KAILASA Library/உன் மனதே சமுதாயம்/பரிசோதித்து பாருங்கள்Sign in
உன் மனதே சமுதாயம்

பரிசோதித்து பாருங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

எங்கெல்லாம் சமுதாயம் உங்களுக்குள் ஆசையைத் திணிக்கிறதோ அங்கெல்லாம் விழிப்புணர்வோடு அந்த ஆசையை நிறுத்துங்கள்.

எங்கெங்கெல்லாம் சமுதாயம் உங்களுக்குள் அச்சங்களை திணிக்கிறதோ, அங்கேயும் விழிப்புணர்வோடு அந்த அச்சங்கள் உள்ளே வராமல் தடுத்து நிறுத்துங்கள். மூன்றாவதாக இந்த சமுதாயமே உங்கள் மனக் கற்பனையால் நீங்கள் உருவாக்கிய மாயை என்று உணருங்கள்.

இந்த மூன்று கருத்துக்களை மட்டும் இன்றைய செய்தியாக உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். மற்றவர் உங்களைப் பார்த்து என்ன நினைக்கிறார் என்பதற்காக வாழாதீர்கள். ஏனென்றால் அவர் உங்களைப் பார்த்து 'நீங்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மற்றவர்களுக்காக உங்கள் வாழ்க்கையில் ஆசைகளையும், அச்சங்களையும் பெருக்கிக் கொள்ளாதீர்கள்.

உங்கள் மனம்தான் இந்தச் சமுதாயத்தை உருவாக்கி, மாயையை உருவாக்கி, அதில் உங்களைச் சிக்கவைத்து, மயக்கி துக்கத்திற்கு ஆளாக்குகிறது. உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தான் பொறுப்பு.

இதனால் இந்த மூன்று கருத்துக்கள். உங்களால் இந்த சமுதாயம் மீண்டும் மீண்டும் உங்களுக்குள் செலுத்தும் ஆசைகளை அனுமதிக்காதீர்கள். உங்களுக்குள் சமுதாயம் மீண்டும் மீண்டும் செலுத்தும் அச்சங்களை அனுமதிக்காதீர்கள்.

இன்னொன்று, நாமெல்லாம் கேட்பது உண்டு, இந்த சமுதாயத்தைப் பார்த்து நாமெல்லாம் கற்றுக்கொள்ளவில்லையென்றால் நாமெல்லாம் எப்படி வளர்வது?.

நீங்கள் உங்களை உங்களோடு மட்டும் ஒப்பிட்டு வளருங்கள். இன்று 10 ரூபாய் அளவிற்கு சாதனை செய்திருந்தால் நாளை 11 ரூபாய் அளவிற்கு வளருங்கள். உங்களோடு உங்களை ஒப்பிட்டு உங்கள் வளர்ச்சியை உருவாக்குங்கள்.

இந்த மூன்றே மூன்று கருத்துக்களை மட்டும் உங்கள் வாழ்க்கையின் பாகமாக மாற்றிக்கொள்ளுங்கள். சமுதாயம் உங்கள் மீது திணிக்கும் ஆசைகளை அனுமதிக்காதீர்கள். உங்கள் மனம்... இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி காண்பிக்கும்.

உங்களை நீங்களே வருத்திக் கொள்வதிலிருந்து... இந்த மாயையின் படியினில் சிக்கிக் கொள்ளாமல் தடுத்து நிறுத்தி உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மனம் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிக் காட்டி நீங்கள் வாழ்க்கையை துக்கமாக்குவதை தடுத்து நிறுத்துங்கள். இந்த மூன்று கருத்துக்களையும் உள்வாங்கி நீங்கள் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துங்கள்.

நீங்கள் இந்த சமூகத்திற்கும், உங்கள் வாழ்க்கைக்கும் அப்பாற்பட்ட ஆன்ம சக்தி என்று உணருங்கள். இந்த ஞானக் கருத்துக்கள் உங்களுக்குள் சென்று உங்களுக்குள் தியானமாக மலர்ந்து, ஆனந்தம் உங்களுக்குள் நிறைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

இந்த ஞானக்கருத்துக்களோடு தியானத்தை உங்கள் வாழ்க்கையில் சேர்த்தீர்களானால் ஆனந்தம் உங்கள் வாழ்க்கைத் தன்மையாக மாறிவிடும்.

நம்முடைய ஆனந்த ஸ்பூரண நிகழ்ச்சியில், சமுதாயம் நமக்குள் செலுத்தும் ஆசைகளை எப்படிக் கையாள்வது? அதை எப்படித் தடுப்பது? என்று தனியாக ஒரு வகுப்பே உண்டு.

‘விசுத்தி’ என்ற சக்கரத்திற்காக எப்படி நம்மைப் பொறாமையிலிருந்தும், எதிர்பார்ப்பில் இருந்தும் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வது? என்று ஒரு தனி வகுப்பையே நடத்துவோம். ஏனென்றால் வாழ்க்கையின் பாடம் அது.

அதேபோல் ‘சுவாதிஸ்டான’ சக்கரத்தைப் பற்றிய பாடத்தில் சமுதாயம் நம்மீது ஏற்படுத்தும் பயங்களை நம்மீது திணிக்கப்படும் பயங்களை எப்படிக் கையாள்வது? அவைகளில் இருந்து எப்படித் தப்பிப்பது என்ற தெளிந்த ஒரு பாடத்தையும் தியானத்தையுமே செய்வோம்.

ஏனென்றால் இவை வாழ்க்கையின் அடிப்படைப் பாடங்கள். இந்த அடிப்படைப் பாடங்களையும் தியானங்களையும் உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாக மாற்றுங்கள். ‘தியானம் எனக்கல்ல’ என்று நினைக்காதீர்கள்.

தியானம் உங்களுக்காகவே. ஒரே ஒருமுறை இந்த ஆனந்த ஸ்பூரண நிகழ்ச்சியை அனுபவித்தீர்களானால் தியானம் உங்களுக்காகதான். தியானத்தில் ஈடுபடும் வரைதான் என்னால் தியானம் செய்ய முடியாது, நான் முயன்று பார்த்துவிட்டேன், ‘எனக்கு தியானம் சரியாக வராது’ என்றெல்லாம் நம் மனம் பிதற்றிக் கொண்டிருக்கும்.

ஒருமுறை ஆழ்ந்து ஈடுபட்டுப் பாருங்கள். ஒருமுறை உங்கள் வாழ்க்கையில் பரிசோதனை செய்து பாருங்கள். அது எந்த அளவுக்கு நடைமுறைக்கு சாத்தியமாக இருப்பதையும் உங்கள் வாழ்க்கையில் ஆனந்தத்தை உருவாக்குவதையும் நீங்களே நேரடியாகக் காண்பீர்கள்.

இந்தத் தெளிந்த நித்ய கருத்துக்கள் உங்களுக்குள் சென்று, தியானம் உங்களுக்குள் நடந்து, ஆனந்தம் உங்களுக்குள் மலரட்டும் என்று ஆசீர்வதித்து, நித்யானந்தத்திலிருந்து, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தமாகிட, ஆசீர்வதித்து முடிக்கின்றேன்.

ஆனந்தமாக இருங்கள்.

தெட்சிணாமூர்த்தி திருவுருவச் சிலை

எங்கெல்லாம் சமுதாயம் உங்களுக்குள்
ஆசையைத் திணிக்கிறதோ
அங்கெல்லாம், விழிப்புணர்வோடு அந்த
ஆசையை நிறுத்துங்கள்.

எங்கெங்கெல்லாம் சமுதாயம்
உங்களுக்குள் அச்சங்களை
திணிக்கிறதோ, அங்கேயும்
விழிப்புணர்வோடு அந்த அச்சங்கள்
உள்ளே வராமல் தடுத்து நிறுத்துங்கள்.

மூன்றாவதாக இந்த சமுதாயமே உங்கள்
மனக்கற்பனையால் நீங்கள் உருவாக்கிய
மாயை என்று உணருங்கள்.

இந்த மூன்று கருத்துக்களை மட்டும்
இன்றைய செய்தியாக உங்கள்
வாழ்க்கையில் கடைப்பியுங்கள்.

ஒரு முறை உங்கள் வாழ்க்கையில்
பரிசோதனை செய்து பாருங்கள். அது
எந்த அளவுக்கு நடைமுறைக்கு
சாத்தியமாக இருப்பதையும் உங்கள்
வாழ்க்கையில் ஆனந்தத்தை
உருவாக்குவதையும் நீங்களே
நேரடியாகக் காண்பீர்கள்.

  • பரமஹம்ஸ நித்யானந்தர்

Printed & Published by Nithyananda Dhyanapeetam

(Dhyanaeeta Charitable Trust) Nithyanandapuri, Kallugopahalli, Off Mysore Road, Bidadi - 562 109, Bangalore District, Karnataka, INDIA. Ashram : +91-80-7202084, PRO/Secretary : 9448058598 [email protected] www.nithyananda.org

Ebook ISBN 979-8-88572-339-8