நித்ய தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நித்ய தியானம்

வெளியீடு
நித்யானந்த தியானபீடம்,
பெங்களூர், இந்தியா.
அட்டை வடிவமைப்பு : நித்யானந்த தியானபீடம்,
பக்கங்கள் : 66
தனிப்பிரசுர உரிமை @ 2008
முதல் பதிப்பு : ஜூலை 2008.
Ebook ISBN: 979-8-88572-345-9
இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலும் எந்திரத் தட்டச்சு செய்வதன்
மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ
அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து
வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ
அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு
உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான
அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி
செய்யக்கூடாது.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும்
நீங்கள் உபயோகிக்க கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு
இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ
பொறுப்பல்ல.
இந்தப் புத்தக விற்பனை மூலமாக எழுப்பப்படும் நிதி முழுவதும்
நித்யானந்த தியானபீடத்தின் கருணை நோக்கச் செயல்களுக்கு
சேவையாகச் சென்றடைகிறது.
- நித்யானந்த தியானபீடம்
அச்சுப்பதிப்பகம் : THE CHEPAS, Chennai, +91 94440 03552
நித்ய தியானம்

பரமஹம்ஸ நித்யானந்தர்
நித்யானந்த தியானபீடம்
நித்ய தியானம்
நித்யானந்த நிலையை நீங்கள் அடைவதற்கான தியான நுட்பம்
நித்ய தியானம் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், இந்தத் தியான நுட்ப தோற்றத்திற்கான அனுபவம் எவ்வாறு எனக்குள் தோன்றியது என்பது பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
ஞானமடைந்தவுடன், ஒரு குறிப்பிட்ட கால அளவில் (மாதக்கணக்கில்) மௌனத்திலிருந்தேன். அப்போது “எனக்குள் ஏற்பட்ட அனுபவத்தை எவ்வாறு மற்ற அனைவருக்குள்ளும் மலரச் செய்வது” என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன்.
இந்த ஆராய்ச்சியின் முதல் வெளிப்பாடான ஆனந்த ஸ்புரணா நிகழ்ச்சியானது (Ananda Spurana) ஏழு சக்தி மையங்களில் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு, அவை ஒவ்வொன்றையும் தூய்மையாக்குதல் மற்றும் சக்தியூட்டப்படுதலுக்கான தியான நுட்பமாக இறுதி வடிவூட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து நித்யானந்த ஸ்புரணா நிகழ்ச்சியானது (சக்தி உடலின்) ஏழு சக்தி உடல்களின் மீது ஆராய்ச்சி செய்யப்பட்டு அமைதியான, ஆனந்தமான மரணத்தை எவ்வாறு தழுவுவது என்பதற்கான தியான நுட்பமாக வடிவமைக்கப்பட்டது.
அதன் பின்னர் தனிப்பட்ட ஒவ்வொருவரையும் முழு வளர்ச்சி பெறச்செய்து, அவரவரது உண்மை நிலையை உணரச்செய்வதற்கான அனைத்து வழிகளையும் தியான ஸ்புரணா நிகழ்ச்சி, ஆத்ம ஸ்புரணா நிகழ்ச்சி மற்றும் பல நிகழ்ச்சி வழியாக வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன்.
பல்வேறுபட்ட நூற்றுக்கணக்கான தியான நுட்பங்கள் எனது அனைத்து நிகழ்ச்சிகளின் வழியாக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இதில் ஒவ்வொரு தனிப்பட்ட தியான நுட்பத்தையும் தனிநபரின் மனநிலையை உயர்த்துவதாக வடிவமைத்தேன். இவை அனைத்துமே மனித விழிப்பு நிலையை உயர்த்துவதாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித இயல்பு நிலையில் ஏதேனும் ஒரு நோக்கில் அது ஆழ்ந்து வேலை செய்து அவர்களை மேன்மையான உணர்வு நிலைக்கு எளிதில் உயர்த்தும்.
தியானம் செய்வது பற்றி பொதுவாக மக்கள் எப்பொழுதும் என்னிடம் "சுவாமிஜி நீங்கள் எங்கள் தனிப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் பரிந்துரை செய்யும் தியான நுட்பம் ஏதேனும் உண்டா?" என்று கேட்பதுண்டு.
இக்கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டபின் அதைப்பற்றி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது அவ்வாறு அவர்களுக்காக வடிவமைக்கப்படும் தியான நுட்பம் இன்றைய சூழ்நிலையில் தினமும் பயிற்சி செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் எனும் இந்தக் கேள்வி என்னுள் எழத் தொடங்கியது. அதன் பின் அதற்கான விடையை எண்ணிப்பார்க்க ஆரம்பித்து விட்டேன்.
தனிப்பட்ட ஒவ்வொருவரும் எனது தத்துவங்கள், கற்பிக்கப்பட்ட செய்திகள் மற்றும் அனுபவங்களைப் பற்றி எளிதில் அறிந்து கொள்ளும் தியான நுட்பமாகக் கொணர எண்ணிப்பார்த்தேன்.
நமது இயல்பு நிலையின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டும் குவியச்செய்து பார்க்காமல், முழுமையான மனித மனப்பான்மை, அறிவாற்றல் மீது வேலை செய்யக்கூடிய ஒரு தியான நுட்பத்தை எதிர்பார்த்திருந்தேன். மனித இயல்பு நிலையின் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டும் வேலை செய்யாமல் அனைத்து கோணங்களிலும் வேலை செய்து அவர்களை இறுதியான அனுபவத்தைப் பெறுவதற்காக தயார் செய்யும் நுட்பமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தேன்.
அந்த நேரத்தில்தான் ஒருநாள், உங்கள் அனைவருக்கும் கற்பிக்க விரும்பிய தியான நுட்பமானது 'நித்ய தியானம்' (நிலைபேறுடைய ஆனந்தத்திற்கான தியானம்) உடனடியாகக் கணநேரத்தில் தோற்றமளித்தது. ஒரே பொழுதில், இந்த தியான நுட்பத்தின் பல பகுதிகளை ஒரே நேரத்தில் தெளிவாகக் காண முடிந்தது.
ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதும், அது ஒருவரின் விழிப்புணர்வை எவ்வாறு அதிகரிக்கும் என்பது பற்றி என் உள்மையத்தில் பாவனை செய்துபார்த்தேன்.
நித்ய தியானம் என்னுடைய தியான ஆராய்ச்சியின் உச்சநிலைக்கட்டத்தில் உருவானது.
இங்கு நீங்கள் ஒரு முக்கியக் கருத்தைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
ரிஷி என்பவர் மந்த்ரா திரஷ்டர் (மந்த்ரங்களை பார்ப்பவர்), நுட்பங்களை சமாதி நிலையில் தோற்றமாக்கிப் பார்ப்பவர் . மந்திரம் அல்லது நுட்பத்தை அவர் உருவாக்கவில்லை. பிரபஞ்ச சக்தி அவ்வாறு அவருக்குத் தோற்றமளித்தது தான் மந்திரங்கள்.
மந்திரத்தின் இயல்புநிலையானது இயற்கையிலேயே பூரணத்துவம் வாய்ந்தது. மந்திரம் உருவாக்கப்பட இயலாது, அது பிரபஞ்ச சக்தியின் பூரண வெளிப்பாடு. ஆகவே எந்த ஒரு மந்திரமோ அல்லது நுட்பமோ தனிப்பட்ட ஒருவரால் உருவாக்கப்பட இயலாது. அது தனிநபருக்கு மட்டும் உரிமையானதல்ல. இந்த நோக்குநிலையைத் (understanding) தெளிவாக்கிக் கொள்ளுங்கள். நித்ய தியானம் எனும் நுட்பத்திற்கான பலன் என்னைச் சார்ந்தது அல்ல. ஏனென்றால் காலம் கனிந்தபொழுது தானாகவே இந்த நுட்பம் பிரபஞ்ச சக்தியால் வெளிப்படுத்தப்பட்டது.
இப்பொழுது, இந்தத் தியான நுட்பத்திற்கான விவரங்களுக்குள் செல்லலாம். நித்ய தியானம் ஐந்து படிகள் கொண்டது. ஒவ்வொரு படிக்கான விளக்கத்தை ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கலாம்.
> நமது இயல்பு நிலையின்
> ஏதேனும் ஒரு குறிப்பிட்ட
> கோணத்தில் மட்டும்
> குவியச்செய்து பார்க்காமல்,
> முழுமையான மனித
> மனப்பான்மை, அறிவாற்றல் மீது
> வேலை செய்யக்கூடிய ஒரு
> தியான நுட்பத்தை
> எதிர்பார்த்திருந்தேன்.