பாதபூஜையின்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மகத்துவம்
பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்

விஜயா பதிப்பகம்
20, ராஜ வீதி
கோயம்புத்தூர் - 641 001.
நூல் : பாதபூஜையின் மகத்துவம்
பதிப்புரிமை : தியான பீடம், பிடாதி,
பெங்களூர்.
எழுத்தாக்கமும் : சுவாமி அம்ரித்யாத்ரி,
தொகுப்பும் கோவை
முதற் பதிப்பு : டிசம்பர் - 2003
Ebook ISBN: 979-8-88572-341-1
ஒளியச்சு : ஐரிஸ் கிராபிக்ஸ்,
கோவை-4
தொலைபேசி : 2577941
அட்டை : Ash Design Factory,
வடிவமைப்பு Coimbatore.
அச்சாக்கம் : ஏசியன் பிரிண்டர்ஸ்,
சென்னை-14
பக்கங்கள் : 136
விலை : ரூ 10/-
வெளியீடு : விஜயா பதிப்பகம்
20, ராஜ வீதி, கோவை - 1
தொலை பேசி : 2394614
தொகுப்புரை
பஞ்ச பூதங்களின் சக்தியில் பரவசமாக வாழ
வேண்டியவன் மனிதன். தன் வசமிழந்து, அந்த
பரத்தின் வசம் அடைந்து விட்டால் அதுதான் பர
வசம். அதற்குத்தான் காயம் எனும் உடம்பு ஆகா
யம் எனும் விசும்பு. அந்த ஆகாய சக்தியை அணு
அணுவாக அனுபவப்படுத்துவதுதான் தியானம்.
அது தான் வாழ்தல். வாழ்ந்து, வாழ்ந்து, ஆழ்ந்து,
ஆழ்ந்து, கைக்கொள்வது தான் வாழ்க்கை. கைக்
கொள்ளும் போதுதான் கொள்கை. கொள்கைகள்
சுவாசத்தால், விசுவாசம் ஆகும் போது ஆகாய சக்தி
யோடு இரண்டறக் கலந்து அனுபவம் வாழ்க்கை
யாகின்றது. இதற்கு நம்மை உயர்த்துபவர்,
உதவுபவர் தான் குரு. கருவாகவும், உருவாகவும்
பிறந்த நம்மை (கரு + உரு = குரு) சற்குரு தான்
போற்றுகிறார், காப்பாற்றுகிறார்.
அதனால்தான் தன்னை உணர்ந்த ஞானியின்
பிரவேசம், நம்மை காப்பாற்றுகிறது, உய்விக்
கின்றது, உயிர்ப்பிக்கின்றது. கடஆகாசம், சித
ஆகாசமாக சிறக்கின்றது. வாழ்க்கை வளமா
கின்றது. நமது உடம்பில் உள்ள அனைத்து சக்தி
மையங்களும், உயிரூட்டம் பெற்று, மயானத்திற்கு அழைத்துச் செல்லும் மனதை தியானத்திற்கு மாற்றுகின்றது. அதன் ஒரு வழிமுறைதான் சப்த சக்கர தியானம். ஞானியின் பாத பூஜையும், நமது விடா முயற்சியால் விளையும் சப்த சக்கர தியானமும் சேரும் போது, நம் ஒவ்வொரு வருடைய வாழ்க்கையும் சிறந்து விளங்குவது உறுதி. அதன் நிறைவாக ஞான தீட்சையும் பெற்று விட்டால், அளவில்லாத ஆனந்தம் அடைவது நிச்சயம். அந்த ஆனந்தமே நித்தியம். அதற்கான அழைப்பு தான் சேரவாரும் ஜெகத்தீரே!
இந்த அற்புதமான, புனிதமான, அருட் பணியில் அடியேனோடு அயராது ஒத்துழைத்த அன்பர்கள் பேரூர் கிருஷ்ணமூர்த்தி, புகைப்படக் கலைஞர் இராஜேந்திரன், ஆத்தூர் ஓஷோமணி ஆகியோருக்கு அடியேனின் கரம் குவித்த நன்றிகள்.
அட்டையின் வரைகலை ஆக்கத்தில்
பொறுமையோடும், நிதானத்தோடும், புன்னகை
யோடும் பணிபுரிந்த அன்பன் சங்கருக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அவ்வப்போது ஊக்கமும், ஆக்கமும்
அளித்த அநேக நண்பர்கள் அனைவருக்கும்
இதயம் கனிந்த நன்றிகள்.
வாசகர்கள் அனைவரும் இந்த அரிய ஆனால் சிறிய நூலைப் படித்து, அந்த கருத்துக்க ளோடு படிந்து, படிப்படியாக உயர வேண்டும், உயிர்த்துவம் பெற வேண்டும். வாழ்க்கையில் உடல் நலம், மனவளம், ஆத்மபலம் அனைத்தும் பெற்று சிறந்தோங்கி வாழ வேண்டும்.
25.12.2003
கோவை - 44
அலை பேசி : 98422 53124
அன்பன் சுவாமி அம்ரித் யாத்ரி