ஏன் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மிக ஆழமான கருத்து, புத்தனே 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஞானம் எய்தினாராம். ஆனால் அவருடைய சீடர்கள் அனைவரையும் இளைஞர்களாகவே தேர்ந்தெடுக்க முயற்சி செய்தார்.
புத்தரிடம் ஒருவர் கேட்கிறார், “ஐயா! நீங்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஞானமடைந்தீர்கள்! ஆனால் நீங்கள் இளைஞர்களை மட்டும் உங்கள் சீடர்களாகத் தேர்ந்தெடுக்கிறீர்கள்! இளைஞர்களை மட்டுமே இந்த ஆன்மீக வாழ்க்கைக்குக் கொண்டு வருகின்றீர்களே, காரணம் என்ன?” என்று. அதற்கு அவர் “வயது முதிர்ந்தவர்களால் ஞானமடைவதற்குத் தேவையான முழு சக்தியையும் போடுவது கடினம்” என்று சொன்னார்.
அதுபோல் மனிதனின் மனமும், மனித மனத்தின் எண்ண ஓட்டங்களும் ஒரு முறை உடைந்து இறைந்துவிடுமானால், மனிதனின் மனோசக்தி ஒரு முறை உடைந்து, இறந்து விடுமானால், அதை மீண்டும் ஒரு கூட்டிற்குள் எடுத்து வருவதும், அதை மீண்டும் ஒரு முட்டையாகக் கட்டுவதும் மிகவும் கடினமான விஷயம்.
எந்தத் துறையை எடுத்தீர்களானாலும் அந்தத் துறைக்குள் தனது சக்தியை இளமைக் காலத்தில் செலுத்துகிற ஒரு மனிதன் மட்டும்தான் அந்த துறையின் உச்சத்தை எட்டிப் பிடிக்கமுடியும். அந்தத் துறையின் இறுதியைத் தொடமுடியும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இளமைக்காலம் அற்புதமான காலம்.
இளைஞர்களின் ஆற்றல்...வாழ்க்கையின் சாரம் இளமைக்காலம் அந்தக் காலத்தில் மட்டும்தான் “உடல் ரீதியான அபாரமான சக்தியும், உணர்வு ரீதியான அற்புதமான பலமும்,
இன்னொரு உயிரை உருவாக்கக்கூடிய சக்தி முறையாக உபயோகப்படுத்தப்படும் பொழுது, அதை முறையாக நாம் நம்முடைய வாழ்க்கைக்குள் கொண்டு வரும்பொழுது, இன்னொரு உயிரை மட்டுமல்லாமல் நம்மையும்கூட ஒரு புது மனிதனாக உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த சக்தி நம்மையும் ஒரு புது மனிதனாக உருவாக்கி விடும்.
ஆன்மீக ரீதியாக இயங்கும் ஆத்ம சக்தி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் முழுமையாக இருக்கின்றது.” மனிதர்கள் முதுமை அடைந்த பின்பு அவர்களுக்கு அனுபவம் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் எத்தனை அனுபவம் அவர்கள் கையில் இருந்தாலும், தன்னுடைய வாழ்க்கையைத் திருத்திக்கொண்டு வாழ்வதற்கு வாழ்க்கை இருக்காது. அந்த வாழ்க்கை அவர்களுக்கு இருப்பதில்லை.
முக்கியமாக, அடிப்படையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இளைஞர்கள் ஆயிரம் தவறுகளுடன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும், சாதிக்கத் தேவையான சக்தி அவர்களிடம் இருக்கின்றது.
“இளைஞர்களே,
மிகத்தெளிவாகத் தெரிந்து
கொள்ளுங்கள்! உங்கள் முன்
மிகப்பெரிய வாய்ப்பு
இருக்கின்றது. நீங்கள்
முறையாக வாழ்வதாக
இருந்தாலும் சரி, முறை தவறி
வாழ்வதாக இருந்தாலும் சரி!
உங்களுக்கு முன் வாழ்க்கை
இருக்கின்றது. உங்களுக்கு முன்
வாழ்க்கை என்கின்ற மிகப்
பெரிய வாய்ப்பு
காத்திருக்கின்றது”.
ஆனால் வாழ்ந்து முடித்தவர்களுக்கோ,
எத்தனை கடந்தகால அறிவு இருந்தாலும்,
இப்படி வாழ வேண்டும், அப்படி வாழ
வேண்டும் என்கின்ற எண்ணம்
இருந்தாலும் அவர்களுக்கு வாழ்க்கை
என்கின்ற வாய்ப்பு முடிந்து விட்டது.
ஆனால் எத்தனை அனுபவம் அவர்கள்
கையில் இருந்தாலும், தன்னுடைய
வாழ்க்கையைத் திருத்திக் கொண்டு
வாழ்வதற்கு வாழ்க்கை இருக்காது.
அனுபவத்தின் மூலமாக நாம் எதை மேம்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றோமோ அந்த வாழ்க்கை அவர்களுக்கு இருப்பதில்லை. முக்கியமாக, அடிப்படையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இளைஞர்கள் ஆயிரம் தவறுகளுடன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும், சாதிக்கத் தேவையான சக்தி அவர்களிடம் இருக்கின்றது. ஆனால் வாழ்ந்து முடித்தவர்களுக்கோ, எத்தனை கடந்தகால அறிவு இருந்தாலும், இப்படி வாழ வேண்டும், அப்படி வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தாலும் அவர்களுக்கு வாழ்க்கை என்கின்ற வாய்ப்பு முடிந்து விட்டது.