மனநலம் :
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மனநலத்தில் மாணவர்களுக்குத் தேவையான சில அம்சங்கள்:
1. தெளிவாக முடிவு எடுக்கும் திறன்
2. சாதிக்கும் சிந்தனைகள்
3. மகிழ்ச்சி.
இது மூன்றும்தான் எந்த ஒரு வெற்றிக்கும் மிகவும் அவசியம். இந்த மூன்று தன்மைகளுமே மனம் வளமாக இருந்தால் தானாகவே வந்து விடும். இந்த மூன்று தன்மைகளும் ஒருசேர இருந்தால் படிப்பு மட்டுமே அல்லாமல் வேறு எந்தக் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும்.
இந்த மனவளம் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதை பொறுத்துதான் நம்முடைய முழு வாழ்க்கையும் வடிவமைக்கப்படுகின்றது. நமது மனம் நம் உடலைப் பொறுத்துதான் உருவாக்கப்படுகிறது.
மனதும், உடலும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது.
சமுதாயம் நேரடியாக நம் உடலைப் பாதிப்பதில்லை. நம்முடைய மனதைத்தான் பாதிக்கின்றது. எனவே மனதின் பாதிப்பு உடலையும் பாதிக்கின்றது. இந்த மனமுதிர்வைப் பெற வேண்டியது எல்லோருக்கும் அடிப்படையான தேவை ஆகும். இந்த இரண்டுமே நலமாக இருக்கும்பொழுது மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்!
ஒரு சாக்கடைக்கு அருகில் மல்லிகைப் பூவின் வாசனையோ அல்லது மல்லிகைப் பூவிற்கு அருகில் சாக்கடையின் துர்நாற்றத்தையோ எதிர்பார்க்க முடியாது. ஒரு மனிதனுடைய மன வலிமை, உடல் வலிமை இவை இரண்டும் எப்படி இருக்கின்றதோ அதைப் பொறுத்துதான் அவர்களின் தன்மை நிர்ணயிக்கப்படும். அவர்கள் நல்லவர்களாக, மனமுதிர்ச்சியுடன் இருந்தால் அவர்களிடம் நாம் கெட்ட விஷயங்களை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து அவர்களைச் சுற்றியுள்ள வட்டம் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும்.
> ஒரு சாக்கடைக்கு அருகில்
> மல்லிகைப் பூவின் வாசனையோ
> அல்லது மல்லிகைப் பூவிற்கு
> அருகில் சாக்கடையின்
> துர்நாற்றத்தையோ எதிர்பார்க்க
> முடியாது.
> ஒரு மனிதனுடைய மன வலிமை,
> உடல் வலிமை இவை இரண்டும்
> எப்படி இருக்கின்றதோ அதைப்
> பொறுத்துதான் அவர்களின்
> தன்மை நிர்ணயிக்கப்படும்.
எனவே மனநலம், உடல்நலம் நன்றாக
இருந்தால் இயற்கையாகவே அந்த நபர்
ஆனந்தமாக இருப்பார். உடலிலோ,
மனதிலோ, பிரச்சினை இருந்தால்
இயற்கையாகவே அவர் பிரச்சினையை
உருவாக்கிக்கொண்டிருப்பார்.
ஒரு வரவேற்பாளர் வரவேற்பறையில்
அங்கு வருபவர்களையெல்லாம் சிரித்து
வரவேற்பார். பின் அவர்கள் சென்றதும்
உம் என்று இருப்பார். இதுதான் அவர்
வேலை. அன்றைக்கு அதே
வரவேற்பாளருக்கு மிகக்கடுமையான
வயிற்று வலி. இப்பொழுதும் அதே
சிரிப்பு அவரிடம் இருக்குமா?
ஒருவருக்குப் பிரச்சினை இருக்கின்றதா? என்று அவர்களுடைய சிரிப்பை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.
சாதாரண வயிற்றுவலிக்கு இத்தனை சக்தி இருக்கிறது என்றால் நமக்கு ஏற்கெனவே உடலில் சக்தி ஓட்டம் குறைவாகவும் இருக்கிறது. மனதிலும் அதிகமான துக்கங்களையும் வைத்துக்கொண்டு நாம் நம் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சிரித்துப் பேச முயற்சி செய்கின்றோம். அப்போது அந்தச் சிரிப்பு எப்படி இருக்கும்? என்று நினைத்துப் பாருங்கள். போலித்தனமாகத்தான் இருக்கும்.
பெரும்பாலானோர் இதனால்தான் அனைவரிடமும் சிரித்துப் பேசிப் பழகினாலும் உறவுகளைக் கையாள முடியாமல் “என்னை யாருமே முழுமையாகப் புரிந்துகொள்வது இல்லை” என்று கவலைப்படுகிறார்கள்.
உங்களை மற்றொருவர் முழுமையாகப்
புரிந்துகொண்டார் என்று கண்டிப்பாக
கூற முடியாது. இதற்குக் காரணம் நாம்
மற்றவரிடம் போலியாக இருப்பதும்,
மற்றவர் நம்மிடம் போலியாக
இருப்பதும்தான்.
ஏனென்றால் உங்களிடம் அந்த
அளவிற்குப் பிரச்சினை இருக்கின்றது.
அதை வைத்துக் கொண்டுதான் நாம்
மற்றவரிடம் அன்பாக பேசுகின்றோம்.
ஆனால் இது சாத்தியமா? உறவுகளுடன்
உரையாடும்போது உள்ளுக்குள்
இருக்கும் வலியும், அதனுடன்
சேர்ந்துதான் வெளிப்படும். அதனால்தான்
நம்மைச்சுற்றி, சண்டைகள்
நிலவிக்கொண்டே இருக்கின்றது.
> உங்களை மற்றொருவர்
> முழுமையாகப்
> புரிந்துகொண்டார் என்று
> கண்டிப்பாக கூற முடியாது.
> இதற்குக் காரணம் நாம்
> மற்றவரிடம் போலியாக
> இருப்பதும், மற்றவர் நம்மிடம்
> போலியாக இருப்பதும்தான்.
> ஏனென்றால் உங்களிடம் அந்த
> அளவிற்குப் பிரச்சினை
> இருக்கின்றது. அதை வைத்துக்
> கொண்டுதான் நாம் மற்றவரிடம்
> அன்பாக பேசுகின்றோம்.
ஒரு பேருந்தில் திடீரென்று பயங்கரமாக சப்தம் கேட்டது. எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி! என்னவென்று பேருந்தில் இருந்த அனைவரும் பார்த்தபோது, ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து இருந்த ஒரு அம்மா, “கதவை மூடுங்கள்” என்று சொன்னார். அவருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த இன்னொரு பெண்மணி, “கதவைத் திறந்துவிடுங்கள்” என்றார். இந்தச் சண்டை நீடித்துக் கொண்டேயிருந்தது.
பேருந்தில் “திறங்கள், மூடுங்கள்” என்ற சப்தம் வேக வேகமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. பேருந்தின் நடத்துனர் தன்னுடைய பொறுமை இழந்து “நீங்கள் ஏன் திறக்கச் சொல்கின்றீர்கள்” என்று கேட்டார். அதற்கு அந்த அம்மா “எனக்கு மூச்சு முட்டும் பிரச்சினை உள்ளது. இப்படி ஜன்னல் மூடி இருந்தால் மூச்சு முட்டி நான் இறந்துவிடுவேன்” என்று கூறினார். “நீங்கள் ஏன் மூடச்சொல்கிறீர்கள்?” என்று மற்றொரு பெண்மணியிடம் கேட்டார். அதற்கு அவர் “எனக்கு ஆஸ்த்துமா பிரச்சினை உள்ளது. இப்படிக் காற்று அடித்தால் எனக்கு மூச்சுவாங்கும். வீஸீங் வந்துவிடும்” என்று கூறினார். இந்த பிரச்சினை முடிவின்றி மீண்டும் தொடர ஆரம்பித்தது. இதற்கிடையில் அதற்குப் பின்னால் இருக்கும் சீட்டில் ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், நடத்துனரை அழைத்து “ஐயா! இதற்கு நான் ஒரு முடிவு கூறட்டுமா?” என்று கேட்டார். நடத்துனரும் பிரச்சினை தீர்ந்தால் போதும் என்று சரி என்று கூறினார். அதுவரை அமைதியாக இருந்த அவர் "சார், முதலில் ஜன்னலை மூடுங்கள். இந்த அம்மா சாகட்டும், பிறகு கதவைத் திறங்கள், அந்த அம்மா சாகட்டும்" என்றார். இதை கேட்ட அனைவரும் அதிர்ந்து போய்விட்டனர்!
நடத்துனர், "என்னப்பா இது! பிரச்சினைக்குத் தீர்வு கேட்டால், இப்படிப் புதுப் பிரச்சினையை உருவாக்குகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அவர், "வெறும் அரைமணிநேரம் போராடியதற்கே இப்படி நொந்து போய்விட்டீர்கள். நான் 15 வருடமாக இவர்கள் இருவருடனும் போராடிக்கொண்டிருக்கிறேன்: நான்தான் இவர்களின் கணவன்" என்றார்.
இந்தக் கதையில், இவர் முதல் திருமணம் செய்திருக்கிறார். வாழ்க்கை முதலில் நன்றாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அதன் பிறகு ஏனோ முதல் திருமணம் பிடிக்கவில்லை, பிறகு இன்னொரு திருமணம் செய்து கொண்டார். அதுவும் விளங்கவில்லை. எவ்வளவு சந்தோஷமாக திருமண வாழ்க்கையை ஆரம்பித்து, எவ்வளவு துக்கத்தில் போய் முடிந்திருக்கிறது பாருங்கள்.
சந்தோஷத்தைத் தேடிப்போனவர்
துக்கத்தில் போய் நிற்கின்றார். இதற்குக்
காரணம், இயற்கையிலேயே நாம் ஒரு
எரிச்சலூட்டும் மனநிலையில்
இருப்பதுதான்.
மனோநிலையை நிர்ணயித்தல்
என்பது உறவினருடன் வரும்
பிரச்சினைக்கு மட்டுமல்ல,
படிப்பு விஷயத்திலும் கூட,
படிப்பதற்கென்று ஒரு
குறிப்பட்ட மனோநிலையை
உருவாக்கி வைத்திருக்கிறீர்கள், .
சிலருடைய பிரவேசம் உடனடியாக அடுத்தவரை எரிச்சலூட்டுவதாய் இருக்கும். அங்கு போனால் போதும். பிரச்சினைகளை உருவாக்காமல் வரமாட்டார். ஏதோ ஒரு வகையில் ஒன்று உருவாக்கியே தீருவார். இல்லையென்றால் அவருக்கு மற்றவர்கள் பிரச்சினையை உருவாக்குவார்கள். ஆனால் கண்டிப்பாக பிரச்சினை அங்கு உருவாகும். இதற்குக் காரணம் எரிச்சலூட்டும் மனோநிலையை நிர்ணயித்து வைத்திருப்பதால்தான் பிரச்சினை, தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்கின்றது.
மனோநிலையை நிர்ணயித்தல் என்பது உறவினருடன் வரும் பிரச்சினைக்கு மட்டுமல்ல, படிப்பு விஷயத்திலும் கூட, படிப்பதற்கென்று ஒரு குறிப்பட்ட மனோநிலையை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள், என்னால் இவ்வளவு நேரம்தான் படிக்கமுடியும், இவ்வளவுதான் புரிந்து கொள்ள முடியும். நம்மால் இது முடியும், இது முடியாது என்ற மனோநிலையை நாம் வடிவமைத்து விடுகிறோம், இல்லையென்றால் அந்தச் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
“உன்னால் இவ்வளவுதான் முடியும்” என்று சமுதாயம் நம்மைச் சிறிய வயதில் இருந்தே தட்டி வைக்கிறது. இந்த மனோநிலையை மாற்றினால் நிச்சயமாக நமது உறவுகளிடம் சந்தோஷமான உறவுமுறையை வைத்துக் கொள்ளமுடியும்.
அருமையான உறவுமுறை, உடல் நலம், மன நலம், நம்மிடம் இருக்கும் போது நம்மைப் போல் சந்தோஷமான, ஆனந்தமான நபர் இந்த உலகத்திலேயே இல்லை என்ற முடிவிற்கு நாம் வருவோம்.
நான் வாழ்வதற்குத் தகுதியானவன், நான் மதிக்கத்தக்கவன் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் பெருகும். அந்த உணர்வை அடைவதுதான் நமது இலக்கு.
அந்த இலக்கை நாம் அடைந்துவிட்டால், படிப்பென்ன? வேறு எதுவாக இருந்தாலும் நம்மால் சாதிக்கமுடியும். ஏனென்றால் அடிப்படையாகச் சாதிக்க வேண்டியதைச் சாதித்து முடித்து விட்டோம். அதன் பிறகு எதை நினைத்தாலும் நம்மால் சாதிக்கமுடியும். சாதிப்பதற்குத் தடையே இருக்காது. அந்தச் சாதிக்கும் பாதையில் முட்டுக்கட்டையாக நமக்கு எதுவுமே வந்து நிற்கமுடியாது,
தேவையான அளவு செல்வம்:
நாம் இவ்வளவு தூரம் படிப்பதே அது ஒன்றிற்காகதான்,
எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்கிறோம்?
நமது பதினேழு வருடப்படிப்பு ஒரு நல்ல மேற்படிப்பைத் தேர்வு செய்வதற்காக! அந்த மேற்படிப்பு எதற்காக?
ஒரு நல்ல வேலை கிடைப்பதற்காக!
நல்ல வேலை எதற்காக?
அதிகப் பணம் சம்பாதிப்பதற்காக?
நன்றாகப் பணம் சம்பாதிப்பது எதற்காக?
நல்ல வாழ்க்கைக்காக!
ஒரு நாற்பத்தி இரண்டு வயதில், ஒரு ஐம்பத்தி ஐந்து வயதில் உன்னை நான் இவ்வளவு நாள் நிறைய கஷ்டப்படுத்தி விட்டேன், தவறாகப்புரிந்து கொண்டேன் என்று சொல்வதினால் என்ன பலன்? அது இருபத்தி ஐந்து வயதில் சொல்லி இருக்க வேண்டும். இளம் சமுதாயமே, இப்பொழுது நீங்கள்தான் வாழ்க்கையில் நுழையும் தருவாயில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள்தான் இந்தத் தியானத்தையும், ஞானத்தையும் முழுதாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆன்மீகம் என்பது ஆனந்தமயமாக வாழ்வதுதான். ஆன்மீகம் என்றால் பெரிதாக நினைத்துக் கொள்ளவேண்டாம்.
பட்டைபோட்டு, காவி அணிந்து, ருத்ராட்ச மாலை அணிந்துகொண்டுதான் இருக்க வேண்டுமென்று நினைத்து விடாதீர்கள்.
மந்திரம் சொல்லிக் கொண்டே இருப்பது ஆன்மீகம் அல்ல. ஆன்மீகம் என்றால் ஆனந்தமாக இருப்பது.
நம்முடைய பாதையில் சொல்ல வேண்டுமென்றால் குஷியாக, ஜாலியாக இருப்பது. இதற்குப் பெயர்தான் ஆன்மீகம்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அப்படியே முழுமையாக அனுபவித்து ஜாலியாக, குதூகலமாக இருப்பது. அதுதான் ஆன்மீகம். ஆனால் வாழ்க்கைக்காக என்ன சம்பாதித்தீர்கள்? வாழ்க்கைக்காக என்ன செய்தீர்கள்?
25 வருடம் கழித்து நீங்கள் படித்து முடித்து வாழ்க்கையைச் சந்திக்க போகிறீர்கள், வாழ்க்கைக்கு, பணத்தையும் வசதிகளையும் தேவையான அளவு தயார் செய்து வைத்துவிட்டீர்கள்!
ஆனால் வாழ்க்கையை வாழ்வதற்கு
நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
ஒரு மனிதனைப் புரிந்து கொள்வதற்கு
என்ன கற்றுக் கொண்டீர்கள்? எதுவுமே
புரிந்துகொள்ளாமல் எப்படிக் காலடி
எடுத்து வைக்கப்போகிறீர்கள்?
இப்படித்தான் நாம் எல்லோருமே
மிகப்பெரிய அபாயத்தில்
இருந்தாலும், அபாயத்தில் இல்லாதது
போல், சுதந்திரப் பறவைகளைப்போல்
திரிந்து கொண்டிருக்கிறோம்.
இது மிக மிகத் தவறு.
நம்முடைய எதிர்காலத்தைப் பற்றிச்
சிறிது கண்டிப்பாக ஆராய்ந்து அதை
எதிர்கொள்வதற்காக நாம் நம்மைத்
தயார்படுத்திக்கொள்ள வேண்டியது
> நான் வாழ்வதற்குத் தகுதியானவன்,
> நான் மதிக்கத்தக்கவன் என்ற
> உணர்வு எல்லோருக்குள்ளும்
> பெருகும். அந்த உணர்வை
> அடைவதுதான் நமது இலக்கு.
> அந்த இலக்கை நாம்
> அடைந்துவிட்டால், படிப்பென்ன?
> வேறு எதுவாக இருந்தாலும்
> நம்மால் சாதிக்கமுடியும்.
> ஏனென்றால் அடிப்படையாகச்
> சாதிக்க வேண்டியதைச் சாதித்து
> முடித்து விட்டோம். அதன் பிறகு
> எதை நினைத்தாலும் நம்மால்
> சாதிக்கமுடியும். சாதிப்பதற்குத்
> தடையே இருக்காது. அந்தச்
> சாதிக்கும் பாதையில்
> முட்டுக்கட்டையாக நமக்கு
> எதுவுமே வந்து நிற்கமுடியாது,
மிக மிக அவசியம். அதனால்தான் ஞானிகள் தொடர்ந்து நாடு முன்னேறுவதற்கு இளைஞர்கள் தேவை என்று சொல்கின்றார்கள்.
இவர்களில் ஒருவர் யோசித்தார்களென்றால் போதும். எதிர்காலத்தில் உருவாகப் போகிற குடும்பமே ஆனந்தமாக மாறிவிடும். குடும்பத்தின் வாழ்க்கைமுறை, நடைமுறை எல்லாமே மாறிவிடும்.
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது நிகழ வேண்டும். இதையெல்லாம் வாழ்க்கைக்கு முன்பு தெரிந்து கொள்வதா? வாழ்க்கைக்குப் பின்பு தெரிந்து கொள்வதா?
எது பலனளிக்கும்!
யோசித்துப்பாருங்கள்.
வாழ்க்கைக்கு முன்பு தெரிந்து கொண்டால்தான் நல்லது. அப்போதுதான் ஏதாவது நமக்கு உபயோகமாக இருக்கும். எல்லாம் முடிந்து, எல்லாம் வெறுத்து விட்டபின் சண்டையெல்லாம் வந்து இனிமேல் இவர்கூட எல்லாம் வாழ முடியுமா? என்ற முடிவிற்கு வந்த பிறகு நான்தான் உன்னைத் தவறாகப்புரிந்து கொண்டேன் என்று சொல்வதால் என்ன பலன்?
ஆன்மீகம் தவறா?
இந்த ஆன்மீகம் உங்களுக்குத் தேவையா? தேவை இல்லையா? என்று முடிவெடுக்க, இந்த ஆனந்தம் உங்களுக்குத் தேவையா? தேவை இல்லையா? என்பதை முதலில் தேர்ந்தெடுங்கள்.
ஒவ்வொருவருக்கும் ஆனந்தம் கண்டிப்பாகத் தேவை.
எனவே உடல் நலம், மனவளம், அதன்பின் இனிமையான உறவுகள் என இது மூன்றுடன் ஆனந்தமும் இருந்ததென்றால், தேவையான அளவிற்குப் பின்னரும் செல்வம் சேர்க்க வேண்டும் என்று தோன்றுமா? பணவெறி வருமா? பணவெறியால் நம் வாழ்க்கை வெறுமையாகுமா?வெறுமையாக வாய்ப்பே கிடையாது.
நம்முடைய முழு வாழ்க்கையையுமே, ஆனந்தமாக நிம்மதியாக வாழ்வோம். உடலை விட்டுப் போகும் போது நிம்மதியாக இறங்கிக் கொள்வோம். நான் வாழ்க்கையை வாழவில்லை. இதை இழந்து விட்டேன் என்ற அதிருப்தி வரவே வராது.
ஐன்ஸ்டீன் அணுசக்தித் தத்துவத்தைக் கண்டுபிடித்த மிகப்பெரிய விஞ்ஞானி. அவர் இறக்கும் தருவாயில் அவருடைய நண்பர்கள், "உங்களுக்கு அடுத்த பிறவி எடுக்க வாய்ப்பிருந்தால், நீங்கள் என்னவாகப் பிறக்க விருப்பப் படுகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
ஐன்ஸ்டீன் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். நண்பர்கள் அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் ஏதோ பெரிதாக ஒரு பதில் சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்! ஆனால் ஐன்ஸ்டீன் மிகவும் சாதாரணமாக "நான் ஒரு பிளம்பராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்றார்.
இதைக் கேட்டவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாகிவிட்டது. "ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள், இதைவிட மிகப்பெரிய ஆராய்ச்சி செய்வீர்கள் என்று சொல்லுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் சாதாரண பிளம்பராக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களே!"
“உங்களுக்கு ஒரு உண்மை தெரியாது, நான் பிளம்பராக வேண்டும் என்றுதான் என் வாழ்க்கையை ஆரம்பித்தேன். என்னுடைய சூழ்நிலை என்னை மாற்றி விட்டது. ஏதோ ஒரு வகையில் தவறான பாதையை நான் எடுத்து விட்டேன். ஆனால் எப்படியோ இதில் நான் சாதித்து விட்டேன். உயர்ந்த நிலையைத் தொட்டு விட்டேன். நான் எவ்வளவுதான் சாதித்தாலும் என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்த திருப்தி எனக்கில்லை" என்று சொன்னார்.
> ஆன்மீகத்தையும், தியான
> முறைகளையும்
> கண்டிப்பாக வாழ்க்கையில்
> பயன் படுத்திக் கொள்ள
> வேண்டும். இது நம்முடைய
> அடிப்படைத் தேவை.
> அடிப்படைத் உரிமையும்
> கூட,
ஐன்ஸ்டீன் வாழ்க்கையின் உச்சத்தைப் பார்த்தவர். புகழின் உயரத்தைத் தொட்டவர். பணத்தின் உச்சியை அடைந்தவர். ஐன்ஸ்டீன் சொல்லி இருக்கும் இதே பதிலைத்தான் மாவீரர் அலெக்ஸாண்டரும் சொல்லி இருக்கிறார்.
இதுபோல் வாழ்க்கையின் உச்சத்தைப் பார்த்த அனைவருமே இறுதியில் சொல்வதென்னவென்றால் "எனக்குத் திருப்தி இல்லை, வாழ்க்கையை வாழ்ந்த திருப்தி இல்லை" என்றுதான் சொல்கிறார்கள். மொத்த வாழ்க்கையும் வாழ்ந்து திருப்தி அடைவதற்காகத்தான் நாம் எல்லாவற்றையும் செய்கின்றோம். பணம் சேர்ப்பது, புகழ் சேர்ப்பது, அதிகாரம் செய்வது, பதவிவெறி பிடித்து அலைவது இது எல்லாமே இந்த மன நிறைவு கிடைப்பதற்காகத்தான்.
மனநிறைவு என்கிற விஷயம் கிடைக்கவில்லை என்றால் நாம் என்ன சாதித்தும் ஒரு ரூபாய்க்குக் கூட உபயோகமாக இருக்காது. ஒன்று, நடைபாதையில் இருந்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள், இல்லையெனில் A/C அறையில் இருந்துகொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. இங்கே உட்கார்ந்து கஷ்டப்படுவதற்கு பதிலாக, அங்கே உட்கார்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள்.
இங்கும் கனவு இருக்கும், அங்கும் கனவு இருக்கும். இங்கும் ஆசை இருக்கும், அங்கும் ஆசை இருக்கும்.
வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த திருப்தியை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய பாதை தான் ஆன்மிகம்.
ஆனந்தமயமான வாழ்க்கையை நீங்கள் எப்படி வாழ்வது? என்று கற்றுக்கொடுக்கக் கூடிய கலைதான் ஆன்மீகம்.
எனவே ஆன்மீகத்தையும், தியான முறைகளையும் கண்டிப்பாக வாழ்க்கையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது நம்முடைய அடிப்படைத் தேவை. அடிப்படை உரிமையும்கூட.