KAILASA Library/உன் மனதே சமுதாயம்/வறுமையும், சுயவிருப்பமும்Sign in
உன் மனதே சமுதாயம்

வறுமையும், சுயவிருப்பமும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மகாவீரர் மிக அழகாகச் சொல்கிறார்... அற்புதமாகச் சொல்கிறார்... மகாவீரர் இந்திய நாட்டில் பிறந்த மிகப்பெரிய ஞானி. ஜைன மதத்தை நிறுவியவர்.

அவருக்கு முன்பாக 23 தீர்த்தங்கரர்கள் இருந்தாலும் ஜைன மதத்திற்கு ஒரு முழுமையான, தெளிவான வடிவம் கொடுத்தவர் மகாவீரர் தான்.

அவர் சொல்கிறார்... "நீங்கள் இந்தப் பூவுலகத்திற்கு இறங்கி வரும்போதே உங்களுக்குத் தேவையான அளவு உணவு, உங்களுக்குத் தேவையான சுகம், நீங்கள் அனுபவிப்பதற்கு தேவையான ஆயுள், உடல்சக்தி எல்லாவற்றையும் இறைவன் உங்களுடனேயே அனுப்பிவிடுகிறான். இறைவன் உங்களை வெறும் கையோடு அனுப்புவதில்லை" என்று சொல்கின்றார்.

எப்படித் திருமணம் ஆன்பின் அந்தப் பெண்ணை மாமியார் வீட்டுக்கு அனுப்பும்போது எல்லாச் சீர்வரிசைகளையும் கொடுத்து அனுப்பப்படுகிறாளோ, அதேபோல் இந்த உலகத்திற்கு நீங்கள் வரும்போது உங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களுடனும் இறங்கி வருகிறீர்கள்.

உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விஷயங்களையும், முழுமையாக நீங்கள் உடல் எடுக்கும் போதே உங்களுக்கு அளிக்கப்பட்டுவிடுகிறது.

நம் மனதில் வருகின்ற அடுத்த கேள்வி இது, "எனக்கு தேவையானது எல்லாம் கடவுள் கொடுத்து அனுப்பிவிட்டார் என்று சொல்கிறீர்களே சாமி! பின் ஏன் நான் வறுமையோடு இருக்கிறேன்?"

தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், நம்மால் நம்பமுடியாவிட்டால்கூட வறுமையும் நாம் சுயமாக எடுக்கிற முடிவுதான்.

சில நேரங்களில் பணத்தோடு,
செல்வத்தோடு வாழும் போது நாம் நிறைய
அபாய முடிவுகளை எடுக்க
வேண்டியிருக்கிறது. அப்படியே செல்வம்
வந்தாலும், நிறையப் பொறுப்பு எடுக்க
வேண்டியிருக்கும். அதைக் காப்பாற்றி
வைப்பதற்கும் அதை முறையாகப்
பாதுகாத்து வைப்பதற்கும் நிறையப்
பொறுப்பு எடுக்க வேண்டியிருக்கும்.
அந்தப் பொறுப்பை எடுக்க விரும்பாத
மனிதர்கள், இயற்கையிலேயே
தங்களுடைய வாழ்க்கை வறுமையாக
இருக்க வேண்டும் என்று முடிவுசெய்து
விட்டுவிடுகிறார்கள்.

பொறுப்பு எடுக்க விரும்பவில்லை என்றாலே தானாகவே வறுமைதான் இருக்கும். பொறுப்பு எடுக்க விரும்புவது என்ற தெளிவு இருந்தால் மட்டும்தான் அவர்களால் செல்வத்தை உருவாக்கவே முடியும்.

நம்மால் நம்ப முடியாவிட்டால்
கூட வறுமையும் நாம் சுயமாக
எடுக்கிற முடிவுதான். சில
நேரங்களில் பணத்தோடு,
செல்வத்தோடு வாழும் போது
நாம் நிறைய அபாய முடிவுகளை
எடுக்க வேண்டியிருக்கிறது.
அப்படியே செல்வம் வந்தாலும்,
நிறையப் பொறுப்பு எடுக்க
வேண்டியிருக்கும். அதைக்
காப்பாற்றி வைப்பதற்கும் அதை
முறையாகப் பாதுகாத்து
வைப்பதற்கும் நிறையப்
பொறுப்பு எடுக்க
வேண்டியிருக்கும்.