KAILASA Library/பாதபூஜையின் மகத்துவம/பாதபூஜையின் மகத்துவம்Sign in
பாதபூஜையின் மகத்துவம

பாதபூஜையின் மகத்துவம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மனிதன் எவ்வளவு தான் சாதித்திருந் தாலும், எத்தனை அறிவியலின் துணை கொண்டு மிகத் துல்லியமாக கணக்கிட்டு, பரிசோதனைகள் செய்திருந்தாலும் எல்லாமே மனத்தின் எல்லைக்கு உட்பட்டதுதான். அதாவது எண்ணத்தின் ஆளு மைக்கு உள்ளே தான். ஆனால் மனம் கடந்த ஒரு வெளியில் நிகழும் பேரண்டத்தின் இயக்கத்தை, பேரறிவின் பிரவாகத்தை (Consciousness) எண்ணத்தினாலோ அல்லது மனத்தினாலோ அறிய முடியாது. ஆனாலும் ஒவ்வொரு எண்ணமும், அதன் தொகுப்பாகிய மனமும் மிகப்பெரிய அதிசயம்தான்! அற்புதம் தான்!

எண்ணத்தின் வலிமையையும் வல்லமையைய யும் யார் அளவிடுவது?

எண்ணம் எல்லாவற்றையும் வெல்லும், கொல்லும். அதை நாம் எப்படி உபயோகப் படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது அதன் மகத்துவம் எல்லாம். எண்ணம் என்பது மகா சக்தி. அதுவே தான் மனிதனின் நுட்ப மான ஒரே கருவி. இந்தக் கருவியை வைத்துத்தான் காரணங்களை ஆராய் கின்றோம். காரியங்களை யும் செய்கின்றோம்.

நமது மூளை கணக்கிடமுடியாத எண்ணங் களை உற்பத்தி செய்தாலும், அவற்றையும் தற் போதைய விஞ்ஞானம் ஒரு கணக்குப் பார்த்திருக் கின்றது. ஒரு நிமிடத்திற்கு சுமாராக 10 எண்ணங் கள் மூளையில், மனம் என்னும் திரையில் ஓடு கின்றன. நமது ஒரு பக்க மூளை மட்டும் ஒரு நாளில் ஏறக்குறைய 14,000 எண்ணங்களை ஓட்டிப்பார்க்கின்றது. ஓராண்டுக்கு 5 மில்லியன் எண்ணங்களையும், ஒரு சராசரி மனித வாழ்க்கை யில் 350 மில்லியன் எண்ணங்களையும் ஓட விடுகின்றது.

ஆனால் அவைகளில் பெரும்பாலானவை ஒரே விதமான எண்ணங்களே திரும்ப, திரும்ப ஓட வைக்கின்றது. அதாவது மனம் எதையெல் லாம் தனக்கு பிரியமானதாகப் பதியவைத்துக் கொண்டதோ அதையே திரும்ப திரும்ப நினைப்பாக ஓட்டி, தன்னையே மகிழ்ச்சி கொள்ளச்செய்கிறது. இங்கே மனம், தன்னளவில், தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள, ஒரே விதமான, இறந்த கால நினைவு

களையுமே கனவாகவும் நினைவாக வும் உருவாக்கி
மகிழ்ச்சி கொள்கிறது. இதனாலேயே மனிதன்,
மனத்தினால் அடிமையாக்கப்பட்டு கண்டதே
காட்சி, கொண்டதே கோலம் என செக்கு மாட்டுத்
தனமான ஒரு வாழ்க்கையில் சிக்கிக் கொள்
கின்றான்.

மறை எண்ணங்களால் அல்சர் வருவது நிஜம் என்றால், நமது கோபம், வெறுப்பு, பொறுமை, தூக்கம், சலிப்பு, மன அழுத்தம், ஏமாற்றம், சஞ் சலம், நிராசை போன்ற குணங்களோடு “வாழ்ந்து” கொண்டிருப்போரின் நிலைமை என்ன? அவர்களைச் சுற்றி இருப்போரின் நிலைமை தான் என்ன? நெகட்டிவ் எண்ணங்களுக்கும், உணர்ச்சி களுக்கும் நமது வாழ்க் கைக்கும், ஆரோக்கி யத்திற்கும் மிகுந்த தொடர்புகள் உண்டு என்பதை வேத இரகசியங்களும் கூறுகின்றன. அவை நமது "Etheric body" எனப்படும் சூக்கும நுண்ணுடலைப் பாதிக்கின்றன. எனவே நமது எண்ணங்களின் தன்மைகளைப் பொருத்துத்தான் நமது இனிமை யான உணர்வுகளும், ஆனந்த மான வாழ்க்கையும் அமையும்.

★ நீங்கள் கனவில் பயன்படுத்தும் உடல்
தான்.“Etheric body” அது எப்போதும்
மனிதனின் அளவைவிட அரைமடங்கு
விரிந்ததாகவும் அதிகமாகவும் இருக்கும்.

★ நோய்களாலும், உடல் வலியாலும்
அவதிப்படுபவர்களின், "Etheric body"
அவர்களின் பரு உடலைவிட அதாவது
பௌதிக உடலைவிட அளவில் சிறிய
தாக சுருங்கி இருக்கும். "Ehteric body"
யின் சுருக்கமே மனிதனின் வியாதியும்,

அவன் தன்எண்ணங்களாலும், உண்ணும் உணவு களாலும், அவற்றின் தரத்திற்கேற்ப ஏற்படுத்திக் கொள்கின்ற ஒரு தண்டனை. இயற்கையின் விதிகளை மீறினால் வியாதி. மனம் நாய் மாதிரி ஓடி ஓடி அலைந்து கொண்டே இருந்தால், நோய். உழைப்பும், பணியும் இன்றி சும்மாவே இருந்தால், பிணிக்கப்படுவதால் பிணி. எனவே Etheric body எனும் சூக்கும் ஒளி நுண்ணுடலை நாம் அநேக வழிகளில் பாதிக்கின்றோம். அதனாலேயே அது சுருங்கிப் போய் ஒளியிழந்து விடுகின்றது. மிகக்குறுகிய அறையில், சுமார் 7, அல்லது 8 அடி உயரம் உள்ள தாழ்வான அறையில் எப்போதுமே ஒரு விதமான புழுக்கமும், மன அழுத்தமும் ஏற்படுவதை உணரலாம். குறுகலான அறையில் குறைந்த அளவு பிராண சக்தியும், வெட்ட வெளியில், நிறைந்த அளவு அபரிதமிதமான பிராண சக்தியும் இருப்பதை நாம் சுலபமாக உணரலாமே!

கட ஆகாசம்

கட ஆகாசம் என்பது உங்கள் வீட்டிற்குள் அடைபட்டிருக்கும் ஆகாசத்தின் அளவும், தன்மை யும், தரமும் ஆகும். இந்த கட ஆகாசத்தை எவ்வளவு தூய்மையாக வைத்திருக்கின்றோமோ அந்த அளவு அந்த வீட்டின் நிம்மதியும், ஆனந்த மும், ஐஸ்வரியமும் பெருகி விளங்கும். இதனையே