KAILASA Library/நெருக்கம்/3. தவிப்பின் உச்சி சென்றால்Sign in
நெருக்கம்

3. தவிப்பின் உச்சி சென்றால்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உண்மை - 1உண்மை - 2
திருந்தும் முன் திட்டு!தவிப்பு தவிர்ப்பது தவம்
திருந்திய பின் கொட்டு!தவிப்பு தாண்டுவது ஞானம்
என வாழ்கிறார்கள் எல்லோரும்
  • சிறிய தவறை... பெரிய அளவில் தட்டிக் கேட்பவர்கள்

பெரிய நல்ல செயலை... சிறிதளவு கூட புகழ முயற்சிப்பதில்லை.

  • சிறு பிழைகளை பெரிதுபடுத்துகின்றனர். பிழைகளின்றி திருத்தமாக அதே செயலை செய்யும் போது கண்டுகொள்வதேயில்லை.
  • குறைகளை காரணங்காட்டி திட்டும் போது, ஒருவருக்குள் உருவாக்கப்படும் 'குற்ற உணர்ச்சிகள்' அவரை திருத்திக் கொள்வதற்கு தூண்டும்.

மிகவும் கடினப்பட்டு அவற்றைத் திருத்திக் கொண்டவரின் மனம், தான் எடுத்துக்கொண்ட முயற்சிக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து நிற்கும்.

தவிப்பு உங்களை முழுமையாக ஆக்ரமிக்கட்டும்.

'தவிப்பின் உச்சி சென்றால்... அது மறைந்து போகும்' என்பது தியான விதி.

இனி தவிக்கப் போகும் காலங்களையெல்லாம் தியான காலமாக்குங்கள்.

மற்றவர்களை தவிப்பில் தள்ள தூண்டும் மனஎழுச்சி வரும் காலங்களிலெல்லாம் விழித்துக் கொள்ளுங்கள்.

அந்த தவிப்பை விழிப்போடு ஆக்கிரமித்து வெளியே வாருங்கள்.

அநியாயங்கள் மறைந்து, நியாயமான மனிதராய் மலர்வீர்கள்.

தியான நிமிடம்

உங்களின்
தவிப்பை
தவிக்க விடுங்கள்.

யாரும் பார்க்காததால்
அழுகையை
நிறுத்திக்கொள்ளும்
குழந்தையைப் போல
அது அமைதியாகும்.

செய்யுங்கள்
நெருங்க
ஆரம்பிப்பார்கள்

portrait of a woman in contemplation