சித ஆகாசம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சித ஆகாசம் என்பது எங்கும், நீக்கமற
நிறைந்திருக்கும் ஆனந்தப் பெருவெளி, பரவ
சத்தின் பரவெளி.
“சித்” என்றால் பேரறிவு (Consciousness)
“ஆகாசம்” என்றால் மிகச் சிறந்த,
தூய்மையான உருவத்தில் இல்லாத அருவ சக்தி.
அது அருள் சக்தியின் ஆகாசம்.
பிரபஞ்சத்தின் சக்தியோடு எப்போதும் பிரியாத தொடர்பு கொண்டிருப்பவர்களே ஞானி கள். இந்த சித ஆகாசத்தின் வெளிப்பாடே ஞானம். இந்த ஆகாசத்தின் அருள்மழையே ஞானிகள் வழங்கும் ஆசிகள். இது சூட்சுமான சக்தியின் வெளிப்பாடு.
பலவருடங்களாக, பலராலும், பலவகை யாலும் பாதிக்கப்பட்ட எந்த ஒரு மனிதனின் கட ஆகாசத்தையும் எந்த ஒரு வீட்டின் கட ஆகாசத்தையும், ஒரு ஞானியின் பிரசன்னத் தாலும், சாந்நியத்தினாலும் சரி செய்ய முடியும்.
ஆயிர மாயிரம் வருடங்களாக இருந்து வந்த இருட்டு, ஒரே ஒரு தீக்குச்சியின் ஒளியால் ஒரேயடியாக விலகுவது போல விலக்கவும், விளங்க வைக்கவும் முடியும். வெளிச்சம் வந்த குளமோ, குட்டையோ, அந்த நீரின் விஷத்தன்மை முழுவதும், நதி நீரின் தூய்மையால் நிச்சயம் மாறிவிடும். அதே போல் ஞானியின் வருகை நிகழ்ந்தவுடன், கட ஆகாசத்தில் என்ன எதிர் மறைத் தன்மைகள் இருந்தாலும், துர்சக்திகள் இருந்தாலும் அவை அனைத்தும் கண நேரத்தில் புனிதம் அடைந்துவிடும். பக்தர்கள் தங்கள் இல்லத்தின் கட ஆகாசத்தை தூய்மைப் படுத்திக் கொள்வதற்காகவே ஞானிகள் அமைத்துக் கொடுத்த வரம் தான், அவரின் பொற்பாதங்களுக்கு பூஜை செய்யும் புனிதமான முறைதான் “பாத பூஜை” என்பது.
ஆகாசம் என்பது உயிர்
ஆகாசம் என்பது ஒரு மகத்தான உயிர் சக்தி, உயிரின் ஆற்றல். இந்த ஆற்றல் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கின்றது. தானாகவே இயங்குகின்றது. தன்னோடு சேர்ந்தவற்றை இயக்கவும் செய்கிறது. இது அணுவுக்கும் அணு வான பரம அணுவாகும்.
நீங்கள் குடியிருக்கும் வீடு ஏதோ நான்கு சுவர்களால் மட்டும் ஆனவை என்று நினைத்து விடாதீர்கள். அந்த நான்கு சுவர்களுமே, இந்த ஆகாச சக்தியினால்தான் கட்டப்படுகின்றது. அந்த ஆகாசம்தான் இந்த சுவற்றையும், அதற்குள்
அமைந்த வீட்டின் முழு அமைப்பையும் உள் வாங்கி, கட்டி முடித்திருக்கின்றது. ஆகாசம் இல்லாமல் ஒரு அணுவும் இயங்காது. இயங்கவும் முடியாது. இந்த ஆகாசம், உங்களுக்கு உள்ளும் வெளியிலும் வீட்டின் உட்புறமாகவும் வெளிப்புற மாகவும் பரவி நிற்கின்றது. எந்த அளவிற்கு இந்த ஆகாசத்தின் சக்தி, அதன் தரத்தாலும், தன்மை யாலும், தூய்மையாலும் பரவி நிற்கின்றதோ, அந்த அளவுதான் அவற்றின் சுபிட்சம் எல்லாம். இவை தான் உங்களின் எண்ணங்களையும், உணர்ச்சி களையும் காந்தம் போல் கவர்ந்து ஆக்கிரமிக் கின்றது. வீட்டில் இருப்பவர்களின் மனப்பான்மை போலவே, வெளியில் இருந்து வருகின்றவர்கள் தன்மையும் நம்மை பாதிக்கின்றன. அதற்கு நமது வீட்டின் கட ஆகாசம் ஒரு காரணம்.