உடல் நலம்:
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ரம்மியமான உணர்வு
உங்களை விட்டு எப்போது
அகல்கின்றதோ, குதூகலமான
உணர்வு நம்மை விட்டு
எப்போது அகல்கின்றதோ,
அப்போதே நோய் உருவாகத்
துவங்கும். ஆரோக்கியம்
நம்மை விட்டுப் போக
ஆரம்பித்துவிடும்.
நாம் நன்றாகப் படிப்பதற்கும், நன்றாக வேலை செய்வதற்கும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கும் அடிப்படைத் தேவை உடல்நலம். உடல்நலத்தை அடைவது எப்படி? ஆரோக்கியம் என்றால் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்.
நோய் இல்லாமல் இருப்பது ஆரோக்யமான நிலை அல்ல. அது நோய் இல்லாத நிலை மட்டுமே. பல நாள் ஆரோக்ய சீர்கேட்டின் விளைவுதான் நோய்.
“நன்றாகத்தான் இருந்தாராம், திடீரென சர்க்கரை நோய் வந்துவிட்டது” இப்படிப் பலர் பேசுவதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். திடீரென ஒரு நோய் வரவே வராது. பல நாளாக ஆரோக்கியம் கெட ஆரம்பித்து, அது ஒரு நாள் நோயாக வெளிப்படும். ஆரோக்கியம் என்பது ஒரு அருமையான அக உணர்வு. ஒரு ரம்மியமான, இனிமையான, சுகமான உணர்வு.
ரம்மியமான உணர்வு உங்களை விட்டு எப்போது அகல்கின்றதோ, குதூகலமான உணர்வு நம்மை விட்டு எப்போது அகல்கின்றதோ, அப்போதே நோய் உருவாகத் துவங்கும். ஆரோக்கியம் நம்மை விட்டுப்போக ஆரம்பித்து விடும்.
குழந்தைகளைப் பார்த்தால் குதூகலமான, ரம்மியமான ஒருவித சந்தோஷமான உணர்வுடன் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள். இது அனைத்தும் என்றைக்கு நம்மைவிட்டுத் தவறியதோ அன்றைக்கு ஆரோக்கியம் நம்மிடம் இருந்து தவறிவிட்டது.
ஆரோக்கியத்துடன் இருந்தோமென்றால் நாம் எந்த ஒரு சூழ்நிலையையும் பார்த்துப் பயப்படமாட்டோம், அதிர்ச்சிக்குள்ளாக மாட்டோம். அந்தச் சூழ்நிலையை நாம் சமாளிக்கும் விதமே தனித்துவமாக இருக்கும். அப்படியே ஏதாவது பிரச்சினை இருந்தாலும்கூட நாம் எதிர்கொள்ளும் விதமே சந்தோஷமாகத்தான் இருக்கும்.
ஆரோக்கியத்துடன்
இருந்தோமென்றால் நாம்
எந்த ஒரு சூழ்நிலையையும்
பார்த்துப்
பயப்படமாட்டோம்,
அதிர்ச்சிக்குள்ளாக
மாட்டோம். அந்தச்
சூழ்நிலையை நாம்
சமாளிக்கும் விதமே
தனித்துவமாக இருக்கும்.
அப்படியே ஏதாவது
பிரச்சினை இருந்தாலும்கூட
நாம் எதிர்கொள்ளும் விதமே
சந்தோஷமாகத்தான்
இருக்கும்.
ஒரு சின்னக் கதை...
தெனாலிராமன், மிகச்சிறந்த காளிபக்தர். ஒரு நாள் காளியை வழிபட்டுவிட்டு, திண்ணையிலேயே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். நன்றாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். பொதுவாக, காளி யாருக்கும் தரிசனம் தருவதில்லை. ஏனென்றால் காளியைப் பார்த்தால் அங்கேயே மயங்கிவிடுவார்கள். யார் மிகவும் மனமுதிர்ச்சியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் காளி தரிசனம் தருவாள். தெனாலிராமன்...? ஆன்மீகத்தில் சிறிது மனமுதிர்ச்சியுடன் காணப்படுவார் எனத் தீர்மானித்து ஆயிரம் தலையுடன் பெரிய பெரிய பற்களுடன் வேல், சூலாயுதம் போன்ற ஆயுதங்களுடன் பிரம்மாண்டமாக தெனாலிராமனுக்கு விஸ்வரூப காட்சி தந்தாள் காளி.
தெனாலிராமன் இந்த காட்சியைப் பார்த்த அடுத்த நிமிடமே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார். தெனாலிராமன் சிரிப்பதைப் பார்த்து, காளி மிக அதிர்ச்சியடைந்தாள். காளிக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்குச் சிரிக்கின்றாய்? என்று தெனாலிராமனிடம் கேட்டாள்.
அதைக் கேட்டவுடன் தெனாலிராமன் இன்னும் வேகமாகச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். காளிக்கு ஒன்றுமே புரியவில்லை.
"தான் வந்த நேரம் சரியில்லை. எனவே இன்னும் சிறிது நேரம் கழித்து வருவோம்" என்று தீர்மானித்து காளி திரும்பச் சென்றுவிட்டாள். தரிசனம் தந்த காளி சென்றவுடன் தெனாலிராமன் அங்கு எதுவுமே நிகழாததுபோல் மீண்டும் தூங்கச் சென்றார். சிறிது நேரம் கழித்து, காளி திரும்பவும் காட்சி தருகிறாள். இம்முறையும் அதே போன்று தெனாலிராமன் சிரிக்கத் துவங்க... அவர் சிரித்து முடிக்கும்வரை காத்துக் கொண்டிருப்போம் என்று அப்படியே பொறுமையுடன் காளி நின்றுகொண்டிருந்தாள். தெனாலிராமன் சிரித்து முடித்த பிறகு, "ஏன் என்னைப் பார்த்து இப்படி விழுந்து விழுந்து சிரிக்கின்றாய்?" என்று கேட்டாள் காளி.
அதற்குத் தெனாலிராமன் "எனக்கு இருப்பதோ ஒரே ஒரு தலை தான்! ஒரு மூக்கில் ஜலதோசம் பிடித்தாலே என்னால் தாங்க முடியாது. உனக்கு இருப்பதோ 1000 தலை. அதில் சளி பிடித்தால் என்ன செய்வாய்?" என்று நினைத்துப் பார்த்தேன், எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது என்று சொன்னார். எவ்வளவு பெரிய ஒரு பயமுறுத்தக் கூடிய சூழ்நிலையை, தெனாலிராமன் எப்படிச் சமாளித்திருக்கிறார் பாருங்கள்.
ஆரோக்கியம் இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் மகிழ்ச்சியாகக் கையாள முடியும். ஏனென்றால் உடல் ஆரோக்கியம் இருக்கும்பொழுது இயற்கையாகவே மன ஆரோக்கியம் கண்டிப்பாக இருந்தே தீரும்.