KAILASA Library/சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு/உள்ளுலக ஆராய்ச்சிக் கூடம்Sign in
சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு

உள்ளுலக ஆராய்ச்சிக் கூடம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தலைமை என்பது பதவியை வைத்து வருவதல்ல. தன்னுடைய தன்மையை வைத்து வருவது. தலைவன் என்பவன் எவனும் ஒரு பதவியினால் தலைவனாக மாறுவதில்லை. தன்னுடைய தலைமைத் தன்மையினால் மாறுகின்றான்.

தன்னுடைய வாழ்க்கையில் அவனுக்கு ஏற்படும் ஸ்திரத்துவம், தன்னம்பிக்கை இவைகள்தான் ஒருவனைத் தலைவனாக்குகிறது.

ஒவ்வொரு இளைஞர்களுக்குமான அடிப்படையான உரிமை தன்னைத் தனக்குள் ஆராய்ந்து தன்னைத் தனக்குள் சோதித்துப் பார்த்து, தன்னுடைய வாழ்க்கை பற்றிய தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய தெளிந்த முடிவுக்கு வருவதாகும்.

பள்ளிகளும், கல்லூரிகளும் இதை வழங்க முடியாது என்பதினால் தான் நாம் நம்முடைய தியானபீடத்தின் மூலமாக இதை ஒரு வருட இலவசக் கல்வி முறையாகவே ஏற்படுத்தியிருக்கின்றோம்.

ஓராண்டு தனக்குள் மூழ்கி தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இளைஞர்கள் அத்தனை பேருக்கும் உணவும், உடையும், இருப்பிடமும், கல்வியும் தந்து ஓராண்டுக்காவது தங்களுக்குள் தங்களைத் தாங்களே பரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பை ஆனந்தயோகம் என்ற நிகழ்ச்சி மூலமாக ஏற்படுத்தி இருக்கின்றோம்.

என்னைப் பொறுத்தவரை நாங்கள் செய்கின்ற மிகப்பெரிய சமூக சேவையாக இதைத்தான் நினைக்கின்றேன். வேறு எதையும் நான் சமூக சேவை என்று நினைக்கவில்லை.