KAILASA Library/சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு/இளமை... முதுமை...Sign in
சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு

இளமை... முதுமை...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மரRESTOணத்தை நோக்கிய பயணம் முதுமை.

வாழ்வை நோக்கிய பயணம் இளமை.

நம்முடைய வாழ்க்கைப் பொதுவாக மரணத்தை நோக்கியதாகத்தான் இருக்கின்றது. மரணத்தை நோக்கியதாக இருக்கும் வாழ்க்கையை, வாழ்க்கையை நோக்கியதாக அளப்பறிய வாழ்வுச் சக்தியை நோக்கியதாகத் திருப்புவோமானால் அது இளமையை நேராக்குவது மட்டுமல்லாமல் ஆன்மீக வாழ்க்கையாகவும் நமக்குள் மாறிவிடும். இல்லையென்றால் ஆசையாலும், அச்சத்தாலும் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள். நாளுக்குநாள் நீங்கள் முதுமையைத்தான் சேர்த்துக் கொண்டிருப்பீர்கள்.

மரணத்தை நோக்கித்தான் முன்னேறிக் கொண்டிருப்பீர்கள். அப்படியில்லாமல் அன்பினாலும், நன்றியினாலும், கருணைப் பெருக்கினாலும் உங்கள் வாழ்க்கையை உங்களால் கடக்க முடிந்ததென்றால் நாளுக்குநாள் இளமையை நோக்கி நீங்கள் மலர்ந்து கொண்டிருப்பீர்கள்.