விவேகானந்தரின் வீரவாரிசுகளே...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கின்றார்... “குறிக்கோள் இல்லாத ஒரு மனிதன் 100 தவறுகள் செய்வானென்றால் குறிக்கோளோடு வாழுகின்ற ஒரு மனிதனால் 2 தவறுக்கு மேல் செய்யவே முடியாது” என்று.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்! உங்களை அறியாமல் அநாவசியமாக சக்தியை வீணாக்க மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்கும் பொழுது அதைத் தாண்டி, உங்களுடைய சக்தியை அனாவசியமாக சீரழிக்க மாட்டீர்கள்.
குறிக்கோள் இல்லாதவர்கள் கண்ணில் பார்க்கின்ற துறையில் எல்லாம் கால்வைத்து தன்னுடைய பொறுப்பை உணராமல் மீண்டும் மீண்டும் தன்னுடைய வாழ்க்கைக்கும் இந்த உலக வாழ்க்கைக்கும் மிகப்பெரிய இழிவை, இழிவுத் தன்மையை தந்து கொண்டே இருப்பார்கள்.
வாழ்க்கையை வாழ வாழ உங்களுக்குள் சக்தி பொங்குமானால் நீங்கள் இளைஞர்கள். வாழ்க்கையை வாழ வாழ நீங்கள் மந்தத் தன்மையை நோக்கிச் செல்வீர்களானால் நீங்கள் வயோதிகர்கள்.
இளைஞர்களின் முதல்
பொறுப்பே தம்முடைய
வாழ்க்கையில் தாம்
சாதிக்கக்கூடிய,
தம்முடைய வாழ்க்கை
முறையைப் பற்றி
அடிப்படையாகத் தெரிந்து
கொள்வதுதான்.
“நீங்கள் இளைஞர்களா? வயோதிகர்களா? என்பதை இதை வைத்துத்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.” உங்களுடைய வயது உங்களுடைய சூழ்நிலையை விடவும், நீங்கள் இளைஞர்களா,? வயோதிகர்களா? என்பதை உங்கள் மனநிலைதான் முடிவு செய்யும்.
“வாழ்க்கையை வாழ வாழ தினமும் வாழ்வதற்கான சக்தியும், உற்சாகமும் உங்களுக்குள் பொங்குகின்றதோ அப்பொழுது நீங்கள் இளமைத் தன்மைக்குள் நுழைகின்றீர்கள். எப்பொழுது வாழ்க்கையை வாழ வாழ நாளுக்கு நாள் மிகவும் மனச்சோர்வும் சோம்பலும் அதிகரித்து மந்தத் தன்மைக்குள் நுழைகிறீர்களோ அப்பொழுது நீங்கள் முதுமையை நோக்கிப் பயணிக்கின்றீர்கள்”.
எப்பொழுது “வாழ்க்கையை வாழ வாழ தினமும் வாழ்வதற்கான சக்தியும், உற்சாகமும் உங்களுக்குள் பொங்குகின்றதோ அப்பொழுது நீங்கள் இளமைத் தன்மைக்குள் நுழைகின்றீர்கள்.
எப்பொழுது வாழ்க்கையை வாழ வாழ நாளுக்கு நாள் மிகவும் மனச்சோர்வும் சோம்பலும் அதிகரித்து மந்தத் தன்மைக்குள் நுழைகிறீர்களோ அப்பொழுது நீங்கள் முதுமையை நோக்கிப் பயணிக்கின்றீர்கள்”.