வலி சரி, வேதனை தவறு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வலிகளை வேதனையாக்காதீர்கள்
ஒரு ஜென் ஞானியின் முதுகில் ஒரு பெரிய கட்டி இருந்தது. பார்ப்பவரெல்லாம் அதற்காகக் கண்ணீர் வடித்தார்கள்.
ஞானியைப் பார்க்க வந்த அரசர் கேட்டார், “குருவே, ரொம்ப வலிக்கிறதா?” என பக்தியோடு கேட்டார்.
ஞானி சொன்னார் : “அப்பா... வலியிருக்கிறது. ஆனால், வேதனையில்லை.”
“வலி வேறு, வேதனை வேறு! ”
ஒரு சின்ன உதாரணம் சொன்னால், இன்னும் ஆழமாய்ப் புரிந்து கொள்ளலாம்.
வலி வேறு, வேதனை வேறு,
வலி சரி, வேதனை தவறு.
குழந்தை ஒன்று, கால் தவறி கீழே விழுந்ததும் சுற்றி முற்றிப் பார்க்கும்.
“அய்யோ! என் கண்ணே விழுந்துட்டியா,” என பதறியடிக்கும் உறவினர் ஒருவர் இருந்தால், “ஓ!” என அழ ஆரம்பித்து விடும்.
தூக்கிவிட யாரும் இல்லாவிட்டால்,
கீழே விழுந்த குழந்தை, தானே எழுந்து
சென்றுவிடும். வலிக்கும் இடத்தைத் தானே
தடவிக் கொடுக்கும்.
குழந்தையின் உடலில் ஏற்பட்டது வலி. அதை நினைத்து, நினைத்து ஒப்பாரி வைப்பது வேதனை.
யூத் கிளப் புரோகிராமிற்கு வந்திருந்த கல்லூரி மாணவர் ஒருவர், மனவலி, மனவேதனை பற்றிய தியான சொற்பொழிவில், “எங்களுக்குப் புரியும்வகையில் இந்தக் கருத்தை விளக்குங்கள்,” எனக் கேட்டுக் கொண்டார்.
உடனே, “காதல் தோல்வி, வலி; அதை நினைத்து தாடி வளர்ப்பது, வேதனை,” எனச் சொன்னோம். கேள்வி கேட்டவர் சிரித்துக் கொண்டே அமர்ந்துவிட்டார்.
உடலில் அடி விழுந்தால், காயம்; அதே அடி, மனதில் விழுந்தால், மனக்காயம்.
இரண்டு காயமும் சில நாட்களுக்குள் ஆறிவிடக் கூடியவையே. மனக்காயங்கள்தான் ஆறுவதேயில்லை. விளையாடும்போது பலமுறை அடிபட்டிருப்பீர்கள். ஆழமான காயங்கள்கூட ஏற்பட்டிருக்கும்.
இப்போது யோசித்துப் பார்த்தால், அந்தக் காயங்கள் நினைவில்கூட இருக்காது.
இவை வலிகள்.
ஆனால், எப்போதோ உங்கள் கன்னத்தில் விழுந்த அறை, இப்போதுகூட அடிக்கடி நினைவுக்கு வரும். மனதை வருத்திக் கொண்டேயிருக்கும். கவனித்திருக்கிறீர்களா? இவைதான் வேதனைகள்.

வேதனையிலிருந்து விடுபடுவது எப்படி?
வேதனை தரும் எண்ணங்களை விடுங்கள். விடுபடுவீர்கள்.
வலி சரி ; வேதனை தவறு.
வலி இயற்கை ;
வேதனை செயற்கை.
வேதனைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டாலே போதும், கஷ்டம் என்ற வார்த்தைக்கும், உங்களுக்கும் சம்பந்தமே இருக்காது.
வேதனை என்பது, மனதால் திரும்பத் திரும்பக் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்பு.
ஓர் உருட்டுக்கட்டை உடலில் ஏற்படுத்தும் காயத்தைவிட, ஆழமான காயத்தை, மனதைத் தைக்கும் சில வார்த்தைகள் ஏற்படுத்திவிடும்.
மனதைத் தைத்த வார்த்தைகளை அப்போதே விட்டுவிட்டால், சிறுவலியோடு அவை மறைந்துவிடும்.
அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டால், மனதில் சிக்கிய வார்த்தைகள் சீழ் கோர்க்க ஆரம்பித்துவிடும்.காதுக்குள் நுழைந்துவிட்ட எறும்புபோல, அவை கொட்டிக் கொண்டேயிருக்கும். நீங்காத மன வேதனைகளோடு மனிதன் வாழ ஆரம்பிப்பது இதனால்தான்.
ஆனந்த வாழ்வு பயிலும் மாணவர் ஒருவர், "வேதனையிலிருந்து விடுபடுவது எப்படி?" எனக் கேட்டார்.
"வேதனை தரும் எண்ணங்களை விடு. விடுபடுவாய்" எனச் சொன்னோம். சிரத்தையோடு செய்த மாணவரும், அதிலிருந்து விடுபட்டார், வெகு சீக்கிரத்தில்.
வலி இயற்கை;
வேதனை செயற்கை.
எப்போதோ வாங்கிய அடி ;
யாரோ சொன்ன வார்த்தை ;
எங்கோ நிகழ்ந்த அவமானம்,
போன்ற சில விஷயங்களை ஏதோ ஒரு
பிடிவாதக் குணத்தால் மீண்டும், மீண்டும்
மனதில் Replay செய்து பார்த்துக் கொண்டே
இருப்பீர்கள்.
இந்தச் செயலை நிறுத்துவதைத்தான் “விடுபடுதல்” என்கிறோம். இது நிகழ்ந்தால், வேதனை, உடனடியாக நிறுத்தத்திற்கு வந்துவிடும். வேதனைகள் அனைத்தும் அந்த நொடியே பறந்துபோகும்.
“ சிறுவலியை, பெரிய வேதனையாக மாற்றுவது எது?”, என அந்த ஆனந்த யோகா மாணவர் கேட்ட போது சொன்னோம்...
அதற்குக் காரணம், ‘சமூகம்’. “என்னுடைய சிறுவயதிலிருந்து இப்போதுதான் முதல்முறையாக, வலி, வேதனை என்ற இரண்டு இருக்கும் உண்மையே தெரிய வருகிறது.
எனக்கே தெரியாத ஒன்றை சமூகம் எப்படி எனக்குக் கற்றுத் தந்திருக்க முடியும்?”
“வெளியே இருக்கும் சமுதாயமல்ல. உள்ளே இருக்கும் சமுதாயம்தான், வலியை வேதனையாக மாற்றுகிறது?”
“எப்படி?”
“நாம் எப்போதெல்லாம் புலம்புகிறோமோ, அப்போதெல்லாம் ஆறுதல் கிடைக்கிறது.
அழும்போதெல்லாம் அரவணைக்கப்படுகிறோம். நோய்வாய்ப் படும்போதெல்லாம் பாசத்தோடு கவனிக்கப்படுகிறோம்.
மனதில் வாழும் இந்த மனிதர்களின் நினைவுகள்தான், உள்ளிருக்கும் சமுதாயம். அது புலம்புவது, அழுவது போன்றவற்றை மற்றவர்களிடமிருந்து அன்பை பெறுவதற்கான வழிமுறைகள் என ஆழ்மனதில் பதிய வைக்கின்றன.

வலியை வேதனையாக மாற்றும் இன்னொரு முக்கியமான காரணி - அகங்காரம். இது சிறு அடியையும் பெரிதாக்கிக் காட்டும் பூதக் கண்ணாடி. வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள, இதனிடமிருந்தும் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
திரும்பத் திரும்பப் புலம்புவது, அழுவது என்பதெல்லாம் தொடர்ந்து நிகழும் நிகழ்வாக மாறிவிடுகின்றன. விளைவு ...
திரும்பத் திரும்ப எதையாவது மனதில் அசைபோடுவது என்பது இயல்பாகிவிடுகிறது. மனம் அசைபோடுகிறது, வேதனையாகிறது எனச் சொன்னோம்.
வலியை வேதனையாக மாற்றும் இன்னொரு முக்கியமான காரணி
- அகங்காரம். இது சிறு அடியையும் பெரிதாக்கிக் காட்டும் பூதக் கண்ணாடி. வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள, இதனிடமிருந்தும் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
தியானம்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு
- வள்ளுவர்.
தீப்புண் ஆறும்முன்பே, நாவினால் ஏற்பட்ட மனக்காயம் ஆறிவிடும். அகங்காரம் இல்லாதவருக்கு
- ஜென் ஹைக்கூ
வேதனையிலிருந்து விடுபடுபவரிடம் பெரிய வலிகூட எடுபடாது?
- வேத ரகசியம்.
கடைசியாய் சில வார்த்தைகள்...
"விடுபடுங்கள்
துன்ப வடுகூட இருக்காது"
டி.வி. சுவிட்சை அணைப்பதுபோல், மனதின் இந்தச் செயலை அணைத்துவிடுங்கள். நிம்மதி பொங்க ஆரம்பிக்கும் முயன்று பாருங்கள். சாத்தியமே.
வலி நிவாரணி தியானம்
“அன்று பெங்களூரில் தியான சத்சங்கம்.
நாங்கள் சென்ற வாகனம் கோளாறாகிவிட்டதால், ஆஸ்ரமத்திற்குத் திரும்ப வர, பக்தர் ஒருவர் தன்னுடைய காண்டஸா காரில் வரும்படி கேட்டுக் கொண்டார்.
எனவே, காண்டஸா காரில் ஏறி உட்கார்ந்தபடி, அங்கேயிருந்த பக்தர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருந்தோம்.
காரின் பக்கவாட்டில் இருந்து கையை எடுப்பதற்குள், காண்டஸாவின் கதவு சாத்தப்பட்டது. கதவிடுக்கில் சிக்கிய கட்டைவிரல், 'சதக்!' என நசுங்க, இரத்தம் வடிய ஆரம்பித்தது.
வலியும், எரிச்சலும் அந்த இடத்தில் அதிகரித்துக் கொண்டே போனது.
கொஞ்ச நேரத்திலேயே,
வலி மறைந்த
ரகசியத்தை
எங்களுக்கும்
சொல்லிக்
கொடுங்கள்...
கொஞ்ச நேரத்திலேயே, அந்த எரிச்சலும், வலியும் மறைந்துபோனது. உடனே அடுத்தடுத்த வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டோம்," என்று ஆஸ்ரமத்து பிரம்மச்சாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னோம்.
ஒரு பிரம்மச்சாரி, "கொஞ்ச நேரத்திலேயே
வலி மறைந்த ரகசியத்தை எங்களுக்கும்
சொல்லிக் கொடுங்கள்," என ஆர்வமாய்க்
கேட்டார்.
"ரகசியமெல்லாம் எதுவுமில்லையப்பா. யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம்"
"அவ்வளவு எளிய டெக்னிக்கா அது?".
"வெறும் டெக்னிக் அல்ல அது. தியானம்.
கட்டை விரல் நசுங்கியதும், நசுங்கிய இடத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டேன். என்ன ஆச்சரியம்! உடலின் மொத்த சக்தியும், வலி பொங்கும் இடம் நோக்கித் திரண்டோடியது.
கலவரமிருக்கும் இடம் நோக்கி விரையும் அவசர போலீஸ் போல, உடலின் சக்தி அங்கே சென்றதும், வலி குறைய ஆரம்பித்தது. சக்தி பாய, பாய, வலி குறைந்தது.
மீண்டும் வலி அதிகரித்தது. உடனே சக்தி பாய்ந்தது. வலி குறைந்தது.
இப்படி மீண்டும், மீண்டும் சிலமுறைகள் நடந்தன. அப்புறம் வலி என்னைத் தொந்திரவு செய்யவே இல்லை.
நானும் வலியை விட்டுவிட்டேன். வலியும் என்னை விட்டுவிட்டது".
"எங்களின் உடலில் அடி ஏற்படும்போது, இப்படி நிகழ்வதில்லை. வலி இருக்குமிடத்திற்கு சக்தி பாய்வதில்லையே. ஏன்?"
"வலி இருக்கும் இடத்திற்கு சக்தி பாயும் என்பது இயற்கை.
ஆனால், கவனித்தல் எனும் தியானநிலையில் இருக்கும்போதுதான்,

ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய உடலைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான சக்தியையும், மனதைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான புத்தியையும், கையோடு எடுத்துக் கொண்டுதான் பூமிக்கு வருகிறார். உங்களின் விழிப்புணர்வு விழித்துக் கொள்கிறது. இந்த விழிப்புணர்வுதான் மொத்த சக்தியையும் திரட்டி எடுத்துவந்து, சில நிமிடங்களுக்குள் அந்த இடத்தைக் குணப்படுத்துகிறது.
விழிப்புணர்வு மிகாவிட்டால் சக்தி எழாது ; வலி அகலாது.
வலி வேதனையாக மாறும் நிகழ்வையே இந்த குணமளிக்கும் சக்தி துண்டித்து விடுகிறது. எனவேதான், விழிப்புணர்வை மாபெரும் குணமளிக்கும் சக்தி என்றழைக்கிறோம்" எனச் சொல்லி முடித்தோம்.
இதேபோல் உங்களுடைய மனவலிகளையும் குணப்படுத்தலாம்.
ஒவ்வொரு மனிதரும், தன்னுடைய உடலைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான சக்தியையும், மனதைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான புத்தியையும், கையோடு எடுத்துக் கொண்டுதான் பூமிக்கு வருகிறார்.
ஆனால், இங்கு வந்த பின்புதான், அவற்றைப் பயன்படுத்த மறந்துவிடுகிறார். அத்தோடு நில்லாமல், தான் அவற்றை எடுத்து வந்தோம் என்பதைக்கூட அடியோடு மறந்துவிடுகிறார்.
சாலை என்றால், மேடு - பள்ளங்கள் இருப்பது சகஜம். வாழ்க்கை என்றால், சில ஏமாற்றங்கள், சில கஷ்டங்கள் வரத்தான் செய்யும். தவிர்க்க முடியாதவை அவை. ஆனால், அதனால் ஏற்படும் தொடர் மனக்கஷ்டங்கள், மனச்சோர்வுகள், மன அழுத்தங்களைச் சரி செய்யலாம்.
விரல் நசுக்கப்பட்டபோது செய்த அதே கவனித்தல் எனும் தியானச் செயலைச் செய்தால், சக்தி திரண்டு உடல் காயத்தைக் குணப்படுத்தியது போல, புத்தி திரண்டு மனக்காயத்தைக் குணப்படுத்தும்.
வலி மறைந்து பரவசம் பெருகுவதோடு, அந்த பிரச்சினையே சரியாகிவிடும்.
இந்தத் தியானம், வலி நிவாரணி மட்டுமல்லாமல், பரவச தாரணி தியானமும்கூட, மேலும், இந்தத் தியானம் உள்ளிருக்கும் மருந்தை உடனடியாய் எடுத்துத் தரும் தியானம்.
கவனித்தல் எனும்
தியானச் செயலைச் செய்தால்,
சக்தி திரண்டு உடல் காயத்தைக்
குணப்படுத்தியது போல, புத்தி
திரண்டு மனக்காயத்தைக்
குணப்படுத்தும்.
