KAILASA Library/உன் மனதே சமுதாயம்/உளவியல் ஆராய்ச்சி முடிவுSign in
உன் மனதே சமுதாயம்

உளவியல் ஆராய்ச்சி முடிவு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்கள் மனம்தான் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் சமுதாயம். இன்னொரு அற்புதமான உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம் பற்றி ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் சொல்வது என்னவென்றால், நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களில் இரண்டு சதவீதம் தான் நாம் உள்வாங்குகிறோம். நம்மைச் சுற்றி 100 விஷயங்கள் நடந்து கொண்டிருந்தால் அவற்றில் 2 விஷயங்களைத்தான் உள்வாங்குகிறோம்.

அந்த இரண்டு விஷயங்களிலும் கூட நமக்குத் தேவையான விஷயத்தை மட்டும்தான் உள்வாங்குகிறோம். ஒருவரைப் பற்றித் தவறான முடிவு எடுத்துவிட்டீர்கள் என்றால்... அவர் என்ன நல்லது செய்தாலும், அவரைத் தவறான கண்ணோட்டத்திலேயே பார்ப்போம்.

வாதத்தை (Argument) கேட்டபன் தீர்ப்பு (Judgument) கொடுப்பது ஒருவகை. தீர்ப்பை முடிவு செய்துவிட்டு வாதங்களை சேகரிப்பது இன்னொரு வகை.

இரண்டு விஷயம் இருக்கிறது. எப்போது நீங்கள் ஒருவரைப் பற்றித் தவறான முடிவு எடுத்துவிட்டீர்களோ அவர் என்ன நல்லது செய்தாலும் நாம் அதில் குதர்க்கம் மட்டும்தான் கண்டுபிடிக்க முயற்சிப்போம். அதனுடைய சத்தியம் நமக்குப் புரியாது. ஏதாவது ஒரு நோக்கத்தோடு தவறு கண்டுபிடிப்போமே தவிர, அவரிடம் இருக்கும் நல்ல விஷயத்தை எடுத்துக் கொள்ளமாட்டோம்.

அதே போல் ஒருவர் 'நல்லவர்' என்று முடிவு செய்துவிட்டோம் என்றால்... அவர் எவ்வளவு தவறு செய்தாலும் நமக்குத் தெரியாது. தீர்ப்பிடுதல் (Judgument) என்று இதனைச் சொல்வதுண்டு.

ஏற்கனவே முடிவு செய்து அதன்படி நடப்பது.இந்த முடிவு மனரீதியாக எடுப்பது. நம்முடைய மன அமைப்பு நடக்கிற விஷயத்தை ஏற்றுக் கொள்வதில்லை. நாம் பார்க்கின்ற கோணத்தில் நாம் விஷயத்தை எடுத்துக் கொள்கிறோம்.

வேதாந்தத்தில் சொல்வார்கள் "திருஷ்டி - ஸ்ருஷ்டி" என்று.

பார்ப்பதை வைத்து நிகழ்ச்சியை உருவாக்குதல். நாம் பார்க்கின்ற கோணத்திலே பார்த்து அதனால் நாம் உருவாக்கும் எண்ணங்கள். பச்சைக்கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் எல்லாமே பச்சையாகத்தான் தெரியும். மாயக்கண்ணாடி போட்டுப் பார்த்தால் இந்த சமுதாயமே நம்மை வஞ்சிப்பது போல் தான் தெரியும். உங்கள் மனம் நேர்மறையாக இருந்தால் இந்த உலகமே நேர்மறையாகத் தெரியும்.

உங்கள் மனம் எதிர்மறையாக இருந்தால், இந்த உலகமே எதிர்மறையாகத் தோன்றும். கிருஷ்ணர் ஒருமுறை தர்மராஜாவைப் பார்த்து, "தர்மராஜாவே! உலகத்தில் இருக்கும் யாராவது ஒரு கெட்டவரைப் பார்த்து அழைத்து வா" என்றார். துரியோதனனைப் பார்த்து, "நீ யாராவது ஒரு நல்லவரைக் கண்டுபிடித்து அழைத்து வா" என்றார்.

இரண்டு பேரும் வெறும் கையோடு திரும்ப வந்தார்கள்.

தர்மராஜா ஏற்கனவே அவர் மனதாலே நல்லவர் என்பதனால் பார்ப்பவர் எல்லாம் அவருக்கு நல்லவர்களாகவே தெரிந்தார்கள்.

"கிருஷ்ணா! நான் எப்பேர்ப்பட்ட கெட்டவர்களிடம் கூட ஒரு சில நல்ல குணத்தைப் பார்த்தேன். அதனால் யாரையும் கெட்டவர் என்று சொல்ல முடியவில்லை. அதனால் நான் வெறும் கையோடு வந்திருக்கிறேன்" என்று சொன்னார்.

துரியோதனன் சொன்னான், "கிருஷ்ணா! உலகம் எப்பேற்பட்ட நல்லவர் என்று சொல்கிறவர்களிடம் கூட ஒரு சில கெட்ட குணம் இருப்பதை நான் பார்த்தேன். அதனால்தான் நான் வெறும் கையோடு வந்திருக்கிறேன்" என்று சொன்னான்.

இரண்டு பேருமே வெறும் கையோடு வந்து சேர்ந்தார்கள். தர்மராஜாவால் ஒரு கெட்டவனைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. துரியோதனனால் எந்தவொரு நல்லவனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் அவர்களுடைய மனதை வைத்துத்தான் சமுதாயத்தை எடைபோடுகிறார்கள்.

ஏனென்றால் உங்கள் மனதே சமுதாயம். உங்கள் மனம்தான் சமுதாயத்தை உருவாக்குகிறது. உங்கள் மனதின் போக்கினால்தான் சமுதாயம் நீங்கள் நினைப்பது போல் தோற்றமளிக்கிறது.