KAILASA Library/உன் மனதே சமுதாயம்/ஆசையை எளிதில் அறிந்துகொள்ளலாம்Sign in
உன் மனதே சமுதாயம்

ஆசையை எளிதில் அறிந்துகொள்ளலாம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு அன்பர் கேட்டார், 'நம்முடைய ஆசை எது? சமுதாயம் நம்மீது திணித்த ஆசைகள் எது?' என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டார். இதை ஒரேயொரு உதாரணம் வைத்துத் தெரிந்து கொண்டுவிடலாம். நம்முடைய ஆசைகள் என்பவை பூர்த்தி செய்வதற்கு முன்பு நமக்கு ஒரு சக்தியை அளிக்கும். ஏனென்றால் ஆசைகள் இல்லாமல் உடம்பு இயங்க முடியாது.

அப்படிப்பட்ட ஆசைகளை அடைந்து முடிந்த பிறகு, 'வாழ்ந்தோம்' என்கின்ற திருப்தியை நமக்கு அளிக்கும்.

பூர்த்தி செய்த பிறகு திருப்தியாகவும், பூர்த்தி செய்வதற்கு முன் சக்தியாகவும் நம் சொந்த ஆசைகள் இருக்கும். அவை நாம் வாழ்வில் இருப்பதில் தவறில்லை.

ஆனால் சமுதாயம் நம் மீது திணித்த ஆசைகள், பக்கத்து வீட்டுக்காரர், எதிர்வீட்டுக்காரர், அல்லது அண்ணனையோ, தம்பியையோ பார்த்துவிட்டு ‘நாம் மட்டும் சும்மா இருக்கலாமா?' அவர்கள் அப்படி வாழ்கிறார்களே, என்று ஒப்பிடுவதாலும், பொறாமையினாலும் வரும் ஆசைகள் கடன் வாங்கிய ஆசைகள். அவற்றைப் பூர்த்தி செய்வதற்கு முன் நம்முள் ஒரு எரிச்சலை உருவாக்கும்.

உண்மையில் பார்த்தீர்கள் என்றால்... பக்கத்து வீட்டில் குளிர்சாதனபெட்டி A/c வாங்கிவிட்டால், உங்களுக்கு அது ஒவ்வாமையாக இருந்தாலும்கூட நாமும் வாங்கிவிட வேண்டும் என்று அவசரப்படுவீர்கள். அதை உபயோகிக்காவிட்டால் கூட பரவாயில்லை அந்த மிஷின் வைத்திருக்க வேண்டும் என்கிற ஸ்திரத்தோடு ஆசைகளைப் பூர்த்தி செய்யத் துவங்குவீர்கள்.