KAILASA Library/சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு/சாதிக்கும் சக்திSign in
சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு

சாதிக்கும் சக்தி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இளைஞர்களின் பொறுப்பைப் பற்றியும், பொறுப்பின்மையைப் பற்றியும் நாம் ஆராய வேண்டும். பொறுப்பு என்பது முழுவதுமாகத் தனிமனிதன் சம்பந்தப்பட்டது. தன்னுடைய தனிமனித எழுச்சி சம்பந்தப்பட்டது.

“ஒவ்வொரு மனிதனும் தான் யார்? எந்தத் துறையில் சென்றோமானால் தன்னுடைய வாழ்க்கையைத் தன்னால் மலர வைத்துக்கொள்ள முடியும், எந்தத் துறையில் செல்வதின் மூலம் தன் சக்தியை மேலும், மேலும் தனக்குள் பெருக்கிக் கொள்ளமுடியும் என்பதை உணர்வதுதான் அடிப்படையான பொறுப்பு”.

பொறுப்பு என்பது எந்தத் துறையில் செல்வதன் மூலம் தனக்கு அபாரமான சக்தி பொங்குகின்றது, எந்தத் துறையில் செல்வதன் மூலம் தனக்குள் முழுமையான சக்தி மலருகின்றது, எந்தத் துறையில் செல்வதின் மூலம் தன் உயர்வுக்கு, சக்தி வேருக்குச் செல்கின்றோம் என்பதைத் தெரிந்துகொள்வதுதான்.

“ஒவ்வொரு மனிதனும் தான் யார்? எந்தத் துறையில் சென்றோமானால் தன்னுடைய வாழ்க்கையை தன்னால் மலர வைத்துக்கொள்ள முடியும், எந்தத் துறையில் செல்வதின் மூலம் தன் சக்தியை மேலும், மேலும் தனக்குள் பெருக்கிக் கொள்ளமுடியும் என்பதை உணர்வதுதான் அடிப்படையான பொறுப்பு”.

நாம் எந்தத் துறையில் நுழைந்தால் நம்முடைய முழுமையான சக்தி மலருகின்றது. நாம் எந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தால் நம்மால் இனிமையாக இயங்க முடிகின்றது, நம்முடைய வாழ்க்கை எந்தத் துறையில் மலரும் என்பதைத் தெரிந்துகொள்வதுதான். இளைஞர்களின் முதல் பொறுப்பு. இளைஞர்களின் முதல் பொறுப்பே தம்முடைய வாழ்க்கையில் தாம் சாதிக்கக்கூடிய, தம்முடைய வாழ்க்கை முறையைப் பற்றி அடிப்படையாகத் தெரிந்து கொள்வதுதான்.