ஒரு ஜென் கதை...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இது ஜென் ஞானியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. பொதுவாக ஞானிகள் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர்கள், அச்சத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்து உண்டு.
அந்த ஜென் ஞானி ஒரு நாள் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று குறுக்கே வந்தது சீடர்கள் பயந்து போய் எப்படி ஓடினார்களோ அதை போலவே இவரும் ஓடினார். சற்று தூரத்தில் சென்று எல்லோரும் நின்றார்கள்.
சீடர்கள் கேட்டார்கள், “குருவே! உங்களை இத்தனை நாள் ஞானி என்று நினைத்திருந்தோமே? நீங்களும் எங்களைப் போல் ஓடி வந்தீர்களே?” அப்போது அந்த ஞானி சொல்கிறார்... “அப்பா... உனக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் ஓடுவதும், ஓடாது இருப்பதும் இல்லை. இங்கு வந்து நின்ற பிறகு உன்னுடைய இதயம் ‘பட பட’ என்று அடித்துக்கொண்டிருக்கிறது. எனக்கு அப்படியில்லை” என்றார்.
“உடலிலான பயம். அதாவது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிற பயம் உனக்கும் உண்டு, எனக்கும் உண்டு. ஆனால் அந்த பயத்தினால் உருவான மனரீதியான பாதிப்பு எனக்கு இல்லை. அது உனக்கு உண்டு” என்றார்.
அதாவது ஒரு பாம்பு வரும் போது நீங்கள் ஓடுவது போல் அவரும் ஓடினார் அவர் மிக அழகாகச் சொல்கிறார். “நீங்கள் ஓடியது போல் நானும் ஓடினேன். ஆனால் வருவதற்கு முன் பாம்பு வருமா? பாம்பு வருமா? என்ற பயம் எனக்கு இல்லை. வந்தபின் இப்படி ஆகிவிட்டதே? ஒருவேளை என்னைக் கடித்துவிட்டால்... என்ன ஆகியிருக்கும் என்ற பயமும் எனக்கு இல்லை” என்றார்.
“ஒருவேளை இப்படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அப்படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கவலைப்படும் எண்ணம் எனக்கு இல்லை” என்று சொல்கிறார். சாதாரண மனிதர்கள் கடந்த காலத்திலும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். நிகழ்காலத்திலும் பயப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எதிர்காலத்திலும் ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.
ஞானிகள் அந்த வேளையில் எப்படி இயங்க வேண்டுமோ அவ்வாறு என்று இயங்குகிறார்களே தவிர எதிர்காலத்திலோ, கடந்த காலத்திலோ அவர்கள் தங்கள் சக்தியைச் செலவு செய்வதில்லை. அவர் மிக அழகாகச் சொன்னார். (real Fear) (நிஜமான பயம்), Pshycalogical Fear (மனரீதியான பயம்)-என்று இரண்டு இருக்கிறது.
சாதாரண அச்சங்கள் நம் பாதுகாப்பற்காக உயிர்காக்கவும், உடல் காக்கவும் நமக்குள் இருக்கின்ற அச்சங்கள், அவை தவறானவை அல்ல. அவை இருந்தால் மட்டும்தான் உங்கள் உடலையும், உயிரையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
ஒரு வீட்டில் தீ விபத்து நடக்கிறது என்றால், “நான் அச்சமில்லாதவன் என்னைக் கடவுள் பார்த்துக் கொள்வார்” என்று வீட்டிற்குள்ளேயே இருப்பது புத்திசாலித்தனம் அல்ல. அதிலிருந்து உடலைக் காத்துக் கொள்வதற்காக முறையான பாதுகாப்பு வேலைகளைச் செய்தலே புத்திசாலித்தனம் ஆகும்.