KAILASA Library/சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு/பெரியவர்களே! இளைஞர்களுக்குத்Sign in
சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு

பெரியவர்களே! இளைஞர்களுக்குத்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தெளிவைத் தாருங்கள்

வாழ்ந்து முடித்த பெரியவர்களுக்கு, நீங்கள் செய்கின்ற மிகப்பெரிய சேவை, உண்மையான மிகப்பெரிய சேவை, உங்களைச் சுற்றியிருக்கும் இளைஞர்களுக்கெல்லாம் ‘தான் தனக்குள் மூழ்கி இந்த வாழ்க்கையின் இலட்சியத்தை உணர்ந்து கொள்வதற்கான தெளிவைக்’ கொடுங்கள்.

அந்தத் தெளிவை நோக்கி, உங்களைச் சுற்றி இருக்கும் இளைஞர்களை எல்லாம் உற்சாகப்படுத்துங்கள்.’

ஒவ்வொரு இளைஞர்களுக்குமான அடிப்படையான உரிமை தன்னைத் தனக்குள் ஆராய்ந்து தன்னைத் தனக்குள் சோதித்துப் பார்த்து, தன்னுடைய வாழ்க்கை பற்றிய தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய தெளிந்த முடிவுக்கு வருவதாகும்.

ஒரு அடிப்படையான விஷயம். நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது! இன்றைய இளைஞர்களை முறையான வாழ்க்கை வாழ்வதற்கு நாம் பயிற்றுவிக்காவிட்டால் இயற்கையிலேயே அவர்கள் தீவிரவாத தன்மைக்குள் நுழைந்து விடுவார்கள். ஏனென்றால் சமூகம் இருக்கின்ற நிலையில், நல்ல முறையான வாழ்க்கை முறையைக் கொடுக்கத் தவறினாலே போதும், தானாகவே அவர்கள் முறை தவறிய வாழ்க்கைக்குச் சென்று விடுவார்கள். முறை தவறிய வாழ்க்கையால் தம்மை மட்டுமல்லாமல் தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கச் செய்துவிடுவார்கள்.

இதே நிலையில் நாம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோமானால், இதே நிலையில் சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்குமானால் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், நான் உங்களைப் பயமுறுத்தவில்லை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமாக உங்களால் சாலையில் நிம்மதியாக நடக்க முடியாது.

உங்களுடைய வருங்கால சந்ததிகளுக்குச் சொத்தைச் சேர்த்துவிட்டுச் செல்லலாம், பணத்தை வைத்துவிட்டுச் செல்லலாம், புகழை வைத்துவிட்டுச் செல்லலாம், ஒருவேளை அந்தஸ்தை வைத்து விட்டுச் செல்லலாம். ஆனால் நிம்மதியாக நடப்பதற்குச் சாலையைகூட வைத்து விட்டுச் செல்ல மாட்டீர்கள்.

நிம்மதியாக நடப்பதற்கு, அமைதியாக வாழ்வதற்கான சமுதாயம் இருக்காது. இதே சூழ்நிலை சென்று கொண்டிருக்குமானால்... நாம் எல்லோருமே என்ன செய்கிறோம் என்றால் சமூகம் என்றால் யாரோ பார்த்துக் கொள்வார்கள். நமக்கென்ன நம் வேலையை கவனிக்கலாம் என்று பார்த்தும் பார்க்காமல் நம்முடைய பணம், நம்முடைய தொழில், நம்முடைய வேலை இதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் அனைவரும் இதே நிலையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தீர்களானால் நீங்கள் அனைவரும் நினைக்கின்ற பணத்தையும், புகழையும் அடையலாம். உங்கள் வீடு இருக்கும். அலுவலகம் இருக்கும்! ஆனால் வீட்டையும் அலுவலகத்தையும் இணைக்கின்ற சாலையில் நீங்கள் நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

நாமெல்லாம் நினைக்கிறோம்! நம் வீட்டை மட்டும் பார்த்தாலே போதும், நம்முடைய வாழ்க்கை முடிந்து விட்டது என்று. உங்கள் வீடு தனியாக ஒரு காட்டுக்குள்ளேயோ அல்லது ஒரு கடல் நடுவில் தீவுக்குள்ளேயோ இருந்தால் உங்கள் வீட்டை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும் எனலாம்.

ஆனால் நீங்கள் சமூகத்திற்குள் இருக்கின்றீர்கள். உங்கள் வீட்டைப் பற்றி மட்டும் யோசித்தீர்களானால், சமூகப் பொறுப்பைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பீர்களானால் தெரிந்து கொள்ளுங்கள்... உங்களுடைய மகன்களுக்கும், பேரன்களுக்கும் ஒருவேளை நீங்கள் பெரிய வீட்டை விட்டுச் செல்வீர்கள், மிகப்பெரிய அலுவலகத்தை விட்டு செல்வீர்கள், ஏதாவது ஒரு வியாபாரத்தை விட்டு விட்டுச் செல்வீர்கள்! ஆனால் அந்த வீட்டையும் அலுவலகத்தையும் இணைக்கும் சாலைக்குள் நிம்மதியாக பயணிக்கும் நிம்மதியான ஒரு சமுதாயத்தை விட்டுவிட்டுச் செல்ல மாட்டீர்கள்.

இது உங்களுக்கு அளிக்கப்படும் அபாய எச்சரிக்கை. தயவு செய்து இந்த வார்த்தைகளை சாதாரண வார்த்தை என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு அளிக்கப்படும் எச்சரிக்கை!

சமுதாயத்தில் பெருகிவரும் குற்றங்களின் எண்ணிக்கையையும் பெருகிவரும் தீவிரவாத சம்பவங்களின் எண்ணிக்கையையும் ஆழ்ந்து பார்க்கும் போது, இளைஞர்கள் தம்முடைய வாழ்க்கையைப் பற்றியும், தன்னைச் சுற்றியிருக்கும் சமுதாயத்தைப் பற்றியும் எண்ணிப்பார்த்து ஒரு பொறுப்பை எடுத்து வரவில்லையென்றால், தெளிவையும் பொறுப்புணர்வையும் அவர்களுக்குள் மலரச் செய்யவில்லை என்றால் அவர்களுக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டவிழ்த்து நெறிப்படுத்த வில்லையென்றால், தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்... 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் வீட்டையோ அலுவலகத்தையோ வைத்திருக்கலாம். ஆனால் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையே இருக்கும் பாதையில் நிம்மதியாக உங்களால் பயணிக்க முடியாது. இன்றைய அளவில் உயர்தரப்பட்ட மக்கள் மத்தியில் இந்த பயமும், பாதுகாப்பன்மையமும் வந்துவிட்டது.

உங்கள் வீடு இருக்கும்.
அலுவலகம் இருக்கும்!
ஆனால் வீட்டையும்,
அலுவலகத்தையும்
இணைக்கின்ற சாலையில்
நீங்கள் நிம்மதியாகப்
பயணிக்க முடியாது
என்பதை நீங்கள்
தெளிவாகத் தெரிந்து
கொள்ளுங்கள்.

நாள் ஆக ஆக, காலம் செல்லச் செல்ல நாம் பொறுப்பெடுக்காமல் இருந்தோமானால் அந்த பயம், அந்த அச்சம் மேல்தர மக்களிடமிருந்து மெதுமெதுவாக ஊடுருவி நடுத்தர மக்களுக்கும் வந்து விடுமானால் உங்களால் நிம்மதியாக வீதியில் உலவக்கூட முடியாது. உங்களால் நிம்மதியாக வாழ்க்கையை வாழமுடியாது.

மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் இளைஞர்களாக இருந்தாலும் சரி, நினைக்கின்ற பணத்தையும், புகழையும் அடையலாம். உங்கள் வீடு இருக்கும். அலுவலகம் இருக்கும்! ஆனால் வீட்டையும் அலுவலகத்தையும் இணைக்கின்ற சாலையில் நீங்கள் நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

முதியவர்களாக இருந்தாலும் சரி, எல்லோரும் இந்தக் கருத்தும், இந்த வாழ்க்கை முறையும் அடுத்த சமுதாயத்திற்கும், தலைமுறைக்கும் கொண்டு செல்வதற்காக உழையுங்கள்!

உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிட்டதற்காக உங்கள் வாழ்க்கையில் இந்தக் கருத்துக்கள் இளமையில் கிடைக்காமல் போய்விட்டதற்காகக் கவலைப்பட வேண்டாம். குறைந்த பட்சம் அடுத்த தலைமுறைக்காவது இவையெல்லாம் கிடைக்கட்டும் என்று உத்வேகத்தோடு எடுத்துச் செல்லுங்கள்.

ஒரு அழகான கருத்தைப் படித்தேன். ஒரு புத்தகத்தின் முன்னுரையில் ஒரு அன்பர், ஆசிரியர் எழுதியிருக்கிறார், "எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் உரிமை எனக்கு உண்டு" என்று. நீங்கள் முதியவராக இருந்தாலும் சரி, வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்களாக இருந்தாலும்,சரி அடுத்த சமுதாயத்திற்கு அடுத்த தலைமுறையினருக்கு இந்த வாழ்வியல் கருத்துக்கள் சென்று சேர்வதற்கு உங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள்.

நீங்கள் இளைஞர்களாக இருந்தால், உங்களுக்கோர் அற்புதமான வாய்ப்பு. தவறவிடாதீர்கள்!

ஓராண்டு உங்களுக்குள் உங்கள் வாழ்க்கையைப் பற்றி, உங்கள் மனதைப் பற்றி, உங்களுடைய உணர்வுகளைப் பற்றி, ஆழ்ந்த ஒரு ஆராய்ச்சிக்குள் மூழ்குங்கள். ஓராண்டிற்குப் பிறகு உங்களுடைய வாழ்க்கை எவ்வாறு அமையும், எதை நோக்கிச் செல்வதனால் உங்கள் வாழ்க்கை மலரும் என்கின்ற தெளிவு உங்களுக்குள் பிறக்கும். அதை அடிப்படையாக வைத்து உங்களுக்குள் மலரும் தெளிவை அடிப்படையாக வைத்து நீங்கள் முடிவெடுக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் சக்தியிலிருந்து பொங்கி, சக்தியை நோக்கி மலர்வீர்கள். ஆனந்தத்தில் பொங்கி ஆனந்தத்தில் மலர்வதுதான் ஆன்மீக வாழ்க்கை. உங்களுக்குள் இந்த ஆனந்தம் மலர வேண்டும்.

அந்தக் காலத்தில் குரு குலத்தில் குரு சீடர்களை முறையாக நான்கு குழுவாகப் பரிப்பார். இந்த வர்ணம் என்பது பறப்பை அடிப்படையாக வைத்தது கிடையாது. தன்னுடைய தன்மையை (Quality) அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது தன்னுடைய நேரத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் ஒரு வகை. தன்னிடம் வேறு ஏதும் இல்லாததனால் தன்னுடைய நேரத்தை மட்டும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு மற்றவர்களுக்காக வேலை செய்பவர்கள் உழைப்பாளிகள் அது ஒரு வர்க்கம்.

அடுத்தது வேலையோடு தனது மூளையையும் சேர்த்து சில பொருள்களைத் தயாரித்து அதை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்பவர்கள் வைசியர்கள், வியாபாரிகள். தன்னுடைய வாழ்க்கையை வாழும் முறையைப் பற்றி தெரிந்து கொண்டு மற்றவர்களை வழி நடத்துபவர்கள், க்ஷத்திரியர்கள். தலைமைக் குணமுடையவர்கள், தலைமைப் பண்புடையவர்கள் க்ஷத்திரியர்கள்.

இந்த மூன்றைப் பற்றியும் தெளிந்த ஞானத்தை உள்வாங்கிக் கொண்டு அந்த ஞானத்தை மற்றவர்களுக்கு வழங்குபவர்கள் ஞான வகுப்பைச் சேர்ந்தவர்கள், ஞானத்தைப் பரப்புபவர்கள். இந்த நான்கு நிலையை வைத்தே சமூகத்தை நம்முடைய ரிஷிமார்கள் பிரித்தார்கள். இது பிறப்பால் கிடையாது. தனக்குத்தானே செய்து கொள்கின்ற குணத்தாலும், தான் செய்கின்ற செயலாலும் தான் முறையான குழுக்கள் முன்னோர்களால் பிரிக்கப்பட்டன. இப்போது நாம் எல்லோருமே திசைமாறி, இடம் மாறி இருப்பதனால்தான் நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கின்றோம். திசைமாறி இடம்மாறி இருப்பதனால்தான் நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பொறுப்பின்மை துவங்குகிறது.

அதாவது முறையான நம்முடைய வாழ்க்கையின் திசை எது? நம்முடைய வாழ்க்கையின் வகை எது?

நம்முடைய வாழ்க்கையின் ஸ்திரம் எது? என்பதைத் தெரிந்து கொண்டவர்கள், உணர்ந்து கொண்டவர்கள், கண்டுகொண்டவர்களின் வாழும் வாழ்க்கைதான் ‘பொறுப்பு’. அதனால் உங்கள் வாழ்க்கையின் பொறுப்பை எடுத்தவர்கள் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையையும் இயற்கையிலேயே ஆனந்தமயமாக மாற்றுகின்றார்கள்.

தங்கள் வாழ்க்கையின் பொறுப்பை எடுக்காதவர்கள், தங்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையையும் சேர்த்து நரகமாக்குகிறார்கள்.

எனவே இளைஞர்கள் அனைவரும் இந்த அற்புதமான வாய்ப்பாகிய ஆனந்தயோகம் எனும் ஒரு வருட இலவச வாழ்க்கைக் கல்வி முறையை ஏற்றுக் கொண்டு, தம் சொந்த வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்.