KAILASA Library/நித்ய தியானம்/மூன்றாம் நிலைSign in
நித்ய தியானம்

மூன்றாம் நிலை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சக்கரங்களின் மீது விழிப்புணர்வை செலுத்துதல்

சக்கரங்களின் மீது விழிப்புணர்வை செலுத்துதல் (கால அளவு : 7 நிமிடங்கள்)

சக்கரங்களின் மீது விழிப்புணர்வை செலுத்துதல்

சக்தியடைந்தவராகவும், இலேசானவராகவும் மாற்றும் நுட்பம்

இந்த மூன்றாவது படியில் (step) நீங்கள் வஜ்ராசன நிலையில் அல்லது விரும்பினால் பத்மாசனத்தில் அமரலாம். இப்பொழுது உங்களது விழிப்புணர்வை ஒவ்வொரு சக்கரத்திற்கும், மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை செலுத்த வேண்டும்.

நமது உடலில் ஏழு சக்தி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு சக்தி மையமும் சூட்சுமமான இடத்தில் அமைந்துள்ளது. நம்முடைய ஆளுமை மூன்று வித உடல்களால் ஆனது. அவை ஸ்தூல சரீரம், சூட்சம சரீரம் மற்றும் காரண சரீரமாகும்.

அதேபோன்று விழிப்புணர்வு நிலையில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை.

இந்த மூன்று உடல்களுக்குப் பின்னால் தான் மூன்று விழிப்புணர்வு நிலைகளும் அமைந்துள்ளன.

இதைத்தான் நாம் ஆத்மன் என்று கூறுகின்றோம். நாம் சமஸ்கிருதத்தில் இந்த உயர்ந்த நிலையை “சரீர த்ரைவலக்ஷனா” “பஞ்சகோஷ தீத்த”, “அவஸ்த தரைய சாக்ஷி” (மூன்று உடல்கள், ஐந்து கோஷங்கள் மற்றும் மூன்று வகை விழிப்புணர்வுக்கு சாட்சியாக இருக்கும் நிலை).

ஸ்தூல சரீரம் என்பது நமக்குத் தெரிந்த, நாம் சாப்பிடுகின்ற, அசைக்கின்ற, நடக்கின்ற உடலாகும்.

சூட்சம சரீரம் என்பது நாம் கனவின் போது பயன்படுத்தும் உடலாகும். நீங்கள் இந்தியாவில் ஒரு வீட்டில் படுத்திருப்பீர்கள். ஆனால் கனவில் உங்களது மனம் வேறொரு நாட்டில் இருக்கும். அந்த நேரத்தில் சூட்சம உடலில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். சூட்சம உடலை நீங்கள் விழித்திருக்கும் போதும் பயன்படுத்துகிறீர்கள். எப்படியெனில் விழிப்பு நிலையில் ஏதாவது ஒன்றை பற்றித் தொடர்ந்து சிந்தித்து கொண்டிருக்கும் போதும் உபயோகப்படுத்துகிறீர்கள்.

காரண சரீரத்தை நீங்கள் ஆழ்ந்த உறக்கநிலையில் இருக்கும்போதும், கனவுகள் இல்லாத தூக்கத்தின் போதும் பயன்படுத்துகிறீர்கள். ஆழ்ந்த தூக்கத்தின் போதும், எண்ணங்கள் சற்று உறங்கும் போதும் இந்த சூட்சும சரீரத்தை உபயோகப்படுத்துகிறீர்கள். இந்த நேரத்தில் தான், காரண சரீரத்தை நீங்கள் அனுபவமாக உணர்கிறீர்கள்.

நாம் நினைப்பது போல் இந்த மூன்று உடல்களும் தனித்தனியானவை அல்ல. அவை ஒன்றோடு ஒன்று இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு வளைவான கோடுகள் ஒரு பேப்பரில் வரையப்படுவதாகக் கருதினால் ஒரு வேறுபட்ட புள்ளிகளில் ஒன்றையொன்று சந்திக்கும். இதில் ஒரு கோடு ஸ்தூல உடலை குறித்தால், இன்னொரு கோடு சூட்சும உடலையும், வரையப்படும் பேப்பரானது காரண உடலையும் குறிக்கின்றது.

சம்ஸ்காரங்கள் நாம் விழிப்புணர்வுடன்
இல்லாதிருக்கும்போது தான்
நம்மிடையே இருக்கின்றன.

சக்திமையங்களில் விழிப்புணர்வைச்
செலுத்தும்போது, எதிர்மறை
உணர்ச்சிகள் நீங்கி நேர்மறை
உணர்ச்சிகளான அன்பையும், இரக்க
உணர்வையும் வெளிப்படுத்த
ஆரம்பிப்பீர்கள்.

உடலில் ஏழு புள்ளிகளில் ஸ்தூல் சரீரமும், சூட்சும சரீரமும், காரண சரீரமும் சந்திக்கின்ற இடங்கள் ஏழு சக்தி மையங்களாகும். ஏழு சக்தி மையங்களும் சூட்சுமமாக அமைந்துள்ளன. சமீபத்திய ஆராய்ச்சியில் ஆரா போட்டோகிராபி (Aura Photography) எனும் தொழில் நுட்பத்தில் ஏழு சக்தி மையங்களும் மனித உடலில் இருக்கின்றன என்பது படம் பிடித்து விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏழு சக்தி மையங்களும் நம்முடைய உணர்ச்சிகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. இந்த உணர்ச்சிகள் பழைய காலத்தில் நமக்குள் ஏற்பட்ட சம்ஸ்காரங்களால் நமக்குள் இன்று ஏற்படுவதன் காரணம் இந்த சம்ஸ்காரங்கள் சக்தி மையங்களை அடைத்து விடுவதால்தான். இதனால் தான் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை உருவாக்குகின்றன.

சம்ஸ்காரங்கள் நாம் விழிப்புணர்வுடன் இல்லாதிருக்கும்போது தான் நம்மிடையே இருக்கின்றன.

சக்திமையங்களில் விழிப்புணர்வைச் செலுத்தும்போது, எதிர்மறை உணர்ச்சிகள் நீங்கி நேர்மறை உணர்ச்சிகளான அன்பையும், இரக்க உணர்வையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பீர்கள்.

நமக்கு வருகின்ற எல்லா நோய்களுமே மனவியல் ரீதியானது.

நோய்களின் வேர்களே நமது மனம் தான். நோய்கள் உருவாகுவதற்குக் காரணமாக இருக்கும் நம் உடலுக்கும் மனதுக்கும் இடையே உள்ள இணைப்பு பற்றி நமக்குப் புரிவதில்லை. ஒரு சக்தி மையம் அடைபடும் போது அந்த மையத்திற்கு அருகில் உள்ள உடலின் பகுதிகளும் பாதிப்படைகின்றன.

உதாரணத்திற்கு நீங்கள் அதிகமாக கவலைப்படும்போதும் உங்கள் வயிற்றுப்பகுதி பாதிப்படைகிறது.

ஆகையால் நல்ல உடல்நிலையும், மன நிலையும் பெறுவதற்கு உங்கள் சக்தி மையங்களை சுத்தமாக வைத்திருப்பதின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும்.

சக்தி மையங்களை எது அடைபடச் செய்கிறது? எது திறக்கிறது? என்பதை தற்போது உங்களுக்கு விளக்குகின்றேன்.

கனவுகள், கற்பனைகள், பயம், கவலை, எதிர்பார்ப்பு, பொறாமை,

அகங்காரம், திருப்தியின்மை போன்ற உணர்ச்சிகள் எதிர்மறையானவை.

ஒரு அறையில் ஒரு பொருள் இருந்து, அப்பொருளை அந்த இடத்தில் இருந்து எடுக்கச் சொன்னால் உங்களால் அந்தப் பொருளை எடுக்க முடியும். ஏனெனில் அது நேர்மறையானது. (Positive Existence) ஆனால் ஒரு இருட்டறையில் இருக்கும் இருளை (Darkness) அந்த அறையை விட்டு எடுக்கச் சொன்னால், உங்களால் பொருளை எடுப்பது போன்று இருளை எடுக்க முடியாது. ஏனெனில் அது எதிர்மறையானது (Negative Existence). ஆனால் அந்த இருட்டறையில் ஒரே ஒரு பல்பை வைத்து அறைக்குள் ஒளியை செலுத்தினால் இருள் ஓடிவிடும்.

இந்த எல்லா உணர்ச்சிகளும் அறையில் உள்ள இருளைப் போன்றுதான்.

அறையின் இருளை விளக்கேற்றி வெளியேற்றுவது போன்று மனதிலிருக்கும் எதிர்மறையான எண்ணத்தை வெளியேற்ற முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விழிப்புணர்வு என்ற ஒளியை உங்களுக்குள் செலுத்துங்கள். அவ்வாறு செலுத்தும்போது விளக்கின் ஒளியால் இருள் மறைவது போன்று எதிர்மறை உணர்ச்சிகள் விழிப்புணர்வு என்னும் ஒளி ஏற்றியதும் தானாகவே மறைந்து விடும்.

ஒருமுறை புத்தர் தன் சீடர்களிடம் ஒரு முடிச்சைக் கொடுத்து அதை அவிழ்க்கச் சொன்னார். ஒரு சீடர் முடிச்சை அவிழ்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டும் அவரால் முடியவில்லை. புத்தர் இன்னொரு சீடரை அழைத்து முடிச்சை அவிழ்க்கச் சொன்னார். ஆனால் அந்தச்

சீடர் அந்த முடிச்சை கவனமாகப் பார்த்துவிட்டு, பின்பு மெதுவாக முடிச்சை அவிழ்த்துவிட்டார். புத்தர், “இருப்புத்தன்மையில் இருக்கும் அறியாமை எனும் முடிச்சை அவிழ்க்க வேண்டுமானால், முத-ல்

அந்த முடிச்சு எவ்வாறு போடப்பட்டிருக்கிறது என்பதை உற்று நோக்க வேண்டும். இது எந்தப் பிரச்சனைக்கும் தீர்வளிக்கும்” என்று மிக அருமையாகச் சொன்னார்.

முடிச்சை அவிழ்க்கத் தெரியாமை தான் நம்முடைய மொத்தப் பிரச்சனையுமே!

விழிப்புணர்வை வெள்ளம் போல் நீங்கள் செலுத்தும்போது, எதிர்மறைகள் அழிந்து விடும்.

ஆகையால் இந்தப் படியில் நம்முடைய விழிப்புணர்வு முழுவதையும் மூலாதாரச் சக்கரத்திலிருந்து சகஸ்ராரச் சக்கரம் வரை ஒவ்வொரு சக்கரமாகச் செலுத்த வேண்டும். நீங்கள் விழிப்புணர்வை ஒரு சக்திமையத்தில் செலுத்தும் போது அந்த சக்திமையமாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள். ஜீவ சக்தி மையமாக மாறும்வரை, அதை முழுவதுமாக உணருங்கள். இந்தப் படியின் இறுதியில் நீங்கள் சக்தியடைந்தவராகவும், இலேசானவராகவும் மாறிவிடுவீர்கள்.

நாம் இப்போது அடுத்த படிக்குச் செல்வோம்,

நீங்கள் சக்தி மையங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால் ஆனந்த ஸ்புரணா தியான முகாம் (ASP)-ல் பங்கு பெற வேண்டும். அதில் ஒவ்வொரு சக்கரமும் எந்த உணர்ச்சியால் பாதிக்கப்படுகின்றது என்பது பற்றியும் மற்றும் அதற்கு தீர்வளிக்கும் தியான நுட்பங்கள் பற்றியும் விளக்கமாகக் கற்றுத்தரப்படும்.

> “இருப்புத்தன்மையில் இருக்கும்
> அறியாமை எனும் முடிச்சை
> அவிழ்க்க வேண்டுமானால்,
> முத-ல் அந்த முடிச்சு
> எவ்வாறு போடப்பட்டிருக்கிறது
> என்பதை உற்று நோக்க
> வேண்டும்”