நெருக்கம்
5. நம்மவரின் குணங்கள் தெரியும் போது தான்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
| உண்மை - 1 | உண்மை - 2 |
|---|---|
| நிஜ அன்பு ஒரு பக்தி மிகு பூஜை | பூஜைக்கு உரிய நபரை... நிஜமாய் பூஜி! அப்புறம் வெறுக்க முடியுமா உன்னால்! |
ரோஜாவின் அழகுக்கு ஆசைப்படுகிறீர்களா?
அதன் முட்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராகுங்கள்.
அரவணைப்புக்கு ஆசைப்படுகிறீர்களா?...
சிறு அடிக்கும், பெரும் அதட்டலுக்கும் கூடத் தயாராக இருக்க வேண்டும். தயாராக இருக்கிறீர்களா?... சிந்தியுங்கள்.
காதலர்களுக்கு
'காதல் காலம்'
எப்போதுமே இனிக்கக் காரணம்,
அந்த காலங்களில்
ரோஜாவின் முட்கள்
இதயத்தைக் குத்துவதில்லை.
