மகிழ்ச்சி பொங்கட்டும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

I. ஆனந்த காற்று
தென்றல் காற்று வீசினால்...
"ஆஹா! என்ன இதமாக இருக்கிறது. எனக்கு சாப்பாடு கூட வேண்டாம். நான் இங்கேயே இருக்கிறேனே, ப்ளீஸ்" என்று வருடும் தென்றல் காற்றைவிட்டு எழுந்துவர மனமில்லாமல், வீட்டிற்குள் கூடச் செல்ல மாட்டோம். அதே இடத்தில் அமர்ந்திருப்போம்.
அதே காற்று, புயலாக வீசினால்...
"ஐய்யோ! என்ன பாதிப்பு வருமோ? எப்போ கரையைக் கடக்குமோ?" என்ற எண்ணம்தான் முதலில் வரும்.
காற்றை ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் காற்றின் குணாதிசயத்தை புரிந்து கொள்வீர்கள். சாதாரண காற்றுதான், ஆனால், அந்தக் காற்று வேகமாக வீசினால், அது புயல். அதே காற்று கொஞ்சம் சாதாரணமாக வீசினால் அது ஆடிக் காற்று. அதே காற்று இன்னும் கொஞ்சம் குறைவாக வீசினால் அது தென்றல். ஆனால், மூன்றுமே காற்றுதான்.
நானும் அதே ஆனந்த
சக்திதான். நீங்களும் அதே
ஆனந்த சக்திதான்
அதனால்தான் ஞானிகள் ‘நீங்களும், நானும் ஒன்று’, என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். "நானும் அதே ஆனந்த சக்திதான். நீங்களும் அதே ஆனந்த சக்திதான்" என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.
காலம் காலமாக, எல்லா ஞானிகளும், இந்த ஒரு உண்மையைத்தான் பல வழிகளில் உலகிற்கு வழங்கி வருகின்றார்கள். ஆனால், மனிதர்கள் இவ்வுண்மையை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து துக்கமயமாக இருக்கிறார்கள்.
சுபாவத்தாலே, தான் துக்க மயமானவன் என்று நம்புகிறார்கள். அதுதான் உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள். காரணம் - அவர்களுக்குள்ளிருக்கும் புயல் காற்று.
அவர்களுக்குள்ளும், ஞானிக்குள் இருக்கும் அதே சக்திதான் இருக்கிறது. ஆனால், வேகமாகப் புயல் போல் வீசுகிறது.
கோபத்தோடும், வேதனையோடும், ஆக்ரோஷத்தோடும் இருக்கிறார்கள். அதே காற்று, இதமாக மிதமாக வீச ஆரம்பித்துவிட்டால், முரடனும் இனிமையான மனிதராக மாறிவிடுவார்.
இன்னும் கொஞ்சம் குறைந்து, இன்னும் கொஞ்சம் வருடி, இன்னும் கொஞ்சம் பதமாக, இன்னும் கொஞ்சம் அன்பாக வந்தால், "அடடா! காற்று நம் கூடவேதான் இருக்கிறதா?!" என்று சொல்லக்கூடிய தென்றல் காற்றான ஞானியாக மாறிவிடமுடியும்.
காற்றின் குணாதிசயத்தை மட்டும், ஒரு மனிதர் தியானம் செய்தால் போதும், ஞானி ஆகிவிடலாம்.
காற்று அதன் வேகத்தை அதிகரித்தால், புயல். அதே காற்று வேகத்தைக் குறைத்தால், தென்றல்.
அதேபோன்றுதான், உங்களுக்கு உள்ளிருந்து பொங்கும் சக்தியும்.

இனிமையான உணர்வும், இனிமையான அதிர்வும், ஆனந்த நிலையிலேயே உங்களை எப்போதும் இருக்க வைக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், உடலையும், மனதையும், மற்ற அனைத்தையும், ஆரோக்கியமான நிலையில் இருக்க வைத்துக் கொண்டே இருக்கும்.
உள்ளிருந்து வரக்கூடிய சக்தியை அநியாயத்திற்குக் கட்டுப்பாடில்லாமல் வெளியே வீசி எறிந்தால், எல்லா விதமான கெட்ட குணங்களும் வெளியே வரும்.
அதன் விளைவாக, மனரீதியான, உடல்ரீதியான பிரச்சினைகளும் சேர்ந்து வெளியே வரும். அதேகாற்று, அதே சக்தியை இதமாக இருக்கின்றபடி கட்டுப்பாட்டோடுப் பார்த்துக் கொள்வது சாத்தியமே.
பார்த்தீர்களென்றால், காற்றுக் கட்டுப்படுத்துகிறது என்றும் சொல்ல முடியாது. கட்டுப்படுத்தவில்லை என்றும் சொல்ல முடியாது. இருக்கின்ற இயல்புப்படி வர விட்டோமென்றால், அது உள்ளுக்குள் இனிமையான உணர்வுகளையும், இனிமையான அதிர்வுகளையும் உருவாக்கும்.
அந்த இனிமையான உணர்வும், இனிமையான அதிர்வும், ஆனந்த நிலையிலேயே உங்களை எப்போதும் இருக்க வைக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், உடலையும், மனதையும், மற்ற அனைத்தையும், ஆரோக்கியமான நிலையில் இருக்க வைத்துக் கொண்டே இருக்கும்.
ஓர் இடத்தில் விபத்து நடக்க வேண்டுமென்றால், இரண்டு பேர் மோதிக்கொள்ளவேண்டும். அல்லது இரண்டு பொருள் மோதிக் கொள்ள வேண்டும். அதுபோன்றுதான் ஒரு சாதாரண மரமும், ஒரு சாதாரணக் கட்டிடமும் திடீரென்று வீசும் புயலுடன் மோதியதும் இடிந்து விழுகின்றது.
ஒரே ஒரு காற்று, புயலாக ஊருக்குள் வேகமாக வீசினால் போதும், இரண்டு நபர்கள்கூட தேவையில்லை. அந்த ஒரே ஒரு காற்று, ஊர் முழுக்க விபத்துகளை நிகழ்த்திவிடும்.
மொத்தமாக, அரைமணி நேரத்தில், அதிகபட்சமாக அந்த ஊரில் நான்கு விபத்துக்கள் நிகழ்ந்திருக்கலாம். அப்போதும் ஒரு விபத்து நிகழ்வதற்கு இரண்டு நபர்கள் தேவை. கார் விபத்து என்றால், ஒரு காருக்கு ஒரு நபராவது தேவை.
ஆனால், காற்று ஏற்கெனவே அங்கேயும்
இருக்கின்றது. கண்டிப்பாக இல்லாமலும்
இல்லை, மற்ற நேரங்களில் வீசாமலும்
இல்லை.
ஒவ்வொருவருக்குள்ளும்,
ஞானிக்குள் இருக்கும்
அதே சக்திதான்
இருக்கிறது.
ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் புரிந்து கொள்வீர்கள். காற்றும் இருக்கின்றது, கட்டிடமும் இருக்கின்றது. ஆனால் விபத்து நிகழ்வது இல்லை. எப்போது காற்று தன் வரம்பு மீறி, தன்மை மறந்து, கொடுமையாக வீசும்போது, ஊர் முழுக்க விபத்தை நிகழ்த்திவிடுகின்றது.
ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள். நல்ல மனிதர்கள், தனக்குள் இனிமையாக இருக்கும் மனிதர்களைச் சுற்றி இருப்பதற்கே, நமக்கு இனிமையாக, ஆனந்தமாக இருக்கும். அதனால்தான், ஞானிகளையும், நன்மை செய்யும் மனிதர்களையும் பார்ப்பதற்கு, மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். அந்த இனிமையான மனிதரைச் சுற்றி ஒன்றாகச் சேர்க்கிறார்கள்.
பொதுவாக, எந்த இடத்தில் தென்றல் காற்று வீசுகின்றதோ, அந்த இதமான தென்றலுக்காகவே அந்த இடத்தில் மக்கள் சேர்வார்கள்.
எந்த இடத்தில் புயல் காற்று வீசுகின்றதோ, அந்த இடத்தைவிட்டே மக்கள் ஓடி விடுவார்கள். ஆனால், பார்த்தீர்களென்றால், தென்றல் காற்றுக்கு இணையான காற்று, கடற்கரையில் வீசிக்கொண்டேயிருக்கும்.
கடற்கரையில் பார்த்தால், மக்கள் 'எறும்பு' போன்று சாரை சாரையாக போய்க் கொண்டிருப்பார்கள்.
அதே கடற்கரையில், ஒரு புயல் காற்று வீசப்போகிறது, கடல் நடுவிலே மையம் கொண்டிருக்கிறது என்று சொன்னால் போதும், அருகில் கூட செல்ல மாட்டார்கள். அதேபோன்றுதான் நம்முடைய மனம், நம்முடைய உடல், நம்முடைய உயிர் எனும் மொத்த அமைப்பிற்குள் இருக்கிறோம்.
மனம் எனும் கடலுக்குள், உடல் எனும் கரைக்குள் இருக்கக்கூடிய சக்தி எனும் காற்று, புயலாக மையங் கொள்ளத்துவங்கினால், கடற்கரை அருகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். இடத்தை விட்டே ஓடிப்போய் விடுவார்கள்.

மனம் எனும் கடலுக்குள், உடல் எனும் கரைக்குள் இருக்கக்கூடிய சக்தி எனும் காற்று புயலாக மையங் கொள்ளத்துவங்கினால், கடற்கரை அருகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். இடத்தை விட்டே ஓடிப்போய் விடுவார்கள்.
ஏன், அருகாமையைக்கூட விரும்பமாட்டார்கள். ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வேறு வழியேயில்லை, வியாபாரம் செய்தே ஆக வேண்டும் என அதிகபட்சமாக நான்கு ஐந்து பேர்தான் அவரோடு உறவு வைத்துக் கொள்வார்கள்.
அதற்குமேல், அவர்களால் இந்த உலகில் ஆனந்தமாக இருக்கவோ, எதையும் அனுபவிக்கவோ முடியாது.
கடலில் புயல் மையம் கொண்டிருக்கிறது. புயல் மையம் கொண்டிருப்பதால், கடற்கரையில் தென்றல் இருக்காது. அதேபோன்று தான் உள்ளுக்குள் இருக்கக்கூடிய சக்தியும்.
சக்தித் தவறாக மையங்கொண்டிருந்தால், அந்த மனிதரைச் சுற்றி யாருமே இருக்க முடியாது.
அம்மனிதரைச் சுற்றி, ஆனந்தமும், நிதானமும், நிம்மதியும் இருக்காது. ஏனென்றால், இந்தத் தன்மையே தன்னை நோக்கிப் பிரச்சினைகளை இழுக்கும். விபத்துகளை ஈர்க்கும். எவ்வாறு ஒரு சுழல், தன் அருகில் வரும் படகை வேகத்துடன் இழுத்து விபத்தை உருவாக்குகின்றதோ, அதைப்போன்றுதான், அம்மனிதனின் மனதில் தவறாக மையம் கொண்டிருக்கும் சக்தியும்.
வெளியில் இருக்கும் சாதாரண நிகழ்வுகளைக்கூட, இயல்பாக நிகழக் கூடிய நிகழ்வுகளைக்கூட, அம்மனிதரை நோக்கி ஈர்த்து, விபத்துகளையும், சண்டைகளையும், நஷ்டங்களையும், துரோகங்களையும் உருவாக்கும்.
வாழ்க்கையில் சஞ்சலம், சபலம். தோல்வி, ஏமாற்றம் இதெல்லாம் யாருக்கு வரும் என்று பார்த்தீர்களென்றால், உள்ளுக்குள்ளிலிருக்கும் கடலில்
சக்தி தவறாக
மையங்கொண்டிருந்தால்,
அந்த மனிதரைச் சுற்றி
யாருமே இருக்க முடியாது.
சுழலை உருவாக்குபவர்களுக்குத்தான் வரும். புரிந்துகொள்ளுங்கள், சுழல் உருவாவதிலிருந்து நாம் விடுதலை பெற்றாலோ அல்லது அந்த இடத்தில் சக்தியைக் கட்டுப்பாடில்லாமல் பிரயோகப்படுத்துவதை நிறுத்தினாலும், கடல் அமைதியாகும். மனக்கடல் அமைதியானால் போதும். நீங்கள் ஒன்றும் தனியாக முயற்சி செய்ய வேண்டியதில்லை. எப்போதும் தென்றல் வீசிக்கொண்டே இருக்கும். மக்கள் தேடி வந்து கொண்டேயிருப்பார்கள். மக்கள் வந்தாலும், வரா விட்டாலும், தென்றல் ஏற்கெனவே அங்கு இருக்கிறது. 24 மணிநேரமும், கடற்கரையில் தென்றல் வீசிக்கொண்டேயிருக்கிறது. அதுபோல், இருபத்துநான்கு மணிநேரமும், உங்கள் உடலும், மனமும் குதூகலமாக இருந்துகொண்டேயிருக்கும்.
ஒரு குப்பை இருக்கிறது. அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டால் நல்லது என்று நன்றாகத் தெரியும். தெரிந்தும் குப்பையை எடுத்துப் போட மாட்டேன். ஏன்? எது என்னைத் தடுக்கிறது?
- மாயா, சென்னை
மனதின் இயல்பே விரிந்து கொடுக்காத தன்மைதான். அதற்கு பிடித்தவற்றை பிடித்துக் கொள்வதற்கு மட்டுமே தன் கையை விரிக்கும். மற்ற நேரங்களில் கையைக் கட்டி அமைதியாக இருக்கும். அதனால்தான் குப்பை எடுத்துப் போடுவது நல்லது என்று தெரிந்திருந்தும், உங்களால் அதைச் செய்ய முடியவில்லை.
ஒருவேளை, இந்த அசமந்த தன்மையை மீறி, உடலை அசைத்தீர்கள் என்றால், மனம் ஆடிப் போய்விடும். அது உருக்குலைய ஆரம்பித்து விடும்.
அசமந்தமா? ஆனந்தமா?.
முடிவு செய்யுங்கள்.
II. ஆனந்த காற்று
கடற்கரை எப்போதும் புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கும். கடலில், அலைகள் ஒவ்வொன்றும், புதிய மண்ணை எடுத்து வருகிறது. மீண்டும் பழைய மண்ணை எடுத்துச் செல்கிறது. மண்ணை எடுத்துவரும், மீண்டும் எடுத்துச் செல்லும்.
இந்த உண்மையை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். உங்கள் உடல் எனும் கரையில், மனம் எனும் இடத்திலிருந்து எழும் இனிமையான எண்ணம் உள்ளே வரும், மீண்டும் வெளியில் செல்லும்.
மீண்டும் மீண்டும் வெளியில் செல்லும். மீண்டும் மீண்டும் உள்ளே வரும்.
தென்றல் காற்று வீசிக்கொண்டேயிருக்கும். ஆனந்தமயமாக இருந்து கொண்டேயிருக்கும். புயல் மையம் கொள்ளாமல் இருக்க, காற்றின் வேகத்தை அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டால் போதும். அதற்கான நுட்பம்தான் தியானம்.
உங்கள் உடல் எனும் கரையில்,
மனம் எனும் இடத்திலிருந்து எழும்
இனிமையான எண்ணம் உள்ளே
வரும், மீண்டும் வெளியில்
செல்லும்.
காற்றின் மற்றொரு குணாதிசயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
நம் மூக்கில் மோதி, முகத்தை சுற்றிச்சுற்றி வரும் காற்றின் வெப்பம், சற்று அதிகமானாலும் தலைக்கு மேல் இருக்கும் கூரை நோக்கி செல்லத் துவங்கிவிடும். அதே காற்றின் வெப்பம், சற்றுக் குறைந்தாலும், கீழ்நோக்கி, தரைநோக்கி செல்லத் துவங்கிவிடும்.
வெப்பம் அதிகமானால், காற்று மேல்நோக்கிச் செல்லும். வெப்பம் குறைந்தால், கீழ்நோக்கிச் செல்லும். அதேபோன்று, காற்றுக்கு இணையாக, நம்முள் தொடர்ந்து பொங்கிக்கொண்டிருக்கும் சக்தியின் உஷ்ணம், அதிகமாக அதிகமாக, மேல் நோக்கி, கடவுள் நிலை நோக்கி, உயரத்துவங்கும்.
சக்தியின் வெப்பம் குறையத் துவங்கினால், கீழ்நோக்கி, உலகம் நோக்கி, வேதனை நோக்கி இறங்க ஆரம்பிக்கும். இவை இரண்டிலும் இல்லையென்றால், வெறுமனே, காற்று மூக்கின் உள்வரும். மூக்கின் வழியாக வெளியே செல்லும். இதற்கு மட்டும்தான் அது உதவும். வேறு எதற்கும் உதவாது.
ஒவ்வொருவருக்குள்ளும் ஞானியுடைய சக்தியிருந்தாலும், அந்த சக்தியை, சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கும், இரண்டு மூன்று வேலைகளைச் செய்வதற்கு மட்டும் பயன்படுத்துகிறோம்.
ஒரு வைரக் கத்தியை வைத்து, வைரத்தையும் வெட்டலாம். கத்திரிக்காயையும், வெங்காயத்தையும் நறுக்கலாம்.
இவ்வளவு சக்தியை வைத்துக்கொண்டு, நாம் சாதாரண வெப்பத்தில், உஷ்ணத்தில் வைத்திருப்பது, வைரத்தை வைத்து வெங்காயத்தை வெட்டும் முயற்சிதான்.
செய்யவேண்டியது ஒன்றுமே இல்லை.
காற்றின் உஷ்ணத்தை அதிகப்படுத்துவதுதான். உள்ளுலக உஷ்ணத்தை அதிகப்படுத்தினால், சக்தி நேராக மேல்நோக்கிச் செல்லத் துவங்கும்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஞானியுடைய சக்தியிருந்தாலும், அந்த சக்தியை, சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கும், இரண்டு மூன்று வேலைகளைச் செய்வதற்கு மட்டும் பயன்படுத்துகிறீர்கள்.
மேல்நோக்கி, கடவுள்நிலை நோக்கி, சொர்க்கம் நோக்கி, சொர்க்கம் தாண்டிய வானம் நோக்கி, வானம் தாண்டிய பிரபஞ்சம் நோக்கி, பிரபஞ்சம் தாண்டிய மூலம் நோக்கிச் செல்லத் துவங்கிவிடும். அது எல்லையற்ற முடிவில் சென்று கலக்கும் வரையிலும், அந்த ஆனந்த எல்லையைத் தொடரும் வரையிலும் பயணித்துச் செல்ல முடியும்.
சக்தியின் உஷ்ணத்தை உங்களுக்குள் உருவாக்குவதற்கான தொழில் நுட்பத்திற்கான பெயர்தான் ஞானம்.
ஞானம் உங்களுக்குள் நிகழ்வதற்கு, தொடர்ந்து வாழ்க்கையைப் பற்றியும், உங்களைப் பற்றியும், உலகைப் பற்றியும் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும். மீண்டும் மீண்டும் அதற்காக உருவாகும் அவதாரங்களும், ஞானிகளும் சொல்லும் ஞானக் கருத்துக்களையும் உள்ளுக்குள் நுழைய அனுமதியுங்கள்..
அந்த ஞானக் கருத்துக்களும், அவதார சிந்தனைகளும், வாழ்வியல் சூத்திரங்களும், உங்கள் உள்ளுலக சக்தியின் உஷ்ணத்தை அதிகப்படுத்தும். நீங்கள் மேல்நோக்கி எழுவீர்கள்.
ஆக, தொடர வேண்டியதைத் தொடர்வீர்கள். விடவேண்டியதை விடுவீர்கள். அடைய வேண்டியதை அடைவீர்கள். ஆனந்தம் நித்யானந்தமாக மாறும்.
நான் வேலைக்குச் செல்லும் பெண். நானும் என் தோழரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஆனால், இப்போது என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய நட்பைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதனால் நட்பை இழந்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது. நட்புக்காக திருமணம் செய்துகொள்ளலாமா? எனக்கு உதவுங்களேன்.
-கீர்த்தி, புதுவை
நட்புக்காக மட்டுமே திருமணம் செய்தால், நட்பை இழக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற முடிவுகள் சுதந்திரமாக வாழ விரும்புபவர், காட்டுக்குள் நுழைவதற்கு சமம்.
காட்டின் எந்தத் திருப்பத்தில் வேண்டுமானாலும் புலி வரலாம், யானை வரலாம், சிங்கம் வரலாம். அதேபோல்தான், வாழ்க்கையும்.
உண்மையில் நட்பு என்பது காமம், காதல், பாசம் ஆகியவற்றைக் கடந்த நான்காவது நிலையில் இருக்கக் கூடியது.
ஏற்கனவே, நான்காவது நிலையில் இருக்கும் நீங்கள், அதைவிட்டு, முதல் நிலைக்குச் செல்வதால் பயன் என்ன?
நட்பைத் தொடர, நட்புதான் அவசியம். திருமணம் செய்துகொள்வதற்காக நட்பு செய்யலாம். நட்பு வருவதற்காக திருமணம் செய்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. நட்பு, 'சுதந்திரம்' அளிக்க வேண்டும். கட்டிப்போடக்கூடாது.
அப்படி கட்டிப்போட முயற்சித்தால், அது நட்பில்லை... ஆராய்ந்து பாருங்கள்.
உங்களை ராஜாக்களாக்க
* ராஜாக்களுக்கானது ஆன்மீகம்! என ஓரிடத்தில் சொல்லியிருக்கிறீர்களே...
அது விவாதத்திற்கு அப்பாற்பட்ட அறிவிப்பு. வரலாற்றுப் பூர்வமான உண்மையும் கூட!
* ஏன் அப்படி?
ஆனந்தம் Ultimate luxury. அது சுகங்களுக்கெல்லாம் சுகம். அது சொர்க்கத்தைத் தாண்டிய நிலை. எனவே, தன் வாழ்வில் எல்லா சுகங்களையும் கடந்த மனிதரால்தான், ஆனந்தத்திற்கு அழைப்பு விட முடியும்.
* சராசரி மனிதர்களுக்கானது அல்ல ஆன்மீகம் என்றால்... எதற்காக எல்லோருக்கும் தியானங்கள் சொல்லித் தருகிறீர்கள்?
நீங்களும் ராஜாக்களாக வேண்டும் என்பதற்காக!
| ஐம்புலன்களுக்கு அதிபதியான மறு கணத்திலிருந்து... யாராயிருந்தாலும் அவர் ராஜாதி ராஜா! | * அப்படியா! ஆம்! வெளியுலகில் தாண்டப்பட வேண்டியவை, தாண்டப்படாத வரை, உள்ளுலகில் நுழையக் கூட முடியாது. * யார் ராஜா? யார் அடிமை? ஐம்புலன்களுக்கு அடிமையாய் உள்ள வரை... அவர் ராஜாவாக வெளியுலகில் வாழ்ந்தாலும் நிஜத்தில் அடிமையே! |
ஐம்புலன்களுக்கு அதிபதியான மறு கணத்திலிருந்து... யாராயிருந்தாலும் அவர் ராஜாதி ராஜா!
★ பெண்கள் பூஜைகள் செய்யலாமா?
ஆண் உடலில் வாழும் உயிருக்கு, பூஜைகள் போன்ற புனித செயல்களில் ஈடுபட எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ... அதே உரிமைகள் பெண் உடலில் வாழும் மனித உயிருக்கும் உண்டு! உடலால், உரிமையை தடுக்கக் கூடாது.
★ குழப்பம்?
'தெளிவடைய ஆரம்பித்திருக்கிறீர்கள்' என்பதன் அறிகுறி.
★ அப்படியா...?
மந்தமாயிருக்கும்போதும், மதியூகமாய் செயல்படும் போதும், குழப்பம் வராது.
மந்தத்திலிருந்து மதியூகம் நோக்கி உங்களின் குணம் நகர்கையில்... நீங்கள் சந்திப்பதுதான் 'குழப்பம்' என்னும் படிக்கட்டு!
★ குழப்பத்துக்கு தீர்வு?
குழப்புவதைக் குழப்புங்கள்.
★ அப்படியென்றால்...
குழப்பம் உருவாகக் காரணமாக இருப்பதை, மனதுக்குள் குறுக்கு விசாரணை செய்யுங்கள். குழப்புவது குழம்பிப்போகும்!
★ உறக்கம், மரணம் இரண்டிலும் ஒற்றுமைகள் பல உள்ளதே?
உறக்கம் குறுகிய மரணம்!
மரணம் நீண்ட உறக்கம்!

பெண்கள் பூஜைகள் செய்யலாமா?
ஆண் உடலில் வாழும் உயிருக்கு, பூஜைகள் போன்ற புனித செயல்களில் ஈடுபட எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ... அதே உரிமைகள் பெண் உடலில் வாழும் மனித உயிருக்கும் உண்டு! உடலால், உரிமையை தடுக்கக் கூடாது.
வித்தியாசம் காலத்திற்குட்பட்டது.
⋆ அப்படியானால் உறக்கமும் மரணமும் ஒன்றா?
ஆம்! உறக்கம் ஒரு நாளுக்கும், இன்னொரு நாளுக்கும் இடைப்பட்ட மரணம்.
மரணம் ஒரு பிறவிக்கும், இன்னொரு பிறவிக்கும் இடைப்பட்ட உறக்கம்.
⋆ பாசம்?
ஒரு வித வடிவம்.
⋆ வெறுப்பு?
ஒரு வித மனப் பிடிப்பு.
⋆ அதெப்படி பிடிப்பாகும்...
இல்லாவிட்டால், இவர், "என் வெறுப்பிற்குரியவர்" எனக் கதை சொல்லி, அவரை அடிக்கடி நினைத்துக் கொண்டேயிருப்பீர்களா... வெறுப்பு என்ற பெயரில்!
⋆ ஏன் அப்படி செய்கிறோம்?
நம் மனதுக்கு பிடிக்காத ஒன்றை, அவர் செய்துவிட்டாலும், அவர் மீதான பாசம் இன்னும் வாழ்கிறது. அந்த மனப்பிடிப்புதான், வெறுப்பாக வெளிப்படுகிறது.
⋆ அப்படியென்றால், வெறுப்பும், பாசமும் ஒன்றா?
ஆம். இரண்டும் 'ஏக்கம்' எனும் ஒரு விதையில் இருந்து முளைத்த இரண்டு கிளைகள்.
⋆ வெறுப்பு, பாசம், அன்பு, இவற்றின் தொடர்பு என்ன?
அன்பு என்ற மலர், இதயத்தில்
மலராதவரை, பாசமும், வெறுப்பும் சம
அளவில் இருந்துகொண்டேயிருக்கும். அன்பு
மலரட்டும்.
வெறுப்பு, பாசம், அன்பு, இவற்றின் தொடர்பு என்ன?
அன்பு என்ற மலர், இதயத்தில்
மலராதவரை, பாசமும்,
வெறுப்பும் சம அளவில்
இருந்துகொண்டேயிருக்கும்.
எனக்கு தியானமார்க்கம் எந்த வகையில் உதவும்?
- ஷேக் முகமது, நுங்கம்பாக்கம்
நீங்கள் யார்? ஏன் நாம் நினைத்தபடி வாழ்வும் உறவுகளும் அமையவில்லை? நினைப்பதை நிஜமாக்குவது எப்படி? உள்ளுக்குள்ளிருக்கும் அதிசயங்கள் எவ்வளவு?
ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும் அடைவது எப்படி? எனும் வகைவகையான கேள்விகளுக்கு, பதிலும், வழியும், தீர்வும் ஒன்றாய் தந்திடும் ஒரே மார்க்கம் தியான மார்க்கம்.
மனிதன் மலர வேண்டும்
நுனி நாக்கில் ஆங்கிலம்... கneகச்சிதமான உடைகள்... கையில் நிறையப் பணம்... நவநாகரிகக் கலாச்சாரம் சௌகரியமான வாழ்க்கை.
இவற்றைக் கொண்டு மனிதன் முன்னேறிவிட்டான் என்று சொல்லலாமா? எதிர்பார்த்ததை மனிதன் அடைந்துவிட்டான் என அறிவிக்கலாமா?
கேள்விக்குப் பதிலாய் ஒரு கதை - விலங்குகள் ஆராய்ச்சியாளர் ஆப்பிரிக்கக் காட்டில் நரமாமிசம் உண்ணும் கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அவரை விருந்து படைக்க, காட்டுக்குள் கூச்சலோடு, அந்தக் கும்பல் தலைவனிடம் இழுத்து சென்றது.
தலைவருக்கு அருகிலேயே, தலைமுடி சரியாக வெட்டி, நாகரிக மனிதர் போன்று உடையணிந்த ஆப்பிரிக்கர் உட்கார்ந்திருந்தார். ஆராய்ச்சியாளருக்கு நெஞ்சோரத்தில் நம்பிக்கை பிறந்தது.
வெளிவேஷம் மாறுவது
சாதாரண மன மாற்றத்தைத்
தான் ஏற்படுத்தும்.
குணமாற்றத்தை ஏற்படுத்தாது.
'இவருக்கு மட்டும் ஆங்கிலம் தெரிந்திருந்தால், கெஞ்சிக் கூத்தாடித் தப்பித்து விடலாமே...' என நினைத்துக்கொண்டிருக்கும் போதே, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் படித்தவர்போல ஆங்கிலத்தில் அந்த ஆப்பிரிக்கர் கேட்டார். "உன் கடைசி ஆசை என்ன? சொல். முடிந்தால் நிறைவேற்றி வைக்கிறேன். இங்கு இருக்கிறவர்களுக்கு பார்மாலிட்டீஸ் எல்லாம் தெரியாது."
ஆராய்ச்சியாளருக்கு பயத்தை மீறிக்கோபம் வந்தது. "பேசுவதிலிருந்து நீ பல்கலைக்கழக படிப்பு முடித்தவன் என்று தெரிகிறது. நாகரிக வாசலில் வாழ்ந்திருந்தும், அந்த வாழ்க்கை உன்னிடம் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவே இல்லையா?" என வெகுண்டு கேட்டார்.
ஆப்பிரிக்கர், "என்ன அப்படி கேட்டுவிட்டாய்? நான் எவ்வளவு மாறிவிட்டேன் தெரியுமா,? இவர்களைப் போன்று நான் அநாகரிகமாக நடந்துகொள்வதில்லை. இப்பக்கூட, உன்னை வறுத்த பின்பு, நான் உன்னை, கத்தி, போர்க், ஸ்பூன் பயன்படுத்தி தட்டிலிட்டுதான் சாப்பிடுவேன்! விரல்களைப் பயன்படுத்தவே மாட்டேன். நான் நிறைய மாறிவிட்டேன்" என்றாராம்.
நாகரிகம் என்ற பெயரால் வெளிவேஷம் வேண்டுமானால் மாறலாம். மனிதர்கள் மாறுவதற்கும், நாகரீக பூச்சுக்கும் சம்பந்தமேயில்லை. மனிதர்கள் மாறவேண்டும் என்பதைவிட, மனிதர்கள் மலர வேண்டும் என்பதுதான் சாலச்சிறந்தது.
ஜருதிஸ்ட்ராவிடம் ஆசீர்வாதம் பெற, மிகத் தாழ்மையோடு, தாழ்ந்த குரலில், பவ்யமாக அவர்காலில், விழுந்து நமஸ்காரம் செய்தார் பக்தர் ஒருவர்.
"எளிமையாய் இருக்குமளவுக்குத் தகுதி பெற்றவனல்ல நீ. நடிக்காதே. கடைசியில் ஏமாந்து போவது நீயாகத்தானிருக்கும். வெளிவேஷம், உள் உலக விஷம்", என்றார் ஜருதிஸ்ட்ரர்.
உடைநடை பாவனையில் சிறு மாற்றம் செய்வது எளிது. இதனால், அதிகபட்சம் வெளிவேஷம் மாறலாம்.
வெளிவேஷம் மாறுவது சாதாரண மன மாற்றத்தைத்தான் ஏற்படுத்தும்.

> "மனம் மாற மனிதர் மாறுவார்!
> குணம் மாற மனிதரே மலர்வார்"
> என்ற ஜப்பானிய பொன்மொழி,
> ஒரு ஞான வெளிப்பாடு.
குணமாற்றத்தை ஏற்படுத்தாது.
மனமாற்றத்தின் பலன் வரையறைக்குட்பட்டது.
ஒருவர், தன் வாழ்நாளில் சந்தித்துத் தடுமாறிய சூழ்நிலைகளை, மீண்டும் சந்தித்தால், அதை எப்படி எதிர்கொள்வது என்ற பக்குவத்தை மட்டுமே மனமாற்றத்தால் தரமுடியும்.
இதில் வேடிக்கை என்னவென்றால், வாழ்க்கை எப்போதுமே புதுப்புதுச் சூழ்நிலைகளைத்தான் பரிசாகத் தரும்.
அதனால்தான், பலர், நாகரீகம், சௌகரியம், சொத்து, இவற்றின் உச்சிக்குப் போனபின்பு கூட, நிம்மதியின் வாசல் கதவைக்கூடத் திறக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
வெறும் மன மாற்றம் வேலைக்காகாது!
"மனம் மாற மனிதர் மாறுவார்! குணம் மாற மனிதரே மலர்வார்" என்ற ஜப்பானிய பொன்மொழி, ஒரு ஞான வெளிப்பாடு.
குணமாற்றம் பெற்றவருக்குள், வாழ்வின் எந்தவொரு சூழ்நிலையையும் எளிதாய் அணுகும் பக்குவம் பிறக்கும்.
மேலை நாட்டுச் சிந்தனையாளர்கள், எப்போதுமே, மனம், எண்ணம் போன்ற மூளை ரீதியான அணுகுமுறைகளைத் தான் வலியுறுத்துகிறார்கள். இதன் பாதிப்புதான் இன்று உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது.
இன்றைய மனிதருக்கு, குணமாற்றம், விழிப்புணர்வு, ஆனந்தம் போன்ற இதயரீதியான அணுகுமுறைகள்தான் அவசியம் தேவை.
மூளை ரீதியான அணுகுமுறையால் பர்சனாலிட்டியில் (Persnolitity) வேண்டுமானால் சில மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.
வியாபாரம் நன்றாகச் செய்வது எப்படி? மேடைப்பேச்சில் கவர்வது எப்படி? புதிய
குணமாற்றம் பெற்றவருக்குள்,
வாழ்வின் எந்தவொரு
சூழ்நிலையையும் எளிதாய்
அணுகும் பக்குவம் பிறக்கும்.
மனிதர்களை கவர்வது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடலாம்.
ஆனால், இவற்றால் மனிதரின் நியாயமான தாகங்கள் தீர்க்கப்படுமா? என்றால், 'இல்லை" என்றே குணநல ஆராய்ச்சியாளர்கள் (Mind - Body medicine scientist) சொல்கிறார்கள்.
தாகங்கள் தீர்க்கப்பட வேண்டுமானால் பர்ஸ்னாலிட்டியைத் (Personality) தாண்டிய ஒவ்வொரு மனிதரின் தனித்துவம் (Individuality) மலரவேண்டும்.

# தியானம்
"இவ்வளவு ருசித்துச் சாப்பிடுகிறீர்களே, அப்படி என்ன சாப்பிடுகிறீர்கள்" என ஜென்ஞானி ஒருவரிடம் கேட்கப்பட்டது.
அவர், "அமிர்தம்" என்றார்.
ஆச்சரியப்பட்டவர் அமிர்தத்தை காணும் ஆவலில், அமிர்தக் கோப்பையைப் பிடுங்கிப் பார்த்தார். பாதிக் கோப்பையளவுக்கு நீர் இருந்தது!
ஒரு ரோஜா மலரை... இளம் மாலைத் தென்றலை... பௌர்ணமி முழுநிலவை...
சாதாரண மனிதர் இரசிப்பதற்கும், ஒரு கவிஞர் இரசிப்பதற்குமே நிறைய வித்தியாசம் உண்டு. ஞானியின் உணர்வனுபவம் கற்பனைத் திறனின் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது.
உங்களின் உணர்வுரீதியான அணுகுமுறை அதிகமாக... அதிகமாக, உங்களைச் சுற்றி மகிழ்ச்சி தானாய் அதிகரிப்பதை உணர்வீர்கள்.
மனமாற்றம் போதாது. தனித்துவம் மலர வேண்டும். உணர்வு ரீதியாக வாழ்வை அணுக ஆரம்பியுங்கள். மலர்வீர்கள்.
உணர்வு ரீதியான அணுகுமுறை, நீரைக்கூட அமிர்தமாக்கும். நீங்கள் மலர, உங்களின் குணம் மாற, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆழமாக, உணர்வுப்பூர்வமாக அனுபவியுங்கள்.
தியான முதிர்ச்சியின் முக்கியமான வெளிப்பாடு, உணர்வு ரீதியாக, உணர்வுப் பூர்வமாக வாழ்தல். உணர்வுப்பூர்வமாக வாழ ஆரம்பியுங்கள். தியானம் நிகழும்.
மகாவாக்கியம்
“குணம் மாற உலகமே மாறிப்போகும்”
இதயத்திலிருந்து யோசி! இதயத்திலிருந்து சுவாசி! இதயத்திலிருந்து பேசு! இதயத்திலேயே வாழ்!
தனித்துவம் மலரும்.
சீக்கிரத்தில் படிக்க சுலபமான, ஆனால், செயல்படுத்த மிகக் கடினமான ஜென் கூற்று உணர்த்த விரும்புவது ஒரே ஒரு இரகசியத்தைத்தான்.
“எவ்வளவு உணர்வுப்பூர்வமாக வாழ முடியுமோ, அவ்வளவு உணர்வுப்பூர்வமாக வாழ, உண்மையாய் வாழ். நடிப்பு, கலை. வேஷம் கிழி. குணம் மாறும். நீ மலர்வாய். மகிழ்வாய். வாழ்வாய். இதே உலகில்!”
நில்! கவனி! உணர்!
இதயக் கண் திறந்துகொள்ளும்”
டென்ஷன் ஏன் வருகிறது?
-எஸ்தர், பெரம்பலூர்
தன் எடையை விட, 30 மடங்கு அதிகமுள்ள உணவு துணுக்குகள் வரை, சர்வ சதாரணமாக தூக்கிச்செல்லும் எறும்புகள், உற்சாகமாகவேயிருக்கின்றன. எப்போதும்!
தன் உடலை மட்டும் தூக்கிக் கொண்டு செல்லும் மனிதருக்குதான் டென்ஷன் வருகிறது.
உற்சாகம் குறையும் போதுதான், ஒரு மனிதருக்கு டென்ஷன் வருகிறது. உங்களுக்கு வந்த நிமிடங்களை யோசித்துப் பாருங்கள். அந்த நேரத்தில் உற்சாகமிழந்திருப்பீர்கள்.
உற்சாகமாக, சந்தோஷமாக இருக்கும்போது, முயற்சி செய்தால்கூட உங்களால் டென்ஷனாக முடியாது.
உற்சாகக் குறைவே வாழ்வின் சாதாரணச் சூழ்நிலைகளில்கூட ஒருவரை டென்ஷனின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது.
உற்சாகத்தை வாழ்வில் அதிகரியுங்கள், டென்ஷன் குறையும்.
உற்சாகம் அதிகரிக்க அல்லது உற்சாகம் குறையாமல் இருக்க சில டிப்ஸ்...
★ தினம் ஒரு தியானம் செய்யுங்கள்.
★ சந்தோஷம் தந்த சம்பவங்களைமட்டும் நினைவில் நிற்க அனுமதியுங்கள்.
★ இதயப்பூர்வமாக வாழுங்கள்.
★ சிரிக்கக் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் முழுமையாகச் சிரியுங்கள்.
★ டென்ஷன் வரும்போது, முழு விழிப்புணவோடு இருங்கள்.
நீங்கள் டென்ஷனாகுகிறீர்கள் என்பதைத் தெரிந்தே, டென்ஷனாகுங்கள். உடலில், மனதில் நிகழும் மாற்றங்களை, முழுமையாக உணருங்கள். ஆசிரியரைப் பார்த்ததும் அடங்கும் வகுப்பறைச் சப்தம் போல, டென்ஷன் உங்களை விட்டு ஓடுவதைப் பார்ப்பீர்கள்.
நதியல்ல அது குரு
'என்ன இது? சொட்டு சொட்டாய்ச் சேர்ந்து, மெல்லிய கோடாகச் செல்கிறோமே? பெரிய நதியாகப் பிரவாகிப்பது எப்போது?' என்று துவக்கத்தில் எந்த நதியாவது தயங்குகிறதா..?
ஆனால், மனிதர்கள்தான் நானெல்லாம் சாதிக்க முடியுமா? என்று வாழ்வை மலைப்போடு பார்க்கிறார்கள்.
தொடர்ந்து முன்னேறுவதாலேயே, காண்பவர் கண்கள் விரிய, நம் கண்முன்னே எம்பிக்குதித்து வழிந்தோடுகிறது அந்த நதி.
அது சுயவிமர்சனத்தோடு, அங்கேயே தேங்கி நிற்பதில்லை. துணிந்து காலடி எடுத்து வைத்துக் கொண்டேயிருக்கிறது.
"என் இலட்சியம் இந்த இடத்திலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறுவதேயாகும்" என ஓட்டமாய் ஓடும் நதி....
நதியைப்போல்
பாகுபாடு இல்லாமல்
வாழத் தெரிந்தவருள்,
உற்சாகமும், குஷியும்
நதியைப்போல் பாயும்.
வேகமாய் முன்னேறிப் பாய்கையில்,
உடன்வருவது ஓடையா, சுனையா என்று
பாகுபாடு பார்க்காமல், உடன் வரும்
அனைவரையும் ஒன்றாக இணைத்துக்
கொண்டு, குதூகலத்துடன் வேகமாக அழைத்துச்
செல்கிறது, சாதிக்கிறது.
நதியைப்போல் பாகுபாடு இல்லாமல் வாழத் தெரிந்தவருள், உற்சாகமும், குஷியும் நதியைப்போல் பாயும்.
நதியானது, “அட நாம்தான் இப்போது ஓரளவு வளர்ந்துவிட்டோமே” என்று எண்ணுவதில்லை.
ஏனெனில், பெருமிதம் 'தேக்கத்தின் தோழி' என்று அதற்குத் தெரியும். அதனால் முன்னேறுவதே என் இலட்சியம் என்று தொடர்ந்து தன் பயணத்தைத் தொடர்கிறது.
நதியைப்போல் வாழ்பவர், விதியைக்கூட எளிதாய் வளைத்து, நெளித்து, மாற்றிவிடுவார். நதி செல்லும் வழியில், பல தடைகள் வந்து செல்லும்போது, 'இத்தடைகள் நம் வளர்ச்சியைப் பார்த்து மற்றவர்கள் செய்யும் சதி' என்று புலம்பி, மற்றவர்மீது அது குறை சொல்லி நிற்பதில்லை.
சின்னத் தடைகளைத் தாண்டிச் செல்லும். பெரிய தடைகளாக இருந்தால், அதனைச் சுற்றி அழகாய் வளைந்து முன்னேறிச் செல்லும்.
அப்போதுகூட, 'இந்த சின்னத் தடையெல்லாம் ஒரு தடையா?' என்றோ, 'ஐய்யோ எவ்வளவு தடை நம்முன்னே இருக்கிறது. இது எப்போது நகர்ந்து செல்லும்' என்று நொந்து, அந்தத் தடை தானாக விலகும் வரை நின்று காத்திருக்காமல், தொடர்ந்து நிற்காமல் முன்னேறுவதிலேயேதான் ஒரே குறியாகயிருக்கிறது.
மேடு, பள்ளம் எனக் கரடுமுரடான பாதைகளைப் பார்த்ததும் சிறிதும் மனம் கோணாமல், அழகான இடங்களைப் பார்த்தால், இரசித்து மயங்கி அங்கேயே நின்று விடுவதில்லை.

நதி செல்லும் வழியில், பல தடைகள் வந்து செல்லும்போது, 'இத்தடைகள் நம் வளர்ச்சியைப் பார்த்து மற்றவர்கள் செய்யும் சதி' என்று புலம்பி, மற்றவர்மீது அது குறை சொல்லி நிற்பதில்லை.
"எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கிறோம். சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்" என்று அடுத்தவர் அறிவுரை செய்தாலும், இளைப்பாறாமல், தொடர்ந்து முன்னேறிக் கொண்டே செல்லும் அழகிய நதி, நம் முன்னேற்றத்திற்கு ஒரு முன்மாதிரி.
ஒரு கர்மயோகி, எவ்வாறு தான்செய்த செயலுக்காக பலனை எதிர்பார்ப்பதில்லையோ, அதேபோன்று, தான்செல்லும் இடங்களையெல்லாம் கொழிக்கச் செய்தாலும், அதனால் ஒரு போதும் அகம்பாவம் கொள்வதில்லை.
இவ்வளவு கடினப்பட்டு இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து வந்தோமே? இப்படி நம்மையே அடையாளம் தெரியாமல் காணாமல் போகச் செய்யும் கடலுக்குள் செல்வதற்காகவா?
"இலட்சக்கணக்கானவர் என்னால் பயன்பெற்றனர். ஆனால், முடிவில், என் தனித்துவம் என்ற ஒன்றே இல்லாமல் போகிறதே!" என்று கடலுள் கலப்பதைப்பற்றி நினைத்துக் கண் கலங்கி நிற்பதில்லை.
அதனால்தான், நதி, கடலாகிறது.
இப்படி வாழத்தெரிந்த தனி மனிதரே மக்கள் திலகமாகவோ, மஹাত্মாவாகவோ, மகா ஞானியாகவோ மாறுவார்.
ஆழ்ந்து புரிந்துகொண்டால், நதி நமக்கு மிகப் பெரிய ஆன்மீக வழிகாட்டி என்பதை உணரலாம்.
நதிபோல் வாழுங்கள். விதிபோல் பாடுபடுவது நிற்கும். சதிபோல் தெரிவதெல்லாம் மதியால் புது உருவெடுக்கும். புது குதூகலம் உயிரில் ஒட்டிக்கொள்ளும்.

# தியானம்
ஆரம்பத்தில் சிறிய கோடாயிருந்தாலும் கொஞ்ச காலத்திலேயே பெரிய பிரவாகமாகி விடுவீர்கள்.
நதிபோல் வளைந்து செல்பவருக்குத் தடைகள் என்ற ஒரு அம்சம் இருக்கவே முடியாது.
நதியைப் போல் வாழ விதியைக் கூடத் திருத்தலாம், மாற்றலாம்.
சில நிமிடங்கள் கண்களை மூடி நதியின் போக்கு, துள்ளல், எளிமை போன்ற எல்லா குணங்களையும் தியானியுங்கள். அது, உங்களின் உணர்வு நதிக்குள் கலக்குமளவுக்கு, ஆழமாய்த் தியானியுங்கள்.
நீங்கள் ஒரு உற்சாக நதியாவீர்கள். உங்களுள் ஓர் ஆனந்த நதி பிரசவிக்கும் அதிசயத்தை உடனே காண்பீர்கள். தியானித்துப்பாருங்கள்.
தப்புன்னு தெரியுது. அந்த நேரம் வரும் போது நம்மையும் மீறி தப்பு நடந்திடுதே, தவிர்க்க முடிவதில்லையே, ஏன்?
-மௌரி, உத்ராஞ்சல்
'தப்பு' என்பது ஆழ்மனதைப் பொறுத்த அளவிற்குச் சுவையான ஒரு பதார்த்தம்.
சாதாரண ஒரு செயலை, 'இது தப்பு' என்று சொல்லிவிட்டால், நம் ஆழ்மனம் அதையே சுற்றிச் சுற்றி வட்டமடிக்க ஆரம்பிக்கும்.
ஆழ்மனம்தான் 90 சதவீதம். மேல்மனம் வெறும் 10 சதவீதம் தான். அதனால் தான், பலம் அதிகம் பெற்ற ஆழ்மனமே எப்போதும் ஜெயிக்கிறது. ஆழ்மனதிலிருந்து ஜெயிக்கிறது. ஆழ்மனதிலிருந்து ஜெயிக்க ஒரே ஒரு வழி, தப்பை, தப்பில்லை என்று புரியவைப்பதே.
இது மிகக் கடினமானது. NSP போன்ற உயர்நிலை தியான வகுப்புகளில்தான் ஆழ்மனதிலிருந்து உங்களைக் காப்பாற்றும் இரஸவாதத்தை நிகழ்த்த முடியும்.
இப்போதைக்குத் தப்பைப் பற்றிச் சரியான தெளிவே போதுமானதாயிருக்கும்.
உங்களையும் ஆனந்த சக்தி ஆட்கொள்ளட்டும்
முதுமலை காட்டுக்குள் சென்று கொண்டிருந்தோம். என்னோடு இன்னும் சில பக்தர்களும் யானைச் சவாரிக்கு வந்திருந்தார்கள். காட்டுக்குள் செல்லச் செல்ல இருளின் அடர்த்தி அதிகமானது.
வெளிச்சத்தைப் பார்ப்பதே அரிதாக இருந்த அந்தக் காட்டுக்குள், சரியான பாதையை எப்படி இந்த யானைப் பாகரால் கண்டுபிடிக்க முடியும் எனச் சிந்தித்து கொண்டிருந்தபோது... அந்த யானைப் பாகரைப் பார்த்தேன். அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்ததும், யானையின் மீது சவாரி செய்யாமல், அவர் இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார். இங்கு வந்ததும், "ஏன் இவர் இறங்கினார்" எனச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு ஜென் ஆஸ்ரமத்தில் கடைப்பிடிக்கும் பல விதிமுறைகள், புதுமையானவை, சூட்சுமமானவை. அந்த ஆஸ்ரமத்தில் ஒருவர் துறவியாக வேண்டுமானால், அவர் கீழ்க்கண்ட சாதனையைச் செய்திருக்க வேண்டும்.
> "குழந்தை பூவைப் பறிப்பதும்,
>
> மனிதர்கள் பூவைத்
> தொடுவதும் ஒன்று"
அது, 'குறைந்தது ஒரு வருடம், அவர் குடிலுக்கு செல்ல, ஒரே ஒரு பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு வருட முடிவில், குரு வந்து பார்க்கும்போது, அங்கு நடைபாதை உருவாகியிருக்கக்கூடாது.
அவர், ஒரு வருடம் பயன்படுத்திய
பாதையிலிருக்கும் புற்கள், சாகாமல்
இருந்தால் மட்டுமே... அவர் துறவியாக
ஏற்றுக்கொள்ளப்படுவார்.' என என் சிறுவயதில் இது பற்றிக் கேள்விப்பட்டபோது, மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 'அது எப்படி நடைபாதை உருவாகாமல் இருக்க முடியும்' என்று தோன்றியது. யானைப்பாகரிடம் கேட்டேன், "நீங்கள் ஏன் கீழே இறங்கி நடக்க ஆரம்பிக்கிறீர்கள்?".பாகன், “இனி நாம் செல்லப்போவது திக்குதிசை புரியாத காட்டுப் பகுதி. நாம் வந்த பாதையைத் திரும்ப வரும்போது சரியாய்க் கண்டுபிடிக்க, இந்த நடைபாதை உதவும் அதற்காகத்தான் இறங்கிக்கொண்டேன்” என்றார்.
"பாகனை விட பலமடங்கு எடைகொண்ட யானையால், இந்த நடைபாதையை உருவாக்க முடியாதா? இவர் ஏன் இறங்க வேண்டும்” என சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
அந்த ஜென் ஆஸ்ரமத்தில் தோட்டத்தில் இப்படியொரு வாசகம் எழுதி வைக்கப்பட்டிருக்குமாம்...
"குழந்தை பூவைப் பறிப்பதும்,
மனிதர்கள் பூவைத் தொடுவதும் ஒன்று”
எனவே, “பூக்களைத் தொடாதீர்!”
சிறுவயதில் கேட்டபோது இதுவும் புதிராக இருந்ததால், “தொடுவதும், பறிப்பதும் எப்படி ஒன்றாகும்” என்றே தோன்றியது.
“நடைபாதையை உருவாக்க யானை போதாதா?” எனக் கேட்டதற்கு,
"அதற்கு சூதுவாது தெரியாது.

மனிதரின் காலடிபடும்போது, புற்பூண்டுகள் சாகின்றன. காரணம் மனிதரிடமிருந்து தொடர்ந்து வெளிப்படும் எதிர்மறை எண்ணங்களும், அவை தொடர்ந்து உடல்வழியாக வெளியிடும் எதிர்மறை சக்திக் கதிர்வீச்சும்தான் காரணம்.
மனுஷன் காலடி பட்டாதான், அந்த இடத்தில் புற்பூண்டுகள் முளைக்காமல் போகும். யானையின் காலடித்தடம் ஒன்றும் செய்யாது” என்றார்.
பாகன் இப்படிச் சொன்னதற்கு, எங்களோடு வந்திருந்த பேராசிரியர் ஒருவர், “மனிதருக்கு இரண்டு கால்கள் மட்டுமே. ஆனால், யானைக்கு நான்கு கால்கள் அதன் எடையை, அதனால் சமச்சீர் செய்து கொள்ள முடியும். எடையைச் சமச்சீராவதால், புற்கள் நசுக்கப்படுவதில்லை. சூதுவாது எனக் கதை விடாதே!” என்றார்.
பேராசிரியரின் விளக்கம் தர்க்கரீதியாகச் சரியாய்ப் பட்டாலும், உள்ளுணர்வு அவரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே, அடுத்த நிறுத்தத்தில் ஓய்வெடுக்க இறங்கியதும், சிறு பரிசோதனை ஒன்றைச் செய்தேன். அது...
அந்த ஆஸ்ரமத்தின் வரவேற்புப் பலகையருகே இப்படி எழுதிவைக்கப் பட்டிருக்குமாம்...
“புற்களைக் கொல்லாதீர்”
பின்குறிப்பு. “புல்வதை தடுக்க நடைபாதையை மட்டுமே பயன்படுத்துங்கள். அங்குமிங்கும் சுற்றித் திரிவதை ஆஸ்ரமத்திற்குள் தவிர்ப்பீர்களாக!.”
இந்தச் செய்தியை கேட்கும் போது, மனிதரிடம் இருக்கும் ஏதோவொரு விசித்திரமான குணத்தை, இலைமறை காயாய்ச் சுட்டிக்காட்ட அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதை எளிதாய்ப் புரிந்துகொள்ள முடிந்தது.
மனுஷன் காலடி
பட்டாதான், அந்த
இடத்தில் புற்பூண்டுகள்
முளைக்காமல் போகும்.
யானையின் காலடித்தடம்
ஒன்றும் செய்யாது.
ஓய்வெடுக்கும்போது... யானையின்
காலடிப் பரப்பளவை அளந்து கொண்டேன்.
மனிதரின் காலடிப் பரப்பளவையும் அளந்து
கொண்டேன்.
யானையின் எடையும், மனிதரின்
எடையும், தங்களின் கால்களின் பரப்பளவு
மூலமாக வெளிப்படுத்தும் ஆழத்தைக்
கணக்கிட்டபோது...
தோராயமாக யானையால் ஏற்படுத்தப்படும் அழுத்தம், மனிதரால் ஏற்படுத்தும் அழுத்தத்ததைவிட, நான்கு மடங்காவது அதிகம் எனத் தெரியவந்தது. பேராசிரியரின் தலை கவிழ்ந்தது !
காந்தம், நிலத்தில் படும்போது இரும்புத் துகள்களை ஈர்க்கும். காரணம் காந்தத்தில் இருந்து வெளிப்படும் காந்த அதிர்வலைகள்.
நெருப்புக் கட்டி நிலத்தில் படும்போது, அது அந்த இடத்தைக் கருகச்செய்கிறது. காரணம் - நெருப்புக் கட்டி வெளியிடும் வெப்பக் கதிர்வீச்சுக்கள்.
மனிதரின் காலடிபடும்போது, புற்பூண்டுகள் சாகின்றன. காரணம் மனிதரிடமிருந்து தொடர்ந்து வெளிப்படும் எதிர்மறை எண்ணங்களும், அவை தொடர்ந்து உடல்வழியாக வெளியிடும் எதிர்மறை சக்திக் கதிர்வீச்சும்தான்.
நமக்கு இந்த உண்மைகள் தெரியவில்லை என்றாலும், நம்மிடமிருந்து தொடர்ந்து எதிர்மறை எண்ணங்களும், சக்தியும், நாம் வாழுமிடத்தையும், அங்கிருக்கும் மனிதர்களையும் பாதிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த பாதிப்புகள் மறைய, தனிமனிதரின் எண்ண ஓட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

நம்மிடமிருந்து தொடர்ந்து எதிர்மறை எண்ணங்களும், சக்தியும், நாம் வாழுமிடத்தையும், அங்கிருக்கும் மனிதர்களையும் பாதிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த பாதிப்புகள் மறைய, தனிமனிதரின் எண்ண ஓட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும்.
தியானம்
திருமணத்தின் வாசல்படியைத் தொட
சில ஆயத்தங்கள்.
வெளியுலகிலும், உள்ளுலகிலும்
நிச்சயம் தேவை.
ஆனந்தத்தின் வாசல்படி தொட
நல்ல சொல், செயல், பாவனை
வெளியுலக ஆயத்தங்கள்.
நல்ல எண்ணங்கள்,
உள்ளுலக ஆயத்தங்கள்.
ஆனந்தத்தை எதிர்கொள்ள,
இன்றே ஆயத்தமாகுங்கள்...
சிலர் அருகே இருப்பதுகூட எரிச்சலைத் தருகிறது. சிலர் அருகே இருப்பதே சந்தோஷத்தைத் தருகிறது. ஏன் இந்த மாற்றங்கள்?
-வில்லியம், தருமபுரி.
வத்தல் குழம்பு சரியான பக்குவத்தில் சமைக்கப்பட்டிருந்தால்... அடுத்த வீட்டில் இருப்பவரையும் அது இருக்குமிடத்திற்கு, ‘வா’ என அழைக்கும். பக்குவம் மாறித்தீய்ந்து போனாலோ, இல்லை, கெட்டுப்போய் விட்டாலோ... அந்த வீட்டில் இருப்பவரே அருகில் வந்தாலும் ‘ச்சீ..போ’ என்ற கட்டளையைத்தான், அதனால் பிறப்பிக்க முடியும்.
உங்களின் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்து, உங்களின் மனம் வீசும் மணம்தான் அடுத்தவரைக் கவரும். அதுவேதான், மற்றவரை உங்களிடமிருந்து துரத்தும்.
மனிதர்கள் வெறுத்தாலும், கெட்டுப்போன உணவுப்பொருட்களை விரும்பிச் சாப்பிடும் மிருகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
உங்களுக்குச் சிலரின் அருகாமையே எரிச்சலூட்டுவது போல், உங்களின் அருகாமையும் சிலருக்கு எரிச்சலூட்டலாம். இந்தக் கோணத்தில் என்றாவது யோசித்திருக்கிறீர்களா?
அதேநேரத்தில், சிலரின் அருகாமையே உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக, அந்த நபர் தூய்மையானவராக இருக்க முடியாது.
உங்களின் மனமும், அவர்களின் மனமும் ஒத்துப்போகிறது. அவ்வளவுதான். அப்படி ஒத்துப்போகாதபோது மட்டுமே எரிச்சல் உருவாகிறது.
நல்ல பக்குவப்பட்ட குழம்பை யாராலும் வெறுத்து ஒதுக்க முடியாது. காரணம். அதன் பக்குவம். நீங்களும் உங்களின் மனப்பக்குவத்தை அதிகப்படுத்துங்கள். எல்லோராலும் விரும்பப்படும் மனிதராவீர்கள்.
பக்குவப்பட்ட மனதின் இன்னொரு மிக அருமையான குணம்... அது, வித்யாசமான மனப் பக்குவம் கொண்டவர் அருகே வந்தாலும் எரிச்சலடையாது. மனிதரைப் பற்றிய மாற்றங்கள் மறையும்.

மனதைத் திற மகிழ்ச்சி பொங்கட்டும்
ஒவ்வொரு மனிதனும் தெரிந்துக்கொள்ள வேண்டியவை...
- ஒளிந்திருக்கும் பொக்கிஷம்
- 24 மணி நேர சுகம்
- இறைவன் அளித்த பரிசு
- ஞானமடைவதுதான் மிச்சம்
- ஆண் சுதந்திரம்
- காதல் புதிரா? புனிதமா?
- நீங்களும் இளவரசர், இளவரசி தான்
- நீங்களும் மருத்துவராகலாம்
- தேவர்களாகுங்கள்
- எது கற்பு ?
- சின்ன வயதில் செய்த தவறுகள்
- நினைப்பதையெல்லாம் சாதிக்கலாம்
இப்படி எல்லா மனிதருக்குமான, எல்லாவித பிரச்சனைகளுக்குமான தீர்வுகளின் சாரம் இந்தப் புத்தகம் முழுவதும் பொதிந்திருக்கிறது.
நிச்சயமாக இந்த புத்தகம் உங்களுக்காக எழுதப்பட்டது தான்.
பரமஹம்ஸ நித்யானந்தர் பற்றி...
21-ஆம் நூற்றாண்டில் மெய்ஞானத்தோடு விஞ்ஞானத்தை சமைத்து வழங்கும் ஞான சத்குருநாதர்.
உலக அமைதியை உடனடியாக ஏற்படுத்தும் நேரடித்தீர்வான ஜீவன் முக்தர்களை உருவாக்குவதே என் பிறப்பின் நோக்கம் எனும் அவதாரபுருஷர்.
யோகம், தியானம், தீக்ஷைகள், தியான சிகிச்சைகள் மூலமாக தனிமனிதர்களின் வாழ்வை உயர்த்துவதற்காக, தன்னுடைய ஒரு நாளில் 20 மணி நேரத்தை பொதுமக்களுக்காகவே பயன்படுத்தும் தியாக புருஷர்.
மக்கள் சேவைக்காக 12,000 மேல் தியான சிகிச்சையாளர்களை உருவாக்கி, 300 சன்யாசிகளை உருவாக்கி, சேவைக்காகவே உருவாக்கப்பட்ட 120 தியானபீடங்களின் மூலமாக, 33 நாடுகளில் சேவைகளை செய்துவரும் ஞான புருஷர்.
நித்யானந்த தியானபீடம் | நித்யானந்த தியான பீடம், நித்யானந்தபுரி, மைசூர் ரோடு, பிடதி, பெங்களூரு - 562109 கர்நாடகா. |
ISBN 1-60607-089-4
Ebook ISBN:
979-8-88572-347-3
978-1-60607-088-8
விலை ரூ. 200/-