KAILASA Library/பாதபூஜையின் மகத்துவம/சப்த சக்கர தியானம்Sign in
பாதபூஜையின் மகத்துவம

சப்த சக்கர தியானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஸ்ரீ சக்கரத்தினுடைய முழு பலனும் கிடைக்க வேண்டும் என்றால் நம்ம வாழ்க்கையிலே அதை உபயோகம் பண்ண வேண்டும். நமக்குள்ளே உள்ள சக்திகளை எழுப்ப வேண்டும். அரைமணி நேரம் உட்கார்ந்து இரண்டு பூ போடுவதாலோ கொஞ்சம் தண்ணீர் ஊற்றுவதினாலோ இந்த ஸ்ரீ சக்கரத்தினுடைய முழு பலனும் கிடைக்காது.

ஸ்ரீ சக்கரத்தில் நாற்பத்தி மூன்று சக்திகள் இருக்கின்றன. நமக்குள்ளே உள்ள இந்த 43 சக்திகள் தான் மனவெழுச்சிகள் (emotions) எனப் படும் மன உணர்ச்சிகள் எல்லாம். இதெல்லாம் மூடிக் கொண்டால் ஒன்னும் பண்ண முடியாது. திறந்தாச்சுன்னா மிகப் பெரிய உதவிகள் பண்ணும். பூட்டிக்கொண்டால் நமக்கு தடையா இருக்கும். திறந்து விட்டால் பெரிய பலன்களை எல்லாம் தரும்.

மூளையுடைய செயல்பாடுகள் அனைத்தும் ஒரு இயந்திரம் போல்தான் செயல்படுகின்றன. மூளையின் மூலமாக எல்லாச் செயல்களையும் செய்யும்போது நமது உணர்வுகளை உணருகிறோம் அல்லவா? அந்த உணர்ச்சிகள் கூட ஒரு இயந்திரம் போல்தான் உணரப்படுகின்றன.

Skinner என்ற விஞ்ஞானி மூளை பற்றி ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சி செய்து உள்ளார்.

நமக்கு கோபம் வரும் போது மூளையில் ஒரு குறிப்பிட்ட இடம் துடிக்கிறதாம். நமக்கு காமம் வரும் போது மூளையில் ஒரு குறிப்பிட்ட இடம் துடிக்கிறதாம். இப்படி ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் மூளையிலே ஒவ்வொரு தனித்தனியான இடம் துடிக்கிறதாம்.

மாட்டை வைத்து ஒரு டெஸ்ட் பண்ணி பார்த்தாராம். மாட்டோட மூளையில் கோபம் வரு வதற்கும் கோபம் வராமல் இருக்கறதுக்கும் என்னென்ன இடங்கள் உள்ளன என்று கண்டு பிடிச்சு இரண்டு மின்னணு கடத்திகளை வச்சு பரி சோதனை செய்தார்கள்.

கோபம் வந்தா துடிக்கின்ற அந்த இடத்தை மின்னணு கருவியால் துடிக்க வைத்து மாட்டிற்கு கோபம் வந்து அந்த ஏரியாவையே சுத்தி சுத்தி மையங்கள் பற்றி தெரிஞ்சாலே நம்ம வாழ்க்கை நல்ல படியாக முன்னேற்றம் ஆகும்.

இந்த ஸ்ரீ சக்கர தியானத்தை மனதின் சக்தி மையங்களாக, Bio magnetic electricity ஆக இயங்கும். ஏழு ஆதாரத்திலும் முழுமையான பாவனையோடு, காட்சியாக உணர்ந்து பரிபூரண மாகச் செய்ய வேண்டும். எண்ணம் ஒடுங்க ஒடுங்க மனம் ஒடுங்கும், மூச்சு ஒடுங்கும். அனைத்து மன உணர்ச்சிகளும் ஒடுங்கும்.

இவையனைத்தும் ஒவ்வொன்றாக நிகழ
நிகழ நமது சக்தி மையங்கள் அமைதியில், அதன்
ஆற்றலில் ஆன்ம ஒளியில் சுயம் பிரகாசமாக
ஒளிரும். வாழ்க்கையில் இதுவரை ஒளிந்து
கொண்டிருந்ததெல்லாம் இனி ஒளிரும். அறியாமை
எனும் அஞ்ஞானம் மறைந்து, மெய்ஞ்ஞானம்,
மெய்யின் வழியாக வெளிப்படும். இந்த
ஞானம்தான் மனித வாழ்க்கையை மலர வைக்கும்.
மணக்க வைக்கும். இனிமையையும், ஆனந்தத்
தையும் அளவின்றி பெருக வைக்கும்.