தியானக் கதம்பம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அறிவைத் தாண்டி உழையுங்கள்
- உங்கள் மகனை முட்டாளாக்க வேண்டுமா?
பெற்றோர்: "என் மகன் எல்லா மாணவர்களும் படிக்குமளவுக்கு படிக்க விரும்பவில்லை. மிகவும் துரிதமாக, இவன் கல்வி கற்பதற்கு ஏதாவது குறுக்கு வழி உண்டா? இருந்தால் சொல்லுங்கள்."
முதல்வர்: "உமது மகனை ஓர் அடிமுட்டாள் ஆக்க வேண்டுமென்றால், ஒரு மாதத்தில் அதை செய்துவிட முடியும்.
ஆனால் இவனை ஒரு சிறந்த கல்விமானாக, அறிவாளியாக ஆக்க வேண்டுமானால், அதற்கு சற்று அதிக காலந்தான் ஆகும்."
☞ இந்த சுவாரஸ்யமான உரையாடல், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கார்ப்பீல்டு, கல்லூரி முதல்வராக இருந்தபோது ஒரு செல்வந்தப் பெற்றோரோடு நடத்திய உரையாடல்.
நிமிட நேர
சுதந்திரத்திற்காக
ஐம்புலன்களை
அழிக்கின்றார்கள்,
மனிதர்கள்.
- நிமிட நேர சுதந்திரத்திற்காக ஐம்புலன்களை அழிக்கின்றார்கள், மனிதர்கள்.
நான்கு இட்லி போதுமெனக் தோன்றிய பின், இன்னும் இரண்டை உள்ளே அனுப்புவது...
கண் எரிய... எரிய ஒரு நாள் கூத்துக்காக, விடிய, விடிய கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது....
தனக்குப் பிடிக்கும் என்பதற்காக அது தவறே ஆனாலும், திரும்ப திரும்ப செய்து பார்ப்பது ஆகிய அனைத்துமே குறுக்கு வழியில் தேடப்படும் ஆனந்தங்கள்.
நிஜமான ஆனந்தத்திற்கு, குறுக்கு வழிகள், சறுக்கல் பாதைகளாக மட்டுமே அமையும்.
☞ நிஜ ஆனந்தத்தைப் பெற, நியாயமான உழைப்பே தீர்வாக இருக்க முடியும்.
• மரணமில்லா அமிர்த குளம்
பகவான் இராமகிருஷ்ணர், ஒருநாள் தன் சீடர்களிடம் மிக அழகான கேள்வியைக் கேட்டார், "நீங்கள் ஒரு ஈயாக மாறியுள்ளீர்கள். அப்பொழுது, உங்கள் எதிரே அமுதம் நிறைந்த ஒரு கோப்பை இருக்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" எனக் கேட்டார்.
சுவாமி விவேகானந்தர் வேகமாக எழுந்து, மிகத்தெளிவாக பதில் சொன்னார், "நான் கோப்பையின் விளிம்பில் கவனமாக உட்கார்ந்து அமுதத்தைப் பருகுவேன்.

நிஜமான ஆனந்தத்திற்கு, குறுக்கு வழிகள், சறுக்கல் பாதைகளாக மட்டுமே அமையும்.
நிஜ ஆனந்தத்தைப் பெற, நியாயமான உழைப்பே தீர்வாக இருக்க முடியும். அவசரப்பட்டு கோப்பையிலுள்ள அமுதத்தில் விழுந்து உயிரை விடமாட்டேன்” என்றார்.
பகவான் சிரித்துக்கொண்டே, “அமுதத்தை உண்டவர்களுக்கு மரணமே இல்லை. அப்படியிருக்க....விளிம்பல் உட்கார்ந்தால் என்ன? அமுதத்திலேயே விழுந்தால் என்ன?” என்றார்.
☞ வாழ்வு ஓர் அமிர்தகுளம். உங்களின் சிறிய ஆசைகள், குளத்தின் விளம்பில் மட்டுமே உட்காரவைக்கும்.
ஆசைகளைக் கடந்து,
வாழ்வில் குதித்தால்,
அல்லல் படமாட்டீர்கள், அழிந்து போக மாட்டீர்கள்.
மாறாக ஆனந்தப்படுவீர்கள். அருமையானவராக ஆகிவிடுவீர்கள்.
- அறிவைத் தாண்ட உழையுங்கள்.
ஆச்சார்ய வினோபாபாவே, ஒருமுறை தான் பெற்ற உயர் கல்விக்கான பட்டயச் சான்றிதழ்களை, தீயிலிட்டுக் கொளுத்தினார்!
அதைக் கண்ட அவரின் தாயார், “புத்தி கெட்டுப்போய் விட்டதா?” எனக் கடிந்து கொண்டார்.
அதற்கு வினோபா பாவே, “வெறும் பட்டங்கள் மட்டுமே மனித வாழ்வை உயர்த்திவிடுவதில்லை. கடுமையான உழைப்புத்தான் வாழ்க்கையை உயர்த்தும். அதனால் வெள்ளைக்கார அரசாங்கம் கொடுத்த பட்டங்கள் பற்றிக் கவலைப் படாதே” என்றார்.
> வெறும் பட்டங்கள்
> மட்டுமே மனித வாழ்வை
> உயர்த்திவிடுவதில்லை.
> கடுமையான உழைப்புத்தான்
> வாழ்க்கையை உயர்த்தும்.
“அறிவாளியால் மட்டுமே, தன் அறிவு உபயோகமற்றது” என்று அறிவிக்க முடியும்.
எல்லா அறிவும், அறிவைத் தாண்டிய அனுபவத்திற்கும், உங்களை அழைத்துச் செல்லும் படகுகள் மட்டுமே.
துன்பக் கடலில் தத்தளிக்கும் மனிதருக்குக் கிடைக்கும் சிறு படகாகிய அறிவிலேயே, சிக்கிக் கொள்ளக் கூடாது.
படகில் சிக்கிக் கொண்டால் பாதி கடலிலேயே உயிரைப் பிரிய வேண்டியிருக்கும்.
அறிவைத்தாண்ட உழையுங்கள்!.
அறிவைத்தாண்டி ஆனந்தமாக இருப்பீர்கள்!.
காதல் புதிரா? புனிதமா?
- முரளி, சேலம்.
காதல் புதிருமல்ல, புனிதமும் அல்ல.
அது புதியது, புரியாதது.
அதனால், புதிராகிறது, புரியாத அந்த உணர்வு.
உங்களுக்குப் பிடித்துப்போனதால், அது புனிதம் எனத் தெரியும்.
அந்த உணர்வு புதியது.
எனவே, அது புனிதமாய்,
புதிராய் தெரிகிறது அவ்வளவே.
தியானம்
நெப்ட்யூன் கிரகம், ஒருமுறை சூரியனை சுற்றி முடிக்க 164.8 வருடங்கள் ஆகின்றன.
ஒருவேளை, நீங்கள் நெப்டியூன் கிரகத்தில் வாழ்ந்தால், உங்களின் ஒன்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு, 1500 வருடங்கள் ஆகியிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
"பூமியில் எனக்கு வயது 9" எனச் சொல்வதற்கும், "நெப்டியூனில் எனக்கு வயது ஒன்பது" என்று சொல்வதற்கும் சம்பந்தமே இல்லை.
அதேபோல்தான், உங்களின் உற்சாகம்மிகு மனதின் வார்த்தைகளுக்கும், சோர்வு மிகுந்த மனதின் வார்த்தைகளுக்கும் சம்பந்தமேயில்லை.
இரத்தக் குழாய்க்குள் சிரஞ்சி மூலமாகப் பாய்ச்சப்படும் குளுக்கோஸ் நீருக்கு இணையானது, சுயமதிப்பு (Self respect)
உங்களை நீங்களே மதிப்பது, சோர்ந்த மனசுக்குள் உற்சாகத்தைப் பீய்ச்சும் சிரஞ்சுக்குச் சமம்.
மதித்துப் பாருங்கள், மனம் மாறும். அது நெப்ட்யூன் போல மந்தமானதாக இருந்தால்கூட, உயிருள்ள பூமி போல் இயங்க ஆரம்பிக்கும்.
நல்லவராவது எளிது
* ரமேஷ் : “சுரேஷ், உங்கப்பா ஒரு டீச்சர் தானே?
ஆனா, உங்க அக்காவுக்கு ஒரு
லெட்டர் கூடப் படிக்கத்தெரியலையே...”
சுரேஷ் : “அதனாலென்ன?
உங்கப்பாகூட தான் ஒரு பல் டாக்டர்...
ஆனா உன் தம்பிக்கு ஒரு பல்லு கூட இல்லை.”
பதிலுக்கு பதில் பேசுவது பெரிதல்ல. பதில் தருவதற்குப் பதில், பதிலடி கொடுப்பதிலேயே எல்லோரும் குறியாயிருக்கிறார்கள். இது சாதனையல்ல, வேதனை.
பதிலுக்கு பதில்
பேசுவது பெரிதல்ல.
பதில் தருவதற்குப் பதில்,
பதிலடி கொடுப்பதிலேயே
எல்லோரும்
குறியாயிருக்கிறார்கள்.
இது சாதனையல்ல,
வேதனை.
பதிலடி கொடுப்பதைமட்டும்
நிறுத்திப்பாருங்கள். இவர் ரொம்ப நல்லவர்.
இவரிடம் பேசிக்கொண்டே இருக்கலாம்.
இவரிடம் பேசிக்கொண்டேயிருந்தால், நேரம்
போவதே தெரியாது என மற்றவர்கள் சொல்லும்
அதிசயம் நிகழக் காண்பீர்கள்.
★ நடிப்பதை விட, வடிப்பதே மேல் :
கணவர் : “என்னப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கிற ? என்னை என்ன ‘நாய்’ன்னு நினைச்சியா?
மனைவி : “கடவுளே, உங்களை நான் அப்படி நினைப்பேனா? கொஞ்சம் நேரம் குலைக்காம இருங்களேன்.”
உங்களால் நடிக்க முடியாது. நடிக்க முயற்சிப்பது, ஆற்றுக்குள் விட்டக் காற்றுக் குமிழிக்குச் சமம். அது எவ்வளவுதான் அமைதியாயிருக்க முயற்சித்தாலும், அதையும் மீறி வெளியே வந்துவிடும்.
அதேபோல்தான், உங்களின் குணாதிசயங்களை, உங்களால் மறைக்க முடியாது. அப்படியே மறைத்தாலும், மேலே உள்ள சம்பவத்தில் வெளிப்படுவது போல் வெளிப்பட்டே தீரும்.
எனவே, நடிக்க முயற்சிக்காதீர்கள். உங்களை நன்றாய் வடிக்க முயற்சி செய்யுங்கள்.
★ அதீதப் பசி ஏன்?
“23 வயதுதான் ஆகிறது. ஆனால் பார்ப்பதற்கு 45 வயதுக்காரர் போல் உடல் பெருத்துவிட்டது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
இதைவிட இன்னும் கொடுமையான விஷயம், என்னால் பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 24 மணிநேரமும் சாப்பிட வேண்டும் என்பது போலவே இருக்கிறது. இதிலிருந்து விடுபட வழி என்ன?”.
அதிக உணவெடுத்துக்கொள்வது, உங்களின் ஏக்கத்தைத்

உங்களின் குணாதிசயங்களை உங்களால் மறைக்க முடியாது. அப்படியே மறைத்தாலும், மேலே உள்ள சம்பவத்தில் வெளிப்படுவது போல் வெளிப்பட்டே தீரும். எனவே நடிக்க முயற்சிக்காதீர்கள். உங்களை நன்றாய் வடிக்க முயற்சி செய்யுங்கள். தீர்த்துக்கொள்ளும் ஒருவடிகால்.
நீங்கள் எதிர்பார்க்கும் அன்பு கிடைக்காதபோது, ஆழ்மனம் இப்படித் தன்னைத் திருப்திபடுத்திக்கொள்ள ஆரம்பிக்கும்.
அன்பு கிடைக்காமைக்கும், அதீதப் பசிக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சி அறிக்கை சொல்கின்றது. கிடைக்காத அன்பிற்காக ஏங்குவதை நிறுத்தினாலே உங்களின் மொத்தப் பிரச்சினையும் சரியாகிவிடும்.
தியானம்

"அப்பா, என்ன சோர்வாக இருக்கா?
ஒரு காபி சாப்பிட்டா நல்லாயிருக்கும்ல...?",
என்று உடலை ஐந்து நிமிடங்களாவது தளர்வாக வைக்க நினைக்கும், நேரம் ஒதுக்கும், உள்ளத்தைச் சட்டை செய்வதில்லை. எப்போதும் வேலை, வேலை என்று வேலையின் பின் ஓடிக்கொண்டே இருந்தால், வெகு விரைவில் வாழ்க்கை மீது வெறுப்புத்தான் மிஞ்சும்.
வாழ்வின் சாரம் குறையாமல் இருப்பதற்கு, உள்ளத்தை உற்சாகமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
வாழ்வில் ருசியை அதிகரிக்க, இந்தத் தியானம் மிக அருமையான உணவாக அமையும்.
ஐந்து நிமிடமே ஆகும் இந்தத் தியானத்தை, நீங்கள் சோர்வாய் உணரும் போதெல்லாம் செய்து வாருங்கள். ஐந்து நிமிடங்கள், சிலைபோன்று, உடலில் எந்த அசைவும் இல்லாமல், உங்களை நீங்களே சாட்சியாகப் பாருங்கள்.
இவ்வாறு, உங்களுக்காக, உள்ளுக்குள் செலவிடும் ஐந்து நிமிடங்கள், உங்களை அடுத்தடுத்து முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
ஆசைகளை ஆராய்ச்சி
செய்யுங்கள்
வாய்ஜாலம் வேலைக்காகாது :
நிரஞ்சன்: “அய்யா, பத்து வருஷத்துக்கு முன்னே, ஒரு பத்து ரூபா என்கிட்டேயிருந்து கைமாத்து வாங்கினீங்களே.... உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”
கோபி: “அட! இருக்காதா பின்னே. என்ன சார், என்னைப் போய் இப்படிக் கேட்டுட்டீங்களே.
நான் நாணயஸ்தன் சார் ... இன்னும் பத்து வருஷம் கழிச்சுக் கேளுங்க.
அப்பவும் கரெக்டா ஞாபகம் வச்சிக்கிட்டிருப்பேனாக்கும் ...!”
வாய்ஜாலத்தை வைத்து வயிற்றில் அடித்து வாழலாம். ஆனால், அது உங்கள் மனதின் அடி ஆழத்தில் செருகப்படும் முட்களாகச் சேர்ந்து கொண்டேயிருக்கும்.
பாவங்கள் என்று குறிப்பிடப்படும்
தொல்லைகளை, நீங்கள்
மற்றவர்களுக்குச் செய்யும்போது
பயன்படுத்தும் வார்த்தைகள்,
உங்கள் மனதில் செருகிக்
கொள்ளும். அவை உங்களின்
மன அமைப்பையே மாற்றும்.
உங்கள் பாவ புண்ணியங்கள், உங்களைப் பாதிக்காது. ஆனால், பாவங்கள் என்று குறிப்பிடப்படும் தொல்லைகளை, நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும்போது பயன்படுத்தும் வார்த்தைகள், மனதில் செருகிக் கொள்ளும். அவை உங்களின் மனஅமைப்பையே மாற்றும். ஜென்ம ஜென்மத்திற்கும் தொந்திரவு கொடுக்கும் தொல்லை விதைகளாக அவை மாறிவிடும். எனவே, வாய்ஜாலத்தைப் பற்றியும், கஷ்டப்படுத்தும் வார்த்தைகளைப் பற்றியும் மிகச்சரியாக இருங்கள்.
விவஸ்தை கெட்ட செயல் :
சங்கர் : "எங்கப்பா மாதிரி, நானும் ஒரு கலெக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன்!"
ராஜ் : "அப்போ, உங்கப்பா, இப்ப கலெக்டராவா இருக்காரு?"
சங்கர் : "இல்லை... அவரும் சின்ன வயசுல, கலெக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டாராம்!"
பலரின் மனம் ஆசை மேகங்களிலேயே மிதந்து கொண்டிருக்கிறது.
ஆசைகள் விவஸ்தை கெட்டவை.
அவை திறந்த வீட்டில் நுழையும் நாய்கள்.
இருக்க இடம் கொடுத்தால், படுக்க படுக்கையறை கேட்கும் சோம்பேறிகள்.
நம் வாழ்வின் பல பகுதிகளைத் தின்று கொண்டிருக்கும் இந்த ஆசைகள், ஈவு இரக்கமின்றி துரத்தப்பட வேண்டியவை.
எப்படி விளையாடுவது?

வெற்றி, தோல்வி என்னும் வெறி உணர்வுகள் இல்லாமல் விளையாடத் தெரிந்தால், அது வெறும் விளையாட்டாக இருக்காது. மகிழ்ச்சி தரும் தியானமாக அது மாறிவிடும்.
அப்பா : “என்னடா, எல்லா விளையாட்டுலயும் தோத்துப் போய்ட்டியாமே ... ?"
பையன்:“அட, நானாவது தோற்பதாவது ?....அது சும்மா விளையாட்டுக்கு விளையாடினேம்ப்பா...!"
விளையாட்டுக்கள் விளையாட்டுகளாகவே இருக்க வேண்டும்.
அவை என்றும் போட்டிகளாக மாறக்கூடாது.
விளையாட்டு போட்டியாக மாறுவது, அருமையான பால், திரிந்து போவதற்குச் சமம்.
வெற்றி, தோல்வி என்னும் வெறி உணர்வுகள் இல்லாமல் விளையாடத் தெரிந்தால், அது வெறும் விளையாட்டாக இருக்காது. மகிழ்ச்சி தரும் தியானமாக அது மாறிவிடும்.
வெறியுணர்வு இல்லாமல் விளையாடிப் பாருங்கள்.
விளையாட்டின் மகத்துவம் புரிய வரும்.
★ உடல்வலி என்பது என்ன? அது எதனால் வருகிறது?
உடல்வலி என்பது, உடலின் அந்தப்பகுதி குணமடைந்து கொண்டிருப்பதற்கான ஆதாரம். அல்லது உடலின் தனிப்பட்ட ஞானமானது (Body intelligence) விழித்துக் கொண்டு உடலின் பிரச்சினைக்குரிய பகுதியைக் குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. அதுவே, மனதால் வலி என்று அறியப்படுகிறது.
தியானம் செய்தால், உடலின் தனிப்பட்ட ஞானம் (Body intelligence) அதிகரிக்கும்.
தியான சக்தி உடலெங்கும் பரவும்.
நோய்கள் வெகு எளிதாக, வெகு சீக்கிரமாக
இருக்கும் இடம் தெரியாமல் பறந்துபோகும்.
தியானம் செய்தால்,
உடலின் தனிப்பட்ட ஞானம்
(Body intelligence)
அதிகரிக்கும்

# தியானம்
“அட, என்ன உலகம் இது?
சண்டை, சச்சரவு, துக்கம், வறுமை, போர், பட்டினி ....”
இப்படி எளிதாக அடுக்கிக் கொண்டே செல்லலாம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இது மனம் சொல்லும் பக்கா டயலாக்குகள்.
உலகம் இப்படி இருக்க, ‘நான் காரணமில்லை, நீ காரணமில்லை’ என்றால், யார் காரணமாக இருக்க முடியும்?
நாம் ஒவ்வொருவரும்தான் காரணம்.
நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு.
நமது அமைதியில்லாத மனமும், எதிர்மறை எண்ணங்களும் தான் (Negative thoughts) காரணம்.
அரைமணி நேரம் இந்தத் தியானத்திற்காக ஒதுக்குங்கள். நீங்கள் அன்பு மயமாக்கிவிடுவீர்கள்.
தியான பயிற்சி:
பத்மாசனத்தில் அமருங்கள்.
உங்கள் தலை, கழுத்து, முதுகெலும்பு ஆகியவை நேர்க்கோட்டில் இருக்கட்டும்.
கண்களை மூடி ஆழ்ந்து சுவாசிக்கத் துவங்குங்கள்.
உங்கள் கவனம் முழுவதையும் சுவாச ஓட்டத்தில் பதித்திடுங்கள்.
பிராண ஓட்டம் (சுவாசம்) வெளியிலிருந்து உள் செல்வதையும்; உள்ளிருந்து வெளியில் செல்வதையும் விழிப்புணர்வோடு சாட்சியாகக் கவனியுங்கள்.
மனம் அமைதியாகி, மகானாவீர்கள்.
மனம் செய்யும்
மாயாஜாலம்
உங்களை பிறக்க வைப்பது யார்?
சாது: “திடீர்னு முன் பிறவி ஞாபகம் வந்ததும், நிறையப் பேரைப் பார்த்து ஓடி ஒளியுறீங்களாமே.. ஏன்?”
கமலன்: “உஷ்... வேறு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். போன பிறவியில் அவர்களிடம் எல்லாம் நான் கடன் வாங்கியிருந்தது ஞாபகத்திற்கு வந்திருச்சி அதான்...”
நல்லவேளை, பிறக்கும் போதே உங்களின் முற்பறவிகளைப்பற்றிய நினைவுகள் மறந்து போகின்றன. ஒரே ஒரு பிறவியில் நீங்கள் பட்ட பாடுகளை நினைவுபடுத்திவிட்டால் போதும், உங்களின் மனம் தாங்காது. அது அழுதே வெடித்துவிடும்.
ஒவ்வொருபிறவியிலும், வெவ்வேறு விதமாய்
நீங்கள் பல பாடுகளை அனுபவித்திருந்தும்,
மீண்டும் பிறவி எடுக்கிறீர்கள்.
நன்றாய் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்,
உங்களின் ஒவ்வொரு பிறவியும்
நீங்களாய் விரும்பி எடுக்கும் பிறவி அல்ல.
மனம் எடுக்கும் முயற்சியே,
உங்களின் ஒவ்வொரு பிறவியும்.
நீங்கள் தடுக்காதவரை, மனம்
முயன்று கொண்டேயிருக்கும்.
பாடுகள் தொடர்ந்து
கொண்டேயிருக்கும்.
அரைகுறையாய் உலகை அனுபவித்து விட்டு, 'இந்த முறையாவது விட்ட குறை தொட்டுகுறையாக விட்டுவந்த ஆசைகளை அனுபவித்து விடலாமே' என எண்ணுவதால், மனம் எடுக்கும் முயற்சியே, உங்களின் ஒவ்வொரு பிறவியும்.
நீங்கள் தடுக்காதவரை, மனம் முயன்று கொண்டேயிருக்கும். பாடுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
இனி என்ன செய்வது?
முடிவு உங்கள் கையில்.
பெரியவர்கள் செய்யும் செயலல்ல இது.
அப்பா : "என்னடா, ஸ்கூலுக்கு எல்லாம் ஒழுங்கா போறியா?அங்கு ஒழுங்கா படிக்கிறியா?"
மகன் : "என்ன கேள்வி இது? நீங்க ஆபீஸ்ல ஒழுங்கா வேலை செயிறீங்களான்னு என்றைக்காவது கேட்டிருக்கிறேனா?"
பெரியவர்கள் என்றாலே, எதையாவது தோண்டித் தோண்டிக் கேட்டுக்கொண்டேயிருப்பது என்ற பழக்கம் முடிவிற்கு வரவேண்டும்.
குற்றங்களைக் கண்டுபிடித்து, சிறியவர்களைக் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்துவது பெரியவர்கள் செய்யும் செயலல்ல. குறைகளைக்கூட பாங்காய்ச் சுட்டிக்காட்டி, அவருக்குள் உற்சாக உணர்ச்சி பீறிட்டு எழும்பும் அளவிற்கு, அருமையாய், அழகாய்ப் பேசத்தெரிந்தவர்களே பெரியவர்கள்
நீங்கள் பெரியவர்களா?

குற்றங்களைக் கண்டுபிடித்து, சிறியவர்களைக் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்துவது பெரியவர்கள் செய்யும் செயலல்ல. குறைகளைக்கூட, பாங்காய்ச் சுட்டிக்காட்டி, அவருக்குள் உற்சாக உணர்ச்சி பீறிட்டு எழும்பும் அளவிற்கு, அருமையாய், அழகாய்ப் பேசத்தெரிந்தவர்களே பெரியவர்கள்
வெறுப்பு ஆணி அடித்து மாட்டப்படுவது எப்படி?
மேனேஜர் : “ஏன் லேட்டு? நாளைக்கு வர வேண்டியதுதானே?”
புதுப்புயூன் : “டிரெயின் வரலை. அதான் லேட் சார்.”
மேனேஜர் : “டிரெயினா... நம்ம ஊருக்கு ஏது டிரெயின்?”
புதுப்புயூன் : “அது தெரியாமத்தான் சார் ரொம்ப நேரமா காத்திருந்திட்டு, டிரெயின் இல்லேன்னு தெரிஞ்சதும், பஸ்ல வரேன்...”
நிஜமாய் சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாளின் பல நேரங்களில் நாம் தலைமறைவாகிவிடுகிறோம்.
இருக்கும் இடத்தை விட்டு!
செய்யும் செயலை விட்டு!
எங்கோ எகிறிக் குதித்து ஓடுகிறோம். சைக்கிள் ஓட்டுகிறோம் என்பதை முழுமையாய் மறந்துவிட்டு, எதையோ கற்பனை செய்து கொண்டோ, பாடிக்கொண்டோ, சைக்கிள் ஓட்ட முடியும்.
அப்புறமாய் திடீரென, “ஓ! நாம் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிறோமா!” என ஆச்சரியப்பட்டு தொடர்ந்து சைக்கிள் ஓட்டவும் முடியும்.
இது பாதகமானது.
நெருங்கிய உறவுகளோடு இருக்கும்போதுகூட இப்படி மனமானது எங்கோ ஊர் சுற்றப்போய் விடுவதால்தான் மனஸ்தாபங்கள் வருகின்றன.
“நீங்கள் என்னைப் புரிந்து
கொள்ளவில்லை” என ஆணித்தரமாய்ச்
சொல்கிறார்கள்.
வெறுப்பு, கோபம் இப்படித்தான் மனதில் ஆணியடித்து மாட்டப்படுகிறது.
கல்யாணம் என்பது
Share market
அல்ல.
கல்யாணம் செய்து கொண்டால் நிம்மதியாக வாழவே முடியாதா?
- ரவி, சேலம்
வாழ முடியாது... என்று சொல்ல முடியாது. காரணம் கல்யாணம் என்பது தரகர்களாலும், யாரோ ஒரு ஜோதிடர் எழுதிய மஞ்சள் படிந்த ஜாதகத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது.
கல்யாணம் என்பது Share market அல்ல.
முன்பின் தெரியாத இருவர், அடுத்த 40 வருடம் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், நிம்மதி என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.
திருமணத்திற்குமுன், ஜாதகப் பொருத்தம் பார்ப்பதற்குமுன், மனப்பொருத்தம் பார்க்க வேண்டும்.
வெறும் வயது வரம்பை மட்டும் பார்ப்பதைத் தாண்டி, அவர்களின் சக்தி, புத்தி எந்த அளவிற்குப் பொருந்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
அப்படிப் பார்த்துச் செய்யப்படும் திருமணமானது, நிச்சயமாக ஆனந்தத்தில் துவங்கி ஆனந்தத்தில்தான் முடியும்.

# தியானம்
மணி : காலை 8.00 ட்ரிங்...
கோபால், “மணி எட்டு ஆயிடுச்சு!” என்று அலறிக்கொண்டே எழுந்தான்.
“ஏய் மாலா, குளிக்க தண்ணி ரெடியா? காபி எங்கே? சீக்கிரம்... ஆபீஸுக்கு லேட் ஆகுது பாரு... இன்னும் என்ன பண்ணிட்டுக்க அங்க?” என எழுந்ததும் சுப்ரபாதம் பாடினான்.
நாளின் துவக்கமே இப்படி என்றால், அந்நாளின் மொத்த இனிமை எவ்வாறு இருக்கும்?
ஆழ்ந்து யோசித்துப் பார்த்தோமானால் புரிந்துகொள்ள முடியும், நம் மொத்தப் பிரச்சி னைகளுக்கும் காரணம் மந்தத்தன்மையே.
மந்தத்தன்மையின் பிடியிலிருந்து நிரந்தரமாக மீண்டு வருவதற்கு, இந்த அருமையான தியானம் செய்யுங்கள். கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்தோமானால் போதும் மொத்தப் பிரச்சினையையும் மிக எளிதாகத் தாண்டி விடலாம்.
காலையில் கண்விழிக்கும்போது, அப்படியே கண்களைச் சொக்கிச் சொக்கி இழுக்கும் பாருங்கள். இமைகளைத் தானாக மூடி, உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அந்தச் சில நிமிடங்கள்தான் தியானகாலம்.
முழு விழிப்புணர்வையும் கொண்டு, அப்போது தடுமாறும் அந்தக் கணங்களைச் சாட்சியாகப் பாருங்கள்.
மந்தத்தன்மை மறைந்து விடும். பின் மந்தத்தன்மையா? எங்கே? எங்கே? என்று வலை வீசித் தேடுவீர்கள்.
நினைப்பதையெல்லாம்
சாதிக்கலாம்
* ஒருவர் : 'பேய்களை அடக்குவது எப்படி?' ன்னு ஒரு சீரியல் எழுதிட்டிருந்தாரே உங்க பையன், கல்யாணத்திற்குப் பிறகு என்ன சீரியல் எழுதறார்?
மற்றவர் : “பேய்களுடன் வாழ்வது எப்படி?ன்னு தான்.”
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், திருமணத்திற்குப் பின் நரகம் பலருக்கு நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது.
வாழ்க்கைத்துணை - கடவுள் கொடுத்த நன்கொடை.
'வாழ்க்கைத்துணை - வாழும் தெய்வம்' எனும் வாழ்வியல் உண்மைகள் தெரியாமல் போனதே, இந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்.
'வாழ்க்கைத்துணை - வாழும்
தெய்வம்' எனும் வாழ்வியல்
உண்மைகள் தெரியாமல்
போனதே, இந்த எல்லாப்
பிரச்சினைகளுக்கும்
மூலகாரணம்.
* டாக்டர் : “உங்க இதயத்தை
வெற்றிகரமாக ஆபரேஷன் செய்திட்டேன்.
இப்ப நல்லாயிருக்கு.”
நோயாளி : “கிட்னி ஆபரேஷன்னுதானே என்னை அட்மிட் பண்ணினீங்க டாக்டர்?”
நேருக்கு மாறாய், முன்னுக்குப்பின் முரணாய், முடியும் எல்லாச் சண்டைகளும் சாதாரணமாய் ஆரம்பித்த உரையாடல்கள் தானே?
பேச்சைச் சண்டையாக்குவது எது? கண்டுபிடியுங்கள்.
கவலைகள் எல்லாம் கலைந்து போகும் கானல் நீராக!
★ ஒருவர் : “எங்க கம்பெனியில் இன்ட்ரஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்.''
மற்றவர் : “கொடுக்கறதுதான் கொடுக்கறீங்க, கொஞ்சம்சந்தோஷமா கொடுக்கலாம் இல்லையா?’’
★ காரணம் இல்லாமல் பேசிச் சிரிப்பவர் பெண்கள்.
காரணம், அவர்களுக்குள் இன்னும் எஞ்சி இருக்கும் பெண்மை என்னும் மென்மை!
குழந்தையும், ஞானியும் மென்மையின் உச்சம். அதனால்தான்... காரணம் ஏதும் இல்லாமலேயே, சிறு புன்னகை ஒட்டியிருக்கிறது, அவர்களின் முகத்தில்.
நிஜத்தில்....காரணமில்லாமல் துக்கம் வரும்போது, காரணமில்லாமல் ‘ஆனந்தம்’ ஏன் வரக்கூடாது.?
காரணமில்லாமல் வருவதே, ‘ஆனந்தம்’.
★ ஒருவர் : “இன்னைக்கு என் மனைவிகிட்ட அன்பா நடந்துக்கிட்டேன்”.

குழந்தையும், ஞானியும் மென்மையின்
உச்சம். அதனால்தான்... காரணம்
ஏதும் இல்லாமலேயே, சிறு புன்னகை
ஒட்டியிருக்கிறது, அவர்களின் முகத்தில்.
மற்றவர் : "ஏன்?"
ஒருவர் : "இன்னைக்கு வனவிலங்கு பாதுகாப்பு நாளாச்சே"
★ மனிதர்களின் பேச்சிலும், மூச்சிலும், அவர்களின் நடையிலும், உடையிலும்.....
குணம் கொப்பளிக்கிறது.
பண்பு பளிச்சிடுகிறது.
நான் நினைப்பதெல்லாம் சாதிக்க முடியவில்லையே... ஏன்?
- உதயகுமார், கலமருதூர்
நினைப்பதுதான் காரணம்.
நினைப்பதை நிறுத்தினால், நினைப்பதைச் சாதிக்கலாம்.
நினைப்பதிலேயே தொடர்ந்து வீணாகும் சக்தி, சாதிக்கும் சக்தியாக மாறும். நினைப்பது 1% செயல்படுத்துவது 99% -என வாழ்ந்து பாருங்கள். நினைப்பதை எல்லாம் சாதிப்பீர்கள்.
எது தியானம்?
விருப்பமில்லாதவற்றிற்குத் தலையாட்டுதல் கேடு!
‘ட்ட்ரிங்ங்... ட்ட்ரிங்ங்...’ அடடே! நீங்களா... சொல்லுங்க சொல்லுங்க...
நம்மகிட்ட சொல்லிட்டீங்க, கவலையை விடுங்க, ஜமாய்ச்சிடலாம். மூக்குமேல் விரல் வைக்கிற மாதிரி பிரமாதமா பண்ணிடுவோம்..” எனத் தொலைபேசியை வைத்த மறு வினாடி, “சரியான சாவுகிராக்கி, ஏற்கெனவே, தலைக்கு மேல ஆயிரம் வேலையிருக்கு. இதுல இது வேற...” இப்படி மற்றவரிடம் உங்களின் கஷ்டத்தை மறைத்து... நீங்கள் விரும்பாததற்குக் கூட, தலையாட்டுபவரா நீங்கள்?
விருப்பமில்லா வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தால்... அந்த நிமிடம் அடுத்தவருக்கு சொர்க்கம், உங்களுக்கு நரகம்.
நோய் என்பது பலகால
ஆரோக்கியக் கேட்டின்
வெளிப்பாடு.
உங்களால் இயலாத காரியத்தை,
‘இயலாது’ என இதயம் திறந்து மற்றவருக்குத்
தெரிவிப்பது புத்திசாலிக்கு அழகு.
அல்லது எடுத்துக் கொண்ட வேலையில், விருப்பத்தை அரும்பச்செய்து... உங்களின் புத்தி சக்தி அனைத்தையும் பிரயோகித்து, அச்செயலை அருமையாய்ச் செய்வது தியானிக்கு அழகு. அப்படிச் செய்வதே ஒரு தியானம்தான்.
ஆனந்தம் ஆரோக்கியமானவரின் கிரீடம்.
நோயற்ற நிலை, ஆரோக்கியம் அல்ல.
ஆரோக்கியம் என்பது, உங்கள் உயிரையும், உணர்வையும் ஜிகு ஜிகுவென உற்சாகத்திலிருக்கச்செய்யும் ரம்யமான உணர்வு. என்றைக்கு உங்கள் உடலிலிருந்து இந்த ரம்யமான உணர்வு மறைய ஆரம்பித்ததோ, அன்றே ஆரோக்கியம் குன்றத் துவங்கி விட்டது.
“நோய் என்பது பலகால ஆரோக்கியக் கேட்டின் வெளிப்பாடு.
ஆனந்தம் என்பது பல மடங்கு ஆரோக்கியத்தின் வெளிப்பாடு.”
ஆனந்தத்தை அள்ளித்தரும் எந்தச் செயலைச் செய்தாலும்...
நன்றாய்ச் செய்யுங்கள்... அது ஆரோக்கியத்தை உங்கள் உடல் நோக்கி ஈர்க்கும் தியான நுட்பம்.
நன்னெறிகள் கழுத்தை நெறிக்கக் கூடாது
புத்தனின் மகா நன்னெறிகள் எட்டு.
1. நற்கொள்கை
2. நல்நினைவு
3. நற்பேச்சு

ஆனந்தம் என்பது பல மடங்கு ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. ஆனந்தத்தை அள்ளித்தரும் எந்தச் செயலைச் செய்தாலும்... நன்றாய்ச் செய்யுங்கள்... அது ஆரோக்கியத்தை உங்கள் உடல் நோக்கி ஈர்க்கும் தியான நுட்பம்.
4. நன்னடத்தை
5. நல்வாழ்வு
6. நன்முயற்சி
7. நல்லெண்ணம்
8. நற்சிந்தனை
எது நல்லது? நல்லதென்பதின் அளவுகோல் எது?
பதில் காணுங்கள்...
பதில் தெரிந்துவிட்டால்... மேலுள்ள 8 நன்னெறிகளைக் கடைப்பிடிக்கமாட்டீர்கள், அவை உங்களிடமிருந்து இயல்பாய் வெளிப்படும் வெளிப்பாடுகளாகி விடும்.
எது நல்லது? எனத் தெரியாமல் புத்தனின் 8 நன்னெறிகளை ஒருவர் கடைப்பிடிக்க ஆரம்பிப்பது, தன் கழுத்தைத் தானே நெறிப்பதற்குச் சமம்.
காரணம்... உங்களுக்கு, 'இது நல்லது' எனத் தோன்றும் சிறு வட்டத்திற்குள்ளிருந்து மட்டுமே புத்தனின் நன்னெறிகளைக் கடைப்பிடிப்பீர்கள். இது தொடர்ந்தால், பித்தனாகத்தான் மாற வேண்டும். புத்தனாக முடியாது.
எது நல்லது? என எல்லாக் கோணத்திலும் ஆராயுங்கள்... விரியும் பதில்களைச் சேகரித்தால், வரும் தெளிவு மட்டுமே உங்களை புத்தனாக்க வல்லது. ஆனந்த வாழ்வு தரவல்லது.
மோகத்தின் காந்த சக்திதான்
நம்மை ஈர்க்கிறது.
நிஜத்தில் அந்தப்
பொருளுக்கோ, அந்த
நபருக்கோ, தனிப்பட்ட
மாயசக்தி எதுவுமில்லை.
செய்து பாருங்கள், தியான சக்தியின் பலம் புரியும்.
மோகம் ஒரு மாயம்
ஐந்நூறு கோடி ரூபாய்க்கு இன்சூர் செய்யப்பட்டிருக்கும் மோனாலிசா ஓவியம், 1911 ஆம் ஆண்டில் ஒருமுறை திருட்டுப் போய்விட்டது.
ஓவியம் திருடு போன பிறகும், அது இருந்த வெற்றிடத்தைப் பார்க்கவே கூட்டம் அலை மோதியதாம்.!
மோகம் ஒரு மகா மாயாசக்தி.
ஒரு பொருளைச் சுற்றியோ, ஒரு மனிதரைச் சுற்றியோ மோகம் உருவாக்கப்பட்டுவிட்டால், அதன் மதிப்பு, அவரின் மதிப்பு பலமடங்கு கூடிவிடும்.
உங்களின் பணத்தைக் கரைய வைக்கும் எல்லாமே மோகத்தால் சூழப்பட்டவைதான்.
மோகத்தின் காந்த சக்திதான் நம்மை ஈர்க்கிறது. நிஜத்தில் அந்த பொருளுக்கோ, அந்த நபருக்கோ தனிப்பட்ட மாயசக்தி எதுவுமில்லை.
நிஜம் தெரியாத மனிதரோ, மோகத்தால் உலகில் பல விஷயங்களில் ஈர்க்கப்படுகிறார். அலைக்கழிக்கப்படுகிறார்.
"மோகம் ஒரு மாயம்"....
எனும் உண்மையை உணர்ந்து செயல்பட ஆரம்பித்தால், இந்த நிமிடத்திலிருந்தே பல சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.

எது நல்லது? என எல்லாக் கோணத்திலும் ஆராயுங்கள்... விரியும் பதில்களைச் சேகரித்தால், வரும் தெளிவு மட்டுமே உங்களை புத்தனreaders வல்லது. ஆனந்த வாழ்வு தரவல்லது.

தியானம்
"எது தியானம்?" என ஒரு முறை ஜென் ஞானியிடம் கேட்கப்பட்டபோது, "எது தியானமல்ல?" எனத் திருப்பிக் கேட்டார்.
"இது தியானம்" எனும் வரையறை, துவக்க நிலைக்குச் சரி, ஆனால்...
தியானத்தில் முன்னேற... முன்னேற, விழிப்புணர்வு பெருகப் பெருக, 'இது தியானம்' என எதையும் வரையறை செய்ய முடியாது.
அப்புறம் நீங்கள் செய்வதெல்லாமே தியானமாகத் தெரியும்.
காரணம், தியானமென்பது செயல் அல்ல நிகழ்வு.
தியானம் நிகழச் செய்யும் செயலிலெல்லாம், விழிப்புணர்வைச் சேர்ப்பதும், ஆர்வம் சேர்ப்பதுமே போதுமானது.
விழிப்புணர்வும், ஆர்வமும், செய்யும் செயலையெல்லாம் தியானமாக்கும் சக்தி பெற்றது.
மந்திர சாவியைக்
கண்டுபிடியுங்கள்
நான் மேக்கப் போடவில்லை:
1779-ம் ஆண்டுக்கும் 1837-ம் ஆண்டுக்கும் இடையில் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த ஜோகிரிமால்டி என்பவர் ஒரு நகைச்சுவை சர்க்கஸ் கோமாளி.
1808-ம் ஆண்டில் ஒருநாள் மாலைப்பொழுதில் மான்செஸ்டர் நகரில் இருக்கும் டாக்டர் ஜேம்ஸ்ஹாமில்டரிடம், ஒரு நோயாளி 'மனது சரியில்லை' என வந்தார்.
"சிரிக்கப் பழகுங்கள், வாழ்க்கை மீது உங்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடும்" , என்றார் டாக்டர்.
"எப்படி சிரிக்கப் பழகுவது" என்றார் நோயாளி .அதற்கு டாக்டர் "இன்றிரவு நடைபெறும் சர்க்கஸ் காட்சிக்குப் போய் அங்கு கிரிமால்டி என்ற கோமாளியின் வேடிக்கையைப் பாருங்கள்" என்றார்.
"சிரிக்கப் பழகுங்கள்,
வாழ்க்கை மீது உங்களுக்கு
ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடும்
நோயாளி சிரித்துவிட்டு, "டாக்டர்
மேக்கப் போடாமல் இருப்பதால் உங்களுக்கு
அடையாளம் தெரியவில்லை. நான்தான்
கிரிமால்டி" என்றார்.
சாதனையின் உச்சியில் உட்கார்ந்து இருக்கும் மனிதர்களைப்பார்த்து, மனமொடிந்து போவீர்கள். அவர்களின் நிஜநிலைமை
தெரிந்தால்... ஆச்சரியத்துக்குப் பதில், அழுகைதான் வரும்! உள்ளுலகில் முதிர்ச்சியில்லாமல், வெளி உலகில் சாதனையின் உச்சிவரை செல்வது....
புல் தரையில் சாவியை வைத்துவிட்டு, நூறாவது மாடியில் இருக்கும் தன் அறைக்கு நடந்தே செல்வதற்குச் சமம்...
உள்ளுலகின் ஆழம் பார்க்காமல், வெளியுலகின் உயரம் பார்க்க முயற்சித்தவர் கதை இது. அதுதான் பாதகம்.
தினம் ஒரு தியானம் செய்தால், பாதகத்திலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.
முட்டாள்களால் உயர்த்தப்படும் விலைவாசி:
அரசர் தைமூர் தனது அரசவைக் கவிஞரான கிர்மானியுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
அரசர் : "கவிஞரே, நான் என்னை விற்பனை செய்யத் தீர்மானித்து இருக்கிறேன். நீங்கள் வாங்குவதானால், எவ்வளவு விலை கொடுப்பீர்?...?"
கிர்மானி : "மன்னர் அவர்களே, அந்நிலை எனக்கு ஏற்பட்டால், நூறு காசுகள் கொடுப்பேன்...!"
அரசர் : "என்ன சொல்கிறீர்கள்... என் இடுப்பிலுள்ள கச்சையே நூறு காசு விலைப்பெறும்."
கிர்மானி : "மன்னா! நான் சொன்ன விலை அந்த கச்சைக்குத்தான்".
சில முட்டாள்கள் போட்டி போடுவதால், வைரம் எனும் சாதாரணக் கல் கோடி ரூபாய் மதிப்பைப் பெறுகிறது. விலையை வைத்து பொருளின்

தரத்தை நிர்ணயிக்க முடியாது. வைரத்தை விட முக்கியமான காற்றுக்கு, விலையேயில்லை.
அதேபோலத்தான் காற்றைவிட, மிக மிக முக்கியமான உங்களின் உடலுக்கும் விலையில்லை.
ஏனெனில், அது விலைமதிக்க முடியாது.
அது கடவுளின் சொத்து. இந்த உண்மை உலகிற்குத் தெரியாது. தப்பித்தவறி யாராவது ஒருவருக்குத் தெரிந்துவிட்டால், அவரே "ஞானி".
தியானம்

ஒருசமயம், போர் முனையில் நெப்போலியனின் படைகள், இரவு நேரத்தில் திடீர்த்தாக்குதலுக்கு உள்ளானது.
அப்போது நெப்போலியன் உறங்கிக் கொண்டிருந்ததால், எப்படி அவர் ஆலோசனையைப் பெறுவது என படைத்தளபதி சங்கடமடைந்து, கூடாரத்திற்குள் பிரவேசித்தார். அப்பொழுது அரசரின் மேஜை மீது காகிதம் ஒன்று இருப்பதைப் பார்த்தார்.
அதில் இதுபோன்ற இக்கட்டான சம்பவம் நடக்கலாம் என ஏற்கனவே யூகித்து, அதற்கான வழிவகைகளை அரசன் எழுதி வைத்திருந்தார்.
அதன்படி தளபதி எதிர்தாக்குதல் நடத்தி வெற்றிபெற்றார்.
எந்த மனிதரால் தன் எதிர்காலம் பற்றி பத்து அடி தாண்டியோசிக்க முடிகிறதோ, அவரே சாதனையாளர்.
தனக்கொரு தொல்லை ஏற்படும்போது, தடுமாறுபவர் தான், எதிரேயுள்ள வாழ்வின் ஒரு அடி வரை மட்டுமே பார்ப்பவர்.
தடுமாறினாலும், அடுத்து செய்யவேண்டியது என்ன? என யோசிப்பவர், எதிரே உள்ள வாழ்வின் இரண்டாம் அடிவரை பார்ப்பவர். தொல்லையின் துவக்கத்தையும், முடிவையும், தெளிவாய் யூகித்துத் தீர்வைத் தேட ஆரம்பிப்பவர் வாழ்வின் மூன்றாவது அடிவரை பார்ப்பவர்.
இதற்கு மேல் உள்ள அடிகள், வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத படிக்கட்டுகள்.
இதுவரை வந்து பாருங்கள், நெப்போலியனையே தாண்டிச்செல்லும் சூட்சுமம் கண்முன்னே காத்திருக்கும்.
உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை... இது தவறா? சரியா? அவற்றை அடக்க ஏதாவதொரு வழி சொல்லுங்கள்.
-செந்தில்குமார், பிடதி.
உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போவது சரியா, தவறா எனக் கேட்காதீர்கள்.
உணர்ச்சிகளை அடக்குவது, பெட்டிக்குள் அழுத்திவைக்கப்படும் ஸ்பிரிங்குக்குச் சமம். அது எப்போது வேண்டுமானாலும் ‘படார்’ என வெடிக்கும்.
உணர்ச்சிகளை அடக்காதீர்கள். அவற்றோடு வாழுங்கள்; அதுவே உங்களை விடுவிக்கும்.
எது நிஜமான அதிசயம்?
உணர்ந்து செய்வதே உதவி
டீச்சர் : “ரமேஷ்! ஏன் ஸ்கூலுக்கு லேட்?”
ரமேஷ் : “அது வந்து டீச்சர்.. ஒரு பாட்டிக்கு உதவி பண்ணோம். அதான்.”
டீச்சர் : “அதுக்கா.... இவ்வளவு நேரம்?”
ரமேஷ் : “ஆனா.... அந்தப் பாட்டி ரோடு க்ராஸ் பண்றதுக்கு ஒத்துக்க மாட்டேன்ட்டாங்க. அதனாலதான்.”
வலுக்கட்டாயமாய் உதவி செய்வதும், வலிய வந்து உதவி கேட்கும்போது உதவி செய்யாதிருப்பதும், வன்முறையின் வெவ்வேறு வடிவங்கள்.
‘காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்,
ஞாலத்தின் மாணப் பெரிது’, என திருவள்ளுவர்
குறிப்பிட்டது நிச்சயம் மேற்குறிப்பிட்ட
உதவிகளை அல்ல.
உதவி என்ற பெயரில், உபத்திரவங்களைத்தான்
மனிதர்கள் பல நேரங்களில்
ஏற்படுத்துகிறார்கள்.
வலுக்கட்டாயமாய் உதவி
செய்வதும், வலிய வந்து
உதவி கேட்கும்போது
உதவி செய்யாதிருப்பதும்,
வன்முறையின் வெவ்வேறு
வடிவங்கள்.
முதல் இரண்டுவிதமான உதவிகளைச் செய்வதைவிட, மற்றவர்களின் நிலையை உணர்ந்து உதவி செய்வது, உபத்திரவங்களை உபகாரங்களாக மாற்றும்.
செய்து பாருங்கள். பல நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள்.
முன்னேற ஆராய்ச்சி செய்யுங்கள் :
சீடன் : “புத்திசாலிகள், நல்ல கணவர்களாக இருப்பார்களா?”
குரு : “புத்திசாலிகள் கணவராக மாட்டார்கள்.”
குரு என்பவர் உங்கள் அனுபவத்தினால் தொடப்படாத வாழ்வின் பகுதிகளைத் தொட்டுச் சுட்டிக் காண்பிப்பவர்.
குருமார்கள் சொல்லும் வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக மட்டுமே ஏற்றுக்கொண்டு செயல்பட்டால், முன்னேற்றம் மிகக் குறைவாக இருக்கும்.
குரு சொன்ன விதம்;
குரு சொன்ன நேரம்;
குரு சொன்ன இடம்,
எனப் பல தளங்களில் குருவின் வார்த்தைகளை அலசி ஆராயும்போது, பலன் முழுமையாக உங்களுக்குக் கிடைத்துவிடும்.

குரு சொன்ன விதம்;
குரு சொன்ன நேரம்;
குரு சொன்ன இடம்,
எனப் பல தளங்களில் குருவின் வார்த்தைகளை அலசி ஆராயும்போது, பலன் முழுமையாக உங்களுக்குக் கிடைத்துவிடும்.
- ரகுவரன், காந்தி.
ஆண்களின் மனதை மட்டும் புரிந்து கொள்ள முடியுமா என்ன?
மனம் என்றாலே புரிந்து கொள்ள முடியாது. இதில் பெண்கள், ஆண்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. அப்படிப் பிரித்துப் பார்த்தாலும் பயன் ஏதுமில்லை.
இன்னொரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய மனதைப் புரிந்து கொள்ளத் துடிப்பவர்கள் எல்லாமே, தங்களுடைய மனதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.
இல்லாவிட்டால், தலைக்கு மேல் ஆயிரம் வேலை இருக்கும்போது, பெண்கள் மனதைப் புரிந்துகொள்ள முடியுமா, முடியாதா என பட்டிமன்றம் நடத்துவார்களா? கவிதைகள் கதைப்பார்களா?
தேவையற்ற விவாதங்களில் இருந்து விடுபடுங்கள். அதுவே போதுமானது.
தியானம்

“சண்டை என்றால் அலர்ஜி .... நான் சும்மாயிருந்தாலும் சீண்டிவிட்டு சண்டை வாங்குகிறார்கள்,” என்று எத்தனைமுறை நினைத்திருக்கிறீர்கள்.
ஒருவருடன் பேசத் துவங்கினாலே, அது வீண் விவாதத்தில் கொண்டுபோய் விடுகிறது என்று ஒதுங்கியே இருக்கிறீர்களா?
மற்றவரை எளிதில் வசீகரிக்க,
சுலபமான வழி இதோ உங்களுக்காக.
ஆழமான இந்த இரண்டு கருத்துக்களையும் ஆழ்ந்து தியானித்து வாருங்கள்.
1. பேசிக் கொண்டிருக்கும்போதும், பேச்சைத் துவங்குவதற்கு முன்னும், அவர் இப்படித்தான் சொல்வர் என்று எந்த எதிர்பார்ப்பும், கற்பனையும் இல்லாமல் திறந்த மனத்தோடு கவனியுங்கள்.
2. அவர் இப்படிப் பேசுவது சரி, தவறு என மனதில் பிரித்துப் பாகுபடுத்திக் கொண்டிருக்காமல், முழுமையாகக் கவனியுங்கள்.
“அவரைப்போல் வருமா? என்னமா கரிசனையா கேட்பார் தெரியுமா?” என்று கேட்பது ஒன்றாலேயே அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்வீர்கள்.
வலிகூடப் பரவசமாகும் விழிப்புணர்வைச் சேர்த்துவிட்டால்...
அதுக்கெல்லாம் எங்கப்பா நேரமிருக்கு?
தமிழ்மேதை மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தண்டியலங்காரம் என்ற பழந்தமிழ் இலக்கியத்தைப் பயில ஆசைப்பட்டார்.
ஆனால், முறையாக பயிற்றுவிக்கக் கூடிய தகுதி வாய்ந்த புலவர் யாரும் இல்லை.
அச்சமயம் ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்த ஒரு சாது, இதில் நல்ல தேர்ச்சி பெற்றவர் என அறிந்து கொண்டார்.
பின், அவர் செல்லுமிடம் எல்லாம் பின் தொடர்ந்து சென்றார்.
‘வலிகூட பரவசமாகும்,
விழிப்புணர்வைச்
சேர்த்துவிட்டால்...’
அவர் தேவைகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்துகொண்டே தண்டியலங்காரம் முழுவதையும் பாடம் கேட்டது டன், மூல நூலை முற்றிலும் பிரதி எடுத்தார்.
எடுத்த காரியத்தில் ஜெயிக்க, எந்த
எல்லைவரை வேண்டுமானாலும் செல்லத்
தயாராய் இருந்தால் மட்டுமே ஜெயம்
உங்களுக்குச் சொந்தமாகும்.
"இது சரி" “இது நல்லது”
-என்ற தெளிவு பிறந்துவிட்டால், அதற்காக எதை வேண்டுமானாலும் விலையாகக் கொடுக்கலாம். தியானம் எவ்வளவு நல்லது என்பது புரிந்துவிட்டால், அதற்காக எதை வேண்டுமானாலும் கொடுக்க முடியும்.
அது புரியாதவரை, “எங்கப்பா நமக்கெல்லாம் தியானம் செய்ய நேரம் இருக்கு” என்ற சாக்குப்போக்கு மட்டுமே சொல்ல முடியும்.
லேசாயிருக்கும் புத்திசாலியின் மனம்
ஜி.டி நாயுடு, ஒருமுறை தன் அலுவலகத்தின் தலைமை நிர்வாகி அறைக்குள் பிரவேசித்தார்.அங்கு சிதறிக் கிடந்த பொருட்களை அடுக்கி, குப்பைக் கூளங்களை அகற்றியபின், ஒரு கடிதம் எழுதி மேஜையின்மேல் வைத்தார்.
அதில், “உம்முடைய அறையை ஒழுங்குபடுத்தி வைக்க ஒரு வாய்ப்பளித்ததற்கு மிகவும் நன்றி” என்று எழுதியிருந்தார்.
அந்த அதிகாரி கடிதம் கண்டவுடன் ஓடோடி, சென்று நாயுடுவிடம் மன்னிப்புக் கோரினார்.
அதற்கு ஜி.டி நாயுடு... “உமது வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால், வேலையை விட்டுவிட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டு வரவேண்டியிருக்காதல்லவா?” என்றார்.
எளிமையும், புதுமையும், புத்திசாலித்தனத்தின் அங்கங்கள்.

எளிமையாக இருக்கும் புத்திசாலிகளின்
மனமும், எளிமையாகவே இருக்கும், லேசாகவே
இருக்கும். அதனால்தான், அவர்களின்
ஒவ்வொரு செயலிலும் புதுமை தெரிகிறது.
சாதாரண மனிதரால் யோசித்துக்கூடப் பார்க்க முடியாத, ஒரு கோணத்தில் இருந்து வெளிவரும் புத்திசாலியின் புதுமைகள், சாதாரண மனிதருக்குப் புதிர்! ஆச்சர்யம்!!.
எளிமையாக இருக்கும் புத்திசாலிகளின் மனமும், எளிமையாகவே இருக்கும், லேசாகவே இருக்கும்.
அதனால் தான், அவர்களின் ஒவ்வொரு செயலிலும் புதுமை தெரிகிறது.
அவை புகழ் பெறுகின்றன.
முக்கியமான எதற்குமே ஆதாரங்கள் கிடையாது.
ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், நிலக்கடலை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதில் மாபெரும் சாதனைகளையும் படைத்தார்.
சாதனைகளின் ரகசியம் பற்றி விசாரித்தனர்...
அவர் சாதனைக்கான நுணுக்கங்களை, 'பைபிள்' நூலிலிருந்து கற்றதாகத் தெரிவித்தார்.
மேலும் செனட் விசாரணைக் கமிட்டியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் புதுமையானதாக இருந்தது.
“பைபிளில் நேரடியாக நிலக்கடலை பற்றி ஒன்றும் கூறப்படவில்லை.
ஆனால், நிலக்கடலையைப் படைத்த கடவுளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றது.
நிலக்கடலை பற்றிய முழு
உண்மைகளையும், எனக்கு அருளும்படி
கடவுளிடம் வேண்டிக்கொண்டு என்
ஆராய்ச்சியினைத் தொடங்கினேன்.
மெல்ல மெல்ல, நிலக்கடலை
சம்பந்தமான புதிர்கள் மறைந்து உண்மைகள்
எனக்கு விளங்குகின்றன" என்றார்.
எளிமையும்.
புதுமையும்.
புத்திசாலித்தனத்தின் அங்கங்கள். எல்லாவற்றையும் அறிவு பூர்வமாக விளக்கிவிட முடியாது. எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் காட்ட முடியாது.
மனித உணர்வு, மனிதவாழ்வு, கடவுள் சக்தி போன்ற எதற்குமே ஆதாரங்கள் கிடையாது.
ஆனால், ஆதாரமற்ற அந்த அருவங்கள்தான், உங்களையும் உலகையும் இயக்குகிறது.
இந்த உண்மைகளை உலகிற்கு உணர்த்த, ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் ஒரு நடைமுறை வாழ்வியல் சாட்சி.
தவறு செய்தால் நரகம் செல்வேனா?
-தீபக், பெங்களூரு.
தவறு செய்வதால் நரகம் செல்ல மாட்டீர்கள்.நரகத்தில் வாழ்வதால் தவறுகள் பல செய்வீர்கள்.
“நொடிக்கு நொடி உங்களைத் துடிக்கவைக்கும் மன வேதனைகளே நரகம்!”
நரகம் புவியியல் ரீதியானது அல்ல. அது மனோ ரீதியானது.
வலிகூட பரவசமாகும்...விழிப்புணர்வை சேர்த்துவிட்டால்!
பரவசம்கூட வலியாய் தெரியும்,
விழிப்புணர்வைச் சேர்க்காவிட்டால்!
-ஜென் தத்துவம்
என்ன! ஆச்சரியமாயிருக்கிறதா?
ஆனாலும் இது உண்மையே. இந்தத் தியானத்தைச் செய்து பாருங்கள் மேலுள்ள கூற்றின் ஆற்றல் புரியும்.
உடலில் வலி ஏற்படும் காலங்களையெல்லாம் இந்தத் தியானத்திற்காகத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
“வலி எங்கிருந்து வருகிறது?” என உணர்வால் ஊடுருவுங்கள்.
ஊடுருவ... ஊடுருவ, வலி அதிகமாகும். அதே நேரத்தில் வலி ஏற்படும் பரப்பளவு சுருங்கிக் கொண்டே செல்லும்.
வலி ஒடுங்கிக்கொண்டே செல்லும். ஒரு சிறு புள்ளியில் வலி ஒடுங்கியபின், அந்த எதிர்பாராத அனுபவம் நிகழும்.
ஒடுங்கிய வலி, பரவசமாய் வெடிக்கும். உடலுக்குள் ஆனந்தம் பரவும்.
எறும்புக் கடியிலிருந்து, எலும்பில் பட்ட அடிவரை இந்தத் தியானத்தை பிரயோகப்படுத்திப் பார்க்கலாம்.
செய்து பாருங்கள். வலி கூட பரவசமாகும்.
இது உங்களுக்கும் தான்...
முதல் கழுதை : "என்ன ரொம்ப இளைச்சு போயிட்ட... உன் எஜமானர் சரியா சாப்பாடு போடறதில்லையா?"
இரண்டாவது கழுதை : "ஆமாம்!"
முதல் கழுதை : "அட! அப்ப இன்னும் ஏன் அங்க இருக்கிற. என் கூட வந்துடு..."
இரண்டாவது கழுதை : "இல்ல.. அந்த எஜமான் பொண்ணு ஏதாவது தப்பு பண்ணா... பாரு உன்னை அந்தக் கழுதைக்கு கட்டி வச்சுபுடுவேன்னு சொன்னாங்க!.. அதான்.."
மிருகங்கள் கூட பல மனிதர்களை பார்த்து பயப்படுகின்றன.
ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், 'நான் நல்லவன்' என நம்பும் மனிதனுக்குள் கூடப் பல மிருகங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.
கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில் மனிதர்கள் மிருகங்களாக மாறினால், மிருகங்கள் கூட, பயப்படத்தான் செய்யும்.
"இது எனக்கல்ல" எனத் தப்பிக்காமல் யோசித்து சுய பரிசோதனை செய்யும். ஒவ்வொருவருக்கும் மேலுள்ள வரிகள் ஒவ்வொன்றும் ஞான
சூத்திரங்கள்.
‘நல்ல பேச்சாளர்களின் கவனத்திற்கு..’
பொருளாதார நிபுணர்: “இந்தியா! என்ன ஒரு முன்னேற்றம். பொருளாதாரம் என்னமா வளருது?”
சாதாரண பொதுஜனம்: “ஆமா! ஆமா! சுவர்க்கத்தை நோக்கி போய்கிட்டு இருக்கு. அதனால் கடவுள்தான் காப்பாத்தனும்.”
எதையாவது பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பதென்பது ஒரு ஆரோக்கியமான உரையாடல் என்றாகி விட்டது.
இதுபோல் சம்பந்த சம்பந்தமில்லாமல் எதையாவது பேசிக்கொண்டேயிருப்பது, ஒரு மனக்குறைபாடு.
பேசுங்கள். நன்றாக பேசுங்கள்.
அது விழிப்புணர்வை அதிகப்படுத்தும். அதே நேரத்தில் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் வாயிலிருந்து வந்ததெல்லாம் அளந்து விட்டுக்கொண்டிருந்தால், அது உங்களை விழிப்புணர்வின்மையில் ஆழ்த்தும்.
இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், இப்படி அளந்துவிடுவது விழிப்புணர்வின்மையின் வெளிப்பாடு.
‘அருமையான தியானத்திற்கான அருமையான வழி’
அம்மா: “ராஜூ கண்ணா.. பெரியவனானா என்ன ஆவ?”
ராஜூ: “மிருகங்களுக்கு வைத்தியம் பார்ப்பேன்.”
அம்மா: “ஏன்?”
ராஜூ: “ஏன்னா! மிருகங்கள்தான் டாக்டர் பத்தி குறை சொல்லாது.”
நான்கு பேர் சொல்லும் குறைகளுக்கு பயப்படுபவர்கள், இந்த ஜென்மத்தில் ஜெயித்ததாகச் சரித்தரமில்லை. மற்றவர்கள் குறை சொன்னால்,
நீங்கள் நிச்சயம் குறைந்து போக மாட்டீர்கள்.
குறை சொல்வதை மிகைப்படுத்திப் பார்க்கும் பலவீனப்பட்ட மனம்பலமானால் யாரும் உங்களை பாதிக்க முடியாது.
நேருக்கு நேர் அசிங்கமாய் பேசினால் கூட அழகாய் அந்தச் சூழ்நிலையை கையாண்டு அதனால் எந்த பாதிப்பும் அடையாமல், அங்கிருந்து ஆனந்தமாய் கிளம்பி செல்வார்கள் சிரத்தையோடு தியானம் செய்யும் ஒவ்வொரு மனிதரும்.
எனக்கு குறைபாடு இருப்பதாய் கருதுகிறேன். உடல் அடிக்கடி சோர்வு அடைந்துவிடுகிறது. நான் என்ன செய்ய...?
- பால கேசவ், கன்னியாகுமரி.
கரண்ட் கட்டாகி படிக்கட்டில் இறங்கும்போது. கடைசி படி தாண்டியபின் கூட, இன்னோரு படி இருப்பதாய் எண்ணி காலை தரையில் வேகமாய் வைத்து தடுமாறிய அனுபவம் ஞாபகத்திற்கு வருகிறதா?
இந்த தடுமாற்றம் படிக்கட்டில் வந்ததல்ல. இது சாதாரண மனத்தடுமாற்றம்தான்.
நீங்கள் சுட்டிக்காட்டும் சக்தி குறைவு கூட நிஜமானதல்ல. நீங்கள் குறிப்பிட்டிருப்பது கூட, 'எனக்கு சக்தி குறை இருப்பதாய் கருதுகிறேன்' என்றே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
உடல் சோர்வு உங்களை விட்டு ஓடிப்போகும் அளவிற்கு சுறுசுறுப்பு உள்ளே நுழைய அனுமதியுங்கள்.
இடுப்பிற்கு கீழே இருக்கும் இரண்டு எலும்புகளை, ஒரு நிமிடம் கூட மந்தமாய் இருக்கவிடாமல் இயக்கி ஏதாவதொரு வேலை செய்யுங்கள். அப்போது விழிப்புணர்வை முழுமையாக எடுத்து வாருங்கள்.
“இது போல் பேச இனி நேரமில்லை” எனுமளவுக்கு சக்தி பொங்க ஆரம்பிப்பதை காண்பீர்கள்.
அரவிந்தன் மிகவும் நல்லவர், உண்மையை பேசுபவர். ஆனால் கோபக்காரர்.
கண்ணனோ பொய் சொல்வதில் வல்லவர். மக்களிடம் மிகவும் சாந்தமாய் பேசுவார்.
இவ்விருவரையும் மாறுபட்டக் குணங்களால் மக்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லையே...
ஏன்?
ஆழ்ந்து பார்த்தோமானால், இதில் இரண்டு தியானக் கருத்துக்கள் அடங்கியிருக்கிறது.
1. முதலாமவரிடம் இருக்கும் கோபத்தை விட்டுவிடுங்கள்.
2. இரண்டாமவரிடம் இருக்கும் பொய்யை விட்டுவிடுங்கள்.
முதலாம் நபரின் நல்ல குணத்தையும், இரண்டாம் நபரின் நல்ல குணத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்படி நீங்கள் செய்யும் போது அன்னப்பறவையாவீர்கள்.
அன்னப்பறவை எவ்வளவுதான் பாலில் தண்ணீர் கலந்திருந்தாலும், பாலை மட்டும் குடிக்கும்.
இதை போன்று உலகில் மற்றவரின் நல்ல கருத்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் ஆனந்த பறவையாக மாறுவீர்கள்.
ஆனந்தமாய் சிறகடிப்பீர்கள்.
