மனதை ஆராய்ச்சி செய்யுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நடந்த நிகழ்ச்சி ஒரு அன்பர் என்னிடம் வந்திருந்தார்.“சுவாமி! நான் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும். நீங்கள் ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று கேட்டார்.
நான் சொன்னேன், “அப்பா, கல்யாணம் செய்துவைக்கத்தான் ஆசீர்வாதம் செய்யமுடியும், விவாகரத்து செய்வதற்கு ஆசீர்வாதம் செய்யமுடியாது” என்று சொன்னேன். உடனே அவர், “இல்லை சாமி! நீங்கள் விவாகரத்து செய்ய ஆசீர்வாதம் செய்து தான் தீரணும்” என்றார்.
“அப்பா! விவாகரத்து செய்து விடுவது என்று முடிவு செய்து விட்டீர்கள்... குறைந்தபட்சம் என்ன தான் பிரச்சினை என்றாவது ஆராய்ச்சி செய்யலாம். என்னால் உதவ முடிந்தால் உதவுகிறேன். என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள்.” என்று கேட்டேன்.
“உங்களுக்குத் தெரியாது சாமி, அவள் என்னென்ன கொடுமைப்படுத்தியிருக்கா, என்னைப் படாதபாடு படுத்தியிருக்கா”, என்றார்.
“ஐயா! எடுத்தவுடனேயே பெரிய பெரிய வார்த்தையெல்லாம் உபயோகப்படுத்தாதீங்க. உணர்ச்சிகரமான வசனங்களையெல்லாம் உபயோகப் படுத்தாதீங்க! பிரச்சினை என்ன என்பதை மட்டும் சொல்லுங்கள்” என்றேன்.
அதற்கு அவர், "இன்று எழும்போதே பிரச்சினை (சண்டை) ஆரம்பித்துவிட்டது. சாமி! ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும்போதே நிம்மதியில்லை சாமி!" என்றார்.
"என்னங்கையா பிரச்சினை, இன்றைக்கு என்ன பிரச்சினை?" என்று கேட்டேன். "காலையில் படுக்கையில் காபி கொடுக்கும்போது அவள் வைத்த வேகத்தில் வேஷ்டி எல்லாம் காபியாகிப் போச்சு" என்றார்.
"காபி மேலே சிந்துவதெல்லாம் விவாகரத்திற்கு காரணமாக இருக்கலாமா? அந்தத் துணியையும் உங்கள் மனைவிதானே துவைக்கப்போறாங்க" என்றேன். அவர் "இன்றைக்கு காபியை ஊத்துவா? நாளைக்கு ஆசிடே ஊத்துவா? இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியுமா? சாமி!" என்று சொன்னார்.
உண்மையில், அவர் சொன்னதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் சொன்னேன், "என்னங்கையா, என்ன சொல்றீங்க? உங்கள் மனம் செய்கிற தவறை எண்ணிப்பாருங்க. காபியையும், ஆசிடையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?".
"உங்களுக்கு அதெல்லாம் தெரியாது சாமி! எவ்வளவு நடந்திருக்கிறது... எல்லா கதையையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது... எனக்கு சீக்கிரம் ஆசீர்வாதம் செய்து அனுப்புங்க சாமி!" என்றார். "முழுதாகத் தெரிந்துகொள்ளாமல் நான் ஆசீர்வாதம் செய்யமாட்டேன்" என்றேன்.
உண்மையிலேயே, ஒரு காபி ஊற்றியது, ஒரு காபி தன் மேல் சிந்தியது விவாகரத்திற்கான காரணமாய் இருக்க முடியாது. அவர் சொன்னார், "நான் பத்து வருடமாய் என்னவெல்லாம் பாடுபட்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது"
"ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள், ஆராய்ச்சி செய்வோம்" என்று நான் கேட்டேன்.
"திருமணத்தின் போது ஒரு சின்னப் பானையில் மோதிரத்தைப் போட்டு, கணவன், மனைவியை எடுக்கச் சொல்வார்கள் சாமி! யார் எடுக்கிறார்களோ, அவர்களுக்கு அந்த மோதிரம் இது ஒரு சின்ன விளையாட்டு. யார் மிக வேகமாகச் செயல்படுகிறார்கள் என்று பார்ப்பதற்காக. அதுமட்டுமல்லாமல், அந்தக் காலத்தில் திருமணத்தின்போதுதான் கணவனும், மனைவியும் சந்தித்துக் கொள்வார்கள்.
அவர்கள் இருவருக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதற்காக, ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான சின்ன விளையாட்டு,
"அப்பவே அந்த பானைக்குள் கைவிட்டபோது அவள் நகத்தால் என் கையைக் கிழித்தாள் சாமி!" என்று அவர் சொன்னார்.
மனதில் எல்லாவற்றையும் பதிவு செய்துவைத்திருக்கிறார்.
"அப்பவே என் கையைக் கிழித்தாள்"
அந்த அம்மாவைப் பற்றி ஒரு பெரிய பட்டியல் வைத்திருப்பதனால், அந்த காபி கொட்டியது என்ற அந்த நிகழ்ச்சியை, அவரால் நேரடியாகப் பார்க்கமுடியவில்லை.
இந்த சின்ன விஷயம் எல்லா இல்லத்திலும் நடக்கும், இது ஒரு சாதாரண நிகழ்ச்சி. அதை நேரடியாகப் பார்க்கமுடியவில்லை அவரால். அனாவசியமாகப் பல விஷயங்களைச் சேர்த்து வைத்துவிட்டதால் அந்த எளிமையான, சாதாரண நிகழ்ச்சியை நேரடியாகப் பார்க்கமுடியவில்லை. அவருடைய மனம் அவரையே ஏமாற்றுகிறது. "இன்னைக்கு காபி ஊத்துவா, நாளைக்கு ஆசிட் ஊத்துவா, இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா?" என்று சந்தேகப்படுகின்றது.
அனாவசியமான பயங்களை மனம் உருவாக்கி
வைக்கிறது. "இதை இப்படியே விட்டால்
எங்கேபோய் முடியும் சாமி? இதையெல்லாம்
இப்படியே விடக்கூடாது. இப்பவே
கண்டிச்சாகணும். இப்பவே இதற்கெல்லாம்
பதில் சொல்லியாகணும்" என்றார்.
> அனாவசியமாகப் பல
> விஷயங்களைச் சேர்த்து
> வைத்துவிட்டதால் அந்த
> எளிமையான,
> சாதாரணமான நிகழ்ச்சியை
> நேரடியாகப்
> பார்க்கமுடியவில்லை.
> உங்களுடைய மனம்
> உங்களையே ஏமாற்றுகிறது.
காபிக்கும், ஆசிட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?
இருக்க முடியாது.
ஆனால் நம்முடைய மனம் எதை வேண்டுமானாலும், எதனுடனும் இணைத்துக் காட்டும். பயம் என்று ஒன்று வந்துவிட்டால், எதை வேண்டுமானாலும் எதனுடனும் இணைத்துக் காட்டும்.
இந்தக் கதையைக் கேட்டவுடன் நாம் சிரிக்கிறோம்.
நம்முடைய வாழ்க்கையைச் சற்று ஆழ்ந்து பாருங்கள். நம்முடைய மனம், பல நேரங்களில், பல இடங்களில், இது போன்ற அனாவசியமான பயங்களை நம்முள் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். வந்திருந்த நபர் என்னிடம் பேசுவதற்காக சொல்லவில்லை; உண்மையிலேயே அதை நம்புகிறார்.
மனமார அதை நம்புகிறார். "இன்றைக்கு காபி ஊத்துறவங்க நாளைக்கு ஆசிட்டை ஊத்தமாட்டாங்கனு என்ன நிச்சயம்?" அவருக்குள்ளேயே உண்மையில் அந்த பயம் இருக்கிறது. உண்மையிலேயே அவர் அந்த அளவுக்கு வேதனையில் இருக்கின்றார்.
ஆனால் அவருடைய வேதனை காரணம் இல்லாதது என்று அவருக்குப் புரியவில்லை. நாமும் கூட அதுபோல பல காரணங்களை பல அச்சங்களை நம்முள் சுமந்து கொண்டிருக்கிறோம்.
தேவையே இல்லாத பல துக்கங்களை, நாமும் நம்முள் சுமந்து கொண்டிருக்கிறோம்.
| நம்முடைய மனம், பல நேரங்களில், பல இடங்களில், அனாவசியமான பயங்களை நம்முள் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். | அதுவும் நாம் நிறைய TV, சினிமா, பத்திரிக்கை எல்லாம் படிக்கின்றோம் அவற்றில் நிறைய விபத்துக்கள் பற்றியெல்லாம் செய்திகள் வருகிறது இல்லையா, அதையெல்லாம் பார்த்துவிட்டு, ஒரு அரை மணிநேரம் கணவர் வீட்டுக்கு வரவில்லை என்றாலும் என்ன செய்கின்றோம்? வாசலுக்கு சென்று நின்று முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்துவிடுவோம். |
அரை மணிநேரத்திலெல்லாம் நமக்கு இரத்த அழுத்தம் ஏறிவிடும். "என்ன ஆச்சோ? ஏது ஆச்சோ? ஆபீசுக்கு போன் பண்ணினேன். எடுக்கவில்லையே? கிளம்பிட்டாருனு சொன்னாங்களே! இந்த செல் போன் வேற இப்பத்தான் வேலை செய்யமாட்டேங்கிறதே"... என்று புலம்ப ஆரம்பித்துவிடுவோம். ஒரு அரை மணிநேரம் தாமதம் என்றாலும் நம் மனம் இல்லாத கற்பனையெல்லாம் செய்யும்.
இல்லாத காரணங்களையெல்லாம் உருவாக்கும், இதற்கு நாம் அளவுக்கு மீறி உள்வாங்கி வைத்திருக்கும் பயங்கள்தான் உண்மையான காரணம்.