மரண ஞானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மரணம் ஆனந்தத்தின் வாசல்
* உங்களைப் பொருத்தளவு மரணம் என்பது என்ன?
க்ஷண நேரம் ஆனந்தத்தின் வாசல் திறக்கப்படும் காலம்.
* மரணத்தில் என்ன நிகழ்கிறது?
உடல் இறக்கிறது.
உயிர் பிறக்கிறது.
மனம் துடிக்கிறது.
இம்மூன்றையும் ஓய்வாய்,
ஆத்மா வேடிக்கை பார்க்கிறது.
* மதங்கள் மரணத்தின் ரகசியத்தை மறைத்தது ஏன்?
முதிர்ந்த மதங்கள் மறைத்ததில்லை. மறைத்த மதங்கள் முதிர்ந்தவையல்ல.
* முதிர்ந்த மதங்கள் மரணத்தை எப்படி அணுகுகின்றன?
முதல் விஷயம் மரணத்தைக் காட்டிப் பயமுறுத்தமாட்டார்கள்.
உங்களைப் பொருத்தளவு
மரணம் என்பது என்ன?
க்ஷண நேரம் ஆனந்தத்தின்
வாசல் திறக்கப்படும் காலம்.
அடுத்தது, மரணத்தின் ரகசியங்களை ஞானமாகவும், தியானமாகவும் மாற்றித் தருவார்கள்.
⋆ இறந்ததும், நாம் அழிந்து விடுவோமா?
அழியமாட்டார்கள். அலைவார்கள்.
⋆ அலைவார்கள் என்றால்...?
உடலில்லா உயிர், உடல் தேடி அலையும்.
⋆ மரணத்தை ஆனந்தத்தின் வாசல் என நீங்கள் சொல்வது ஏன்?
தூக்கம் உற்சாகத்தின் வாசல். தூக்கத்தில், உடல் ஓய்வெடுத்துக் கொண்டு, அடுத்த நாளைச் சந்திக்கத் தயாராகிறது. அதுபோல, மரணத்தில், அடுத்த பிறவியைச் சந்திக்கத் தயாராகுகிறீர்கள். தூக்கம் சக்தியைத் தருகிறது. மரணம் புத்தியைத் தருகிறது.
⋆ மரணம், வாழ்வு பற்றி?
சாக பயப்படுபவர்கள் வாழவும் பயப்படுவார்கள்.
வாழ்வும், சாவும், வாழ்க்கைச் சக்கரத்தின் இரு விளிம்புகள். இனிமையாய் முழுமையாய் வாழ்ந்துவிட்டால், சாவு இனிமையாகிவிடும்.

> வாழ்வும், சாவும், வாழ்க்கைச் சக்கரத்தின் > இரு விளிம்புகள். > இனிமையாய், முழுமையாய் வாழ்ந்துவிட்டால், > சாவு இனிமையாகிவிடும்.
★ இனிமையாய், வாழ வழி என்ன?
நித்ய தியானம் ஒரு சிறந்த வழி.
★ மரணத்திற்கு முன் செய்ய வேண்டியவை என்னென்ன?
எதுவும் எடுத்துச் செல்ல முடியாது என்பதால், கர்மங்களைப் சேர்ப்பதை விட்டு விட்டு, கர்மங்களைக் கழிப்பது பற்றிச் சிந்தியுங்கள்.
★ கர்மங்களைக் கழிப்பதால் என்ன பலன்?
கர்மங்கள் எனப்படும் சம்ஸ்காரங்கள்தான், இனிமையான மரணத்தை கொடுமையான மரணமாக்கிவிடுகிறது.
★ சம்ஸ்காரங்கள் அவ்வளவு கொடுமையானவைகளா?
வளர்ந்த நகத்தை வெட்டினால் வலிக்காது. சதையோடு இருக்கும் நகத்தை வெட்டினால்... என்ன ஆகும்!?
சதையையும், நகத்தை இணைப்பது போல் உடலையும், உயிரையும் இணைப்பவை இந்த சம்ஸ்காரங்கள்.
சம்ஸ்காரங்களின் பிடி தளராவிட்டால், மரணகாலத்தில், உடலும் உயிரும் ஒன்றையொன்று பிரிய மகா அவஸ்த்தைக்குள்ளாகும்.
★ சம்ஸ்காரங்கள்?
வினைப்பதிவுகள். அதாவது, மனதில்
எழுதப்பட்ட நினைவுகள். அவை, உடலில்
வாழும் ஆசைகள், கோபங்கள், வலிகள்,
உணர்ச்சிகள், சுகங்கள்.
★ மரணத்திற்கும், அடுத்த ஜனனத் திற்கும் இடையில் எப்படி இருப்பேன்?
ஆசைகளின் தொகுப்புகளாய்,
இனிமையாய் வாழ வழி என்ன?
நித்ய தியானம் ஒரு சிறந்த வழி.
சம்ஸ்காரங்களின் தொகுப்புகளாய் உருவமற்ற சக்தியாயிருப்பீர்கள்.
⋆ ஆனந்தத்தின் வாசலை மரணத்தால் சந்திக்கிறோம் என்பதற்கு நிரூபணம் அல்லது விளக்கம் தர இயலுமா?
நிச்சயமாய்.
துக்கத்தின், வேதனையின் உச்சியில் உயிரை விடும் எல்லா மனிதர்களும், ஆனந்தமயமான குழந்தைகளாகப் பிறப்பதே அதற்கு ஆதாரம்.
குழந்தைகளும் ஞானிகளும் ஒன்றே. பெண்வீட்டுச் சீர் போல,
கடவுள் வீட்டுச் சீராக, மிதமிஞ்சிய ஆனந்த சக்தி, நம்மோடு அனுப்பப்படுவதால் தான், ஞானிகளுக்கு இணையாக குழந்தைகளும் ஆனந்தமாயிருக்கிறார்கள்.
⋆ மனிதர்கள், மிதமிஞ்சிய ஆனந்த சக்தியை மரணத்திற்குப் பின் சந்தித்தாலும், சாகும்போது எல்லோரும் படாதபாடுபட்டுத்தானே இறக்கிறார்கள்? இது ஏன்?
ஏற்கனவே குறிப்பிட்டது போல், உடலும் உயிரும் சம்ஸ்காரங்களால் பிணைக்கப்பட்டிருப்பதுதான் காரணம்.
⋆ மரணத்தில்...
நோயுற்று நொந்த உடல் “இனி என்னால் உன்னோடு வாழ முடியாது” என உயிரை விடுகிறது. “ம்... ம், முடியாது.

சம்ஸ்காரங்கள்?
வினைப்பதிவுகள். அதாவது,
மனதில் எழுதப்பட்ட நினைவுகள்.
அவை, உடலில் வாழும் ஆசைகள்,
கோபங்கள், வலிகள், உணர்ச்சிகள், சுகங்கள். இன்னும் உலகத்தில் அனுபவிக்க வேண்டிய ஆசைகள் நிறைய இருக்கிறது" என ஒவ்வொரு சம்ஸ்காரமும் உடலைவிட மறுக்கிறது. அதனால், வெளியே போகும் உயிரையும் அவை நிம்மதியாய் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை.
அவை, பிரிந்து கொண்டிருக்கும் உடலையும், உயிரையும், இணைக்க முயற்சிக்கின்றன.
அப்போது, உயிரின் உணர்வுகள் கிழிக்கப்படுவதால், மனிதர்கள் உயிரை விட, படாதபாடுபடுகிறார்கள்.
எப்படியோ பாடுபட்டு உடலை விட்டுப் பிரிந்த உயிர், அடுத்த உடலை எடுக்கும் இடைவேளையில், ஆனந்த சக்திக்குள் முங்கி எழுந்திருக்கிறது. உயர்ந்த விழிப்புணர்வைத் தெரிந்துகொண்டு பறக்கிறது.
எனவேதான் குழந்தைகள் அவ்வளவு ஆனந்தமாய், அழகாய், அருமையாய் இருக்கிறார்கள்.
தியானம்
"வேதனையில்லாத இனிமையான மரணத்தை எல்லோர்க்கும் கிடைக்கும்படி வழிவகை செய்ய முடியுமா?" என்று மருத்துவரொருவர் கேட்டபோது.....
"முடியும்" என்றேன்
"என்ன வழி அது?"
"அந்த வழியைச் சொல்ல நான்கு நாளாவது ஆகுமே..." "சின்ன வழி அல்லது சின்ன தியானம் ஏதாவது எங்களுக்கு சொல்லித்தர முடியுமா?"
"ஓ! அப்படிக் கேட்கிறீர்களா?
இது வரை சேர்த்து வைத்த சம்ஸ்காரங்களை ஆழ ஆராய்ந்து, அவற்றைத் தூக்கி எறியுங்கள்.
புதிய சம்ஸ்காரங்களைச் சேர அனுமதிக்காதீர்கள். முழு விழிப்புணர்வோடு வாழுங்கள்.
இது இரண்டை மட்டும் செய்யுங்கள். நான்கு நாட்கள் செலவு செய்து NSP தியான முகாமில் கலந்து, பெற்றுக்கொள்ளும் ஆனந்தமயமான மரணம் வாய்க்கும்" எனச் சொல்லி முடித்தோம்.
உங்களின் மரணத்தை இனிமையாக்க உதவும் இந்தத் தியானத்தை முழுச் சிரத்தையோடு செய்யுங்கள்.
மனம் ஒரு எதிரியா?
-வருன், ஹைதராபாத்
எதிரியல்ல.
எதிராய் செயல்படும்படி ஏவப்பட்டிருக்கிறது. உருவாக்கப்பட்டிருக்கிறது.
மீண்டும் பிறக்க
வாழ்த்துக்கள்
* வாழ்வு?
ஒரு நீண்ட கனவு.
* கனவு?
ஒரு குட்டி வாழ்வு.
* இரண்டும் ஒன்றா?
ஆம்.
இரண்டுமே மாயங்கள்.
கலைந்து போகும் கனவுகள் .
கனவு 6 மணி நேரம் - வாழ்வு 60 வருடம்.
அவ்வளவே.
பயத்திலிருந்து
வெளிவருவதெப்படி?
பயத்தைத் தைரியத்தோடு
எதிர்கொள்ளுங்கள்.
* பயம் என்பது?
தைரியக் குறைவு.
* பயத்திலிருந்து வெளிவருவதெப்படி?
பயத்தைத் தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள்.
★
எது புகழ்ச்சி?
மிகைப்படுத்தப்பட்ட நிறைகள்.
★
எது இகழ்ச்சி?
மிகைப்படுத்தப்பட்ட குறைகள்.
★
யார் யோக்கியமானவர்?
நீங்கள் அயோக்கியத்தனம் எனச் சொல்லும் குணங்களை, அவரிடம் நீங்கள் கண்டுபிடிக்காதவரை... அவர் யோக்கியர்!
★
யார் அயோக்கியர்?
ஒருவரின் யோக்கியமான நல்ல குணங்களை, அவரிடம் நீங்கள் கண்டுபிடிக்காத வரை... அவர் அயோக்கியர்!
★
பாவம் செய்தால் நரகம் செல்வோமா?
பாவம் செய்வதால் நரகம் செல்லமாட்டீர்கள். நரகத்தில் வாழ்வதால், தவறுகளைச் செய்வீர்கள்.
★
நரகத்தில் வாழ்வது என்றால்?
தினம் தினம் நோகடிக்கும் மனவேதனைகள், நரக வேதனைகளுக்குச் சமம்.

நரகத்தில் வாழ்வது என்றால்?
தினம் தினம் நோகடிக்கும் மனவேதனைகள், நரக வேதனைகளுக்குச் சமம்.
★ புண்ணியம் செய்தால் சொர்க்கம் செல்வோமா?
அப்படியொரு கனவு காணாதீர்கள்.
★ ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
இவ்வுலகில் ஆனந்தமாயிருக்க முடியாதவரால், மறுவுலகில் மட்டும் ஆனந்தமாயிருக்க முடியும் என நம்புவது கனவன்றி வேறென்ன!
★ புண்ணியங்களுக்கும், சொர்க்கத்துக்கும் சம்பந்தமே இல்லையா?
“சொர்க்கம் கிடைக்கும்!” என எதிர்பார்த்து புண்ணியங்கள் செய்தால், அது தானமல்ல... அது ஒரு கவுரவமான பிஸினஸ் மட்டுமே.
★ அப்படியென்றால், சொர்க்கம் செல்ல வழி?
எதிர்காலத்தில், எங்கோ ஓரிடத்தில் கிடைப்பதல்ல சொர்க்கம். அது இருப்பது நிகழ்காலத்தில். தொடர்ந்து அதை நழுவ விடுகிறீர்கள்.
கண்டுபிடியுங்கள்... கண்டுகொள்வீர்கள்.
★ யார் வாலிபர்?
மாறாத குதூகலத்தோடிருக்கும் கிழவர்கூட, வாலிபர்தான்.
★ யார் கிழவர்?
குதூகலமில்லாதவர், வாலிபரானாலும் அவர் ஒரு கிழவரே!
★ குதூகலம் பெருக வழி?
உற்சாகம் பெருக வழி.
★ விழி என்றால்.... சோம்பல் எட்டிப்பார்க்க அவகாசம் தராத அளவுக்கு வாழ வேண்டும் என அர்த்தம்.
★ ஆசை?
ஓசையில்லாமல் வாழும் ஓர் உயிர்.
★ என்ன அது ஓர் உயிரா?
ஆம்! மனிதர் செத்த பின்னும் வாழ்வது ஆசை!
★ செத்தபின் என்றால்?
ஒரு மரணத்திற்கும், அடுத்த ஜனனத்திற்கும் இடையில், ஆசைகளின் தொகுப்பாய் மிதந்து கொண்டிருப்பீர்கள்
★ அதிர்ஷ்டம்?
அது அதன் இஷ்டப்படி வருவது.
★ துரதிர்ஷ்டம்?
அது உங்களின் இஷ்டப்படி வராதது. அந்த எல்லாவற்றையும் இந்தத் தலைப்புக்கு கீழ் சொல்வீர்கள்.
★ அதிர்ஷ்டத்தை ஈர்க்க வழி?
உங்களின் இஷ்டங்களைச் சரி செய்யுங்கள். துரதிர்ஷ்டங்களைக்கூட அதிர்ஷ்டங்களாக்கும் சக்தியைப் பெறுவீர்கள்.

விழி என்றால்....
சோம்பல் எட்டிப்பார்க்க அவகாசம் தராத அளவுக்கு வாழ வேண்டும் என அர்த்தம்.
★ இஷ்டங்களைச் சரி செய்வதென்றால்,..?
குறுகிய வட்டத்தில் வாழும் மனதை விசாலமாக்குவது.
★ எப்படி?
தியானப் பாதை அதற்கு வழிகாட்டும்... நீங்கள் விரும்பினால்!
★ உங்கள் பிறப்பின் நோக்கமென்ன?
முதலில் இக்கேள்வியை உங்களிடம் கேளுங்கள், பின் பதில் காணுங்கள்.
★ “நீங்கள் கடவுள்!” என நிரூபிக்கப் பிறப்பெடுத்தீர்களா?
இல்லை “நீங்கள் கடவுள்!” என நிரூபிக்க.
★ உங்களின் பிறந்தநாள் செய்தியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உடலிலேயே இன்னொரு முறை பிறக்க வேண்டும் என்பதே!
இந்த உடலிலேயே,
எந்தக் கஷ்டமுமில்லாமல்,
அந்த ஆனந்தத்தைச்
சொந்தம் கொண்டாடிட,
இவ்வுடலிலேயே
மறுபிறவி எடுத்திடுங்கள்.
மகாவாக்கியம்
"நான்" இறக்க, "தான்" பிறக்கும்
அதென்ன "நான்?"...
அது வேறொன்றுமல்ல
அகங்காரமே! - மனிதரை
ஆட்டிப்படைக்கும் துர்ச்சக்தியே.
அதென்ன "தான்?"
ஆத்மாவே அது!
வாழ்வை
அழகூட்டிடும்
ஆனந்த சக்தியே அது.
மீண்டும் மீண்டும்
இறந்து,
மீண்டும் மீண்டும்....
பிறந்த போதும்!
எல்லாம் போதும்.
இந்த உடலிலேயே,
எந்தக் கஷ்டமுமில்லாமல்,
அந்த ஆனந்தத்தைச்
சொந்தம் கொண்டாடிட,
இவ்வுடலிலேயே
மறுபிறவி எடுத்திடுங்கள்.
மரண ஞானம்
* சிசுவிற்குள் நுழைவது போல், இறந்த உடலுக்குள் ஆத்மா நுழைய முடியுமா?
முடியும். ஆனால், அதற்கும் கால வரம்புகள் உண்டு.
* சிசுவிற்குள் ஆத்மா எப்போது நுழைகிறது?
சிசு பிறக்கும் கணத்தில்.
* அப்படியென்றால், 9 மாதம்வரை அது, தனி உயிர் இல்லையா?
இல்லை. எப்படி கர்ப்பப்பை என்பது தாயின் உறுப்போ, அதுபோல, அதில் வளரும் சிசு, கர்ப்பப்பைப் போல தாயின் இன்னொரு உறுப்பு மட்டுமே.
* கர்ப்பத்திலிருக்கும் குழந்தை ஓர் உறுப்பு என்றால், அது தாயின் வயிற்றில் எட்டி உதைப்பது எப்படி?
உங்கள் இதயம் தனியாய் துடிக்கிறது.
நுரையீரல் தனியாய் சுருங்கி விரிகிறது.
இவற்றை Body's natural intelligence
எனச் சொல்வார்கள்.
சிசுவிற்குள் ஆத்மா எப்போது நுழைகிறது?
சிசு பிறக்கும் கணத்தில். அதேபோல், சிசு என்னும் உறுப்பும், வயிற்றை எட்டி உதைக்கிறது.
இதயத்தின் இயல்புப்படி இதயம் இயங்குகிறது.
சிசுவின் இயல்புப்படி சிசு இயங்குகிறது.
★ எங்கள் குழந்தைகளின் உயிர் எங்கிருந்தோ நுழைகிறது என்றால், எங்கள் குழந்தையின் உயிர் மட்டும் வேறு ஆளா?
உங்கள் குழந்தையின் கதையில் ... குழந்தையின் உடல் தாயினுடையது. குழந்தையின் உயிர் தந்தையினுடையது. ஆனால், ஆத்மா தனித்துவம் வாய்ந்தது.
அந்த ஆத்மா, உங்களின் தாத்தாவாகவோ, பாட்டியாகவோ, ஒரு யோகியாகவோ என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
★ அப்படியென்றால், ஒரு தீவிரவாதியாக வாழ்ந்து இறந்தவர்கூட பிறக்கலாம் இல்லையா?
சாத்தியம் உண்டு.
★ இதைத் தடுக்க முடியாதா?
முடியுமே.
★ எப்படி ? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன் ?

குழந்தையின் உடல் தாயினுடையது.
குழந்தையின் உயிர் தந்தையினுடையது.
ஆனால்,
ஆத்மா தனித்துவம் வாய்ந்தது.
ஒரு தீவிரவாதியை உருவாக்கும் மன அமைப்புக் கொண்ட தாய்-தந்தையைத்தான், ஒரு தீவிரவதியாய் வாழ்ந்து இறந்தவர் தேர்ந்தெடுப்பார்.
ஆழ்ந்து தியானம் செய்து, இனிமையான மன அமைப்பை தம்பதிகள் உருவாக்கிக் கொண்டால் ...
ஞானிகளாகக் காத்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை ஈர்ப்பீர்கள்.
தன்னுடைய கடைசிப் பிறவியில், ஞானமடைவதற்கான எல்லா ஏற்பாடுகளையும், கடும்தவங்கள், ஆழ்நிலைத் தியானங்கள் ஆகியவற்றின்மூலம் செய்து முடித்துவிட்டு, இறந்துபோன புனிதர்கள், மகான்கள், சித்தர்கள், யோகிகள் குழந்தைகளாகப் பிறப்பார்கள்.
இதுபோன்ற நல்ல ஆன்மாக்கள், சக்தி மிகுந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.
இப்படிப்பட்ட நல்ல ஆன்மாக்களால்தான், வெளியுலகில் பில்கேட்ஸ் ஆகவோ அல்லது உள்ளுலகில் புத்தராகவோ மாற முடியும்.
திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகனும், மணமகளும் தியானம் செய்பவர்களாக இருந்தால், அவர்களின் கருவறையில் ஒரு பின்லேடனோ, இடிஅமீனோ கால் வைப்பது பற்றிக்கூட யோசிக்கமாட்டான்.
தியானம் செய்யும் தம்பதியரைச் சுற்றி, அக்னி மதில்போல எழுந்து நிற்கும் தியான சக்தியைக், கெட்ட, கொடூர நோக்கம் கொண்ட ஆன்மாக்களால் நெருங்க முடியாது.
எனவே, தியானம் திருமணத்திற்கு மிக மிக அவசியமானது.
★ NSP செய்பவருக்குள் இருக்கும்
Conscious sprinkler, மேற்கண்ட
நல்லவற்றைச் செய்யுமா? நல்ல
ஆன்மாக்களை ஈர்க்குமா?
NSP-யில் முழுமையாக ஈடுபட்டு, ஒரே ஓர் ஆழமான அனுபவத்தை
> NSP-யில் முழுமையாக ஈடுபட்டு,
> ஒரே ஓர் ஆழமான அனுபவத்தை
> Conscious experience
> மட்டுமாவது தியானத்தில் மூழ்கிப்
> பெறுபவர்க்கு, அவரின் அடுத்த
> பிறவியை நிர்ணயிக்கும்
> வல்லமை கிடைக்கும்.
Conscious experience மட்டுமோவது தியானத்தில் மூழ்கிப் பெறுபவர்க்கு, அவரின் அடுத்த பிறவியை நிர்ணயிக்கும் வல்லமை கிடைக்கும்.
ஆனால், அவரின் குழந்தையாகப் பிறக்க, ஒரு நல்ல ஆன்மாவை ஈர்க்க வேண்டுமானால், அவர் NSP தியான முகாமில் கற்றவற்றை, வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.
உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதுதான் முக்கியம். உங்களுக்குள் நிகழும் மாற்றங்களைக் கவனமாகக் கவனித்து வாருங்கள்.
வீணையைச் சுண்டும்போது எழும் இனிமையான இசை மாற்றங்களைக் கவனிப்பதனாலேயே, உங்களுக்குள் இனிமை மலர்கிறது. அதேபோல், உங்களுக்குள் நிகழும் மாற்றங்களைக் கவனிக்க ஆரம்பிக்க... ஆரம்பிக்க, உங்களுக்குள் அதிசயங்கள் நிகழத் துவங்கும். இந்த அதிசயங்கள் மட்டும்தான், அதிசயப்பட வேண்டிய அதிசயங்கள்.
என் மகனுக்கு 12 வயதாகிறது. இப்போதே அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமைப்படுகிறான். அவனுக்கு, எப்படி பொறாமை பற்றி விளக்கிச் சொல்லி, அதிலிருந்து அவனை மீட்பது?
- சீதா, கோவை
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை. குழந்தைகளுக்குப் பொறாமை எனும் பிரச்சினையே இல்லை. குழந்தையைச் சுற்றி வாழும் பெரியவர்களால்தான், அவர்கள் நடத்தையால்தான் குழந்தைகளுக்கு அவற்றை போதிக்கிறார்கள்.
இது நிறுத்தத்திற்கு வந்தால், நிச்சயம் அதுவும் நிறுத்தத்திற்கு வரும்.
