நிஜ ஆசை..சமூக ஆசை...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நம்முடைய எல்லா ஆசைகளும் நம்முடைய சொந்த ஆசைகள் அல்ல. மற்றவர்களைப் பார்த்து அதனால் பெறப்படும் ஆசைகள். பக்கத்து வீட்டில A C. போட்டால் நம் வீட்டில் வெப்பம் ஜாஸ்தியாகிவிடும். பக்கத்து வீட்டுக்காரர் A C. வைத்திருக்கிறார் என்று தெரிந்த உடனே நம்மால் AC இல்லாமல் இருக்கமுடியாது.
நம் உஷ்ணம் அதிகமாகிவிடும். சமூகத்தினுடைய அழுத்தத்தினால் (Peer Pressure) ஒப்பட்டுப் பார்ப்பதனால் ஏற்படும் ஆசைகள். அது மட்டுமல்ல, சமூகம் நம் மீது இப்படி வாழ்ந்தால்தான் வாழ்க்கை என்று கற்றுக் கொடுத்து நம் மீது திணிக்கின்ற ஆசைகள்.
நாம் எல்லோரும் இந்த பிறவி எடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட ஆசையோடுதான் உடலை எடுக்கிறோம். ஆசைகளே இல்லாதவன் உடல் எடுக்கத் தேவையில்லை பூரண ஞானியாக இறை சக்தியோடு ஒன்றியிருப்பான்.
ஒரு குறிப்பிட்ட ஆசைதான் இந்த உடலை எடுக்க வைக்கின்றது. நாம் இந்த உடலை எடுப்பதற்குக் காரணமாக இருந்த ஆசைகள், நமக்குள் வேதனையையோ, எரிச்சலையோ, கொந்தளிப்பையோ, வெறுப்பையோ உண்டாக்காது.
ஆனால் இந்த சமூகத்திற்குள் வந்தபிறகு சமூகம் நமக்குள் திணித்த ஆசைகள் சமூகத்தினுடைய சூழலினால் நமக்குள் திணிக்கப்பட்ட ஆசைகள் என்றென்றும் நமக்குள் வேதனையைத் தந்து கொண்டிருக்கும். நாமாகவே நமக்குள் எடுத்துக் கொண்ட ஆசைகள் ஒருபுறம்; நம்மீது சமுதாயம் திணிக்கின்ற ஆசைகள் மறுபுறம்.
> ஒரு குறிப்பிட்ட ஆசைதான்
> இந்த உடலை எடுக்க
> வைக்கின்றது. நாம் இந்த
> உடலை எடுப்பதற்குக்
> காரணமாக இருந்த ஆசைகள்,
> நமக்குள் வேதனையையோ,
> எரிச்சலையோ,
> கொந்தளிப்பையோ,
> வெறுப்பையோ
> உண்டாக்காது.
ஒரு சில உதாரணம் சொன்னால் இந்த இரண்டு கருத்துக்களும் புரியும். நாமாகவே நம் வாழ்க்கை 'அப்படி அமைய வேண்டும்'. 'இப்படி அமைய வேண்டும்' என்ற தெளிவோடு ஏற்படுத்திக் கொள்கிற ஆசைகள் ஒரு விதம். இன்னொன்று, மற்றவர்கள் எல்லாம் இப்படி வாழ்கிறார்களே, நாம் சும்மா இருக்கலாமா? என்று மற்றவர்களைப் பார்த்து நமக்கு அது தேவையில்லை என்றால் கூட, "மற்றவர்கள் இப்படி இருக்கிறார்களே நாமும் இப்படி இருக்க வேண்டும்" என்று மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கிய ஆசைகள் இரண்டாவது வகை.
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்... உங்களுக்கு உடைகள் எடுக்க வேண்டுமென்று முடிவு செய்து, பத்தாயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு துணிகடைக்கு போகிறீர்கள். அந்த கடையில் திடீரென்று உங்களுடைய நண்பரைச் சந்திக்கிறீர்கள், அவர் சொல்கிறார், வாருங்கள் நகை வாங்கப் போகலாம் என்று. "நானெல்லாம் தீபாவளி வந்தால் நகை தான் வாங்குகிறேன்" என்கிறார். உடனே நீங்கள் என்ன நினைப்பீர்கள்? இவர்களே நகை வாங்கும்போது நாம் ஏன் வாங்கக் கூடாது? நாம் வாங்கா விட்டால்...மானப்பிரச்சனை எனவே அவர் நகை வாங்குவதைப்போல் நீங்களும் நகையை வாங்கிப் பணத்தை செலவு செய்து விடுகிறீர்கள்.
நகையை எடுத்துவிட்டு துணி வாங்கச் சென்றால் கையில் பணம் இல்லை. உடனே கடன் வாங்குகிறோம். கடன் வாங்கத் துவங்கிய உடனே வாழ்க்கையில் எல்லா பிரச்சினையும் வரத் துவங்குகிறது.
கடன் வாங்குவது என்பது வேறு ஒன்றுமில்லை உங்கள் வாழ்க்கையை விற்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையை விற்பனை செய்வதுதான் கடன் வாங்குவது. பிறகு வாழ்க்கையில் எல்லாப் பிரச்சனையும் வரத் துவங்குகிறது.
அதன்பின் வாழ்க்கையில் முதலில் வாங்கிய கடனுக்காக ஓடுவது. ஓடுகின்ற ஓட்டத்திலே மேலும் கடன் வாங்குவதும், மேலும் அந்தக் கடனுக்காக மேலும் மேலும் வாழ்க்கையில் ஓடுவதும் நடக்கதுவங்கி விடுகிறது. உங்களுடைய ஆசைகளை மட்டும் நிறைவேற்றியிருந்தீர்களானால் உங்களுக்குத் துக்கம் வருவதில்லை.