான் அப்படிப்பட்டவன் இல்லையே!” என்று நம்மை மகாத்மா போலக் காண்பித்து, நாம் திருந்துவதற்கான எல்லா வாய்ப்புகளையும் ‘மனமயக்கம்’ அடைத்து விடும்.
  • வந்த வேலை எந்த வேலையோ, அந்த வேலை மறந்து, சொந்த வேலை என்றெண்ணி ஏதேதோ வேலைகளில் சிக்கவைத்து, மனிதன், தான் பிறப்பெடுத்த நோக்கம் மறந்து, தன் நிம்மதியிழந்து தவிப்பதின் காரணம், மனம் குடித்துவிட்ட விழிப்புணர்வின்மை என்ற மதுவே!

எங்கும் எதிலும்

சுகமாய் இருக்கலாம்

சுகங்கள் மூன்று வகைப்படும்...

1. உடலளவு சுகம்.

2. மனதளவு சுகம்.

3. உயிரளவு சுகம்.

பெரும்பாலான மனிதர்கள் உடலளவு சுகத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டு விடுகின்றார்கள். இதைத் தாண்டுவதேயில்லை.

அப்படித் தாண்டுபவர்கள் மனதளவு சுகத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

கேசவ ரிஷியிடம், "ஐம்புலன்
மயக்கத்தைத் தாண்டிய மயக்கம் இருக்கிறதா?"
என சீடரொருவர் கேட்டபோது...

ஒரு மனிதர் உருப்படியாய்,
ஒரு புதுக்கோணத்தில்
சிந்திப்பதற்கே புலன்களின்
கட்டுக்களில் இருந்து
விடுபட வேண்டும்.

ரிஷி : “இருக்கிறது”

சீடன் : “என்ன அது?”

ரிஷி : “புகழ்”

ஒரு மனிதர் உருப்படியாய், ஒரு புதுக்கோணத்தில் சிந்திப்பதற்கே, புலன்களின் கட்டுக்களில் இருந்து விடுபட வேண்டும்.

உணவு, உறக்கம், கனவு, பாட்டு என சின்னச் சின்ன உடலளவு சுகங்களைத் தாண்டி முன்னேறுபவர்களால்தான் சாதனையாளர்களாக உருவெடுக்க முடிகிறது.

சாதனையாளராக மாறுவதற்கான தகுதி பெறும்போதே, அடுத்தகட்ட மயக்கமான பேர், புகழ், பதவி எனும் மன சுகத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

இவற்றையெல்லாம் தாண்டிய சுகம் ஒன்று இருக்கிறது. அதுதான் உயிரளவு சுகம். இது உணர்ச்சிகளையும் தாண்டியது. முழுக்க முழுக்க உணர்வுப் பூர்வமானது.

எப்போதும் நீங்காத, எதனாலும் குறையாத,

இனிமையான உணர்வைப் பெறத்தான், புத்தர் வீட்டைவிட்டு காட்டுக்குப் போனார். இறுதியில் அதைத்தான் அவர் அடைந்தார்.

ஒரு புத்த பிட்சுவிடம், “புத்தர் 10,000 புத்தர்களை உருவாக்கியது நாட்டுக்குள் தான். காட்டுக்குள் அல்ல.

நாட்டுக்குள்ளேயே ஞானமடைவது சாத்தியம் எனும்போது, புத்தர் மட்டும்தான் ஞானமடைய நாட்டைவிட்டு காட்டுக்குப் போக வேண்டிய அவசியமென்ன?” என பேராசிரியர் ஒருவர் கேட்டதற்கு,

“10,000 பேருக்குக் கிடைத்த ஒரு புத்தர், அந்த புத்தருக்கே ஒரு புத்தர் கிடைக்கவில்லை. நாட்டுக்குள்ளேயே முடியும் எனச் சொல்ல, புத்தருக்குமுன்

portrait of Sadhguru

உணவு, உறக்கம், கனவு, பாட்டு என
சின்னச் சின்ன உடலளவு சுகங்களைத்
தாண்டி முன்னேறுபவர்களால்தான்
சாதனையாளர்களாக உருவெடுக்க முடிகிறது.

ஒரு புத்தர் இல்லையே," எனச் சொன்னாராம்.

"உடலளவில் இனிமையைத் தரும் ஆடம்பர வாழ்வையும், மனதளவில் இனிமையைத் தரும் அரசாட்சியையும், குடும்பத்தையும் துறந்து, உயிரளவில் இனிமையைத் தரும் ஆனந்தத்தை, இருக்குமிடத்திலேயே அடையலாம்" எனச் சொல்ல, ஒரு குரு புத்தருக்கு இருந்திருந்தால், புத்தர் நாட்டிலேயே ஞானமடைந்திருப்பார்... என்ற உண்மையை NSP தியானமுகாமில் சொல்லிக்கொண்டிருந்த போது...

பக்தரொருவர் எழுந்து, "புத்தருக்குதான் புத்தன் இல்லை. ஆனால், நமக்குதான் புத்தரின் போதனைகள் இருக்கின்றனவே. இருந்தும் நாங்கள் ஏன் ஞானமடையாமல் தினசரி வாழ்வை நகர்த்தவே கஷ்டப்படுகிறோம்?" எனக் கேட்டார்.

அதற்கு, "நீங்கள் மட்டுமில்லங்க. 2000 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முன்புவரை, நான் கூட உங்களைப் போல் சிந்தித்ததுண்டு."

பக்தர், "அதென்ன, 2000 ஜனவரி ஒன்று முன்பு வரை"...

"அப்போதுதான் ஞானமடைந்தோம். ஞானமடைவது என்பது நொடிக்கும் குறைவான நேரத்திற்குள் நிகழ்ந்த ஒன்று தான்".

"அப்படியென்றால் 1978ல் பிறந்த நீங்கள், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நிகழக்கூடிய ஞானத்தைப் பெற, 2000 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது எதனால்?"

"10,000 சாவிகள் இருந்ததுதான் காரணம்"

"10,000 சாவிகளா?"

நொடிக்குள்
ஞானம் உங்களுக்கும்
சாத்தியமே.

"சிவன், கிருஷ்ணர், புத்தர், ராமகிருஷ்ணர், ரமணர் என நூற்றுக்கணக்கான ஞானிகள், மனப்பூட்டைத் திறப்பதற்கு, நூற்றுக்கணக்கான சாவிகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். தான் ஆகுமென்றாலும், நூற்றுக்கணக்கான சாவிகளிலிருந்து சரியான சாவியைத் தேர்வு செய்ய காலம் பிடிக்குமே.

2000 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு சாவியாகப் பரிசோதித்து, பரிசோதித்து சரியான சாவி எது எனக் கண்டுபிடிக்கவே சரியாயிருந்தது.

கண்டுபிடித்ததும் திறக்க ஒரு நொடியே நீளம்தான்.

இந்தக் காலத்து மனதைத் திறப்பதற்கான சாவியைக் கண்டுபிடித்துவிட்டோமே! இனியும் கவலை ஏன்?!

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அந்தச் சாவியை வாங்கித் திறக்க வேண்டியதுதான்.

நொடிக்குள் ஞானம் உங்களுக்கும் சாத்தியமே.

இருக்குமிடத்தில், உயிரளவில் இனிமையை அனுபவிப்பது என்பது, உங்களுக்கும் எளிதாய் கிடைக்கக் கூடியதே! ஆயிரம் சாவிகளையும் பரிசோதிக்கும் வேலை, உங்களுக்கு இல்லை" எனச் சொல்லி முடித்தோம்.

வாழ்க்கை ஞானம் என்பது, "அனுபவிக்கிறேன்!" என்ற பெயரில் உடலிலும் மனதிலும் மட்டுமே சிக்கிக் கொள்வதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதுதான்.

புவியீர்ப்பு விசையின் எல்லைக்குள், ஒரு பொருளை எவ்வளவு தூரம் எறிந்தாலும், அது உடனே பூமிக்குள் இழுக்கப்படும். அதனால் பூமியை விட்டுத் தப்ப முடியாது.

Nithyananda smiling

வாழ்க்கை ஞானம் என்பது, "அனுபவிக்கிறேன்!" என்ற பெயரில் உடலிலும் மனதிலும் மட்டுமே சிக்கிக் கொள்வதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதுதான். அதேபோல்தான், மனஈர்ப்பு விசை. சாதாரண மனிதர் எவ்வளவுதான் உயர்ந்தாலும், மீண்டும் மீண்டும் எவ்வளவுதான் உயர்ந்தாலும், மீண்டும் மீண்டும் உடல்நோக்கியே இழுக்கப்படுவார்.

உடலின் மயக்கங்களுக்கும், மனதின் மயக்கங்களுக்கும் இடையே மாட்டி க்கொண்டு மாய்வதை அவரால் தடுக்க முடியாது.

ஒரு பொருள், புவி ஈர்ப்பு விசையின் எல்லையை மட்டும் தாண்டி விட்டால், அந்தப் பொருளுக்குச் சுதந்திரம் கிடைத்துவிடும். அது மிதக்க ஆரம்பித்துவிடும்.

ஒரு மனிதர், தன் மனஈர்ப்பு விசையின் எல்லையைத் தாண்டிவிட்டால், அந்த மனிதரின் ஒவ்வொரு செல்லும், ஆனந்தத்தில் மிதக்க ஆரம்பித்துவிடும்.

லோகோ

# தியானம்

இந்த கட்டுரையைப் படித்ததுமே, "அது எப்படி, மன ஈர்ப்பு விசையைத் தாண்டுவது?" என்ற கேள்வி பிறக்கும்.

உடலளவு சுகத்திலேயே காலத்தைக் கழிப்பது, கட்டைவண்டி பிரயாணத்திற்குச் சமம். கட்டை வண்டி, அதன் சுபாவத்தாலேயே, பூமியோடு ஒட்டியே இருக்கும். மேன்மையானவற்றைப் பற்றிச் சிந்திக்கக் கூட முடியாது.

மனதளவு சுகத்திலேயே வாழ்வைக் கடத்துவது, விமானத்தில் பிரயாணிப்பதற்குச் சமம்.

எவ்வளவுதான் பறந்தாலும், இதை வைத்துப் புவிஈர்ப்பு விசையின் எல்லையைக் கடக்க முடியாது. புகழ் என்ற மாய விமானம், இன்றோ, நாளையோ, உங்களை மீண்டும் பூமியிலேயே இறக்கிவிட்டுவிடும்.

உயிரளவு சுகத்தைத் தொடுவது என்பது, ராக்கெட்டில் பறந்தால் மட்டுமே சாத்தியம். மனஈர்ப்பு விசையைத் தாண்டும் சக்தி, அப்போதுதான் கிடைக்கும்.

மன ஈர்ப்பு விசையின் எல்லையையே தாண்டச் செய்யும் சக்திமிகு ராக்கெட்தான் சங்கல்பம்.

உடலளவிலும், மனதளவிலும் மட்டுமே சிக்கிக்கொண்டிருப்பது ஒருவித நோய். அதுவொரு சிறை என்பதைப் புரிந்துகொண்டு, "மன ஈர்ப்பு விசையைக் கடந்தே தீருவேன். அதற்காக இன்றிலிருந்து உற்சாகமாய் செயல்படுவேன்" என்ற சங்கல்பத்தை ஆழமாய் எடுத்துக் கொண்டு செயல்படுங்கள். மனதின் எல்லையைக் கடந்து விடுவீர்கள்.

மீண்டும், மீண்டும் உடல் மயக்கத்திலும், மன மயக்கத்திலும் உங்களை அமிழ்த்துவதற்காக எழும் மனஈர்ப்புகளுக்கு அடிபணிந்து செயல்படுவதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

முழுச் சுதந்திரம் பெற்றுவிடுவீர்கள்.

Portrait of Nithyananda with eyes closed, wearing an orange turban

தியானம்

சுவாமி நித்யானந்தா

தியானத்தைக் கலைக்க தேவதைகள் வருவார்களா..?

"ரம்பை, மேனகையெல்லம் உண்மையா?" என தியான சத்சங்கமொன்றில் ஒருவர் வம்பாய் கேட்டு வைத்தார்.

அவரின் கேள்விக்கு சிரித்தபடியே, "விஸ்வாமித்திரர் தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் கலைப்பதற்காகத்தான் ரம்பையும், மேனகையும் இறங்கிவந்தார்கள் என்றால், எல்லா சபல குணம் கொண்டவர்களும் தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார்களே!

நாம் கொஞ்சம் ஆழமாய் தியானம் செய்தால், அது தேவலோகப் பெண்களுக்குப் பிடிக்காது. உடனே நம்முன் நடமாட இறங்கி வந்து விடுவார்கள். அப்புறம் நம்பாடு ஜாலிதானே! என்று எண்ண ஆரம்பித்து விடுவார்கள்" எனச் சொன்னதும்...

மேற்கொண்டு பேசமுடியாத அளவிற்கு, அரங்கில் இருந்து மக்கள் கைதட்ட ஆரம்பத்து விட்டார்கள்.

"விஸ்வாமித்திரரின் தியானத்தைத்,
தேவலோகப் பெண்கள் கலைத்தது எனும்
சம்பவத்தின் தாத்பரியம் வேறு.

தியானத்தில் ஆழ்ந்து செல்லும் ஒவ்வொருவரின் உருவகம் 'விஸ்வாமித்திரர்.'

உங்களுக்குள்ளேயேதான் பல
இச்சைகள் ஒளிந்திருக்கின்றன.
அந்த இச்சைகள்தான்,
அப்போது உங்கள் முன்னே
வந்து நடனமாடும். உங்களின்
தியானத்தைக் கலைக்கும்.

உங்களுக்குள்ளேயேதான் பல இச்சைகள் ஒளிந்திருக்கின்றன.

அந்த இச்சைகள்தான், அப்போது உங்கள் முன்னே வந்து நடனமாடும். உங்களின் தியானத்தைக் கலைக்கும்.

நீங்களும் அந்த இச்சைகளுக்கு மதி மயங்கி, அடிபணிந்து தியானத்திலிருந்து கலைந்து விடுவீர்கள்.

எனவே, “தியானத்தில் ஆழ்ந்து செல்லும் ஒவ்வொருவரும், நம்மைத் தடுமாறச் செய்யும் அவற்றைக் குறித்து, மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதே - அந்த ஆழமான தாத்பரியம்”, என பதில் சொன்னோம்.

சத்சங்கம் முடிந்து பெங்களூர் ஆஸ்ரமத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது பிரம்மச்சாரி பிராணானந்தா கேட்டார்,

“குருவே!, இச்சைகள் என்றால், அவை எதையெல்லாம் குறிக்கின்றன?”

“சுவையான பொருட்களைப் பார்த்து நாவில் எச்சில் ஊறுகிறதே அதுவும் இச்சைதான்.

அழகைப் பார்த்ததும் மனம் அலைபாய்கிறதே, அதுவும் இச்சைதான்.

சொகுசு வாழ்க்கை, கார், பங்களா, பேர், புகழ், பணத்தைப் பார்த்ததும் உணர்ச்சிகள் முறுக்கேறுகிறதே அதுவும் இச்சைதான்.”

“இவை தியானத்தின்போது நம்மை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்.?”

Nithyananda

எவ்வளவு பெரிய பஞ்சு மூட்டையையும் ஒரு சிறு தீப்பொறி சாம்பலாக்கிவிடும்.

எவ்வளவு பெரிய மனிதரையும், ஒரு சிறு இச்சை தடுமாற வைத்து விடும்.

-சீன பழமொழி

"இச்சைகள் ஆழமான மனப்பதிவுகள். அவை சமஸ்காரங்கள் என்றும் அழைக்கப்படும்.

நேராய் அமர்ந்து தியானம் செய்யவிடாமல், கொஞ்சம் சொகுசாய் சாய்ந்து கொண்டால் என்ன என நம்மை மயக்குவதும் ஒரு சம்ஸ்காரமே.

அதையும் மீறிச் செய்தால், மனதில் ஏற்கனவே பதிவாகியிருக்கும் அழகு, புகழ், பணம் சம்பந்தப்பட்ட சம்ஸ்காரங்கள் எழுந்து ஆட்டம் போடும்.

அதையும் மீறி, தியானத்தில் இறங்கினீர்களென்றால்...

தூக்கம், கோபம், காமம், கவலை போன்ற சமஸ்காரங்கள் உங்களை உணர்வுரீதியாகச் சுண்டியிழுக்கும்.

படிப்படியாக உங்களைத் தியானத்திலிருந்து கலைத்து, உங்களின் தவத்தையே குலைத்துவிடும் சக்தி பெற்றவை இந்த 'சம்ஸ்காரங்கள்' எனப்படும் இச்சைகள். தியானம் மனதையே அழிக்கும் தன்மை கொண்டது. மனமே அழிய ஆரம்பித்தால், அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்ஸ்காரங்களின் கதி என்னாவது!?

எனவேதான், அவை மனிதர்களை 10 நிமிடங்கள்கூட கண்களை மூடி தியானம் செய்ய விடுவதே இல்லை.

சம்ஸ்காரங்கள்தான் இக்காலத்து ரம்பை, மேனகை!" என விளக்கம் சொன்னோம்.

“எவ்வளவு பெரிய பஞ்சு மூட்டையையும் ஒரு சிறு தீப்பொறி
சாம்பலாக்கிவிடும்.

எவ்வளவு பெரிய மனிதரையும், ஒரு
சிறு இச்சை தடுமாற வைத்து விடும்”.

-சீன பழமொழி

சம்ஸ்காரங்கள் தான் இக்காலத்து ரம்பை, மேனகை!

இச்சைகளின் எண்ணிக்கை மனதில் அதிகரித்தால், தியானம் செய்யும்போது மட்டுமல்ல, சாதாரண வாழ்க்கையில்கூட அவற்றின் தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும்.

ஓர் இனிப்பைப் பார்த்ததும்,

ஓர் அழகைப் பார்த்ததும்,

ஓர் புகழைப் பார்த்ததும்,

சொக்குப்பொடி போடப்பட்ட பூனை போல் மனம் அவற்றை நோக்கி மனிதனை இழுக்கும்.

அவை, மனிதர்களுக்கு அந்த நேரத்தில் தேவையற்றிருந்தாலும்கூட, அவற்றிற்காக அவர் ஏங்குவர், அலைவர். மொத்த நிம்மதியும், ஆரோக்கியமும் பறிபோக ஆரம்பிக்கும்.

இச்சைகள் எனப்படும் சம்ஸ்காரங்களிடமிருந்து முழு விடுதலை பெறுவதே ஞானமடைதல்.

Nithyananda

இச்சைகள் எனப்படும்
சம்ஸ்காரங்களிடமிருந்து முழு விடுதலை
பெறுவதே ஞானமடைதல்.

தியானம்

இச்சைகளிடமிருந்து விடுபடுவது என்பது, அவற்றை வெறுப்பது அல்ல.

அவற்றை வெறுப்பதும், அடக்குவதும் மூட்டைப் பூச்சியை நசுக்குவதற்குச் சமம். ஒன்றை வெறுத்தால், அது பல வகைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

இவற்றிலிருந்து விடுபட அத்தியாவசியமான தேவை...

சமஸ்காரங்கள் எனப்படும் இச்சைகளின் போக்கைப் புரிந்து கொள்வதே.

அவற்றின் போக்கையும், இயல்பையும் புரிந்து கொண்டுவிட்டாலே, அவற்றிற்கு அடிபணிந்து, நிம்மதியிழப்பது நின்றுவிடும். இதை மட்டும் நாம் செய்தால் போதும் மீதமுள்ளதைத் தியானம் பார்த்துக்கொள்ளும்.

என் காதலி என்னை ஏமாற்றி விட்டதால், இந்த ஏமாற்றம் மாறாத புண்ணாக இருக்கிறது....

-ராகுல், மகுடஞ்சாவடி

அவரின் சூழ்நிலை தெரியாமல்,
அவர் ஏமாற்றினார் என வருந்துவதால்,
ஒருவேளை நீங்கள் மீண்டும் ஒருமுறை
ஏமாறலாம். அவர் நல்லவராயிருக்கலாம்.

உங்களை ஏமாற்றிய அவர்,
வெளியே சிரித்து, உள்ளே அழலாம்.
யாருக்குத் தெரியும். யோசியுங்கள்.

ஒருவேளை அவர் சூழ்நிலைக்
கைதியாக இருந்திருப்பாரோ எனும்
புதுக்கோணம் பிறக்கும். மீண்டும்
உற்சாகமாவீர்கள்.

அல்லது, நிஜமாகவே அவர்
ஏமாற்றியிருக்கட்டுமே... ஒரு
ஏமாற்றுக்காரருக்கு உங்களின்
மனதில் ஏன் இடம் தரவேண்டும்?

ஏமாற்றியவர் விடும் ஏப்பமாக உங்களின் வாழ்க்கை மாறிவிடக் கூடாது.

இந்த நொடி முடிவெடுத்தால் கூடப் போதும்...

புதுப் பொலிவோடு, முன்பைவிடப் பல மடங்கு இனிமையான வாழ்வைத்தborderக் இயற்கை காத்துக்கொண்டிருக்கிறது.

ஏமாற்றியவரை நல்லவர் எனப் புரிந்து கொண்டு, விட்டு விட்டாலும் சரி, இல்லை, அவரை ஏமாற்றுக்காரர் எனப் புரிந்துகொண்டு, விட்டு விட்டாலும் சரி.

இரண்டுமே நல்லது.

புது வாழ்வுக்கு வழி பிறக்கும்.

தியானத் துணுக்குகள்

* திருப்பதிக்கும், சபரி மலைக்கும் கால் நோக நடந்து செல்வது எளிது.

ஆனால், அங்கு ஓரிரு மணி நேரம் அமைதியாய் உட்கார்ந்திருப்பது கடினம்.

பாதயாத்திரைகள், மனயாத்திரைக்கு முற்றுப்புள்ளி வைக்க உருவாக்கப்பட்ட தியான முறைகள். பாதயாத்திரையாய்ச் செல்லும் போதெல்லாம்... ஆங்காங்கே, அவ்வப்போது, அரைமணி நேரமாவது அமைதியாய் உட்காருங்கள்.

பாதயாத்திரை, அர்த்தமுள்ளதாகும், பயன்தரும்.

* ஆரோக்கிய ஸ்புரணா தியான முகாமில் பக்தர் ஒருவர் கேட்டார்...

"பார்க்க சாதாரணமாகத் தோன்றும்
என் வீட்டுத்தோட்டம், புகைப்படத்தில் மிக
அழகாகத் தெரிகிறதே! ஏன்?"

"காரணம் காமிராவுக்கு அகங்காரம்
இல்லை. அது உள்ளதை உள்ளபடி
காட்டுகிறது.

பாதயாத்திரையாய் செல்லும்
போதெல்லாம்... ஆங்காங்கே,
அவ்வப்போது, அரைமணி
நேரமாவது அமைதியாய்
உட்காருங்கள்.
பாதயாத்திரை,
அர்த்தமுள்ளதாகும், பயன்தரும்.

ஆனால், மனிதக் கண்ணில் லென்ஸ் வழியே அகங்காரமும் சேர்ந்து பார்க்கிறது.

எனவேதான், நீங்கள் உற்சாகமாயிருக்கும் போதெல்லாம் பளிச்செனத் தெரிவது, துக்கமாயிருக்கும் போது மங்கலாகத் தெரிகிறது,” எனச் சொன்னோம்.

அகங்காரம் அழிந்தால், கண் லென்ஸ் வழியே, காமிரா லென்ஸால் பார்க்க இயலாத வாழ்வியல் வண்ண ஜாலங்களைக் கண்டுகளிக்கலாம்.

★ Skin Resistanceயை தியானம் குறைக்கிறது. தூங்கும்போது தோல் தளர்வடைவதைப் போல, குறைந்தது நான்கு மடங்கு தியானத்தால் தளர்வடைகிறது... எனும் ஆராய்ச்சி முடிவுகளை வேல்ஸ் யுனிவர்சிட்டி வெளியிட்டிருக்கிறது.

தோல் தளர்ந்தால் முகம் பொலிவடையும். உங்களை நீங்கள் தொடுவதே ஒரு சுகமான அனுபவமாய் இருக்கும்.

தியானம் செய்து பாருங்கள். அனுபவங்கள் பல கிடைக்கும்.

★ ஒரு முறை ரமணரிடம், பக்தர் ஒருவர் கேட்டார். “பகவான், தியானம் செய்யும் தகுதி எனக்கெல்லாம் உண்டா?” ரமணர், “உன்னால் மூச்சு விட முடிகிறதா? பக்தர், “ம்........முடிகிறது.”

ரமணர், “தியானம் செய்ய இந்த ஒரு தகுதியே போதுமானது”

மதம், இனம், குலம், கோத்திரம் என எந்த வித வித்யாசமும் இன்றி யார் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

Photograph of a smiling young spiritual master in white turban

மதம், இனம், குலம், கோத்திரம் என
எந்த வித வித்யாசமும் இன்றி யார்
வேண்டுமானாலும்
தியானம் செய்யலாம்.

★ ஒரு மத தீவிரவாதி, ஜென் சீடரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

தீவிரவாதி, “என் மதக் கடவுள்தான், எல்லாவற்றையும் படைத்தார்.... தெரியுமா?

ஜென் சீடர், “ஓ! அப்படியா? சாத்தானைப் படைத்தது யார்?”

தீவிரவாதி, “கடவுள் புனிதமானவர். கடவுள் எங்கும் இருக்கிறார். அவருக்கு எதிராக பேசுவது பாவம்”

ஜென் சீடர். “எங்குமிருக்கும் உன் புனிதக் கடவுள், நாமிருக்கும் இந்த சினிமா தியேட்டருக்குள்ளும் இருப்பாரா? மாட்டாரா?

தீவிரவாதி, “ஏய்.... ஏய்.... இந்த மாதிரியெல்லாம் பேசினால், எனக்கு கெட்டகோபம் வரும்”

ஜென் சீடர், “அடடே, கோபத்தில் கூட கெட்டக் கோபம், நல்ல கோபம் உண்டா?

தீவிரவாதி “!!!!!!”

வம்பிழுக்கப்பட்டால்கூட, உற்சாகமிழக்காமல் இருப்பார் தியானி.

கடவுளைப் பற்றிப் பேசும்போதும் கூட, நிதானமிழப்பார் பக்குவமற்ற மனிதர்.

நீங்கள் எப்படிப்பட்டவர்?

| வம்பிழுக்கப்பட்டால்கூட, உற்சாகமிழக்காமல் இருப்பார் தியானி. கடவுளைப் பற்றிப் பேசும்போதும் கூட, நிதானமிழப்பார் பக்குவமற்ற மனிதர். | விரும்பினால்... தியானம் செய்தால்... எச்சூழலிலும் உற்சாகமிழக்காத சிட்டுக்குருவி போலாகலாம். ★ NSP தியான முகாமில் அன்பரொருவர் கேட்டார், “நம் மனதோடு சண்டையிட்டு ஜெயிக்கவே முடியாதா?” |

“உங்களின் நிழலோடு சண்டையிட்டு உங்களால் ஜெயிக்க முடியுமா?” மனதை அடக்க முடியாது. மனமானது அடங்க வேண்டும்.

⋆ கனடாவின் வான்கோவர் நகரில் பெண்மணியொருவர் இப்படிக் கேட்டார்.

“யோகம், தியானம் - இதில் எது சிறந்தது?”

“யோகம் மனதை அடக்கும். தியானத்தில் மனம் அடங்கும்.

அடக்க, முயற்சி நிறைய தேவை. அடங்க, எதுவும் செய்ய வேண்டாம். இளைப்பாற ஆரம்பித்தால் போதும், மனம் அடங்கும். எது சிறந்தது.... இனி முடிவெடுப்பது நிச்சயம் சுலபம் தானே” என்றோம்.

⋆ பேசுவதைக் கடைப்பிடிக்காதவர்

நல்ல பேச்சாளர். கடைப்பிடிக்காததை அழகாய் பேசுபவர்

நல்ல வியாபாரி.
பேசும்போது பேசுபவர்...
செய்யும்போது செய்பவர்....
நல்ல தியானி.

portrait

“யோகம், தியானம் இதில் எது சிறந்தது?”

“யோகம் மனதை அடக்கும். தியானத்தில் மனம் அடங்கும்.

அடக்க, முயற்சி நிறைய தேவை. அடங்க, எதுவும் செய்ய வேண்டாம்.

இளைப்பாற ஆரம்பித்தால் போதும், மனம் அடங்கும்.

தியானம்

illustration

நீங்களே விரும்பி, தேர்வு செய்து பெற்றது, நரகமேயானாலும், அது சொர்க்கம்தான்.

காரணம், அது நீங்கள் விரும்பியது.

உங்களின் விருப்பத்தை மீறி, நீங்கள் தள்ளப்பட்டது சொர்க்கமென்றாலும், அது நரகம்தான்.

காரணம், அது உங்கள் விருப்பத்திற்கு எதிரானது.

விருப்பமில்லையென்றால், அது தியானமென்றால்கூட, நிறுத்தப்பட வேண்டியதே!

உங்கள் வாழ்க்கை சக்கரத்தின் இயக்கி 'விருப்பம்.'

தூண்டிவிடும் ஆசைகளை விட, துணையாய் வரும் விருப்பங்களுக்கு முக்கியத்துவமளியுங்கள்... நரகம் கூடச் சொர்க்கமாகும். துன்பம்கூட, இன்பமாகும். தடை கூட மேடையாகும்.

* ஒரு வேடிக்கையான பத்திரிகை சர்வே ரிப்போர்ட் ஒன்று படித்தேன்.....

உலகில் விவகாரத்தான திருமணங்கள் 30%, விவாகரத்திற்காகக் காத்திருக்கும் திருமணங்கள் 70%.

திருமணங்கள் கேலிக்கூத்தானது ஏன்?

திருமணத்தின் மூலம், இருமனங்கள் ஒரு மனமாக வேண்டும் எனும் தியான சூத்திரம் வழக்கொழிந்து போனதால்தான் அவை கேலிக்கூத்தாயின.

உலகையே நேசிப்பது எளிது. மனைவியை நேசிப்பது...

எனவேதான் சொல்வோம், புதிதுபுதிதாய் மனிதர்களைத் தேடாதீர்கள். நெருங்கிய மனிதர்களின் நெருக்கத்தைச் சம்பாதியுங்கள்... அதுவே, ஒரு மாபெரும் தியானம்தான்.

அருகிலிருப்பவர்கள் சலிப்பதால்தான் வாழ்வே புளிக்கிறது. அருகிலிருப்பவர் இனித்தால் வாழ்வே சுகிக்கும்.

புத்தனேயானாலும் கொலைசெய்!

அது பெயரிடப்படாத வரை பெரியது. தெரியாதது. பெயரிட்டதும் சுருங்கிப் போகும் நான்கு எழுத்தாய் ...

க...ட...வு...ள்.

அவ்வளவு சிறுசா கடவுள்?

இந்த நான்கு எழுத்தை சேர்த்துப் படிக்க முடிந்ததால், புரிந்து விட்டதா நமக்கு அதைப்பற்றி?

யூகமா கடவுள்?... பதில் காணுங்கள்.

உஸ்மான் ரோட்டில் தனக்கென இருக்கும் சூப்பர் மார்க்கெட் பற்றியும், மௌன்ட் ரோட்டில் தனக்கு ஒரு தெரு முழுவதுமே சொத்தாக இருப்பதையும் வந்த அரைமணி நேரத்திற்குள் நான்காவது முறையாகச் சொல்லி விட்டார் நிட்டியின் பணக்கார நண்பர்.

பெரிய உலக வரைபடத்தை ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த நிட்டியின் சுட்டிப் பையன், "அங்கிள், அங்கிள்! இங்கேவாங்க..." என அவசரமாய்க் கூப்பிட்டான்.

உலகவரைபடத்தைக் காட்டி,
"இந்த வரைபடத்தில்
உங்களின் 'ஒரு தெரு
சொத்து' எங்கேயிருக்கிறது
காண்பியுங்கள்"
என்று கேட்டால்...

தரையில் பிரம்மாண்டமாய்ப் படுத்திருந்த உலகவரைபடத்தைப் பணக்காரரிடம், நிட்டியின் பையன்காட்டி, “இந்த வரைபடத்தில் உங்களின், ‘ஒரு தெரு சொத்து’ எங்கேயிருக்கிறது காண்பியுங்கள்,” என்றான்.

திடுக்கிட்ட நண்பர் நாவறண்டு நின்றார். வரைபடத்தில், பொட்டளவு இருந்த சென்னையில், அவரின் அவ்வளவு பெரிய சொத்தை, குண்டுசி நுனியால் ஒரு புள்ளியிட்டுக் கூடக் காண்பிக்க முடியவில்லை அவரால்!.

‘ஆகाஷ கங்கை’ என்றழைக்கப்படும் நம் பால்வெளித்திரள் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு சிறுபுள்ளி மட்டுமே.

அதுபோல், “1,00,00,00,000 (நூறு கோடி) புள்ளிகளின் மொத்த உருவம் பிரபஞ்சம்,” என்கிறார்கள் விஞ்ஞானிகள் (Space Researchers)

நம் பால்வெளித்திரள் என்ற சிறு புள்ளிக்குள் கோடிக்கோடியே நட்சத்திரங்கள், அங்கே இங்கேயென தெளிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கோடி கோடி புள்ளிகளில் ஒன்றுதான், இவ்வளவு பெரிய சூரிய குடும்பம் (Solar system)

பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம், நம்மை பிரம்மிக்க வைக்கிறது.

சூரியனைக் கிரகங்கள் அதிக வேகத்தில் சுற்றுகின்றன. சூரியன் தன் கிரக குடும்பத்தைத் தூக்கிக் கொண்டு ‘பிரபஞ்ச மையத்தை’ சுற்றி ஓடி வருகிறது (Center of the universe). அதுவும், வினாடிக்கு 20,000 மைல்கள் என்ற அசுர வேகத்தில் சுற்றி வருகிறது.

இவ்வளவு வேகமாய் சுற்றியும், சூரியக் குடும்பம் ஒரே ஒருமுறை

portrait

> சூரியக் குடும்பம் என்னும் வட்ட வெளியில் > உயிரோட்டமுள்ள ஒரு சிறு பொட்டு, நாம் > வாழும் பூமாதேவி. அந்தப் பொட்டின் துணுக்கு > என்றுகூடச் சொல்ல முடியாத அளவு சிறிதான > இரண்டுகால் பிராணிதான் மனிதன்.

'பிரபஞ்ச மையத்தை' சுற்றி முடிப்பதற்கே 225 கோடி ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறதெனக் கண்டுபிடித்துள்ளார்கள்.

சூரியக் குடும்பம் என்னும் வெட்ட வெளியில், உயிரோட்டமுள்ள ஒரு சிறுபொட்டு, நாம் வாழும் பூமாதேவி. அந்தப் பொட்டின் துணுக்கு என்றுகூடச் சொல்ல முடியாத அளவு சிறிதான இரண்டுகால் பிராணிதான் மனிதர்கள்.

இங்கு மனிதர்கள் நகர - கார், மோட்டார், விமானம், இராக்கெட், கட்டடங்கள் என எதுவும் இல்லை, போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆனாலும், விமானத்தோடு விமானம் மோதி விபத்தாவது விபரீதம்!

விசாலமான வானத்திலேயே விபத்தென்றால், கேட்கவா வேண்டும். தரையில் தினம் ஒரு விபத்து நடக்காத நகரத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

விபத்துகளைத் தவிர்க்க, சாலை விதிகள், அப்புறம் போக்குவரத்து, காவல்துறை என இதையெல்லாம் தாண்டி, தனி மனிதரின் ஓட்டுனர் பயிற்சியும், புத்திசாலித்தனமும் இவ்வளவு இருந்தும் இங்கு ஆயிரம் விபத்துக்கள்,

சிக்னல் இல்லை. போலீஸ் இல்லை. நிரந்தரமான விதிகள் இல்லை. யாருமே இல்லை - இப்பிரபஞ்சத்தின் கோடானு கோடி கோடிகளுக்கு மேற்பட்ட, மிக மிகப் பெரிய இராட்சத உருவம் கொண்ட நட்சத்திரக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த.

20 பில்லியன் வருடங்களாய் (இது பிரபஞ்சத்தின் வயது) மிக சுமுகமாகவே நட்சத்திரக் கூட்டத்தின் போக்குவரத்து இருந்து வருகிறது.

யார் இவற்றைக் கட்டுப்படுத்துவது?

பூமியையும், மற்றதையும் பிரபஞ்சத் தோட்டத் தில் உருட்டிவிட்டது யார்?

பிரபஞ்சத் தேரோட்டி யார்?

இவற்றிற்குப் பதில் -
சட்டென 'இறைவன்' என்றால்! அது
சுத்த ஏமாற்றுவேலை. 'இறைவன்' என்று பதில்

20 பில்லியன் வருடங்களாய்
(இது பிரபஞ்சத்தின் வயது)
மிக சுமுகமாகவே
நட்சத்திரக் கூட்டத்தின்
போக்குவரத்து இருந்து
வருகிறது.

சொல்பவர், இறைவனை பார்த்திருக்கிறாரா? அவரோடு பேசியிருக்கிறாரா? எது இறைவன் என அடையாளங் கண்டிருக்கிறாரா?

பதில், 'இறைவன்' என்பது உண்மைதானென்றாலும், சுய அனுபவமாகாத ஒன்றை, தெரிந்த ஒன்றுபோல் வார்த்தையில் பேசிச் சமாளிப்பதால் என்ன பயன்?

இதுபோன்ற சுய அனுபவமில்லா பதில்களும், வெறும் அறிவாக மட்டுமே இருக்கும் கருத்துக்களும், உங்களின் மனதில், 'வார்த்தைகளின் ஜனத் தொகையை' அதிகமாக்கும். அவ்வளவே.

வார்த்தைகளின் நெரிசலால், மனதில் வார்த்தைகளின் மாசு அதிகமாகும். மனமே மாசடைந்து போகும்.

'அறிவு'என்ற பெயரில் சுயஅனுபவமாகாத, பல செய்திகளை, குப்பை போல் மனதில் கொட்டிவைத்திருக்கிறார்கள் மனிதர்கள்.

மனம் தூய்மையாக வார்த்தைகளின் மாசு துடைக்கப்பட வேண்டும். அனுபவங்கள் மலர வேண்டும்.

தனி மனித வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உதவாத, எல்லா தேவையற்ற கருத்துக்களும் மனதிலிருந்து வெட்டியெறியப்பட வேண்டும். அது இறைவனைச் சுற்றி உருவாக்கப்பட்டவையாக இருந்தாலும்!

"பிரபஞ்சத்தின் தேரோட்டி யார்?" என்றால் கண்ணை மூடிக்கொண்டு, “இறைவன்,” என்று சொல்லாதீர்கள் கண்ணை மூடி உள்ளே பாருங்கள். சுவாரஸ்யங்கள் சுடர்விடும். அனுபவங்கள் விரியும்.

portrait of Sadhguru

தனி மனித வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உதவாத, எல்லா தேவையற்ற கருத்துக்களும் மனதிலிருந்து வெட்டியெறியப்பட வேண்டும். அது இறைவனைச் சுற்றி உருவாக்கப்பட்டவையாக இருந்தாலும்!

அனுபவங்கள் விரிய விரிய, எல்லாம் தெளிவாய்ப் புரிய ஆரம்பிக்கும்.......

பிரபஞ்சத் தேரோட்டி உங்களுக்குள்ளும் உட்கார்ந்திருக்கிறார் என்று! இது புரியும் கணத்தில் , வாழ்வில் மகிழ்ச்சிக் காற்று வீச ஆரம்பிக்கும்.

ஒரு செல், குழந்தையாகும் புனிதமான நேரம் - 'கர்ப்பக்காலம்'. ஒரு மனிதர், தெய்வமாகும் புனிதமான நேரம் - 'தியானம்.'

மகாவாக்கியம்

"விட்டுக்கொடு, நீ இராஜாவாயிருப்பாய்"

ஆனால்,

ஒத்துப்போகாதே! கூஜாவாகுவாய்.

"வேறு வழியில்லை", என்பதற்காக நம் உறவுகள், "தாங்கத்தான் வேண்டும்" என்ற நொண்டிச் சாக்குகளுக்காக, உங்கள் உணர்வுகளை அடக்கி, ஒடுக்கி, ஊரோடு ஒத்துப்போவது சுயத்துரோகம்.

"ஒத்துப்போனால் நசுக்கப்படுவாய்.
விட்டுக் கொடுத்தால் வீர்யமாவாய்.
விடுதலை பெறுவாய்"

'பெருந்தன்மையாலும்', நம் உறவுகள் 'நல்லாயிருக்கட்டும்' எனும் தயாள குணத்தாலும் சுய விருப்பப்படி முடிவு செய்து, விட்டுக்கொடுப்பது தானம்.

தன்னை மதிப்பவர் செய்யும் தியானம்.

விட்டுக்கொடுங்கள்,

இராஜாவாயிருப்பீர்கள்.

“தெய்வப் படங்களை நினைத்துத் தியானம் செய்கிறேன்? எந்தத் தெய்வம் சிறந்த தெய்வம்?”

  • லஷ்மி, பாநாசம்.

தாந்தரீக ஞானியிடம் ஒருமுறை இதே கேள்வி கேட்கப்பட்டபோது அவர் கூறிய பதில், “தியானம் செய்யும் போது, புத்தனே வந்தாலும் கொலை செய்!”

தெய்வப்படங்களை நினைத்துத் தியானம் செய்வது முதல்படி. இறுதிப்படி அல்ல.வார்த்தைகளையும் , உருவங்களையும் உணர்ச்சி முலாம் பூசிப் பூசித்தான் , மனம் தன்னை அலங்கரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சாதாரண மனித உருவங்களைவிட, தெய்வ உருவங்களை நினைப்பது நல்லது தான். சாதாரண வார்த்தைகளைவிட, மந்திரங்கள் மிக உயர்ந்தவை.

ஆனால் இறுதியல்ல.

மனம் - தெய்வ உருவங்களையும், மந்திரங்களையும் பிடித்துக் கொள்ள ஆரம்பிக்கும்போது, மனவேதனையைத் தரும். மனிதர்கள் மற்றும் வார்த்தைகள் பற்றிய நினைவுகளை மனம் விட ஆரம்பிக்கும்.

இது ஒரு நல்ல மாற்றம். அடுத்து, மனம் அழிந்து ஆத்மா விழித்துக் கொள்ள வேண்டும்.

தெய்வ உருவங்களை மனம் நினைக்கும் வரை, மனம் வாழ்ந்து கொண்டேயிருக்கும். ஆத்ம அனுபூதி நிகழாது. ஆனந்தம் பொங்காது.

தியானத்தில் தெய்வ உருவங்கள் மட்டுமல்ல, தியானத்தை முறையாய் வகுத்தளித்த புத்தனைப் பற்றிய நினைவுகள் வந்தால்கூட, அவை தாண்டப்படவேண்டியவையே.

எல்லா நினைவுகளும்” ஆனந்தத்திற்குத் தடையே.

‘ஆனந்தம்’ நிகழ, நினைவுகளைத் தாண்டுங்கள்.

விதி வலியதா?

❖ தன்னை மறப்பதுதான் தியானமா?

தன்னை அறிவது தியானம்.

சொர்க்கம், நரகம் பற்றி இதுவரை நிலவும் கருத்துக்களெல்லாம்... ஆசை, பயம் என்ற இரண்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை.

❖ இதற்கும், அதற்கும் என்ன தொடர்பு?

சொர்க்கம் ஆசையின் உச்சம், நரகம் பயத்தின் உச்சம்.

“இங்கே இது செய்தால்... சொர்க்கத்தில் அது கிடைக்கும், இது கிடைக்கும் என்பது ஆசைத் தீயை மூட்டும் செயல். இதைச் செய்துவிட்டால், நரகத்தில் கொடுமைப்படுத்தப்படுவாய் என்பது பீதி கிளப்பும் செயல்”

❖ தீர்வு?

பயத்தையும், ஆசையையும்
தாண்டுங்கள்... சொர்க்கம், நரகம் எனும்
இரண்டையும் தாண்டிய ஆனந்த சமவெளியில்
குதிப்பீர்கள்.

யார் பெண்?

தாய்மைக் குணம் மலர்ந்தவர்...

❖ யார் பெண்?

தாய்மைக் குணம் மலர்ந்தவர்... யாராயிருந்தாலும் அவர் பூஜைக்குரிய பூ. ஆணாயிருந்தாலும்!

❖ யார் ஆண்?

தாய்மைக் குணம் மலராதவர்... பெண்ணாயிருந்தாலும்!

❖ உடல் மனம் பற்றி...

ஆத்மாவின் உருவ வெளிப்பாடு உடல். ஆத்மாவின் அருவ வெளிப்பாடு மனம்.

❖ அகங்காரம் பற்றி...

‘நீர்’-அமிர்தம்! ‘மனம்’ - தெய்வப் பரிசு!

நீரில் நச்சுச் சேர, அதே நீர் விஷம். மனதில் அகங்காரம் சேர, அதே மனம் பிசாசாகிப் போகிறது.

❖ விதியை வெல்ல முடியுமா?

முடியும்.

❖ முடியும் என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது?

முடியாது என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது?.

யார் ஆண்? தாய்மைக் குணம் மலராதவர்... பெண்ணாயிருந்தாலும்!

❖ பின் “விதி வலிது” என்பது?

“அது வலிது” என நீங்கள் நம்பும் வரை, அது உண்மை.

❖ சாதனையின் அளவுகோல்?

சாதித்த ஆனந்தங்கள்.

❖ வேதனையின் அளவுகோல்?

சம்பாதித்த துக்கங்கள்.

❖ தோல்விகள்?

தோள் கொடுக்கும் தோழர்கள்.

❖ வெற்றிகள்?

தேள் கொட்டும் அகங்காரத்தை உசுப்பி விடும் சாகசக்காரர்கள்.

❖ தானம் செய்தால் ஆனந்தம் வருமா?

இல்லை... ஆனந்தமாயிருப்பதால் தானமும் செய்வீர்கள்.

❖ தானம் ஆனந்தத்தைத் தராதா?

தியானம் ஆனந்தத்தைத் தரும். தானம் ஆனந்தத்தைத் தராது.

❖ ஏன்?

உங்களிடமிருப்பதை மற்றவருக்குத்
தருவது தானம். உங்களிடமிருப்பதை
உங்களுக்கே தருவது தியானம்.

❖ சித்துவேலை செய்பவர்கள்?

ஞானமடையத் தவறிய யோகிகள்.

உங்களிடமிருப்பதை
மற்றவருக்குத் தருவது
தானம். உங்களிடமிருப்பதை
உங்களுக்கே தருவது
தியானம்.

❖ விஞ்ஞானிகள்?

தெரிந்தும் தெரியாமலும் மெய்ஞானியாக மாறிப் பிரயாணித்துக் கொண்டிருப்பவர்கள்.

கிளி ஜோஸியம் பலிக்குமா?

  • சசி, கோவை

ஒரு சின்ன கதை...

திடீரென தன் மனைவி இருக்கும் அறையில் உறங்குவதை நித்திராஜன் தவிர்க்க ஆரம்பித்தார். “ஏன்? ‘எனக்காரணம்?’ என கேட்டதற்கு, “கல்யாணமான பெண்களோடு பழகுவது, பெரும் தொல்லைகளை உண்டு பண்ணும்,” என கிளி ஜோஸியம் கேட்டதாகச் சொன்னார்.

இந்தக் கேள்விக்குப் பதிலாய் ஒரேயொரு கேள்வியைக் கேட்கிறேன்...

தன் எதிர்காலமே ஒரு பெட்டிக்குள் அடைபட்டிருக்கும் கிளியால், உங்களின் எதிர்காலம் பற்றி மட்டும் கணிக்க முடியுமா என்ன?.

முடிச்சுகளை அவிழ்த்துவிடுங்கள்

ஒரு ஜென் ஞானியிடம் சீடர் கேட்டார், “குருவே, நான் பொய்யை மிகவும் விரும்புகிறேன்.எதையும் நேரடியாய்ப் பேசுவதைவிட, கொஞ்சம் சேர்த்துச் சொன்னால்தான் அது சுவைக்கிறது. ஏன் இப்படி?”

ஜென் ஞானி, “மற்றவரைவிட, அதிகம் தெரிந்திருப்பவன் நான் என இலைமறை காயாய், காண்பித்துக்கொள்ளத் துடிக்கும் மனத்துடிப்பே காரணம்,” எனச் சொன்னார்.

ஆழ்ந்து பார்த்தோமானால் புரியும்,ஒவ்வொருமுறை நாம் பொய் சொல்லும் போதும், நம் அகங்காரம் திருப்தியடைகிறது. மனம் புஷ்டியாகிறது. இது ஆரோக்கியக் கேடல்ல. ஆனந்தக் கேடு.

மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களை எளிதில் ஏமாற்றும் மாபெரும் தனிக் கலையாக, பிரித்து பேசுதல் உருவாகியுள்ளது. இதை நாம் மற்றவருக்கும், மற்றவர் நமக்கும் செய்துகொண்டேயிருக்கிறோம். இதனால் பல சேதாரங்களை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்.

ஒரு சின்ன கதை :

முதல் பாடவேளைக்கான மணி அடித்து, பத்து நிமிடம் ஆகிவிட்டது.

ஒவ்வொருமுறை நாம்
பொய் சொல்லும் போதும்,
அகங்காரம் திருப்தியடைகிறது.
மனம் புஷ்டியாகிறது. இது
ஆரோக்கியக் கேடல்ல.
ஆனந்தக் கேடு.

என்றைக்கும், நேரத்திற்கு முன்னதாகவே வரும் பத்தாம் வகுப்பு கணக்கு வாத்தியார், பத்து நிமிடம் ஆகியும் வரவில்லை.

முணுமுணுத்துக் கொண்டிருந்த மாணவர்கள், கலகலக்கத் துவங்கிவிட்டனர்.

மாப்பிள்ளை பெஞ்சு மாணவர்கள் குறும்பர்கள்.

அதில் ஒரு மாணவர், தன் அருகில் இருக்கும் இன்னொருவரிடம், "டேய், கண்ணா ! கணக்கு வாத்தியாரை இன்னும் காணோமே ! ஜுரமா இருந்தால்கூட வந்துடுவாரே! அப்படின்னா அவருக்கு உடம்பு சரியில்லாம இருக்கும்", என்றார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட இரண்டாவது மாணவர், "கணக்கு வாத்தியாருக்கு உடம்பு சரியில்லைன்னா, அது ஏதோ சீரியஸான விஷயமா இருக்கும்பா" என்றார்.

மூன்றாவது மாணவரின் காதை செய்தி எட்டியது, "சீரியஸ்ன்னா அவரை ஹாஸ்பிடல்லதான் அட்மிட் பண்ணியிருக்கணும்" என அடுத்தவர்களிடம் சொன்னார். அவர்கள் மற்றவர்களிடம், 'சீரியஸ் என்றால், நிச்சயமாக ICU-வில்தான் வைத்திருப்பார்கள்' என்று யோசித்து, "தெரியுமாப்பா... கணக்கு வாத்தியாருக்கு ரொம்ப சீரியஸ் என்பதால், ICU-வில் வைத்திருக்காங்களாம்" என்று சொன்னார்.

இதை கேட்ட ஐந்தாவது மாணவர், 'ICU-வில் இருக்கிறார் என்றால், இந்நேரம் அவர் செத்து போயிருக்கலாம்' என யோசித்து, "தெரியுமா, கோமாவில் இருந்த நம்ம கணக்கு வாத்தியார், இன்னிக்கு காலையில செத்துப் போயிட்டாராம்," எனச் சொன்னார்.

portrait

பொய் சொல்வதால் அடுத்தவர்க்கு வரும் பாதிப்பைவிட, தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டம்தான் அதிகம்.

அது உள்ளத்தூய்மையைச் சிதைத்து,
உங்களை உங்களிடமிருந்தே
பறிக்கும் அரக்கனாகும்.

அவரிடமிருந்து செய்தியைப் பெற்ற ஆறாவது மாணவர், 'செத்து போயிட்டாரென்றால், இந்நேரம் வீட்டுக்குக் கொண்டு வந்திருப்பார்கள்தானே' என யோசித்தவாறு வகுப்பு முழுவதும், "பாவம், கணக்கு வாத்தியார் செத்துப் போயிட்டார். இப்பத்தான் அவரை வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். நம்ம பசங்கள் இரண்டு, மூணுபேர் பார்த்துவிட்டு வந்தவர்கள் சொன்னாங்கப்பா" எனச் சொன்னார்.

அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே, பள்ளி முழுவதும், செய்தி காட்டுத்தீ போன்று பரவியது.

எனவே, பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டு, எல்லோரும் கணக்கு வாத்தியார் வீட்டுக்குக் கிளம்பினர்.

மாலையும், கையுமாக பள்ளியின் வெளியில் கிளம்புவதற்காக நின்றுகொண்டிருந்த மொத்த மாணவர்களையும் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே, விஷயம் புரியாமல் பஞ்சரான சைக்கிளைத் தள்ளிக் கொண்டே ஆரோக்கியமாய் வந்து சேர்ந்தார், கணக்கு வாத்தியார்.

ஆழ்ந்து புரிந்து கொண்டால் புரியும். நீங்கள் பொய் சொல்கிறீர்களா? அல்லது உண்மையைச் சொல்கிறீர்களா? என்பது கேள்வியல்ல.

மொத்தக் கேள்வியும், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களோ, அதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பொதுவாக நாம் அடுத்தவர் சொல்வதை சட்டென்று ஏற்றுக் கொள்வதில்லை. அலங்கரிக்கப்பட்ட நயமான வார்த்தைகளை, சொல்பவர் சொல்லும் விதத்தில் சொன்னால், நம்பி விடுகிறோம். நம்பி செயல்படுகிறோம்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

பொய் சொல்வதால் அடுத்தவர்க்கு
வரும் பாதிப்பைவிட, தனக்குத் தானே
ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டம்தான் அதிகம்.

> நாம் அடுத்தவர்
> சொல்வதை சட்டென்று
> ஏற்றுக் கொள்வதில்லை.
> அலங்கரிக்கப்பட்ட நயமான
> வார்த்தைகளை, சொல்பவர்
> சொல்லும் விதத்தில்
> சொன்னால், நம்பி விடுகிறோம்.
> நம்பி செயல்படுகிறோம்.

அது உள்ளத்தூய்மையைச் சிதைத்து, உங்களை உங்களிடமிருந்தே பறிக்கும் அரக்கனாகும்.

எதையுமே ஜோடித்துச் சொல்வதென்பது, நாசுக்காய்ப் பேசிக்கொண்டே இருக்கும் பொய்கள்.

பொய் பேசுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள, எதையுமே பொட்டளவாவது திரித்துச் சொல்லும் இயல்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பொய் சொன்னதால் போட்ட ஒவ்வொரு முடிச்சுக்களையும், இந்தத் தியானம் செய்வதால் அவிழ்த்து விடுங்கள்.

தியானம்

"இனி எதையும் திரிப்பதில்லை ;

கேட்டதைக் கேட்டபடி சொல்வேன்.

எதையும் திரித்து, மிகைப்படுத்தி அல்லது குறைபடுத்தி என்னைப் பேசச் சொல்லித் தூண்டும் செயலை முழுமையாய்க் கவனிப்பேன்.

அதற்கெல்லாம் அனுமதியளிக்க மாட்டேன்", எனும் சங்கல்பத்தை ஆழமாய் எடுத்துக் கொள்ளுங்கள்.

சங்கல்பத்தை வாழ்வில் நிஜமாக்குங்கள். செயல்படுத்துங்கள்.

வாழ்வில் வரும் தேவையற்ற பல சங்கடங்கள் கலைந்துபோகும். நீங்களும், மற்றவரும் சேர்ந்து, நலமாய் வாழ இன்னொரு நல்வழி பிறக்கும்.

வெளிநாட்டில் இருக்குமளவுக்கு ஆன்மீகத் தேடல், இந்தியர்களிடம் ஏன் இருப்பதில்லை?

  • ரோசின், மொரிஷியஸ்

காரணம்,இந்தியர்களின் இரத்தத்திலேயே ஆன்மீகம் ஊறிப் போய்விட்டதுதான்.

மொடாக்குடியனுக்கு இரத்தத்தில் மதுகலந்துவிட்டதால், மயக்கத்திலேயே இருப்பார். நிஜத்திற்கு எளிதில் வரமாட்டார்.

அளவுக்கு மீறி ஆன்மீகக் கருத்துக்களை, இந்தியர்கள் தெரிந்து வைத்திருப்பதுதான் காரணம்.

இந்த அறிவு, ஒரு மூளைக்கட்டிக்குச் சமம்.

அறிவு கரைந்து, அனுபவங்களாக மாற வேண்டும்..... முதலில், போதை தெளிய வேண்டும். போதை தெளிய, தியானம் மிக அவசியம்.

Portrait photograph of a person wearing an orange turban and robes, resting their chin on their hand