சேரவாரும் ஜெகத்தீரே
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பிரம்மாநந்தம் பரமசுகதம்
கேவலம் ஞானமூர்த்திம்
தத்வா தீதம் ககனசதுர்சம்
தத்வமஸ்யாதி லஷ்யம்
ஏகம்நித்யம் விமலமசலம்
சர்வதி சாக்ஷி பூதம்
பாவாதீதம் தரிகுண ரஹிதம்
சத்குரு ம்தம் நமாமி
ஞான தீட்ஷை பற்றிய விளக்கம்
ஞான தீட்க்ஷ என்றால் தியானத்தை ஆரம்பிக்கும், ஆரம்பிக்க விரும்பும் அன்பர்களுக்கான தீட்க்ஷை இது. இதன் முதல்படி
வெளிப்படையா தெளிவா தெரியணும். நம்ம ஆன்மீக வாழ்க்கையில இருக்கிறோம் என்பது, மற்றவருக்கும் தெரிந்தால்தான் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள். இதன் மூலம் புதுப் பிறவி எடுத்ததை உணரலாம். வாழ்க்கையில் சகல முன்னேற்றத்தையும் உணரலாம்.
பாட்டரி சார்ஜ் பண்ணுவது போல் நீங்கள் ஆஸ்ரமத்துக்கு வந்து உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளலாம். தியான சக்தியை தியானத்தின் மூலமா கிடைக்கின்ற அபரிமிதமான சக்தியை உங்களுக்குள் உணரமுடியும். அதை நீங்கள் போற்றிப் பாதுகாத்து, சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
இந்த மாலையை அணிந்து கொள்வதற்கு எந்த விதிமுறையும் இல்லை. இருபத்திநான்கு மணி நேரமும் உங்களுடனே இருக்கலாம். இது உங்களுக்கு சரியான பாதுகாப்பு. எப்பவும் உங்களைச் சுற்றி, பக்தி, ஞானம், தியானம் இந்த எண்ணங்களே பாதுகாப்பாக இருக்கும். விதிகள் அனைத்தும் தானாக வரணும். கட்டாயப்படுத்தி வர்ர விதிகள் தங்காது. நிற்காது. தியானம் பண்ணுங்க! தியானம் தானாக வரும். தியானம் பண்ணப் பண்ண ஒழுக்கம் வரும். கட்டுப்பாடுகள் தானாகவே வரும். எளிமையான தியானம் போதும் எந்த தேவதையையும் பூஜை பண்ண
மனம் அடங்கினால் சுவாசம் அடங்கும். சுவாசம் அடங்கினால் மனம் அடங்கும்.
மனம் அதுவாகவே அடங்குவதுதான் தியானம். மனம் அடங்கும் பொழுது நமக்குள் உள்ள ஆத்ம சக்தி வெளிப்படுகின்றது. பாசி படிந்த குளத்தில் அடியில் உள்ள தண்ணீர் அப்படியே தெரிகின்ற மாதிரி, அந்த தண்ணியை உபயோகத்துக்கு எடுத்துக்க முடியும் சில காலத்திற்கு தொடர்ந்து அலைந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த மனதை விலக்கினால் அதற்குள் உள்ள தண்ணி மாதிரி தெளிந்த ஆத்ம சக்தி இருக்கும். அந்த மனதை விலக்கி ஆத்ம சக்தியை உபயோகிப் பதற்கான வழிதான் தியானம்.
உள்ளே போகின்ற சுவாசம், வெளியே திரும்பும் சுவாசம் வெளியில வருகின்ற சுவாசம், உள்ள திரும்புகின்ற சுவாசம். நாம் சுவாசம் பண்ணும் பொழுது இந்த நான்கும் தான் நடக்கிறது. இந்த நான்கையும் தவறவிடாமல் கவனம் சிதறாமல் அமைதியோடு சாட்சியாக கவனியுங்கள். மூச்சை அடக்க வேண்டியது இல்லை. கண்மூடி அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து உடம்பை சமநிலைக்கு கொண்டு வந்து அமைதியாக தெளிவாக அமருங்கள். அமரும் முன்பு குளித்தல் அல்லது முகம் கழுவி அமரவும். மனம் புத்துணர்ச்சியாக இருக்கும். வாழமுடியும். இந்த உள் அமைதியின் மூலமாக நாள் முழுவதும் நம்முடைய வாழ்க்கையில் தெளிவாகவும், விளக்கமாகவும் வாழமுடியும் இருபது நிமிட தியானத்தினால் இருபத்தி நான்கு மணிநேர வாழ்க்கையும் மாறும். ஆழ்ந்து சிரத்தையோடு தியானம் செய்து ஆனந்தமாய் இருக்க சுவாமிகளின் ஆசீர்வாதம்.
ஒவ்வொருவராக ரத்த சந்தன மாலை
பெற்றுக்கொள்ள வாருங்கள். சுவாமி ஆக்ஞா
சக்கரத்தை தொடுவேன், தொடும் பொழுது கரண்ட்
ஊர்வது போல் இருந்தால் பயப்படாமல் அதை
அனுமதியுங்கள். என்ன நடக்குதோ அதை
அப்படியே நடக்க விடுங்கள். பயத்தையும்
எதிர்பையும் காட்ட வேண்டாம்.
இந்த தீட்க்ஷை வாங்குவது புது வாழ்க் கைக்குச் சமம். அந்தக் கூடையில் உள்ள பூக் களோடு நீங்கள் செய்த பழ வினைகள் பாவங்கள் உங்களுடைய கர்மங்கள் எதை யெல்லாம் ஒழிக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை யெல்லாம் மனசார பாவனையினால பூவோடு சேர்த்து குருவினுடைய காலடியில் சமர்ப்பணம் பண்ணிவிடுங்கள். இன்றிலிருந்து புதுமையான வாழ்க்கையை உங்களால் உணர முடியும். “பழையன கழிதலும், புதியன புகுதலும் நிதி வழுவாதனவே” என்பது இதுதான்.