KAILASA Library/நித்ய தியானம்/நான்காம் நிலை 4Sign in
நித்ய தியானம்

நான்காம் நிலை 4

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நான்காம் நிலை தியானம்

எண்ணங்களை

கோர்த்துப்பார்க்காமை

[கால அளவு : 7 நிமிடங்கள்]

எண்ணங்களை கோர்த்துப்பார்க்காமை

(Be - Unclutched)

ஞான நிலையை அனுபவிக்க உதவும் தியான நுட்பம்

அடுத்த 7 நிமிடங்களுக்கு எண்ணங்களை கோர்த்துப் பார்க்காமல் இருங்கள்.

மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு. ஒரு எண்ணம் எழுந்து முடிவதற்குள்ளேயே அடுத்து வேறொரு எண்ணம் எழுந்துவிடுகின்றது. இயற்கையிலேயே நம்முடைய எண்ணங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படாதவை. அவை நீர்த்தொட்டியில் உள்ள நீர்க்குமிழிகள் போன்றவையாகும். நீர்த்தொட்டியில் உள்ள நீர்க்குமிழிகள் ஒன்றோடொன்று பிணைக்கப்படாதவை. அவை ஒவ்வொன்றும் தனித்தனியானவை. ஆனால் பார்ப்பதற்கு இணைந்தவை போன்று தோற்றமளிக்கின்றது.

இதே போல்தான் நம்முடைய எண்ணங்களும் இணைக்கப்படாதவையாக இருந்தாலும் அவை இணைக்கப்பட்டது போல் காணப்படும்.

இதை நீங்கள் அனுபவமாக உணர இந்த ஒரு சிறிய பயிற்சியை நீங்கள் செய்யுங்கள். உங்களுக்கு எப்போதெல்லாம் எண்ணங்கள் வருகின்றதோ அப்போது உடனே அந்த எண்ணத்தை பேப்பரில் எழுதுங்கள்.

ஒரு பத்து நிமிடம் அமைதியாக அமர்ந்து உங்களின் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள். எண்ணங்களைத் தடுக்கவோ, நிறுத்தவோ முயற்சிக்காதீர்கள். அமைதியாக இருந்து எண்ணங்களை "சாட்சியாக" இருந்து கவனியுங்கள். எண்ணம் எப்பொழுது வருகின்றதோ பேப்பரில்

உடனே எழுதி விடுங்கள். பத்து நிமிடங்களுக்கு இதை செய்யுங்கள். பத்து நிமிடங்களுக்குப் பிறகு என்ன எழுதியிருக்கிறீர்களோ அதைப் படியுங்கள். அது ஒரு பைத்தியக்காரத்தனமாக இருப்பதைப் பார்க்கலாம்.

உங்களாலேயே புரிந்து கொள்ள முடியாத பெரும் குழப்பமாக இருக்கும். ஒரு எண்ணத்திற்கும் மற்றொரு எண்ணத்திற்கும் இடையே தொடர்பு இல்லை. எல்லா எண்ணங்களுமே சுதந்திரமானவை மற்றும் தொடர்பில்லாதவை. நீங்கள் இத்தியானத்தை செய்து எழுதிப் பார்க்கும் போதுதான் எண்ணங்கள் தொடர்பில்லாதவை என்பது தெரிய வரும்.

நீங்கள் ஒரு காபி குடிக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருப்பீர்கள். இந்த எண்ணம் முடியும் முன்னே அடுத்து முடிக்கப்படாத அலுவலக வேலையைப் பற்றி எண்ணிக்கொண்டிருப்பீர்கள்.

இதில் அலுவலக வேலைக்கும், காபிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதேபோன்று ஒரே நிகழ்ச்சி சம்பந்தமாக எழும் எண்ணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. இந்த இரண்டு எண்ணங்களுக்கிடையே எப்போதும் ஒரு இடைவெளி இருக்கும். எண்ணங்களுக்கிடையே வரும் இடைவெளியின்போது எப்போதும் ஒரு அமைதி இருக்கும்.

எண்ணங்கள் அதன் இயல்பிலேயே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத எண்ணங்களை இணைக்கும்போதுதான் பிரச்சனை வருகின்றது. இணைக்கப்பட முடியாத எண்ணங்களை இணைத்து நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உதாரணமாக பத்து வருடங்களுக்கு முன் ஒரு ஐஸ் கிரீம் சாப்பிட்டிருப்பீர்கள். ஏழு வருடங்களுக்கு முன் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டிருப்பீர்கள். இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டிருப்பீர்கள். நேற்று ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டிருப்பீர்கள். இதில் எல்லா அனுபவங்களுமே சந்தோஷமாக இருந்திருக்கும். நீங்கள் எப்பொழுதெல்லாம் ஐஸ்கிரீம் சாப்பிட்டிருப்பீர்களோ அப்பொழுதெல்லாம் சந்தோஷத்தில் இருந்திருப்பீர்கள்.

இதில் நீங்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் பிரச்சனை இல்லை. பிரச்சனை எது என்றால் நீங்கள் இந்த அனுபவங்களையெல்லாம் இணைத்து, 'ஐஸ்கிரீம் சாப்பிடும் போதெல்லாம் சந்தோஷமாக இருப்பேன்' என்ற கற்பனையை உருவாக்கி கொள்கிறீர்கள். எதிர்காலத்தில் இதே அனுபவத்தைப் பெற வேண்டும் என்று மீண்டும் முயற்சிப்பீர்கள்.

இதுபோல் நீங்கள் எப்பொழுதுமே ஒரே மாதிரியான எண்ணங்களை இணைத்து ஒரு எண்ணத் தண்டை (shaft) உருவாக்கி விடுகின்றீர்கள்.

உங்கள் அனுபவத்தில் சில சமயங்களில் ஐஸ்கிரீமை சுவைக்கும் போது இதற்கு முன் வருடத்தில் சுவைத்த ஐஸ்கிரீம் போல் இது இல்லை என்று தோன்றும். சில நேரம் நீங்கள் எந்த ஐஸ்கிரீமை சுவைக்காமல் இருந்தால் கூட உங்களுக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும் என நம்ப ஆரம்பித்து விடுவீர்கள். ஏனெனில் விழிப்புணர்வின்றி எண்ணங்களை கோர்த்துப் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு ஏற்கனவே இருப்பதால், உங்களையறியாமலேயே ஐஸ்கிரீம், சுவையாக இருப்பதாக நீங்கள் நம்ப ஆரம்பித்து விடுவீர்கள். ஐஸ்கிரீம் என்றால் 'இப்படி சுவையாகத் தான் இருக்கும்' என்று முடிவெடுத்துவிடுவீர்கள்.

கஷ்டமான அனுபவங்களும் இதே போன்றுதான் உருவாக்கப்படுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட வலி, ஏழு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட வலி, மூன்று வருடங்களுக்கு முன் ஏற்பட்ட வலி மற்றும் சமீபத்தில் நேற்று ஏற்பட்ட வலி ஆகிய எல்லாமே வலி சம்பந்தப்பட்ட தனித்தனி நிகழ்ச்சிகளே. இந்த நிகழ்ச்சிகளுக்கிடையே எந்த விதத்தொடர்பும் இல்லை. ஆனால் இந்த எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றாகக் கோர்த்து வலி என்ற ஒரு கற்பனையை நீங்கள் உருவாக்கி என் “வாழ்க்கையே வேதனை தான்” என்று நினைக்க ஆரம்பித்து விடுகின்றீர்கள். சந்தோஷமான அனுபவங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்திருந்தால் நீங்கள் வாழ்க்கையே சந்தோஷமானது” என்று சொல்வீர்கள்.

இந்த இரண்டு
எண்ணங்களுக்கிடையே எப்போதும்
ஒரு இடைவெளி இருக்கும்.
எண்ணங்களுக்கிடையே வரும்
இடைவெளியின்போது எப்போதும்
ஒரு அமைதி இருக்கும்.

ஆனால் இதுவும் உண்மை இல்லை. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் என்பதும் இல்லை. அதேப்போன்று வேதனை என்பதும் இல்லை. ஏனெனில் இரண்டிற்கும் காரணமான நிகழ்ச்சிகளைக் கோர்த்துப் பார்ப்பது என்பதே நிகழ்த்தப்படமுடியாத ஒரு செயலாகும்.

நாம் எல்லா எண்ணங்களையும் இணைத்துப்பார்ப்பதில்லை.நம் விருப்பத்திற்கேற்ப நினைவில் இருக்கும் எண்ணங்களை மட்டும் கோர்த்துப்பார்க்கின்றோம்.

எவ்வாறு நிறைய மலர்களிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு சில மலர்களை மட்டும் கோர்த்துப் பூமாலையை உருவாக்குகின்றோமோ அதேப்போல் மில்லியனுக்கும் அதிகமான எண்ணங்களிலிருந்து நமக்கு ஞாபகத்தில் இருக்கும் சில எண்ணங்களை மட்டும் கோர்த்து ஒரு எண்ணத் தண்டை (shaft) உருவாக்குகிறோம். இவ்வாறு இந்தத் தண்டை (shaft) உருவாக்கும் செயல்தான் உண்மையான பாவம் (sin) என்று சொல்கின்றேன்.

எண்ணங்களைக் கோர்த்து கோர்த்து தண்டை (shaft) உருவாக்கும் போது நாம் இல்லாத துயரத்தை இருப்பதாக நினைத்து துயரம் கொள்கின்றோம்.

மகிழ்ச்சியான எண்ணங்களிலிருந்து நீங்கள் தண்டை (shaft) உருவாக்கும் போது நீங்கள் அதை நீட்டிக்கப் பார்ப்பீர்கள் ஏனெனில் அந்த மகிழ்ச்சியான அனுபவத்தை நீங்கள் நீட்டிக்க ஆரம்பிப்பீர்கள். கவலையான எண்ணங்களிலிருந்து நீங்கள் தண்டை (shaft) உடைக்கப் பார்ப்பீர்கள். ஏனெனில் நீங்கள் அந்த வேதனையில் இருந்து தப்பிக்கப் பார்ப்பீர்கள். நீங்கள் தண்டை (shaft) நீட்டிக்கப் பார்த்தாலும், உடைக்கப் பார்த்தாலும் உங்களால் அந்த எண்ணத் தண்டை ஒன்றும் செய்ய முடியாது

ஏனெனில் தண்டின் இருப்புத்தன்மை அங்கு இல்லை. அது ஒரு கற்பனைத் தோற்றம் என்பது தான் நிஜம். தண்டை (shaft) உருவாக்கும் போது அது நிஜத்தில் இருக்கும் மற்றொரு தண்டாக மாறி விடும்.

எல்லா அனுபவங்களுமே தனித்தனியான அனுபவங்கள். இந்த அனுபவங்களை நீங்கள் கோர்த்துப்பார்க்கும் போது உங்களுக்கு நீங்களே நரகத்தை உருவாக்கிக் கொள்கின்றீர்கள். இப்பொழுது, ஏன் இந்த வேதனையும் கற்பனையாக இருக்கின்றது என்ற நிஜத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள். வேதனை என்பது கற்பனையைச் சார்ந்தது. உண்மையில்லாத ஒன்றைச் சார்ந்தது. இது ஒரு தோற்றம் மட்டும் தான். ஏனெனில் வேதனை உருவாக்கும் தண்டு (shaft) உண்மையல்ல. ஆதனால் இந்த தண்டால் (shaft) உருவாக்கப்பட்ட வேதனையும் உண்மையல்ல. இதை ஒருமுறை புரிந்து கொண்டால் போதும், நீங்கள் விடுதலையடைந்து விடுவீர்கள்.

ஏனெனில் நம்முடைய எண்ணங்கள் மிக வலிமையானவை.

எண்ணங்கள் தானாகவே இணைத்துக்கொண்டு ஒரு கற்பனைத் தண்டை (shaft) உருவாக்கும் சக்தி கொண்டவை. இந்த கற்பனைத் தண்டை (shaft) உருவாக்குவது அகங்காரத்தின் இயல்பான வேலையாகும்.

எண்ணங்களிலிருந்து தனிப்பட்டது அல்ல அகங்காரம். உண்மையில் எண்ணங்களின் தன்மையே தண்டை (shaft) உருவாக்குவது தான். ஆகையால் அகங்காரம் என்ற ஒன்று தனியாக இல்லை ஏனெனில் இருப்புத்தன்மையில் தண்டு (shaft) என்பது இல்லை. தண்டு (shaft) என்பது ஒரு கற்பனை. தண்டை (shaft) நாமே உருவாக்கும் முறைக்கு நாம் கொடுக்கும் பெயர் தான் அகங்காரம். இந்த தண்டுதான் தொடர்ந்து ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்னும் உணர்வை உருவாக்குகிறது.பின் அகங்காரத்தைப் பற்றிய மாயத் தோற்றத்தை தருகிறது.

எல்லா எண்ணங்களையும் இணைத்துப் பார்க்கும் போது நாம் நமக்கு அகங்காரம் இருக்கிறதென்று நினைத்துக்கொள்கின்றோம். ஆனால் நிஜத்தில் நம்முடைய எல்லா எண்ணங்களுமே இயற்கையிலேயே சுதந்திரமானவை. அதனால் அகங்காரமும் ஒரு கற்பனையே. எதனாலும் எண்ணங்களை இணைத்துப் பார்க்க முடியாது. ஆதலால் சுபாவத்திலேயே நாம் எண்ணங்களை கோர்த்துப்பார்க்காதவர்கள்.

நாம் அனைவருமே ஞானிகள். இதை நாம் உணர்ந்து கொள்வதே தற்போது நமக்குத் தேவை..

ஒரு அருமையான ஜென் கதை ஒன்று...

ஒருமுறை ஒரு சீடர் ஜென் ஞானியிடம் சென்று “நான் எவ்வாறு புத்தனாவது” என்று கேட்டார். அந்த ஜென் ஞானி சீடரின் கன்னத்தில் பளீரென்று அறைந்து "நீ ஏற்கனவே புத்தன் தான்' என்றார்.

ஒரு புத்தனே வந்து புத்தனாவது எப்படி? என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதைத் தான் ஜென் ஞானியும் செய்தார். ஆகையால் நாம் அனைவரும் இயற்கையிலேயே எண்ணங்களை இணைக்காதவர்கள். இதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் ஒரு விதியைச் சார்ந்து சந்தோஷம் மற்றும் துக்க அனுபவங்களைப் பெறுகிறான். உங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. உங்களால் சந்தோஷத்தையும், துக்கத்தையும் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் உங்களால் இந்த அனுபவங்களை இணைத்து, ஒரு கற்பனைத் தண்டை (shaft) உருவாக்காமல் இருக்க முடியும்.

நீங்கள் ஒருவருடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதே நீங்கள் அவரைப்பற்றிய கற்பனைத் தண்டை (shaft) உங்களுக்குள் உருவாக்கியிருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.

மூன்று வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உறவு, ஒரு வருடத்திற்கு முன் ஏற்பட்ட உறவு, இப்பொழுது அவர்களுடன் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உறவு என ஒவ்வொன்றுமே தனித்தனியான நிகழ்ச்சிகள். இந்த நிகழ்ச்சிகளை நீங்கள் இணைக்கும்போது அந்த உறவுடன் இருக்கும் இணைப்பை நீட்டிப்பதற்கோ அல்லது உடைக்கவோ பார்க்கின்றீர்கள்.

உறவு முறை சந்தோஷமான உறவுமுறை என்றால் எதிர்காலத்திலும் சந்தோஷமான உறவுமுறை இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள். உறவுமுறை, வேதனையான உறவுமுறை எனில் அந்த உறவுமுறையை நீங்கள் உடைக்க வேண்டும் என்று முயற்சி செய்கின்றீர்கள்.

ஒவ்வொரு சம்பவத்திலும் நீங்கள் புதிய உறவுமுறையை அனுபவிக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. ஏனெனில் ஒவ்வொரு சம்பவத்திலும், இரண்டு புதிய நபர்கள் இணைகிறார்கள், மற்றும் இயற்கையிலேயே நாம் எண்ணங்களை இணைக்காதவர்கள்.

உண்மையான பிரச்சனை வலியினாலோ அல்லது சந்தோஷத்தினாலோ வருவதில்லை. உண்மையான பிரச்சனை தவறாகப் புரிந்துகொள்வதாலும் மற்றும் கற்பனையான தண்டை (shaft) உருவாக்குவதாலும் வருகிறது.

ரிஷிமார்கள், அவர்களுக்குச் சந்தோஷம் வந்தால் அதைக் கொண்டாடி விட்டுப் பின்பு மறந்து விடுவார்கள். ஏதாவது ஒரு வேதனை என்றால் அதை அனுபவித்துவிட்டு பின்பு மறந்து விடுவார்கள். இந்த அனுபவங்களை அவர்கள் உடன் எடுத்துச் செல்ல மாட்டார்கள்.

ஆனால் இந்த அனுபவங்களை நம்முடனே தொடர்ந்து எடுத்துச் செல்லும் போது வேதனையில் விழுகின்றோம்.

இந்த உலகத்தில் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டே ஒற்றுமையிலும், அமைதியிலும் நடுநிலைபெற்று வாழ முடியும்.

இதை அடைவதற்காக நாம் எதையும் துறக்கத் தேவையில்லை, கொஞ்சம் இந்த கற்பனைத்தண்டை உருவாக்குவதை நாம் நிறுத்தி விட்டால் போதும். நாம் எதை "தான்" என்று கையில் பிடித்துக்கொண்டிருக்கின்றோமோ அதுதான் வேதனைக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொள்வோம்.

இந்த ஒத்திருக்கும் தன்மையைத் துறந்து விட்டால், நாம் ஆனந்தத்திற்குள் நுழைந்து விடுவோம்.

வெளி நிகழ்ச்சிகள் உங்களின் அமைதியையும், ஆனந்தத்தையும் ஒன்றும் செய்ய முடியாது, ஏனெனில் நிகழ்ச்சிகளை கோர்த்துப் பார்க்கும் பழக்கத்தை நீங்கள் விட்டுவிட்டீர்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் உங்களுக்குப் புது நிகழ்ச்சி தான். நீங்கள் வாழ்க்கையை இன்னும் அழகாகப் பார்க்க ஆரம்பிப்பீர்கள். எல்லாமே உங்களுக்கு மகிழ்ச்சிகரமாகவும், ஆனந்தமாகவும் இருக்கும். அடுத்தவர்கள் கொடுப்பதை ஒவ்வொரு கணமும் நீங்கள் வாழ்க்கையை அழகாக மலர்ந்து ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தீர்களானால், ஆனந்தம் உங்களுக்குள் இயற்கையாகவே மலர்ந்து விடும்.

வெளிப்புற சூழ்நிலைகள் உங்கள் அனுமதியின்றி உங்களை ஒன்றும் செய்ய முடியாது.

நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழும்போது எங்களை சுற்றியிருப்பவர்கள் அவர்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று மக்கள் புகார் சொல்கிறார்கள். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் அனுமதியின்றி எவருமே உங்களை தொந்தரவு செய்யவோ, அவர்களின் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவோ முடியாது. இதற்கு மட்டுமல்ல இதுபோன்று பல பிரச்சனைகளுக்குமான தீர்வு நாம் எண்ணங்களை இணைத்துப் பார்க்காமல் "நான் எண்ணங்களை கோர்த்துப்பார்க்காதவன்" என்பதை புரிந்து கொண்டாலே ஆனந்தம் உங்களை இயற்கையாகவே பின் தொடரும்.

சங்கரர் நிர்வாண சதக்கத்தில் சொல்கிறார்

“சதா மே சமத்வம் ந முக்திர் நா பந்தஹ,
சித்தானந்த ரூப சிவோஹம் சிவோஹம்”

நான் அடிமையும் அல்ல சுதந்திரமானவனும் அல்ல. நான் என்றும் நடுநிலையானவன். நான் இயற்கையிலேயே மங்களகரமானவன், சிவனின் சக்தியானவன் என்று சொல்கின்றார்.

அடிமைத்தனம், சுதந்திரத்தனம் இரண்டு கூற்றுகளுமே மனதினால் உருவாக்கப்பட்டது. அடிமைத்தனம் என்ற ஒன்று இருக்கும் வரை தான் சுதந்திரமும் இருக்கும். ஆனால் அடிமைத்தனமே இல்லையென்றால், சுதந்திரத்திற்கான அர்த்தம் இல்லாமலே போய்விடும். இதைத் தான் சங்கரர் குறிப்பிடுகிறார்.

"நீங்கள் உள்நோக்கி அல்லது வெளிநோக்கி என்று ஏதேனும் ஒரு திசையில் செல்ல முயற்சிக்கும் போதெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள் அப்போதெல்லாம் நீங்கள் சத்தியத்தை இழந்து கொண்டிருக்கிறீர்கள்”.

அவ்வாறு பயணம் செய்யும் போது தான் உண்மையை விட்டு விலகிச் செல்லும் பயணம் நடக்கின்றது. உண்மை வேறு எங்கும் இல்லை . உண்மை இங்கேயே இப்பொழுதே இருக்கின்றது. அதைத் தேடி வேறு எங்கேயும் போகத் தேவையில்லை. எங்கேயும் பயணம் செய்யத் தேவையில்லை. அவ்வாறு அதைத் தேடிச் சென்றோமானால், அது நாம் தண்டை (shaft) உருவாக்குவதைக் குறிக்கின்றது.

நாம் சில முன்னேற்றங்களைப் பார்ப்பதாக எண்ணுகிறோம். ஆனால் அவ்வாறு எண்ணுவது ஒரு நல்ல எண்ணம். அவ்வளவுதான் முன்னேற்றம் என்ற ஒன்று கிடையாது. ஏனெனில் இவர்கள் முன்னேறிக்கொண்டிருப்பவர்கள் என்று யாருமே இல்லை.

தனி மனிதன் ஒவ்வொரு நிகழ்விலும் இறந்து கொண்டிருக்கிறான். அப்போது இவர்கள் முன்னேறிக்கொண்டிருப்பவர்கள் என்று யாரைக் குறிப்பிட முடியும்?. எப்பொழுது நீங்கள் எண்ணங்களை இணைக்காமல் இருக்கிறீர்களோ, அப்போது நீங்கள் 360 டிகிரியிலும் வெளிப்பட ஆரம்பிப்பீர்கள். அப்போது ஆன்மீகம் அல்லது நாத்தீகம் பற்றிய கேள்விகளே எழாது.

இதையே சங்கரர் சொல்கிறார் “ஒருவன் சுதந்திரமானவன் அல்லது அடிமையானவன் என்று இல்லை. அவன் இரண்டையும் கடந்தவன் எனும் போது இரண்டுமே கருத்துகளாகிவிடும்.”

நம்முடைய உள்ளுணர்வுத்தன்மை சுய முன்னேற்றம் அடையாது என்பதாகும். சிலர் அவர்களுடைய சுய முன்னேற்றத்திற்காக உழைக்கிறார்கள்.

நீங்கள் உயிர்த்தன்மையில் குறிப்பிட்டு இதில் நான் முன்னேற முடியும் என்று சொல்ல முடியுமா? உங்கள் உயிர்த்தன்மையில் எதை முதல் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறீர்கள்?

இணைக்கப்படாத எண்ணங்களே தான் நீங்கள் எனும்போது நீங்கள் முன்னேற முயற்சிப்பது தண்டை (shaft) உருவாக்கும் செயலாகும். நான் முன்னேறுகின்றேன் என்று முடிவுக்கு வருவது நல்ல சுகத்தை உணர்த்தும். ஆனால் ஒருவரால் தனித்தன்மையைப்பற்றி பேசி அதை வளர்க்க முடியாது, ஆனால் அதைப்பற்றின மாயத்தோற்றத்தை நீக்க முடியும்.

தனித்தன்மை என்று உங்கள் தனித்தன்மையை முன்னேற்றுவதற்கு முயன்றால், அது நீங்கள் தண்டை (shaft) உருவாக்குகிறீர்கள் என்று பொருள்படும்.

மனம் இருக்கும்வரையிலும், உண்மையற்ற தன்மையுடன் உண்டான அடையாளம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

“பிரம்ம சத்ய ஜகத் மித்யா

ஜீவோ பிரம்மைவ ந அபரஹ”

என்று மிக அழகாக சங்கரர் பாடியுள்ளார்.

இதன் பொருள்..

பிரம்மும் உண்மையானது.

உலகம் உண்மையற்றது.

தனிநபரின் விழிப்புணர்விற்கும் பிரம்மத்திற்குமிடையில் இடைவேளை இல்லை என்பதாகும்.

சங்கரர் இங்கு மனம் நிற்கத் துவங்கும் போதுதான் பிரம்மம் ஒளிர்விடத்துவங்கும் என்று மிக அருமையாக விளக்குகின்றார்.

மனம் இருக்கும் வரையிலும் எண்ணங்கள் இருந்துகொண்டேயிருக்கும். எண்ணங்கள் எப்பொழுதும் எதிர்காலத்திற்கும், இறந்தகாலத்திற்கும் நழுவிக் கொண்டேயிருக்கும். ஆனால் நிகழ்காலத்தில் எண்ணம் இருப்பதேயில்லை.

ஏனென்றால் நிகழ்காலத்தில் விழிப்புணர்வு மட்டுமே இருக்க முடியும். அதனால்தான் நாம் எண்ணங்கள் இருக்கும் வரையிலும் தொடர்ந்து எண்ணத்தினாலேயே தண்டை (shaft) உருவாக்குகின்றோம்.

மகிழ்ச்சியான எண்ணங்களினாலோ அல்லது துன்பமயமான எண்ணங்களினாலோ அத்தண்டை உருவாக்குகின்றோம். ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத எண்ணங்களை நாம் கோர்த்துப்பார்ப்பதே இதன் காரணமாகும்.

எண்ணங்களை கோர்த்துப் பார்ப்பதே சம்சார சாகரத்தில் நாம் அடையும் துன்பத்திற்குக் காரணமாகும். நாம் இதுபோல் கோர்த்துப் பார்க்கும் போது மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. (சங்கரர் இதை ஜீவன் என்று அழைக்கிறார்) பிரபஞ்சத்தில் வருகின்றது. ஜீவன் தோன்றும் போது அதனுடனே மித்யா (உண்மையற்ற உலகம்) உருவாகின்றது.

கோர்த்துப் பார்ப்பதை நிறுத்தினோமென்றால் முதலில் உண்மையற்ற அடையாளம் மறைந்து பிரம்மன் வெளிப்படும்.

நாம் இரண்டு அடையாளங்களை பெற்றிருக்கிறோம். ஒரு அடையாளத்தில் வெளிப்புற உலகையும், இன்னொரு அடையாளத்தில் உட்புற உலகையும் பார்க்கின்றோம். வெளிப்புற உலகில் காட்டிக் கொள்ளும் அடையாளத்திற்கு அகங்காரம் என்று பெயர்.

உட்புற உலகில் காட்டிக் கொள்ளும் அடையாளத்திற்கு மமகாரம் என்று பெயர். அந்த இரண்டு அடையாளங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொள்பவை.

உதாரணமாக வெளிப்புறத்தில் 'நான் அப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவன்' என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், உட்புறத்தில் நாம் ஏதாவது ஒன்றில் குறைந்ததாய் உணர்கிறோம். எப்பொழுதுமே இந்த இரண்டு அடையாளங்களுக்கும் முரண்பாடு இருந்து கொண்டே இருக்கிறது.

உண்மையில் நாம் வெளிவுலகத்திற்கு 'நம்மை உயர்ந்தவர்கள்' என்றே வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். நாம் வெளிஉலகிற்கு உள் உலகில் இருக்கும் அளவை விட அதிகப்படுத்திக் காண்பிக்கவே விரும்புகின்றோம்.

ஆனால் உள்ளுலகில் அதற்கு மாறாக நம்மைப் பற்றி நமக்கே இயல்பு நிலையை விட குறைவாகவே வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

நாம் எவ்வாறு எந்த நிலையில் இருந்தாலும் இருக்கும் நிலையை வைத்து நாம் திருப்தியடைவதில்லை. ஏதோ ஒரு விதத்தில் தன்னைத் தானே தொடர்ந்து உயர்த்திக் கொள்ளவே விரும்புகின்றோம்.

ஆன்மீக வாழ்க்கையோ அல்லது லௌகீக வாழ்க்கையோ எதுவாக இருந்தாலும் அதில் திருப்தியற்றவராகவே வாழ்கிறோம். நாம் உள்ளுக்குள் எடுத்துச் செல்லும் அடையாளம் குறைவாகவும், வெளியே எடுத்துச் செல்லும் அடையாளம் அபரிமிதமாகவும் இருக்கிறது. இதன் இரண்டிற்கு இடையில் இருக்கும் வேறுபாடே ஏதேனும் பிரச்சனையை உருவாக்கி கொள்கிறது.

நாம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டுவதற்குக் காரணம் நாம் நினைப்பதை மிக அரிதாகவே பேசுகிறோம். நம்முடைய எண்ணங்களை நேரடியாக வார்த்தைகளாக்கிப் பேச ஆரம்பித் தோமானால் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மை விட்டு ஓடி விடுவார்கள்.

உங்களுடைய எண்ணங்களையும், வார்த்தைகளையும் ஒன்றாக்கினால் அதுவே உண்மையான ஆன்மீகம் என்று இராமகிருஷ்ணர் சொல்கிறார்.

இந்நிலை இரண்டு அடையாளங்களை நாம் தாண்டி செல்லும்போது நிகழும்.

நாம் எண்ணங்களை உருவாக்கும் இரண்டு அடையாளங்களுமே பொய்யான அடையாளங்கள். இந்த அடையாளங்கள் என்பதே நாம் உருவாக்கிய தண்டின் (shaft) விளைவாகும். இந்த

அடையாளங்களுடன் நாம் இணைக்கப்பட்டிருக்கும்வரை ‘சம்சாரா சாகரத்தின்’ பிடியில் சிக்கியிருப்போம். இந்த இரண்டு அடையாளங்களையும் தாண்டிச் செல்லும்போது நாம் ஞானிகளாகிவிடுவோம்.

எல்லா நேரங்களிலும் நாம் எண்ணங்களை உருவாக்கியும், அதை நிலைநிறுத்தியும் பின்பு அந்த எண்ணங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். அழித்துவிடுகிறோம். உருவாக்கும் செயல் (பிரம்Activity/பிரம்Activity/பிரம்மன்), காக்கும் செயல் (விஷ்ணு), அழிக்கும் செயல் (மகேஷ்வரன்) தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உருவாக்குவதையும், காப்பாற்றுவதையும் மற்றும் அழிப்பதையும் நிறுத்தும்போது மூன்று நிலைகளைத் தாண்டிச் செல்லும் போதும் நாம் "பரபிரம்மம்" என்ற நிலையை அடைகிறோம்.

இந்த ஐந்தாவது படியில், உங்களுடைய எண்ணங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்படாதவை என்ற புரிந்து கொள்ளுதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய எண்ணங்களுக்கிடையே எந்த வித இணைப்பும் இல்லை. உங்களுக்கு எண்ணங்கள் இருந்தாலும் அவற்றை அழுத்தவோ அல்லது அவற்றிற்குப் பதில் சொல்லவோ கூடாது. அவற்றை கவனித்து, அவைகள் இணைக்கப்பட முடியாதவை என்று புரிந்து கொள்ளுங்கள்.

இயல்பாகவே சாட்சியாக பார்க்கும் விழிப்புணர்வு உங்களுக்குள் நிகழத்துவங்கும். இரண்டு அடையாளங்களையும் தாண்டிச் செல்ல ஆரம்பித்து விடுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியான சந்தோஷமான தண்டை மற்றும் வேதனையானத் தண்டு ஆகியவை இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். நீங்கள் இந்த தண்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அறிவீர்கள்.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நீங்கள் ஏற்கனவே ஞானிகள். இயற்கையிலேயே நீங்கள் எண்ணங்களை இணைத்துப் பார்க்காதவர்கள்.

இந்தப் புரிதலோடு அமைதியாக அமர்ந்து அடுத்த ஏழு நிமிடங்களில் எண்ணங்களை இணைக்காத நிலையை அனுபவித்துச் சுத்தமான ஜீவனின் நிலையையும், ஆனந்தத்தையும் பெறுங்கள்.

ஞான நிலையை அனுபவிப்பதற்கான சிறந்த நுட்பம் இது தான். இந்த

உண்மையைப் புரிந்து கொண்டால், நீங்கள் தியான ஸ்புரணா முகாமில் பங்கு பெறலாம். அதில் எண்ணங்களை இணைத்துப் பார்க்காமையைப் பற்றி விரிவாகச் சொல்லப்படும்.

தியான ஸ்புரணா அனுபவ முகாம் 2 நாள் முகாமாகும். இது நம்மை நடுநிலைப்படுத்துவதற்கும், நம்மிடையே நாம் மீண்டும் தொடர்பு கொள்வதற்கும், நம்முடைய இயற்கை நிலையான தியானத்தில் செல்வதற்கும் உதவுகிறது.

இந்த முகாம் நமது மனதின் பிடியில் இருந்து விடுபடுவதற்கும், உணர்ச்சிகளிலிருந்து விடுபடுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய தவறான மன அமைப்பான மகிழ்ச்சி மற்றும் வேதனையை உடைப்பதற்கும் நம்முள்ளே வெற்றிடத்தை உருவாக்கி தியானத்தை மலர்த்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தியான ஸ்புரணா அனுபவ
முகாம் 2 நாள் முகாமாகும். இது
நம்மை நடுநிலைப்படுத்துவதற்கும்,
நம்மிடையே நாம் மீண்டும்
தொடர்பு கொள்வதற்கும்,
நம்முடைய இயற்கை நிலையான
தியானத்தில் செல்வதற்கும்
உதவுகிறது.

சக்தி மையங்கள் மீது விழிப்புணர்வை செலுத்தும் நுட்பம்

Chakra diagram showing energy centers on a seated meditating figure
சக்தி மையம்அடைப்படுவதற்கான காரணம்திறப்பதற்கான வழிகள்
மூலாதார சக்கரம்கற்பனைகளும், கனவுகளும்நிஜத்தை எதிர்கொள்ளல்
சுவாதிஸ்டான சக்கரம்மரணத்தைப்பற்றி பயம்மரணத்தை எதிர்கொள்ளல்
மணிப்பூரக சக்கரம்கவலைகவலைகளைப்பற்றி கவலைப்படாதிருத்தல்
அனாஹத சக்கரம்அன்பை எதிர்ப்பார்த்தல்எதிர்ப்பார்ப்பற்ற அன்பு செலுத்துதல்
விசுத்தி சக்கரம்ஒப்பிடுதலும் பொறாமையும்தனிமனிதரின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல்
ஆஞ்னா சக்கரம்அகங்காரம் மற்றும் தீவிரத்தன்மைஎளிமைத்துவமும் வெகுளித்தனமும்
சஹஸ்ரார சக்கரம்திருப்தியின்மைநன்றியுணர்வு