KAILASA Library/நெருக்கம்/4. பாவம்Sign in
நெருக்கம்

4. பாவம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

புனிதமாகட்டும்

உண்மை - 1 | உண்மை - 2
--- | ---
வருந்த...
வருத்த...

ஒருவரை தூண்டுவது,

  1. நான் புனிதன்!
  1. நான் புனிதன் அல்ல !

எனும் இரண்டில் ஒரு எண்ணமே

| மற்றவரை
திருத்த
துடிப்பது...
நீ
திருந்துவதை
தள்ளிப்
போடும்

ஆழ்மன தந்திரம்.

'நான் திருந்த வேண்டும்' என்ற எண்ணம் ஒருவருக்கு உதிக்காத வரை,

நீங்கள் எவ்வளவு துல்லியமாக அவரின் தவறுகளை கண்டுபிடித்துச் சொன்னாலும் அவர் திருத்திக் கொள்ள மாட்டார்.

'நான் திருந்த வேண்டும்' என்ற எண்ணம் ஒருவருக்கு உதித்த பின்,

நீங்கள் அவரின் தவறுகளைக் கண்டுபிடித்து சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது, என்னுமளவுக்கு அவரின் தவறுகளை அவரே கண்டுபிடித்து திருத்திக் கொள்ள ஆரம்பிப்பார்.

இது வாழ்க்கையின் சத்யம்.

எப்படி யோசித்துப் பார்த்தாலும்...

நீங்கள் மற்றவர்களிடம் கண்டுபிடித்து சொல்லும் தவறுகளால்,

உங்களுக்கோ மற்றவருக்கோ எந்தவொரு காலத்திலும் பலனில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

மற்றவரை திருத்துகிறேன்,

‘உலகை திருத்தப் போகிறேன்’

என்பதெல்லாம் பைசாவுக்கு பயன்தராத செயல் என்பது புரிகிறதா?

நீங்கள் மற்றவரிடம் தவறு கண்டுபிடிப்பதால் வரும் பலா பலன்கள்...

  • திருந்த விரும்பாதவரை வருந்த விடலாம்...
  • அவரை வருந்த விடுவதின் விளைவாக,

உங்களின் மீது வெறுப்பு கொள்ள ஏதுவான சூழல்களை நீங்களே உருவாக்கிக் தரலாம்.

  • அப்பாவிகளை நோகடிக்கலாம்.
  • உங்களை பார்த்தவுடனேயே,

“அய்யயோ! இன்று என்ன குற்றம் சொல்லப் போகிறாரோ?” எனப் பீதி கொள்ளச் செய்யலாம்...

  • முட்களை காரணங்காட்டி, ரோஜாவை இழக்கும் அப்பாவி போல

மனிதர்களையும் அவர்களின் நெருக்கத்தையும் தொடர்ந்து இழந்து கொண்டேயிருக்கலாம்.

எனவே சொல்கிறேன்...

Nithyananda