KAILASA Library/மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்/பிரச்சினைக்கான தீர்வு உங்கள் கையில்...Sign in
மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்

பிரச்சினைக்கான தீர்வு உங்கள் கையில்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சுவாமி நித்யானந்தா

கொடுப்பதில்

குறியாயிருங்கள்

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபின், அதிபர் ஜான் கென்னடி பேசிய முதல் சில வார்த்தைகள்...

"நாடு உனக்காக என்ன செய்யும் எனப் பார்க்காதே! நீ நாட்டுக்காக என்ன செய்யலாம் எனப் பார்!"

அது அன்பாகட்டும், இல்லை அறிவாகட்டும், இல்லை பணமாகட்டும், மனிதர்கள் கொடுப்பதைவிட, வாங்குவதிலேயேதான் குறியாயிருக்கின்றார்கள். இது ஆரோக்கியமற்றது.

ஆனந்த வாழ்வு கல்விபயிலும் மாணவர் ஒருவர், "வள்ளல், வாழத்தெரிந்தவர்... என ஓரிடத்தில் சொல்லியிருக்கிறீர்கள்.

நம்மிடம் இருப்பதையெல்லாம் வாரி வாரிக் கொடுத்தால், நாம் ஓட்டாண்டியாகி விடமாட்டோமா?" எனக் கேட்டார்.

செலவு செய்யச் செய்ய லாபம்
ஈட்டிடும் ஒரே தொழில்,
அன்பு செய்தல்.
இந்தத் தொழிலில்
செலவு செய்வதே முதலீடு.

"செலவு செய்யச் செய்ய லாபம் ஈட்டிடும்
ஒரே தொழில், அன்பு செய்தல். இந்தத்
தொழிலில் செலவு செய்வதே முதலீடு.

மொத்த உலகில், இந்த ஒரேயொரு
தொழிலுக்குத்தான் வேலைவாய்ப்புகள் மிக
அதிகம்.

அதேபோல், இந்தத் தொழிலுக்கு மட்டும்தான் வேலையாட்கள் குறைவு.

அன்பில் வள்ளலானால்... "இந்த உலகத்துக்கே நான் அரசன்!" எனும் சிறு பதவியில் அமர்த்தப்படமாட்டீர்கள்.

"இந்தப் பிரபஞ்சத்துக்கே நான் அரசன்!" எனும் ஆனந்த சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவீர்கள்.

இந்த வள்ளல் ஓட்டாண்டியாக மாட்டார். ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாக மாறிவிடுவார். அந்தச் சொற்பொழிவைத் திரும்பக் கேளுங்கள்" எனச் சொன்னோம்.

"கேட்டால் முழுக்கக் கேள். இல்லையேல் கேட்காதே!" எனும் ஜென் வாசகம், இந்த மாணவரின் மனசிக்கலை தீர்க்க வல்லது.

பொதுவாக மனிதர்கள் அவர்கள் படிக்கும், கேட்கும் கருத்துகளில் தங்களுக்குப் பிடித்த சில வரிகளை மட்டுமே பிடித்து வைக்கிறார்கள்.

ஓரிரு வரிகளை மட்டுமே மனதில் ஒட்ட வைத்தால், அது விஷச் செடியாக மட்டுமே வளரும். அகங்காரப் புதரைப் பெரிதாக்கும்.

அன்பைப் பற்றி பேசியச் சொற்பொழிவை, பணத்தின் கோணத்தில், தன் மனதுக்கு ஏற்றபடி பிடித்து வைத்ததால்தான், நேருக்கு மாறாய் புரிந்து கொண்டுவிட்டார் அந்த மாணவர்.

அந்த மாணவருக்கு மட்டுமல்ல, வாழ்க்கை எனும் பாடத்தைப் பயிலும் ஒவ்வொரு மனிதருக்கும் வரக்கூடிய பிரச்சினைதான் மேற்சொன்ன பிரச்சினை.

Nithyananda

பொதுவாக மனிதர்கள் அவர்கள் படிக்கும், கேட்கும் கருத்துகளில் தங்களுக்குப் பிடித்த சில வரிகளை மட்டுமே பிடித்து வைக்கிறார்கள்.

ஓரிரு வரிகளை மட்டுமே மனதில் ஒட்ட வைத்தால், அது விஷச் செடியாக மட்டுமே வளரும். அகங்காரப் புதரைப் பெரிதாக்கும்.

படிப்பதிலும், கேட்பதிலும், பார்ப்பதிலும் ஒரு சிறு பகுதியை மட்டும் மனத்தில் இறுக்கி பிடித்துக் கொள்வது மனரீதியான கஞ்சத்தனம்.

ஒரு முறை பரத ரிஷியிடம் புலவர் ஒருவர் கேட்டபோது...

  • யார் கஞ்சன்?

கொடுக்க மறுப்பவர்.

  • யார் வள்ளல்?

நிச்சயம், அள்ளி அள்ளிக் கொடுப்பவர் அல்ல.

  • அப்புறம் யார்...

‘நான் கொடுக்கிறேன்’ எனும் அகங்கார உணர்வுகூட இல்லாமல், தன்னிடம் இருப்பதை மனதாரப் பகிர்ந்து கொள்பவரே அந்த வள்ளல்.

உலக ரீதியான கஞ்சத்தனம் இருந்தால், மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மனரீதியான கஞ்சத்தனம் இருந்தால், பாதிப்புக்குள்ளாகப்போவது மற்றவர்களல்ல. நிச்சயம் நீங்கள்தான்!

மனரீதியான கஞ்சத்தனம் கொண்டிருப்பவர்கள்தான்...

"நாடு எனக்கு என்ன செய்யும்?"
"வீடு எனக்கு என்ன செய்யும்?"
"நீ எனக்கு என்ன செய்வாய்?"

என எதிர்பார்த்தவண்ணம் ஏங்கித் திரிவார்கள்.

மனரீதியான வள்ளல்கள், "தன்னால்
என்ன கொடுக்க முடியும் எனச் சிந்தித்து
செயல்பட்டு ஆனந்தத்தை சந்திப்பார்கள்."

மனரீதியான
கஞ்சத்தனம் இருந்தால்
பாதிப்புக்குள்ளாகப் போவது
மற்றவர்களல்ல. நிச்சயம்
நீங்கள்தான்!

அன்றைய உரையாடலின் முடிவில், அந்த மாணவர், “நான் வள்ளலாக வழி சொல்லுங்கள்” எனக் கேட்டபோது...

“எதில் வள்ளலாக வேண்டுமானாலும் அதில் முழுமையாக வேண்டும்.

ஆனால், அன்பில் வள்ளலாக... மனதைக் காலி செய்யுங்கள். அதுவே, போதுமானது.

மனதில் உங்களுக்கு ஒத்துவரும் கருத்துக்களை மட்டும் கஞ்சத்தனமாக பிடிப்பதை நிறுத்தினால்...

மற்றவர்களைப் பற்றிய கெட்ட அபிப்ராயங்கள், வாழ்க்கையின் துக்கப் பகுதிகள், சச்சரவுகளைக் கிண்டிவிடும் கருத்துக்கள் மனதில் நிற்காது.

இவை மனதில் தங்காமல் சென்றால்... ஏற்கெனவே, நீங்கள் ஒரு பால் நிலவு. அதை மறைக்கும் இந்த மேகங்கள் மறைந்தால், உங்களிடமிருந்து ஆனந்த ஒளி வீசும், மகிழ்ச்சிக் காற்று வீசும், சந்தோஷ சப்தங்கள் பறக்கும்.” எனச் சொன்னேன்.

portrait of a smiling woman

எதில் வள்ளலாக வேண்டுமானாலும் அதில் முழுமையாக வேண்டும்.

ஆனால், அன்பில் வள்ளலாக...
மனதைக் காலி செய்யுங்கள்.
அதுவே, போதுமானது.

டிராஃபிக்ஜாம்

நரம்புகளின் நுனிகளில் ஏற்படும் டிராஃபிக்ஜாமுக்குப் பெயர், 'உடல்சோர்வு.' மனதின் எண்ண ஓட்டப்பாதைகளில் ஏற்படும் டிராஃபிக்ஜாமுக்குப் பெயர், 'மனசோர்வு.'

"நான் முந்தி", "நான் முந்தி" எனப் போட்டிபோடும் வாகனங்களை ஓடவிட்டால்... டிராஃபிக்ஜாம் சரியாகிவிடும்.

அதேபோல், எதைப்பற்றியும் ஒரு அபிப்ராயம் சொல்ல முந்திக்கொள்ளும் மனக்கருத்துக்களைக் கவனமாய் பாருங்கள்.

அதில் பெரும்பான்மை, உங்களின் மனக்கோணத்தில் பிடிக்கப்பட்டக் கருத்துக்களாகவே இருக்கும்.

முந்தி வரும் விஷக்கருத்துகளை, தந்தி வேகத்தில் பிடித்து வெளியே எறியுங்கள்... மனதின் ஓட்டம் சீராகும்,

அது சீரான மறுகணமே, நரம்புகளின் நுனியில் முந்திக் கொண்டிருக்கும் கெமிக்கல்கள், பின்வாங்க ஆரம்பிக்கும். காரணம், உடலும் மனமும் பிரிக்க முடியாக் கலப்பினங்கள்!

முந்துவதை முந்துங்கள். உடலும் மனமும் உற்சாகமாகும்.

மனவலி மருந்து

வெளிநாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ....

“எனக்கு விவாகரத்து வேண்டும்”, என்று பிடிவாதமாகத் தன் குடும்ப வக்கீலிடம் அந்தப் பணக்காரப் பெண்மணி விவாதித்து கொண்டிருந்தார்.

குடும்ப வக்கீலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “ஏம்மா, உனக்கு அப்படி என்ன நிகழ்ந்தது? எனக்குத் தெரிந்தவரை உன் கணவரோடு நன்றாகத் தானே வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். இப்போது திடீரென்று என்னாயிற்று? காரணமே சொல்லாமல் இப்படி விவாகரத்துக் கேட்டால், யாரும் கொடுக்க மாட்டார்கள். உங்களுக்குள் அப்படி என்ன பிரச்சினை?” என்று கேட்டார்.

அப்பெண்மணி, “அதெல்லாம் எனக்குத் தெரியாது... எனக்கு விவாகரத்து வேண்டும்”, என்று மீண்டும் சொல்ல, அந்த வக்கீலும் விடவில்லை.

“குறிப்பிட்டக் காரணத்தைச் சொன்னால்,
உங்களுக்கு விவாகரத்து கிடைக்க
ஏற்பாடு செய்வேன். இல்லையென்றால்,
என்னை விட்டுவிடுங்கள்”, என்று சொன்னார்.

“காரணம் கேட்டால், நான் எதைச்
சொல்வேன்” என்று அந்தப் பெண்மணி
யோசிக்கத் துவங்கினார்.

மனமும், செயலும்

வெவ்வேறாக

இருக்கிறது.

வக்கீல், "ஏம்மா, உன் கணவர் உனக்குப் பணம் கொடுக்காமல் துன்புறுத்தினாரா?"

பெண்மணி, "இல்லை, இல்லை. நான்தான் அவருக்குப் பணம் தருவேன்".

வக்கீல், "அப்போது, உன்னை அடித்துத் துன்புறுத்தினாரா?"

பெண்மணி, "இல்லை, இல்லை. நான்தான் அவரை அடிப்பேன்"

வக்கீல், "குழந்தைகளைச் சரியாக பார்த்துக் கொள்ளவில்லையா?"

பெண்மணி, "குழந்தைகளை அவர்தான் முழுவதும் கவனித்து வளர்த்து வருகிறார்".

வக்கீல், "உங்கள்மீது அன்பு செலுத்தாமல், வேறு ஒரு பெண்ணுடன் வாழ்கிறாரா?".

அதற்கு அப்பெண்மணி, "இல்லை, இல்லை. எனக்கு அவரை விடவும், அவர் நண்பரை மிகவும் பிடித்திருக்கிறது" என்று சொன்னார்.

வக்கீல், "அப்போது முறைப்படி பார்த்தால், அவர்தானே உங்களிடமிருந்து விவாகரத்துப் பெறவேண்டும். நீங்கள் கேட்கிறீர்களே?" என்று கேட்டார்.

ஆழ்ந்து பார்த்தீர்களென்றால், புரிந்து கொள்வீர்கள். தவறுக்கான காரணத்தைத் தேடும் போதெல்லாம், நம் மனம் இதுபோன்ற காரணங்களைக் கண்டுபிடிக்கிறது. இதுபோன்ற தவறான காரணங்களுடன்தான் பெரும்பாலான நேரத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

Sadhguru smiling

நாம் உண்மையில், உண்மையாக வாழாமல்

இருப்பதுதான் இதுபோன்ற காரணங்களைத்

தேடுவதற்கான காரணமே.

இதனால் மனமும், செயலும் வெவ்வேறாக இருக்கிறது. நாம் உண்மையில், உண்மையாக வாழாமல் இருப்பது தான் இது போன்று காரணங்களைத் தேடுவதற்கான காரணமே.

அப்போதுதான் வீட்டிற்குள் நுழைகிறீர்கள். "என்னங்க ... நீங்க வெளில போயிட்டு வர்ற இந்த 10 நிமிஷத்துக்குள்ளே, 5 முறை உங்க நண்பர் போன் பண்ணிட்டார். ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயமாம்.

சார்கிட்ட உடனடியா பேசணும் என்று ரொம்ப பதைபதைப்பாப் பேசினார்," என்ற தகவலை வீட்டில் இருப்பவர்கள் தருகிறார்கள்.

உள்ளுக்குள் சென்று போனை கையில் எடுத்து, நண்பருடன் பேசுவதற்குள் என்னென்ன எண்ணங்கள் வந்து போகும். கவனித்திருக்கிறீர்களா?

எதுக்கு போன் பண்ணினானோ.. உடனடியாக அவனுக்குப் பணம் தேவைப்படுதா?

இல்லை, எங்காவது போலீசில், வம்பில் கிம்பில் மாட்டிக்கிட்டானா? இல்லை...

ஒருவேளை ரவுடிக் கும்பலிடம் மாட்டிக் கொண்டானா?' என்று அந்த மூன்று நிமிடங்களில், போனைக்கையில் எடுப்பதற்குள் மூவாயிரம் எண்ணங்கள் நிகழ்ந்துவிடும்.

ஏன்?

எப்போதும் எதையும் முன்கூட்டியே
தயாரித்து, தங்களைப்பற்றிச் சொல்ல,
மனப்பாடமான வசனங்களால் இதுவரை
வெளியுலகிற்கு காண்பித்து வந்த மனதிற்கு,
இப்படி இடையில் ஏற்படும் இக்கட்டான
சூழ்நிலைகளில், "எப்படி பேசுவது? எவ்வாறு
நடந்து கொள்வது?" என்பது தெரியாத
காரணத்தினால், வரும் தடுமாற்றம் இது.

> உண்மை வெளிவரும்போது,
> அதை ஏற்றுக் கொள்ளும்
> பக்குவம் இல்லாத மனதால்
> உருவாகுவதுதான்,
> இந்த உறவுகளில்
> ஏற்படும் விரிசல்களும்,
> காதல் தோல்விகளும்.

ஒருமுறை இதுபோன்று தயாரித்த வசனங்களைக் கொண்டு பேசலாம். மறுமுறை சமாளிக்கலாம். ஆனால், அடுத்த முறை...?

உண்மை வெளிவந்துதானே ஆகவேண்டும். அப்படி உண்மை வெளிவரும்போது, அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாத மனதால் உருவாகுவதுதான், இந்த உறவுகளில் ஏற்படும் விரிசல்களும், காதல் தோல்விகளும்.

என்னைப் பார்க்க, காதல் திருமணம் புரிந்த ஒரு தம்பதியர் ஆசிரமத்திற்கு வந்தார்கள்.

கணவர், "நான் காதலிக்கும்போது இருந்த பெண் அல்ல இவள். நான் காதலில் தோற்றுவிட்டேன். நான் ஏமாந்துவிட்டேன்," என்று சொன்னார்.

மனைவி, "என் கணவர் கல்யாணம் செய்வதற்கு முன், மிகவும் இனிமையாக இருந்தார். ஆனால் இப்போதோ, அதற்கு நேர் எதிராக இருக்கிறார். என்னால், இவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னை, இவர் நன்றாக ஏமாற்றிவிட்டார்" என்று சொன்னார்.

ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துக்கொள்ளுங்கள். யாரும், யாரையும் ஏமாற்றுவதில்லை. உண்மை தன்னால் வெளிப்படுகிறது. அவ்வாறு உண்மை வெளிவரும்போது, பிரச்சினை என்று நீங்கள் நினைப்பதுதான், எழுகிறது.

தலைக்கு மைபூசி, தலை நரையை என்னதான் மறைத்தாலும், மழையில் நனைந்தால், தண்ணீருடன் மையும் கரைந்துவிடும். உண்மையான வெள்ளைநிறம் வெளிப்பட்டுவிடும்.

அதுபோல், உண்மையான சுபாவத்தை, அழகான அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளால் மறைப்பது எளிது. ஆனால், அவசரம் எனும் எதிர்பாராத

portrait

உண்மையான சுபாவத்தை, அழகான அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளால் மறைப்பது எளிது. ஆனால், அவசரம் எனும் எதிர்பாராத சூழ்நிலைகளில், அலங்கார வார்த்தைகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும். உண்மைச் சுபாவம் வெளிப்பட்டு விடும்.

சூழ்நிலைகளில், அலங்கார வார்த்தைகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும். உண்மைச் சுபாவம் வெளிப்பட்டு விடும்.

தியானம்

இந்த உண்மையை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

தன்னை மறைத்துக் கொள்வதற்காக மனம் செய்யும் தந்திரம்தான், இந்த மனவேலி. மனவேலி உங்களை தொடர்ந்து வெளிப்படுத்த விடாமல், திரைமறைவிலேயே வாழ வைக்கும்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், உண்மை சுபாவம் வெளிப்படுவதை, எந்த சக்தியாலும் தடுக்க இயலாது.

உண்மை வெளிப்படும்போது, உங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஏற்படும் மனவலிக்கு, மருந்தும், தீர்வும் நிகழ்காலத்தில் வாழ்வது ஒன்றுதான்.

உங்கள் மனவலி குறைவதோடு அல்லாமல், மனவலியைத் தாண்டும் சக்தியைப் பெறுவீர்கள். மனவேதனை போய், அருமையான மனிதர் எனும் மணம் வீசும் மனிதராக மலர்வீர்கள்.

ஆசைகளை வைத்திருப்பது சரியா? தவறா?

  • தேஸ்வினி, பொள்ளாச்சி

ஆசைகளோடு இருப்பது, உங்கள் பிறப்புரிமை. ஆசைகள் இல்லாமல் இருப்பது, உங்கள் வாழ்க்கை உரிமை.

மனிதர்கள் பிறப்பதன் நோக்கமே, முந்தைய ஜென்மத்து ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகத்தான்.

ஓர் ஆசையைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்து, ஓராயிரம் ஆசைகளுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். மீதி வாழ்க்கையை, அந்த மனிதர் வாழ்வதில்லை, அந்த ஆசைகளே வாழ்கின்றன.

வாழ்க்கை என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆசையிலிருந்து விடுதலை பெறுவதுதான், தவம், தியானம்.

ஆசைகளிலிருந்து விடுபடுங்கள். ஆசைகளைத் தாண்டிய ஆனந்தம் சொந்தமாகும்

இதை முழுமையாக நீங்கள் செய்வதற்காகத்தான், ஞானிகள் மீண்டும், மீண்டும் அவதாரம் எடுக்கிறார்கள். போதிக்கிறார்கள். தியான சத்சங்கங்களில் பேசுகிறார்கள்.

* பிணம் மிதக்கிறது, மனிதர் மூழ்குகிறார்.

உயிரோடிருக்கும் மனிதருக்குள் இரண்டு பெரிய காற்றுப் பலூன்கள், நுரையீரல்களாக இருக்கின்றன. எனவே, இவர் மிதக்கவேண்டும். ஆனால், மூழ்குகிறார்.

இறந்த மனிதரிர் நிறைய நீர் குடித்து, மூச்சு வெளியேறியதால், உடலின் எடை இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்கும். இந்த உடல் மூழ்க வேண்டும். ஆனால், மிதக்கிறது.

இது நிஜத்தில் நேர்மாறாயிருக்கிறதே. ஏன்? சிந்தியுங்கள்.

* ஜியார்ஜ் குருதீஃப் ஒரு மிகப்பெரிய ஞானி. அவருடைய ஆஸ்ரமத்தில் ஒரு நூதனமான டெக்னிக் வழக்கத்திலிருந்தது.

அது, எப்போது வேண்டுமானாலும் அவர்,'Stop' என்ற கட்டளையைப் பிறப்பிப்பார். யார் எந்த நிலையில் இருக்கிறார்களோ, அந்த நிலையில் அப்படியே நின்றுவிட வேண்டும்.

மண்வெட்டியைத் தூக்கியவர் அப்படியே அதை அந்தரத்தில் பிடித்தபடி நிற்பார்...

இறந்த மனிதர் நிறைய
நீர் குடித்து, மூச்சு
வெளியேறியதால், உடலின்
எடை இன்னும் கொஞ்சம்
அதிகரித்திருக்கும்.
இந்த உடல் மூழ்க வேண்டும்.
ஆனால், மிதக்கிறது.
ஏன்? சிந்தியுங்கள்.

ஓடியவரின் ஒரு கால் காற்றிலும், ஒரு கால் நிலத்திலும் இருக்கும்...

இப்படி அவரவர், அந்தந்த நிலையிலேயே இருப்பார்கள். விழிப்புணர்வை அதிகரிக்கும் மிக வலிமையான தியானம் இது.

இது, குருவின் அடுத்த கட்டளை வரும் வரை, தங்களின் நிலையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள், அங்கிருக்கும் சீடர்கள்.

ஒருமுறை அருகே இருக்கும் ஆற்றிலிருந்து, சிறு வாய்க்கால் ஒன்றை ஆஸ்ரமத்திற்காக வெட்டிக்கொண்டிருந்தார்கள். அன்று மூன்று பேர் வாய்க்காலை வெட்டிக் கொண்டிருந்தபோது...'Stop' என்ற கட்டளை வர, மூன்று பேரும் அந்தந்த நிலையில் உறைந்து விட்டார்கள்.

ஆனால், இன்று ஒரு புதுவம்பு. ஆற்றின் அடைப்பு பொத்துக்கொண்டது. வெட்டப்பட்ட வாய்க்கால் குழிக்குள் நீர் பரவ ஆரம்பித்தது.

நீர் மட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. நீரின் அளவு வயிற்றளவிற்கு வந்ததும், முதல் சீடருக்கு பயம்வர, தலையில் இருந்த சட்டியைத் தூர எறிந்துவிட்டு கரையேறிவிட்டார்.

அடுத்து நீரின் அளவு கழுத்தளவை தொட்டதும், அடுத்தவருக்கு இலேசாக நடுக்கமெடுக்க, அவர் கையிலிருந்த கடப்பாரையை அப்படியே விட்டுவிட்டுக் கரையேறினார்.

மூன்றாமவர் உண்மையான சீடர். ஞானகுருவின் செயல்களில் ஞானசூட்சுமம் ஒளிந்திருப்பதைப் புரிந்துகொண்டவர்.

Sadhguru smiling

> குருவின் அடுத்த கட்டளை வரும் வரை, > தங்களின் நிலையை மாற்றிக் கொள்ள > மாட்டார்கள், அங்கிருக்கும் சீடர்கள்.

குருவின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் தனக்கு, நிகழ்வதெல்லாம் தியானமுறைகளே என்று உணர்ந்த அந்தச் சீடரால், நீர்மட்டம் மூக்களவிற்கு வந்தபின் கூட அப்படியே இருக்க முடிந்தது.

நீரின் மட்டம் அதிகரிக்க... அதிகரிக்க, சீடருடைய விழிப்புணர்வின் அளவும் அதிகரித்தது. காரணம், அந்த மொத்தச் சூழலும் மனதை ஸ்தம்பிக்கச் செய்யுமளவுக்கு நூதனமானது, விசித்திரமானது.

நீரின் மட்டம் மூக்கை தாண்டி, நெற்றியைத் தாண்டி, தலையையும் தாண்டியது... அப்போது அந்த அற்புதம் நிகழ்ந்தது!

அந்த சீடர் நீரில் மிதந்தார். விழிப்புணர்வின் உச்சியைத் தொட்டு ஞானமடைந்து விட்டார். உயிரோடிருந்தும் மூழ்கவில்லை.

எப்படி? விடைக்கான கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

* பிறந்த குழந்தையைக் கொண்டு, பெற்றோர் மற்றும் அரசு அனுமதியோடு இந்த ஆய்வு ஜப்பானில் செய்யப்பட்டது.

பிறந்த குழந்தையை மிக ஜாக்கிரதையாக நீருக்குள் விட்டார்கள். அடுத்து நிகழ்ந்த ஆச்சரியத்தை நம்புவது மிகக் கடினம்.

நீருக்குள் விடப்பட்ட குழந்தை நீந்த ஆரம்பித்து விட்டது. ஒரு மீன்போல, அந்தக் குழந்தையால் நீரில் மிதக்கவும், நீந்தவும் முடிந்தது.

* தாயின் கர்ப்பப்பையில் ஒரு மீன் போல் நீருக்குள்ளேயே வாழ்ந்தவர்தானே நீங்கள்.

மிதந்தவர்தானே நீங்கள்!

அதுவுமில்லாமல் புத்தரின் கூற்றுபடி,
"ஒரு மனிதருக்குள் எல்லா மிருகங்களின்
குணாதிசயங்களும் ஒளிந்திருக்கிறது".

படிப்பதற்கு இது புதுச் செய்தியாக இருந்தாலும், இது பூரணமான உண்மையே.

புத்தரின் கூற்றுபடி
"ஒரு மனிதருக்குள்
எல்லா மிருகங்களின்
குணாதிசயங்களும்
ஒளிந்திருக்கிறது".

எல்லா மனிதர்களாலும் எளிதாய் மிதக்க முடியும். ஆனாலும், அவர்கள் மூழ்குகிறார்கள்.

காரணம், அகங்காரம். அகங்காரம் அதிகமாக... அதிகமாக, மனிதர்கள் கடினத்தன்மை மிகுந்தவராகிறார்கள்.

60 கிலோ எடையுள்ள இருவரில், திமிர்பிடித்தவர் பார்ப்பதற்கு மிகவும் கடினமானவராய்த் தெரிவார். எளிமையாய் வாழும் இன்னொருவர், பூப்போல மென்மையாக இருப்பார். இதைக் கவனித்திருக்கிறீர்களா?

இந்த வேறுபாடு அகங்காரத்தின் வேறுபாடுதான்.

குழந்தைக்கு, அகங்காரம் இன்னும் உருவாகவேயில்லை. அதனால் மிதக்க முடிகிறது.

ஜியார்ஜ் குருதீஃப்பின் சீடர், அகங்காரம் மறைந்து ஞானமடைந்ததும், அதுவரை செங்குத்தாக நின்றுகொண்டிருந்தவர் மிதக்க ஆரம்பித்துவிட்டார்.

அகங்காரமுள்ள சாதாரண மனிதர் மூழ்குகிறார்.

அகங்காரத்தின் உறைவிடமான மனம் இல்லாது போன பிணம், மிதக்கிறது, உடலின் எடை அதிகரித்த பின்னும்!

இப்போது புரிகிறதா... அகங்காரம் எவ்வளவு வலிமையானது என்று?

அகங்காரம் மிக சூட்சுமமானது.

அது புரிந்துகொள்ளப்பட்டு, மனதிடமிருந்து துடைத்தெறியப்பட வேண்டியது.

portrait of a smiling woman

அகங்காரமுள்ள சாதாரண மனிதர் மூழ்குகிறார். அகங்காரத்தின் உறைவிடமான மனம் இல்லாது போன பிணம், மிதக்கிறது, உடலின் எடை அதிகரித்த பின்னும்!

தியானம்

தியானம் சின்னம்

ஒரு தியான அறிமுக முகாமில் இப்படி ஒருவர் கேட்டார்.... “தியானம் செய்தால் உடலின் அதிக எடை குறையுமா?”

“தொடர்ந்து செய்யும் தியானம், நிச்சயம் உடலின் அதிக எடையைக் குறைக்கும்.

இன்னொரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்... உடலின் அதிக எடை உங்களைக் கஷ்டப்படுத்துவதைவிட, உங்களைக் கஷ்டப்படுத்துவது, உங்களை கடினமாய் உணரச் செய்வது அகங்காரம்தான்.

Ego is weight.

தியானம்அகங்காரத்தைகுறைக்கும்.

எனவே, உடலின் அதிக எடை குறையும் முன்பே, நீங்கள் இலேசாக உணர ஆரம்பிப்பீர்கள்” என்றோம்.

உங்களின் அகங்காரம் குறையக் குறைய, ஒரு காற்றைப் போல உணர்வீர்கள்.

அகங்காரம் முழுமையாய் கரைந்து நீங்கள் ஞானமடைந்து விட்டால், சாதாரண நடையில்கூட எடையற்றவராக நீங்கள் உணர்வீர்கள்.

அது மிதப்பது போலவும், பறப்பது போலவும், உங்களால் உணரப்படும்... அந்த ஆனந்த அனுபவம், மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் அனுபவித்துப் பார்க்க வேண்டியது.

அதனால்தான், “ஞானிகளின் நடை, நடையல்ல நடனம்” என்போம். அகங்காரம் மறைந்தபின், மனிதர்கள் வாழும் வாழ்வுதான் மகத்தானது.

அகங்காரம் கரைய, உங்களின் வாழ்வு பிறக்க, அகங்காரத்தை கரையச் செய்யுங்கள்.

இனிமேல் அகங்காரம் சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இனிமேலும் கடினமாவதை அது, தடுக்கும். அகங்காரம் கரையும். உங்களாலும் மிதக்கவும் முடியும். பறக்க முடியும்.

  • பலூனை ஊதி ஓரிடத்தில் உட்காரவைத்தால், அது பறக்கவே முயற்சிக்கும்.

பாறாங்கல்லைக் கூட பிடித்திழுக்கும் புவிஈர்ப்பு சக்திக்கும், டாட்டா சொல்லிப் பறக்க முடியும், பலூனால்.

சுருங்கிய காற்றில்லா
பலூனால், முயற்சித்தாலும்
பறக்க முடியாது.

ஊதிய பலூன் பறக்கலாம்...
தன்னை விரிவடைய, அது
அனுமதித்தால்.

மகாவாக்கியம்

“அகங்காரம் உயிராற்றலைச் சுருக்கும்”

நீங்கள் அனுமதித்தால், ஆத்ம சக்தி புகுந்து உங்களை விரிவடையச் செய்தால்,

நீங்களும் பறக்கலாம். பலூன்போல் மிதக்கலாம் உள்ளுணர்வில்.

  • தியானம் செய்யும் முனிவர் நிலத்திலிருந்து பறப்பார், என வரையப்பட்ட படங்களைப் பார்த்திருப்பீர்கள்.

அது தவறான வர்ணனை

நிஜத்தில்... உடல் தியானத்தால் உயராது.

உடல் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்கும்

ஆழ் தியானத்தில் ஆழ்ந்து போக, அகங்காரம் அழிந்து போகும் நிமிடங்களில்... உடலின் கனம் பற்றிய எண்ணம் மறைய மறைய, நீங்கள் லேசாவீர்கள். லேசாக... லேசாக... உயரே பறப்பதாய் உணர்வீர்கள்.

லெவிடேஷன் (Levitation) என்றால் என்ன? -கனகசுப்பு. திண்டல்

“மனிதர்கள் ஒருபோதும் நடப்பதில்லை அவர்கள் நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், முதலில்...” எனும் தாவோ கீத வரிகள் அர்த்தம் பொதிந்தவை.

மனிதர் நிற்கிறார் என்று கூடச் சொல்ல முடியாது. நிலம் தடுப்பதால், மனிதர்கள் நிற்கிறார்கள்.

இல்லாவிட்டால், அவர் தொடர்ந்து கீழே சென்று கொண்டேயிருப்பார். காரணம், புவி ஈர்ப்பு விசை (Gravitation force).

ஒரு மனிதர் சும்மா நிற்பதற்கே, அவருடைய பாதி தசைகள் இயங்க வேண்டும். பாதி தசைகள் மட்டுமே ஒரு மனிதர் சும்மாயிருக்கும்போது, சும்மாயிருக்கும்.

அப்படிமட்டும் பாதித் தசைகள் சுருக்கப்படாமல் (contraction) இருந்தால், மனிதர்கள் கீழே விழுந்துவிடுவார்கள். அவர்களால் நிற்க முடியாது, என மருத்துவம் சொல்கிறது.

மனிதரைக் கீழே விழாமல் காப்பது இரண்டு. 1.தொடர் சுருக்கம்

2. ஈர்ப்பு விசை.

இவையிரண்டையும் செய்ய மனம் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கும். அகங்காரம் அதன் பங்குக்கு, “நீ கனமானவன் என்ற உணர்வைத் தரும்”. விளைவு, மனிதர்கள் தன்னை ஒரு தனி திடப் பொருளாய் உணர்வார்கள்.

தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது, முதலில் மனம் அசைக்கப்படும். அடுத்து, உடலின் ஞானம் விழித்துக் கொள்ளும். மனம் முதல் முறையாய், அப்போது ஓய்வு பெறும். உடலானது, தன்னைத்தானே நிறுத்திக்கொள்ளவும், உட்கார வைக்கவும் செயல்பட ஆரம்பிக்கும்.

மனமும், அகங்காரமும் மறைய, புவி ஈர்ப்புவிசை பற்றிய உணர்வு துண்டிக்கப்படும். பூமி நோக்கி இதுவரை இழுக்கப்பட்ட மனிதர், மேல்நோக்கி இழுக்கப்படுவார். இந்தத் தியான அனுபவமே, ‘Levitation’ எனப்படும்.

கடவுள் இருக்கிறாரா?

சைன்ட்ஃபிரான்ஸிஸ் ஆப் அஸஸி ST. Francis of Assasi எனும் கிருஸ்துவ ஞானியின் வாழ்க்கையில் நடந்ததெனச் சொல்லப்படும் ஒரு சம்பவம்.

ஒருமுறை மெத்தப் படித்த மேதாவி ஒருவர், ‘கடவுள் கிடையவே கிடையாது’ என்று பாதிரியாரிடம் வாதம் புரிவதற்காகச் சென்றிருந்தார்.

பாதிரியாரிடம், “ஐயா, நீங்கள் கடவுளை நம்புபவர். பைபிள் நன்கு கற்றவர். அதனால் நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு எனக்குப் புரியும்படி பதில் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதற்குப் பாதிரியார் புன்முறுவலுடன் சம்மதித்தார்.

மேதாவி, “என் முதல் கேள்வி: கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் அவருடைய உருவத்தை எனக்குக் காட்டுங்கள்.

உண்மையை உணர்வதற்கு,
அந்த மனிதர் வாழ்வில்
எதிர்பாராத விதமாக, ஒரு
பாதிரியார் வந்தார்.

இரண்டாவது கேள்வி: விதி, விதி என்று சொல்கிறார்களே, விதி என்றால் என்ன?

மூன்றாவது கேள்வி: பைபிளில்
சொல்லியுள்ளதுபடி பார்த்தால், சாத்தான்
நெருப்பலிருந்து படைக்கப்பட்டுள்ளான்.
ஆனால், சாத்தானைத் தண்டிக்க, இறைவன்
அவனை மீண்டும் நெருப்பிலேயே
போடுகிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியானால், நெருப்பே உருவான சாத்தானுக்கு நெருப்பினால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதே. இது குறித்துக் கடவுள் ஏன் யோசிக்கவில்லை?" என்று கேட்டார்.

இந்த மூன்று கேள்விகளையும் மேதாவி கேட்டதுதான் தாமதம். பாதிரியார் "பளார்" என்று மேதாவியினுடைய கன்னத்தில் அறைந்தார். இதை சிறிதும் எதிர்பார்க்காத மேதாவியின் மனம் சட்டென்று ஸ்தம்பித்தது.

"கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால், இப்படியா கோபத்துடன் அடிப்பது?" என்று கன்னத்தைத் தடவியபடி கேட்டார்.

அதற்குப் பாதிரியார், "நீங்கள் என்னிடம் இப்படி கேள்வி கேட்டதனால், உங்களை நான் அறையவில்லை.

உங்கள் மேல் எனக்குக் கோபமே இல்லையப்பா. நீங்கள்தான் உங்களுக்குப் புரியும்படி பதில் சொல்லச் சொன்னீர்கள். அதனால்தான் உங்களை அடிக்க வேண்டியதாய் போய்விட்டது. இப்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு, நீங்கள் பதில் சொல்லுங்கள்.

"நான் அடித்த போது உங்களுக்கு வலித்ததா?" என்று கேட்டார்.

"இது என்ன கேள்வி? வலி உயிர் போய்விட்டது" என்று மேதாவி பதிலளித்தார்.

"ஓ! அப்படியா? அப்படியானால், நீங்கள் வலி இருக்கிறது என்பதை நம்புகிறீர்கள். உணர்கிறீர்கள். ஆனால், எங்கே வலியினுடைய உருவத்தை காட்டுங்கள்? இதுதான் உங்கள் முதல் கேள்விக்கு பதில்.

Swami Vivekananda

ஞானிகளிடமே வந்து கேள்விகளைக் கேட்டாலும், அந்த பதிலால் அவர்களுக்கு மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை. ஏதோ கேள்வி கேட்டோம். பதில் கிடைத்தது... என்றளவில்தான் இருக்கும். இது, இருவருக்கும் நேர விரயமே.

“சரி, என்னுடைய அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். நேற்று, உங்கள் கனவில், என்னிடம் கன்னத்தில் அறை வாங்குவதாக ஏதாவது கனவு தோன்றியதா?” என்று கேட்டார்.

மேதாவி, “இல்லை” என்று சொன்னார்.

“சற்று நேரத்திற்கு முன்பு வரை, நீங்கள் அடி வாங்கப் போவது, உங்களுக்கே தெரியாது இல்லையா?. ஆனால், அடி வாங்கிவிட்டீர்கள். இதற்குப் பேர் தான் விதி. இனி, என்னுடைய கடைசி கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

உங்களை அறைந்த என்னுடைய கை, எதனால் ஆனது?”

“இரத்தத்தாலும், சதையாலும்” என்று சொன்னார்.

“அதே இரத்தத்தாலும், சதையாலும்தான் உங்களுடைய கன்னங்களும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், என் கை உங்களை அறைந்தபோது, உங்களுக்கு வலித்தது. அதேபோல்தான், தீயால் ஆன சாத்தான், கடவுளால் தீயில் தள்ளப்படும்போதும் துன்பப்படுவான்.”

இந்த பதில்களைக் கேட்டு புத்திபெற்று, பாதிரியாருக்கு நன்றி கூறி விடைபெற்றார் மேதாவி.

உண்மையை உணர்வதற்கு, அந்த மனிதர் வாழ்வில் எதிர்பாராத விதமாக, ஒரு பாதிரியார் வந்தார்.

ஆனால், எல்லோர் வாழ்விலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை. அந்த மனிதரைப்போல், நம்மில் பலரும் மற்றவர்களிடம் கேள்வி கேட்டும், குறுக்கு விசாரணை செய்தும், வம்புக் கதைகளைப் பேசியும் நேரத்தை வீணடித்து வருகிறோம்.

இதைப் படித்ததும், ‘ஏன்?
அப்படியென்றால், கேள்வியே கேட்கக்
கூடாதா?’ என்ற எண்ணம் எழலாம்.

> என் கை உங்களை அறைந்த
> போது, உங்களுக்கு வலித்தது.
> அதேபோல்தான், தீயால்
> ஆன சாத்தான், கடவுளால்
> தீயில் தள்ளப்படும்போதும்
> துன்பப்படுவான்

ஒரு ஜென் ஞானியிடம், "ஏன் நாங்கள் கேள்விகளே கேட்கக்கூடாதா?" என்று சீடர் ஒருவர் கேட்டபோது... ஜென் ஞானி, "கேள்விகள், அகங்காரத்தை வளர்க்கும். சந்தேகங்கள் அகங்காரத்தை அழிக்கும்," என்று சொன்னார்.

மழைக்காலத்தில் பார்த்தீர்களென்றால் தண்ணீர் குழிகளில் தேங்கி இருக்கும். அந்நீர்நிலைகளில் தவளைக் கூட்டம் கூட்டமாக வாழும்.

இரவானால் போதும், அந்தத் தவளைகள் எல்லாம் கத்தத் துவங்கிவிடும். இரவு முழுவதும் கத்திக்கொண்டேதான் இருக்கும். அது ஏன் கத்துகிறது என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ஏன் கத்துகிறோம்? என்று அதற்கும் கூடத் தெரியாது.

எதற்காகக் கத்துகிறதோ, அது கிடைத்தாலும், தேடியது கிடைத்துவிட்டது என்பது தெரியாமல், மீண்டும் தொடர்ந்து கத்திக்கொண்டேயிருக்கும். எப்படி அலைகள் ஓயாமல் இருக்கிறதோ, அதைப்போன்றுதான் மனதில் எழும் கேள்விகளும்.

கேள்விகள் கேட்பது, என்பது வேலை வெட்டியில்லாமல் டீக்கடையில் அமர்ந்து கொண்டு, "எனக்குத் தெரியாதா அந்த வி.ஐ.பி பற்றி. அவர் அப்படிதான்...

அந்த எதிர்வீட்டுக்காரர் என்ன சொன்னார் தெரியுமா?..." என்று கேள்விகள் கேட்டு, நேரத்தைப் போக்கும் வேலை, பிழைப்பு இல்லாதவர்களுக்குதான் சாத்தியம்.

இவர்கள் ஞானிகளிடமே வந்து கேள்விகளைக் கேட்டாலும், அந்த பதிலால் அவர்களுக்கு மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை. 'ஏதோ கேள்வி கேட்டோம். பதில் கிடைத்தது, என்றளவில்தான் இருக்கும். இது இருவருக்கும் நேர விரயமே.

Nithyananda

தவளை எதற்காகக் கத்துகிறதோ, அது
கிடைத்தாலும், தேடியது கிடைத்துவிட்டது
என்பது தெரியாமல், மீண்டும் தொடர்ந்து
கத்திக்கொண்டேயிருக்கும். எப்படி அலைகள்
ஓயாமல் இருக்கிறதோ, அதைப்போன்றுதான்
மனதில் எழும் கேள்விகளும்.

நிற்க நேரமின்றி பறந்து கொண்டிருக்கும் மனிதர்கள், இவ்வாறு தனக்குத் தேவையில்லாத, வாழ்க்கைக்கு முன்னேற்றமளிக்காத கேள்விகளுக்கு, நேரத்தைச் செலவளிக்க மாட்டார்கள். புத்திசாலிகளின் கேள்விகள், "ஏன் அடுத்த முறையும் இப்படி நிகழ்ந்தது? ஏன் இப்படி கோபப்படுகிறார்கள்?" என்பதாக இருக்காது.

"ஏன் என்னால் அடுத்தவருடன் இனிமையாகப் பழக முடியவில்லை? எதற்காக கோபப்படுகிறேன்? நான் ஞானமடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்ற ஆழ்மனத்தேடுதலாக இருக்கும். உண்மையை அனுபவமாக உணரத்துடிக்கும் கேள்விகள்தான் சந்தேகங்கள்.

டீக்கடையில் அமர்ந்து கொண்டு, அடுத்தவரின் மனதை ஆராயாமல், தன் மனதை ஆராயத்துவங்கினால் போதும். உங்கள் வாழ்க்கையில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். வாழ்க்கையின் தீர்வுகளை வாங்கிக் கொள்வதற்கு, உங்களுக்குள் இருந்து வரக்கூடிய கரங்கள்தான் சந்தேகங்கள்.

சந்தேகத்திற்குக் கிடைக்கும் பதில்கள், வெறும் பதில்கள் அல்ல. அது வாழ்க்கைக்கான தீர்வுகள். நம்பிக்கைத்தரும் ஞான சூத்திரங்கள்.

அதனால் தான் நான் சொல்வதுண்டு, "Innocent disciple is 1000 times later than an ignorant disciple."

தியானம்

தியானம்

மனம் ஒரு அரவை மிஷின் (Grinding machine). அதற்கு ஏதேனும் ஒன்றை கேள்விகளாக அரைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மிக அழகாக கதை ஒன்றைச் சொல்வார். "கல்யாண விருந்தில் சாப்பாடு பரிமாறுவதற்கு முன் சலசலவென்று சப்தம் எழுந்து கொண்டேயிருக்கும்.

"பெண்ணிற்கு என்ன செய்தார்கள்? ஏன் மாப்பிள்ளை வீட்டார் இப்படி இருக்கிறார்கள்?" என்ற தேவையில்லாத கேள்விகளுக்கெல்லாம், மிக சுவாரஸ்யமாய் பதிலளித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உணவு பரிமாறப்பட்டதும், அடுத்தவர் இலையில் என்ன இருக்கிறது? என்பதைக் கூடப் பார்க்காமல், தங்கள் உணவை மிக சுவாரஸ்யமாக மென்று கொண்டிருப்பார்கள் 'சப், சப்' என்று உணவை மெல்லும் சப்தமே எழும்" என்று சொன்னார்.

தன் இலைமேல் கை வைக்காத வரையில், சலசலவென்ற சப்தம்தான் கேட்கும்.

அதேபோன்று உங்கள் மனதில், உங்கள் கவனத்தை வைக்காத வரையில், "அடுத்தவருக்கு என்ன நடக்கிறது? உலகம் ஏன் இப்படி இருக்கிறது? நான் என்ன நினைக்கிறேன்" சொல்லத்துவங்கி, வெட்டி பஞ்சாயத்துப் பேசி நேரம் வீணாகும்.

உங்கள் மனதில் கை வைக்க ஆரம்பித்ததும் 'சப் சப்' என்று உணவை ருசித்து சாப்பிடுவது போன்று, உங்கள் வாழ்க்கையில் 'சப் சப்' என்று ருசித்து ருசித்து சுவைக்கும் சப்தம்தான் கேட்கும்.

வேதனைகளின் சப்தம் கேட்காது.

தியானம்

இந்தத் தியானம் செய்வதற்கு இரண்டே இரண்டு நிமிடங்களே போதும் "வெளியுலக விஷயங்களில் தலையிடுவது போல், உள்ளுலக விஷயங்களில் தலையிட ஆரம்பியுங்கள்" எனும் ஞானக் கருத்தை ஆழமாகத் தியானியுங்கள். வாழ்க்கைக்கான தீர்வுகள் கிடைக்கும்.

வாய்ப்புக் கிடைக்காத தீவிரவாதிகள்

இரண்டு பஸ்ஸைக் கொளுத்தி, பத்து கடைக்குத் தீ, வைத்து மக்களைக் கலங்கச்செய்தால்தான் அது, வன்முறை எனச் சொல்கிறார்கள்.

நிஜத்தில் அது வன்முறையின் ஒரு வெளிப்பாடு மட்டுமே.

வன்முறை, வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படுகிறது. நீங்கள் பேசும்விதம், பார்க்கும் விதம், பொருட்களைக் கையாளும் விதம், என ஒவ்வொன்றிலும் வன்முறை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

அரைமணி நேரம் மனைவியோடு அன்பாகப் பேசிவிட்டு, 'பட்!' எனத் தொலைபேசியை வைப்பதும், நண்பனை வழி அனுப்பிவிட்டு, வீட்டுக்கதவை, 'படார்!' எனச் சாத்துவதும் வன்முறைக்கான எளிய வாழ்வியல் உதாரணங்கள்.

"பற்கள் வன்முறையின் ஆயுதங்கள்" எனச் சொல்லும் தாவோ ஞானியிடம், "அதெப்படி குருவே, பற்கள் ஆயுதங்களாகும்?" எனக் கேட்ட பேராசிரியர், சூயிங்கம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

ஞானி, "ஏன் அடிக்கடி சூயிங்கம் சாப்பிடுகிறீர்கள்?" எனக் கேட்டார்

பேராசிரியர், "சும்மாதான்" எனச் சொல்லி தோள்களைக் குலுக்கிகொண்டார்.

> அரைமணி நேரம் மனைவியோடு
> அன்பாகப் பேசிவிட்டு, 'பட்!'
> எனத் தொலைபேசியை
> வைப்பதும், நண்பனை வழி
> அனுப்பிவிட்டு, வீட்டுக்கதவை,
> 'படார்!' எனச் சாத்துவதும்
> வன்முறைக்கான எளிய
> வாழ்வியல் உதாரணங்கள்.

பதிலைக்கேட்டுச் சிரித்த ஞானி, சற்று தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த பைத்தியத்தைக் காட்டி, "அதைப் பாரும்!" என்றார்.

பைத்தியம் கீழே கிடந்த பெரிய, பெரிய கற்களாகத் தேடி எடுத்து "உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்... போ... செத்துப் போ!" எனச் சொல்லி அந்தக் கற்களை தரையில் 'டடார்!' என எறிந்தது.

அந்தச் செயல் பார்ப்பதற்கே கொடூரமாக இருந்தது. அங்கு இல்லாத யாரோ ஒருவரை அந்தப் பைத்தியம் கொலை செய்துகொண்டிருந்தது.

ஞானி, பேராசிரியரிடம், "இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்டார். பேராசிரியர், "இது விபரீதமான பைத்தியம். வன்முறை நிறைந்தது. வன்முறை பித்துப்பிடித்திருக்கிறது.

திடீரென ஒரு நாள் இந்தப் பைத்தியம் சாதாரண ஒரு மனிதன் மேல் கல்லைத் தூக்கிப்போடாதென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்தப் பைத்தியம் நாட்டுக்குள் உலவ அனுமதிக்கப்படக்கூடாது" என்றார்.

அந்த விளக்கத்தைக் கேட்டு ஞானி சிரிக்கையில்..., அப்பைத்தியக்காரன் அவர்களை நெருங்கிவிட்டான்.

பேராசிரியருக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது.

தினம் தினம் அப்பைத்தியம், அந்த ஞானி தரும் ரொட்டிக்காக அங்கே வருவது வழக்கம். ஞானி அருகே வரும் போது, அப்பைத்தியக்காரன் மிகச்சாதுவாக மாறிவிடுவான். சாதாரண மனிதன் போலப் பேசுவான்.

portrait

> வன்முறை, வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் > வெளிப்படுகிறது. நீங்கள் பேசும்விதம், > பார்க்கும் விதம், பொருட்களைக் கையாளும் > விதம், என ஒவ்வொன்றிலும் வன்முறை > வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இன்று ரொட்டியைப் பைத்தியகாரனுக்குத் தரும்போது, ஞானி அவரிடம் கேட்டார், “ஏன் பெரிய பெரிய கற்களை எடுத்துத் தரையிலடிக்கிறாய்?”

பைத்தியக்காரன் தன் தோள்களை குலுக்கியபடி, “சும்மாத்தான்” எனச் சொன்னான்.

ஞானி பேராசிரியரைப் பார்த்தார்... பேராசிரியரின் தலைக்குள் பெரிய மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் வெடித்தது போலிருந்தது.

ஞானி, “சும்மா அந்தக் கற்களை உங்களால் தூக்கி அடித்துக்கொண்டேயிருக்க முடியுமா? எனக் கேட்டதற்கு, “முடியாது” என்றார்.

ஞானி, “கற்களை சும்மா தூக்கியெறிவது பைத்தியகாரத்தனமென்றால்... சும்மா பற்களை ஒன்றோடொன்று நறநறவென? மோதவிடுவதும், செத்த பாம்பை அடித்துக்கொண்டேயிருப்பதுபோல் சுவையில்லாச் சுயிங்கம்மை பற்களால் வெறுமனே மென்று கொண்டே இருப்பதும் எவ்வகைத்தனம்?” எனக் கேட்டதற்கு...

பேராசிரியரால் பதில் சொல்ல முடியாவிட்டாலும்... 'தன்னிடமிருந்தும் வன்முறைகள் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன?' என்று புரிந்துகொள்ளுதல் நிகழ்ந்ததால், குருவைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தார்.

'தீவிரவாதி' என்பவன், சாதாரண மனிதனை விடக் கொஞ்சம் அதிகமான அளவு வன்முறை கொண்டவன்.

இன்னமும் சொல்லப் போனால், தீவிரவாதிகளுக்கு வாய்ப்புக் கிடைத்ததால்... தூங்கும் வன்முறையை வெளிப்படுத்திவிட்டார்கள் என்பதே உண்மை.

சாப்பிடும்போது, பலர் உணவைப்
பற்களால் கொலை செய்கிறார்கள். சாப்பிடுதல்
சாந்தமாய் நிகழ்வதேயில்லை.

இரண்டு சக்கர வாகனங்களில்
ஆக்ஸிலேட்டரைப் பிடித்துத் திருகும்
விதத்திலேயே, ஒருவரின் வன்முறையைக்

> 'தன்னிடமிருந்தும் வன்முறைகள்
> வெளிப்பட்டுக் கொண்டேதான்
> இருக்கின்றன?' என்று
> புரிந்துகொள்ளுதல் நிகழ்ந்ததும்
> தன்னை முதலில் திருத்திக்
> கொண்டார்.

கண்டுபிடித்து விடலாம். வண்டி "உர்...உர்.." எனக் கூச்சலிட, கூச்சலிட, வண்டியை விரட்டுவதும், குண்டு குழி பார்க்காமல் கண்டபடி வண்டியை ஓட்டுவதும், வன்முறை வெளிப்படும் விதங்களில் ஒன்று.

வன்முறை குறையக் குறைய, ஒரு தகப்பன் தன் குழந்தையைக் கையாள்வதுபோல, உங்களின் இருசக்கர வாகனத்தைக் கையாள்வீர்கள்.

"என்ன நீங்கள்? உயிரில்லாத பொருள் மீதெல்லாம் அன்பு செலுத்தச் சொல்கிறீர்களே!" என நீங்கள் கேட்கலாம்.

அப்படிக் கேட்டாலும், உயிருள்ள பொருட்களிடம் நீங்கள் செலுத்தும் அன்பும், கருணையும் மிக மிக முக்கியமானது என்றே சொல்வேன்.

நீங்கள் கையாள்வது பொருளா, மனிதரா என்பது முக்கியமல்ல. 'கையாளும் விதமே' முக்கியமானது. அப்போது வெளிப்படும் அன்பின் பக்குவமே முக்கியமானது.

ஏனென்றால், பொருட்களை நீங்கள் கையாளும் விதமும், மனிதர்களோடு நீங்கள் பழகும் விதமும், நேரடித் தொடர்பு கொண்டவை.

பொருட்களைப் பதமாய்க் கையாளத் தெரியாதவரால், உறவுகளிடம் இதமாய்ப் பழகுவது என்பது அவரின் கனவில்கூட நிகழ முடியாத ஒன்று.

portrait

நீங்கள் கையாள்வது பொருளா, மனிதரா என்பது முக்கியமல்ல. ‘கையாளும் விதமே’ முக்கியமானது. அப்போது வெளிப்படும் அன்பின் பக்குவமே முக்கியமானது.

பொருட்களைப் பதமாய்க் கையாளத் தெரியாதவரால், உறவுகளிடம் இதமாய்ப் பழகுவது என்பது அவரின் கனவில் கூட நிகழ முடியாத ஒன்று.

கையாளும் விதம், பதமானதாக, இதமானதாக மாற ஒருவரின் நுண்ணுணர்வு அதிகரிக்க வேண்டும். அன்றாடச் செயல்களில், நீங்கள் எப்படிப் பொருட்களைக் கையாள்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள்.

செயல்களில் வெளிப்படும் முரட்டுத்தனம், வேகம், பரபரப்பு, அவமதிப்பாகத் தூக்கி எறிவது, துஷ்பிரயோகம் செய்வது என்ற அனைத்துமே வன்முறையின் வெளிப்பாடுகள்தான். நுண்ணுணர்வோடு உங்களைக் கவனித்தால் மட்டுமே, உங்களைப் பற்றிய முழுக் கண்டுகொள்ளுதல் நிகழும்.

"நான் நல்லவன்!" என வேஷம் போடும் மனதின் பகுதி, இந்த வன்முறைச் செயல்களை இந்நாள் வரை உங்களுக்குத் தெரியவிடாமல் மறைத்திருக்கும்.

"இப்போதுதான் நிஜம் என்ன என்று தெரிந்து விட்டதே. அப்புறமென்ன... முதலில் வன்முறைகளைப் பட்டியலிடுங்கள். அதிகாரியாவீர்கள். பின், வன்முறையை மாற்றிச் சாந்தமாக, இதமாகச் செய்வது பற்றிச் சிந்தியுங்கள். ஆசானாவீர்கள்.

இதமானவராக்குங்கள் உங்களை ... நீங்கள் ஒரு குருவாகவே மாறிவிடுவீர்கள்.

நுண்ணுணர்வின் உச்சம் குருநாதர்.

மகாவாக்கியம்

“இதமாயிருப்பது, அடுத்தவர்களைவிட,
உங்களுக்குள்தான் இதமான
உணர்வை தூவிக்கொண்டேயிருக்கும்”

பதமாய் (பொருட்களை)
கையாளத் தெரிந்தவர்,
இதமாய்
வாழத்தெரிந்தவர்.

ஞானிக்கும்,
எனக்கும்
என்ன வித்தியாசம்
சொல்லுங்களேன்
எனக் கேட்டால்...

ஞானிகள்
இதமானவர்கள்.
ஒரு பொருளைக்கூட,
ஒரு குழந்தையை போல்
அன்பாய் தொடும்
பதம் நிறைந்தவர்கள்,
என்பதே
என் பதில்.

நீங்கள்
பெற ஏங்குவதும்,
நீங்கள்
தர மறுப்பதும்,
இதமளிக்கும்
குணத்தைத்தான்,
பேச்சைத்தான்,
தொடுதலைத்தான்.

இதம்
அது...
கேளுங்கள்,
கொடுக்கப்படாது.
கொடுங்கள்,
கிடைக்கப்பெறும்.
அதில் மூங்குமளவுக்கு
கிடைக்கப்பெறும்

முரட்டுத் தனமாய்ப் பொருட்களைக் கையாள்பவரிடம் பெண் பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்காதே!

  • சீனப் பழமொழி

தீவிரவாதம் என்று ஒழியும்?

-ஜாபர்கான், உத்தண்டி

என்றும் ஒழியாது.

இன்று ஒழிந்தால், என்றும் ஒழிந்து விடும். இன்று ஒழியாவிட்டால், என்றும் ஒழியாது. இது என்றென்றைக்கும் பொருந்தும்.

வன்முறையாய்ச் செயல்படுவதில் ph.d செய்தவர்களைத் தீவிரவாதிகள் எனச் சொல்லி... மனிதர்கள்தான் மிக நியாயமானவர்கள் எனத் தப்பிக்கவே முயற்சி க்கிறார்கள். தீவிரவாதிகளுக்காவது, அவர்களின் தீவிரவாதத்துக்கு நியாயமான ஒரு காரணம் சொல்ல முடியும்.

நம்மிடம், நம் கரடுமுரடான அணுகுமுறைகளுக்கும், எளிதாய்க் கண்டுபிடிக்க முடியாத நம் வன்முறைச் செயல்களுக்கும், என்ன காரணம் சொல்ல முடியும்?

தனிமனிதத் தீவிரவாதம்தான் முதலில் தீ வைக்கப்பட வேண்டும். அது ஒழியாத வரை, அது புதுப்புது தீவிரவாதிகளை உற்பத்தி செய்துகொண்டேதான் இருக்கும்.

ஜென் ஞானியிடம், "சீர்திருத்த எண்ணங்களைக் கொண்டவன் நான் எனக் காட்டிக்கொள்ளும் வகையில், நம் நாட்டில் உள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை நான் ஓயமாட்டேன்!

இதற்காக என் உயிரைக் கூடப் பணயம் வைக்கத்தயார்.

யார் என்னோடு வரத் தயார்?" என வெடிக்கும் குரலில் கண்கள் சிவக்க கரங்கள் நடுங்க, சத்தமிட்டுப் பேசினான் அந்த இளைஞன்.

அறையில் அமைதி. அந்த இளைஞரின் கண்களை ஊடுருவிப் பார்த்த ஞானி கேட்டார், "நீ செய்யத் துடிப்பது என்ன வகையான தீவிரவாதம்?"

அந்த இளைஞருக்கு ஜென் ஞானி அளித்த அந்த பதில்தான், இந்த கேள்விக்குமான பதில்..." முதலில் உள்ளுலகைச் சீர் செய்வோம். பின் வெளிஉலகில் தீவிரவாதம் ஒழிப்பது பற்றி யோசிக்கலாம்."

பிரச்சினைகள் எல்லாமே மாற்ற முடிந்தவையே..

★ என் அன்பு உண்மையானது என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது?

உங்களெதிரே இருக்கும் உயிர், இந்த வாழ்வைக் கொண்டாட கிடைத்த ஒரு வாய்ப்பு.

இவரோடிருப்பதே பெரும்பாக்கியம். இவரோடு சிரிப்பதும், பேசுவதும் அதிர்ஷ்டம். என்ற உணர்விலேயே தொடர்ந்து வாழ முடிந்தால், நீங்கள் உண்மையானவர் என உறுதி செய்து கொள்ளலாம்.

★ கடவுள் ஏன் என்னை அடிக்கடி தண்டிக்கிறார்? உண்மையான பதில் வேண்டும்.

இவரோடிருப்பதே
பெரும்பாக்கியம்.
இவரோடு சிரிப்பதும்,
பேசுவதும் அதிர்ஷ்டம். என்ற
உணர்விலேயே தொடர்ந்து வாழ
முடிந்தால்,
நீங்கள் உண்மையானவர் என
உறுதி செய்து கொள்ளலாம்.

உண்மையான பதிலைக் கேட்டதால், ஒரு ஜென் கூற்றை இங்கு குறிப்பிடுகிறேன். அது...

"உங்களைத் தண்டிக்கும் அளவுக்குத் தாழ்ந்தவரல்ல கடவுள்.

கடவுளிடமிருந்து தண்டனை பெரும் அளவுக்கு நீங்கள் உயர்ந்தவருமில்லை"

★ தண்டனை பெற தவறு செய்தால் போதுமே. அதற்குத் தகுதியெல்லாம் ஏன் வேண்டும்?

கடவுள் கருணை மயமானவர் என்பதால், அவர் உங்களைத் தண்டிக்க மாட்டார். எப்போது உங்களை நீங்களே செதுக்கத் தயாராகிறீர்களோ, அப்போது கருணையின் இன்னொரு வடிவமாகக் கடவுளின் கருணைச் செயல்கள் தொடரும்.

அந்த நிமிடங்களில் உங்களைச் செதுக்கும் சம்பவங்களை நீங்கள் தண்டனை என அழைக்கலாம்.

இப்படி உங்களை நீங்களே செதுக்க ஆரம்பிக்காததற்குமுன், சுய மனத்தடைகளால் சில கஷ்டங்கள் வரலாம். அவற்றைக் கூட நீங்கள் தண்டனை என அழைக்கலாம்.

★ நண்பர்கள் பற்றி...?

எதிரிகளை விட, ஆபத்தானவர்கள்.

★ எதிரிகள்?

நண்பர்களைவிட, நிறைய நல்லது செய்பவர்கள், உங்களின் குருமார்கள்.

★ என்னது! எதிரி குருவா?

‘குரு’ என்றால் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அதைச் சொல்லுங்கள் முதலில்!

Nithyananda

கடவுள் கருணை மயமானவர் என்பதால், அவர் உங்களைத் தண்டிக்க மாட்டார். எப்போது உங்களை நீங்களே செதுக்கத் தயாராகிறீர்களோ, அப்போது கருணையின் இன்னொரு வடிவமாகக் கடவுளின் கருணைச் செயல்கள் தொடரும்.

★ குரு என்பவர் பெரிய பெரிய உண்மைகளைச் சொல்பவர். மனிதர்களுக்கு வாழ்க்கைபாடம் கற்றுத் தருபவர். சரிதானா?

சரியே!
உலகம் இவ்வளவுதான்,
மனிதர்கள் இவ்வளவுதான்.

யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படியும் மாறலாம் எனும் வாழ்க்கைப் புதிர்களை அனுபவப் பாடங்களாக உங்களுக்குத் கற்றுத்தந்தவர்கள் எதிரிகள் தானே!

★ உண்மையான தியானம் எது?... என்பதைக் கண்டுகொள்வதெப்படி?

தியானம் செய்யும்போது, விறுவிறுப்பு மட்டுமே கிடைத்தால், அது தியானமல்ல.

தியானம் தியான சக்தியைத் தருவதோடு நிற்காமல்...

உங்களுக்குள் அமைதியையும், குண பக்குவத்தையும் நிறையச்செய்தால், அதுவே அது!

★ உண்மையான குருவைக் கண்டு கொள்வது எப்படி?

ஒருமுறை குருவை நேரில் பார்த்தபின், நீங்கள் நினைக்காமலே உங்களின் நினைவலைகளில் மீண்டும் மீண்டும் வருகிறாரா... அவரே அவர்!

★ வெளியுலக வாழ்க்கையில் இருப்பவர், ஆன்மீக வாழ்க்கைக்குள் நுழையலாமா?

வாழ்க்கை ஒன்றே, அது இந்த உலக வாழ்க்கை.

நீங்கள் குடும்பத்தில் இருந்தாலும்,
தனியாளாக இருந்தாலும், ஒரே உலகத்தில்தான்
இருக்கிறீர்கள்.

ஆனந்தமாக வாழ, நீங்கள்
முடிவெடுத்துவிட்டால்,
எங்கிருந்தாலும்
தவறில்லை. ஆன்மீகம்
உங்களுக்கானதே!

ஆனந்தமாக வாழ, நீங்கள் முடிவெடுத்துவிட்டால், எங்கிருந்தாலும் தவறில்லை. ஆன்மீகம் உங்களுக்கானதே!

சிறு வயதில் நிறைய திருடியிருக்கிறேன். இப்போதுகூட அந்த குணம் அடிக்கடி மேலெழும்புகிறது. என்ன செய்வது?

-ரமேஷ், திருச்சி.

திருடுவது ஜீன் சம்பந்தப்பட்டது என சிலர் வாதிடுகிறார்கள். என்னை பொருத்தளவு, அது விழிப்புணர்வு சம்பந்தப்பட்டது.

நோய்களையும், குணங்களையும் ஜீன்கள்தான் நிர்ணயிக்கின்றன என்றால், அந்த ஜீன்களை நிர்ணயிப்பது யார்?

உங்களுடைய பிரச்சினை ஒன்றும் மாற்றவே
முடியாத பிரச்சினை அல்ல. இனி ஒருமுறை
அதுபோல் செய்யத்தோன்றினால், முழு
விழிப்புணர்வுக்கு வாருங்கள்.

விழிப்புணர்வு எனும் நெருப்புக்கு முன்,
அந்தக் குணக்குறைகள் இருக்கும் இடம்
தெரியாமல் ஓடி ஒளிந்து கொள்ளும்.

இந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்.

உங்களுக்கு அவரைப்பற்றி முன் பின் எதுவும் தெரியாது. ஆனால் அவரால் உங்களுக்கு ஒரு நன்மை நடந்தாக வேண்டும்.

அவருடன் நீங்கள் கட்டாயம் அறிமுகமாக வேண்டும்.

காரியத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, வெறும் சம்பிரதாயத்திற்காக உதட்டளவில் மட்டும் வணக்கம் என்று சொல்லிப்பாருங்கள்.

அவரிடமிருந்து மலர்ந்த சிரிப்பு பதிலாய் வரும்.

அதன்பின் நடக்கும் உரையாடல், சுவாரஸ்யமாகத்தானே அமையும்.

இது உறவுகளுக்குள் இணக்கத்தை ஏற்படுத்தி, உங்களின் வலைக்குள் கட்டி இழுத்து வந்துவிடும்.

சாதாரணமாக, வெறுமனே இரு கரங்களைக் குவித்து, வணக்கம் என்று சொன்னதற்கே இப்படியென்றால், முழுமையான விழிப்புணர்வோடு உணர்ந்து, இரு கரங்களையும் முகத் திற்கு நேரே உயர்த்தி, வணக்கம் என்று சொல்லிப் பாருங்கள்.

அவர் மலர்ந்ததைப் போன்று, நீங்களும் மலர்வீர்கள்.

அவரை வளைத்தது போன்றே, உங்களையும் மொத்தமாக உங்கள் கட்டுக்குள் வளைத்து விடுவீர்கள்.

ஒவ்வொரு முறை நீங்கள் ஆழ்ந்து சொல்லும்போது, அந்த இனிமை, ஆழமாய் உங்கள் மனதில் பதிந்து, உங்களை அருமையானவராக மாற்றும் தியானமாய் அமையும்.

Portrait of Nithyananda