KAILASA Library/நித்ய தியானம்/இரண்டாம் நிலைSign in
நித்ய தியானம்

இரண்டாம் நிலை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இரண்டாம் நிலை

மகா மந்திர உச்சாடனம் செய்தல்

[கால அளவு : 7 நிமிடங்கள்]

மகா மந்திர உச்சாடனம் செய்தல்

இந்த முறை உங்கள் உடலை ஒரு சக்தியாக உணர வைக்கின்றது.

இந்த இரண்டாவது பகுதியில் வஜ்ராசன நிலையில் அமர்ந்து கைகளில் சின் (Chin) முத்திரையை உருவாக்கி உங்கள் மூட்டிப்பகுதியில் வைக்க வேண்டும். இந்நிலையில் உங்களால் எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக, எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக, எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வளவு சப்தமாக மஹாமந்திர நாதத்தை உச்சாடனம் செய்ய வேண்டும்.

உங்களுடைய முழு விழிப்புணர்வையும் உச்சாடனத்தில் குவியுங்கள், உச்சாடனமாகவே மாறுங்கள், இது உங்களின் உள் எண்ண ஓட்டத்தைக் குறைக்கும்.

தொடர்ச்சியாக உங்களின் மனம் பேசிக்கொண்டே இருக்கின்றது. வெளியே நாம் யாரோடும் பேசாமல் இருந்தாலும், உங்களுக்குள் ஏதாவது ஒரு செயல் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த ஓசை எழுப்பும் தியான நுட்பம் உங்களின் உள் எண்ண ஓட்டத்தைக் குறைக்கும் சிறந்த நுட்பமாகும்.

பொதுவாக மக்களுக்கு எந்த வித எண்ண ஓட்டமும் இல்லாமல் அமர்ந்திருப்பதற்கு கஷ்டமான செயலாக இருக்கும் . நீங்கள் தியானம் என்ற துணிகரச் செயலில் இறங்கும் போது, உங்கள் மனம் எதிர்ப்பு தெரிவிப்பதை நீங்கள் பார்க்கலாம். மனம் அதற்கு எதிராக கலகம் செய்யும். அமைதியாக உட்கார்ந்து கொள்வதற்கு உங்கள் மனம் விரும்பாது. நீண்ட காலமாக உங்கள் மனம் இயங்குவதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளதால், திடீரென அமைதியாக அமரச் செய்யும் போது, மனம் எதிர்ப்பு தெரிவிக்கும்.

பொதுவாக மக்கள் எண்ண ஓட்டம் இல்லாமல் இருக்கும் போது தான் அதிக எண்ணங்கள் வருகின்றன என்று சொல்கிறார்கள். மனது என்பது நீண்ட வருடங்களாக அமைதியாக இருந்து பழக்கப்படவில்லை. அதனால் மனதை அமைதிப்படுத்தும் எந்த ஆரம்ப நிலை முயற்சியும் எதிர் நீச்சல் போலத்தான். பொதுவாகவே மனமானது தடுக்கும்.

இந்த நேரத்தில்தான் நிறைய மக்கள் தியானத்தை நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் உற்சாகம் இழந்து, தியானமெல்லாம் நமக்கு சரிவராது என்று நினைத்து விடுகிறார்கள்.

ஆன்மீகத்தேடல் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் தான் முதலில் கிடைக்கும். நீங்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும். இந்த முயற்சியைத்தான் நான் தபஸ் என்கிறேன். ஆரம்பத்தில் வரும் தடைகளைக் கொண்டு நீங்கள் உற்சாகம் இழந்தால், உங்களால் வெற்றி பெறவே முடியாது.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுப்பதாகப் புராணத்தில் ஒரு கதை உள்ளது. ஆனால் கடலைக் கடைந்த பிறகு முதலில் கொடிய விஷம் தோன்றியது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. அதற்கடுத்து நிறைய பொருட்கள் வெளிவந்த பிறகே முடிவில் அமிர்தம் வந்தது. இந்தக் கதை தியானத்தின் ஒரு முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

மனதை ஞானத்திற்காகத் ‘தியானம்’ என்ற செயலைக் கொண்டு கடையும் போது, எதிர்மறைகளும் வெளிப்படலாம். இதனால் உற்சாகமிழந்து விடாதீர்கள். இது உங்களின் எதிர்மறைகள் வெளியேற்றப்படுவதற்கான அடையாளமாகும். தியானத்தில் உங்களின் முயற்சியை நீங்கள் உயர்ந்த நிலையை அடையும் வரைத் தொடருங்கள்.

ஆரம்ப காலகட்டங்களில் எண்ண ஓட்டங்கள் தொடர்ந்து துன்பப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த மஹாமந்திர உச்சாடனம் செய்தல் உங்களுக்குச் சிறந்த கருவியாகும். உங்கள் மனதை அமைதிப்படுத்த இது உதவுகிறது.

நம்முடைய உள்மன எண்ண ஓட்டங்கள் மணிப்பூரகச் சக்கரத்திலிருந்தும், சுவாதிஷ்டான சக்கரத்தி-ருந்தும் உருவாகின்றன. இந்த இடத்தைத் தான் நாம் “Aura” என்கிறோம். முழுவதுமாக நாம் ஓசை எழுப்பும் போது, தொப்புள் மையத்துக்கு கீழே வலது புறமாக ஒரு அதிர்வு வருவதை நாம் உணர முடியும். ஆழமாக உச்சாடனம் செய்யும் போது தொடர்ந்து வரும் எண்ண ஓட்டங்களை நாம் நிறுத்த முடியும். இது `ஹரா` என்ற இடத்தை நாம் உலுக்குவதற்கு ஒப்பாகும். ஆகையால் தொப்புளுக்குக் கீழேயிருந்து நாம் உச்சாடனம் செய்ய வேண்டும்.

மனம் என்பது எண்ண ஓட்டங்களே. உச்சாடனம் செய்யும் போது எண்ண ஓட்டங்கள் குறைகின்றன. இயல்பாகவே நீங்கள் மனமில்லா நிலைக்குச் செல்கின்றீர்கள். உங்கள் மனதின் பல்வேறு முகங்களை நீங்கள் அனுபவமாக உணர ஆரம்பிக்கின்றீர்கள்.

ஒரு நல்ல கார் ஓட்டுனருக்கு அவருடைய காரைப்பற்றிய விஷயங்கள் தெரியும். உதாரணமாக காரின் சப்தத்தை வைத்து அதன் வேகத்தை அளவிடுவார். என்ஜினின் சப்தத்தில் ஏதாவது வித்யாசம் தெரிந்தால் கூட, இயந்திரத்தில் ஏதாவது கோளாறு இருக்கிறதா என்பதை அறிந்து அதை சரி செய்து விடுவார்.

ஆனால் பயணிகளால் இந்த வித்யாசத்தை உணர முடியாது. இதே போல் நீங்கள் தியானத்தை தொடர்ந்து செய்யும் போது, நீங்கள் எழுப்பும் நாதத்தின் தரத்தை வைத்து உங்கள் உடலின் இயக்கங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

> மனதை ஞானத்திற்காகத் “தியானம்“
> என்ற செயலைக் கொண்டு கடையும்
> போது, எதிர்மறைகளும் வரும்.
> இதனால் உற்சாகமிழந்து விடாதீர்கள்.
> இது உங்களின் எதிர்மறைகள்
> வெளியேற்றப்படுவதற்கான
> அடையாளமாகும். தியானத்தில்
> உங்களின் முயற்சியை நீங்கள்
> உயர்ந்த நிலையை அடையும் வரை
> தொடருங்கள்.

நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது சில வகை உணவுகள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலோ, நீங்கள் எழுப்பும் நாதத்தின் தரத்தில் வேறுபாடு ஏற்படுவதை உணர முடியும். இயல்பாக நீங்கள் எழுப்பும் நாதத்தை உங்கள் உட-ன் தேவைக்கேற்ப எளிதாக்கிக் கொள்ளுங்கள்.

மஹாமந்திர உச்சாடனம் நுட்பமான உணர்வுகளை உள்நோக்குவதைக் கொடுத்து, உடலை சரிசெய்வதற்கான செயலைத் தருகிறது. இது இயல்பாகவே நடைபெறுகிறது. நாம் எதுவும் நிறைவேற்ற வேண்டியதில்லை.

நமது உடலும் மனமும் எப்போதுமே ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போவதில்லை. நான் மக்களிடம் சொல்வது என்னவென்றால் “உங்கள் உடல் இங்கே தான் இருக்கிறது. ஆனால் நீங்கள் இங்கு இல்லை”. உங்கள் மனம் எப்பொழுதும் எங்கேயாவது சுற்றி கொண்டிருக்கும். நமது உடலுக்கே உள்ள புத்திசாலித்தனம் அதற்குத் தேவையான எல்லாச் செயல்களையும் செய்கின்றது. ஆனால் மனம் இந்த உடலின் புத்திசாலித்தனத்தை மறுத்துவிடுகிறது. இது உடலைக் கட்டாயப்படுத்திச் சில செயல்களை செய்ய வைத்து பின்பு அதன் விளைவாக நோயில் கொண்டு சேர்த்து விடுகிறது.

நோய் என்பது எளிமைத்துவம் இல்லாததால் தான் ஏற்படுகிறது. உடலைக் கட்டாயப்படுத்தி இயங்க வைத்தால், சில நேரங்களில் கலகத்தில் கொண்டு விட்டு விடும். பல நேரங்களில் நாம் நிறைய சாப்பிட்டு விடுகிறோம். உடலானது, “எனக்கு போதும்“ என்ற சமிக்ஞையை கொடுக்கிறது. ஆனால் நமது சுவைக்கும் குணம் திருப்தி அடைவதில்லை. அதற்கான வினைப்பயனை பின்னால் தான் உணர்கிறோம்.

உடலுக்கும், மனத்திற்கும் ஒற்றுமையை உருவாக்க வேண்டியது முக்கியமாகி விடுகிறது. இல்லையெனில் நாம் மேம்பட்ட நிலையில் இருப்பது கடினமாகிவிடும்.

இந்த மஹாமந்திர உச்சாடனம் எழுப்பும் நுட்பம் நமது உடலையும், மனதையும் இணைக்கின்ற பாலமாக இருக்கின்றது.

மந்திர உச்சாடனம் செய்வது உங்கள் உடலை ஒரு சக்தியாக உணர வைக்கும். நாதத்தை எழுப்ப ஆரம்பித்த உடனேயே நீங்கள் இலேசானதாகவும், மிதப்பதாகவும் உணர ஆரம்பிப்பீர்கள். உங்கள் உடல் கனமாக இருப்பதாக நீங்கள் உணர மாட்டீர்கள்.

ஏனெனில் மந்திரங்களை உச்சாடனம் செய்தல் உங்கள் மனதின் அதிர்வுகளையும், உடலின் அதிர்வுகளையும் ஒன்றிணைக்கிறது. உடலும் மனமும் ஒத்திசைவு பெறுகின்றது. சக்தியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.

இந்த இரண்டாவது படியில் (step), உங்கள் உதடுகளை ஒன்றாகக் குவித்து 'ம்' என்ற நாதத்தை உள்ளிருந்து எழுப்ப வேண்டும். உங்களுடைய முகத்தை ஒரு வெற்று அலுமினிய பாத்திரத்தில் வைத்து, ஓசையை எழுப்பும் போது என்ன சப்தம் வருமோ, அதே போல் நீங்கள் உருவாக்கும் 'ம்' என்ற சப்தமும் இருக்க வேண்டும். குறித்துக் கொள்ளுங்கள் நீங்கள் உருவாக்கும் ஓசை "ஹம்" அதை "றும்" அல்லது மிக எளிதாக உதட்டை குவித்து 'ம்' என்று எழுப்புங்கள்.

உங்களால் எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக, எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக, எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வளவு சப்தமாக நாதத்தை எழுப்புங்கள்.

இறுக்கமான நிலையில் இல்லாமல் சாந்தமான நிலையில் எழுப்புங்கள். உங்கள் மொத்த ஜீவனும், சக்தியும் இந்த அதிர்வுகளை உருவாக்குவதற்காக ஈடுபட வேண்டும். நாதங்களுக்கிடையே உள்ள இடை வெளியைக் குறைக்க வேண்டும். சில நேரத்திற்குப் பிறகு 'ஓசையானது உங்களின் முயற்சி

| மஹாமந்திர உச்சாடனம் செய்தல் எனும் நுட்பம் நமது உடலையும், | | மனதையும் இணைக்கின்ற பாலமாக இருக்கின்றது. |

இல்லாமலேயே தொடர்ந்து வருவதை உணர்வீர்கள். நீங்கள் மிகவும் எளிமையாகவும், கவனிப்பவராகவும் மாறிவிடுவீர்கள். உங்கள் உடலும் மனமும் இந்த அதிர்வுகளால் ஒத்திசைவு பெறுகின்றது.

வஜ்ராசன நிலையில் அமர்ந்து, சின் முத்திரையை உருவாக்கி உங்கள் முட்டிகளில் வைத்துக் கொள்ளுங்கள்.

சின் முத்திரையை படத்தில் காட்டியுள்ளபடி, உங்களுடைய முதல் விரல் (ஆள்காட்டி விரல்) கட்டை விரலின் நுனியை தொட்டவாறும் மற்ற மூன்று விரல்களை மடக்காதவாறும் வைத்திருக்க வேண்டும். இந்த சின் முத்திரை சக்தி நுட்பத்தை சமச்சீர் படுத்தி சக்தியை உடலுக்குள்ளேயே காத்து வைத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது. உடலை விட்டு சக்தி வீணாகாமல் இந்த முத்திரை தடுக்கிறது.

முதல் இரண்டு படிகளான சீரற்ற சுவாசமுறை மற்றும் ஓசை எழுப்புதல் முடிந்த பிறகு அடுத்த படியான சூட்சுமமான பகுதிக்குச் செல்வோம்.

சின் முத்திரை

மஹாமந்திர உச்சாடனம் செய்தல் சம்பந்தமாக நிறைய நுட்பங்களை கற்றுக் கொள்ள விரும்பினால் ஆனந்தஸ்பூரண தியான வகுப்பில் கற்றுக்கொடுக்கப்படும் மஹாமந்திர தியானத்தைப் பயிற்சி செய்யுங்கள்.

சின் முத்திரை சக்தி நுட்பத்தை
சமச்சீர் படுத்தி சக்தியை
உடலுக்குள்ளேயே காத்து
வைத்துக் கொள்வதற்குப்
பயன்படுகிறது. உடலை விட்டு
சக்தி வீணாகாமல் இந்த
முத்திரை தடுக்கிறது.

உடலின் ஏழு சக்தி மையங்கள்

Chakras in the human body

உடலும் மனமும் உயிரும் சந்திக்கும் சூட்சுமமான இடத்திற்குச் சக்தி மையங்கள் என்று பெயர். சக்தி மையங்களே சக்கரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.