ஒரு முடிவு... ஒரு வாய்ப்பு...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒவ்வொரு மனிதனுக்கும் இளமையிலேயே குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது, எந்த விதமான ஆசை மற்றும் அச்சத்தின் அழுத்தம் இல்லாமல் அவனுக்குள் அவன் முழுகி, தன்னுடைய வாழ்க்கையை எந்தத் துறையில் தான் வாழ்ந்தால் முழுமையான மலர்ச்சி அடைவோம் என்கின்ற ஒரு சோதனையைச் செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்த வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் ஒரு வருடம் தனக்குள் மூழ்கிச் சோதனை செய்து கொள்ளும் தன்னைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைக்காத ஒரு மனிதன் மற்ற 99 ஆண்டுகளையும் வீணடிக்கின்றான்.
"ஒரு ஆண்டை தனக்காக எடுத்துக் கொண்டு, தன்னைப்பற்றி ஒரு ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து, தன்னைப் பற்றித் தெளிந்த சுயசோதனை செய்து, தன்னை உணர்ந்து, தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஒரு அருமையான வகுப்புதான் ஆனந்தயோகம்."
அந்த ஒரு வருட வாழ்க்கையை நிறைவிலும் கழிக்கின்றான். வேறொன்றுமில்லை. பெங்களூர் நெடுஞ்சாலையில் செல்வதா? அல்லது சென்னை நெடுஞ்சாலையில் செல்வதா? என்று முடிவெடுப்பதைப்போன்றது... நீங்கள் அந்த வண்டியைத் திருப்புகின்ற ஒரு கணம்தான் எந்த இடத்திற்கு நீங்கள் போய்ச் சேரப்போகின்றீர்கள் என்கின்ற மிகப்பெரிய ஒரு விளைவை ஏற்படுத்தும்.
எந்த இடத்தில் போய்ச் சேரப் போகின்றீர்கள் என்பது விளைவு. அந்த விளைவை ஏற்படுத்துகிற அடிப்படையான காரணம் நீங்கள் எடுக்கின்ற இந்த ஒரு முடிவுதான். மற்றபடி பயணம் எந்தப்பக்கமாக இருந்தாலும் ஒன்றுதான். எடுக்கின்ற ஒரு சின்ன முடிவுதான் விளைவையே மாற்றுகின்றது. அதேபோல ஒவ்வொரு இளைஞர்களுக்கும் அடுத்த 50 ஆண்டுகாலம், 60 ஆண்டுகாலம் வாழ்க்கைப் பயணம் என்பது ஒன்றுதான். ஆனால் எடுக்கின்ற திசைதான் விளைவை முடிவு செய்யப்போகின்றது
என்னைப் பொறுத்தவரை "ஒவ்வொரு இளைஞனும் ஓராண்டு காலமாவது தன்னைப்பற்றி ஆழ்ந்த சுயசோதனை செய்து கொண்டு எந்தத் துறையில் படிப்பதன் மூலம், எந்தத் துறையில் வேலை செய்வதன் மூலம், எந்தத் துறையில் இயங்குவதன் மூலம் தான் முழுமையாக வாழ்க்கையில் மலர முடியும், எந்தத் துறையில் இயல்பாகவே நம்முடைய சக்தி முழுமையாகப் பொங்குகின்றது" என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன்.
இதைத் தெரிந்து கொள்ளுவதற்கான ஓராண்டுகால வாய்ப்புதான் 'ஆனந்தயோகம்' எனும் ஒரு வருட வாழ்க்கை கல்வி.