மார்பு புற்றுநோயும் மன அமைப்பும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சமீபத்தில் ஒரு பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை, படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முக்கியமாக மார்புப் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சி அறிக்கை அது. அந்த ஆராய்ச்சியில் பெண்களுக்கு வரக்கூடிய மார்புப் புற்று நோய் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
அவர்கள் சொல்கிறார்கள், “மார்புப் புற்றுநோய் வந்த அத்தனை பெண்களும், அவர்களுடைய வாழ்க்கை முறை, அவர்களின் எண்ண ஓட்டம் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்யும் போது, மார்புப் புற்றுநோய் வருவதற்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அந்தப் புற்றுநோய் வந்தவர்களின் எண்ண ஓட்டங்கள் எல்லாமே எதிர்மறையான எண்ண ஓட்டமாக இருந்திருக்கிறது.”
இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டவர்களில்... “100 பேருக்கு மார்பகப்புற்று நோய் வந்தது என்றால், அந்த 100 பேரையும் ஆராய்ச்சி செய்ததில், 98 பேருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர்களின் எண்ண ஓட்டம் எதிர்மறையான எண்ணங்களாக மாறிவிட்டிருக்கிறது.” என்று சொல்கிறார்கள்.
வாழ்க்கையில் அவர்களுக்கு படிப்பு இல்லாமல், ஏதோ ஒரு காரணத்தினால் கணவர் இறந்ததனாலோ, வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததனாலோ,அல்லது தனக்குள்ளே அடுக்கி அடுக்கி வைத்திருக்கும் எண்ணங்களாலோ அல்லது தான் விரும்பிய சுதந்திரத்தை அடைந்து வாழ முடியாததனாலோ என ஏதோ சில காரணத்தினால் எதிர்மறையான எண்ணங்களில் வாழத் துவங்கிவிடுகிறார்கள்.
குறைந்த பட்சம் 10000
முறையாவது உங்களை
நீங்களே துக்கத்தில்
ஆழ்த்திக்
கொண்டால்தான்
உங்களுக்கு Cancer
வரும்
இது ஒருவர் அல்ல இருவர் அல்ல. 10,000திற்கு மேற்பட்ட புற்றுநோயாளிகளை அவர்களின் மன அமைப்பை ஆராய்ச்சி செய்து வெளியிடப்பட்டிருக்கும் முடிவு இது.
விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் செய்தியில் 10 ஆண்டுகளுக்காவது, உங்களை நீங்களே வருத்திக் கொண்டு, வாழ்க்கையில் துக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, வேதனையிலேயே வாடினால் மட்டும் தான் Cancer வியாதி வரும். அந்த அளவிற்கு நீங்கள் உங்கள் உடலை அழித்துக் கொள்கிறீர்கள்..
அதனால் தான் அந்த மருத்துவ ஆராய்ச்சியில் மிக அழகாக சொல்கிறார்கள்... “குறைந்த பட்சம் 10000 முறையாவது, உங்களை நீங்களே துக்கத்தில் ஆழ்த்திக் கொண்டால்தான் உங்களுக்கு Cancer வரும்” என்று.
அப்போது நச்சப் பொருட்கள் உங்கள் உடலில் சுரக்கும் என்று சொல்கிறார்கள். எனக்கு வேறு கேள்விகள் எழுந்தன, இளம் வயதிலேயே, சிறு குழந்தைக்கு கூட Cancer நோய் வந்து விடுகிறதே! அதற்குக் காரணம் என்ன?”
சில குழந்தைகளுக்கு 10,15 வயதில் Cancer வந்துவிடுகிறது. அதற்குக் காரணம் என்ன? இதை எல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன். இதையும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்.
அந்த டாக்டர்கள் விளக்குகிறார்கள், சிலருடைய மன அமைப்பு தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிற மன அமைப்பு, வேறு சிலரது தன்னைத் தானே அழித்துக் கொள்கிற மன அமைப்பு என்றும் கண்டறியப்பட்டது.
அந்த மாதிரி மன அமைப்பு இருக்கும் போது இரண்டு மூன்று வருடங்களில்கூட அவர்களால் புற்றுநோயை உருவாக்கிவிட முடியும் என்று சொல்கிறார்கள்.
இந்த கருத்துகளையெல்லாம் பார்க்கும் போது தெளிவான ஒரு உண்மை புலப்படுகிறது. நாம் தான் நம்முடைய உடல் ரீதியான, மன ரீதியான பிரச்சனைகளுக்கும், துக்கங்களுக்கும் மூலக்காரணமாக இருக்கின்றோம்.
மகாவீரர் சொன்னது போல் நமது ஆசைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டிருந்தோமானால் அவை துக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்லாது.
> நாம் தான் நம்முடைய
> உடல் ரீதியா ,மன
> ரீதியான
> பிரச்சனைகளுக்கும்,
> துக்கங்களுக்கும்
> மூலக்காரணமாக
> இருக்கின்றோம்.
ஏனென்றால் பிறக்கும் போதே நமக்கு தேவையான ஆரோக்கியத்தையும், ஆயுளையும், சக்தியையும் எடுத்து வந்திருக்கிறோம். அதனால் துக்கத்திற்கான வாய்ப்பேயில்லை. ஆனால் மற்றவர்களுடைய ஆசைகளை கடன் வாங்கி அதையும் பூர்த்தி செய்ய முயலும் போது பணப்பற்றாக்குறை, மனப்பற்றாக்குறை, உடல் நலப்பற்றாக்குறை இவை அனைத்தும் நம் வாழ்வில் நடக்கத் துவங்கிவிடுகிறது.