KAILASA Library/உன் மனதே சமுதாயம்/முன்னுரைSign in
உன் மனதே சமுதாயம்

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உண்மையிலேயே நம்முடைய மனம்தான் சமுதாயம்.

மனமே இல்லாத பொருளை இருப்பதாகக் காட்டி நம்மை ஆசைகளிலும், அச்சத்திலும் அலைக்கழிக்கிறது. நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையான நிம்மதியின்மைக்கும், துக்கத்திற்கும் நம்முடைய ஆசைகளும், அச்சங்களும்தான் ஒரே காரணம்.ய

"அப்படியென்றால் ஆசைதான் இவ்வளது துக்கத்திற்கு காரணமா?"

நிஜமான ஆசைகளும், அச்சங்களும் எப்போதும் நம் வாழ்க்கையில் துக்கங்களை உருவாக்குவதில்லை.

நம்முடைய வாழ்க்கையில் இரண்டு விதமான ஆசைகளும், துக்கங்களும் இருக்கின்றன.

முதல் வகை... நிஜமான ஆசைகள் உங்கள் உடலை இயக்கும் உந்து சக்தியாகவும், நிஜமான அச்சங்கள் நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ளும் தற்காப்பு எண்ணங்களாகவும் இருக்கும்.

இரண்டாவது வகை... போலித்தனமான ஆசைகள் மற்றும் போலித்தனமான அச்சங்கள். சமுதாயம் நம்மீது திணித்துவைக்கும் எண்ண ஓட்டங்களேயின்றி வேறில்லை. துன்புறுத்தும் ஆசைகளிலிருந்தும் எண்ணவோட்டத்திலிருந்தும் வெளிவருவது எப்படி? அதற்கு பரமஹம்ஸர் அளிக்கும் வாழ்வியல் தீர்வுகளை இப்புத்தகத்தில் தொகுத்தளித்திருக்கின்றோம்.

இப்படிக்கு

நித்யானந்தத்தில்,

நித்யானந்தா சேரிடபுள் டிரஸ்ட்.