எங்கள் அன்பின் வெளிப்பாடு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஜாதி, மத, பேத இனமில்லாமல் அனைவருக்கும் வாழ்க்கையைப் பற்றி ஆராய்வதற்காக, அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி அவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளுவதற்காக, வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி செய்து கொள்வதற்காக ஓராண்டு உணவு, உடை, இருப்பிடத்தோடு இலவசமாக இந்த ‘ஆனந்தயோகம்’ என்கின்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறது.
இது சமூகத்திற்கு நாங்கள் செய்யும் ஒரு மிகப்பெரிய பங்களிப்பாகவும் எங்களுடைய அன்பின் செழிப்பாகவும் நாங்கள் இந்த சேவையைக் கருதுகின்றோம்.
மற்ற எல்லா சேவையையும் விட நிலையானது ஞானதானம்!
மூன்று விதமான தானமுண்டு..
அன்னதானம்,
வித்யாதானம்,
ஞானதானம்.
அன்னதானம் என்றால் உணவளித்தல்! மூன்று மணி நேரத்திற்கு அவன் திருப்தியாக இருப்பான்.
வித்யாதானம் என்றால் கல்வி கொடுத்தல்.
30 ஆண்டுகளுக்கு அவன் தனக்குத் தானாகவே சம்பாதித்துக் கொண்டால் வெளியுலக வாழ்க்கைக்குத் தேவையானதையும் சம்பாதித்துக் கொள்வான்.
ஞானதானம் என்பது ஜென்ம ஜென்மத்திற்கும் அவனுடைய வாழ்க்கையைப் பற்றிய தெளிவையும் உள்ளுலக வாழ்க்கைப் பற்றிய உள்ளுலக வாழ்க்கையின் சொத்துக்களையும், வெளியுலக வாழ்க்கையின் சொத்துக்களையும் குவிக்கும் கல்வி இரண்டையுமே ஆனந்தயோகம் வகுப்பில் பெறலாம்.
அன்னதானத்தை விடவும், வித்யாதானம் உயர்ந்தது. வித்யாதானத்தை விடவும் ஞானதானம் உயர்ந்தது.
ஞான தானமாக இதை ஒரு மிகப்பெரிய சேவையாக, இந்த நிகழ்ச்சியை உங்கள் முன் வைக்கிறேன். இந்த அற்புதமான வாய்ப்பை இளைஞர்கள் முன் வைப்பதன் மூலமாக இந்தச் சமூகத்திற்கு நம்மால் ஆன மிகப்பெரிய ஒரு சேவையை செய்ய முடியும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகின்றோம்.
உங்களுடைய வாழ்க்கையைப் பற்றிய பொறுப்பை, உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை முழுமையாக உங்களுக்குள் உணர்ந்து கொண்டு உங்களுக்குள் ஆனந்தமாக மலருங்கள்.
உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி நித்யானந்தத்தில் நிலைத்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, எல்லோருமே நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றோம்.