உணர்ச்சி கொந்தளிப்பின் விடியுகாலம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சின்ன வயதில் செய்த தவறுகள்
எப்படி, எப்படியெல்லாம் வாழ வேண்டும் என நினைத்தால், அது ஆசை.
இப்படி, இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கக் கூடாது என நினைத்தால், அது குற்ற உணர்ச்சி.
பெண்மணி ஒருவர் நித்யானந்தஸ்புரணம்தியானத்தின்போது, தன்னுடைய சின்ன வயதில் நிகழ்ந்த தவறை நினைத்து மிகவும் வருந்தி அழுதார்.
"அவர், 'அந்தத் தப்பு இப்பவும் என் மனசை உறுத்திக்கிட்டே இருக்கிறது. அந்த நினைவு வரும் போதெல்லாம் குற்ற உணர்ச்சியால் சாகிறேன்.
இதிலிருந்து விமோசனமே இல்லையா?' எனத் தேம்பித்தேம்பி அழுதார்கள்.
எப்படி, எப்படியெல்லாம் வாழ
வேண்டும் என நினைத்தால்
அது ஆசை.
இப்படி, இப்படியெல்லாம்
வாழ்ந்திருக்கக் கூடாது
என நினைத்தால்,
அது குற்ற உணர்ச்சி.
அவர்களிடம், அம்மா, சில நிமிடம்
செலவு செய்து, இப்போது சொல்வதை மட்டும்
ஆழமாய்க் கேளுங்கள்.
உங்களின் உறுத்தல்களெல்லாம்
இருக்குமிடம் தெரியாமல் மறைந்து
போய்விடும்" என்றேன்.
மிக ஆர்வமாய், ‘இப்படியொரு வழி கிடைக்காதா என்றுதான் ஏங்கிக்கொண்டே இருக்கிறேன். சொல்லுங்க’ என்றார்.
என்றோ நடந்ததை நினைத்து, இன்றும் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறீர்கள். அன்றைய தினத்திற்கு, நம்மிடமிருந்த புத்திசாலித்தனத்தால் அவ்வளவுதான் முடிந்தது.
‘அன்று செய்தது தவறு’ என்று கண்டுபிடிக்குமளவுக்கு இன்று புத்திசாலித்தனம் அதிகமாகிவிட்டதே! இன்னும் ஏன் தாமதிக்கிறீர்கள். ஏன் கஷ்டப்படுகிறீர்கள்.?
இன்று அதிகமாகி இருக்கும் புத்திசாலித்தனத்தை வைத்து, உங்களின் பக்குவத்தை அதிகரியுங்கள்.
நிச்சயம் இனியொருமுறை அந்தத் தவறைச் செய்யமாட்டீர்கள். ‘செய்த தவறை இனியொருமுறை செய்யமாட்டேன்’ என்ற முடிவு எடுத்த நிமிடத்திலிருந்து, நீங்கள் புனிதராகிவிட்டீர்கள். நீங்கள் பாவி அல்ல” என்று சொல்லி முடித்தேன்.
அவர்களிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சும், ஆனந்தக் கண்ணீரும் வெளிப்பட்டது. “நம்முடைய வாழ்வைப்பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை.
அப்படியும் விமர்சித்தால்... விமர்சிப்பவர் மடையன். அதை அனுமதிப்பவர், அடி மடையன்”.
- ஜென் ஞானி
லாஸ் ஏsettingsல்ஸ் ஆஸ்ரமத்தில், சாயங்கால வேளையில், ஓய்வாய்ப் பேசிக் கொண்டிருக்கும் போது...

இன்று அதிகமாகி இருக்கும் புத்திசாலித்தனத்தை வைத்து, உங்களின் பக்குவத்தை அதிகரியுங்கள். நிச்சயம் இனியொருமுறை ஒரே தவறைச் செய்யமாட்டீர்கள். ‘செய்த தவறை இனியொருமுறை செய்யமாட்டேன்’ என்ற முடிவு எடுத்த நிமிடத்திலிருந்து, நீங்கள் புனிதராகிவிட்டீர்கள். நீங்கள் பாவி அல்ல...
நித்ய பக்தானந்தாவிடம் விளையாட்டாய்க் கேட்டேன், “ஒருவேளை, என்னைப் பற்றிய வதந்திகள் நிறைய உங்களின் காதுக்கு வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?” எனக் கேட்டேன்.
‘அப்படியா!’ என்று கேட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பேன்” என்றார்.
“சந்தேகமோ, கோபமோ வராதா?”
“எனக்கேன் அதெல்லாம் வர வேண்டும்?
வதந்தி என்பது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியது.
நான் கேட்ட வதந்தியை உண்மையா? பொய்யா? என்று கூட ஆராயமாட்டேன்”.
“ஏன்”?
“ஏனென்றால்
என் வாழ்க்கை என்னுடையது.
உங்களின் வாழ்க்கை உங்களுடையது.
எனக்குத் தேவையான தியானம், ஞானம் உங்களிடமிருந்து முழுமையாய் கிடைக்கிறது.
நான் பழகிய வகையில் நீங்கள் 100% நல்லவர்.
உங்களுக்கும் எனக்கும் இடையிலிருக்கும் கணக்கு வழக்கு சரியாய் இருக்கையில்... நான் ஏன் எவனோ ஒரு குப்பன் சொல்வதையெல்லாம் தலையில் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டும்”, என்றார்.
என்றோ நடந்ததை நினைத்து
இன்றும் ஏன் இவ்வளவு
வருத்தப்படுகிறீர்கள். அன்றைய
தினத்திற்கு, நம்மிடமிருந்த
புத்திசாலித்தனத்தால்
அவ்வளவுதான் முடிந்தது.
தொடர்ந்து செய்த தியானங்களால்
அவருள் மலர்ந்திருந்த தெளிவைப்பார்த்து
அகம் மகிழ்ந்தேன்.
பக்தானந்தாவைப்போல் வாழ்பவருக்குக் குற்ற உணர்ச்சியே வரமுடியாது.
குற்ற உணர்ச்சிகளால் பொங்கிப் புழுங்கிக் கொண்டிருப்பவர்கள்தான், விமர்சனம் செய்தல், வதந்தி பரப்புதல் போன்ற கீழ்த்தரமான செயல்களில் இறங்குவார்கள்.
விமர்சனங்களையும், வதந்திகளையும், மனதளவில் வரவேற்போர், புதிய புதிய குற்ற உணர்ச்சிகளுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாவார்கள்.
நிருபர் ஒருவர், "மனிதருக்கு தேவையே இல்லாதது எது?" எனக் கேட்ட போது...
"குற்ற உணர்ச்சி" என்றேன்.
விமர்சிப்பதையும், விமர்சனங்களை மனதில் பிடித்துக் கொண்டு வாடுவதையும் நிறுத்துங்கள்.
குற்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்பே இல்லாது போய்விடும்.
தியானம்
இப்படி இப்படியெல்லாம்தான் வாழ வேண்டும் என்ற வரையறையே, அரைகுறையானது. காரணம், வாழ்வு என்பது சுவர்கள் இல்லாத அறை. அதற்கு யாராலும் வரையறை சொல்ல முடியாது.

விமர்சிப்பதையும், விமர்சனங்களை மனதில் பிடித்து கொண்டு வாடுவதையும் நிறுத்துங்கள்...
குற்ற உணர்ச்சிகள் உங்களுக்குள்
நுழைவதற்கான வாய்ப்பே இல்லாது
போய்விடும்.
பெற்றோரும், மற்றோரும்..... மதமும் இனமும்..... மதவாதிகளும் அதிபதிகளும்..... மாறி மாறிச் சொல்லும் விமர்சனங்களைக்கண்டு அஞ்சாதீர்கள்.
அப்படி என்றோ அஞ்சியதால்தான், சின்ன வயதில் செய்த தவறுகள்கூட, மனதை வதைகின்றன.
தர்மப்படி, மனசாட்சிப்படி, உங்களின் உணர்வுப்படி நியாயமான வாழ்வை வாழ ஆரம்பியுங்கள்.....
'எப்படி எப்படியெல்லாம் வாழலாம் எனும் ஆசைகளைக் கடந்து, இப்படி' இப்படியெல்லாம் ஆனந்தமாய் வாழலாம் எனும் தெளிவு பிறக்கும்.
இறந்தவர்களோடு பேச முடியுமா?
-காளீஸ்வரன், செங்கம்.
உங்களின் சிந்தனைக்கு...
"முதலில் உயிரோடு இருப்பவர்களோடெல்லாம் நன்றாய்ப் பேசுகிறோமா?"
பதில், 'இல்லை' என்றால், முதலில் உயிரோடு உங்களைச் சுற்றி உலாத்துபவர்களிடம் நன்றாய்ப் பேசுவதைப் பற்றியோசியுங்கள். அது மிகப்பெரிய ஆன்மீகம்.
பதில், 'ஆம்' என்றால், ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களின், 'ஆம்' ஒரு முழுப்பொய், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடமெல்லாம் சிரித்து கொண்டாடுபவருக்கு,
இறந்தவர்களோடு வெகு பிரயர்த்தனப்பட்டு, வெகுநேரம் செலவு செய்து பேசுவதைப் பற்றியெல்லாம் யோசிக்க முடியாது. அதற்கு நேரமே இருக்காது.
இறந்தவர்களோடு பேச முடியுமா? என ஆராய்வதை நிறுத்தி... வாழ்பவர்களோடு கொண்டாட முடியுமா? என யோசியுங்கள்...
மீதி வாழ்வு மிச்சமாகும்.
கண்ணீர் களிப்பாகும் நேரம்
1) ஜப்பான் மலைக்குகைக ஒன்றில் . .
"மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன். போய்ச் சொல்" உள்ளே சென்ற சீடர் திரும்பவில்லை.
ஐந்து நிமிடம் கழித்து இன்னொரு சீடர் குடிலுக்குள் நுழைந்தார்.
"மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன், என்று உங்கள் குருவிடம் சொல்லுங்கள்".
அவரும் வரவில்லை. அரைமணி நேரம் கழித்து குடிலுக்கு வந்த சமையல்காரரிடம்...."ஐயா! மேயர் சுயாங்கோ வந்திருப்பதாகவும், காத்துக் கொண்டிருப்பதாகவும் குருஜியிடம் சொல்லுங்கள்". சமையல்காரரும் திரும்பவில்லை.
மனிதர்கள் தங்களை
விட அந்தஸ்தில் பெரிய
மனிதர்களிடம் பேசும்
போது எளிமையாய்ப் பேச
முடியாமல் தவிப்பார்கள்.
அவர்களின் கடினத்தன்மை
காரணமாக, அந்தச் சூழலில்
கஷ்டப்படுவார்கள்.
2) லாஸ் ஏஞ்ஜல்ஸ் - தியானபீட கிளையில்...
" என் குடும்பத்தினரோடு அடிக்கடி
சண்டை சச்சரவு வந்து கொண்டேயிருக்கிறதே!
என்ன காரணம் ?" என விரூப்பா கேட்டார்.
“குனிந்தவரைக் கொட்டிப்பார்ப்பதும், எதிரேயிருப்பவர் கொட்டும் போது ‘குனிந்து போகிறோமோ!’ எனப் பொங்கி எழுவதும்தான் காரணம்” என்றேன்.
“புரியவில்லை ... ”
“எளிமையானவர்களிடம் இளக்காரமாய் பேசுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?”
“பார்த்திருக்கிறேன்”
“அதே மனிதர்கள், தங்களைவிட அந்தஸ்தில் பெரிய மனிதர்களிடம் பேசும்போது எளிமையாய்ப் பேச முடியாமல் தவிப்பார்கள். அவர்களின் கடினத்தன்மை காரணமாக, அந்தச் சூழலில் கஷ்டப்படுவார்கள்...”
“... இது அப்படியே என் மாமனாருக்குப் பொருந்தும்!.” என்றார் அவர்.
3) வந்து ஒரு மணி நேரமாகிவிட்டது. மேயர் சுயாங்கோவால் இதை பொருத்துக் கொள்ள முடியவில்லை.
அது புது இடம். அங்கே தன் அதிகாரத்தை செலுத்த முடியாது. அவரே தேடி வந்ததால், சூழ்நிலையின் அடிப்படையில், அவர் அங்கே எளிமையாக இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.
அவரின் அந்தஸ்து, குரு என்பவரின் சமூக அந்தஸ்தைவிட, மிகச் சிறியது. தன் வேலைகாரர்களை சிறு தவறுக்கும் பெரிதாகத் திட்டும் அவரால், அங்கு அமைதியாய் இருக்க முடியவில்லை.
எளியவர்களைக் கொட்டும் மனிதருக்கு, எளிமையாய் இருக்க வேண்டிய கட்டாயம். ஆனால் உள்ளே பொங்கிக் கொண்டிருந்தார்.

எளியவர்களைக் கொட்டும் மனிதருக்கு, எளிமையாய் இருக்க வேண்டிய கட்டாயம்.
4) “விருப்பா! இப்படிப்பட்டவர்கள் தூங்கும் எரிமலைக்குச் சமம். எப்போது வேண்டுமானாலும், வெடிக்கலாம் வார்த்தைகளைக் கக்கலாம்.”
ஆமாம். சரியாய்ச் சொன்னீர்கள் அப்படித்தான் செய்கிறார்கள்.
5) மேயர் சுயாங்கோவைத் தாண்டிச் சென்ற சிறுவனை அழைத்து, ஒரு சிறிய ஓலையில், “மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன். உங்களோடு பேச வேண்டும்,” என எழுதிக் கொடுத்தார்.
உள்ளே போன மறுவினாடியே ஓடிவந்த சிறுவன், சுயாங்கோ கொடுத்த ஓலையை அவரிடமே திருப்பிக் கொடுத்தான்.
ஓலையின் பின்னால் . . .
“உம் போன்ற மடையர்களிடம் பேசி நேரத்தை வீணடிக்குமளவுக்கு, சரியான மடையர்கள் யாரும் இங்கில்லை,” என எழுதியிருந்தது.
6) விருப்பாவிடம்...
“சாதாரணமான மனிதர்கள் போலதான் பேசிக் கொண்டிருப்பார்கள், திடீரென ஏதாவதொரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு,
எப்படி அப்படிச் சொல்வாய்?
என்ன திமிர் உனக்கு. ?
அப்படியென்றால், என்ன சொல்ல
வருகிறாய். . . .” என ஆரம்பித்து, நீங்கள்
யோசிக்காத ஒரு கோணத்தில் வம்பிழுக்க
ஆரம்பிப்பார்கள்.
“இல்லை, நான் அந்த அர்த்தத்தில்
சொல்லவில்லை,” என நீங்கள்
ஆரம்பித்துவிட்டால் போதும்! சண்டை
சூடுபிடித்துவிடும்.
எளியவர்களைக்
கொட்டும் மனிதருக்கு,
எளிமையாய் இருக்க
வேண்டிய கட்டாயம்
வரும்போது உள்ளே
பொங்கிக் கொண்டிருப்பார்.
இதற்குக் காரணம், இது போன்ற சூழலில், எதிராளி, "நான் அப்படி நினைக்கவேயில்லையே", என தடுமாற நினைத்ததும், வம்பிழுப்பவர், தான் மனதளவில் உயர்ந்து விட்டதாக நினைப்பார்.
"தடுமாற ஆரம்பித்த எதிராளி, மனத்தளவிலான அந்தஸ்தில் குறைந்து விட்டார்!" என வம்பழுப்பவர் உணர்ந்து விட்டால் போதும், அவர் எங்கோ எப்போதோ நிகழ்ந்த சிறு சிறு தவறுகளையெல்லாம், நொடியில் ஒன்று திரட்டிக் கொட்ட ஆரம்பிப்பார்.
பல சமயங்களில், அடுத்தவர் அழும்வரை திட்டுவதையும், கொட்டுவதையும் நிறுத்தமாட்டார்கள்.
காரணம், எளியவர்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் அந்தஸ்து குறைந்தவர்கள் தன் கண்முன் கிடைத்தவுடனே விழித்துக் கொள்ளும் அகங்காரம்தான்," என்றேன்.
"ஆமாம்... ஆமாம்.. சரியாய்ச் சொன்னீர்கள்", என்றார் விரூப்பா.
"என்ன ஆமாம்... ஆமாம்.?"
"இவ்வளவு நேரம் பேசியது யாரோ ஒருவரைப்பற்றி அல்ல. முழுக்க முழுக்க உங்களைப் பற்றியது!
அடுத்தவர்கள் இப்படித்தான் அகங்காரத்தால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் எனப் புரிந்துகொள்ளத் தெரிகிறதே! 'ஏன் ? நானும் இது போல ஆட்டுவிக்கப்படக்கூடாது' என ஒருமுறைகூட உங்களுக்கு யோசிக்கத் தோன்றவில்லையே ... கவனித்தீர்களா?" எனக் கேட்டேன்.

அடுத்தவர்கள் இப்படித்தான் அகங்காரத்தால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் எனப் புரிந்து கொள்ளத் தெரிகிறதே! 'ஏன் ? நானும் இது போல ஆட்டுவிக்கப்படக்கூடாது' என ஒரு முறைகூட உங்களுக்கு யோசிக்கத் தோன்றவில்லையே ... கவனித்தீர்களா? “..................”
7) ஓலையைப் படித்து முடித்த உடனே அவருக்குள் பொறி தட்டியது.
“இந்த ஜென் குரு மிக நியாயமானவர். இவர் இப்படிச் செய்யமாட்டார். ஆனாலும் இப்படி எழுதியிருக்கிறார் என்றால்,” என யோசிக்க யோசிக்க மேயர் சுயாங்கோவுக்கு குருவின் செயலிலிருக்கும் சூட்சுமம் புரிந்தது.
ஓலையில் ‘மேயர் சுயாங்கோ’ என இருந்ததில், மேயர் என்ற வார்த்தையை அடித்து விட்டு, ‘சுயாங்கோ’ என்ற பெயரோடு அதே ஓலையை திருப்பி அனுப்பினார்.
அடுத்த நிமிடமே, அறைக்கதவு திறந்தது!
குரு ஓட்டமும் நடையுமாய் வெளிவந்து, “வாங்க சுயாங்கோ! வாங்க! உங்களுக்காகத்தான் வெகு நாட்களாக நான் காத்துக் கொண்டிருந்தேன்.
எப்படியும் நீங்கள் இங்கு வருவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், இவ்வளவு சீக்கிரம் வருவீர்கள் என்று எனக்குத் தெரியாது,” எனச் சொன்னார். சில நாட்களுக்குப் பின். . .
அந்தஸ்து என்ற மனவலையில் இருந்து விடுப்பட்ட சுயாங்கோ, குரு தன் மீது செய்த ஆன்மீக அறுவை சிகிச்சையை நினைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
தியானம்
“விருப்பா!. நம்மையறியாமல் நம்மை ஆட்டுவிக்கும் அகங்காரமானது, ஒரு மனிதர் ஞானியாகும் வரை அவரைவிட்டுப் போகாது. ஞானியாகும்வரை, அவருக்கு இந்த உண்மை தெரியாது.
நேற்று உங்கள் குடும்பத்தாரோடு பேசும்போது, அவர்களும், நீங்கள் சொன்னது போலவே உங்கள் மீது குறைசொன்னார்கள். நீங்கள் அவர்களின் குறைகளை, கோபங்களை நேரடியாக அனுபவித்தவர். அதனால் உங்களுக்கு வலி!
உங்களின் நினைவில் அந்த வலி உருவாகக் காரணமாக இருந்த நபரும், சம்பவமும் பதிந்திருக்கிறது. ஆனால், இவ்வளவு தொந்தரவு தந்திருக்கிறோம் என்பது கூட அவர்களுக்குக் தெரியவில்லை. அவர்களுக்கு அவர்களின் வலி.
அதேபோல்தான், உங்களுக்கும் தெரியவில்லை. நீங்கள் உங்களையும் அறியாமல் குத்தியதும், திட்டியதும் எத்தனை பேரை கிழித்திருக்கும்? யோசியுங்கள். இனியாவது தவிர்க்கலாம்.முதலில், பிரச்சினையை உங்களிடம் சரிசெய்யுங்கள்", என்றேன்.
"நன்றி குருவே!" என்ற விருப்பா, தன்னை ஆட்டுவிக்கும் அகங்காரத்தையே ஆட்டுவிக்கும் கலையைக் கற்றுக் கொண்டுவிட்டார். உங்கள் ஒவ்வொருவரின் பிரச்சினைகளுக்கும் காரணமான சுயாங்கோவின் அந்தஸ்தும், விருப்பாவின் அகங்காரமும் திரைமறைவில் ஒளிந்திருக்கிறது. இவை கொலை செய்யப்பட வேண்டும்.
இந்த சம்பவங்களில் உங்களைக் கதாபாத்திரமாக்கி தியானியுங்கள். மனவலையிலிருந்து நீங்களும் விடுபடுவீர்கள். ஆட்டுவிக்கும் அகங்காரத்தையே ஆட்டுவிப்போனாவீர்கள். உங்களின் கண்ணீர்த் துளிகள் ஆனந்தமாக மாறும். கண்ணீர் களிப்பாகும்.
நான் ரொம்ப பிஸியானவன். எனக்குத் தியானம் செய்ய நேரமிருப்பதேயில்லை. என்ன செய்வது ? -ரகுபதி, காரைக்குடி
'தியானம் செய்ய எனக்கு நேரமில்லை' என்று சொல்லாதீர்கள்.
'தியானம் செய்ய எனக்கு விருப்பமில்லை' என்று சொல்லுங்கள். அது நியாயமானது. உண்மையானது.
காலைக்கடன்களையும், உணவையும், 'நான் பிஸியாக இருக்கிறேன்' எனச் சொல்லித் தவிர்த்து விடுவீர்களா என்ன?. ஒருநாள் தவிர்த்தாலும் அடுத்த நாள் தொடர்வீர்கள்தானே!
தியானம் செய்ய எனக்கு நேரமில்லை எனச் சொல்லி தவிர்ப்பது, 'தியானம்' எவ்வளவு மகத்துவம் பெற்றது, அது எவ்வளவு பலன்களைத் தரக்கூடியது என்ற உண்மைகள் தெரியவில்லை என்று பொருள்.
தியானத்தின் அவசியம் ஆழப்புரியாததால், 'தியானம் செய்ய வேண்டும்' என்ற விருப்பம் இன்னும் உங்களுக்குள் அரும்பவேயில்லை.
விருப்பம் மலராததால்தான், 'ஒரு நாளுக்கு வெறும் அரைமணி நேரம் கூட தியானத்திற்கு ஒதுக்குவது எப்படி?' என யோசிக்காமல், சாக்குப்போக்குச்சொல்லித் தட்டிக்கழிக்க வைக்கிறது மனம்.
தியானம் செய்ய, விருப்பத்தை அரும்பச் செய்யுங்கள். இல்லை தியானம் செய்ய எனக்கு விருப்பமில்லை எனச் சொல்லுங்கள். இரண்டும் சரியே.
மனித உருவங்களுக்கு உணர்ச்சி முலாம் பூசாதீர்கள்
கண்ணாடி முன்னால் நின்று, முகத்தை உற்றுப்பார்ப்பது, இரசிப்பது, விருப்பமானதாக இருப்பது ஏன்?
ரோல் ரோலாக புகைப்படங்கள் எடுத்து, ஆல்பங்களை அடுக்கி வைப்பதும், மற்றவரிடம் அவற்றைக் காட்டிக் காட்டி மகிழ்வதும், விருப்பமானதாகவே இருக்கிறது எல்லோருக்கும்! ஏன்?
நம்முடைய உருவங்கள்தான், 'நான் தனி (ஈகோ),' என்ற உணர்வுக்குத் தீனி!.
'நான் தனி' என்ற உணர்வு நீங்கள் குழந்தையாக இருக்கும் வரை உங்களிடம் இருக்காது. ஏழு வயதைத் தாண்டும் போதுதான், இந்தப் புது உணர்வு பிறக்கிறது. ஈகோ வளர்கிறது.
வாலிபப் பருவத்தில் ஈகோ முதிர்கிறது.
அதனால்தான் விடலைப் பருவத்தில்,
இருபாலரும், கண்ணாடியில் தங்களின்
முகத்தை வெகுநேரம் இரசிப்பதை, வாழ்வில்
முதல் முறையாகச் செய்கிறார்கள்.
வெகு நேரம் தலை சீவுவது ...
வெகு நேரம் மேக்கப் செய்வது ...
ஆல்பங்களை அடிக்கடி புரட்டுவது ...
'நான் தனி'
என்ற உணர்வு,
குழந்தையாக இருக்கும் வரை
உங்களிடம் இருக்காது. ஏழு
வயதைத் தாண்டும் போதுதான்,
இந்தப் புது உணர்வு பிறக்கிறது.
ஈகோ வளர்கிறது.
போன்ற எல்லா செயல்களும் உங்களின் ஈகோவுக்குத் தீனிபோல் அமைகிறது. தின்பண்டங்களைச் சாப்பிடும்போது திருப்தியடையும் குழந்தைபோல், நம் மனமானது மேற்கண்ட செயல்களைத் திரும்பத் திரும்ப நம்மைச் செய்ய வைத்து, தன்னைத் திருப்தி செய்து கொள்கிறது. ஈகோ வாழ்கிறது.
"வேறு வேலைவெட்டி இல்லாததால், தங்களின் பெரிய பெரிய ஓவியங்களை அரசர்கள் வரையச் சொல்லியிருப்பார்களா?" என அத்வைத ஞானியிடம் சீடர் கேட்டதற்கு, "அப்படியல்ல.... வேறு வழி இல்லை. அரசர் என்றழைக்கப்படும் மனிதருக்கு, 'நான் தனி' என்ற உணர்வு மிக திடமானதாக இருக்கும். அது பிரம்மாண்டத்தைத்தான் விரும்பும். தவிர்ப்பது கடினம்.
அவர்களின் அகங்காரம் திருப்தியடைய, அவ்வளவு பெரிய பிரம்மாண்டமான உருவங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது என்று பொருள்" என்றார்.
பனை மரமளவுக்கு எழுந்த கடல் அலையை புகைப்படத்தில் பார்க்கும் போது பிரம்மாண்டமாகத்தான் இருக்கும்.
அந்தப் புகைப்படத்தை 'கிளிக்' செய்த மறு வினாடியே, அந்தக் கடல் அலை அங்கு இருப்பதில்லை. புகைப்படத்தில் உயிருள்ள உருவம் போல இருக்கும் கடல் அலை, நிஜத்தில் இல்லாத ஒன்று.
புகைப்படத்தில், இப்படி இல்லாதது இருந்தால் பிரச்சினையில்லை. உங்கள் மூளைக்குள், மனதுக்குள், நிஜத்தில் இல்லாதவை, குப்பைபோல் நிரம்பி வழிந்தால், யாருக்குப் பிரச்சினை?
புகைப்படத்தில் ஓர் உருவத்தின், ஒரு பரிமாணத்தைப் பிடிக்கலாம். வீடியோவில் இரண்டு பரிமாணங்களைப் பிடிக்கலாம்.

உணர்ச்சிப்பதிவுகள் சேகரமாகாவிட்டால்
மனம் ஸ்தம்பிக்காது.
மனம் சோர்வடையாமல் மிக
உற்சாகமாகவே இருக்கும்.
‘3டி’ படக் கண்ணாடிகள் மூலம் ஒரு பொருளின் மூன்று பரிமாணங்களைப் பிடிக்கலாம். ஆனால், உங்களின் மனம் எனும் கேமராவால் ‘உணர்ச்சிகள்’ எனும் இன்னொரு பரிமாணத்தையும் சேர்த்துப் பிடிக்கலாம்.
உங்களின் மனம் ‘4டி’ அல்ல. அது ‘பல டி’ என்றழைக்கப்பட வேண்டும். இந்த பல டி ( Multi Dimension) பதிவுகள் அதிகமாகும் போதுதான் மனம் ஸ்தம்பிக்கிறது, சோர்வடைகிறது. கம்பயூட்டரின் அடிப்படையான ஒரு செயல்பாட்டைப் புரிந்துகொண்டால், உணர்ச்சிகளோடு சேர்ந்து ஓர் உருவம் மனதில் பதிந்தால், அது என்ன செய்யும். ஒரு கட்டத்தில், மனிதரை ஸ்தம்பிக்கச் செய்யுமளவுக்கு, அது எப்படி விஸ்வரூபம் எடுக்கும்? என்பதை எளிதாய்ப் புரிந்து கொள்வோம்.
கம்ப்யூட்டரில் எழுத்துகளைப் பதிவு செய்தால், அதை டெக்ஸ்ட் (Text) என்றழைப்பர். அதே கம்ப்யூட்டரில் படங்களைப் பதிவு செய்தால், அதை இமேஜ் (Image) என்றழைப்பர்.
எழுத்துக்கள் அதிகமாவதால் கம்ப்யூட்டரின் இயக்கம் ஸ்தம்பிக்காது. ஆனால், படங்கள் (Image) அதிகமானால், கம்ப்யூட்டரின் இயக்கம் ஸ்தம்பிக்கும். இது அடிப்படையான ஓர் உண்மை.
கம்ப்யூட்டரைப் போன்றே இயங்கக் கூடியதுதான் மனம்.
உங்களுடைய ஆல்பத்தில் இருக்கும் கையளவு புகைப்படத்திற்கும், பெரிய பெரிய ‘கட் அவுட்’களில் இருக்கும் படத்திற்கும், நிறைய வித்தியாசம் உண்டு. கட்அவுட் பிரிண்ட் செய்ய சாதாரண புகைப்படத்தின் செறிவு (High resolution) அதிகமாக வேண்டும்.
மனித உருவங்கள் சாதாரண
புகைப்படத்திற்குச் சமம்.
மிகவும் நெருங்கியவர்களாக,
உயிருக்குயிராக, எதிரியாக
அதே மனிதர்கள் மாறும் போது,
- நம் மனதில் பதிந்திருக்கும்
அவர்களுடைய உருவங்களோடு,
நம் உணர்வுகளும் சேர்ந்து
பதிவாகிறது.
சாதாரண புகைப்படங்களை நூற்றுக்கணக்கில் ஒரு கம்பயூட்டரில் சேமித்து வைக்கலாம்.
ஆனால், ‘கட்அவுட்டு’க்காகச், செறிவு
அதிகமாக்கப்பட்ட அதே புகைப்படங்கள் சில
இருந்தாலே போதும், கம்ப்யூட்டரின் இயக்கம்
ஸ்தம்பித்துப் போகும்!.
எனவேதான், செறிவு அதிகமான புகைப்படங்களை (High Resoltion pictures) கம்யூப்யூட்டரில் சேமித்து வைக்க மாட்டார்கள்.
மனித உருவங்கள் சாதாரண புகைப்படத்திற்குச் சமம். மிகவும் நெருங்கியவர்களாக, உயிருக்குயிராக, எதிரியாக அதே மனிதர்கள் மாறும்போது,
- நம் மனதில் பதிந்திருக்கும் அவர்களுடைய உருவங்களோடு, நம் உணர்வுகளும் சேர்ந்து பதிவாகிறது. இது சாதாரண புகைப்படத்தின் செறிவை அதிகப் படுத்துவதற்குச் சமம்.
நம் மனதில் வாழும் மனிதர்களின் நினைவுகளோடு, கோபம், பாசம், காமம், அவமானம் போன்ற உணர்ச்சிப் பதிவுகள் சேரும்போது, சாதாரண நினைவுகளின் செறிவு அதிகமாகிறது. விளைவு-மனம் ஸ்தம்பிக்கிறது. மனம் சோர்வடைகிறது. டிப்ரஷன் உருவாகிறது.

# தியானம்
லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகர தியான சொற்பொழிவொன்றில், "மனிதர்களைப் பற்றிய நினைவுகள் தவறானவை அல்ல. ஆனால், மனிதர்களைப் பற்றிய உணர்ச்சிப் பதிவுகளே (Engraved Memories) தவறானவை, மோசமானவை", எனச் சொன்னபோது, நடுவில் கை உயர்த்திய கல்லூரிப் பெண் கேட்டார்...
"என் காதலரோடும், என் காதலோடும் சம்பந்தப்பட்ட உணர்ச்சிப்பதிவுகள்தான் என் வாழ்வை இன்று இனிமையாக வைத்திருக்கிறது. இது தவறானதா ? இது தவறென்றால், பின் எப்படித்தான் நாங்கள் வாழ்வது ?"
"ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். மனதிற்கு எல்லா உணர்ச்சிகளும் ஒன்றே. எந்த நிறத்தைக் கொடுத்தாலும், அந்த நிறமாக வெண் பஞ்சு மாறிவிடும்.
பஞ்சு போன்ற உங்களின் மனம், இன்று சில சந்தோஷமான உணர்ச்சிப் பதிவுகளை மட்டும் உறிஞ்சியிருக்கிறது. அதனால், அது சந்தோஷமாயிருக்கிறது. நீங்களும் சந்தோஷமாயிருக்கிறீர்கள்.
இனி, வாழ்வில் சந்திக்கப்போகும் துக்ககரமான உணர்ச்சிப் பதிவுகளையும் மனம் உறிஞ்சிக் கொள்ளும். அது, துக்ககரமயமானதாக மாறும். விளைவு - துக்கமாயிருப்பீர்கள்.
துக்கத்திலிருந்து விடுபட, தப்பித்துக்கொள்ள, ஒரே வழி, உணர்ச்சிப் பதிவுகள் மனதில் நுழையவிடாமல் தடுப்பதுதான் வழி. புரிந்ததாம்மா.” என்றோம்.
"ஆம்" என தலையசைத்தார்.
பாசமும், வெறும் காதலும் அது அது அனுபவிக்கப்பட வேண்டிய நேரத்தில் மட்டுமே அனுபவிக்கப்பட வேண்டும். அவை பதிவுகளாக மாறக்கூடாது.
நம் வாழ்நாளின் பெரும்பான்மையான நேரங்களில், வெறுமையை உணர்கிே றாம். அந்த நேரங்களிலிருந்து தப்பிக்க, உணர்ச்சிப் பதிவுகளை நினைத்து நினைத்துக் காலந்தள்ளுகிறோம். அதனால், அது வாழ்வின் அவசியமான ஒன்றாக நமக்குத் தெரிகிறது.
நல்ல, கெட்ட உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்ளும் நிமிடங்களில், அவற்றை முழுமையாக அனுபவித்தால் போதும், அவை உணர்ச்சிப்பதிவுகளாக மாற்றப்படுவது தடுக்கப்பட்டுவிடும். மனதில், மனித உருவங்கள் உணர்ச்சிச் செறிவோடு குவிக்கப்படுவது தடுக்கப்பட்டுவிடும். மனம் லேசாக இருக்கும்.
உணர்ச்சிப்பதிவுகள் சேகரமாகாவிட்டால், மனம் ஸ்தம்பிக்காது. மனம் சோர்வடையாமல் மிக உற்சாகமாகவே இருக்கும்.
உற்சாகமாக இருப்பவருக்கு, உணர்ச்சிப் பதிவுகளை நினைத்துக் காலந்தள்ள வேண்டிய ஒரு சூழல் வர வாய்ப்பேயில்லை.
பாசம், வெறுப்பு வரும்போது, அதில் முழுமையாய் இருக்கலாம். அடுத்த நிமிடமே அந்த உணர்ச்சிகளின் பாதிப்புகளிலிருந்து மீண்டு வாழலாம். சுதந்திரமாக இருக்கலாம்.
உணர்ச்சிகளை உள்மயமாக்காமல் தடுத்துவிட்டால், துக்கமேயில்லாத உற்சாகமான வாழ்க்கை சாத்தியமாகும்.
மகா வாக்கியம்
“உணர்ச்சிவசப்படாதீர்கள், உணர்ச்சிமயமாகுங்கள்.”
கிருஷ்ணருக்கும்
கோபம் வரும்,
புத்தருக்கும்
பாசம் வரும்,
அன்பு பொங்கும்.
கிருஷ்ணரும், புத்தரும்
பித்தனாக மாட்டார்கள்.
உணர்ச்சிப்பதிவுகள் எனும்
பித்தம் ஏறவிடமாட்டார்கள்.
நம்மூர் மனிதருக்கும்
கோபம் வரும்...
பாசம் வரும்... பொங்கும்.
பித்தம் தலைக்கேற,
பித்தனாவார் அந்த நிமிடத்திற்கு.
காரணம்,
உணர்ச்சிகள் வருவதும்
அவர் கட்டுப்பாட்டில் இல்லை.
அது போவதும்
அவர் கட்டுப்பாட்டில் இல்லை.
உணர்ச்சிகள் வரும்போது,
உணர்ச்சிவசப்படாதீர்கள்.
உணர்ச்சிமயமாகுங்கள்!.
உணர்ச்சிகளின் உச்சம் தொடுங்கள்!
உணர்ச்சிகள் பதிவாகாது.
ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன என் சகோதரரைப் பற்றிய நினைவுகள் என்னை வாட்டுகிறது. என் சகோதரரின் ஆவி செய்யும் வேலையா இது?
-மேனகா, பூண்டி
இந்த ஐந்து வருடங்களுக்குள், உங்களுக்குத் தெரிந்த பலர் இறந்திருப்பார்கள். அவர்களின் நினைவுகள் உங்களைத் தொந்தரவு செய்யவில்லையே. அவர்களின் ஆவிகள் மட்டும் நாகரிகமாக நடந்து கொள்வதேன்.
மற்றவர்கள், உங்கள் மனதில் குடியிருக்கும் சாதாரண மனித உருவங்கள். உங்கள் சகோதரர் மீது நீங்கள் கொண்டிருந்த அதீத பாசம் எனும் உணர்ச்சிப்பதிவின் செறிவு அதிகம் .
அதனால்தான் ஐந்து வருடங்களாகியும் விடுபட முடியாமல் தவிக்கிறீர்கள்.
இதற்குத் தீர்வு, சகோதரரை வெறுப்பது அல்ல. வெறுத்தால் அது இன்னொரு உணர்ச்சிப்பதிவாக மாறிவிடும். அவரின் நினைவுகளை அசையாமல் பிடித்திருக்கும் இன்னொரு நங்கூரமாக மாறிவிடும்.
தீர்வு...
சகோதரரைப்பற்றிய நினைவுகள் வரும் நிமிடங்கள்தான் முக்கியமானவை.
அவை வந்து, உங்களைத் துக்கத்தில் ஆழ்த்தும்வரை அனுமதிக்காதீர்கள். அமைதி காக்காதீர்கள்.
சகோதரரைப்பற்றிய சாதாரண நினைவுகள்தான் முதலில் வரும். அதுதான் விதை.
அது ஆரம்பிக்கும் போதே, கவனிக்க ஆரம்பியுங்கள்.
அந்த உணர்ச்சிப்பதிவுகள் உங்கள் மன நிம்மதியை கவ்வும் முன், உங்கள் விழிப்புணர்வால் அதைக் கவ்வுங்கள்.
தொடர்ந்து இந்த தியானத்தை செய்யுங்கள். சில நாட்களிலேயே வேதனை தரும் உணர்ச்சிப்பதிவுகள் எரிந்து ஆவியாகிவிடும். ஆவித்தொல்லை நின்றுவிடும்.
வாழ்க்கைப் பிரயாணம் உணர்வுகளைப் பொருத்தது
ஒரு அம்மா ஆஸ்ரமத்திற்கு வந்தார். “ஒவ்வொரு நாளும், ‘நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்' னுதான் தோணுது. எழுந்ததும் தோணும் முதல் எண்ணமே இது தான்.
அதோடுதான் என் பொழுதே துவங்குகிறது. ஒவ்வொருமணி நேரமும் ஆக ஆக, நரக வேதனையாக இருக்கிறது. என்னோட பிரச்சினைக்குத் தீர்வே கிடையாதா?" என்று கேட்டார்.
“என்னம்மா உங்கள் பிரச்சினை...
உங்கள் பிரச்சினைகளை முதலில் தெளிவாகச் சொல்லுங்கள். அப்போதுதான், உங்களுக்கு என்னால் முடிந்த தீர்வை தர முடியும்” என்று சொன்னோம்.
உங்கள் பிரச்சினைகளை
முதலில் தெளிவாகச்
சொல்லுங்கள்.
அப்போதுதான், உங்களுக்கு
என்னால் முடிந்த தீர்வைத்
தர முடியும்
அப்போது அந்த அம்மா சொன்னார்,
“ஒன்றா, இரண்டா - எதைன்னு சொல்வேன்.
எல்லாமே பிரச்சினைதான்.
நான் எதைச் செய்தாலும் அது
வினையாகிவிடுகிறது. நான் ஓர் அதிர்ஷ்டம்
இல்லாதவள். என்னை ஒதுக்குகிறார்கள்.
ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில்
இருக்கிறேன்,” என்று அழத் துவங்கினார்.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். இது ஏதோ ஒருவரின் பிரச்சினை அல்ல. பெரும்பாலானோரின் பிரச்சினையும் இதுதான்.
‘நரக வேதனையாக இருக்கிறது. எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது,’ என்று சொல்வதெல்லாம், ஒரே ஒரு புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இருப்பதனால்தான்.
உண்மையில் நாம் நரகத்தில் வாழ்வதும் அல்லது சொர்க்கத்தில் வாழ்வதும், நம் கையில்தான் இருக்கிறது. சொர்க்கத்தில் வாழ்வதென்றால் ஏதோ இறந்த பிறகு வாழும் வாழ்க்கை கிடையாது.
நரகத்தையும், சொர்க்கத்தையும் நாம்தான் உருவாக்குகின்றோம். எங்கு சென்றாலும், நாம் வசிப்பதற்கு இந்த இரண்டையும் உடன் எடுத்துச் செல்கிறோம்.
நரகங்கள், சொர்க்கங்கள் என்பது வேறொன்றுமில்லை. நமக்குள் நாமே உருவாக்கிக் கொள்ளும் எண்ண ஓட்டங்கள், மந்திரங்கள் போன்று அவை மீண்டும் மீண்டும் நமக்குள் உருவாக்கும் உணர்ச்சிகளின் தொகுப்பு, எண்ணங்களின் தொகுப்புதான் நம் மனம்.
எறும்புகள் உணவு சேகரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். எறும்புகளைப் பார்த்தீர்களென்றால், அவை கூட்டம் கூட்டமாக வாழும்.
உணவு இருக்கும் இடம் தேடி, வேலைசெய்யும் எறும்புகள் ‘Worker ants’ எனப்படும் எறும்புகள் முதலில் செல்லும்.

நரகங்கள், சொர்க்கங்கள்
என்பது வேறொன்றுமில்லை.
நமக்குள் நாமே உருவாக்கிக் கொள்ளும்
எண்ண ஓட்டங்கள்.
உணவிருக்கும் இடத்தை அடைந்ததும், அங்கிருக்கும் மிகுதியான உணவிலிருந்து சில துணுக்குகளை மட்டும் மாதிரி உணவாக எடுத்து வரும்.
உணவு இருக்கும் இடத்திலிருந்து, தான் தங்கியிருக்கும் இடத்தை நோக்கித் திரும்பும் வழியில், குறிப்பிட்ட இடைவெளிவிட்டு, இந்த வேலை செய்யும் எறும்புகள், ஒரு குறிப்பிட்ட வரைபடத்தை கோடாக வரைந்து கொண்டே செல்லும்.
எறும்புகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து டூபர்சுரபி (Dufour gland) எனும் சுரப்பி இருக்கிறது.
இந்த சுரப்பியிலிருந்து சுரக்கும் திரவம், பிசுபிசுப்புத்தன்மை வாய்ந்தது.
வேலை செய்யும் எறும்புகள் தன் இடம் நோக்கித் திரும்பும்போது, இந்த திரவத்தைச் சுரக்கும். இந்த திரவம் இடைவெளி விட்டு ஒரு கோடாக குறிக்கப்பட்டு வரும்.
தன் இருப்பிடத்தை அடைந்ததும், தன் சக நண்பர்களிடம் உணவு இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலையும், துணுக்கு உணவினையும் தந்தி (antennae) வழியாக செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும்.
பின் சக நண்பர்களோடு, கூட்டாகச் சேர்ந்து, உணவு இருக்கும் இடம் தேடி, அதே வரிசையில் செல்லும். அந்தப் பாதையில் செல்லும் ஒவ்வொரு எறும்பும், தன் உடலிலிருந்து திரவத்தைச் சுரந்து அடர்த்தியான பாதையை உருவாக்கிக் கொள்ளும்.
நம்முடைய உள்ளுலகிற்குள்
தொடர்ந்து குறிப்பிட்ட
உணர்ச்சிகள், உணர்வுகள்
சுரக்கப்பட்டுக் கொண்டே
இருக்கிறது.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தத்
திரவத்தைப்போல் நம்முடைய உள்ளுலகிற்குள்
தொடர்ந்து குறிப்பிட்ட உணர்ச்சிகள்,
உணர்வுகள் சுரக்கப்பட்டுக் கொண்டே
இருக்கிறது.
அவற்றைப் பாதையாகக் கொண்டுதான்,
உள்ளே வாழ்வதும், வெளியே சிரிப்பதும்,
புழுங்கி அழுவதும் நிர்ணயிக்கப்படுகிறது.
துக்கமான உணர்வுகள் சுரந்தால், மீண்டும் மீண்டும் அதே பாதைக்கு எறும்பு ஈர்க்கப்படுவதுபோல், நீங்களும் துக்க உணர்வைத் தாண்டி வேறு பாதையில் செல்ல முடியாது.
எறும்பின் பிரயாணம், அது திரவம் சுரக்கும் இடத்தைப் பொருத்தது. உங்கள் வாழ்க்கையின் பிரயாணம், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உருவாக்கும் உணர்வுகளின் குணத்தைப் பொருத்தது.
ஆனந்தமயமான உணர்வுகளைச் சுரக்கக் கற்றுக் கொண்டால், மீண்டும் மீண்டும், அதே பாதையில்தான் செல்ல முடியுமேயன்றி, துக்கத்திற்குள் விழ முடியாது.
எறும்புபோல் வேலை செய்யும் இரும்பு மனத்திற்குள், ஆனந்தம் அரும்ப, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆனந்தமான உணர்வுகளை சுரக்கச் செய்யுங்கள்.
தியானம்
நாம் ஒவ்வொருவரும் ஆனந்தமாக வாழத்தான் விரும்புகிறோம். இதில் வேறு வாய்ப்பு என்பதே கிடையாது. "இல்லை, இல்லை, நான் துக்கத்தில்தான் வாழ்வேன்" என்று விரும்புகிறவர்கள், ஏன், அதுபோல எண்ணுகிறவர்கள், ஒருவர்கூட இந்த உலகத்தில் இல்லை.

> ஆனந்தமயமான உணர்வுகளைச் சுரக்கக் > கற்றுக் கொண்டால், மீண்டும் மீண்டும் அதே > பாதையில்தான் செல்ல முடியுமேயன்றி, > துக்கத்திற்குள் விழ முடியாது.
ஆனந்தமாக வாழ்வதற்கு, நீங்கள் இந்த ஒரு தியானத்தைச் செய்தால்போதும், ஆனால், தினமும் செய்ய வேண்டும். இந்தத் தியானத்தை செய்து முடிப்பதற்கு 5 நிமிடங்கள் போதும்.
காலையில் கண்விழித்ததும் வரும் முதல் எண்ணத்தை நீங்கள் உருவாக்குங்கள்.
நீங்கள், உங்கள் எண்ணங்களுக்கு மாஸ்டர் ஆக இருங்கள். உங்கள் மனதிற்குச் சொல்லுங்கள், “நான் இன்று ஆனந்தமாக இருப்பேன்,” என்று.
21 முறை சொல்லுங்கள்.
இவ்வார்த்தைக்கு இருக்கும் சக்தி, உங்கள் எண்ணங்களின் அமைப்பையே மாற்றும். உங்களுக்குள் ஆனந்தமயமான உணர்வுகளைச் சுரக்கத்துவங்கும். “இன்று ஏன் வாழ்கிறேன்?” என்ற எண்ணம் காணாமல் போய், “ஆஹா! என்ன பாக்கியம்? இன்று நான் ஆனந்தமாக இருக்கிறேன்” என்று படுக்கையிலிருந்து ஆனந்தத்தோடு குதித்து எழுவீர்கள்.
ஆனந்தமாய் இருப்பீர்கள்.
தேவர்களாகுங்கள்
* ஓம்காரீஸ்வர் மலைக்குகைகளில் தவம் செய்து கொண்டிருந்த காலம் அது.
ஒருநாள், பொழுது முழுதாய் சாய்ந்த மங்கலான வெளிச்சத்தில், இயற்கையை ரசித்தப்படி சிறு மலைக் குன்றில் அமர்ந்திருந்தேன். ஆள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில், தூரத்தில் இருக்கும் மரத்தடியிலிருந்து, வயதான ஒருவர் கம்பளியைப் போர்த்திக் கொண்டு, என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஆளில்லாபகுதியில், புதிதாய் ஒருவரைக்கண்டதும், ஆச்சரியமடைந்தேன். 'யார் அவர்? அவருக்கு என்ன வேண்டும்? வழிதவறி இங்கு வந்துவிட்டாரோ?' என சிந்தித்தபடி குன்றிலிருந்து குதித்தேன்.
குதித்தபின்தான் தெரிந்தது, அது மனிதர் அல்ல கரடி!
இருள் அதிகமாக இருந்ததால், இரண்டு
காலில் நடந்து வந்த கரடி, மனிதர் போல
தென்பட்டது.
எனக்கும் கரடிக்கும் சில அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தது. என் உடலைக்
எனக்கும் கரடிக்கும் சில அடிகள்
மட்டுமே இடைவெளி இருந்தது.
என் உடலைக் கரடியிடமிருந்து
காப்பாற்ற, எந்த வழி வகையும்
புரியவில்லை.
கரடியிடமிருந்து காப்பாற்ற, எந்த வழிவகையும் புரியவில்லை.
காரணம், என் முன்னால் கரடி. பின்னால் பாறை!
அந்த நிமிடத்தில், என்னுள் பதட்டம் இல்லாமல் இருக்க முடிந்ததால், தெளிவாய் யோசிக்க முடிந்தது. தளர்வாய் இருக்க முடிந்தது.
என்னால் எதுவும் செய்ய முடியாது என்பது ஆழமாய் புரிந்ததால்... அந்தக் கரடியை நேருக்கு நேராகப் பார்த்தேன், எந்தச் சலனமுமில்லாமல்!
சில நொடிகள் கரடியும் என்னைப் பார்த்தது! பின் தலையை இடது புறமும், வலது புறமும் ஆட்டிவிட்டு, சட்டென திரும்பிச் சென்றது.
"எனக்கு எந்தப் பாதகமும் செய்யாமல் அந்தக் கரடி சென்றது எப்படி?" என்பது அந்த நிமிடத்தில் எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது!
★ ஒரு ஜென் ஞானி சீடர்களோடு அமர்ந்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.
அந்தக் கூட்டத்துக்குள் திடீரென மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்து விட்டது.
ராஜநாகத்தைப் பார்த்த பீதியில் கூட்டம் கலைந்தோடியது.
தப்பித்தோடும் சீடர்களோடு, ஜென் ஞானியும் வேக வேகமாக ஓடினார்.

அவசர, அபாய சூழ்நிலை உருவானதும், சரியாகச் சிந்திக்க முடியாமல், பீதி தூண்டத் தப்பித்தோடுவது, மனக்குழப்பத்தின் வெளிப்பாடு. இது நரம்பு மண்டலத்திற்குக் கெடுதி. இதனால் உயிர்ச்சக்தி விரயமாகும். மனிதர்கள் இதிலிருந்து மீள வேண்டும்.
நிதானத்தோடு, அமைதியின் உச்சத்தில் வாழும் ஞானியும், தங்களைப் போலவே தப்பியோடுவது, சீடர்களுக்கு மிகவும் புதிரான ஒன்றாகத் தோன்றியது, சந்தேகத்தைக் கிளப்பியது.
கடைசியாக ஒரு மரத்தடிக்கு வந்து எல்லோரும் ஓய்வாக அமர்ந்ததும், ஒரு சீடர், “நாங்கள் பயந்தோடுவது நியாயமானது. ஞானமடைந்த நீங்களும் பயந்தோடினால், அப்புறம் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?” என படபடக்கும் குரலில் கேட்டார்.
ஜென் ஞானி, “நீ பயந்தோடினாய். நான் தப்பித்தோடினேன்.
நான் உடலைக் காப்பாற்ற ஓடினேன். நீ பீதியால் தூண்டப்பட்டு ஓடினாய். அதனால் தான், நான் ஓடும்போதும், இங்கு வந்தபின் நிம்மதியாகவே இருக்கிறேன். நீங்கள் இன்னும் படபடப்பிலேயே இருக்கிறீர்கள்.”
உடலைக் காப்பாற்றுவதற்காகச் சிந்தித்து செயல்படுவதும், தப்பிப்பதும் நம் தெளிவின் வெளிப்பாடு. இது தேவையான நடவடிக்கை.
அவசர, அபாய சூழ்நிலை உருவானதும், சரியாகச் சிந்திக்க முடியாமல், பீதி தூண்டத் தப்பித்தோடுவது மனக்குழப்பத்தின் வெளிப்பாடு. இது நரம்பு மண்டலத்திற்குக் கெடுதி. இதனால் உயிர்ச்சக்தி விரயமாகும். மனிதர்கள் இதிலிருந்து மீள வேண்டும்.
ஓம்காரீஸ்வரர் மலைக் கரடி என்னைத் தாக்காமல் சென்றது எப்படி? என்ற கேள்விக்கு... சமீபத்தில் அறிவியல் பூர்வமான விளக்கம் ஒன்றைப் படித்தேன்.
விலங்குகளை வளர்ப்பது பற்றி மிக அழகாக விளக்கும் புத்தகம் அது.
மனிதர்களைப் போன்றே, விலங்குகளுக்கும் உள்ள தனிப்பட்ட உணர்வுகள், குணங்கள், விருப்பங்கள் பற்றி அப்புத்தகத்தில் அழகாக விளக்கியிருந்தார்கள்.
உடலைக் காப்பாற்றுவதற்காக
சிந்தித்து செயல்படுவதும்,
தப்பிப்பதும் நம் தெளிவின்
வெளிப்பாடு.
இது தேவையான நடவடிக்கை.
“ஒரு விலங்கு நம்மைத் தாக்க, நம் உடலில் இருந்து வெளிப்படும் ஒரு குறிப்பட்ட வாசனைதான் காரணம்.
பயம் நம்மைப் பற்றியதும், நம் உடலுக்குள் பல மாற்றங்கள் நிகழ்கிறது. பயம் வரும்போது நம் உடலில் இருந்து வெளிப்படும் குறிப்பிட்ட வேதிப்பொருளின் வாசனை, அருகே உள்ள மிருகத்தைச் சீண்டுகிறது.
விளைவு-மிருகங்கள் மனிதரைத் தாக்குகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.
தொடர்ந்து செய்த தியானங்கள், என்னுள் நிதானத்தை முழுமையாக மலரச்செய்திருந்தது.
பயத்தாக்குதல் இல்லாத ரம்யமான உணர்வு நிலையிலேயே வாழ ஆரம்பித்தபின்தான் இச்சம்பவம் நிகழ்ந்தது. கரடியைப் பார்த்ததும் என்னுள் பயத்தாக்குதல் நிகழவில்லை.
உடலில் பயத்தாக்குதல் நிகழாத அளவுக்கு நிதானத்தை நம்முள் பெருக்கி விட்டால்... நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கமாட்டோம். நம்மையும், மற்றவரையும் சங்கடத்தில் ஆழ்த்தும் தேவையற்ற வேதிப்பொருட்களும், ஹார்மோன்களும் நம்முள் சுரக்காது.

உடலில் பயத்தாக்குதல் நிகழாத அளவுக்கு நிதானத்தை நம்முள் பெருக்கி விட்டால்... நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கமாட்டோம். நம்மையும், மற்றவரையும் சங்கடத்தில் ஆழ்த்தும் தேவையற்ற வேதிப்பொருட்களும், ஹார்மோன்களும் நம்முள் சுரக்காது.
பதஞ்சலி யோக சூத்திரம் சொல்லும் அருமையான வாழ்வியல் தத்துவம் ஒன்று "வன்முறை துளியுமில்லா மனிதரின் அருகாமை, மிருகங்களைக்கூட ஆனந்தமடைய செய்யும்"
உங்களிடம் உள்ள வன்முறை, தடுமாற்றம் ஆகியன உங்களின் கவனத்திற்கு (அதாவது மேல் மனத்தின் கவனத்திற்கு) தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், அவை தொடர்ந்து உங்கள் உடலில் இரசாயன மற்றங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றன.
⋆ உங்களின் அருகாமையை மனிதர்கள் எப்படி உணர்கிறார்கள்?
⋆ பயம், கோபம், காமம், வெறி போன்ற உணர்வுகள் உங்களை ஆட்கொண்டிருக்கும்போது உங்களிடமும், மற்றவர்களிடமும் அவை என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன?
உடல் மாற்றங்கள், வாசனைகள், ஐந்தறிவு மிருகத்தையே பாதித்தால், ஆறறிவு படைத்த உங்களின் சுற்றத்தாரை எவ்வளவு பாதிக்கும். சிந்தியுங்கள்.
உங்கள் வீடு உங்களுக்கு சொர்க்கமா? நரகமா?
பதில்: உங்களின் நல்ல கெட்ட பாதிப்புகளைப் பொருத்தது.
வீடு சொர்க்கமாக மாற...
நீங்கள் தேவர்களாக வேண்டும். தேவர்களாக நீங்கள் மாற, உங்களின் அருகாமை மற்றவரை ஆனந்தத்துக்குள் ஆழ்த்தும் அளவுக்கு, நீங்கள் அருமையானவராக, எளிமையானவராக மாற வேண்டும்.
நீங்கள் இருக்குமிடத்தை ஆனந்த மயமாக்கும் சொல், செயல், பாவனைகளைத் தியானியுங்கள் வெளிப்படுத்துங்கள். தேவர்களாவீர்கள்.
அந்தரங்கப் போர்
“நர்ஸ்! என்னாச்சு இவருக்கு. இன்னைக்கு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றல்லவா இருந்தோம். எப்படி திடீரென்று டெம்பரேச்சர் அதிகமாச்சு,” என்று பதட்டமாக மருத்துவர் கேட்டார்.
நர்ஸ் சிரித்துக்கொண்டே, “அது ஒண்ணுமில்ல சார்... ஐஞ்சு நிமிஷத்துக்கு முன்னால்தான் இவரோட மனைவி வந்து இவரைப் பார்த்துப் பேசிவிட்டுப் போனார்கள்.” என்றார்.
“அப்படியா!” எனக் கேட்டதும் சிரித்த மருத்துவர், அடுத்த நோயாளியைப் பார்க்க சென்றுவிட்டார்.
நோய்கள் என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது போல், சச்சரவும், சகஜமான வாழ்வின் ஓர் அம்சம் என்று மாறிவிட்டது - விஞ்ஞானம் விண்ணைத் தொட்டுவிட்ட இச்சமுதாயத்தில்!
| வெளியே தோன்றும் சண்டைசச்சரவுகளுக்கு மூலகாரணம், உள்ளே எங்கோ ஒளிந்துகொண்டிருக்கின்றது எனத் தோன்றவில்லையா? | சச்சரவுகளுக்கு சிலர் முட்டாள்தனமாக நியாயம் கற்பிக்கவும் செய்கிறார்கள். வேதனை மிகு விஷயமிது. அதாவது, ஓடையென்றால் நீர் சலசலக்குமாம். அதேபோல்தான், வாழ்வு என்றால் சச்சரவும் சலசலக்குமாம். ஒன்றை நாம் யோசிக்க வேண்டும். ஓடை சலசலத்து ஓடினாலும், அதன் குளுமை மாறுவதேயில்லை. |
ஆனால், நம் சச்சரவுகள், கொதிநீர் ஓடைகளில், நீர் கொதிப்பதால் ஏற்படும் சலசலப்புக்குச் சமமானவை.
சண்டை சச்சரவுகளில் சிக்கித் தவித்த நிமிடங்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். உணர்ச்சிகள் பொங்கியதால் இரத்தம் கொதித்தது, கோபத்தால் சிவந்த கண் தகித்தது, உடல் முழுவதும் இனம்புரியாத சூடுபரவியது நினைவுக்கு வரும்.
இவை உணர்த்த முயற்சிப்பதுதான் என்ன?
வெளியே தோன்றும் சண்டைசச்சரவுகளுக்கு மூலகாரணம், உள்ளே எங்கோ ஒளிந்துகொண்டிருக்கின்றது எனத் தோன்றவில்லையா?
'ஆம்,' காரணம், அந்தரங்கத்தில்தான் பதுங்கிக் கொண்டிருக்கிறது. வெளியே வாய்ப்புக் கிடைக்கும்போது, உடல் உணர்ச்சி மூலம் சச்சரவாகப் படையெடுக்கிறது.
அந்தப் பேருந்தில் சலசலப்பு. 'திற... மூடு... திற...மூடு' என்ற இரண்டு வார்த்தைகள் சலசலப்புக்கிடையில் சப்தமாகக் கேட்பது.
பேருந்தை நிறுத்தினார் நடத்துனர், நடக்கும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக. ஓர் இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்த இருபெண்களுக்கிடையில்தான் சண்டை. கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த நடத்துனர் கேட்டார், "என்னம்மா பிரச்சனை?".
முதலாமவர், "ஐயா எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. குளிர்காற்று வேறு வீசுகிறது. எனக்குக் குளிர்காற்றுப் பட்டால் போதும், இரைப்பு வந்துவிடும்.

ஓடை சலசலத்து ஓடினாலும், அதன் குளுமை மாறுவதேயில்லை. ஆனால், நம் சச்சரவுகள், கொதிநீர் ஓடைகளில், நீர் கொதிப்பதால் ஏற்படும் சலசலப்புக்குச் சமமானவை.
இறைப்பு வந்தால், மிகக் கொடூரமாகவே எனக்கு வரும். அதனால் ஜன்னல் கதவை மூடி வைக்க வேண்டும். இல்லை... செத்துப்போவேன்," என்றார் பிடிவாதமாக.
இரண்டாமவர், "ஐயா, இவருக்காவது ஆஸ்துமாதான். எனக்கு மூச்சு முட்டிக் கொள்ளும் வியாதி இருக்கிறது. சுவாசக்காற்றுக் கொஞ்சம் குறைந்தாலும், எனக்கு மூச்சடைத்துக் கொள்ளும். மூர்ச்சையாகிவிடுவேன். அதனால் ஜன்னல் கதவைத் திறந்துதான் வைக்க வேண்டும்" என்றார் விடாப்பிடியாக.
பேருந்தில் இருப்பவர்கள் அனைவருமே இந்தச் சண்டையை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெண்களுக்குப்பின் இருக்கையில் அமர்ந்திருந்த நடுத்தரவயதுக்காரர் அமைதியாக வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்.
நடத்துனர், "இப்படி இருவரும் அடம்பிடித்தால் எப்படி? யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால்தானே தீர்வு கிடைக்கும்," என்றார் பரிதாபமாக
இருவருமே விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. ஒருவர் கதவைத் திறக்க, இன்னொருவர் கதவை மூட, திற... மூடு... திற... மூடு... என்ற சப்தங்கள் திரும்பத் திரும்ப ஒலிக்க ஆரம்பித்தது.
பின் இருக்கையில் இருந்து ஓர் சப்தம், "ஐயா! நான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லட்டுங்களா" என்றார் நடத்துனரிடம், அந்த நடுத்தரவயதுக்காரர் பவ்யமாக.
"சொல்லுங்களேன்", என்றார் நடத்துனர்.
அடுத்த நொடியே முகம் மாறிய நடுத்தர வயதுக்காரர், மிகக் கோபமாக, "முதலில் ஜன்னலை மூடுங்கள் சார். மூச்சடைச்சு மூர்ச்சையாகி இவர் சாக ட்டும். அடுத்து, ஜன்னலைத் திறந்து வைங்க சார். ஆஸ்துமா இறைப்பெடுத்து அவர் சாக ட்டும். அப்புறம் நாம் நிம்மதியாக வண்டியக் கிளப்பலாம்," என்றார்.
அவரின் தீர்ப்பைக் கேட்டதில்,
அங்கிருந்த அனைவருமே திடுக்கிட்டார்கள்.
நடத்துனர், "ஐயா என்ன சொல்றீங்க...?"
என்றார் குழப்பமாக.
வேடிக்கையான கதைக்குள்
புதைந்திருக்கும் வேதனையை
ஆராயுங்கள் - அந்தரங்கப்
போர் வெளிச்சத்துக்கு வரும்.
நடுத்தர வயதுக்காரர், "பின்ன என்ன பண்றது. எனக்குத் தெரிந்து, கடந்த பத்து வருஷமாக, இவங்க இரண்டுபேரும் எங்க ஒண்ணாப் போனாலும் இப்படித்தான். ஏதாவது ஒரு சண்டை போட்டுக்கறாங்க", என்று முடித்தவர் பேருந்தை விட்டு வேகமாக கீழே இறங்கிச் சென்றார்.
யார் அவர்? ஏன் இப்படி பேசினார்? இப்போது ஏன் இறங்கிச் செல்ல வேண்டும்? என்று மற்றவர்கள் கேட்டுவிடக்கூடாதே என்பதற்காக இருபெண்களில் ஒருவர் சொன்னார், "அவர் எங்களுடைய கணவர்"
வேடிக்கையான கதைக்குள் புதைந்திருக்கும் வேதனையை ஆராயுங்கள்
- அந்தரங்கப் போர் வெளிச்சத்துக்கு வரும். முதல் மனைவியோடு வாழ்ந்த வாழ்க்கைத் திருப்தியளிக்கவில்லை. இரண்டாவது முறையாக மணமுடித்தும் திருப்தியில்லை. வேதனை இன்னும் கொஞ்சம் அதிகமானதுதான் மிச்சம்.
சண்டைகளும் சச்சரவுகளும் இல்லாத, வேதனையில்லா வாழ்க்கையைத் தான் எல்லோரும் தம் குலதெய்வத்திடம் வேண்டுகிறோம். ஆனால், திருப்தியாக வாழ்ந்துவிடுவது என்ற முடிவு, கனவோடு மாத்திரமே நின்றுகொள்கிறது.
நிஜத்தில், ஏதேதோ காரணங்களுக்காக, எப்படி எப்படியோவெல்லாம், நமக்கு சச்சரவுக்கான, சண்டைக்கானக் காரணம் கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது. நாளாக நாளாகத் திருப்தியான வாழ்க்கை என்ற கனவுகூட மனதிலிருந்து கலைய ஆரம்பிக்கிறது.
இவ்வளவுக்கும் காரணம், ஒவ்வொருவருக்குள்ளும் தொடர் நிகழ்வாக நிகழ்ந்து கொண்டிருக்கும் மனதின் பனிப்போர்தான்.
காலப்போக்கில், அடிமனத்தில் சேர்ந்துவிட்ட எல்லா எதிர்மறை நிகழ்வுகளும், துக்கங்களும் புகைந்து கொண்டேயிருக்கின்றன - பற்றவைத்து வெடிக்கக் காத்திருக்கும் வெடி போல்!

உள்ளே கொந்தளிக்கும் உணர்வுக் கலவரம்
(அந்தரங்கப் போர்) ஓயாதவரை,
சச்சரவுகள் ஓயாது.
நமக்குச் சொந்தமானவர்கள், நெருங்கியவர்கள் என்று சில மனிதர்கள் கிடைத்ததும், மனதின் அந்தரங்கப் பகுதியில் தூங்கிக் கொண்டிருக்கும் எல்லாமே விழித்துக் கொள்கின்றது. அன்பு, காதல், பாசம் என்று நாம் அழைக்கும் எல்லாமே, மனதின் அந்தரங்க கதவுகளோடு முடிச்சுப் போடப்பட்டிருக்கிறது.
மனிதன் நினைக்கும் அன்பு, காதல், பாசம் இதில் ஏதாவது ஒன்று வெளிவரும்போது, அந்தரங்கக் கதவு திறந்து கொள்கிறது. உள்ளே அடங்கிப்போய், புகைந்து கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட உணர்ச்சிகள் சச்சரவாகவும், சண்டையாகவும் வெடிக்கிறது.
அந்தரங்கப்போர் வெளிச்சண்டையாக வெளிப்படுகிறது.

தியானம்
ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
‘சண்டை சச்சரவுகள் ஓயாது’ - அந்தரங்கத்தில் புதைந்திருக்கும் எதிர்மறை உணர்ச்சி கள் தீரும் வரை.
இந்த உண்மையை மனதில் இருத்திக்கொண்டு மனதார, உங்களுக்கு நெருங்கிய உறவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இந்த வாய்ப்பை மாத்திரம், புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி ஏற்படுத்தினால், கொஞ்சநாளில், அந்தரங்கக் குப்பைகள் குறைந்துவிடும். அந்தரங்கப் போர் முடிவுக்கு வரும்.
இதற்குப் பின், உண்மையான அன்பு மலரும். வாழ்க்கை என்னும் ஓடை சந்தோஷச் சிணுங்கல்களோடு குளுமையாக ஓட ஆரம்பிக்கும்.
வெளியே உலகைக் காண்கிறோம். இல்லை...உள்ளே கனவுலகைக் காண்கிறோம்.
வெளியே பேசிக்கொண்டிருக்கிறோம், வார்த்தைகளால், இல்லை... உள்ளே மனதில் பேசுகிறோம்.
எண்ணங்களால் வெளியே கொந்தளிக்கிறோம், இல்லை...உள்ளே கொந்தளிக்கிறோம்.
கண்ணைத் திறந்தாலும், மூடினாலும் ஏதோ ஒன்று நம்மைத் தொடர்ந்து உள்ளிருந்து ஆட்டுவித்துக் கொண்டேயிருக்கிறது.
எந்த ரகம் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, அந்தரங்கத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் அது எது?
✦ ஒரு மனிதர், தன் மனதின் அந்தரங்க கஜானாவில் சேர்த்து வைத்திருப்பதைப் பொருத்து, அவர் எந்த ரகம் என்று தீர்மானிக்கப்படுகிறார்.
✦ உள்ளே கொந்தளிக்கும் உணர்வுக்கலவரம் (அந்தரங்கப் போர்) ஓயாதவரை, சச்சரவுகள் ஓயாது.
