KAILASA Library/சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு/நீங்களும் இளைஞர்தான்!Sign in
சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு

நீங்களும் இளைஞர்தான்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பொதுவாகவே ஒவ்வொரு நாளுமே நம்முடைய
வாழ்க்கை ஆசையினாலும் அச்சத்தினாலும் தான்
அலைகழிக்கப்படுகின்றது.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்புச்சுமை! அதற்கப்பாற்பட்டு வாழ்க்கையைப் பற்றிய ஒரு பயம்!

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு வாழ்க்கையையே ஒரு மிகப்பெரிய கனவாகக் காட்டும் கலை உலகம்.

ஒவ்வொரு இளைஞனும்
ஓராண்டு காலமாவது
தன்னைப்பற்றி ஆழ்ந்த
சுயசோதனை செய்து கொண்டு
எந்தத் துறையில் படிப்பதன்
மூலம், எந்தத் துறையில்
வேலை செய்வதன் மூலம்,
எந்தத் துறையில் இயங்குவதன்
மூலம் தான் முழுமையாக
வாழ்க்கையில் மலர முடியும்,
எந்தத் துறையில் இயல்பாகவே
நம்முடைய சக்தி முழுமையாகப்
பொங்குகின்றது.

இந்தக் கனவுகளை உண்டு அந்தக் கனவுகளை நோக்கி வேக வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆர்பாட்டமான வாழ்க்கை. ஆரவாரமான வாழ்க்கை!

இதன் படியிலே சிக்கித் தன்னுடைய உண்மையான வாழ்க்கை எது? நான் எதன் மூலமாக மலர முடியும்? என்கின்ற தெளிவு இல்லாமல் நிறைவு இல்லாமல் இளைஞன் தன்னுடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கின்றான்.

அந்தோ! வீணடித்து முடித்தபிறகுதான் திடீரென விழித்துக் கொண்டு, "ஐயஹோ! வாழ்க்கையை வீணடித்து விட்டோமே" என்று வேதனைப்படுகின்றான்.

தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்! ஒவ்வொரு இளைஞனும், நீங்கள் உடலால் 30 வயதுக்கு குறைந்தவராக இருந்தால், உள்ளத்தால் இன்னமும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உற்சாகம் உடையவராக இருந்தால், நீங்கள் இளைஞர்.

உடலால் 30 வயதுக்கு குறைந்தவர்களும், உள்ளத்தால் வாழ்க்கையை வாழ வேண்டும் என்கின்ற ஸ்திரம், ஒருவேளை உடலால் 30 வயதுக்கு மேற்பட்டு உள்ளத்தில் அந்த வாழ்க்கையை வாழ வேண்டும், மாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற, வாழ்க்கையை ஆனந்தமயமாக நிறைக்க வேண்டும் வாழ்க்கையை ஆனந்தத்தை நோக்கி முன்னேற்ற வேண்டும் என்கிற உந்து சக்தி இருந்தால் நீங்களும் இளைஞர்கள்தான்!

நாம் நினைக்கலாம்! ஓராண்டு வீணாய்ப்போகுமே. படிப்பு வீணாய்ப்போகுமே, சமூகத்தில் பதவி வீணாய்ப்போகுமே அந்தஸ்து வீணாய்ப்போகுமே, என்று. ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள் இந்த ஓராண்டில் தெளிந்த முடிவை எடுத்தீர்களானால் நீங்கள் இப்போது சாதிப்பதை விட 100 பங்கு அதிகம் சாதித்து விடுவீர்கள். காரணம் உங்களுடைய துறையாக இருந்தால் உங்களுக்குள் சாதிக்க சாதிக்க சக்தி பொங்கும்.