இளைஞர்களே! கட்டுக்கடங்காத
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சக்தியை கட்டவிழுங்கள் !
யாரோ ஒரு 100 பேருக்கு மருந்து கொடுப்பதையோ, 1000 பேருக்கு அன்னதானம் கொடுப்பதையோ அல்லது ஏதோ சில மேலான பணிகளைச் செய்வதையோ மருத்துவப் பணி செய்வதையோ நான் மிகப்பெரிய சமூக சேவையாக நினைக்கவில்லை.
சீரழிவு வந்த பிறகு நிவாரணத்திற்கு உதவுவதைவிட, வறுமையை உருவாக்கிவிட்டு அவர்களுக்கு சேவை செய்வதைவிட, அடிப்படையான வறுமையின் ஆணிவேரை அறுப்போம்.
வறுமையின் ஆணிவேரை அறுக்க வேண்டுமென்றால், தனி மனிதனுடைய வாழ்க்கையை உயர்த்த வேண்டும்.அதற்காக அவர்களுக்கு வாழ்கின்ற வாழ்க்கைத் தன்மையை, வாழ்க்கைத் தெளிவை அளிக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது.
இங்கு இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றீர்கள். ஒன்று வாழ்க்கையை வாழ்ந்து முடித்த முதியவர்கள்! அடுத்தது வாழப்போகின்ற இளைஞர்கள்!
வாழப்போகின்ற இளைஞர்களே! உங்களுக்கான அருமையான வாய்ப்பு, அற்புதமான வாய்ப்பு..
ஓராண்டு உங்களுக்குள் உங்களை ஆழ்ந்து பரிசோதித்து உங்களுக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டவிழுங்கள்.
உங்களுக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டவிழ்த்தீர்களானால் நீங்கள், இப்பொழுது வாழ்வதைவிட 100 மடங்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தோடு, வெளி உலகத்திலும் உள்உலகத்திலும் வாழ முடியும். இது இளைஞர்களுக்கு நான் கூறும் செய்தி.