முதல் நிலை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆழமாக சுவாசித்தல்
[கால அளவு : 7 நிமிடங்கள்]
ஆழமாக சுவாசித்தல்
உங்களுடைய உணர்வு முழுவதும் சுவாசமாக மாற வேண்டும்.
முத ல் ஏழு நிமிடங்களில் நீங்கள் வஜ்ராசன நிலையில் அமர்ந்து, கண்களை மூடியும், உங்கள் கைகளை இடுப்பின் மேல் வைத்தும் சீரற்ற முறையில் சுவாசிக்க வேண்டும்.
ஆழமாகவும் ஒழுங்கற்ற முறையிலும் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவேண்டும். உங்களுடைய முழுக்கவனமும் சுவாசத்திலேயே குவியச்செய்யுங்கள்.
உங்களுடைய இருப்பே சுவாசமாக மாற வேண்டும்.
உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் பெற சக்தி உட-ல் மூலாதார சக்கரத்திலிருந்து சஹஸ்ராரத்தை நோக்கிப் பாய வேண்டும். நமது உடலில் சக்தியானது சகஸ்ரார சக்கரத்தில் இருந்து மூலாதாரச் சக்கரத்தை நோக்கி கீழ்நோக்கிப் பாய்கிறது. வஜ்ராசன நிலையில் அமரும் போது நமது சக்தி மேல்நோக்கி நகர்வதற்கு உதவுகிறது.
எந்த ஒரு ஆன்மீகப் பயிற்சியையும் ஒருவர் துவங்குவதற்கு சுவாசமே சிறந்த இடமாகும். பல்வேறுபட்ட தியான நுட்பங்களில் வெவ்வேறு வகையான முறைகள் உள்ளன. சிலர் சாட்சியாகவும், சிலர் மந்திரங்களையும், வார்த்தைகளையும் திரும்பச் சொல்லி தியானத்தில் ஈடுபடுவர். ஆனால் எனக்கு இம்முறைகளில் `சுவாசமே` சிறந்த நிலையான ஆன்மீகப் பயிற்சிக்கு உதவி இருக்கிறது.
நமது உடலில் இரண்டு விதமான அமைப்புகள் உள்ளன. ஒன்று நம்மால் கட்டுப்படுத்தி செயல்படும் அமைப்பு. (Voluntary actions). மற்றொன்று நம்மால் கட்டுப்படுத்த முடியாத செயல் அமைப்பு (Involun-tary actions)
நம்முடைய கைகளையும் கால்களையும் அசைப்பது நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய செயல்களாகும். உதாரணத்திற்கு தேவைப்படும் பொழுது உங்களால் கைகளையும், கால்களையும் அசைக்க முடியும், ஆனால் உங்களால் உங்கள் மூளையின் இயக்கத்தையோ, இதயத்தின் துடிப்பையோ கட்டுப்படுத்த முடியாது. இது நம்மால் கட்டுப்படுத்த முடியாத செயலுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.
ஆனால் சுவாசம் என்ற அமைப்பு தானாகவும், நம்மால் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது. நீங்கள் விழிப்புணர்வு நிலையில் இல்லாமல் இருந்தால் கூட சுவாசம் உங்களில் நடந்து கொண்டேயிருக்கும்.
நீங்கள் வேறு எதன் மீதாவது ஈடுபாடு கொண்டிருந்து கவனத்தைத் திருப்பினாலும் உங்களால் மூச்சுவிடுவதை நிறுத்த முடியாது. அப்படி சுவாசத்தை நிறுத்தினால் அது மிகப் பெரிய விளைவுகளை உண்டாக்கும். அதேபோல் உங்களால் உங்கள் சுவாசத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும்.
பிராணாயாமத்தைப் பற்றிய முழு அறிவியலும் சுவாசத்தைப் பற்றியே விளக்குகின்றது.
உங்களால் ஆழமாகவும், மெதுவாகவும் உங்களின் தேவைக்கேற்ப சுவாசித்துக் கொள்ளமுடியும். உங்களால் உங்கள் சுவாசத்தை நீண்ட இடைவெளிகளில் பிடித்துக் கொண்டும் அல்லது சுவாசத்தைச் சில நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கவும் முடியும்.
ஆனால் உங்களால் உங்கள் சுவாசத்தை நிறுத்தி இறக்க முடியாது. ஏனெனில் உங்களுக்குள்ளிருக்கும் உங்களைக் காப்பாற்றும் தன்மைக்கும் (Survival instinct), உங்கள் விருப்பத்திற்கும் இடையே உள்ள மோதல்தான் காரணம்.
ஒரு உண்மை என்னவென்றால், உங்கள் உடலில் உள்ள சில உறுப்புகளின் இயக்கத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாததற்குக் காரணம் இந்த காப்பாற்றும் தன்மை (Survival instinct) தான். வாழவேண்டும் என்ற ஆசை இருப்பதினால் தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சுவாசமே நீங்கள் வாழ வேண்டும் என்ற ஆசையினால் தான் நடந்து கொண்டிருக்கிறது.
உங்களின் சுவாசத்தின் தன்மை உங்களின் மனநிலைக்கு ஏற்றார் போல் மாறிக் கொண்டே இருக்கிறது என்ற உண்மையை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள்.
உங்களின் உணர்ச்சிகள் சுவாசத்துடன் ஒரு மோதலோடு இருக்கின்றது. நீங்கள் கவலைப்படும்போது உங்களின் சுவாசத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அதுவே நீங்கள் கோபத்தில் இருக்கும் போது உங்களின் சுவாசம் மாறுபாடாக இருக்கின்றது.
அதேபோல் நீங்கள் காதல் உணர்வில் இருக்கும்போதும், காம உணர்வில் இருக்கும் போதும் உங்களின் சுவாசம் மாறுகின்றது.
உங்களுடைய சுவாசம் உங்களின் உணர்ச்சிகளோடு நேரடியாக தொடர்புடையது. உங்களின் மனநிலை மாறிக் கொண்டிருக்கும் போதே உங்களின் சுவாசமும் மாறிக் கொண்டிருக்கிறது.
நீங்கள் கோபத்தில் இருக்கும்போது உங்களுக்கு வழங்கப்படும் அறிவுரை ஆழமாக சுவாசியுங்கள் என்பதுதான். ஆழமாக சுவாசித்து முடித்த பிறகு திடீரென உங்கள் மனம் இலேசானதாகவும், மிக அமைதியாகவும் மற்றும் கோபம் குறைந்ததாகவும் மாறியிருப்பதை உங்களால் உணர முடியும்.
மனமும், சுவாசமும் மிக நெருக்கமான தொடர்புடையது. நீங்கள் சுவாசிப்பதை நிறுத்தி விட்டால், நீங்கள் யோசிப்பதற்கு சிரமப்படுவதை உணரமுடியும்,
உங்களுடைய சுவாசம் உங்களின்
உணர்ச்சிகளோடு நேரடியாக தொடர்புடையது.
உங்களின் மனநிலை மாறிக் கொண்டிருக்கும்
போதே உங்களின் சுவாசமும் மாறிக்
கொண்டிருக்கிறது. நீங்கள் கோபத்தில்
இருக்கும்போது உங்களுக்கு வழங்கப்படும்
அறிவுரை ஆழமாக சுவாசியுங்கள் என்பதுதான்.
ஆழமாக சுவாசித்து முடித்த உங்கள் மனம்
இலேசானதாகவும், மிக அமைதியாகவும் மற்றும்
கோபம் குறைந்ததாகவும் இருப்பதை
உங்களால் உணர முடியும்.
வாசமானது உங்கள் மனதிற்கு எரிபொருளாகும், சமஸ்கிருதத்தில் இதனைப் “பிராணா” என்றழைப்போம். “பிராணா” என்பது நேரடியாக நம் சுவாசத்தைக் குறிக்கவில்லை. பிரபஞ்ச சக்தியானது சுவாசத்தின் மூலமாகப் பாய்வதையே குறிக்கின்றது.
தைத்ரேய உபநிஷத்தில் ஐந்து கோஷங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அன்னமயக் கோஷம், பிராணமயக் கோஷம், மனோமயக் கோஷம், விஞ்ஞான மயக் கோஷம், ஆனந்தமயக் கோஷம். இந்த கோஷங்கள் “ஆத்மனை” மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தில் உள்ள தோலைப் போல் இந்த கோஷங்கள் உடலைச் சுற்றி அமைந்துள்ளன. பிராணமயக் கோஷத்தில் தான் உங்களுடைய ஆசைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. ஆகையால் உங்களின் ஆசைகளுக்கேற்ப, உங்களின் சுவாசம் மாறுகின்றது.
உங்களுடைய ஆசைகளும், சுவாசமும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஆழ்ந்து பார்த்தீர்களானால் உங்களுடைய ஆசை அதிகமாக இருக்கும்போது சுவாசம் வேகமாகவும் கனமாகவும் இருக்கும். உங்களுடைய ஆசைகள் குறைவாக இருக்கும்போது நீங்கள் மிகவும் ஓய்வாகவும், அமைதியாகவும் இருப்பீர்கள்.
சுவாசமும், மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால், இதில் ஒன்றை மாற்றும் போது மற்றொன்றும் மாறும். நம்முடைய உணர்ச்சிகள் நம்முடைய சுவாசத்தைப் பாதிக்கின்றது என்பது நமக்குத் தெரியும். அதேபோல், நம்முடைய சுவாசத்தைக் கட்டுப்படுத்தும்போது அல்லது சுவாச அமைப்பில் சிறு மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் அது நம்முடைய உணர்ச்சிகளை உரசும்.
நம்முடைய நினைவுகள் தசைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. உட--ருந்து ஒரு பகுதி துண்டிக்கப்பட்டுவிட்டால் அந்தப் பகுதி சார்ந்த நினைவுகளும் துண்டிக்கப்பட்டு விட்டது போன்று உணருகிறோம். இதைப்பற்றி புரிந்து கொள்ள நீங்கள் ஒரு சிறு சோதனையைச் செய்து பார்த்தால் தெரியும்.
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுடைய உருவத்தை நினைக்காமல் ஞாபகப்படுத்திப்பாருங்கள். உங்களால் முடியாது. உங்களுடைய நினைவுகள் உங்களுடைய உருவங்களில் பதிந்திருப்பதால், உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை ஞாபகப்படுத்துவதற்கு உருவம் அவசியமாகிறது.
உங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அழுத்துவதால்தான் உங்களால் இயல்பாக சுவாசிக்க முடிவதில்லை. நீங்கள் சுவாசிக்கும் காற்றின் அளவு குறைவாகிறது. இந்நிலையில் உங்களால் ஏற்கனவே அழுத்தப்பட்ட உணர்ச்சிகளும், நினைவுப்பதிவுகளும் தசைகளி-ருந்து வெளியேறுவதில்லை.
இவ்வாறு சுவாசிக்கும் போது 'பிராணன்' உடலின் எல்லாப் பகுதியையும் தொடுவதில்லை. மேலும் நீங்கள் எப்போதும் ஒரே நிலையான மன அமைப்பைக் கொண்டே சுவாசிக்கின்றீர்கள். உடலில் உள்ள சம்ஸ்காரங்கள், பழைய நினைவுகள், ஒரு தனித்துவமான சுவாச அமைப்பை உருவாக்கிக் கொள்வதால் முடிவில் நாம் அதே போன்ற சம்ஸ்காரங்களையும், நினைவுகளையும் கவர்கின்றோம்.
உடல் அமைப்பில் அழுத்தப்பட்ட எந்த உணர்வுக்கும் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் தன்மை உண்டு.
(Survival instinct) உங்களுடைய மன அமைப்பில் அமுக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கு மன அமைப்பில் தங்குவதற்கும் வளர்ப்பதற்கும் ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளும். உங்களால் அமுக்கப்பட்ட கோபமான உணர்ச்சிகள், அதற்கேற்றாற்போல் சுவாசத்தை உருவாக்கும். இது ஒரு ஒட்டுத்தன்மையுள்ள சுழற்சி முறையாகும்.
உங்களுடைய சுவாசம் உங்கள் பழைய சம்ஸ்காரங்களின் விளைவினாலேயே உருவாகின்றது. அதனால் நித்ய தியானம் சீரற்ற முறையில் துவங்குகிறது. நீங்கள் எவ்வளவு ஆழமாக சுவாசிக்க முடியுமோ அவ்வளவு ஆழமாகவும், அவ்வளவு சீரற்ற முறையிலும் சுவாசிக்க வேண்டும்.
உங்களுடைய மனம் மற்றும் உயிர்த்தன்மை (Being) முழுவதும் சுவாசமாக மாறவேண்டும்.
சுவாசமானது ஆழமாகவும், காற்றை அதிக அளவு உள்ளிழுக்கும்படியும் இருக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த ஆழமான சீரற்ற சுவாசமுறை உங்கள் தசைகளில் உள்ள இறுக்கத்தையும், சம்ஸ்காரங்களையும் விடுபடுத்த (வெளியேற்ற) ஆரம்பித்து விடும்.
இயல்பாக நம்முடைய தசைகள் எப்போதுமே இறுக்கமாகவே இருக்கும். சீரற்ற சுவாசம் தசைகளை இளகச்செய்து, சம்ஸ்காரங்களை வெளியேற்றி சுத்தப்படுத்த ஆரம்பித்துவிடும்
ஒவ்வொரு உணர்ச்சியும் நமக்குள் ஒரு குறிப்பிட்ட சுவாச முறையை உயிர்த்தெழச் செய்யும். குழந்தைகளின் சுவாசம் ஆழமாகவும், ஆனந்தமாகவும் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அவர்கள் குறைந்த அளவு காற்றை மேம்போக்காக சுவாசிக்க மாட்டார்கள்.
ஆனால் அவர்கள் வளர, வளர சமுதாயம் கொடுத்த கட்டுப்பாடுகளினாலும், அவர்களுக்கு ஏற்பட்ட வலிகள், சந்தோஷங்கள், குற்ற உணர்ச்சிகள், நம்பிக்கைகள், மன உளைச்சல்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றினாலும் அவர்களின் சுவாசத்தின் தரம் முழுவதுமாக மாறிவிடுகிறது.
இப்பொழுது இந்த அமைப்பை நீங்கள் உலுக்க வேண்டுமானால், பல வருடங்களாக உணர்ச்சிகளால் அமுக்கப்பட்ட அமைப்பில் நீங்கள் குழப்பங்களைப் புகுத்த வேண்டும்.
வேறொரு அமைப்பைப் புகுத்துவதால் அது தீர்வாக அமையாது. உங்களுடைய பழைய பதிவுகளை வெளியே எடுக்க உங்கள் அமைப்பில் குழப்பங்களைப் புகுத்த வேண்டும்.
அதனால்தான் பிராணயாமா போன்ற சுவாசப் பயிற்சிகளை நான் அங்கீகரிப்பதில்லை. இந்த ஒழுங்கற்ற சுவாசமுறை பழைய சம்ஸ்காரங்களை எரித்துவிடும். இது ஒரு மரத்தில் உள்ள இறந்த இலைகளை உலுக்குவது போன்றதாகும். எல்லா இறந்த இலைகளும் கீழே விழுந்துவிடும். இதேபோல் இந்த சுவாசமுறை உங்களின் அமுக்கப்பட்ட மன அமைப்பை மாற்றிவிடும். எல்லா சம்ஸ்காரங்களும் வெளியேறிவிடும்.

இந்த சுவாசமுறை உங்களின்
அழுக்கப்பட்ட மன அமைப்பை
மாற்றிவிடும். எல்லா
சம்ஸ்காரங்களையும்
வெளியேற்றிவிடும் ஆற்றல்
வாய்ந்தாகும்.