KAILASA Library/உன் மனதே சமுதாயம்/பழிசொல்வது பலனளிக்காதுSign in
உன் மனதே சமுதாயம்

பழிசொல்வது பலனளிக்காது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய தெளிவான முக்கியமான விஷயம் இது நம்முடைய வாழ்க்கையில் வியாதியாகட்டும், வறுமையாகட்டும், உடல் அல்லது மன வேதனையாகட்டும் அவை வருவதற்கு நாம் பெரும்பங்கு வகிக்கின்றோம்.

மற்றவர்களைக் குறை சொல்லாதீர்கள். அதற்கு வேறு யாரும் பொறுப்பு அல்ல. நாமே முழுப் பொறுப்பு. நாமே அதற்குப் பொறுப்பு என்ற தெளிவு வந்த பிறகுதான் நாம் அதற்குத் தீர்வு தேடத் துவங்குகின்றோம்.

சுவாமி விவேகானந்தர் ஒரு சொற்பொழிவில் மிக அழகாகச் சொல்கிறார்... “உங்கள் வாழ்க்கையின் பொறுப்பு முழுவதையும் நீங்கள் உங்கள் தோளில் சுமக்க ஆரம்பியுங்கள். உங்கள் தோள்கள் வலிமை பெறும். உங்கள் வாழ்க்கையின் வறுமைகளை தீர்க்கத் துவங்குவீர்கள்.”

உங்களுக்கு வறுமையாக இருந்தாலும் சரி, துக்கமாக இருந்தாலும் சரி, உடல் மன வேதனையாக இருந்தாலும் சரி, நாம் தான் அனைத்திற்கும் காரணம்.

நீங்கள் நினைக்கலாம்... எப்படி இருக்க முடியும்? என் வாழ்க்கையில் அவனால்தான் பிரச்சினை; இவனால்தான் பிரச்சினை, என்று எப்போதும் பிறர் மீதுதான் பொறுப்பைச் சுமத்துகிறோம்.

மற்றவர்களைப் பழிப்பதிலேயே நாம் தெளிவை வைத்திருக்கிறோம். ஒரு நிம்மதியை வைத்திருக்கிறோம். அதையே ஒரு சுகமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கையின் பொறுப்பு நம்முடையது என்பதை நாம் உணர்வதில்லை.

ஒரு சின்னக் கதை. கதை என்றுகூடச் சொல்லக்கூடாது, நடந்த சம்பவம்.

என்னைப் பார்க்க அமெரிக்காவில் இருந்து ஒரு அன்பர் வந்திருந்தார். அவர் ஒரு இளைஞர். என்னிடம் வந்து, “சாமி! என்னுடைய தம்பி என்னுடைய தாய், தந்தையர் முடிவுவெடுத்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டான். நான் நானாகவே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொண்டேன். இப்போது இரண்டுபேருக்குமே வாழ்க்கை மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.” என்று சொன்னார்.

அவரிடம் கேட்டேன், “என்ன பிரச்சினை?.” என்று. அவர் சொன்னார், “இரண்டு திருமணமும் தோல்விதான். நிம்மதியில்லை. நானாகத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்ட வாழ்க்கையும் நிம்மதியில்லை.

> “உங்கள் வாழ்க்கையின்
> பொறுப்பு முழுவதையும்
> நீங்கள் உங்கள் தோளில்
> சுமக்க ஆரம்பியுங்கள்.
> உங்கள் தோள்கள் வலிமை
> பெறும். உங்கள்
> வாழ்க்கையின்
> வறுமைகளை தீர்க்கத்
> துவங்குவீர்கள்”.

பெற்றோர் தேர்ந்தெடுத்து அவனுக்குத் திருமணம் செய்த வாழ்க்கையும் நிம்மதியில்லை. இரண்டுமே தோல்விதான். ஆனால் அவனுக்கு ஒன்றில் மட்டும் ஒரு திருப்தி, எனக்கு அதுகூட இல்லை,” என்று சொன்னார்.

“என்ன திருப்தி!?” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.

அவர் சொன்னார் “சாமி குறைந்தபட்சம் அவனாவது அவனுடைய பிரச்சினைக்கு, அம்மா, அப்பா தான் காரணம் என்று அவர்களைப் பழி சொல்லிக்கொண்டு இருக்கலாம். ஆனால் அதுகூட எனக்கு இல்லை” என்றார்.

“அவன் அம்மா அப்பாவைப் பழித்துக் கொண்டிருக்கிறான். உங்களால்தான் என் வாழ்க்கை வீணாகப்போய்விட்டது என்று. என்னால் அதைக்கூட செய்ய முடியவில்லை. என்னை நானே பழித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார்.

“தாய் தந்தையர் மீது பொறுப்பைப் போடுவதால், பிரச்சினை தீர்ந்துவிடுமா?” என்று நான் கேட்டேன்.

“முடியாது.”

பொறுப்பை மற்றவர்கள் மீது போடுவதனால் உங்களுக்கு நீங்களே ஒருவித போலித்தனமான ஒருவித தப்பித்துக் கொள்ளும் வாழ்க்கையை வாழலாம். வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளுதல் என்பதை செய்யலாமே தவிர வாழ்க்கைக்கு அது தீர்வாகாது. வாழ்க்கைக்கு அது முடிவாக மாறாது.

| மற்றவர்கள் மீது பொறுப்புக்களைச் சுமத்துபவர்கள் தன்னுடைய வாழ்க்கையை வாழ்வதேயில்லை. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நமது வாழ்க்கை நமது பொறுப்புதான். |

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

மற்றவர்கள் மீது பொறுப்புக்களைச் சுமத்துபவர்கள் தன்னுடைய வாழ்க்கையை வாழ்வதேயில்லை. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நமது வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு.

இன்னொரு நடந்த நிகழ்ச்சி.

அமெரிக்காவில், இந்த Autism (ஆட்டிஸம்) என்ற வியாதி குழந்தைகளுக்கு வரும் மனவியாதிகளில் ஒன்று. குழந்தைகளுக்கு, அந்த மன வியாதி வந்தால் சரளமாகப் பேசமாட்டார்கள். பள்ளிக்குச் செல்ல முடியாது. பெரியவர்களாலும் வேலைக்குச் செல்ல முடியாது.

அமெரிக்காவில், ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு இந்த மன வியாதி வந்துவிட்டது. அந்தக் குழந்தைக்கு தியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அந்த குழந்தையின் பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தார்கள்.

அந்தக் குழந்தையின் தந்தை "சுவாமி! இந்தக் குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்து தயவு செய்து தியான சிகிச்சை அளியுங்கள்" என்றார். நான் அந்தக் குழந்தையின் தலையில் கையை வைத்து, தியான சிகிச்சை அளிக்கத் துவங்கினேன். அந்தக் குழந்தையோ மேல் நாட்டில் பிறந்து வளர்ந்த குழந்தை. நான் அந்த குழந்தையின் தலையில் கைவைத்தவுடன், சரளமாகத் தமிழில் பேசத் துவங்கியது.

இது ஒரு நடந்த நிகழ்ச்சி, உண்மையிலேயே நடந்த நிகழ்ச்சி. இது கதையில்லை. கிராமத்துத் தமிழிலில் மரியாதை இல்லாத தமிழில் "கையை எடுடா" என்றது. "எடுங்க" என்று கூடச் என்னை சொல்லவில்லை. "எடுடா" என்று சொல்லியது.

எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், குழந்தை அவமரியாதையாகப் பேசியதைத் தவறாக நான் நினைக்கவில்லை. 'பேசுகிறதே! அது போதும்!' என்று நினைத்தேன். ஏழு வருடங்களாகப் பேசாத ஊமைப் பிள்ளை வாயைத் திறந்து சரளமாகத் தமிழில் பேசியதே என்று மிகுந்த ஆச்சர்யம். முதலில் ஆச்சர்யம், அப்புறம் அதிசயம்! எப்படி இந்தக் குழந்தையால் தமிழில் பேச முடிகிறது? என்று. "கையை முதலில் எடுடா" என்றது. நான் இந்த பேய், பிசாசு மாதிரி ஏதாவது இருக்குமோ? என்று நினைத்தேன்.

பொறுமையாக "என்ன சொல்றீங்க?" என்று குழந்தையிடம் தமிழிலேயே கேட்டேன். குழந்தையின் தாய், தந்தை எல்லோரும் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் குழந்தை என்ன பேசுகிறது? என்று புரியவில்லை.

ஏதோ வார்த்தை வருகிறது என்று மட்டும் தெரியும்! ஏனென்றால் அவர்கள் தமிழ்க் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல.

அப்போது அந்தக் குழந்தை சொன்னது, "நானே தான் இந்த வியாதியை எடுத்து வந்திருக்கிறேன். அதனால் என் வியாதியைக் குணப்படுத்த முயற்சி பண்ணாதே! சம்மா இரு." என்றது.

அப்போது கேட்டேன், "ஏன் இந்த வியாதியை எடுத்து வந்தீர்கள்?" அதற்கு அந்த குழந்தை, "மற்றவர்களைப் போல் இந்த சமுதாயத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டு வேலைக்குச் செல்வதற்கும் படிப்பதற்கும் எனக்குப் பிடிக்கவில்லை. நிம்மதியாக சாப்பட்டுவிட்டு,சாப்பட்டுவிட்டுத் தூங்கலாம் என்று முடிவு பண்ணினேன். அதனால்தான், எனக்கு நானே இந்தக் கர்மங்கள் வரும்படி அமைத்துக் கொண்டேன்! நானேதான் இந்த வியாதியை எடுத்துவந்தேன். என்னுடைய எண்ண ஓட்டங்களையும், மன அமைப்பையும் இப்பிறப்போடு எடுத்து வந்தேன். அதனால்தான் இந்த வியாதியைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறேன். என்னை சரி செய்ய வேண்டாம்" என்று சொல்லியது.

குழந்தையிடம் "உனக்கு வேண்டும் என்று கேட்டது சரிப்பா, ஆனால் உன் தாய் தந்தையர் நல்லவர்கள் ஆச்சே! அவர்களுக்கு ஏன் இந்த துக்கத்தைக் கொடுக்கிறாய்? இது போன்ற நல்ல பெற்றோர்களுக்கு ஏன் மகனாகப் பிறந்தாய்?" என்றதும்... அந்தக் குழந்தை தெளிவாக தமிழிலேயே பதில் சொல்லியது "இவர்கள் ரொம்ப நல்லவர்கள். மற்றவர்களுக்கு மகனாகப் பிறந்திருந்தால், என்னைக் கவனிக்காமல் விட்டு இருப்பார்கள். இவர்கள் ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்கள். அதனால் கட்டாயமாகக் கவனித்துக் கொள்வார்கள். அதனால்தான் இவர்களுக்கு மகனாகப் பிறந்தேன்" என்று சொல்லியது.

அந்தக் குழந்தை, ஒரு பத்து நிமிடத்திற்கு மேலாக தெளிவான தமிழில் பேசியது. மிகவும் ஆச்சர்யமான விஷயம். கையை எடுத்தவுடனே அந்தக் குழந்தை பழையபடி ஊமையாக ஆகிவிட்டது. பழையபடி பேசாத ஊமைக் குழந்தையாகிவிட்டது.

எதற்காக இந்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன் என்றால், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இந்த குழந்தை பேசியதை வைத்து தெளிவாக எனக்கு புரிந்தது, நம் உடல் ஊனம், நம் மன ஊனம், எல்லாவற்றையும் நாம்தான் முடிவு செய்கிறோம். நம் வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழவேண்டும்என்று நினைக்கிறோமோ,அதை அடிப்படையாக வைத்து நாம்தான் முடிவு செய்கிறோம்.

இது சற்று ஆழமான கருத்து, மிகவும்
யோசிக்க வேண்டிய கருத்து, புரிந்து
கொள்வதற்கு கஷ்டமாக இருக்கும்.
எப்படி இது?
நாம் தான் முடிவு செய்கிறோமோ?
அப்படி நடக்குமா?
எப்படி இருக்க முடியும்?...பி

விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும்
செய்தியில் 10 ஆண்டுகளுக்காவது,
உங்களை நீங்களே வருத்திக்
கொண்டு, வாழ்க்கையில் துக்கத்தை
ஏற்படுத்திக் கொண்டு,
வேதனையிலேயே வாடினால்
மட்டும் தான் Cancer வியாதி
வரும். அந்த அளவிற்கு நீங்கள்
உங்கள் உடலை அழித்துக்
கொள்கிறீர்கள்.